Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் முக்காட்டு நிலா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்குனி விடியலின் அதிகாலைத்

     தக்பீர் முழக்கம் அவள்!
சித்திரை வசந்தத்தின் முக்காடு
    போட்ட முதலாம்பிறை அவள்!
கார்த்திகை நிலவின் காயம்படாத
    உமர்கயாமின் கவிதை அவள்!
மார்கழித் திங்களின் சல்வார்

    போட்ட ரம்சான் அவள்! 

ஆகா.. அதென்ன அப்பிடி.. நான் இப்பிடித்தான் வாசிப்பன்!!  :icon_mrgreen:

 

மார்கழி விடியலின் அதிகாலை
திருவெம் பாவை அவள்!
சித்திரை வசந்தத்தின் முக்காடு
விலத்திய சித்திரா பௌர்ணமி அவள்!
கார்த்திகை மாதத்து வெடிசுடாத
தீபாவளிப் பண்டிகை அவள்!
தைத் திங்களீன் தாவணி
போட்ட பொங்கல் அவள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு... முக்காட்டுக்க என்ன இருக்கென்று பார்க்கிறதில.. ஒரு விருப்பம் இருக்கென்று தெரியுது. :lol:


நல்லதொரு ரசிக்கக் கூடிய ஆக்கம். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை  தெரிஞ்சாகனும்..! :)

 

சோனக தெருவிலும், கோயில் வீதியிலும் அந்த அதிகாலையில் உங்களுக்கென்ன வேலை....! கெதியாய் சொல்லுங்கோ, தமிழ் சூரியன் வந்து அந்தோனியார் வீதியில் நின்று நத்தார் விடியலின் அதிகாலை

நல்லதொரு பைபிள் அவள் ....  என்று சொல்லுமுன்...! :D :D

 

கவிதைக்கும் கவிகளுக்கும் நன்றி...! :D 

எனக்கொரு உண்மை  தெரிஞ்சாகனும்..! :)

 

சோனக தெருவிலும், கோயில் வீதியிலும் அந்த அதிகாலையில் உங்களுக்கென்ன வேலை....! கெதியாய் சொல்லுங்கோ, தமிழ் சூரியன் வந்து அந்தோனியார் வீதியில் நின்று நத்தார் விடியலின் அதிகாலை

நல்லதொரு பைபிள் அவள் ....  என்று சொல்லுமுன்...! :D :D

 

கவிதைக்கும் கவிகளுக்கும் நன்றி...! :D

 

எப்பப்ப எங்கெங்கு செப்பினும் அங்கங்கு

அப்பப்ப விஞ்சிடும் அழகு!!  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்குனி விடியலின் அதிகாலைத்

     தக்பீர் முழக்கம் அவள்!

சித்திரை வசந்தத்தின் முக்காடு

    போட்ட முதலாம்பிறை அவள்!

கார்த்திகை நிலவின் காயம்படாத

    உமர்கயாமின் கவிதை அவள்!

மார்கழித் திங்களின் சல்வார்

    போட்ட ரம்சான் அவள்! 

 

பங்குனி மாதம் பிறந்தாலே வரவிருக்கும் வசந்தத்தினை விழைந்து உளம் குதூகலிக்கும் அவள் குரலோசை :rolleyes: வரவிருக்கும் வந்ததத்தினை எனக்கு கட்டியம் கூறிவிடுகின்றது. சித்திரை பிறந்து வசந்தமும் வந்துவிடுகின்றது ஆனால் அவளை மட்டும் இன்னும் காணவில்லை. ஓ! இருந்தும் இல்லாமலிருக்கும் முதலாம் பிறையினையொத்த மெல்லிய துடியிடையினைக் :rolleyes: கொண்ட அந்த இனிய மகள் முக்காட்டுக்குள் தன்னை மறைத்துக் கொள்கின்றாளா? கார்த்திகை மாதத்து முழுநிலவில் கூடக் கறை இருக்கலாம் ஆனால் இவள் கன்னங்களோ :rolleyes: களங்கமேயில்லாமல் வடிக்கப்பட்ட உருதுக் கவிஞன் உமர்கயாமின் கவிதைகளைப் போன்றல்லவா இருக்கின்றன. :rolleyes: இந்தப் பேரழகி சல்வார் அணிந்து வருகின்றபோது :rolleyes: மார்கழிக் குளிர் மனசுக்குள் அடிக்க :rolleyes: அருள் நிறைந்த ரமழானின் இனிமை :rolleyes: எனக்கு அவளாகவே மாறிவிடுகின்றது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. அதென்ன அப்பிடி.. நான் இப்பிடித்தான் வாசிப்பன்!!  :icon_mrgreen:

 

மார்கழி விடியலின் அதிகாலை

திருவெம் பாவை அவள்!

சித்திரை வசந்தத்தின் முக்காடு

விலத்திய சித்திரா பௌர்ணமி அவள்!

கார்த்திகை மாதத்து வெடிசுடாத

தீபாவளிப் பண்டிகை அவள்!

தைத் திங்களீன் தாவணி

போட்ட பொங்கல் அவள்!

 

ஓ! இப்பிடி அழகாவும் தமிழச்சிகள் இருக்கிறார்களா: :o

உங்கள் வரிகளுக்கு நன்றி சோழியன் அண்ணா :)

 

 

இவருக்கு... முக்காட்டுக்க என்ன இருக்கென்று பார்க்கிறதில.. ஒரு விருப்பம் இருக்கென்று தெரியுது. :lol:

நல்லதொரு ரசிக்கக் கூடிய ஆக்கம். :)

 

திறந்து இருக்கிறதைப் பாக்கிறதைவிட மூடி இருக்கிறதை கற்பனைசெய்து பாக்கிறது இன்னும் த்றில்லா எலுவா இருக்கும். :D

நன்றி நெடுக்ஸ்! :)

Edited by யாழ்வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு உண்மை  தெரிஞ்சாகனும்..! :)

 

சோனக தெருவிலும், கோயில் வீதியிலும் அந்த அதிகாலையில் உங்களுக்கென்ன வேலை....! கெதியாய் சொல்லுங்கோ, தமிழ் சூரியன் வந்து அந்தோனியார் வீதியில் நின்று நத்தார் விடியலின் அதிகாலை

நல்லதொரு பைபிள் அவள் ....  என்று சொல்லுமுன்...! :D :D

 

கவிதைக்கும் கவிகளுக்கும் நன்றி...! :D

 

இஸ்லாமியத் தமிழழகிகளும் பேரழகிகள்தான் சுவியண்ணா. :D

கார்காலத்தின் காரணமோ!!

காதல் வேட்கை காரணமோ!! யானறியேன்??

வாலி/சோழியின்  கவிதைகள்  கக்கிய கதகதப்பு நன்றாகவே உள்ளது... :)

பங்குனி விடியலின் அதிகாலைத்

     தக்பீர் முழக்கம் அவள்!

சித்திரை வசந்தத்தின் முக்காடு

    போட்ட முதலாம்பிறை அவள்!

கார்த்திகை நிலவின் காயம்படாத

    உமர்கயாமின் கவிதை அவள்!

மார்கழித் திங்களின் சல்வார்

    போட்ட ரம்சான் அவள்! 

 

அவள் கார்த்திகை நிலவின் காயம் படாத  உமர்கயாமின் கவிதை சரி . ஆனால் , அவள் எப்படி மார்கழி திங்களின் சல்வார் போட்ட ரம்சான் ஆகமுடியும் ?? எனக்கு இந்த வரியில் ஒரு விதமான முரண் இணைப்பே தென்படுகின்றது . யாழ்வாலியின் கவிதைக்கு என்மனங்கனிந்த பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள் :) .

 

 

 அவள் எப்படி மார்கழி திங்களின் சல்வார் போட்ட ரம்சான் ஆகமுடியும் ?? 

 

இப்பிடி ஒரு வரி பற்றிக் கேள்விப்பட்டாங்கள் என்றால், இந்தக் கவிஞரும் சல்மான் ருஷ்டி மாதிரி தலைமறைவாகத் திரிய வேண்டியதுதான்!! :icon_mrgreen:   

கார்காலத்தின் காரணமோ!!

காதல் வேட்கை காரணமோ!! யானறியேன்??

வாலி/சோழியின்  கவிதைகள்  கக்கிய கதகதப்பு நன்றாகவே உள்ளது... :)

 

மிகவும் நன்றி! என்னுடையதை எனது கவிதை என்று கூறாதீர்கள்!

அது உல்டா... பாடல் கவிதை எனும்போது உல்டா சுலபமாகவே வருகிறது...!!  :icon_mrgreen:

ஆகவே, எல்லாப் புகழும் மூல வேராகிய யாழ்வாலி அவர்களுக்கே!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

பங்குனித் திங்களில் மாலை நேர

பிரித் முழக்கம் நீயடி

வைகாசி மாத வெசாக் ஒளி

உன் புன்னகையடி

மொத்தத்தில் நீயொரு

மகாவம்சமடி

யாழ்வாலி நன்றாக உள்ளது உங்கள் கவி பராட்டுக்கள்

Edited by putthan

ஆகா.. அதென்ன அப்பிடி.. நான் இப்பிடித்தான் வாசிப்பன்!!  :icon_mrgreen:

 

மார்கழி விடியலின் அதிகாலை

திருவெம் பாவை அவள்!

சித்திரை வசந்தத்தின் முக்காடு

விலத்திய சித்திரா பௌர்ணமி அவள்!

கார்த்திகை மாதத்து வெடிசுடாத

தீபாவளிப் பண்டிகை அவள்!

தைத் திங்களின் தாவணி

போட்ட பொங்கல் அவள்!

 

யாழ்வாலி, சோழியன் இருவரின் கவிகளையும் இரசித்தேன். சோழியனின் கவிதையை படிக்கும்போது கொடுப்புக்குள் கொஞ்சம் சிரிப்பும் வந்தது.... ! :lol::wub:

 

குர்பானி பல கொடுத்தும் கூர்மங்காத வெட்டுக்கத்தியவள்..,

திங்க திங்க திகட்டாத பிரியாணியின் குரும்பாட்டுக் கறியவள்...

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி அவள்...

பக்ரீத் பண்டிகையில் பீப் சுக்கா அவள்...

வெள்ளிக்கிழமைகளில் மட்டன் குஸ்கா அவள்... :D

#நமக்கு தெரிஞ்சத வச்சு கவிதை வடிச்சாச்சுசு...!!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாலி,சோழியன் கவிதைகள் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

என் போன்று அரபு நாடுகளில் வசிப்பவர்களின் மனைவிமார்களின் உள்ளக்குமுறல். (தனி திரி திறக்க முடியது access restricted by yarl) எனவே இங்கு இன‌ண‌த்தேன்

 

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு, கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய், பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்.....

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய்.கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய்! மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்,கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...,,அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...,,இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி " 
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...!!! எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...என் துபாய் கணவா!!! 

கணவா - எல்லாமே கனவா? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...? 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....2 வருடமொருமுறை கணவன் ...நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! இது வரமா??? சாபமா...??? 

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்!!நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்,,திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...,,தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்...............

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்,பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா! தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்,,ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..? 

விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு! விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா................!!!!

 

thanks facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாலியின் கவிதை அழகு; யாழ்வாலி..நீங்கள் வாழி..நீடூழி! அது மாத்திரமல்ல..இங்கேயொரு கவிதைப் பட்டிமன்றமே நடந்திருக்கிறது. பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை.

 

Colomban என்ற நண்பர் பகிர்ந்திருக்கும் துபாய் கணவனைப் பற்றிய அந்தப் பகிர்வு அற்புதமாக அமைந்திருக்கிறது.

 

உண்மையில், யாழ்.இணையத்தில் உறுப்பினரானமைக்காகப் பெருமைப்படுகிறேன்.

Edited by எஸ். ஹமீத்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.