Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தாலியில் கன்னியாஸ்திரி குழந்தையொன்றை பிரசவித்தார்: கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என்கிறார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப்பாத்தா, சாரக் கட்டு கோஸ்டி போல தான் தெரியுது....

காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் அதில் மிதந்தும் வந்திருக்குமில்லையா நாதமுனி? :D

  • Replies 85
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல.. சொர்க்கவாசலில் பல இரசாயன திரவியங்களை இறைவன் படைத்து வைத்துள்ளார் என படித்த ஞாபகம்.. :rolleyes: இது கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க.. இதில் வால்பேத்தை மாட்டினால் அதோ கதிதான்.. :blink: ஆண்டவன் ஆணைப் படைத்தது சும்மா இல்லை.. வாசலைத் தாண்டிப்போய் அபிசேக ஆராதனை பண்ணினால் பலன் கிடைக்கும்.. :wub: பிரம்மா எல்லாவற்றையும் திட்டம்போட்டுத்தான் செய்தவர்.. :D

ஜோவ் இசை சிரிக்க வைத்து கொலுவது என்பது இதுதன். :D :D

அதுமட்டுமல்ல.. சொர்க்கவாசலில் பல இரசாயன திரவியங்களை இறைவன் படைத்து வைத்துள்ளார் என படித்த ஞாபகம்.. :rolleyes: இது கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க.. இதில் வால்பேத்தை மாட்டினால் அதோ கதிதான்.. :blink: ஆண்டவன் ஆணைப் படைத்தது சும்மா இல்லை.. வாசலைத் தாண்டிப்போய் அபிசேக ஆராதனை பண்ணினால் பலன் கிடைக்கும்.. :wub: பிரம்மா எல்லாவற்றையும் திட்டம்போட்டுத்தான் செய்தவர்.. :D

 

இதுவும் ஒரு குறிப்பிட்ட மதத்தை கொச்சைப்படுத்துற ஆதாரமற்ற அருவருக்கத்தக்க கருத்து. கத்தோலிக்கமும் இஸ்லாமும்கூட ஆண்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தன.. காலப்போக்கில் கத்தோலிக்கம் பெண்கள் விடயத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது என்பதுதான் உண்மை.

உண்மையில் இந்த திரியை வாசித்தேன் ... இங்கே பல கருத்தை எழுதணும் என்ற போதெல்லாம் ..........எதோ ஒன்று என்னை தடுத்தது .உங்களை விட கத்தோலிக்கத்தை பற்றி அறிந்தவன் ,,,,,,,,,,,பைபிளை நன்றாக அலசியவன் .............எத்தனை முறை முரன்பட்டுள்ளேன் ,குருக்கள் ,கன்னியாஸ்திரிகள்  ,மூப்பர்கள் ,உபதேசிமார்கள் ,மறை ஆசிரியர்கள் .........ஆனால்  இன்றும் நான் கத்தொளிக்கனாகவே இருக்க விரும்புகிறேன் ............ஏனனில்.........என்னைபோல சாதாரண மனிதர்களே இந்த பணிக்கு செல்கிறார்கள் .....தவறு விடும் மனித பன்புடையவர்களே அவர்களும் .............அந்த வகையில் எனக்கு என்று ஒரு வழியை அமைத்து அதனூடாக வாழ்க்கையை முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் பயணிக்கிறேன் ..................
 
எனக்கும் இறைவனுக்கும் எப்பிடி உறவு இருக்க வேணுமோ அப்பிடி வாழ நினைக்கிறேன்  ...ஆனால் சில சமயங்களில் முடிவதில்லை ...........மனிதபலவீனம் நன்கு அறிந்தவன் என்னைப்போல மற்றவனையும் பார்க்க நினைக்கிறேன்  ,,,,,,,,,,,,,,,,ஆனால் இந்த உலகில் எந்த மதத்தின் பிறப்புரிமையை கொண்டுள்ளேனோ...............அந்த கடவுளையும் அவரது கொள்கைகளையும் பிடித்திருக்கிறது ....அதனூடாக வாழ்க்கையை தொடர்கிறேன் ...........ஆனால் அதன் நிர்வாகிகள் ,பாதிரிகள் ,கன்னியாஸ்திரிகள் இவர்கள் மீது எனக்கு ஒரு திருப்தியில்லை ...ஆனால் எல்லோரையும் நான் குறிப்படவும் இல்லை ......... :)  :)
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு குறிப்பிட்ட மதத்தை கொச்சைப்படுத்துற ஆதாரமற்ற அருவருக்கத்தக்க கருத்து. கத்தோலிக்கமும் இஸ்லாமும்கூட ஆண்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தன.. காலப்போக்கில் கத்தோலிக்கம் பெண்கள் விடயத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது என்பதுதான் உண்மை.

அட.. எதுக்கு இப்ப ரென்சன் ஆகிறீங்க? :D அதுக்கு உள்ளே எழுதப்பட்ட விஞ்ஞானத்தை கவனியுங்க.. அதை சுட்டிக்காட்டவே எழுதினேன்.. மற்றும்படி ஒன்றுமில்லை.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் மித்திரன் தவிர்ந்த வேறு எந்த பத்திரிகைகளிலும் வந்திருந்தால் நம்பலாம்.

அப்பவே, யாழ் இந்து விஞ்ஞான ஆசிரியரிடம் மாணவர்களாக வகுப்பறையில் கேட்டபோது, சிரித்தபடியே இரு விடயங்கள் சொன்னார்?

ஒன்று: நாசமறுந்த மித்திரன் வாசியாதைங்க.

 

 

இதுல மாட்டர் என்னனாக்கா அந்த காலத்தில இந்த மித்திரன எம்புட்டு பேர் ஒளிச்சு ஒளிச்சு படிச்சிருக்காங்க அப்போ அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில இப்பிடியான கில்மா விஷயங்கள் எல்லாம் சக்கை போடு போட்டிருக்கு.......

 

நாதமுனி, சுண்டல்...

மற்றப் பத்திரிகைகள்... எழுதத் தயங்கும் விடயத்தை, "மித்திரன்" துணிந்து எழுதுவதால்...

எல்லோருக்கும் மித்திரனைக் கண்டால்... பிடிப்பதில்லை என நினைக்கின்றேன்.

மித்திரன் பத்திரிகை... நின்று போனதில் மிகுந்த கவலைப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

மீண்டும் மித்திரன் வெளிவந்தால்... நான் அந்தப் பத்திரிகைக்கு,

ஆயுள் சந்தா கட்டி உறுப்பினராக... இப்பவும் தயாராக உள்ளேன். :) tongue.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டாயிரமாம் ஆண்டு வருவார் என்று சொன்னார்கள் .... 14 வருடம் கழிச்சுதான் வந்திருக்கிறார்.
அவரும் இப்படி ஒரு பொறுப்பில்லாமல் இருந்தால் ....
மக்கள் எப்படி பொறுப்பாக இருப்பார்கள்??
 
கொஞ்சம் வளரட்டும் ...... நேரிலே போய்  இரண்டு கிளி கிழிக்கத்தான் இருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன்  பிரயாணத்தின்போது  கையில் எடுத்துப் போகக்கூடிய அளவான பத்திரிகை. அதில் பலதும் பத்துமாய் நிறைய பயனுள்ள கட்டுரைகள் சிறுகதைகள், கேலிச்சித்திரங்கள் என்று இருக்கும். சுமார் 16 பக்கங்களுக்கு மேல்....!

அதில் வந்த அழிவின் எல்லையில் 67 நாட்கள் உண்மைச் சம்பவம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு. அதை எழுதினால் இன்னும் பத்துபக்கங்கள் உண்மை பொய் என்று இழுத்துக்கொண்டு போகும்....!  :D

இது

வைத்திய  பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டு

கன்னித்தன்மை வரை  உறுதிப்படுத்தப்பட்டு

 எல்லாப்பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட செய்தி இது.

 

கோடியில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம்

அதற்காக

நிகழவே முடியாது

என்று  விவாதிப்பது அவரவர் விருப்பம்

எங்கள் வீட்டில்

ஆண்களின்  உள்ளாடைகள் வேறாகவும்

பெண்களின்   உள்ளாடைகள் வேறாகவும்  தான் வோசிங் மிசினிலேயே  தோய்க்கப்பப்படுகிறது

நன்றி  வணக்கம்.

 

நீங்க படுற கஷ்டத்தை பார்த்தால் யாரோ இதை நீங்கள்தான் செய்ததாக சொல்லி உங்களை துன்புறுத்தி இருக்கிறார்கள் போல கிடக்கு?  :D  :D

 

எங்கட இசை அப்பிடி இப்பிடி எழுதினாலும் அவர் சும்மா பகிடிக்குத்தான் எல்லாம் சொல்லுவார் அதை பெருசா எடுத்து பயப்படவேண்டாம்  :lol:

 

கர்ப்பம் தரித்த பெண்ணை வைத்திய பரிசோதனை செய்து கன்னித்தன்மையை உறுதிபடுத்தும் அரிய தொழினுட்பத்தை அந்நாளிலேயே யாழில் இருந்ததை மித்திரன் மாத்திரமே அறிந்திருந்துக்கும் போல?   :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, சுண்டல்...

மற்றப் பத்திரிகைகள்... எழுதத் தயங்கும் விடயத்தை, "மித்திரன்" துணிந்து எழுதுவதால்...

எல்லோருக்கும் மித்திரனைக் கண்டால்... பிடிப்பதில்லை என நினைக்கின்றேன்.

மித்திரன் பத்திரிகை... நின்று போனதில் மிகுந்த கவலைப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

மீண்டும் மித்திரன் வெளிவந்தால்... நான் அந்தப் பத்திரிகைக்கு,

ஆயுள் சந்தா கட்டி உறுப்பினராக... இப்பவும் தயாராக உள்ளேன். :) tongue.gif

 

தமிழ் சிறியர்,
 
தமிழ்நாட்டில், ஒருவரது குலம், கோத்திரம் அறிய விரும்புவர்கள், தம்பி எந்த ஊரு, உங்க குல தெய்வம் யாருங்க தம்பி என்று கேள்வி கேட்டு அந்த பதில்களில் இருந்து தமது அபிப்ராயங்களை எடுத்துக் கொள்வார்கள்.  
 
லண்டனில் வேலை நேர்முகம் செல்கையில், இங்கே வரும் பத்திரிகைகளில் நீங்கள் விரும்பி வாசிப்பது எது என்றால், டெலிகிராப், டைம்ஸ் போன்ற தரமான பத்திரிகைகளை சொல்லுங்கள். மறந்தும் சன், மிரர் என சொல்லி விடாதீர்கள் என்று சொல்லி விடுவார்கள். காரணம் நம்மைப் பற்றிய தவறான கணிப்பு உருவாக்கி, வேலை கிடைக்காமல் போகலாம்.
 
மித்திரன், இந்த சன், மிரர்  டைப் பேப்பர். கிளுகிளு சமாச்சரங்களை பொய்யும், புரட்டுமாக போடுவார்கள். அவர்களது நோக்கம், வியாபாரம், பப்ளிசிட்டி, மேலதிக பத்திரிகை விற்பனை.
 
இதனை, சும்மா பம்பலுக்கு வாசிக்கலாம், அதை நம்பி நாம் கதைக்க முடியாது. 
 
ஒரு மித்திரன் பத்திரிகையாளர் சொன்னார்: எதாவது விடயம் கிடைக்கவில்லை ஒரு சிறு இடம் மிச்சம் இருக்கிறது என்றால், தயாராக இருக்கும் ஒரு பெண்கள் அழகுக் குறிப்பு ஒன்று: தக்காளியை, பயறுடன் ஊறவைத்து, பாலுடன் சேர்த்து, தினமும் காலை...... என்று இல்லாத ஒன்று புளுடாவுடன் போகும் அந்த மாதிரி... என்பார். 
 
வார இறுதியில் ஊருக்குப் போனால், சொந்தக் காரப் பெண்கள் அதை போட்டு அரைச்சுக் கொண்டிப்பார்கள். சிரிப்பதா, அழுவதா என்று இருக்கும். என்ன செய்வது தொழில் அப்படி என்பார். 
 
இங்கே இசை, நெடுக்கர் சரியான விஞ்ஞான விளக்கங்களுடன் விவாதித்தார்கள். ஆனால் நீங்களும், விசுகரும் சரியான விளக்கம் இன்றி சொதப்புகிறீர்கள், சொன்ன விடயத்தினை திரும்பவும் திரும்பவும் தகுந்த விளக்கம் இன்றி வலியுறுத்துகிறீர்கள் போல படுகின்றது.
 
மன்னிக்க வேண்டும், ஆனால் நீங்கள் இந்த விசயத்தினை தீவிரமாக நம்பி விட்டீர்கள் போல் படுகின்றது.
 
இந்த சார விடயம் சாத்தியமானால், மனிதருக்கான பெரும் செலவு மிக்க IVF treatment, surrogate mothering மற்றும் மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கான இனப் பெருக்க முறைகள் எல்லாம் இந்த சிம்பிள் முறைக்கு மாறலாம் என்று தோன்ற வில்லையா?

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
இங்கிலாந்தில் Hugh Grant எனும் நடிகர், கொலிவூட் நடிக்கப் போன இடத்தில், ஒருநாள் இரவு வீதி ஓரமாக காரை நிறுத்தி, வீதியின் ஓரமாக நின்ற கறுப்பு இன விலை மாதினை காரினுள் ஏத்தி, சிறிது நேரத்தில் பொலிசாரிடம் மாட்டினார்.
 
பெண்ணை அனுப்பி வைத்து, இவரை போலீஸ் நிலையம் கொண்டு போய் $500 அபதாரமும், எச்சரிக்கையும் செய்து அனுப்பி விட்டார்கள்.
 
எனினும் பெயர் மீடியா எல்லாம் போய் நாற, அவரோ அந்த பெண்  விலை மாது என்று தெரியாது. பாவம் என்று லிப்ட் கொடுக்கப் போய் எனக்கு தான் பொல்லாப்பு என்பதாக கதை விட்டார்.
 
மறுநாள் லண்டன் சன் பேப்பர், விலை மாதை தங்களுடன் தொடர்பு கொள்ளு மாறும், அவரது கதைக்கு பெரும் பணம் தருவதாகவும் சொல்லி, லாஸ்ஏஞ்சல் நகர் எங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியது.
 
இல்லாத பொல்லாத விடயங்கள் அந்த பெண் சொல்ல, பெரும் காசு கொடுத்து, அந்த பொய்களை பேப்பர் போட, பாவம் அந்த நடிகரை யாரப்பா நமபுவார்கள்?. பேப்பர் விநியோகம் எகிறியது.
 
பத்திரிக்கை சொன்னதை நம்பி அவரது துணை (எலிசபெத் ஹர்லி) அவரை விட்டு நீங்கினார்.
 
இதுவே மித்திரன் போன்ற பத்திரிக்கைகளின் தர்மம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.