Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கை 2 - ஜெயபாலன்

Featured Replies

பதியுதின் காணி பறிப்புக்களுக்கு நல்ல எதிர்ப்பாக பசிரோ அல்லது கக்கீமோ இருக்கலாம். ஆனால் அவர்கள் மூவருமே முஸ்லீம் தமிழ், சிங்கள மூவினங்களினதும் பயங்கர துரோகிகள். மேலும் இன்று பதியுதின் தமிழ்ர்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்வது போலவே கக்கீம் தமிழரின் தொழில் வாய்ப்புகள் போன்ற பலவற்றை ஆக்கிரமிப்பு செய்கிறார். 

பசிர் சேகுவதா அரசின் கையாள். இந்த பசிர் கூட்டமைப்பை தோற்கடித்து, அரசு வடமாகாணத்தை கைப்பற்றுவதற்க்காக, மு.கா வடக்கில் அரசுடன் சேர்ந்து போட்டி போட்ட வேண்டும் என்று வாதிட்ட போது யாழில் காரசாரமான கருத்துக்கள் வைக்கப்பட்டன. அப்போது தமிழ் முஸ்லீம் உறவுகள் பற்றி பேசுவோர் பசீரின் பரிந்துரைகளுக்கு  யாழில் வந்து பதில் வைக்காமல் அஞ்ஞாதவாச காலத்தில் இருந்துவிட்டார்கள்.  அரசுடன் சேர்ந்து போட்டி போட்டு அரசு கூட்டமைப்பை தோற்கடித்திருக்க வேண்டும் என்று கூறும் முஸ்லீம் ஒருவருடன் தமிழ் முஸ்லீம் உறவை வளர்ப்பத்தாக கூறி நட்பு வைப்பது சரியா?

எப்படி ரிசாட் பதியுதின் மூஸ்லீம் என்ற அடையாளத்தை இழந்தாரோ அதே போலத்தான் பசிருக்கும் முஸ்லீம் என்ற அடையாளம் கிடையாது. கக்கீமுக்கு எதிராக  கூட்டமைப்பு அயூப் அசிமினுக்கு ஆத்ரவு வழங்கி, முஸ்லீம் தமிழ் உறவுகளை வளர்க்கிறது. இதில் திரும்ப தமிழ், முஸ்லீம் இன துரோகிகளான கக்கீம், பசிருக்கு வக்காலாத்து வாங்குவது அநாவசியமானது. 

புலிகள் யாழ்பாணத்து முஸ்லீம்களை எழுப்பியது தவறு என்றதை கூறிவரும் பிரபல கூட்டமைப்பு அரசியல் வாதி சுமந்திரன். இதனால் அவர் பல தமிழருடன் கூட ஒற்றுமை இழக்க நேரிட்டது. இந்த சுமந்திரனே கக்கீம் பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைத்துக்கேட்டவர். அந்த கக்கீமுடன் வைக்கும் அரசியல் அல்லது தனிப்ப்ட்ட உறவு, முஸ்லீம்-தமிழ் அரசியல் உறவை வளர்க்கும் என்றதற்கு தர்க்க வாதம் என்ன என்று கூற முடியுமா? முடியாவிட்டால் இவர்களை கதா நாயகர்களாக்கும் பிரஸ்தாபத்தின் உள் நோக்கம் என்ன?

மேலும், இதில் கக்கீம் பசிருக்கு அரசியல் நஞ்சும், பசீர் கக்கிமுக்கு அரசியல் நஞ்சும் கொடுக்க சந்தர்ப்பம் தேடி அலைபவர்கள். இவர்களிடம் வைக்கும் அரசியல் உறவு வன்னியில் தமிழர்களின் காணிகளை பறிக்கும் பதியுதினை திருப்பி தாக்க போதுமானத்தாக இருக்கும் ஆனால் முஸ்லீம் தமிழ் உற்வை வளர்க்க உபயோகமான கரையில் இருக்கா?

பதியுதின் மட்டும் தான் கூடாதவர் என்று காட்ட பசிரை நல்லவராக்குவதோ அல்லது கோமகன் சொல்வது போல கோவை நந்தனை தீயவராக்குவதோ அரசியல் அநாவசியமானது. பதியுதினை மட்டும் கெட்டவராக கோத்தாவின் TID களை நல்லவர்களாகுவதும் அநாவசியமானது.

Edited by மல்லையூரான்

  • Replies 72
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விடையம் .  தங்களது தனிபட்ட பிரச்சனைகளுக்கு போய் வந்து அதில் அரசியல் சாயமும் பூசி இவ்வளவு ஆலாபனைகளும் பில்டப்புகளும் தேவையா ????

பொயட் ஐயா அவர்களின் சாயம் வெளுத்து பல சாமங்கள் ஆயிட்டுது. ஆனால் நீங்கள் ஏன் திடிரேன குதிக்கிறீர்கள் ஐயா? யாழில் எத்தனையோ பேரை எல்லாம் புரட்டி புரட்டி விமர்சிக்கேக்க பேசாமல் இருந்த நீங்கள் ஏனப்பு கோவை நந்தனுக்காக வக்காளத்து வாங்கின்றீர்கள்.............? பல நூறு பதில்களைத் தாண்டி முதலாம் அறிக்கை போஸ்ட் போகும் போது கூட மெத்தனமாகத் தானே இருந்தீர்கள்...

நீவீர் உண்மையில் நேர்மையானவரென்றால் ப்ரான்ஸ் கோவை நந்தனுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவையும் நெடுஞ்சாண்கிடையாக ஒப்பித்துவிட்டு மிச்சத்தினை தொடரலாமே அப்பு?  இல்லை, நான் சொல்லவா ஐயா?

வணக்கம் சுவாமி !!!  எனது நேர்மைகளை இந்தக் கருத்துக் களத்தில் என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும் .  அதை உங்களுக்காக மீளாய்வு செய வேண்டிய அவசியம் இல்லை . மேலும் எனது கருத்துக்களைத் எங்கு எப்படி வைப்பது என்று தீர்மானிப்பது நானாகவே இருக்க முடியும் . அத்துடன் நவரச நாயகர்களுக்கு அரசவையில் பதில் கிடைக்காது :D  :D  :icon_idea:  .

  • கருத்துக்கள உறவுகள்

ச்சப்பா.....முடியலடா சாமி கவிஞர் ஜயா மறுபடியும் இலங்கை வாங்க உங்களுக்கு அனுபவப்பட்டது பத்தாது. இப்பவும் தனது கைதுக்கு தமிழர் ஒருவரும் பாடுபடவில்லை முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களும்தான் காப்பாற்றி விட்டவை. ம்..ம்...!திருந்தவே மாட்டிங்கள்!!!

பொயட் ஐயா அவர்களின் சாயம் வெளுத்து பல சாமங்கள் ஆயிட்டுது. ஆனால் நீங்கள் ஏன் திடிரேன குதிக்கிறீர்கள் ஐயா? யாழில் எத்தனையோ பேரை எல்லாம் புரட்டி புரட்டி விமர்சிக்கேக்க பேசாமல் இருந்த நீங்கள் ஏனப்பு கோவை நந்தனுக்காக வக்காளத்து வாங்கின்றீர்கள்.............? பல நூறு பதில்களைத் தாண்டி முதலாம் அறிக்கை போஸ்ட் போகும் போது கூட மெத்தனமாகத் தானே இருந்தீர்கள்...

நீவீர் உண்மையில் நேர்மையானவரென்றால் ப்ரான்ஸ் கோவை நந்தனுக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவையும் நெடுஞ்சாண்கிடையாக ஒப்பித்துவிட்டு மிச்சத்தினை தொடரலாமே அப்பு?  இல்லை, நான் சொல்லவா ஐயா?

அண்ணை, அவர் கோவை நந்தன் என்பவருக்கு வக்காலத்து வாங்குவதிலிருந்து இன்னுமா புரிந்துகொள்ள முடியவில்லை? அது அவருக்கு வேண்டப்பட்ட நபர் என்பதை.. :D

RUSSELL CROWE நடித்த A BEAUTIFUL MIND  படம் JOHN NASH இன் உண்மை கதை .இவர் நோபல் பரிசு கூட வாங்கியவர் .இவருக்கு SCHIZOPHRENIA  .

ஜெயபாலனின் இப்போதைய எழுத்துக்கள் அப்படித்தான் இருக்கு  .

உஙகளுக்கு கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி இன்னும் நாலு பேருக்கு உண்மையை சொல்லுவதுதான் உங்கள் தாயின் கல்லறை ஐ பிடித்து வைத்த்திருப்பவர்களை விலக வழி செய்யும் .

சிங்கள இரத்த கறை படிந்த சுவர்களுக்கு வெள்ளை அடிக்க வேண்டாம்.

அழுத்தி சொல்லுங்கள் வெளி நாட்டு பிராசையான எனக்கே இந்த நிலை என்றால் மற்ரவர்களின் நிலை என்ன என்று .ஆனால் அதை தவிர்த்து அவர்கள் கைது செய்ததிற்கு ஆனா காரணங்களை தேட வேண்டாம்.

நன்றி ...

இதை தான் அண்ணா முதல் திரியிலேயே பலரும் கேட்டார்கள்.

ஆனால் கவிஞர் ஐயா இனியும் மாற மாட்டார் என்பது இத்திரியிலுள்ள அவர் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.

நீங்கள் குறிபிடுகின்ற பேரவை நந்தன் இவர் இல்லை . கோவை நந்தன் பிரான்ஸில் பலருக்குப் பரீச்சயமானவர் . எனக்கு அவரின் அரசியல் பாதைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் , தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது . அந்தவகையில் கோவை நந்தன் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றார் .

கோ அண்ணை, மாறி சொல்லிப்போட்டீங்கள், தமிழீழ எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் என்று வர வேண்டும். :)

கருத்துக்  களத்தில் "ஆவுரோஞ்சிக் கற்கள்" அதிகம்  இருக்கின்றது என்பது ஒரு சில கருத்துக்களில் இருந்து புலனாகின்றது .

நீங்கள் வுரோஞ்சி கல் என்று சொல்லும் அளவுக்கு இந்த திரியில் யாரும் உரசிப்பார்க்கவில்லை. நீங்கள் ஒருவரை பற்றி கருத்து கூறினால் நாங்களும் அவரை பற்றி கருத்து கூற உரிமை உள்ளது.

வுரோஞ்சி கல் பிரயோசனம் தரக்கூடியது. எனவே இங்கு நீங்கள் வுரோஞ்சி கல் என்று கூறி எம்மால் மற்றவர்களுக்கு பிரயோசனம் உள்ளது என்று கூறியமைக்கு நன்றி.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரிடம் ஒரு கேள்வி: ரவூப் ஹக்கீம் தன் பதவியையே உங்களுக்காகப் பணயம் வைக்கிற அளவுக்கு நீங்கள் நெருக்கம். அப்படிப் பட்ட தோழரிடம் "no date" சீல் அடித்துத் தடுத்து வைக்க பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பது பற்றி ஏதாவது பேசினீர்களா அல்லது பேசும் திட்டம் உண்டா? அல்லது உங்கள் விடுதலைக்கு மட்டும் உதவும் வரை அவர் நல்லவர் என்று பேசாமல் இருக்கிறீர்களா? எப்படி தமிழர்களின் சுதந்திரம் நல்வாழ்வு பற்றிய உங்கள் அக்கறையையும் அதே தமிழர்களை சிறைவைத்திருக்கும் அரசியல்வாதிகளுடனான நட்புறவையும் சமநிலையாகக் கையாள்கிறீர்கள்? எனக்கு சிறிலங்கா இராணுவத்திலும் விமானப் படையிலும் கூடப் படித்த சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஜே.வி.பியின் வளர்ந்து வரும் அரசியல்வாதி ஒருவரும் என் பல்கலை. நண்பர். இவர்களோடு பேசும் நாட்களில் இத்தரப்பினரின் பிழைகள் பற்றி என்னால் வாதாட மட்டும் தான் முடிந்தது. இப்போது தொடர்பு கூட இல்லாமல் போய் விட்டது. எப்படி நீங்கள் உறவையும், அவர்களின் தவறுகளையும் தனித் தனியே பிரித்து வைத்திருக்கிறீர்கள்?   

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வாழும் நாடு திரும்பிய பிறகு அமைதியாக இருப்பதற்கு காரணம் சிறிலங்காவில் அவர்களுக்கு நடந்த மிரட்டல் என்றுதான் இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கவிஞர் பேசாமல் "அனைவருக்கும் நன்றி" என்று ஒரு வார்த்தையில் முடித்திருக்கலாம். விதி யாரை விட்டது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் அஞ்சரன் உங்கள் கிணறுகளுக்கு  வெளியில் ஒரு உலகம் இருக்கிறதென்றால் நம்பவா போறீங்க? விடுங்க

கவிதைகளில் பொய் உரைப்பது கவிக்கு அழகு. கவிஞன் பொய்யன் ஆக கூடாது...கலைஞரை வென்று விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வாழும் நாடு திரும்பிய பிறகு அமைதியாக இருப்பதற்கு காரணம் சிறிலங்காவில் அவர்களுக்கு நடந்த மிரட்டல் என்றுதான் இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கவிஞர் பேசாமல் "அனைவருக்கும் நன்றி" என்று ஒரு வார்த்தையில் முடித்திருக்கலாம். விதி யாரை விட்டது?

பலர் மிரட்டப் பட்டார்கள். இன்னும் பலர், நேரடியாக தலையில் துவக்கு வைத்து மிரட்டப் படா விட்டாலும், ஊரில் இருக்கும் உறவுகளின் பாதுகாப்புக் கருதி புலம் வந்து சேர்ந்த பிறகும் மௌனமாக இருக்கிறார்கள். ஆனால் கவிஞருக்கு இருக்கும் பிரச்சினைகள் இவை அல்ல! தன் பிரசித்தம் தனக்குப் பாதுகாப்புத் தேடித் தந்தது என்ற தொனி மெல்லியதாக கவிஞரின் கருத்துகளில் எட்டிப் பார்க்கிறது. இந்த நேரத்தில் பேராசிரியர் துணைவேந்தர் ரவீந்திரநாத் பற்றி நாம் நினைத்துப் பார்ப்பது நல்லது. இலங்கையில் இருந்த ஒன்பது துணைவேந்தர்களில் ஒருவரான அவரை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்தே கொண்டு போனார்கள். அவருடைய குடும்பத்தில் எல்லாம் வைத்தியர்களும் கல்விமான்களும் தான். இவை எதுவுமே அவரை சிறிலங்காக் கும்பலிடம் இருந்து காப்பாற்றவில்லை எனும் போது, கவிஞரை முஸ்லிம் நண்பர்கள் மீட்டார்கள் என்பதை "நான் நம்புகிறேன்"!

சிறிலங்காவில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வாழும் நாடு திரும்பிய பிறகு அமைதியாக இருப்பதற்கு காரணம் சிறிலங்காவில் அவர்களுக்கு நடந்த மிரட்டல் என்றுதான் இத்தனை காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கவிஞர் பேசாமல் "அனைவருக்கும் நன்றி" என்று ஒரு வார்த்தையில் முடித்திருக்கலாம். விதி யாரை விட்டது?

என்ன முயற்சிக்கப்படடது என்று சபேசன் பேசவிலை. முதலில் முயற்சி என்ன என்பதை  சொல்லாமல் வெற்றி, தோல்வியைப்பற்றி சொல்வது ஆடு அறுக்க முதல் தொடை இறச்சிக்கு அடிபட்டது போன்றது.

இதனால் சம்பந்தப்பட்டவர் தனது முயற்சிகள் வெற்றிகள் என்று நினைத்தால் இப்படி கருத்துக்கள் உபயோகம் இல்லாதவை. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த திரிக்குள் வரவிரும்பவில்லை

ஆனால் என்னை மிகவும் வேதனையாக்கும் ஒரு விடயம்

தேசியத்தலைவரின்

ஒவ்வொரு நடவடிக்கையையும்

அக்குவேறு ஆணி வேறாக பிரித்த  பலர்

ஒரு விடயத்தைக்கூட   தாங்கள்

ஒழுங்காக

சரியாக

எல்லோரையும் திருப்திப்படுத்துவதாக

எவரையும் காயப்படுத்தாது

ஒருவரையும் ஒதுக்காது

தன்நலம் பாராது

சொந்த பாதுகாப்பு பாராது

பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காது

தமிழருடைய தாகத்துக்கு இடைஞ்சல் செய்யாது..........

....................................

.......................................????????????இ

செய்யமுடியவில்லையே............

அப்போ

அவரை  மட்டும் எதற்கு எடுத்தாலும்

வறுத்து எடுத்ததேன்.............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரிடம் ஒரு கேள்வி: ரவூப் ஹக்கீம் தன் பதவியையே உங்களுக்காகப் பணயம் வைக்கிற அளவுக்கு நீங்கள் நெருக்கம். அப்படிப் பட்ட தோழரிடம் "no date" சீல் அடித்துத் தடுத்து வைக்க பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பது பற்றி ஏதாவது பேசினீர்களா அல்லது பேசும் திட்டம் உண்டா? அல்லது உங்கள் விடுதலைக்கு மட்டும் உதவும் வரை அவர் நல்லவர் என்று பேசாமல் இருக்கிறீர்களா? எப்படி தமிழர்களின் சுதந்திரம் நல்வாழ்வு பற்றிய உங்கள் அக்கறையையும் அதே தமிழர்களை சிறைவைத்திருக்கும் அரசியல்வாதிகளுடனான நட்புறவையும் சமநிலையாகக் கையாள்கிறீர்கள்? எனக்கு சிறிலங்கா இராணுவத்திலும் விமானப் படையிலும் கூடப் படித்த சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஜே.வி.பியின் வளர்ந்து வரும் அரசியல்வாதி ஒருவரும் என் பல்கலை. நண்பர். இவர்களோடு பேசும் நாட்களில் இத்தரப்பினரின் பிழைகள் பற்றி என்னால் வாதாட மட்டும் தான் முடிந்தது. இப்போது தொடர்பு கூட இல்லாமல் போய் விட்டது. எப்படி நீங்கள் உறவையும், அவர்களின் தவறுகளையும் தனித் தனியே பிரித்து வைத்திருக்கிறீர்கள்?   

இது இங்கு தேவையோ தெரியவில்லை, ஆனால் இலங்கலையில் இன்னமும் சில விடயங்களை தனிப்பட்ட நபர்களுக்கூடக செய்யலாம்தானே ?

2006 எனக்கு தெரிய ஒருவரை மிகவும் பாரதூரமான போகக்கூடாதா இடத்தில் வைத்து கைது செய்தவர்கள். அவர் ஒரு வைத்தியர் என்பதை தவிர ஒரு வித பின்புலமும் இல்லாதவர் . - சிங்களம் கதைப்பார் கொழும்பில் படித்த்தவர் - அவரை பிடித்து 2/ 3 நாள் வைத்திருந்து போட்டு இங்கே , poet சொல்லுகிற மாதிரி court வைத்து "no date" ஸீல் போட எல்லா சந்தர்ப்பங்களும் இருந்தும் செல்வாக்கு உள்ள ஒரு துறைத்தலைவரால் எதுவும் இன்றி விடுவிக்க பட்டார் . அவர் (அந்த துறைத் தலைவர) சொன்னார் தனக்கு 2 இடங்களில் அவரை பற்றி உறுதி படுத்த சொன்னதாகவும் , அதன் பின்னர் விடுவித்ததாகவும் என்று. அதற்காக அவரை ஒரு தமிழ் தலைவர் என்றோ / எல்லோரையும் பிணை எடுத்த்து விடுகிற காவல் காரர் என்று சொல்லவும் முடியாது/ கூடாது-அது வேறு விடயம்.

மர்றது நீங்கள் உஙகள் சிங்கள நண்பர்களுடன் படித்த போது அவர்களுடன் கதைத்து ஏதேனும் செய்ய முடிந்ததா ? நீங்கள் எவ்வாறு அவர்களுடைய தவறுகளையும் மறுத்தும்  உறவை பேன கூடியதாக இருந்தது ?

இத்துடன் அவை நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெறும் கால வரையறை இன்றி அவை ஒத்திவைக்க படுத்து .

இதுக்கு கிழேகருத்து எழுதுபவர்கள் மாரியாத்தா கண்ணை குத்தும் ஆமா :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் அஞ்சரன் உங்கள் கிணறுகளுக்கு  வெளியில் ஒரு உலகம் இருக்கிறதென்றால் நம்பவா போறீங்க? விடுங்க

உண்மைதான் கவிஞர் ஐயா.. :D வெளியில் இன்னொரு உலகம் இருக்கு.. அதாவது..

  1. நீதியமைச்சர் ஒருவர் நீதியுள்ள ஒரு நாட்டில், 'எனக்கு இன்னாரைத் தெரியும்.. அவரை விட்டுவிடுங்கள்' என்று ஒரு கைதிக்குப் பரிந்துரைக்க மாட்டார்.
  2. பல ஆண்டு காலம் தெரிந்தவராகவும், நல்லவராகவும் இருப்பவர்கூட சந்தர்ப்பவசத்தால் ஒரு நொடிப்பொழுதில் தீயவராக மாறலாம் என்பதை அவர் அறிந்தவராக இருப்பார்..
  3. நீதித்துறையில் சமரசங்கள் கிடையாது என்பதை அறிந்தவராக இருப்பார்.

அவ்வாறான ஒரு நீதியமைச்சர்தான் ஹக்கீம்.. அவர் உங்களுக்கு உதவியிருக்க மாட்டார் என்பதுதான் எங்கள் நம்பிக்கை..  :blink: அப்படியான மரபைமீறிய உதவிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல என்பது எங்களின் மிகப்பெரிய நம்பிக்கை.. :huh: எங்கள் நம்பிக்கை பிழையானால், நாங்கள் இன்னும் கிணத்துக்குள்தான்..  :o  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மர்றது நீங்கள் உஙகள் சிங்கள நண்பர்களுடன் படித்த போது அவர்களுடன் கதைத்து ஏதேனும் செய்ய முடிந்ததா ? நீங்கள் எவ்வாறு அவர்களுடைய தவறுகளையும் மறுத்தும்  உறவை பேன கூடியதாக இருந்தது ?

பல்கலை வாழ்க்கை உறவுகள் எப்படியெண்டு தெரியும் தானே எரிமலை? ஒரு போத்தல் மென்டிசும் இரண்டு மூண்டு கிளாசும் இருந்தால் அதுவே ஒரு பிணைப்புப் பாலமாகி விடும்! நான் குறிப்பிட்ட மூன்று நபர்களும் வெவ்வேறு காரணங்களால் என்னோடு நல்ல சினேகிதத்தில் இருந்ததால் அவர்கள் என்னை பொலிசில் பிடித்துக் கொடுக்க மாட்டார்கள் என்று நம்பி நான் பேசுவதுண்டு. அவர்கள் அதை மற்றைய சிங்களவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை என பல சந்தர்ப்பங்களில் அறிந்து கொண்டேன். இதே நேரம், சும்மா இருந்த தமிழ் மாணவர்களையெல்லாம் பொறியியல் பீட சிங்கள மாணவர்கள் (குறிப்பாக அக்பர் மண்டப வாசிகள்) பொலிசில் மாட்டி விட்டுக் கரைச்சல் கொடுத்ததும் பல தடவைகள் நடந்தது. இவர்களுடன் இப்போது எனக்குத் தொடர்புகள் இல்லை, தொடர்பு இருந்த காலத்திலும் இவர்களின் நட்பைப் பாவித்து ஏதாவது செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை! என் அனுபவத்தில் சிங்களவர்களுடன் one to one கதைத்து சாதிக்கக் கூடியது ஒன்றுமில்லை! இதை 1976 இலேயே ஒருவர் கண்டு பிடித்து விட்டார், நாங்கள் தான் "சக்கரத்தை மீளக் கண்டுபிடித்தே தீருவோம்" என்று அடம் பிடிக்கிறோம்!  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி Justin உங்கள் பதிலுக்கு ,.

உங்களுக்குபல்கலை வாழ்வும்  மதுவும் பிணைப்பாக இருந்தது போல கவிஞருக்கும் ஏதேனும் இருக்கலாம் தானே?

என்னைப்பொறுத்தவரையில் கவிஞர் தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தவற விட்டார் என்கிற கவலையே தவிர,  அதை தவிர அவர் செய்கிற செயல்களை விமர்சிக்கிற தகுதி உரிமை இல்லை .

இன்று பார்த்தேன்  கவிஞரின் இப்படி ஒரு முயற்சியை .

http://eathuvarai.net/?p=4138

அவர் செய்வதில் ஒரு துரும்பை கூட செய்யாமல் அவரை விமர்சிக்கிறது தவறு என்று உணர்கிறேன்.  நன்றி வணக்கம்

"எதுவரையில்" காணப்படும்  நூல் அறுமுகம் வேண்டுமென்றே சில ஒளித்து விளையாடல்களை கையாள்கிறது.  அதை எழுதியவரை இனம் காண விடாமல் பாதுகாக்கிறது.  எனது நோக்கம் அதை ஆராவதாக இல்லாவிட்டாலும் "வடமாகாணத்தாலோ, வடக்காலோ முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள்" என்று ஒரு புத்தகத்தில் எழுதுவது பெரும் தவறு (Material Mistake) கருத்து தவறு. அதை தமிழருக்கும், புலிகளுக்கும் எதிராக செய்ய முயலும் பிரச்சராமகத்தான் கொள்ள வேண்டும். வேறு சிலவற்றை படித்த போது ஒவ்வொரு பக்கமும் கேள்விக்குள்ளாவதை அவதானிக்க முடிந்தது. 

மேலும் நடத்தைகளிலும், எழுத்துக்களிலும் காணப்படும் முரண்களில் மு.கா சம்பந்த பட்ட வரிகளையும் சுட்டிக்காடலாம். அது யாழில் பதியப்படாதால் நான் அதில் இருக்கும் திரிப்புகளை இங்கு விவாதிக்க விரும்பவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Justin உங்கள் பதிலுக்கு ,.

உங்களுக்குபல்கலை வாழ்வும்  மதுவும் பிணைப்பாக இருந்தது போல கவிஞருக்கும் ஏதேனும் இருக்கலாம் தானே?

என்னைப்பொறுத்தவரையில் கவிஞர் தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தவற விட்டார் என்கிற கவலையே தவிர,  அதை தவிர அவர் செய்கிற செயல்களை விமர்சிக்கிற தகுதி உரிமை இல்லை .

இன்று பார்த்தேன்  கவிஞரின் இப்படி ஒரு முயற்சியை .

http://eathuvarai.net/?p=4138

அவர் செய்வதில் ஒரு துரும்பை கூட செய்யாமல் அவரை விமர்சிக்கிறது தவறு என்று உணர்கிறேன்.  நன்றி வணக்கம்

நன்றி எரிமலை!, தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்ன, தமிழ் சிங்கள ஒற்றுமைக்காகக் கூட யாரும் உழைக்கட்டும் கருத்துச் சொல்லட்டும் அதற்கு யார் தடை சொல்ல முடியும்? ஆனால், மருந்து காயப்பட்டவனுக்குத் தான் தேவை என்ற அடிப்படையில் இன்றைக்கும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கவிஞரின் செயற்பாடுகள் பாரிய நன்மையைத் தருவதில்லை என்பது மட்டுமே என் கருத்து. எங்களைப் போன்ற சாமான்யர்கள் மாதிரி இல்லாமல் தமிழர்களுக்கு ஏதாவது செய்யக் கூடிய நிலையில் தான் இருப்பதாக நம்பும் கவிஞர் அப்படிச் செய்யாமல் இருப்பதே என் விசனம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமை முழக்கம் தமிழர்களுக்கு கவிஞர் செய்யும் பாரிய சேவை என்று நான் நம்பவில்லை! மாறாக கவிஞர் ஊக்குவிக்கும் தமிழ் முஸ்லிம் ஒன்றிணைவை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தம் பொம்மை ஆட்சியை நிலைநிறுத்த சிங்களவர்கள் பயன் படுத்துவதே இறுதி விளைவாக இருக்கும் என்றும் நான் அஞ்சுகிறேன்! இது என் பயம் மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.