Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரி பேசுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இதில் எழுதப்பட்டுள்ளவை  அனைத்தும் கற்பனைகளும் புனைகளுமே.

ஆனால் இவை ஏதோ ஒரு காரணத்துக்காகவே  இங்கு வைக்கப்படுகின்றன

எனக்கு  நிச்சய்மாக தெரியும்

அவை  நல்லதற்காக

தமிழருக்கு நன்மை செய்வதற்காக

தமிழர் போராட்டத்தை முன்னகர்த்துவதற்காக

சுயவிமர்சனத்துக்காக வைக்கப்படவில்லை.

இதில் எழுதப்பட்ட

கூறப்பட்ட

பலவற்றிற்கு பிரெஞ்சுத்தமிழர் தரப்பில்

என்னால் பதில் தரமுடியும்.

ஆனால் அதை நான் விரும்பவில்லை.

இது பற்றி  இங்கு சிலரிடம் நான் கேட்டபோதும்

அவர்களது பொறுப்பான பதிலும் அதுவே.

ஆனாலும்

வெளிநாட்டில்வேலை  செய்தவன் என்றவகையில்

நிச்சயம் ஒருமுறை

எம்மவர் மீது 

உமிழப்பட்ட பலவற்றிற்கு விளக்கம் வைப்பேன்.

நாம் ஒரு நேரச்சாப்பாட்டுடன் 

ஊர் ஊராகத்திரிந்து

3 வேலை

4 வேலை  செய்து

அந்த மக்கள் தந்த பணத்தை அனுப்ப

குடித்து கும்மாளம் போட்டோம்

மற்றவன் மனைவியை  வைத்திருந்தோம்

சுடுவதற்காக இயக்கத்தில் சேர்ந்தோம்

..................

...................

..................  என்பதற்கு பதில் சொல்லியே  ஆக வேண்டும்.

  • Replies 143
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 இதில் எழுதப்பட்டுள்ளவை  (1)அனைத்தும் கற்பனைகளும் புனைகளுமே.

ஆனால் இவை ஏதோ ஒரு காரணத்துக்காகவே  இங்கு வைக்கப்படுகின்றன

எனக்கு  நிச்சய்மாக தெரியும்

அவை (2) நல்லதற்காக

தமிழருக்கு நன்மை செய்வதற்காக

தமிழர் போராட்டத்தை முன்னகர்த்துவதற்காக

சுயவிமர்சனத்துக்காக வைக்கப்படவில்லை.

(1) உங்களின் இந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

(2) இந்தக் கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். இது தமிழர் தரப்பின் தன்மதிபீடு செய்யும் நேக்கில் எழுதப்படவில்லை என்பதே எனது கருத்து.

தங்கள்  போராட்ட இயக்கங்களுக்குள் போராட்ட ஆரம்பகாலத்தில்  உணர்ச்சி வசத்தால், அறியாமையால் நடந்த தவறுகளை இன்று அந்த இயக்கங்களோ அதன் தலைவர்களோ  இல்லாத நிலையில்   புரிந்துணர்வுடன் மறந்து  தமிழரின் உண்மையான இலக்கை நோக்கி  எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்புடன் செயற்படாமல்,   எமது எதிர்கால சந்ததி கெளரவமாக வாழவேண்டும் என்பதற்காக உயிர்களை பலியிட்டு மடிந்த இளம் போராளி இளைஞர்களின் அர்பணிப்பை எல்லாம் அறவே  மறந்து  புலி மீது புளொட் ஆதரவாளர்  சேற்றை வாரி இறைக்க, புலி ஆதரவாளர்கள்   புளொட்  மீது திருப்பி சேறடிக்க, ரெலோ மீது  ஈபிஆர் எல் எவ்  ஆதரவாளர்  சேறடிக்க, ரெலோ ரெலி மீது சேறடிக்க, ரெலி ஈரோஸ் மீது சேறடிக்க, சிங்களத்திடன் அடிமை சீவியம் நடத்தும் சின்ன....மான தமிழர்கள் சிலர் அதை ஊக்குவித்து  பேட்டி எடுத்து எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கும்  

சம வேளையில்.........

மறுபுறத்தே  ஒரு இனத்தின் மீது ஆறு தசாதப்தங்களாக மிவும் திட்டமிட்டு நிதானத்துடன் 1958 இனவெறி தாக்குதலில்  இருந்து ஆரம்பித்து பொலிஸ் தாக்குதல்கள், இராணுவ தாக்குதல்கள், பாடசாலைகள் மீது குண்டு தாக்குதல்கள், வழிபாட்டு நிலையங்கள் மீது குண்டு தாக்குதல்கள், அதி நவீன  விமான குண்டுகள் மூலம் குடும்பம் குடும்பமாக கொலை, ஆட்டிலறி எறிகணைகள், கொத்து குண்டு கொலைகள், சரண்டைந்த மக்களை சித்திரவதை பாலியல் வல்லுறவு மூலம் கொலைகள் போன்ற நினைத்து பார்க்க முடியாத இமாலய படுகொலைகளை பயங்கவாத்தை  புரிந்து அதற்கான தெளிவான  ஆதாரங்கள் சர்வதேச ரீதியில்  வெளியான பின்னரும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எனது படைளை காட்டி கொடுக்க மாட்டேன். எத்தனை  பேரை  எமது இராணுவம் கொன்று குவித்தாலும்,தமது மக்களுக்கு எதிராக ஜேவீபி யை அடக்க எமது  சிங்கள இளைஞர்களைக் கூட கொன்று குவித்திருந்தாலும்,  அந்த கொலையாளிகள் எல்லோரும் எனது சகோதர்களே அவர்கள் எமது தியாக செம்மல்கள் என்று  என்று மார்தட்டும் சிங்களவனை பாரக்க பொறாமையாக இருக்கிறது.  

அந்த சிங்கவருக்கு அடிமை சேவகம் செய்யும்  தகுதி கூட தமிழருகு இருக்கிறதோ தெரியவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களவனை பார்க்க பொறாமையாக இருக்கிறது.  ... :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்
நடுவர்கள் இப்போ என்ன கருத்து எழுதுகிறார்கள் என்றே பார்க்க நேரம் இல்லாமல் இருக்கிரார்கள்போல் .... அதலால் யார் எழுதுகிறார்கள் என்று பார்த்து தூக்கிவிடுவது இலகுவாக இருக்கிறது அவர்களுக்கு.
எதோ தப்பி பிழைக்கும் என்ற எண்ணம் இருப்பதால் ..............
 
வழமைபோலவே புலிகளின் வால்களும் ...... அவர்களின் எடுபிடிகளும். சாத்த்ரியார் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்காமல் தமது புலி விசுவாசத்தை காட்ட வந்து எதிர் கருத்து எழுதிவிட்டு போயிருக்கிறார்கள்.
மாடு கத்தி காகம் சாவபோவதில்லை.......
தமிழ் இலக்கிய துறையை பொறுத்த மட்டில் இப்போ சாத்த்ரியார் எட்ட முடியாத உயரத்திற்கு போய்விட்டார்.
இவர்களின் அலட்டல்களை பொருள்படுத்தாது. சாத்த்ரியார் தமிழுக்கு இதுவரை நாளும் செய்து ......... செய்து ....... செய்து ........... (ஒரு பேப்பர் போன்ற பத்திரிகைகளில்) கிழிச்சது போல். தொடர்ந்தும் தமிழ் இலக்கிய துறையில் கிழிக்க வேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
 
உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும். அதற்காக இனியும் மூடி கொண்டு இருக்க முடியாது.
(எங்களால்தான் வாயை திறக்க முடியவில்லை கத்தியை தீட்டி வைத்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத சிங்கம் சாத்ரியன்னா தொடர்ந்தும் சேவை செய்ய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்) 
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு தமிழர்களுக்குள் நடந்த படுகொலைகளுக்கும் மையவாதத்திற்கும் இடையிலான தொடர்பை பற்றி ஆழமாக ஆராயவேண்டும். போராட்டத்துக்கு முந்திய காலத்தில் கிழக்கில் இருந்து இஸ்லாமியத் தமிழர்கள் அறுவடைக்காலத்தில் வன்னிக்கு வந்து அறுவடையில் ஈடுபடுவார்கள். எந்தப் பிரிவினை வாதமும் கிடையாது. இஸ்லாமியத் தமிழர்களை ஒரே நாளில் அகதியாக்கி யாழ்பாணத்தை தவிர்ந்த ஏனைய ஈழத்தின் பகுதி மக்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியதில் யாழ்பாணிய மையவாத மனநிலையே முற்றுமுழுதான காரணம்.

அதே போல் தமிழர்களின் தலையாயய அதிகார சக்தியும் ஆதிக்க சக்தியும் தாங்களே என்ற மையவாத மனநிலையும் அது சார்ந்த அதிகாரத் துஸ்பிரயோகமும் போட்டுத்தள்ளுதலுக்கான உந்துதலாக அமைகின்றது. மையவாதத்துக்கே உரிய பிடிவாத மனநிலையும் சாதிய பிரதேச வர்க்க மனநிலையால் கட்டியமைக்கப்பட்ட ஒருவனை ஒருவன் ஏற்க மறுக்கும் ஜனநாயக விரோத குணமும் அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் உருவான 30 க்கும் மேற்பட்ட இயக்கங்களும் கடசிவரை தங்களுக்குள் தாங்கள் அடிபட்டு அப்பாவிகளையும் பலி எடுத்து ஈழத்தை சுடுகடாக்கக் காரணமாக அமைந்தது.

கிழக்கிலும் வன்னியிலும் இருந்த போராளிகள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட போது யாழ்பாணத்தில் இருந்த போராளிகளின் நிலை வேறாக இருந்து.மையவாதத்தின் அசல் வடிவமாக புலிகளின் புலநாய்வுத்துறை இருந்தது.கருணாவின் பிளவு என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வில்லை அது வருடக்கணக்காக புகைந்த கடைசியில் ஒருநாள் நிகழ்ந்த விசயம். அதற்கும் மையவாதமே முற்றுமுழுதான பொறுப்பு. சிங்களவர்கள் தமிழர்களை துப்பாக்கி முனையில் அடக்கியாழ்வதுபோல் மையவாதம் பழைய சாதீய வர்க்க பிரதேசவாத மனநிலையில் அடக்கியாள முற்பட்டது இதனூடாகவே போட்டுத்தள்ளல்களின் அடிப்படையை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனால் தான் எப்போதும் மையவாதமும் பேரினவாதமும் ஒன்றே என கூறிவருகின்றேன்.

பேட்டி கொடுப்பவரும் பேட்டி எடுப்பவரும் புலிகளின் சிந்தனைமுறையும் போட்டுத்தள்ளல்களுக்கான அடிப்படையும் மையவாதத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இன்றய விக்கியும் சம்மந்தனும் கூட மையவாதிகளே !

சிங்களப் பேரினவாதத்தாலும் யாழ் மையவாதத்தாலும் ஈழம் அழிந்து சிதைந்த உருக்குலைந்து போனது. லட்சக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்டது. ஈழ விடுதலை என்ற ஒவ்வொரு முயற்சியிலும் பேரினவாதத்தையும் மையவாதத்தையும் சரி சமமாக அணுகவேண்டியுள்ளது. பேரினவாதம் வெளியில் இருந்த கொல்லும் மையவாதம் உள்ளிருந்து கொல்லும். இரண்டு கொலைக் கருவிகளுக்கிடையே விடுதலைப்பயணம் தொடரவேண்டியுள்ளது. பேரினவாதம் வீட்டை எரிக்கும் மையவாதம் எரியிற வீட்டில் புடுங்குவது வரை லாபம் என்று புடுங்கும் (போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் யாழில் நீச்சல் குளம், விவசாயம் வறண்டுபோய் கிடப்பதைப் பற்றி கவலைப்படாமல் இரணைமடு தண்ணீர் போன்றன நல்ல உதாரணங்கள்)

சிங்களவரும் கொல்வார்கள் மையவாதிகளும் கொல்வார்கள் பின் இரண்டுபேரும் நல்லூரில் தேரிழுத்து உலங்குவானூர்தியில் பூத்தூவி பக்திப் பரவசத்துடன் தமது பாவத்தைக் கழுவி சுகபோக வாழ்வைத் தொடர்வார்கள். இவைகள் எல்லாம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வுகள். இவற்றை கவனத்தில் கொண்டே ஈழத்தமிழனின் விடுதலை பயணம் தொடரமுடியும். ஈழத்தமிழன் என்றால் நல்லூரை சுற்றி இருப்பவன் என்று பொருள் இல்லை மாறாக கிளிநொச்சி மன்னார் வவுனிய முல்லைத்தீவு மட்டக்கிழப்பு திருமலை அம்பாறை மலயகம் இஸ்லாமியத்தமிழர்கள் என பரந்து பட்டவர்களின் விடுதலையை குறிக்கும் என்பதை மையவாதம் உணரும் காலம் ஒன்று வரும்.

அண்ணா நீங்கள் ஆப்ரிக்க விடுதலை பற்றிய புத்தகங்கள் நிறைய வாசிக்கிறீங்களா???
ஒரே மையத்திலேயே நிற்கிறீங்களே ?
உங்களால் மையத்தை விட்டு வெளி வர முடியாமைக்கு என்ன காரணம் ?
 
காகம் இருக்க பனங்காய் விழுந்ததுபோல் .......
மையத்தில் நின்றுவிட்டால் எல்லாம் இலகுவாகிவிடும். யாரையாவது கை நீட்டி காட்ட வேண்டும் என்றால் 360 டிகிரியிலும் கையை நீட்டலாம். மையத்தை விட்டு வெளியில் வந்தால் கஷ்டமாகிவிடும் பின்புஇ எண்களின் பக்கம் கையை நீட்ட முடியாது.
 
உங்களின் கருத்து யாரோ 1930 ஆண்டு எழுதியதுபோல் இருக்கு. old is gold....  அப்படியே மையத்திலேயே நில்லுங்கள்.
 
சப்மந்தனும் விக்கியாரும் எடுபிடி அரசியல் செய்துகொண்டிருந்தால் ............
அடுத்த நிலைக்கு நகர நினைப்பவனுக்கு. இருவரையும் தட்டிவிட்டு நகரும் ஒரே வழிதான் இருக்கிறது.
நீதிமன்றில் வழக்காடி வேண்ட கூடியதுபோல் விடுதலை இல்லை. 
போலி ஜெனாயகம் பேசுவது இலகு ................ நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
சாதாம் உசைன் தனது பக்க நியாயத்தை சொல்லட்டும் நாங்கள் எமது  நியாத்தை சொல்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை. குண்டு போட்டு இராக்கை  குமுறிவிட்டுதான் ...... ஜெனாயக நாடகம் அரங்கேற்ற கூடியதாக இருந்தது.
உலகில் எங்கும் சாத்தியமில்லாத ஒன்றை புலிகள் சாத்திய படுத்தியிருக்கலாம் ..............
என்று புலிகள் மேல் மெய்யை மறந்து நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை  வரவேற்கிறேன்.
எது முடியுமோ அதைதான் புலிகளால் செய்திருக்க முடியும் என்று மட்டுமே நான் நம்புகிறேன்.
 
முஸ்லிம்களின் வெளியேற்றம் ............. அதை அவர்களாகவே செய்தார்கள்.
மையத்தை விட்டு நீங்கள் வெளியில் வந்தால் ....... விவாதிக்கலாம்.
நீங்கள் புலிகளை சகலகலா வல்லவர்களாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்..... பவம் அவர்கள் 1990 வெறும்  3500 - 4000 என்ற எண்ணிகையில் இருந்து கொண்டே. முப்படைகளையும் (ஒரு லட்சம் வர்யிலான) எதிர்த்து முழு பிரதேசத்தையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். 3ஆயிரம் முஸ்லிம்களுக்காக ....... 
6 லட்சம் தமிழர்கள் யாழை விட்டு வெளியேறுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதை விட .....
1990 அப்படி ஒரு வெளியேற்றம் நினைக்கவே முடியாத ஒன்று.

தங்கள்  போராட்ட இயக்கங்களுக்குள் போராட்ட ஆரம்பகாலத்தில்  உணர்ச்சி வசத்தால், அறியாமையால் நடந்த தவறுகளை இன்று அந்த இயக்கங்களோ அதன் தலைவர்களோ  இல்லாத நிலையில்   புரிந்துணர்வுடன் மறந்து  தமிழரின் உண்மையான இலக்கை நோக்கி  எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்புடன் செயற்படாமல்,   எமது எதிர்கால சந்ததி கெளரவமாக வாழவேண்டும் என்பதற்காக உயிர்களை பலியிட்டு மடிந்த இளம் போராளி இளைஞர்களின் அர்பணிப்பை எல்லாம் அறவே  மறந்து  புலி மீது புளொட் ஆதரவாளர்  சேற்றை வாரி இறைக்க, புலி ஆதரவாளர்கள்   புளொட்  மீது திருப்பி சேறடிக்க, ரெலோ மீது  ஈபிஆர் எல் எவ்  ஆதரவாளர்  சேறடிக்க, ரெலோ ரெலி மீது சேறடிக்க, ரெலி ஈரோஸ் மீது சேறடிக்க, சிங்களத்திடன் அடிமை சீவியம் நடத்தும் சின்ன....மான தமிழர்கள் சிலர் அதை ஊக்குவித்து  பேட்டி எடுத்து எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கும்  

சம வேளையில்.........

மறுபுறத்தே  ஒரு இனத்தின் மீது ஆறு தசாதப்தங்களாக மிவும் திட்டமிட்டு நிதானத்துடன் 1958 இனவெறி தாக்குதலில்  இருந்து ஆரம்பித்து பொலிஸ் தாக்குதல்கள், இராணுவ தாக்குதல்கள், பாடசாலைகள் மீது குண்டு தாக்குதல்கள், வழிபாட்டு நிலையங்கள் மீது குண்டு தாக்குதல்கள், அதி நவீன  விமான குண்டுகள் மூலம் குடும்பம் குடும்பமாக கொலை, ஆட்டிலறி எறிகணைகள், கொத்து குண்டு கொலைகள், சரண்டைந்த மக்களை சித்திரவதை பாலியல் வல்லுறவு மூலம் கொலைகள் போன்ற நினைத்து பார்க்க முடியாத இமாலய படுகொலைகளை பயங்கவாத்தை  புரிந்து அதற்கான தெளிவான  ஆதாரங்கள் சர்வதேச ரீதியில்  வெளியான பின்னரும் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் எனது படைளை காட்டி கொடுக்க மாட்டேன். எத்தனை  பேரை  எமது இராணுவம் கொன்று குவித்தாலும்,தமது மக்களுக்கு எதிராக ஜேவீபி யை அடக்க எமது  சிங்கள இளைஞர்களைக் கூட கொன்று குவித்திருந்தாலும்,  அந்த கொலையாளிகள் எல்லோரும் எனது சகோதர்களே அவர்கள் எமது தியாக செம்மல்கள் என்று  என்று மார்தட்டும் சிங்களவனை பாரக்க பொறாமையாக இருக்கிறது.  

அந்த சிங்கவருக்கு அடிமை சேவகம் செய்யும்  தகுதி கூட தமிழருகு இருக்கிறதோ தெரியவில்லை.

உங்கள் ஆதங்கம் புரிகின்றது ஆனால் அப்படி ஒற்றுமையாக போராட கூடிய மனநிலையில் தலைவர்களும் இருக்கவில்லை மக்களும் இருக்கவில்லை .

கண் முன்னே நடந்த போராட்ட வரலாற்றை கூட திரித்து பல புனைவுகள் வருகின்றது .புலி ,புளொட் ,டெலோ இவை மூன்றிலும் இருந்தவர்கள் பலர் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தவர்கள் ,அதே போலத்தான் ஈ பி யும் ஈரோசும் . இனக்கலவரத்துடன் ஏதோ ஒருவித நம்பிக்கையிலும் தமக்கு இருந்த தொடர்பாலும் போராட போனது தமிழரின் விடுதலைக்காகத்தான் .இதில் நான் சரி நீ  பிழை.நான் பெரிது நீ சிறிது என்ற பேச்சுக்கே இடமில்லை .அனைத்து இயக்கங்களும் சிறிலங்கா  அரசிற்கு எதிராக ஒருவகையில் தாக்குதல்களும் செய்திருகின்றார்கள் ,சிறீலங்கா அரசும் அனைவரையும் எதிரியாக பார்த்தது ,அனைத்து இயக்க போராளிகளையும் கொன்று இருக்கு சிறை பிடித்தும் இருக்கு .

இதே நேரம் இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரிதும் சிறிதுமாக உட்கட்சி பிரச்சனைகளும் இருந்தது .டெலோ புளொட் உட்கட்சி போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து ஓரளவு அவர்களாகவே அழியும் நிலையில் இருந்தார்கள் .இதை விட இயக்கங்களுக்கு இடையிலும் சிறு சிறு முரண்பாடுகள் மோதல்கள் இருந்தது .இதுவெல்லாம் நடந்தது மூன்று வருடங்கள் ஆகும் .

இந்த நிலையில் மற்ற இயக்கங்களை புலிகள் தடை செய்தது மாத்திரம் அல்லாது பலரை கொன்றும் குவித்தார்கள் .அத்துடன் நிற்காமல் தமக்கு எதிராக கருத்துக்கள் வைத்தவர்களையும் கொலை செய்ய தொடங்கினார்கள் .இவ்வளவு நிகழ்வுகளையும் எமது சமூகம் கண் மூடி பார்த்துக்கொண்டுதான் இருந்தது மாத்திரம் அல்ல நியாயப்படுத்தவும் தொடங்கினார்கள் . அது முள்ளிவாய்கால் வரை தொடர்ந்தது .இது நடந்தது ஏறக்குறைய இருபத்தி மூன்று வருடங்கள் .இந்த இருபத்தி மூன்று வருடங்களும் அதிகாரமும் ஊடக பலமும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் சொல்லுவதுதான் உண்மை என்று ஆகிவிட்டிருந்தது. புலிகள் செய்த அராஜகங்கள்  வெளிவர ஊடகங்களும் இல்லை அதையும் மீறி சொன்னவர்கள் துரோகிகளும் ஆனார்கள் .அவர்கள் முன்னாள் மாற்று இயக்க முத்திரை அல்லது அரசுடன் ரோ வுடன் தொடர்பு என்று தொடர்ந்தது .

இன்று முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சற்று வாய் திறக்கின்றார் .அதில் சில உண்மைகள் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் நடந்த அனைத்து அராஜங்களும் மறைத்து அப்படியே வரலாற்றை முடித்துவிடவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு தாங்களும் அந்த அராஜகத்திற்கு துணை போனது ஏற்கமுடியாமல் இருக்கு .

மாற்று இயக்கதவர்களுக்கு எங்களை எப்படி எல்லாம் சொல்லி துரோகியாகினார்களோ அதைவிட இவர்கள் கேவலம் என்று சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது .அவ்வளவும் தான் .

இன்று நீங்கள் ஆதங்கப்படுவதில் எந்த வித நியாயமும் இருப்பதாக எனக்கு படவில்லை .செல்வியும் ரஜனியும் அமிரும் கொலை செய்யப்படும் போது  மௌனமாக இருந்தவர்கள் அதற்கான பலாபலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் .

என்னைப்போல்  பலர் மிகவும் சந்தோசமாக இருக்கும் காலமிது .போராட போன என்னைப்போல பல தோழர்கள் நாட்டை விட்டு ஓடி வர என்றும் எண்ணியதில்லை .எதோ ஒருவகையில் சிறிலங்கா அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருந்தது .இதற்காக எத்தனை முயற்சிகள் நடந்தன என்று பல பதிவுகள் இருக்கு ,எல்லாமே தனி ஒருவரின் பேராசையால்  அழிந்து இன்று முழு இனமும் நடுத்தெருவில் நிற்கின்றது .

யாழ் போன்ற தளங்களில் இப்படியான குப்பைகள் கொட்ட இடம் கொடுப்பது யாழை  நாளை பலர் கேலி செய்ய வாய்பிருக்கு. இதை நிர்வாகம் தான் இப்படியா போராட்டத்தை களங்கப் படுத்தும் திரிகளை தொடர்ந்து விடுவதா இல்லையா என்று முடிவு பண்ண வேண்டும்.இப்பிடியான திரிகளை அனுமதிப்பது யாழ் தளத்தை நாளை பலர் களங்கப் படுத்தவோ இனத் துரோகத் தலமாகவோ பிரசாரம் செய்ய ,காரணமாக அமையும் என்பதை அன்புடன் நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிடியா செய்திகள் இனத் துரோகத் தளங்களில் வந்தால் மக்கள் பெரிதாக எடுக்க மாட்டார்கள் ஆனால் யாழில் வருவது யாழிற்கு இழுக்கு. இந்த திரிய மூடி. இது போன்ற திரிகளை இனிமேல் யாரும் திறக்காமல் பார்ப்பது யாழின் நீண்ட கால வளர்ச்சிக்கு நன்மை தரும். வெறுமனே தேனீ,அதிரடி போன்ற கீள்தரமான செய்திகளை யாழில் பார்க்க கவலையாக உள்ளது. யாழ் முடிவெடுக்கட்டும்  இனத்தின் நன்மையா? இல்லை பச்சோந்திகளின் கட்டுரையா முக்கியம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது ஆனால் அப்படி ஒற்றுமையாக போராட கூடிய மனநிலையில் தலைவர்களும் இருக்கவில்லை மக்களும் இருக்கவில்லை .

கண் முன்னே நடந்த போராட்ட வரலாற்றை கூட திரித்து பல புனைவுகள் வருகின்றது .புலி ,புளொட் ,டெலோ இவை மூன்றிலும் இருந்தவர்கள் பலர் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தவர்கள் ,அதே போலத்தான் ஈ பி யும் ஈரோசும் . இனக்கலவரத்துடன் ஏதோ ஒருவித நம்பிக்கையிலும் தமக்கு இருந்த தொடர்பாலும் போராட போனது தமிழரின் விடுதலைக்காகத்தான் .இதில் நான் சரி நீ  பிழை.நான் பெரிது நீ சிறிது என்ற பேச்சுக்கே இடமில்லை .அனைத்து இயக்கங்களும் சிறிலங்கா  அரசிற்கு எதிராக ஒருவகையில் தாக்குதல்களும் செய்திருகின்றார்கள் ,சிறீலங்கா அரசும் அனைவரையும் எதிரியாக பார்த்தது ,அனைத்து இயக்க போராளிகளையும் கொன்று இருக்கு சிறை பிடித்தும் இருக்கு .

இதே நேரம் இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரிதும் சிறிதுமாக உட்கட்சி பிரச்சனைகளும் இருந்தது .டெலோ புளொட் உட்கட்சி போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து ஓரளவு அவர்களாகவே அழியும் நிலையில் இருந்தார்கள் .இதை விட இயக்கங்களுக்கு இடையிலும் சிறு சிறு முரண்பாடுகள் மோதல்கள் இருந்தது .இதுவெல்லாம் நடந்தது மூன்று வருடங்கள் ஆகும் .

இந்த நிலையில் மற்ற இயக்கங்களை புலிகள் தடை செய்தது மாத்திரம் அல்லாது பலரை கொன்றும் குவித்தார்கள்

மற்ற இயக்கங்களும் புலிகளை இந்திய இராணுவத்துடனும்,இலங்கை இராணுவத்துடனும் தனிப்படவும் கொலை செய்தார்கள். இதை மறுப்பீர்களா? புலிகளின் கை ஓங்கியதால் அவர்கள் தப்பினார்கள்.இல்லாவிட்டால் ஒரு வழி பண்ணி இருப்பீர்கள். 

இதற்கு உதாரணமாக ஈபி இந்தியன் ஆமியுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்களை மக்கள் எப்படி மறப்பர்.புலிகள் மக்களை பலோத்காரமாக பிடிக்கிறார்கள் என சொன்ன வரதராஜப்பெருமாள் வடக்கு கிழக்கில் என்ன செய்தார் என இந்தியாவில் இருந்த உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஊரில் இருந்த என்னை போன்ற பலருக்கு இவை தெரியும்.

.அத்துடன் நிற்காமல் தமக்கு எதிராக கருத்துக்கள் வைத்தவர்களையும் கொலை செய்ய தொடங்கினார்கள் .இவ்வளவு நிகழ்வுகளையும் எமது சமூகம் கண் மூடி பார்த்துக்கொண்டுதான் இருந்தது மாத்திரம் அல்ல நியாயப்படுத்தவும் தொடங்கினார்கள் .

புளட்டும் ஈபியும் (இன்றும்) தமிழ் மக்களுக்கு செய்த, செய்து வரும் அட்டூளியங்களை பத்திரிகை வழியாக நீங்கள் அறியவில்லையா??

அது முள்ளிவாய்கால் வரை தொடர்ந்தது .இது நடந்தது ஏறக்குறைய இருபத்தி மூன்று வருடங்கள் .இந்த இருபத்தி மூன்று வருடங்களும் அதிகாரமும் ஊடக பலமும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் சொல்லுவதுதான் உண்மை என்று ஆகிவிட்டிருந்தது. புலிகள் செய்த அராஜகங்கள்  வெளிவர ஊடகங்களும் இல்லை அதையும் மீறி சொன்னவர்கள் துரோகிகளும் ஆனார்கள் .அவர்கள் முன்னாள் மாற்று இயக்க முத்திரை அல்லது அரசுடன் ரோ வுடன் தொடர்பு என்று தொடர்ந்தது .

உண்மையில் புலிகளின் ஆதரவான ஒரு சில ஊடகங்களை தவிர புலிகளுக்கு எதிராக மாற்று இயக்கங்கள், சிறிலங்கா அரசு, இந்திய அரசு ஊடகங்கள் இன்று வரை மிக மிக அதிகம்.தேவை எனில் என்னால் அவற்றை பட்டியலிட முடியும்.

இன்று முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சற்று வாய் திறக்கின்றார் .அதில் சில உண்மைகள் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் நடந்த அனைத்து அராஜங்களும் மறைத்து அப்படியே வரலாற்றை முடித்துவிடவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு தாங்களும் அந்த அராஜகத்திற்கு துணை போனது ஏற்கமுடியாமல் இருக்கு .

மாற்று இயக்கதவர்களுக்கு எங்களை எப்படி எல்லாம் சொல்லி துரோகியாகினார்களோ அதைவிட இவர்கள் கேவலம் என்று சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது .அவ்வளவும் தான் .

சாத்திரியாரும் ஐயரும்  மட்டுமல்ல புலிகள்.இன்னும் எவ்வளவோ பேர் எழுதாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஐயரின் பதிவுகளுக்கான பின்னூட்டங்களை வாசித்து இருந்தாலே புரிந்திருக்கும்.

இன்று நீங்கள் ஆதங்கப்படுவதில் எந்த வித நியாயமும் இருப்பதாக எனக்கு படவில்லை .செல்வியும் ரஜனியும் அமிரும் கொலை செய்யப்படும் போது  மௌனமாக இருந்தவர்கள் அதற்கான பலாபலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் .

ரஜனி திரணகம கொல்லப்பட்ட போது அவ்விடங்களீல் இந்திய இராணுவம் இருந்ததாகவே மக்கள் கூறினார்கள். புலிகளை அவர் விமர்சித்ததற்காக அவர்களீல் பழியை போட இந்திய இராணுவம் அக்கொலையை செய்திருக்க கூடாது.இங்கு நான் புலிகள் எல்லோரும் புனிதர்கள் என்று சொல்லவில்லை. நீங்களூம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்களின் மேல் உள்ள ஆத்திரத்தில் பழியை போட முனைகிறீர்கள் என நினைக்கிறேன்.ஆதாரம் இருந்தால் இணையுங்கள் பார்க்கலாம்.

என்னைப்போல்  பலர் மிகவும் சந்தோசமாக இருக்கும் காலமிது .

நான் நினைக்கவில்லை ஒரு சிங்களவர் இன்னொரு சிங்களவர் இறக்கும் போது இப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று.

போராட போன என்னைப்போல பல தோழர்கள் நாட்டை விட்டு ஓடி வர என்றும் எண்ணியதில்லை .எதோ ஒருவகையில் சிறிலங்கா அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருந்தது .இதற்காக எத்தனை முயற்சிகள் நடந்தன என்று பல பதிவுகள் இருக்கு ,எல்லாமே தனி ஒருவரின் பேராசையால்  அழிந்து இன்று முழு இனமும் நடுத்தெருவில் நிற்கின்றது .

மாற்று இயங்களில் திறமையான போராளிகள் (உங்களை போன்றோர்) இருந்ததை யாவரும் அறிவர்.ஆனால் உங்கள் தலைமைகள் விலை போய் விட்டார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.கந்தன் கருணை, சாவகச்சேரி சுடலையில் ரெலோ உறுப்பினர்களின் கொலை என்பன மிகுந்த கவலையை அளித்த சம்பவங்கள்.அநியாயமாக  நாங்களே எங்களுக்குள் சண்டை பிடிக்கிறோம் என்று. இந்திய சதிவலைக்குள் சிக்கி சின்னாபின்னமான இயக்க தலைமைகள் இதற்கு மூல காரணம் என்பதை மிக இலகுவாக மறைக்க பார்க்கிறீர்கள்.

அண்ணா நீங்கள் ஆப்ரிக்க விடுதலை பற்றிய புத்தகங்கள் நிறைய வாசிக்கிறீங்களா???

ஒரே மையத்திலேயே நிற்கிறீங்களே ?

உங்களால் மையத்தை விட்டு வெளி வர முடியாமைக்கு என்ன காரணம் ?

காகம் இருக்க பனங்காய் விழுந்ததுபோல் .......

மையத்தில் நின்றுவிட்டால் எல்லாம் இலகுவாகிவிடும். யாரையாவது கை நீட்டி காட்ட வேண்டும் என்றால் 360 டிகிரியிலும் கையை நீட்டலாம். மையத்தை விட்டு வெளியில் வந்தால் கஷ்டமாகிவிடும் பின்புஇ எண்களின் பக்கம் கையை நீட்ட முடியாது.

உங்களின் கருத்து யாரோ 1930 ஆண்டு எழுதியதுபோல் இருக்கு. old is gold....  அப்படியே மையத்திலேயே நில்லுங்கள்.

சப்மந்தனும் விக்கியாரும் எடுபிடி அரசியல் செய்துகொண்டிருந்தால் ............

அடுத்த நிலைக்கு நகர நினைப்பவனுக்கு. இருவரையும் தட்டிவிட்டு நகரும் ஒரே வழிதான் இருக்கிறது.

நீதிமன்றில் வழக்காடி வேண்ட கூடியதுபோல் விடுதலை இல்லை. 

போலி ஜெனாயகம் பேசுவது இலகு ................ நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.

சாதாம் உசைன் தனது பக்க நியாயத்தை சொல்லட்டும் நாங்கள் எமது  நியாத்தை சொல்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை. குண்டு போட்டு இராக்கை  குமுறிவிட்டுதான் ...... ஜெனாயக நாடகம் அரங்கேற்ற கூடியதாக இருந்தது.

உலகில் எங்கும் சாத்தியமில்லாத ஒன்றை புலிகள் சாத்திய படுத்தியிருக்கலாம் ..............

என்று புலிகள் மேல் மெய்யை மறந்து நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை  வரவேற்கிறேன்.

எது முடியுமோ அதைதான் புலிகளால் செய்திருக்க முடியும் என்று மட்டுமே நான் நம்புகிறேன்.

முஸ்லிம்களின் வெளியேற்றம் ............. அதை அவர்களாகவே செய்தார்கள்.

மையத்தை விட்டு நீங்கள் வெளியில் வந்தால் ....... விவாதிக்கலாம்.

நீங்கள் புலிகளை சகலகலா வல்லவர்களாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்..... பவம் அவர்கள் 1990 வெறும்  3500 - 4000 என்ற எண்ணிகையில் இருந்து கொண்டே. முப்படைகளையும் (ஒரு லட்சம் வர்யிலான) எதிர்த்து முழு பிரதேசத்தையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். 3ஆயிரம் முஸ்லிம்களுக்காக ....... 

6 லட்சம் தமிழர்கள் யாழை விட்டு வெளியேறுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதை விட .....

1990 அப்படி ஒரு வெளியேற்றம் நினைக்கவே முடியாத ஒன்று.

புலிகள் உட்பட எவரையும் குறிப்பாக பேட்டி கொடுப்பவர் பேட்டி எடுப்பவர் உள்ளடலங்கலாக எவரையும் நான் குற்றம் சாட்டவிலை. மாறாக, இவை அனைத்தும் நடப்பதற்கான பின்புலத்தைப் பற்றியே எனது கருத்தைப் பதிவு செய்கின்றறேன். இவை எல்லாம் ஏன் நடக்கின்றது என்ற கேள்வி எழும்போது அதற்கான பின்புலம் என்ன என்ற சிந்தனை அவசியமாகின்றது. அதனடிப்படையில் மையவாதம் குறித்து எழுதுவது தவிர்க்கமுடியாதது.

புலியின் தோற்றமும் மறைவும் உட்பட அனைத்து இயக்கங்களில் தோற்றமும் மறைவும் எஞ்சிய செயற்பாடுகளும் இவ்வாறு பேட்டி கொடுப்பவர்களும் எடுப்பவர்களும் சாதி மத வர்க்க பிரதேசவாதத்தை அத்திவாரமாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட மையவாதம் என்ற தளத்தின் மீது இருந்துதான் செய்கின்றனர். இத் தளம் எமக்குள் நாம் இரைதேடுவதற்கான மேடை. இத் தளத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை.

ஒருவர் பிரபாகரனை குற்றவாளி என்கின்றார் என்னுமொருவர் அவர்சாரந்த இயக்கத்தை குற்றவாளி என்கின்றார். என்னுமொருவர் அவர் சொல்லித்தான் மண்டையில் போட்டன் என்கின்றார். என்னுமொருவர் ஆ.. அப்படியா ! என்று வாயைப் பிழக்கின்றார். இவை எதுவும் ஆச்சரியமானவிசயமோ அதிசயமோ கிடையாது. இவை அனைத்தும் மையவாதம் என்ற மேடையில் இவர்கள் போடும் வேசங்கள். இவர்கள் அனைவரும் கதாபாத்திரங்கள் இயக்குனர் என்பது மையவாதத் தளத்தைக் குறிக்கும். இப்போது இருக்கும் நடக்கும் தமிழரின் அரசியல் இந்தமேடையில் தான் நடக்கின்றது. விடுதலை வேண்டுமானால் முதலில் இந்த மேடையை தகர்த்தெறிவது தான் அதன் ஆரம்பம்.

சிங்களவர்கள் எம்மை வேட்டையாடுகின்றார்கள்,எம்மைப்பொறுத்தவரையில் நாம் எமக்குள் இரைதேடுகின்றோம். நேரடியான பாசையில் சொல்வதானால் சிங்களவர்கள் எம்மைக்கொல்கின்றார்கள் நாம் தற்கொலை செய்கின்றோம். இங்கே சாத்திரி செய்ததும் தற்கொலை இப்போது அதை சொல்வதும் தற்கொலை. நான் இதற்கான காரணத்தை தேட முற்படுகின்றேன்.

தனி ஒருவனை குற்றவாளியாக்குவதை மறுதலிப்பவன் நான். குற்றத்திற்கான காரணத்தை தேடுபவன்.

http://thesakkaatu.com/uploads/2013/03/Kaaddi-koduppavan-enge.mp3

ஏன் காட்டிக்கொடுத்தார்கள் என்ற காரணம் இன்னும் புரியாதபோது அதற்காக போட்டுத்தள்ளியதை பற்றி புரிந்து கொள்வதோ இல்லை அதை திருத்துவதோ நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.

சாதி மத பேதங்களை கடந்துதான் புலிகள் இயக்கம் இருந்தது.
உண்மையில் உங்களுடைய மைய வாதத்தை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.
புலிகள் இயக்கம் காட்டி கொடுப்பாலும் துரோகத்தாலும்தான் அழிந்து போனது.
 
ஒரு தருணத்தில் உங்களுடைய மைய வாதம் ...
கருணாவை காப்பாற்ற உதவுகிறது.
பின்பு அதே கருணாவே புலிகள் இயக்கத்தை தனது சொந்த நலனுக்கு காட்டிகொடுக்கிறான்.
இதுவும் மையவாதம் என்று சொல்கிறீர்கள்.
 
யாழ்பாணத்தை பொருத்தவரை ....... 
நிறைய கல்வி சாலைகள் இருந்தன. அதற்கு எல்ல்லோரும் போகவேண்டிய கட்டாயம் இருந்ததது .... கல்வி சாலைக்கு போய்வந்த காரணத்தால். தாம் அறிவாளிகள் என்று காடிகொள்ளும் (ஒரு முட்டாள்) ஒரு கூட்டத்தை யாழ்பாணம் கொண்டிருந்தது என்பது உணமைதான். வெறும் வேச மட்டுமே போடும் இவர்களால்............. நிஜங்களை எதிர்த்து நிற்க முடியாது. 
இவர்கள் பாசாங்கு காட்ட போராட என்று புறப்பட்டார்களே தவிர .... இவர்கள் போராட போகவில்லை.
போர் நேர் எதிரே வந்து நின்றபோது அதே வேகத்தில் வீடு வந்து விடுவார்கள்.
அறிவுக்காக கல்விசாலை சென்று வந்தவர்கள் ............. களத்தின் கட்டாயம் உணர்ந்து போராட போனவர்கள்.
அவர்களுடைய அறிவாற்றல் போராட்டத்தை வளர்த்தெடுத்து என்பதும் உண்மை. 
 
உங்களுடைய மைய வாதத்தை கடந்து பயணித்ததால்தான் புலிகள் வளர்ச்சி அடைந்தார்கள் என்று நான் எண்ணுகிறேன். இல்லை புலிகளும் மையவாதம் சார்ந்து இருந்தார்கள் என்று நீங்கள் கூறும் போது.
அதை விளங்கி கொள்ள முடியவில்லை.
 
களத்திற்கு காலத்திற்கு ஏற்ப போராட்ட வடிவங்கள் மாறி கொண்டு இருந்தது.
1980 களில் சிங்கள குடியேற்றம் கிழக்கு மாகணத்தை சுரண்டி கொண்டு இருந்தது .... புலிகளின் முக்கிய செயற்பாடுகள்  கிழக்கை இலக்கு வைத்தே நகர்ந்து கொண்டிருந்தது. தவிர மற்றைய இயக்கங்கள்  யாழ்பாணத்தில்  சினிமா படம் காட்டிக்கொண்டு இருந்தார்கள். அதனால் வட மாகாணம் பற்றி அவர்கள் அதிகம் அலட்டி கொள்ளவில்லை. 85ஆம் ஆண்டு 86 ஆம் ஆண்டுகளிலேயே குச்சவெளி குறிஞ்சாதீவு போன்ற இராணுவ  முகாம்களையே தகர்த்து எறிந்தார்கள். பின்பு சினிமா எடுத்தவர்கள் மெகா சீரியல் எடுக்க  
இந்தியா போனபின்பு. வட மாகாணத்தை மையம் வைக்க வேண்டி வந்தது .....
பின்பு இந்திய இராணுவம் வந்த போது வன்னி பெரும்காடு அவர்களின் கோட்டையாக மாறியது.
பின்பு கடற்புலிகள் வளர்ச்சி காண தொடங்கிய போது ...... மன்னார் கடலை குறி வைத்து மன்னார் பகுதியில்  மையம் கொண்டார்கள். சுழற்சி முறையில் காலத்திற்கு ஏற்ப சுழன்று கொண்டே இருந்தார்கள்.
உங்களுடைய மையவாதம் ஏற்க கூடியதாக இல்லை.............
கூடிய விளக்ம் தேவை.
  • கருத்துக்கள உறவுகள்

 என்னைப்போல பல தோழர்கள் நாட்டை விட்டு ஓடி வர என்றும் எண்ணியதில்லை .

எண்ணுவதற்கு நேரம் தேவை ..............
குண்டு சத்தம் கேட்டால் ......... அவர்களுடைய கால்கள் தானகவே ஓடிவிடும். அவர்கள் ஒருபோதும் ஓட எண்ணியதே இல்லை.எல்லாம் தானாக நடந்தது.

சாதி மத பேதங்களை கடந்துதான் புலிகள் இயக்கம் இருந்தது.

உண்மையில் உங்களுடைய மைய வாதத்தை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.

புலிகள் இயக்கம் காட்டி கொடுப்பாலும் துரோகத்தாலும்தான் அழிந்து போனது.

ஒரு தருணத்தில் உங்களுடைய மைய வாதம் ...

கருணாவை காப்பாற்ற உதவுகிறது.

பின்பு அதே கருணாவே புலிகள் இயக்கத்தை தனது சொந்த நலனுக்கு காட்டிகொடுக்கிறான்.

இதுவும் மையவாதம் என்று சொல்கிறீர்கள்.

யாழ்பாணத்தை பொருத்தவரை ....... 

நிறைய கல்வி சாலைகள் இருந்தன. அதற்கு எல்ல்லோரும் போகவேண்டிய கட்டாயம் இருந்ததது .... கல்வி சாலைக்கு போய்வந்த காரணத்தால். தாம் அறிவாளிகள் என்று காடிகொள்ளும் (ஒரு முட்டாள்) ஒரு கூட்டத்தை யாழ்பாணம் கொண்டிருந்தது என்பது உணமைதான். வெறும் வேச மட்டுமே போடும் இவர்களால்............. நிஜங்களை எதிர்த்து நிற்க முடியாது. 

இவர்கள் பாசாங்கு காட்ட போராட என்று புறப்பட்டார்களே தவிர .... இவர்கள் போராட போகவில்லை.

போர் நேர் எதிரே வந்து நின்றபோது அதே வேகத்தில் வீடு வந்து விடுவார்கள்.

அறிவுக்காக கல்விசாலை சென்று வந்தவர்கள் ............. களத்தின் கட்டாயம் உணர்ந்து போராட போனவர்கள்.

அவர்களுடைய அறிவாற்றல் போராட்டத்தை வளர்த்தெடுத்து என்பதும் உண்மை. 

உங்களுடைய மைய வாதத்தை கடந்து பயணித்ததால்தான் புலிகள் வளர்ச்சி அடைந்தார்கள் என்று நான் எண்ணுகிறேன். இல்லை புலிகளும் மையவாதம் சார்ந்து இருந்தார்கள் என்று நீங்கள் கூறும் போது.

அதை விளங்கி கொள்ள முடியவில்லை.

களத்திற்கு காலத்திற்கு ஏற்ப போராட்ட வடிவங்கள் மாறி கொண்டு இருந்தது.

1980 களில் சிங்கள குடியேற்றம் கிழக்கு மாகணத்தை சுரண்டி கொண்டு இருந்தது .... புலிகளின் முக்கிய செயற்பாடுகள்  கிழக்கை இலக்கு வைத்தே நகர்ந்து கொண்டிருந்தது. தவிர மற்றைய இயக்கங்கள்  யாழ்பாணத்தில்  சினிமா படம் காட்டிக்கொண்டு இருந்தார்கள். அதனால் வட மாகாணம் பற்றி அவர்கள் அதிகம் அலட்டி கொள்ளவில்லை. 85ஆம் ஆண்டு 86 ஆம் ஆண்டுகளிலேயே குச்சவெளி குறிஞ்சாதீவு போன்ற இராணுவ  முகாம்களையே தகர்த்து எறிந்தார்கள். பின்பு சினிமா எடுத்தவர்கள் மெகா சீரியல் எடுக்க  

இந்தியா போனபின்பு. வட மாகாணத்தை மையம் வைக்க வேண்டி வந்தது .....

பின்பு இந்திய இராணுவம் வந்த போது வன்னி பெரும்காடு அவர்களின் கோட்டையாக மாறியது.

பின்பு கடற்புலிகள் வளர்ச்சி காண தொடங்கிய போது ...... மன்னார் கடலை குறி வைத்து மன்னார் பகுதியில்  மையம் கொண்டார்கள். சுழற்சி முறையில் காலத்திற்கு ஏற்ப சுழன்று கொண்டே இருந்தார்கள்.

உங்களுடைய மையவாதம் ஏற்க கூடியதாக இல்லை.............

கூடிய விளக்ம் தேவை.

புலிகள் மையவாதம் என்னும் தளத்தில் இருந்துகொண்டே அதைக் கடந்து செல்ல முற்பட்டார்கள். சாதி மத வர்க்க பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கினார்கள். ஆனால் தளம் தனது குணத்தைக் காட்டியது. முதலில் இஸ்லாமியத்தமிழர்களுக்கும் புலிகளுக்குமிடையிலான பிரச்சனை. இரண்டாவது பிரதேசவாத அடிப்படையில் கருணா பிளவு. மூன்றாவது வர்க்க அடிப்படையில் வறிய மக்களின் தலையில் போராட்டச் சுமை இறங்கியது. வசதியானவன் வெளிநாட்டுக்கும் அரசோடு அண்டிப்பிழைத்தும் போராட்டத்தில் இணைய மறுத்தும் வாழப்பழகிக்கொண்டான்.

சமூக இறுக்கம் என்பது சாதி மத பிரதேச வர்க்க வாதங்களை கட்டிக்காப்பாற்ற காலாகாலமாக எமக்குள் இருந்துவருகின்றது. இது அர்த்தமற்ற தூய்மைவாதத்தை கட்டியமைக்கின்றது. மேற்சொன்ன வாதங்களை புலிகள் கடக்க முற்பட்டார்கள் ஆனால் இறுக்கம் என்பது தனிமனித குணமாக உளவியலை வெகுவாக பாதித்துநிற்கின்றது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் பெண் நிதிப் பிரச்சனைக்கான தண்டனைகள் அனைத்தும் சமூக இறுக்கத்தின் பிறிதொரு வடிவம். புலிகளின் பல செயற்பாடுகள் சமூகம் நிலுவையில் விரும்பியவைகளே.

இயக்கங்களுக்குள் சாதிகள் மதங்கள் பிரதேசவாதங்கள் இல்லை ஆனால் இயக்கங்கள் ஒன்று சேர கடசிவரை முடியவில்லை. என்ன காரணம்? சிங்களப் பேரினவாத அழுத்தங்களின் மத்தியிலும் ஒன்று சேர முடியவில்லை. இறுதிவரை தமக்குள் குத்துப்பட்டார்கள். சமூக இறுக்கம் என்பது வக்கிர மனநிலையை பிடிவாதக் குணத்தை ஏற்கனவே கட்டியமைத்துவிட்டது. அதை எவரும் கடந்து செல்ல முடியவில்லை.

எமக்குள் நாம் ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் இல்லை. நம்புகின்றவர்கள் இல்லை. ஒருவரை ஒருவர் ஏற்பவர்கள் இல்லை. இதற்கான அடிப்படை மனித இயல்பை சாதி மத வர்க்க பிரதேசவாதங்கள் ஏற்கனவே தர்த்தெறிந்துவிட்டது. இந்த இயல்பைத் தொலைத்த நிலையை உணராமல் எதையும் கடந்து செல்ல முடியாது. எமக்குள் நாம் போட்டுத்தள்ளியது ஒன்றுபட முடியாதது காட்டிக்கொடுப்புகள் துரோகங்கள் அனைத்தும் இந்த இயல்பைத் தொலைத்த நிலையை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றது. அத்தனையும் போராட்டத்தின் தோல்வியில் சம்மந்தப்படுகின்றது.

வினை விதைத்த வயலில் தினை அறுக்கமுடியாது. கலாகாலமாக அயோக்கியத்தனத்தை அடிப்படையக்கொண்ட சமூகத்தில் யோக்கியனைத் தேட முடியாது. எந்தக் குற்றம் செய்தாலும் உளவியல் அடிப்படையில் எமது சமூகத்தில் அது குற்றமாகாது. காரணம் இது மனநோய்க்குள்ளான சமூகம்.

மையவாதம் என்னும் தளத்தை உடைத்தெறியாமல் அதைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்றது. இத்தளத்தின் மீது எத்தனை தலைவன் தோன்றினாலும் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் அத்தனையும் தற்கொலைக்கு ஒப்பானது. இத்தளத்தை ஆழமாக உணர்பவர்களுக்குப் புரியும் இத் தளத்தின் மீது புலிகளின் 30 வருட இருப்பு என்பது ஒரு பெரும் அதிசயம் என்பது. அதைக்கடந்து இத்தளத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு இன விடுதலை என்பதைப்போல் முட்டாளத்தனமான சிந்தனை உலகில் வேறெதுவும் இருக்கமுடியாது. இனத்தை சிதைத்து கூறுபோடும் ஒரு தளத்தில் இருந்த இனவிடுதலை என்பதைபற்றி சிந்திப்பதே அபத்தம்.

இத்திரியிலாவது களநிர்வாகிகள் கத்தி போடாமல் இருந்தால் நல்லது....திரி நன்றாக ஓடுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் எழுத்துக்களுக்கு எதையும் எழுதுவதில்லையென்று இருந்தாலும் புலிகள் தொடர்பாக இட்டுக்கட்டப்பட்ட புனைவுகளைக் கலந்து இப்பேட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அருளினியன் கேட்டுள்ள கேள்விகள் ஏற்கனவே 2010 தீபச்செல்வனிடம் சோபாசக்தி கேட்ட கேள்விகள்.அருளினியன் தனக்கு ஏற்றபடி மாற்றம் செய்துள்ளார். அருளினியன் நல்லா மசாலா சமையல் தெரியுமென்று இன்னும் ஒருமுறை நிரூபிக்கிறார்.
தீபச்செல்வனிடம் சோபாசக்தி எடுத்த பேட்டியின் இணைப்பு இது :- http://www.shobasakthi.com/shobasakthi/?p=717
 
நியானி: முகநூல் உரையாடல் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

பி:கு :- வளமைபோல நக்கல் அல்லது பழிசுமத்தல் மூலம் தன்னை நிறுவ முனையும் எழுத்தை சாத்திரி அவர்கள் இவ்விடயத்தில் செய்யாமல் நேர்மையாக பதில் தருவாராயின் மகிழ்ச்சி. இங்கு ருல்பன் கூறியது போல அடுத்த கட்ட தமிழினத்தின் விடிவை எதிர்பார்க்கும்  நீங்கள் முதலில் உங்களது நாட்டு காவல்துறையினரிடம் போய் உண்மைகளை ஒத்துக்கொண்டு செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள் அதுவே மக்களின் அவலங்களைக் கண்டு ஆயுதம் தூக்கிய உங்கள் தியாகத்திற்கான பலானகும்.

புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி முழுவதுமாக அறிந்து புலியுறுப்பினர்கள் பலர் இன்னும் சாகவில்லை. அவர்களும் வாய் திறக்கும் காலமொன்று வரும் அதுவரை.....!

  • கருத்துக்கள உறவுகள்

(1) உங்களின் இந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

(2) இந்தக் கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். இது தமிழர் தரப்பின் தன்மதிபீடு செய்யும் நேக்கில் எழுதப்படவில்லை என்பதே எனது கருத்து.

நோக்கம் தப்பு

இனத்துக்கு எதிரானது என்றபின்

அந்த குப்பைக்குள் எதையும் நாம் தேடக்கூடாது............... :(  :(  :( 

நுணா ,

நான் பலதடவைகள தெளிவாக இவற்றை பதிந்துள்ளேன் ,தொடர்ந்தும்  மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள் .

புலிகள் மற்ற இயக்கங்களை தடை செய்தது எப்ப இந்தியன் ஆமி வந்தது எப்ப ?

83-86 கால கட்டத்தில் அனைத்து இயக்கங்களில் ஏறக்குறைய பத்தாயிரம் போராளிகள் ஆவது இருந்திருப்பார்கள் .புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தது மாத்திரம் அல்ல அவர்களை தேடி தேடி வேட்டையாடவும் தொடங்கியிருந்தார்கள் .தமிழ்நாட்டில் தங்கியிருந்தவர்கள் தவிர நாட்டில் இருந்தவர் எங்காவது தப்பி ஓடவேண்டிய தேவை வந்தது .இந்தியாவில் இருந்தவர்களிலும் பலர்  நாட்டில் நடப்பதை பார்த்து போராட்டத்தில் இருந்து அப்படியே ஒதுங்கதொடங்கிவிட்டார்கள் .

பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் .இந்தியா அந்த தீர்வை எப்படியும் அமுல் படுத்த தீர்மானித்தது . சிறிலங்கா அரசு இந்த ஒப்பந்தத்தை உண்மையில் விரும்பவில்லை .அதே போல் விடுதலை புலிகள்களும் அதை விரும்பவில்லை .மற்றைய இயக்கங்களுக்கு தலையாட்டுவதை தவிர வேறு தெரிவும் இல்லை .யோகி தலைமையில் ஆயுத ஒப்படைப்பு நடந்து இந்தியன் ஆமி புலிகள் ஒன்றாக பவனி வந்த காலம் அது .இதில் வேடிக்கை ஆரம்பம் முதல் கீரியும் பாம்புமாக இருந்த புளொட் இந்தியா நிலைப்பாடு மாறி எஞ்சியிருந்த புளோட்டையும் வவுனியா கொண்டுபோய் இந்தியா இறக்கிவிட்டது.(உமா அதற்கு முதலே அத்துலத்முதலியுடன் தொடர்பு வைத்துவிட்டார் ).

இந்தியாவிற்கு பிரபா  இந்த ஒப்பந்த்தை ஏற்கமாட்டார் என்று தெரியும் ,அப்படி ஒரு நிலை வந்தால் பிரபாகரனை கொல்லவும் புலிகளை அழிக்கவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் .அதுவே நடந்தது புலிகள் இந்திய யுத்தம் தொடங்கியது .இந்தியாவுடன் தயவில் இருந்த இயக்கங்களும் தங்களை தடை செய்த புலிகளை பழிக்குபழி வாங்க கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்று ஊழிதாண்டவும் ஆடினார்கள் .என்னதான் ஆயிரம் காரணங்கள்  இருந்தாலும்  எக்காலமும் எவரும் அவர்கள் செய்த அநியாயங்களை நியாய படுத்த முடியாது .

எப்பவும் எல்லாம் நிரந்தரம் என்று நம்பிய இயக்க தலைமைகளால் தான் தமிழனுக்கு இவ்வளவு அழிவுகளும் வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி  பற்றி.............

1- இந்த  திரியின் தொடர்பாளரோ அல்லது அதன் தயாரிப்பாளரோ ஒரு கருத்தையும் இங்கு வைக்கவில்லை. அல்லது வைக்கமுடியவில்லை.  

2- இது போன்ற  சாத்திரியின் எழுத்துக்களுக்கு ஓடிவந்து பச்சை  குத்தும் எவரும் இதற்கு குத்தவில்லை.  அல்லது  குத்தமுடியவில்லை

3- நிர்வாகத்திலுள்ள  எவரும் கருத்து வைக்கவில்லை (நுணா தவிர்த்து).  

4-  இந்த திரிக்கு கருத்து வைத்த எல்லோரும் இதை புழுகு  அல்லது கற்பனை  என்றிருக்கிறார்கள்.

   அர்யூன் மற்றும்  நாந்தான்  கருத்துக்கள் வழமைபோல் வாந்திகள் மட்டுமே.

5-  இதன் மூலம் இந்த திரி முழுமையாக யாழ் வாசகர்களாலும் அதை எழுதியவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு

   நம்பத்தகாத திரி  பொய்யும் புரட்டும் உள்ள தமிழருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட நரித்திரி  என்ற  முடிவுக்கு வரலாம்.

6-  தமிழர் போராட்டம் என்பது எம் கண்முன்னால் நடந்தது. அதை நாம் முற்றுலுமாக அறிவோம் . ஏனெனில் அதை  நாமே செய்தோம்.

அதை எமக்கு எவரும் வகுப்பெடுக்கத்தேவையில்லை.  அது தொடரும்............

நன்றி

வணக்கம்.

சாத்திரி அண்ணாவின் எழுத்துக்கள் பற்றி ஏற்கனவே யாழ்களத்தில் சில திரிகளில் பார்த்ததால் இந்த திரி எனக்கு வியப்பாக இல்லை. அதுதான் இவ்வளவு நாளும் கருத்து வைக்கவில்லை.

அனைத்துலக செயலகத்துடன் முரண்பட்ட பின்னர் அனைத்துலக செயலகத்தை அழித்து காட்டுவேன் என தான் செயற்பட்டதாக ஏற்கனவே யாழில் எழுதிய கருத்து ஒன்றையும் பார்த்திருக்கிறேன். :) பங்குபிரிப்புகளும் படுகொலையும் என்ற திரியும் ஆரம்பித்து மூக்குடைபட்டவர். :icon_idea:
 
இப்ப திரும்ப புலிகளுக்கு எதிராக எழுதுகிறார். :)

சாத்திரி அண்ணா எப்படிப்பட்டவர் என தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். :wub:

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி  பற்றி.............

5-  இதன் மூலம் இந்த திரி முழுமையாக யாழ் வாசகர்களாலும் அதை எழுதியவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு

   நம்பத்தகாத திரி  பொய்யும் புரட்டும் உள்ள தமிழருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட நரித்திரி  என்ற  முடிவுக்கு வரலாம்.

ஆஹா! நரித்திரியை தொடங்கியது ஏன் என்றால் சாத்திரி தன்னை வெளிக்காட்டி பொது அரசியலில் ஈடுபடும் ஒருவர். ஒரு காலத்தில் அவருடன் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாக மாறிவிட்டார்கள் என்பதையும் இன்னும் சிலர் விசுவாசிகளாக இருக்கின்றார்கள் என்பதையும் இந்தத் திரியில் உள்ள பின்னூட்டங்கள் சொல்லுகின்றன.

இது தமிழருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கோடு தொடங்கப்படவில்லை. தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராட உயிரைக்கூட துறக்கத் தயாராக இருந்த பலர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள் என்பதையும், வெறும் உணர்ச்சிவயப்பட்டுப் போராடப் போனவர்கள் எதைச் சாதித்தார்கள் என்பதையும் இந்தப் பேட்டியில் இருந்து, அதன் உண்மை பொய்களுக்கு அப்பால் அறிந்துகொள்ளலாம்.

தலைவர் பிரபாகரன் எந்தச் சூழ்நிலையிலும் எதிரிகளிடம் இருந்து தப்பிப் பிழைப்பவராகவும் தனது கொள்கையில் அழுத்தமான உறுதியுடனும் பிடிவாதத்துடனும் இருந்தார். அதனால்தான் சரிபிழைகளுக்கு அப்பால் தமிழ்மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். அவரின் வழிமுறைகளைப் பின்பற்றியவர்கள் தங்கள் குறிக்கோள்களில் தொடர்ந்தும் தெளிவாக இருந்திருப்பார்களேயானால் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பின்னரும் பலம் பெற்று எழுந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கச் சாத்தியமாக இல்லை என்பதைத்தான் கடந்த ஐந்து வருடங்களில் தமிழர்களின் அரசியலில் நடப்பவை உணர்த்துகின்றன. அதைத்தான் சாத்திரியின் இந்தப் பேட்டியும் சொல்கின்றது. கப்பல் மூழ்கும்போது அதில் இருந்து தப்பிப் பிழைத்து ஓடும் எலிகள் விசுவாசம், கொள்கை என்பனவற்றை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை.

6-  தமிழர் போராட்டம் என்பது எம் கண்முன்னால் நடந்தது. அதை நாம் முற்றுலுமாக அறிவோம் . ஏனெனில் அதை  நாமே செய்தோம்.

அதை எமக்கு எவரும் வகுப்பெடுக்கத்தேவையில்லை.  அது தொடரும்............

நன்றி

வணக்கம்.

994696_794236983926253_115349729_n.jpg:D  :D  :D

சாத்திரி எப்படிப்பட்டவர் என்பது நேசக்கரத்தை நாசமாக்க முயற்சித்த போது அறிந்து கொண்டோம் .விடுதலைப்புலிகளின் காலம் முற்றுப்பெற்றுவிட்டது .இன்றைக்கு அதைப்பற்றி பேசி ,எழுதி எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை .உண்மையிலேயே விடுதலைப்புலிகளில் கரிசனை உள்ளவர்களாயின் புலிகள் இருந்தபோது சரி/பிழைகளை நேரடியாக சொல்லியிருக்க வேண்டும் .

நாளைக்கு சாத்திரி கோத்தா விடம் சென்று காட்டிக்கொடுப்பு எடுபிடியாக இருந்தாலும் நான் அதிர்ச்சி அடையப்போவதில்லை .சாத்திரியின் ஏமாற்று வேலைகளால் எத்தனை பேர் உயிரை விடப்போகினமோ அல்லது ஏமாறப்போகினமோ   தெரியவில்லை .

அதற்காக புலத்திலும் தாயகத்திலும் புலிகள் தவறு செய்யவில்லை என்று விதண்டாவாதம் செய்யப்போவதில்லை .

Edited by Gari

ஒட்டு மொத்தத்தில் உங்களுக்குள் இருக்கும் கசப்புணர்வை புரிந்து கொள்கிறேன் .......வேறொன்றுமில்ல .அவ்வளவுதான்  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.