Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......

Featured Replies

சட்டத்தை கையில் எடுக்குமாறு பொதுமக்களை கூறும் கையாலாகாத காவத்துரையை கலைத்து விட்டால் மக்களின் வரிப்பணமாவது மிஞ்சும் அல்லாவா

நீங்க ஒவ்வரு நாளும் குடிச்சுட்டு அடிபடுவியல் குடும்பம் வேணாம் எண்டு போவியள் பிறகு மாமன் மச்சான் வந்து கதைச்சு சேர்த்து விட்டால் அடுத்தநாள் போய் போலீசில் கேஸ் வேணாம் அவர் மேல நாங்க ஒண்ணா இருக்க போறம் என்று சொல்லுறது அதால காவல்துறை உங்கட பிரச்சினையை பெரிசா எடுப்பது இல்லை இங்க சுண்டு .

இந்த பிரஞ்சு ஜனாதிபதி சின்னவீட்டுக்கு போனதை படம் எடுத்த பத்திரிக்கை போலீசில் கொடுக்காமல் ஏன் அவங்கள் போட்டவங்கள் சட்டபடி பிழை எல்லே பத்திரிகை சுகந்திரம் என்று அவன் சொன்னா கேட்பம் ..இதை நாங்க செய்தா சட்டபடி பிழை என்பம் பழகிட்டு வெள்ளைக்கு ஜால்ரா போட்டு .

  • Replies 138
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்ச்.. ஃபிரான்ஸ் ஜனாதிபதிக்கு பத்திரிகைக்காரர் அடிபோட்ட வீடியோ வெளிவந்துவிட்டதா?? :D

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் விபரம் இல்லாத சில தமிழர்களிடம் இப்பிடியான கதைகள் எடுபடும் ஆனால் ஆஸ்திரேலியா கனடியன் தமிழ்ச கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவை அண்ணே :D

யாருக்கு விபரம் இல்லை சுண்டு விசா எடுக்க அம்புட்டு பொய்யும் சொல்லுற எங்க ஆக்களுக்கா விபரம் இல்லை என்கிறீர் ....முடில போங்கோ .

எங்களில் பலர் இன்னும் எங்கு நிற்கின்றோம் என்பது தெரிந்த விடயம் தானே .அதில் பெருமை வேறு .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தனி நபர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் இறுக்கமான சட்டங்கள் கொண்ட ஒரு நாடு என்று கேள்விப் பட்டேன்.  பிரான்ஸ் அதிபரின் ரகசியக் காதலை ஒளிந்திருந்து படம் பிடித்து அனுமதியில்லாமல் பிரசுரித்த பத்திரிகை மீது சட்டம் பாய இடமிருக்கிறது என்கிறார்கள். இந்த மாதிரி சட்டங்கள் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி சந்தேக நபரைப் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டியது தான் சரி. போய் அடிச்சவர்கள் அதைச் செய்யாமல் விட்டது, தங்கள் வீட்டுப் பெண்களும் ஒத்து இந்த விடயம் நடந்ததால் இருக்கலாம் (எனவே பழகியது  சட்டப் படி ஒரு குற்றமே அல்ல! புகைப் படங்களை உலவ விட்டது மட்டுமே குற்றம்!). இப்ப அடி வாங்கினவர் பிரான்ஸ் சட்டத்தைத் தன் நன்மைக்குப் பாவிக்கலாம். அடித்து வீடியோவும் எடுத்துப் போட்டவர்கள் ஆத்திரக் காரர்கள் என்பதை விட வடி கட்டின முட்டாள்கள் என்பதே சரி! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன்.. புகைப்பட நிபுணரான காதலன் தன் காதலியை ஏடாகூடமாக படம் எடுத்துள்ளார்.. இதுக்கு காதலியும் சம்மதித்துள்ளார்.. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.. காதலன் அந்தப்படங்களை சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டார்..

இதையறிந்த பெண் தனது முன்னாள் காதலன் மீது வழக்குப் போட்டுவிட்டார். நீதிபதி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.. படம் எடுக்கும்போது அதை வலைத்தளங்களில் போட்டுவிடலாம் என்று உனக்கு விளங்கியிருந்ததா என்று.. :D

இந்த நட்டு சட்டங்களை மதிக்கிறேன் , அதன்பிரகாரம் நான் மனித நேயம் கொண்டவனாக வாழ்கிறேன் .........ஆனால் என்னை இந்த நாட்டு சட்டம் மதிக்கிதா...................சார் 
 
.எமக்கு நியாயமாக தெரிந்த, எம்  விடுதலைக்காக ,இரவும் பகலும் ,பணியும் குளிரும் வெய்யிலும் என்று பார்க்காமல் செயல்பட்ட  மனித நேய செயல்பாட்டாளர்களை பிடித்து 5 வருஷம் .10 வருஷம் எண்டு உள்ளே போட்டு அவர்கள் குடும்பங்களை சீரழிய வைத்த இந்த நாட்டு சட்டங்களை நான் இன்னும் மதிக்கிறேன் ..........சார் 
 
அண்டு தொட்டு அனைத்து  மனித நேய செயல்பாடுகளையும் அவர்களை செய்ய அனுமதித்தபின் .....தங்களுடைய சுயநலனுக்காக தடையை போட்டு ,சொல்லாமல் கொள்ளாமல் செயல்பாடுகளை முடக்கி ,எம் விடுதலைக்கு பெரும் தடையை ஏற்படுத்திய இந்த நாட்டு சட்டங்களை நான் இன்னும் மதிக்கிறேன் சார் 
 
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் சார் ................
 
இப்பிடியே இவன் சட்டங்களை மதித்து, எம் தனித்துவமான ,பண்பாடு ,விழுமியங்களை தொலைத்து  இந்த நாடுகளிலேயே கோமணத்துடன் வாழ்ந்து அனாதைப்பிணமாக சாவோம் சார் ...........
 
.என்ன சார் நிறைய எல்லாரும் உங்க பெருந்தன்மையை இந்த திரியில காட்டுறீங்க .............அப்பிடி பெருந்தன்மை உள்ள நீங்கள் உங்கள நாட்டில் பொய் வாழலாமே என்று மட்டும் கேட்டு விடாதீங்க .....ஏனென்றால் கேட்பீர்கள் ................அப்புறம் அழுதிடுவேன் :icon_mrgreen:  :icon_mrgreen: .
 
ஆக, விடுதலைப் புலிகளை தடை செய்தமையாலும் அவர்களின் செயற்பாட்டாளர்களை கைது செய்தமையாலும் (எல்லாரும் பால் குடி அப்பாவிகள் வேறு) நீங்கள் இந்த நாடுகளின் சட்டங்களை மதிக்க விரும்புகின்றீர்கள் இல்லை..அதுதானே?

இனி இஸ்லாமியர்களும் சட்டங்களை கையில் எடுத்து வன்முறைகளின் மூலம் தங்கள் விழுமியங்களை காக்கலாம், ஏனென்றால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தையும் மேற்குலகு தடை செய்துள்ளது.

காஸ்மீரிகளும் இனி சட்டத்தினைக் கையில் எடுத்து வன்முறை மூலம் தம் கலாச்சாரங்களை பேணலாம், ஏனென்றால் காஸ்மீர் விடுதலை போராளிகள் அமைப்புகளையும் மேற்குலகம் தடை செய்து உள்ளது.

ஈராக்கியர்கள் தெருத்தெருவாக சண்டை பிடிக்கலாம், பாலஸ்தீனர்கள் வீதி வீதியாக ரவுடித்தனம் செய்யலாம், ஈரானியர்கள் குற்றவாளிகள் என்று நினைப்பவர்களை மேற்கின் வீதி எங்கும் கல்லால் எறிந்தும், பொது மக்கள் பார்க்கும் வண்ணம் தலையை அறுத்தும் தண்டனை கொடுக்கலாம்...

வாழ்க

நன்றி

:) தானா.சூனா! I beg to differ! சட்டங்களை மதிக்கிறது பல காரணங்களுக்காக. எனக்குத் தெரிஞ்ச சில காரணங்கள், காட்டுத் தர்பார் உருவாகாமல் இருக்க, சிறைக்கம்பியின் பிழையான பக்கத்தில் நாம் இடம் பிடித்து விடாமல் இருக்க, எமக்குப் பின்னால் வரும் ஆட்களுக்கு (வேற யார், எங்கட பிள்ளையள் தான்!) நல்ல உலகத்தை விட்டுச் செல்ல, இப்படிப் பல. அதுக்காக எல்லாச் சட்டங்களையும் மதிக்க வேணுமெண்டில்லை. அறுபதுகளில் கறுப்பர்கள் பேருந்துகளில் அமரக் கூடாது என்பது அமெரிக்காவில் சட்டம்! அதை சில முற்போக்கு வாதிகள் மீறினதாலும் போரிட்டதாலும் தான் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம அந்தஸ்துக் கிடைத்தது. புலிகள் மீறின சிறி லங்காச் சட்டங்களையும் இந்த வகைகளில் அடக்கலாம்!

ஆக, விடுதலைப் புலிகளை தடை செய்தமையாலும் அவர்களின் செயற்பாட்டாளர்களை கைது செய்தமையாலும் (எல்லாரும் பால் குடி அப்பாவிகள் வேறு) நீங்கள் இந்த நாடுகளின் சட்டங்களை மதிக்க விரும்புகின்றீர்கள் இல்லை..அதுதானே?

இனி இஸ்லாமியர்களும் சட்டங்களை கையில் எடுத்து வன்முறைகளின் மூலம் தங்கள் விழுமியங்களை காக்கலாம், ஏனென்றால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தையும் மேற்குலகு தடை செய்துள்ளது.

காஸ்மீரிகளும் இனி சட்டத்தினைக் கையில் எடுத்து வன்முறை மூலம் தம் கலாச்சாரங்களை பேணலாம், ஏனென்றால் காஸ்மீர் விடுதலை போராளிகள் அமைப்புகளையும் மேற்குலகம் தடை செய்து உள்ளது.

ஈராக்கியர்கள் தெருத்தெருவாக சண்டை பிடிக்கலாம், பாலஸ்தீனர்கள் வீதி வீதியாக ரவுடித்தனம் செய்யலாம், ஈரானியர்கள் குற்றவாளிகள் என்று நினைப்பவர்களை மேற்கின் வீதி எங்கும் கல்லால் எறிந்தும், பொது மக்கள் பார்க்கும் வண்ணம் தலையை அறுத்தும் தண்டனை கொடுக்கலாம்...

வாழ்க

நன்றி

எதற்காக ,என்ன காரணத்திற்காக நான்  எம்  தாயகத்தில் இருந்து  வந்து இங்கு வாழ்கிறேனோ  அந்த காரணம் முடிவிற்கு  வர வேண்டும் என்றால் ,மீண்டும் நான்  எம் தாயகத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கோடு ...., எமக்கான விடுதலை நோக்கோடு .........அதற்கு  என்னாலான செயல்;பாட்டுக்கு  தடையாக என்ன ,யார் இருந்தாலும் அதை நான் மதிக்க மாட்டேன் ,என் எதிர்ப்பு அங்கே இருக்கும் ..[[சட்டம் உட்பட ]  .............இதை நீங்கள் ஒரு ஈழத்தமிழன்  கோணத்தில் சிந்திப்பதற்கும்  , இஸ்லாமியர், தலிபான்கள் ,,கஸ்மீர் காரர் கோணத்தில் சிந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கும் .அது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது என் பிரச்சனை இல்லை..............
 
[மனித உணர்வுகளை ,மனித மாண்புகளை ,தெரிந்தவன் சாதாரணமாக விளங்கிக்கொள்வான்.........எதை எங்கே எப்போது செய்யவேண்டும் என்பதிலேயே மனிதம் என்னும் பண்பு தெரியும் ..............மனிதனின் இடையூறு இல்லா வாழ்க்கைக்கே சட்டங்கள் இருக்க வேண்டும் ,சட்டங்களுக்காக மனிதனின் வாழ்வு இருக்க கூடாது .................அது சமனிலைப்படுத்தப்படாத இந்த உலகில் மனிதன் தன் உணர்வுகளை படைப்புக்களாக வெளிக்கொண்டு வருகிறான் .........
 
இப்படிப்பார்க்கும் பொது உலகில் வெளியிடப்படும் திரைப்படங்கலில் ,உண்மைக்காக ,நீதிக்காக ,நியாயத்திற்காக  ,தனி மனிதன் சட்டத்தை கையில் எடுத்து ..............சில தண்டனைகளை வழங்கும் பொது அதை எம் மன இசைவுடன் பார்த்து  ஏன் அதனை ஏற்றுக்கொள்கிறோம் ..........அந்த திரைப்படங்களை  ஏன் சட்டம் அனுமதிக்குது ............ :lol: ]

இந்த நாட்டுச் சட்டத்தில் உள்ள நுணுக்கமான விடயங்கள் இவர் போன்றவர்களை தப்பிக்க வைத்துவிடும். ஏற்கனவே 2012ம் ஆண்டு கோடைகாலத்தில் ஜேர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணையும் சுவிசைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் இதேமுறையில் ஏமாற்றியுள்ளான். சுவிசைச் சேர்ந்த பெண் இவனைப்பற்றி அறிந்து அதை தனது குடும்ப உறவினர்களுக்கு தெரிவிக்க முயன்றபோது இவனால் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு அப்பெண்ணின் முறைப்பாட்டில் சுவிஸ் காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் எவ்வித தண்டனையும் வழங்கப்படாது பிரான்சுக்கு திருப்பியனுப்பட்டுவிடுவிக்கப்பட்டார். அன்றே யாராவது இது மாதிரி அடிச்சு இணையத்தளங்களில் போட்டிருந்தால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் வேறு நாட்டு பிரஜைகள் குற்றம் செய்தால் ஒன்றும் செய்ய மாட்டார்களா ?

புலிகள் அழிந்தாலும் அவர்கள் பல பிற்போக்குத்தனங்களை எமது இனத்திற்குள் விதைத்து விட்டு சென்றுவிட்டார்கள் .இவற்றிலெல்லாம் இருந்து விடுபடுவது ஒன்றும் இலகுவானதல்ல,குறிப்பாக புலம் பெயர் தேசங்களில் .

அப்ப பெண்களுக்கு இப்படி அடி தடி மூலம் தான் பாதுகாப்புக் கிடைச்சிருக்கும்? தாங்களே உணர்ந்து எச்சரிக்கையுணர்வு கொள்வதால வராது என்கிறீங்கள்? நான் நினைக்கிறன் சட்டம் ஒன்றும் செய்யாததே பாதிக்கப் பட்டதாகக் கூறும் பெண்கள் பக்கம் தவறு இருப்பதால் தான். :lol:

அர்யுன் அண்ணா உங்களுக்கு எந்த விடயத்திலும் புலிகளை கொண்டு வந்து கோர்த்துக் கதை சொல்லாட்டி பத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. சுவிஸ் நாட்டு விசா இல்லாமல் சுவிசுக்குள் வந்து குற்றம் இழைக்கும் நபர்கள் அவர்களின் வதிவிட உரிமையுள்ள நாட்டுக்குத்தான் திருப்பி அனுப்பப்படுவார்கள். உங்கள் நண்பர்கள் பலர் பல தரப்பட்ட அடிபாடுகள் கொள்ளைச் செயல்களில் எல்லாம் ஈடுபட்டுவிட்டு எப்படி இப்பவும் வெள்ளையும் சொள்ளையும் திரிகின்றார்களோ அப்படித்தான் சட்ட நுணுக்கங்களும். இருக்கின்றது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான உங்கள் அமைப்பின் நண்பர் இப்ப எப்படி வெளியிலை திரியிறாரோ அப்படித்தான் இதுவும்.

அப்ப பெண்களுக்கு இப்படி அடி தடி மூலம் தான் பாதுகாப்புக் கிடைச்சிருக்கும்? தாங்களே உணர்ந்து எச்சரிக்கையுணர்வு கொள்வதால வராது என்கிறீங்கள்? நான் நினைக்கிறன் சட்டம் ஒன்றும் செய்யாததே பாதிக்கப் பட்டதாகக் கூறும் பெண்கள் பக்கம் தவறு இருப்பதால் தான். :lol:

பெண்கள் பக்கம் சரியென்று யார் சொன்னது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவனைப்போன்ற ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

பெண்கள் பெண்சுதந்திரம் என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு தம்மை பெற்றோர் கண்காணிப்பதையோ அல்லது பெற்றோரின் அறிவுரைகளை கேட்கும் நிலையிலோ பெற்றோரின் பாதுகாப்பையோ ஏற்கும் நிலையில் இல்லை. எதையும் நாமே தீர்மனிக்கலாம் எல்லாம் எமக்குத் தெரியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். எது சரி எது பிழை என்பதை ஆராயும் நிலையில் இல்லை இத்தகைய நிலைப்பாடு ஆசை வார்த்தை காட்டி மயக்கும் ஆண்களுக்கு எளிதாகிவிடுகின்றது. தாயகத்திலும் இன்று இத்தகைய நிலையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல்த்துறை தமிழர் விடையங்களில் தலையிட முடியாது நீங்களே பாத்துக்கோங்க என்று கூறி இருந்தால் சட்டப்படி அவர்கள் அத்தனை பேரையும் வேளையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பலாம்

சுண்டல்  காவல்துறையின் வேலை

தண்டனை  கொடுப்பதல்ல

மக்களை  திருத்துவது

மேலும்  குற்றங்களை  செய்யாது தடுப்பது

அவர்களுக்கு பாதுபாப்பு கொடுப்பது(குற்றவாளிகளுக்கும் கூட)...

அந்தவகையில்

பிரான்சில் பல  இனங்கள்  வாழுவதால்

அந்தந்த இனங்களுடன்

அவை சார்ந்த அமைப்புக்களுடன்  காவல்துறை தொடர்பிலிருக்கும்

தமிழ் மக்கள் சார்ந்து

ஒருங்கிணைப்புக்குழுவுடன் அதன் முழுத்தொடர்புகளும் இருந்தன

பல சிக்கல்களை  அவர்கள் ஒருங்கிணைப்புக்குழுவிடம் அனுப்பி  வைத்ததை  நான் கண்டுள்ளேன்

சீட்டு (காசு  மற்றும் பவுண்)

வட்டி

கொடுக்கல் வாங்கல்

சாகும்வரை வைத்திருந்து பழி  வாங்குதல்

கை தொடாத  காதல்

காதலித்து முத்தம் தந்து விட்டு  ஏமாற்றும் காதலன்....

இதெல்லாம் இவர்களுக்கு தெரியாதவை.......

Edited by விசுகு

மனைவி இருக்கும்போது இன்னொருத்தியை காதலியாய் வைத்திருககும் ஜனாதிபதியைகொண்ட ஒரு நாட்டில் காதலிப்பது தவறில்லை. ஒருவன் பலரைக் காதலிப்பதும் தவறில்லை. காதலிக்கும்போது அவர்களை படம் பிடிப்பதும் தவறில்லை. பிடிக்காது விட்டால் காதலியை அல்லது காதலனை விட்டுவிடுவதும் தவறில்லை. ஆனால் அந்தப் படங்களை ஏதாவது ஒரு இடத்தில் வெளியிடும் வரை தவறில்லை. அப்படிப் பார்த்தால் அந்த இளைஞன் தவறே செய்யவில்லை. பிறகெப்படி சட்டம் தண்டிக்கும்.

முதலில்

எமது ஐனாதிபதி  முறைப்படி திருமணம் செய்தவரல்ல....

அவர் எந்த திருமண  சட்டத்தையும் மீறவில்லை

அவரை சட்டம் எதுவும் செய்யாது

இனி

இந்த திருமணம் முடிக்காது மனதளவில் ஒத்து 

ஒன்றாக வாழும் இன்றைய நிலையைத்தான் இது கேள்விக்குறி  ஆக்கியுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ சட்டம் தண்டிக்காட்டி உடன நீங்கள் போய் தண்டிப்பீங்கலோ? இல்லை தெரியாம தான் கேக்கிறன் நீங்க எல்லாம் அந்நியன் படம் விக்கிரம் எண்டு நினைப்பா? இது மட்டும் ஆஸ்திரேலியா பக்கம் நடந்திருந்தால் அம்புட்டு பேரும் உள்ள

அந்த இளைஞன் இதுவரை படங்களை எங்கும் வெளியிடவில்லை. அவனை தாக்கியவர்கள்தான் வெளியிட்டிருக்கிறார்கள். முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அந்த இளைஞனையும் அவனுடைய காதலிகளையும் தெரிந்தவர்களுக்கு இந்தப் பெண்கள் யார் என்பது தெரிந்துதான் இருக்கும்.

இப்பொழுது இந்தப் பெண்களை அவமானப்படுத்தியது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா நடக்குது இங்க? வெறும் இருவது பெண்களுக்கே இந்த அடியா? பல இடங்களில் 20யை தாண்டியும் போய் கொண்டு தான் இருக்கு. 

இதில் கொடுமை என்னவென்றால் "தமிழ் பெண்களை கற்பழித்த" என்று தலையங்கங்கள் வேறு... இதில கற்பு எங்க இருந்து வந்திச்சு? இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறன் கற்பழிக்கிற வறைக்கும் இவையள் என்ன மௌன விரதமோ இருந்தவை?

இது எல்லாத்தையும் விட எனக்கு தாங்கமுடியாத விடயம் என்னவென்றால் அவனில அப்படி என்ன இருக்கு என்று இந்த 20 பெண்களும் விழுந்தார்கள்? ஒன்றுக்கே வழியில்லாம் இருக்கும் போது இப்படி செய்தால் சமூகநீதிக்கு புறம்பானது என்று வழக்கு போட முடியாதா? :rolleyes:

ரைட் சீரியசா பேசுவம். 

இது கலாச்சாரத்துக்கும் சட்டத்திற்கும் உள்ள முரண்பாடு. இப்படியான விடயங்களிற்கு சட்டத்தின் படி தண்டனை வாங்கிகொடுக்க வேண்டும் என்பது முடியாத காரியம். புகைப்படங்களை பார்க்கும் போது பெண்களும் விரும்பியே இதில் கலந்துகொண்டுள்ளனர். நாம் வாழுகின்ற நாட்டு சட்டம் என்பது அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டது. அது எமது கலாச்சாரத்திற்கு பொருந்தாது. இதே பிரச்சனை வெளிநாட்டவர்களிற்கும் உள்ளது. 

அடித்ததையும் நியாயப்படுத்த முடியாது. இதன் விளைவு அந்த பெண்களின் புகைப்படங்களுடன் இன்று செய்திதளங்களின் உலாவருகின்றன. இந்த செயலிற்கு அடித்த இளைஞர்களே காரணம். அடிவாங்கியவன் செய்ததை விட அடித்தவர்கள் அந்த பெண்களின் வாழ்க்கையை இன்னும் சீரழித்துவிட்டார்கள் (வேறு யார் மூலமாகவும் இந்த புகைப்படங்கள் வெளிவர சந்தர்ப்பம் இல்லை). 

நீண்ட காலமாக இங்கே வாழ்ந்து வாழும் நாட்டின் விழுமியங்களையும் உள்வாங்கி கொண்டவர்களுக்கும் 2009இற்கு பின்பு பெருமெடுப்பில் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கும் இடையேயான ஒரு கலாச்சார யுத்தம் தொடங்குகிறதோ என்று சந்தேகப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி இருக்கும்போது இன்னொருத்தியை காதலியாய் வைத்திருககும் ஜனாதிபதியைகொண்ட ஒரு நாட்டில் காதலிப்பது தவறில்லை. ஒருவன் பலரைக் காதலிப்பதும் தவறில்லை. காதலிக்கும்போது அவர்களை படம் பிடிப்பதும் தவறில்லை. பிடிக்காது விட்டால் காதலியை அல்லது காதலனை விட்டுவிடுவதும் தவறில்லை. ஆனால் அந்தப் படங்களை ஏதாவது ஒரு இடத்தில் வெளியிடும் வரை தவறில்லை. அப்படிப் பார்த்தால் அந்த இளைஞன் தவறே செய்யவில்லை. பிறகெப்படி சட்டம் தண்டிக்கும்.

சரி, இதெல்லாம் பிரான்ஸில் தவறில்லை, அப்ப ஏன் அடிச்சவை? முஸ்லிம்களுக்கு ஷரியா மாதிரி தமிழர்களுக்குள்ள ஊர் வழமைச் சட்டப் படியா அடி விழுந்தது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை தொடங்கின காலத்தில நாட்டை விட்டு ஓடி வந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் தம் பெண் பிள்ளைகளைப் பொத்தி வளர்க்க, இப்பத்தான் அகதியாக வந்த பொடியன் அந்த ஒன்றும் அறியாத பெண்பிள்ளைகளின் மனதைக் கலைத்து ஆபாசமான படங்களை எடுத்து அவர்களை மிரட்டி ஈஸியாகப் பணம் சம்பாதிக்க வெளிக்கிட்டால் பார்த்துக் கொண்டு இருப்பார்களா? பொலிஸுக்குப் போனால் கோர்ட்டுக்கு போயும் பெரிதாக ஒன்றையும் சாதிக்கமுடியாது என்று நம்புவதால் சட்டத்தை தமது கையில் எடுத்துவிட்டார்கள். அதைப் பாராட்டிக் கொண்டாடவேண்டும் என்றுதானே தமிழ்ப்படங்கள் சொல்லுகின்றன.

இங்கிலாந்திலும் முஸ்லிம்கள், சீக்கியர்கள் honour killing என்று தமது குடும்பப் பெருமையைப் பேண தமது பெண்பிள்ளைகளையும் கொன்றிருக்கின்றார்கள். நமது சமூகத்திலும் இப்படிச் செய்தால் பாராட்டவும் சிலர் இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.