Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இனப்படுகொலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை’ – சுமந்திரன் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு நேற்றுக் காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஊடகவியலாளர்கள் முக்கிய கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே வெளியேற்றப்பட்டு மண்டப வாயில் கதவுகள் பூட்டுப்போட்டு அடைக்கப்பட்டதோடு, பிரதான நுழைவாயிலில் சிறீலங்காவின் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தாம் வெளியேற்றப்பட்டமைக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். மீண்டும் மாலை 6.00 மணிக்கு ஊடகவியலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி, சித்தார்த்தன், ரவிகரன் ஆகியோர் வேறு வேலைகள் காரணமாக வெளியேறிச்சென்றுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. செய்தியாளருக்கான கூட்டத்தை வழமைக்கு மாறாக சுமந்திரன் நடத்தியிருந்தார். இங்கு கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் vignes_003.jpgஓரங்கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேள்விகளுக்கான பதில்களை வேண்டாவெறுப்பாக சம்பந்தர் வழங்கியிருந்தார். 

கூட்டத்தில் காணி அபகரிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னம், வலி.கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், குடிசன தொகை மதிப்பு திணைக்களத்தின் புள்ளிவிவர திரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், தெரிவுக்குழுவுக்கு வருமாறு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தல், கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள உள்@ராட்சி சபைகளின் வரவு - செலவு திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்தவர் பதவிகள் பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் ஒரு பட்டியலை மும்மொழிகளிலும் வாசித்துக்காட்டினார். 

தொடர்ந்து கூட்டத்தை கலைத்து அவசரமாக எழுந்து செல்ல முற்பட்ட சம்பந்தனை நோக்கி ஊடகவியலாளர்கள் கேள்விகளை தொடுத்திருந்தனர். இரணைமடு குடிநீர் விநியோகம் பற்றி பி.பி.சி ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக சம்பந்தன் பதிலளித்தார். ஆனந்த சங்கரி கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பற்றி மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஊகங்களுக்கு தன்னால் பதிலளிக்க முடியாதெனவும், தூரவழிப்பயணம் போக இருக்கிறது, இரவாகி விட்டது எனக்கூறிக்கொண்டு ஊடகவியலாளர்களை அசட்டை செய்தவாறு சம்பந்தன் எழுந்து நடையை கட்ட, அவரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்களும், உறுப்பினர்களும் ஒப்புக்கு சிரித்தவாறு நடையைக்கட்டினர்.

ஆனால் ஊடகவியலாளர்களை வெளியேற்றி கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு அவசரமாகக் கூடி கலந்துரையாடப்பட்டு வெளியிடப்படாத முக்கிய விடயங்கள்தான் என்ன?

ஆரம்ப நிகழ்வுகளையடுத்து ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்றினார் சம்பந்தன். ஆனால் இதுபற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் எம்மிடம் தகவல் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘‘இக்கூட்டத்தில் சுமந்திரன் கருத்துரைக்கையில், இனப்படுகொலை என்னும் சொற்பிரயோகத்தை பாவிக்கவேண்டாம் என்றும், இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றும், அப்படி கூறினால் வெளிநாடுகளுக்கு அதுபற்றிய தகுந்த ஆதாரங்கள் கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு ஆதரவாக அமையும் என்று கூறமுடியாதென்றும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறீலங்காவுடன் பேசவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கருத்துக்கு சிவாஜிலிங்கம், அனந்தி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

சுரேஸ் பிரேமச்சந்திரன் சுமந்திரனின் கருத்துக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டதுடன், சிறீலங்காப்படையினரால் பாடசாலைகளில் குண்டு போட்டு பள்ளிச்சிறுவர்கள் கொல்லப்பட்டமை, சிறைகளில் நடைபெறும் படுகொலைகள் என்பனவற்றை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், அனந்தி அவர்கள் ஜேர்மனில் நடைபெற்ற மக்கள் தீர்பாயத்தையும் சுட்டிக்காடியிருந்தார்.  

இவ்வாறாக இக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. பின்கதவால் அரசியலுக்கு வந்த சுமந்திரன் தற்போது தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் ஆதிக்க வெறியர்களின் அடிவருடியாக இருக்கின்றார். இவர் தமிழர் வரலாற்றில் இன்னும் ஒரு கருணாவாகவே இடம்பிடிப்பார். இரத்தமும் சதையுமாக போராடி தற்போது துன்பத்துள் வீழ்ந்திருக்கும் தமிழினத்தின் வேதனைகள் இப்படியான மெத்தப்படித்த கனவான்கள் அறியமாட்டார்கள். சர்வதேசத்திடம் தகுந்த ஆதாரங்கள் கண்முன்னே காட்டப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமந்திரனின் கருத்துக்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இனப்படுகொலைக்கு ஆதரவாக நின்றவர்களையும் காப்பாற்றும் நோக்கமாகவே பார்க்கலாம். இதற்கு சுமந்திரன் நிச்சயமாக பெரும் சன்மானத்தை பெற்றுருப்பார். ஆனால் சுமந்திரன் நினைப்பது போன்று மக்களின் பிணங்களின் மேலிருந்து அவரால் நீண்ட காலத்திற்கு அரசியல் செய்ய முடியாது. காலம் எம்மை விடுவிக்கும். தமிழர்களின் போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.

 

 

 

http://www.sankathi24.com/news/36902/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

‘‘இக்கூட்டத்தில் சுமந்திரன் கருத்துரைக்கையில், இனப்படுகொலை என்னும் சொற்பிரயோகத்தை பாவிக்கவேண்டாம் என்றும், இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றும், அப்படி கூறினால் வெளிநாடுகளுக்கு அதுபற்றிய தகுந்த ஆதாரங்கள் கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு ஆதரவாக அமையும் என்று கூறமுடியாதென்றும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறீலங்காவுடன் பேசவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

 

சுமத்திரன் கூட்டமைப்பிற்குள் வந்ததே பேரிணவாத அரசை காப்பாற்றதானே மலத்தை செருப்பில் பிரட்டி வாக்கு போட்ட தமிழ சனத்திற்க்கு அடித்ததற்க்கு ஒப்பானது இவரின் கதைகள். 

12(658).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-23-12-2013.jpg

மேலே குறிப்பிட்ட விடயங்கள் பற்றி பேசலாமா மிஸ்ரர் சுமந்திரன்  :icon_mrgreen: 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா இந்த வால்பிடிகள் இந்த திரிபக்கம் வரவில்லையோ ?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை தேர்தலின்போது சுமந்திரன்  பின் வாசலால் வராமல் ,தேர்தலில் போட்டியிட்டு ? வரவேண்டும்

//இனப்படுகொலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை’ – சுமந்திரன் அறிவிப்பு!//

 

மானம் கேட்ட கேவலம் கெட்ட கூட்டம் ....................பதவி ...............இது  ஒரு கொலை செய்யப்பட்ட இனத்தை விட பெரிது இந்த நாய்களுக்கு [ ஈனப்பிறவிகளுக்கு ] [நாய்களை வெட்டுவதற்கு இலகுவாக ] ..................
 
 
இவங்களை எப்பிடி என்ன செய்யலாம் .............சாரி  யாராவது இளைஞ்சனர்கள் இருந்தால் பதில் தாருங்க ...............

எங்கையப்பா இந்த வால்பிடிகள் இந்த திரிபக்கம் வரவில்லையோ ?

நீங்கள் சங்கதியின் ஊது குழல். சங்கதி உங்கள் போன்றவர்களின் ஊது குழல். 

 

நாம் ஐ.நா. வில் கேட்பது சர்வதேச விசாரணை. மனித உரிமைகள் சபை சரியான தீர்மானங்களை நிறைவேற்றி பாது காப்பு சபைக்கு அனுப்பி விசாரணையை கொண்டுவரவைக்க வேண்டும்.

 

ஆனாலும்  பெருமாள் ஐ.நா.வில் இனவழிப்பு விசாரணையை கொண்டுவரும் போது நாம் பெருமாளுக்கும் நாம் வாலுதான். ஆனால் பெருமாள் சங்கதிக்கு மட்டும்தான் அந்த புகழ் எனக் கூறிக்கொண்டு சங்கதியைமட்டும்தான் வால் பிடிப்பேன் என்று அடம் பிடிப்பதுதான் கவலையாக இருக்கு.

Edited by மல்லையூரான்

இந்த விடயம் ககனடா வந்தபோது சுமந்திரன் கருத்து தெரிவித்தவர் அதாவது ஐ .நா நிபுணர்குழு அறிக்கையில் இன அழிப்பு நடந்தது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை ,இன்னும் சில ஆதாரங்களை அவர்கள் எதிர் பார்க்கின்றார்கள் ,நாங்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம் அதேநேரத்தில் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளையும் கவனிக்கவேண்டும் .இணையத்தளங்களும் நேரத்துக்கு நேரம் உசுப்பேத்தல் கதைகள் சொல்லுகின்றவர்களுடைய கதைகளை கணக்கில் எடுக்கமுடியாது .

ஒன்றும் வேண்டாம் முடிந்தது சோலி அடுத்தமுறை சுமந்திரன் லண்டன் /கனடா வரும் போது நேரடி விவாதத்திகு ஒழுங்கு செய்கின்றேன் ,இதில் வெட்டிப்பேச்சு ,கருத்து எழுதுகின்றவர்கள் தயார ?

 

Edited by Gari

அடுத்தமுறை தேர்தலின்போது சுமந்திரன்  பின் வாசலால் வராமல் ,தேர்தலில் போட்டியிட்டு ? வரவேண்டும்

[/quot

அடுத்த தேர்தலில் அவர்யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவார் .அப்பொழுது எல்லோரும் உங்கள் வீரத்தை காட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா இந்த வால்பிடிகள் இந்த திரிபக்கம் வரவில்லையோ ?

நாங்கள் எதையும் கண்டு ஓடி ஒழிபவர்கள் இல்லை .எத்தனையோ திரிகளில் நீங்கள் தான் திரியை திசை திருப்புகின்றீர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132533&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133422&hl=

அடுத்தமுறை தேர்தலின்போது சுமந்திரன்  பின் வாசலால் வராமல் ,தேர்தலில் போட்டியிட்டு ? வரவேண்டும்

அடுத்த தேர்தலில் அவர்யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவார் .அப்பொழுது எல்லோரும் உங்கள் வீரத்தை காட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எல்லாம் தேசிய தலைவர் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார். தேசிய தலைவரை.. அரசியல் மதியூகம் அற்றவர் என்று வர்ணிப்பவர்கள் இவற்றிற்கு பதில் சொல்லட்டும். எமது இனத்தை பேரிடருக்குள் தள்ளியதே சிங்களப் பேரினத்திற்கும்.. வல்லாதிக்க சக்திகளுக்கும் அடிவருடும்.. இந்த சட்டாம்பி ஆசாமிகள் தான்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எல்லாம் தேசிய தலைவர் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார்.

ஆயுதம் தாங்கி, பயத்தின் துணை கொண்டு (சிலர் அதை பயங்கரவாதம் என்பார்கள்) மற்றவர்களை "வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தவர்கள்" வெற்றி பெறுவதும் அவர்கள் கொள்கைகள் நிலை பெறுவதும் அரிது. அது லெனினுக்கும், மாவோ சேதுங்குக்கும், ஹிட்லருக்கும் மட்டும் தான் பொருந்தும் என்றல்ல, எல்லோருக்கும் பொருந்துகிறது.

 

தேசிய தலைவரை.. அரசியல் மதியூகம் அற்றவர் என்று வர்ணிப்பவர்கள் ...

அவரின் அரசியல் மதியூகம் தந்த தமிழீழம் எங்கே? அவரை நம்பி அவர் பின்னே போன மக்களின் நிலை என்ன?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
இதே கேள்வியை நாங்க இராமநாதனையும் கேட்கலாம். பொன்னம்பலத்தையும் கேட்கலாம்.செல்வநாயகத்தையும் கேட்கலாம். அமிர்தலிங்கத்தையும் கேட்கலாம்.சம்பந்தனையும் கேட்கலாம்.சுமந்திரனையும் கேட்கலாம். 
 
ஆயுதம் தாங்காத ஜனநாயகம் உலகில் எங்குள்ளது என்ற கேள்விக்கு உங்களால் பதில் தர முடியுமா..??!
 
ஆயுதத்தில் யார் பலமான ஆயுதம் வைச்சிருக்கிறான் என்பது தான் யார் ஜனநாயகத்தை மக்கள் மீது திணிப்பது என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் பிரபாகரன் ஒன்றும் ஜனநாயக வேடம் போட்டு மக்களை ஏமாற்றியவரல்ல. வெளிப்படையான போராளி அவர்.
 
ஆம் மக்கள் இன்று தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (பெயரளவில் ஆவது..) பின் உள்ளனர். முடிந்தால்.. சம்பந்தனோ.. சுமந்திரனோ.. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனிக்கட்சியோ அல்லது.. தமிழரசுக் கட்சியிலோ தனித்துப் போட்டியிட்டு வெல்லட்டும். மக்கள் அவர்கள் பின்னாடின்னு சொல்லிக் கொள்ள குறைஞ்சது அதுவாவது மிச்சமிருக்கும்.
 
ஜனநாயகம்.. மிதவாதம் என்ற போர்வையில் மக்கள் அழிவுகளில் குளிர்காய்ந்த சங்கரி போன்றவர்களின் உண்மை திரையை... மீண்டும்.. மீண்டும் மக்கள் தேர்தல் களங்களில் கிழித்தெறிந்தது காணாது என்றால்...
 
இனப்படுகொலை என்பது எமது இனம் இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக சந்தித்து வரும் ஒரு பெரும் இன அழிப்பின் ஒரு பாகம். அதனை உச்சரிக்க வேண்டாம் என்பதன் ஊடாக பேரினவெறித்தனத்துக்கு சிறுபான்மை இனத்தை அடங்கிப் போகச் சொல்லும் ஒரு தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் என்றும் ஆதரிக்கவில்லை.
 
தமிழரசு சரி... கூட்டணி சரி.. புலிகள் சரி... எல்லோரும் தமிழீழம்.. தன்னாட்சி.. சுயாட்சி.. சமஷ்டி என்று பேசித்தான்.. மக்களிடம் வாக்கு வாங்கினார்களே தவிர ஐக்கிய இலங்கை பேசியோ.. இனப்படுகொலை.. இனப்பிரச்சனை இல்லை என்று சொல்லியோ அல்ல. யதார்த்தத்தை மறைத்து.. சர்வதேச சக்திகள் சிலரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது மக்களின் உரிமைகளை அடகு வைக்க அல்ல.. இத்தனை அழிவுகளையும்.. துன்பங்களையும் எம் மக்கள் சந்தித்து நின்றார்கள் என்ற அடிப்படையை இன்று புரிந்து கொள்ளாமல் யாரும் நடந்து கொள்ள முடியாது. அந்த வகையில் உங்கள் கேள்விகள்.. அர்த்தமற்ற மோசடிகள். அவ்வளவே.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் லண்டன் வர ஒழுங்கு செய்யுங்கள் ,அவரது கோவணம் மிஞ்சினால் உங்களுக்கு பரிசாக வழங்குகிறோம்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரை.. அரசியல் மதியூகம் அற்றவர் என்று வர்ணிப்பவர்கள் இவற்றிற்கு பதில் சொல்லட்டும்.

 

 

அவரின் அரசியல் மதியூகம் தந்த தமிழீழம் எங்கே? அவரை நம்பி அவர் பின்னே போன மக்களின் நிலை என்ன?

 

 

இதே கேள்வியை நாங்க இராமநாதனையும் கேட்கலாம். பொன்னம்பலத்தையும் கேட்கலாம்.செல்வநாயகத்தையும் கேட்கலாம். அமிர்தலிங்கத்தையும் கேட்கலாம்.சம்பந்தனையும் கேட்கலாம்.சுமந்திரனையும் கேட்கலாம்.

தாராளமாக கேளுங்கள், அவர்களையும் மதியூகம் அற்றவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி கருதுபவர்களுடன் நானும் உடன்படுகிறேன். இவர்களுடன் நீங்கள் தேசிய தலைவரையும் சேர்த்திருப்பது பொருத்தமானதே.

முப்பது வருடமாக ஈயத்கை காதுக்குள் ஊத்தி வைத்துவிட்டார்கள்.இப்போ கேட்கும் சத்தம் எல்லாம் காதை அடைகத்தான் சொல்லும் .

 

தலைப்பு திரு சுமந்திரன் இனப்படுகொலை என நாங்கள் தமிழரகள் பேசக்கூடாது என்று அறவித்த விடயமாகும். அவர் அவ்வாறு பேசியது உண்மையா அல்லது ஊடகங்களால் இட்டுக்கட்டப் பட்டதா? அவ்வாறு பேசியிருந்தால. அது நியாயமானதா? அது ஏன் பாதிக்கப் பட்ட தமிழர்களே இனப்படுகொலை இல்லை என்று சொல்ல வேண்டும். என்று சுமந்திரன. எதிர்பார்கிறார்? போன்ற கேள்விகளே இங்கு விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் ஆனால் இங்கு அனைவருமே வழமைபோல் தலைப்பை தமகேற்ற முறையில் திசை திருப்பி தமது ஈகோ என்ற தளத்தில் நின்று சுயநல விவாத்தத்தில் ஈடுபடுவதாகவே எனக்கு படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு திரு சுமந்திரன் இனப்படுகொலை என நாங்கள் தமிழரகள் பேசக்கூடாது என்று அறவித்த விடயமாகும். அவர் அவ்வாறு பேசியது உண்மையா அல்லது ஊடகங்களால் இட்டுக்கட்டப் பட்டதா? அவ்வாறு பேசியிருந்தால. அது நியாயமானதா? அது ஏன் பாதிக்கப் பட்ட தமிழர்களே இனப்படுகொலை இல்லை என்று சொல்ல வேண்டும். என்று சுமந்திரன. எதிர்பார்கிறார்? போன்ற கேள்விகளே இங்கு விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் ஆனால் இங்கு அனைவருமே வழமைபோல் தலைப்பை தமகேற்ற முறையில் திசை திருப்பி தமது ஈகோ என்ற தளத்தில் நின்று சுயநல விவாத்தத்தில் ஈடுபடுவதாகவே எனக்கு படுகிறது.

 

 

சுமந்திரன் ஒரு அரைவேக்காட்டு தனமானவர்.......
அவருடைய கருத்தை வைத்து ஒரு விவாதத்தை செய்ய முடியாது. என்பது எனது தனிபட்ட கருத்து. 
அவருடைய கருத்தானது  மையம் என்பதால் ....
சுற்றி சுழன்று அரைவேக்காட்டு தனத்தில்தான் போய்  நிற்போம்.

சுமந்திரன் ஒரு அரைவேக்காட்டு தனமானவர்.......

அவருடைய கருத்தை வைத்து ஒரு விவாதத்தை செய்ய முடியாது. என்பது எனது தனிபட்ட கருத்து.

அவருடைய கருத்தானது மையம் என்பதால் ....

சுற்றி சுழன்று அரைவேக்காட்டு தனத்தில்தான் போய் நிற்போம்.

நான் கூறியது சுமந்திரனை பற்றியது அல்ல. அவர் கூறிய கருத்து பற்றியது. அவரது கருத்து பாரதூரமானது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று மற்றவர்கள் ஏற்று கொள்ளவில்லையாயின் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டிய, அதற்காக வாதாடவேண்டிய தமிழ்த்தரப்பே இனப்படுகொலை நடக்கவில்லை என்று தன்னிச்சையாக ஏன் கூறவேண்டும் என்று அவர் ஏன் எதிர் பார்க்கிறார் இது விவாத்த்திற்குரிய விடயமாகும். தவிர சுமந்திரன் மீது வசைமாரி பொழிவதோ அல்லது புலிகள் மீது வசைமாரி பொழிவதோ ஆரோக்கியமான விவாதமாகாது. ஆனால். அதுதான் அனேகமாக இங்கு நடைபெறுகிறது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறியது சுமந்திரனை பற்றியது அல்ல. அவர் கூறிய கருத்து பற்றியது. அவரது கருத்து பாரதூரமானது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று மற்றவர்கள் ஏற்று கொள்ளவில்லையாயின் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டிய, அதற்காக வாதாடவேண்டிய தமிழ்த்தரப்பே இனப்படுகொலை நடக்கவில்லை என்று தன்னிச்சையாக ஏன் கூறவேண்டும் என்று அவர் ஏன் எதிர் பார்க்கிறார் இது விவாத்த்திற்குரிய விடயமாகும். தவிர சுமந்திரன் மீது வசைமாரி பொழிவதோ அல்லது புலிகள் மீது வசைமாரி பொழிவதோ ஆரோக்கியமான விவாதமாகாது. ஆனால். அதுதான் அனேகமாக இங்கு நடைபெறுகிறது.

 

இந்த அரைவேக்காட்டு தனத்தை பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது??

 

 

 

அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது மேடைக்கு மேடை ஸ்ரீலங்கா அரசு இனக்கொலை புரியவில்லை, போர்குற்றம் எதுவும் புரியவில்லை அதை ஏற்றுக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களை கோரவேண்டும். அதைவிட்டு மேடையில் சாந்தனின் தமிழ் எழுச்சிபாடலை ஒலிக்கவிட்டு வாக்கு கேட்க கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை தேர்தலின்போது சுமந்திரன்  பின் வாசலால் வராமல் ,தேர்தலில் போட்டியிட்டு ? வரவேண்டும்

 

 

உங்கள் கேள்வி  நியாயமானது

துவண்டு போயிருக்கும் மக்களின் அபிலாசைகளை  புரிந்து கொண்டு  கேட்டிருக்கின்றீர்கள்

 

அதை அவர்

அடுத்த தேர்தலில் செய்யவேண்டும்

அதே நேரம்

இதே கருத்தை  மக்களிடம் சொல்லி

வாக்கு கேட்கும் நேர்மையும் வேண்டும்

இதெல்லாம் நடக்குமா என்றால்.............???

 

இங்கு வந்திருந்த

அனந்தியை

ஒருவர் அரசியல்வாதி  போராளி என்றார்

அதற்கு அவர் நான் சொல்லமுடியாத சொல் இது

நான் ஊருக்கு போகணும் என்று உடனேயே  மறுத்தார்

அப்போ  அரசியல்வாதியா தாங்கள் என்பதற்கு புழுவாக நெளிந்தார்

இது தான் களநிலை.............. :(  :(  :(

அவர் அப்படிக் கூற வேண்டாம் என்று கூறவில்லை. கூறுவது பின்னடைவாகலாம் என்கிறார்.

 

நமக்கு தீர்வு வெளிநாடுகளின் தலையீட்டால் மட்டும்தான் வர வேண்டும் என்றதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை. அவர்களுடன் இணங்கி போவது மாட்டும்தான் அதற்கு இடம் அளிக்கும். எனவே சர்வதேசம் என்ன் நினைக்கிறது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். இந்த நிலைப்பாடு வரையும் பலர் இப்போது நம்முடன் பயணிக்கிறார்கள். (சர்வதேசத்தை நாடக்கூடாது என்பது மாற்றுக்கருத்துக்கள் மட்டுமே.) அதன் பின்னர்தான் உள்ளக கொள்கை வேறுபாடுகளுக்கு எற்ப சர்வதேசம் என்ன நினைக்கிறது என்பதை விளங்க வைக்கிறார்கள். நீங்கள் இணக்க அரசியலை விரும்பினால் சர்வ்தேசம் மகிந்தாவை பதவி நீக்கி இலங்கையை தன் வழிக்கு எடுப்பதை ஆமோதிக்கலாம். அதிலும் நமக்கு ஒரு வெளிப்பு இருக்கு. அல்லது சர்வதேசம் ,மீது அழுத்தம் போட வழிகளை கண்டு பிடித்து நமது சுய நிர்ணய உரிமையை நிறுவிக்கொள்ள வழிகள் தேடலாம்.

 

சரவதேசம் மீது அழுத்தம் போடுவதா அல்லது அதை அதன் பாதையில் விட்டு பெற்றுத்தருவதை மட்டு எற்பதா என்பது இணக்க அரசியலாஅல்லது சுய நிர்ணயமா என்பதை தீர்மானிக்காது. இதில் மூன்றாம் தரப்பான இலங்கையும் வந்துதான் தீர வேண்டும்.

 

இதுதான் அது என்றோ அதுதான் இது என்றோ அரசியலில் அமைவதில்லை. அரசியல் தொடர்ந்து இயங்கு நிலையில் இருப்பது. என்வே அரசியலை கணித சூத்திரங்களின் படி நகர்த்த முயற்சிப்பவர்கள் குறுகியகால வெற்றியையும், Chaos  முறைப்படி நகர்த்துபவர்கள் நீண்ட காலத்துக்கான வெற்றியையும் பெற சந்தர்ப்பம் இருக்கு.

 

சர்வ்தேசத்தை விளங்கிகொள்ள வேண்டுமாயின்  அவர்கள் நீதியின் பால் பட்டவர்கள் என்றோ, ஜனநாயகத்தை பரப்புவர்கள் என்றோ, சுயநலமிகள்  என்றோ, அதிகாரத் திமிர் பிடித்தவ்ர்கள் என்றோ லேபல் போட்டால் விளங்கிக்கொள்ள முடியாது.

 

வெளிநாடுகளை அசைக்கமுடியாதா, தனிய அவர்களுடன் ஒத்து போகமட்டும்தான் வேண்டுமா என்றதும் கேள்வி. கதிர்காமரின் வெற்றி, கமருனின் பயண வெற்றிகளையும் நாம் கவனமாக பார்க்க வேண்டும்.

 

சர்வ்தேச நாடுகள் சிங்கள அரசியலுக்கு அமைய காய் நகர்த்துவதை நாம் கவனிக்க முடியுமாயின், நமது சொல்லுக்கு அங்கே ஒரு இடம் பிடிக்க முடியுமா என்றதை நாம் பார்க்க வேண்டும்.

 

சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் மூவரிலும் திறமை இருக்கு. ஆனால் மூவரினதும் அணுகுமுறை, கொள்கை என்பவற்றில் பாரிய பேதம் இருக்கு. தலைமை இன்னமும் சம்பந்தரின் கையில் இருக்கு. இதில் கூட்டமைப்பு காட்டிக்கொடுத்துவிடும் என்பது அவசரப் பேச்சு.     

Edited by மல்லையூரான்

இனப்படுகொலை, போர்க்குற்றம் என்பதை வலியுறுத்தி ஆதாரங்களை கொடுப்பது எந்த வகையில் பின்னடைவாகலாம் என்பதை அவர் விளக்கமாக கூறினால் எல்லோருக்கும் உதவியாக இருப்பதுடன் திரு சுமந்திரன் அவர்கள் மீதான தப்ப்பிராயங்களும் அகலும் என்பது எனது கருத்து. சர்வதேசம் இனப்படுகொலையை  ஏற்று கொள்ளாவிட்டாலும் எமக்கு நீதியான தீர்வு கிடைப்பதற்கு அத்தகைய ஆதாரங்களும் அதற்கு ஆதரவான விவாதங்களும் எந்த வகையிலும் தடையாக இருக்கபோவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.