Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவனொளிபாதமலைக்கு ஹெலியிலிருந்து மலர் தூவினார் ஜனாதிபதி ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR02(92).jpg
-க.கிஷாந்தன்

சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. 

காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். 

சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இருப்பினும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தினார். 

குறித்த காண்டாமணியும், தூண்டாவிளக்கும் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டதுடன் அங்கு இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார். 

சிவனொளிபாதமலை விகாரையின் பொறுப்பாளர் தேரர் தலகஸ்கந்தே வஜிரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
MR01(99).jpg

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/99410-2014-02-07-09-16-51.html


03(566).jpg
சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - க.கிஷாந்தன், ஜனாதிபதி ஊடகப் பிரிவு) 
01(953).jpg
02(764).jpg
04(396).jpg
05(292).jpg
Sri%20(1).JPG
Sri%20(2).jpg
Sri%20(3).jpg
Sri%20(4).jpg
Sri%20(5).jpg
Sri%20(6).jpg
Sri%20(7).jpg
Sri%20(8).jpg
Sri%20(9).jpg
 

http://tamil.dailymirror.lk/--main/99416-2014-02-07-09-42-33.html

Edited by தமிழரசு

பாத மலைக்கே பறந்து மலர் தூவிறார் சக்கரவர்த்தி.

மக்களின் வரிபணத்தில் ஒரே களியாட்டம் தான்.

ஆண்டவனே நான் செய்த படுபாதகங்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் பாவமன்னிப்பு தராவிட்டாலும் பரவாயில்லை. சர்வதேச விசாரணை வருவதையாவது தடுத்துவிடு.

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருடைய பாத மலை. முதலில அதுக்கொரு முடிவுக்கு வாங்க. சிவனா.. புத்தரா.. அல்லாவா..???! :lol::D

பூக்கள் தூவி பாவங்களை கழுவப்பார்க்கிரார்கள் கொலைகாரர்கள்

 

சர்வதேசத்தில் சரணடைவதைத்தவிர வேறு வழி இல்லை இவர்களுக்கு   

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருடைய பாத மலை. முதலில அதுக்கொரு முடிவுக்கு வாங்க. சிவனா.. புத்தரா.. அல்லாவா..???! :lol::D

 

யெசுநாதரின் ரசிகர்கள் யெசுவின் பாதம் என்று சொல்லியினம்.....:D

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருடைய பாத மலை. முதலில அதுக்கொரு முடிவுக்கு வாங்க. சிவனா.. புத்தரா.. அல்லாவா..???! :lol::D

மகாவம்சம் என்ன சொல்லுதோ, அது தான் ! :D

மலைக்கே மலர் தூவின செம்மல் எங்கள் ராசபக்ஸ சிம்மல்.

 

அவரில் புகழ் பாடி மகிழ்வதே இனி தமிழர் பணி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தன் பாவத்தை மலை மேல் தூவுகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடைசனம் சாமத்தியவீட்டுக்கு ஹெலிக்கொப்பரிலையிருந்து ரோசாப்பூ தூவேக்கை!!!!!......ஒருநாட்டுக்கு தலைவனெண்டு இருக்கிறவன் இதை விட வேறை என்ன செய்ய வேணும்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.