Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சகோதரர்கள் கோபிக்கக்கூடாது

Featured Replies

வகுப்பில் மாணவன் பெயில் விட்டால் அது மாணவனின் பிழை என்பது இலகு.( ஆனால் மேற்குநாடுகளில் அப்படி சொல்ல முயல்வதில்லை). வயலில் கடுமழை பெய்து வெள்ளம் வந்து பயிர் அழிந்தாலும் அது விவசாயின் பிழை என்று சொல்ல முடியும். அவன் மேட்டுக்காணியில் பயிர் செய்திருக்கலாமே, மழைக்கு தாக்கு பிடிக்கத்தக்க கன்றுகளை நாட்டியிருக்கலாமே, சரியான வான் நிலையை தெரிந்து வைத்திருக்கலாமே.... ஆனல் அந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவும் உருப்படியாவை இல்லை என்பதுதான் உணமை. பள்ளதில் பயிர் செய்ததால்த்தான் விவசாயி தனது காணியையும், ஏரையும், மாடுகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான் என்பதுதான் உண்மை. 

நாட்டில் மூன்றாவதாக இருந்து, தமிழரை அழித்த, UNP வந்தால் UNP யுடனும், SLFP  வந்தால் SLFP யுடனும் இணந்து, கால காலமாக தமிழரைக்காட்டிக்கொடுத்து பலம் பெற்று இன்று முதலாவதாக வந்திருக்கும் இனம் அதை எப்படி தக்க வைக்கலாம் என்பத்ற்கு தங்களின் பிழையை தமிழர் மீது போட அதை வாங்கி கொள்ளத்துடிப்பது புதிய அரசியல் விளக்கமாகாது. 

அரசு தமிழர் நன்றாக இருந்ததால் தொடர்ந்து திட்டமிட்டு தமிழரை அழித்தது. அதற்கு தமிழரின் ஒரு பகுதியான முஸ்லீம்களை உபயோகித்தது. அதற்கு பதியுதின் போன்றவர்களை பாவித்து தமிழ்ரையும் முஸ்லீம்களையும் பிரித்தது. அதற்கு அவர்கள் எடுபட்டு போனர்கள்.(இன்று இந்த கட்டுரையில் மாற்றுக்கருத்துகள் எடுபடுவது போல்.) இப்போது தாங்கள் முதலில் இருப்பதைக்கண்டு சிங்களம் இனி பொறுத்துக்கொள்ளாது என்பதை உணர்ந்து புதுப்புது தியறிகள் வைக்கிறார்கள்.( ஆனால் இந்த சாக்கு போக்குக்களால் அவர்கள் தப்பப்போவதில்லை என்பதை தமக்கு நடந்தை கவனமாக ஆராய்ந்த தமிழர் மட்டும் கண்டு வைத்திருக்கிறார்கள்) பள்ளத்தில் நெல்லை நட்டு அது அழிந்தால் அது விவசாயின் பிழை என்போர் இதையும் ஏற்கிறார்கள்.

விவசாயி பள்ளத்தில் நெல்லு நட்டதால்த்தான் இத்தனை வருடமும் தனது பயிரை கருகவிடாது காப்பாற்றி வந்தான் என்பதை விவசாயத்தை தெரியாதவர்கள் குறையாக கண்டு பிடிக்கிறார்கள். சோல்பரி சிங்களவர் மட்டும் இலங்கையை ஆளும் அரசியல் அமைப்பை ஏற்படுத்தியதற்கும் தமிழர் மீதுதான் பழியை போட்டார்கள். ஜனநாயக அரசை சர்வதேச நாடுகள் தட்டிக்கேட்க்காது என்பதையும் அறியவில்லை.  அதற்கும் தமிழர் மீதே பழியை போடுகிறார்கள். 

இரண்டு மூன்று நாட்களுக்கு முதல் "லண்ஸ்ரட்" இலங்கையில் ஒரு தீர்வை சந்திரிக்கா முலம் கொண்டுவர முயன்றதை பற்றிய Cableகளின் செய்திகள் Colombo Telegraph ல் வெளிவந்திருந்தது. அதை சந்திரிக்கா கெடுத்த விதங்கள் பற்றி லண்ஸ்ரெட் சொல்லியிருந்தவையுமிருந்தது. ஆனால் அவரை திருப்பி அழைத்த அமெரிக்கா, பிளேக்கை அனுப்பி ரணிலை ஒதுக்கி, புலிகளின் கப்பல்களை தாட்டு சந்திரிக்கா செய்த தகிடு தத்ங்களுக்கு உதவ ஆரம்பித்தது. போரின் திசையை மாற்றியது அமெரிக்கா. அதன் காரணம் முஸ்லீம் தீவிரவாதம்  என்பதை பலருக்கு அறியக் கஸ்டம்.

இதில் புலிகளின் இராஜதந்திரம் ஒரு பங்கும் இல்லை. SLMMயை திருப்பிப்போக செய்தது, ஐரோப்பிய ஒன்றியம் மறுக்க மறுக்க புலிகளை தடை செய்வித்தது எல்லாமே அமெரிக்கா மட்டும்தான். அது அவர்களின் ஆயுத போராட்ட எதிர்ப்பு நேரம் அவர்கள் வைத்திருந்த கொள்கை. ஆனால் தமிழருக்கு அன்று ஆயுதப் போராட்டம்தான் விடப்படிருந்த வழி. அமெரிக்கா கேட்ட மாதிரி அதை முழுவதாக கைவிட்டு பாராளுமன்ற எதிர்ப்புக்கு திருப்புவதில் பலன் இல்லை. அது புலிகளுக்கு தெரிந்திருந்தது, லண்ஸ்ரெட்டுக்கு தெரிந்திருந்தது. அது அன்றைய புதிய அமெரிக்க நிர்வாகத்துக்கு விளங்கவில்லை. அமெரிக்கா புலிகளை அழித்துவிட்டு பாரளுமன்றத்தில் இருக்கும் பலத்தை  வைத்து தமிழருக்கு ஒரு தீர்வு கொடுக்கும் படி கேட்ட போது மகிந்தா மறுத்துவிட்டார். பிளேக் அமெரிக்க காங்கிரசில் இலங்கை தன்னை ஏய்த்துவிட்டது என்று பேசினார். இதுவேதான் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எல்ல்வற்றுக்கும் நடந்தது. இதில் தமிழர் படிக்க புதிதாக எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கா மிகப்பெரிய, ராஜதந்திர தோல்வியை இலங்கையில் விட்டு, பட்டு தெளிந்து இன்று UN பிரேரணைகளை கொண்டுவருகிறது. இதில் பிழையை விட்டது யார் என்பது தெளிவு.

முஸ்லீம் தீவிரவாதிகளின் நிலைப்பாட்டால்த்தான் அமெரிக்க இந்த மடைத்தனத்தை செய்தது. இன்று தமிழர் அழிந்தது பதியுதின், கக்கீம் போன்ற்வர்கள் உள்ளே இருந்து தமிழரைக் காட்டிக்கொடுப்பதாலும் தீவிரவாதிகள் அமெரிக்காவை சீண்டி அமெரிக்காவை ஆயுத போராட்டங்களுக்கு எதிராக திருப்பியதாலுமே. இது அரசியல் விளங்குவோருக்கு விளங்கும், தமிழர் "X " அளவால் முஸ்லீம்களை கெடுத்தார்கள் என்றால் அது உண்மை அல்ல. ஆனால் அதன் எதிர் வளம்தான் உண்மை. அதிலும் அந்த கெடுப்பின் அளவு "X" அல்ல, அது உள்ளேயும் வெளியேயும், அறிந்தும், அறியாமலும் "X2"ட்டால் கெடுத்தார்கள் என்பதுதான் உண்மையாகும்.   

அரசை பகைக்காமல், தமிழரை மேலும் காட்டிக்கொடுப்பதால் சிலவற்றை நிறை வேற்ற வேண்டும் என்று நினைத்து புலிகளை குறை சாட்டி கோத்தாவின் பள்ளிவாயல் இடிப்புகளை குறை சொல்லாமல் தவிர்த்து அவரை நியாப்படுத்தும் இந்த நபர் உண்மையில் முஸ்லீம்தானா அல்லது ஒட்டுகுழு, வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிறாரா தானும் கூட தெரியாது. இதில் மாற்றுக்கருத்துகள் நமக்கு படிப்பிக்க ஒன்றும் இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒட்டுக்குளுக்களுக்கும் முஸ்லீம்களுக்கிடையே நடைபெறும் ஆரோக்கியமான போட்டியால் கூட மகிந்தத அரசுக்கே நன்மை என்பதை இரு தரப்பினரும் உணரவேண்டும்.

போன பஸ்ஸிற்கு கைகாட்டி பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை! தங்க தாம்பாளத்தில ரணில் உங்களுக்கு தீர்வுத்திட்டத்தை தந்த மாதரி ரணிலுக்கு ஏன் வக்காலத்து வாங்குறீங்க?!  நடந்துமுடிந்த சம்பவங்களை மாற்றமுடியாது என்பதால் வாதம் பிரயோசனமற்றது! இதில் மட்டும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

எனது கருத்து ரணிலுக்கு வக்காலத்து வாங்குவது மாதிரித் தெரிவது உங்கள் கிரகிப்பில் உள்ள பிரச்சினை. ரணில் வந்திருந்தால் என்ன தீர்வு கிடைத்திருக்கும் என்று ஊகித்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் புலிகளின் தலைமை முழுவதுமாக அழிந்து கையாலாகாத தமிழ்க் கூட்டமைப்பிடம் தமிழரின் அரசியல் தலைமை போயிருக்காது!

உங்கள் எழுத்தின் மூலமே இது தான்

இதற்கு  எதற்கு மகிந்தவை  இழுக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை

ஏதோ  மகிந்த போய்விட்டால்

அல்லது மகிந்த வராதிருந்தால்

எல்லாம் சரியாகிவிடும் என்ற வாதத்தையே  நான் எதிர்த்தேன்..

அதையே  இந்த திரி  சொல்லி  நிற்பதால்..........

மகிந்த வந்ததனால்

உலகத்துகத்தை பகைத்துக்கொண்டு செய்யவேண்டியுள்ளது

ரணிலோ

சந்திரிகாவோ இருந்திருந்தால்

உலகத்தை அரவணைத்துக்கொண்டு செய்திருப்பார்கள் என்பது தான் உண்மை

விசுகு ஐயா தனக்கு விருப்பமான விடயங்களைத் தவிர வேறு எதனையும் படிப்பதில்லை என்பதைத்தான் இதிலிருந்து உணரமுடிகின்றது. முன்னர் புலிகளில் இருந்த கவியழகன் என்பவரால் எழுதப்பட்ட சில நீண்ட தொடர்களை யாழில் இணைத்திருந்தேன். அதில் பல விடயங்கள் அக்குவேறு ஆணிவேறாக விளக்கப்பட்டிருக்கின்றன. அதைப் படிக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் வில்லுப்பாட்டுத்தான் பாடவேண்டும்.

மகிந்த வந்தாலும் வராமல் விட்டாலும் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனம் அடைந்திருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகள் இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையுடன் சமஸ்டியைக் கூட ஒரு தீர்வாக எடுத்திருக்கலாம். தொடர்ந்தும் தமிழர்களின் அரசியல் தலைமையாகப் பலமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகள் தற்போது எந்த அரசியல் அதிகாரம் அற்ற பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணசபைகளைத் தீர்வாக தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையை உருவாக்கியிருக்கின்றது. அதைவிட முக்கியமாக சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் துரிதமாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவல நிலை வந்திருக்கின்றது. இன்னும் சில வருடங்களில் கொழும்பில் இருந்து யாழ் நகர் போகும்போது சிங்கள இடங்களான முறிகண்டி, ஆனையிறவு, நாவற்குழி தாண்டித்தான் போகவேண்டி வரும். வடமராட்சி கிழக்கில் ஆரம்பித்து மட்டக்களப்பு வாகரை வரை சிங்களவர்கள் கடலோரங்களில் குடியிருப்பார்கள்.

இதைத்தான் அறுவடை செய்திருக்கின்றோம்.

மகிந்த வந்தாலும் வராமல் விட்டாலும் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனம் அடைந்திருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகள் இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையுடன் சமஸ்டியைக் கூட ஒரு தீர்வாக எடுத்திருக்கலாம். தொடர்ந்தும் தமிழர்களின் அரசியல் தலைமையாகப் பலமாக இருந்திருக்கலாம்.

இதில் புலிகளின் இராஜதந்திரம் ஒரு பங்கும் இல்லை. SLMMயை திருப்பிப்போக செய்தது, ஐரோப்பிய ஒன்றியம் மறுக்க மறுக்க புலிகளை தடை செய்வித்தது எல்லாமே அமெரிக்கா மட்டும்தான். அது அவர்களின் ஆயுத போராட்ட எதிர்ப்பு நேரம் அவர்கள் வைத்திருந்த கொள்கை. ஆனால் தமிழருக்கு அன்று ஆயுதப் போராட்டம்தான் விடப்படிருந்த வழி. அமெரிக்கா கேட்ட மாதிரி அதை முழுவதாக கைவிட்டு பாராளுமன்ற எதிர்ப்புக்கு திருப்புவதில் பலன் இல்லை. அது புலிகளுக்கு தெரிந்திருந்தது, லண்ஸ்ரெட்டுக்கு தெரிந்திருந்தது. அது அன்றைய புதிய அமெரிக்க நிர்வாகத்துக்கு விளங்கவில்லை. அமெரிக்கா புலிகளை அழித்துவிட்டு பாரளுமன்றத்தில் இருக்கும் பலத்தை  வைத்து தமிழருக்கு ஒரு தீர்வு கொடுக்கும் படி கேட்ட போது மகிந்தா மறுத்துவிட்டார். பிளேக் அமெரிக்க காங்கிரசில் இலங்கை தன்னை ஏய்த்துவிட்டது என்று பேசினார். இதுவேதான் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எல்ல்வற்றுக்கும் நடந்தது. இதில் தமிழர் படிக்க புதிதாக எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கா மிகப்பெரிய, ராஜதந்திர தோல்வியை இலங்கையில் விட்டு, பட்டு தெளிந்து இன்று UN பிரேரணைகளை கொண்டுவருகிறது. இதில் பிழையை விட்டது யார் என்பது தெளிவு.

எப்போதும், எந்த தீர்வையும் எந்த நாடும் தமிழருக்கு வைக்க வில்லை. இந்தியா மட்டும் 13ம் திருத்தத்தை வைத்தது.  இணைத் தலைமை நாடுகள் எந்த தீர்வையும் வைக்க விலை. அது அவ்ர்களின் நோக்கமாக இருக்கவில்லை. அவை இயங்கிய நடை முறையை விளங்கிக்கொள்வது அப்படி ஒன்றும் கஸ்டமில்லை. எந்த சம்ஸ்டியும் 13ம் திருத்தம் மாதிரியே திருப்ப முடியாதும் அல்ல.  சுய நிர்ணய உரிமை இல்லாத தீர்ப்பை எம்மீது திணித்தால் ஏற்றுக்கொள்வதை விட வேறு இல்லாமல் போகலாம். நாம் ஏற்கவில்லை என்று அங்கலாய்பது தீர்வு தேடும் முறை அல்ல.

மகிந்தாவை  பதவி ஏற புலிகள் எதுவும் செய்யவில்லை. சிங்கள் மக்கள் அவரை தெரிந்தார்கள். பிளேக் வந்த பின்னர் அமெரிக்கா தனக்கு புலிகளை அழிக்க கூடியவர் கிடைப்பதை விரும்பினார்கள். அதனால் ரணிலை விட சந்திரிக்காவுடன் ஒட்டாக இருந்தார்கள்.  இதனால் மகிந்தா வருவதை அமெரிக்க முழுவதாக எதிர்க்கவில்லை.  புலிகள் ரணில் தமக்கு செய்த அழிவால் அவரை எதிர்த்தார்கள். இதில் புதுமை ஒன்றும் இல்லை. தம்மிடம் இருக்கு புலனாய்வுகளை வைத்து அமெரிக்கரும் மேற்கு நாடுகளும் மகிந்தாவை கண்டு பிடிப்பார்கள் என்று புலிகள் எதிர்ப்பார்த்தார்கள். புஸ்சின் அரசாங்கம் கண்ணை திற்க்க மறுத்தது. புஸ் போனபின்னர் தனியே விடப்பட்ட பிளேக் வேறு வழி இன்றி தான் தவறு விட்டதை ஒத்துகொண்டார்.

தமிழ் மக்கள் அழிந்ததால் மகிந்தா இன்று அதிக பெரும்பாண்மையை சிங்கள் மக்களிடம் அனுபவிக்கிறார். அதைவைத்துப்பார்த்தால்  சமஸ்டி அரசியலை ரணில் கொடுத்திருந்தால் அடுத்த தேர்தலில் மகிந்தா வருவதை தவிர்க்க முடியாதிருந்திருக்கும். அவர் உடனேயே அதை இல்லாமல் செய்திருந்திருப்பார்.

தமிழ் மக்கள் UNP வாக்களித்து அவர்களை கொண்டு வந்திருந்தால் அது உடனே தன்னியக்கமாக சரியாகது. அவ்ர்கள் வாக்களித்து கொண்டுவந்த JR ன் அரசியல் அமைப்புத்தான் இன்றைய சர்வாதிக்கார தமிழருக்கு எதிரான அரசியல் அமைப்பும், 1983 ம்.. எவரும் தமிழர் JR க்கு வாக்களித்தை தவ்று என்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

2001 செப்டெம்பர் இரட்டைக்கோபுர தாக்குதல் அமெரிக்காவிற்கு உண்மையிலேயே தெரியாதா? முன்னமே தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை? உயிருடன் பிடிக்க கூடிய நிலயில் இருந்த பின்லாடனை ஏன் சுட்டு கொன்றார்கள்?அவர்களது திட்டம் அச்சு பிசகாது தமிழருக்கு உரிமை வாங்கி கொடுப்பதுதான் அவர்கள் திட்டம் என்றால் அதுவும் நடக்கும் அதற்கு புலிகள் தேவையில்லை.

2008 இல் உலகப் பொருளாதார சரிவுக்கு அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி மிகப்பெரிய காரணம்.. அன்று ஆட்சியில் இருந்த புஷ் சரியான முகாமைத்துவ‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.. போதாக்குறைக்கு ஈராக், ஆப்கனில் போரை நடத்தி பெரும் பொருளாதார பாதகங்களை செய்தார். :huh:

அத்தகைய புஷ் வெற்றிபெற்ற முதல் தேர்தலில் தோற்றுப்போனவர் அல் கோர்.. ஃபுளோரிடா மாநிலத்தில் இழுபறிக்குப் பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை மேற்கொண்டபோது, புஷ் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.. :blink:

அந்த அளவுக்கு வாக்குகளை புஷ்க்குப் அள்ளிப்போட்ட ஃபுளோரிடா மக்கள்தான் உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்.. :(:D

ரணில் வந்தால்  என்ன மகிந்தா வந்தால் என்ன இருவரும் தமிழர்களை அழிக்காத்தான் போகின்றார்கள் அதிலும் பார்க்க நாமே அழித்துவிடுவம் என்று நினைத்தார்களோ என்னவோ . :icon_mrgreen:

எனது கருத்து ரணிலுக்கு வக்காலத்து வாங்குவது மாதிரித் தெரிவது உங்கள் கிரகிப்பில் உள்ள பிரச்சினை. ரணில் வந்திருந்தால் என்ன தீர்வு கிடைத்திருக்கும் என்று ஊகித்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் புலிகளின் தலைமை முழுவதுமாக அழிந்து கையாலாகாத தமிழ்க் கூட்டமைப்பிடம் தமிழரின் அரசியல் தலைமை போயிருக்காது!

விசுகு ஐயா தனக்கு விருப்பமான விடயங்களைத் தவிர வேறு எதனையும் படிப்பதில்லை என்பதைத்தான் இதிலிருந்து உணரமுடிகின்றது. முன்னர் புலிகளில் இருந்த கவியழகன் என்பவரால் எழுதப்பட்ட சில நீண்ட தொடர்களை யாழில் இணைத்திருந்தேன். அதில் பல விடயங்கள் அக்குவேறு ஆணிவேறாக விளக்கப்பட்டிருக்கின்றன. அதைப் படிக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் வில்லுப்பாட்டுத்தான் பாடவேண்டும்.

மகிந்த வந்தாலும் வராமல் விட்டாலும் தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பலவீனம் அடைந்திருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. புலிகள் இணைத்தலைமை நாடுகளின் அனுசரணையுடன் சமஸ்டியைக் கூட ஒரு தீர்வாக எடுத்திருக்கலாம். தொடர்ந்தும் தமிழர்களின் அரசியல் தலைமையாகப் பலமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகள் தற்போது எந்த அரசியல் அதிகாரம் அற்ற பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணசபைகளைத் தீர்வாக தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையை உருவாக்கியிருக்கின்றது. அதைவிட முக்கியமாக சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் துரிதமாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவல நிலை வந்திருக்கின்றது. இன்னும் சில வருடங்களில் கொழும்பில் இருந்து யாழ் நகர் போகும்போது சிங்கள இடங்களான முறிகண்டி, ஆனையிறவு, நாவற்குழி தாண்டித்தான் போகவேண்டி வரும். வடமராட்சி கிழக்கில் ஆரம்பித்து மட்டக்களப்பு வாகரை வரை சிங்களவர்கள் கடலோரங்களில் குடியிருப்பார்கள்.

இதைத்தான் அறுவடை செய்திருக்கின்றோம்.

உங்களின் முதல் பதிவுக்கு ஒரு பச்சை 

மற்றையது, நீங்கள் குறிப்பிட்டது போன்று சிங்கள மயமாக்கல் என்பது நாக்கு திட்டமிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்திநூடே நடந்தேறுகிறது.

இதை எதிர்கொள்ளவே தமிழ் மக்கள் ஒரு குடையின் கீள் அணிதிரளவேண்டும் என்று அன்றில் இருந்தே பதிவு செய்ய தலைப்பட்டேன், இருந்தாலும் எம்மால் மீண்டும் தோல்வியை தவிர்க்க முடியாமல் போகும் என்பதை இப்போதே நாம் உணருவோமாக இருந்தால் பின்னாளில் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

சர்வதேசம் ஒரு விசாரணை கொணந்து நிதி செய்யமுன்னம் எமது நிலமும் இனமும் உயிர்ப்புடன் இருப்பது முக்கியம்.

நியாயம் அநியாயங்களுக்கு அப்பால் எண்ணிக்கையின் அடிப்படையிலும், பொருளாதாரத்தின் அடிப்படியிலும் அதிகாரத்தின் அடிப்படையிலும் இன்று நாம் மிகவும் வலுவிழந்து இருப்பதய் எத்தனை பெயர் உணர்ந்தனர்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் வகுத்த பாதைதான் மகிந்த செல்வதற்கு உதவி புரிந்து வெற்றியையும் பெற வைத்துள்ளது என ரணில் இன்றும் மார்தட்டுவது எதனைக்குறிக்கிறது....??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் காலம்காலமாக சிங்கள இனவாத அரசகளால் இன அழிப்புச் செய்யப்படம் போது சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்த முஸ்லிம்கள் இப்போது தங்களையும் சிங்கள இனம் குறி பார்க்கும் பொழுது அதற்கான காரணத்தைத் தமிழர்களின் தலையில் போட்டிருப்பார்கள்.இன்று புலிகள் அழிக்கப்படாது இருந்திருந்தால் முஸ்லிம்கள் சிங்கள அரசின் அரவணைப்புக்குள் இருந்திருப்பார்கள்.புலிகள் இருக்கும்வரையில்தான் காட்டிக்கொடுப்பவர்களுக்கு சிங்கள அசிடம் செல்வாக்கு இருக்கும்.இது டகளசுக்கும் கருணாவுக்கும் மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.உண்மையில் தமிழ்பேசும் மக்கள் இன்ற வகையில் புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவ வேண்டிய முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்துக்கு முண்டு கொடுத்ததால் அவர்களும் அந்த இனவாதத்திற்குப் பலியாகப் போகிறார்கள்.புலிகள் இல்லாத நிலையிலும் கூட கிழக்கு மாகாணசபையில் அற்ப அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு ததேகூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்காமல்(முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு கொடுப்பதாக இறங்கி வந்தும்கூட) சிங்கள இனவாத அரசுக்கு முண்டு கொடுத்தவர்கள் முஸ்லிம்களே!நாங்கள் போராடினோம் ....போராடிக்கொண்டிருக்கிறோம்..... போராடுவோம்.அதானால் வரும் விளைவுகளை நாங்கள் அனுபவிப்போம்.வெற்றிவரும்போது எமக்கும் தனி அலகு வேண்டுமென்று கேட்பதும் தோல்வி வரும்போது எல்லாவற்றுக்கும் தமிழர்களே காரணம் என்று பழி சுமத்துவதும் உங்களுடைய வழக்கம்.வெற்றியோ தோல்வியோ அதை நாங்கள் எதிர்கொள்ளுவோம் எமக்காக நீங்கள் பரிதாபப் படுவது போல் நடிப்பது ஆடு நனையுதென்று ஓநாய் அழுவதைப் போன்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ராஜதந்திரத்தில் முளுமுயர்ச்சியில் ஈடுபட்டிருந்த பாலா அண்ணாவும் கடைசி நேரத்தில் ஒத்துக்கி வைக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் விசு அண்ணா போன்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமே..... மகிந்தாவை ஜனாதிபதியாக்கியது புலிகளின் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்.....அது அரசியல் விமர்சகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடையம்......

தீலிபன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு சிறந்த மக்கள் செல்வாக்குள்ள அரசியல் போராளிகளை புலிகள் இயக்கம் உருவாக்க தவறியதும் மக்களின் நாடிப்பிடிப்பை அறிந்து அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் இருந்ததும் கள ஜதார்த்தம்.......

ஒரு விடுதலை அமைப்பிற்கு இராணுவம் அரசியல் அமைப்பு இவை இரண்டும் நாணையத்தின் இரு பக்கங்கள் போல.....

உதாரணம் irish விடுதலை இயக்கம்....

இப்போது நிறைய பேர் எழுதுவதை பார்த்தல் புலிகள் எப்போதும் irrelevent ஆகவே இருந்திருக்கிறார்கள்...பிறகு ஏன் அவர்களை தலையில் வைப்பான்.....தலைவர் அது சென்ஜார்..இது சென்சார்.....என்பார்கள்..ஆனால் கப்பல் ஏன் கவுண்டது எண்டால்....அது உலகின் சதி என்பார்கள் :) லூசிலே விடவேண்டியது தானே.....

இதை தான் அர்ஜூன் சொல்லுவது போல....புலிகளால் +எல்லா போராட்டகுழுக்களாலும் ஒரு பிரயோசினமும் தமிழருக்கு இருக்கவில்ல...கிடைத்தது எல்லாம் அழிவு தான் என்று....

தீலிபன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு சிறந்த மக்கள் செல்வாக்குள்ள அரசியல் போராளிகளை புலிகள் இயக்கம் உருவாக்க தவறியதும் மக்களின் நாடிப்பிடிப்பை அறிந்து அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் இருந்ததும் கள ஜதார்த்தம்.......

திலீபன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு  மக்களையும் ,போராட்டத்தையும் ,அரசியலையும் ,ஆரோக்கியமான முறையில் நடாத்தவில்லை, சிறந்த அரசியல் போராளிகளை உருவாக்க வில்லை ........... என்பதை உண்மையில் சுய புத்தியுடந்தானா சுண்டல் இங்கே குறிப்பிடுகிறீர்கள் .................திலீபன் அண்ணாவின்  வீர மரணத்தின் பின் நடந்தவை அனைத்தும் போலியா .பிழையா ...ஒரு தடவை மீண்டும் பதிவுகளை ,திரும்பி பாருங்கள் .நன்றி .

போலியா .பிழையா

:( இருந் 1989ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி இரவு கொழும்பில் அவரது இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ். எம்.பி. வெற்றிவேலு யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இந்த சம்பவத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் முருகேசு சிவசிதம்பரம் காயமடைந்திருந்தார்து மக்களால்தெரிவு செய்யபட்ட தமிழ் அரசியல் தலைமைகள் திட்டமிட்டு கொலை செய்யபட்டார்கள் 
அமிர்தலிங்கம் தொடக்கம்

சரோஜினி யோகேஸ்வரன், 1998 மே 17, யாழ்ப்பாணம்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் தனது வீட்டில் இணந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்ர். இரகசிய படையான சங்கிலியன் படை இதற்கு உரிமை கோரியது

2001 ல் தான் புலிகளின் தலைமையே விழித்தது நாங்கள் ஆயுதம்தான் போரட்டம் அதில் அரசியல்தான் முக்கியபங்கு வகிக்கிறது அதற்காப்பால் தான் தமிழ்தேசியகூட்டமைப்பின் முக்கியம் விளங்கியது அதையும் மேற்குதேசநாடுகள் தான் விளங்கபடுத்தினார்கள்.... :D 

அரசியலை முன்நகர்த்த தான் ஆயுதம் பின்வைத்திருத்தல்

Edited by bismar

போலியா .பிழையா

:( 1998ல்இருந்து மக்களால்தெரிவு செய்யபட்ட தமிழ் அரசியல் தலைமைகள் திட்டமிட்டு கொலை செய்யபட்டார்கள் 

அமிர்தலிங்கம் தொடக்கம் திருமதி யோகேஷ்வரன் வரை

2001 ல் தான் புலிகளின் தலைமையே விழித்தது நாங்கள் ஆயுதம்தான் போரட்டம் அதில் அரசியல்தான் முக்கியபங்கு வகிக்கிறது அதற்காப்பால் தான் தமிழ்தேசியகூட்டமைப்பின் முக்கியம் விளங்கியது அதையும் மேற்குதேசநாடுகள் தான் விளங்கபடுத்தினார்கள்.... :D 

அரசியலை முன்நகர்த்த தான் ஆயுதம் பின்வைத்திருத்தல்

ஒரு இழவும் விளங்கல.....யாரட்டையாவது வருடங்களை ஒழுங்கா போய் கேளுங்க ...........அதுக்கு பிப்றகு எழுதுங்க பாஸ் .............. :D  :D  :D

ஒரு இழவும் விளங்கல.....யாரட்டையாவது வருடங்களை ஒழுங்கா போய் கேளுங்க ...........அதுக்கு பிப்றகு எழுதுங்க பாஸ் .............. :D :D :D

யாதர்த்தத்தை ஏற்று கொள்ளாத மனிதர்களிற்கு எழுத்துக்கள் விளங்காது இன்றும் இவர்களது பித்தலாட்டம் தொடர்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மகிந்தவைக் கொன்டுவந்ததன் மூலம், சிங்கள பேரினவாதம் எவ்வளவு கொடூரமானது என்பதைக் உலகிற்குக் காட்ட முடிந்தது என்று இங்கே பலர் சொல்லுவதைக் காண முடிகிறது. சரி, அப்படியே இருந்தாலும் கூட, அதற்காக நாங்கள் கொடுத்த விலை என்ன ? ஒட்டுமொத்தப் போரட்டாமும் அழிக்கப்பட்டு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டு, வன்னிநிலம் முற்றாக சுடுகாடாக்கப்பட்டு, சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் இழுத்து விடப்பட்டு, இன்று எதுவுமேயற்ற அநாதைகளாக எம்மைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. கொடுக்கப்பட்ட விலையயும் அடைந்த பலாபலன்களையும் தராசில் வைத்துப் பார்த்தால், இரண்டும் சமமா என்பது புரியும்.

இங்கே ரணிலுக்கும், மகிந்தவுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, யுத்தம் ஒன்றைத் தவிர்த்திருக்க முடியும் என்றே நான் நம்புகிறேன். சர்வதேச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த ரணில் புலிகளின் செல்வாக்கை குறைக்கவேண்டும் என்று எதிர்பார்த்ததாகத்தான் எனது நினைவு. யுத்தம் என்பது அப்போது ஒரு தீர்வாக ரணிலுக்கு இருக்கவில்லை. சர்வதேசம் எதிர்பார்த்தது, நீண்டகால யுத்தமற்ற பேச்சுவார்த்தைக்காலம் போராளிகளின் போராட்டக் குணத்தை மழுங்கடித்துவிடும், அதன்மூலம் ஒரு தீர்வொன்றிற்கு அவர்களைப் பணியவைக்க முடியும் என்பதைத்தான். இதையே அவர்கள் நோர்வே தலமையில் யாசீர் அரபாத்துக்கும், யிட்ஷாக் ரபீனுக்குமிடையே 1993 இலும் செய்தார்கள். யுத்தம் வேண்டுமென்று கேட்டது சந்திரிக்கா - மகிந்த தலமையிலான சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த்தேசியவாதிகளும்தான்(நான் உற்பட).

அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லையென்றாலும், மகிந்த வருவதைத் தடுத்திருந்தால் கொல்லப்பட்ட மக்களையும், போராளிகளையும், அதனூடணைந்த போரட்டத்தையும் கப்பாற்றியிருக்கலாம். கருணா பிளவிற்குக் காரணமாக இருந்த ரணிலைப் பழிவாங்குவதற்காக எடுக்கப்பட்ட "மகிந்தவைக் கொண்டுவருதல் முடிவு " இறுதியில் ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி, அதன் ஒட்டுமொத்த நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தையும் எதுவுமேயில்லாதவாறு அழித்துவிட்டது என்பதுதான் எனது ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கவில்லை ஒட்டுக்குளுக்களும் மூச்லீம்களும் நினப்பது போல் புலிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு அழிவு ஏற்படும் என்று , முச்சிலீம்கள் அவர்கள் எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள் நம்து ஒட்டுக்குளுக்கள் நினைப்பதுபோல் ஆய்தஙகளின் மூலம் இனிமேல் பதவிக்கு வரமுடியாவிட்டாலும் ஆளுங்கட்சி குண்டர்களாக வந்து காலத்தை போக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

'வென்றால் தேசத் தலைவன்.' 'தோற்றால் தேசத் துரோகி.' இந்தச் சொல்லிற்கு அழிவில்லை என்பதற்கு இன்றைய சில தமிழர்களும் சாட்சியாக உள்ளனர். அதனை எங்கள் யாழ் உறவுகள் சிலரும் நிரூபிக்க ஆவல்கொண்டுள்ளதானது கவலைதருகிறது. அத்துடன் தமிழ்ப் போராளிகளின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டாலும், அடங்கி இருந்த அனைவருமே, இன்று பேரெழுச்சி கொண்டுவிட்டனர். :(   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.