Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!
‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!
நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

  • Replies 256
  • Views 22.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!

‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!

நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

 

அடுத்தடுத்த பந்தியுள் இடமிருந்தால் குந்துங்கள். அல்லது .....ம் :D

 

கதையை எழுதிப் போட்டதோட புங்கையை இந்தப்பக்கம் காணவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியரின் கதையின் ஆரம்பம் அலுப்புத்தட்டாமல் விறுவிறுப்பாய் சென்றது அழகு. வாழ்த்துகள்.

 

தொடரினை அடுத்து எடுத்துச் சென்ற புங்கையூரன் கதையினை தொய்ய விடாமல் எடுத்துச் சென்றது சிறப்பாய் இருந்தது.

கவிதை அழகு. வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவுரையை  கதையை  ஆரம்பித்தவரே  எழுதும்படி  ஒரு உத்தரவை  விடுத்தால்.....

மற்றவர்கள் இடையில் முறித்து முடிக்காமல் இருக்க  உதவும்

என்ன  நினைக்கின்றீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி வரவுக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

 

 

 

இல்லை...............இது தான் நல்லது கதை   முற்றத்தில்  ..கருத்து வேறுபக்கத்தில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா. நான் நினைத்த பாதையில் கதையை நகர்த்துகிறீர்கள் நன்றி அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் மட்டும்தான் முன்பக்கத்தில் நிற்கின்றது.கதையை தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது ,கதை முன் பக்கத்திலேயே நிக்க ஒரு வழியை காட்டுங்கப்பா

 

 

யாழில இப்ப இருக்கிறதே ஒரு கதைதான். அதைத்த் தேடித் பிடிக்கக் கூட கஸ்ரமோ ?????

நிலாமதிதான் கதையை சிறிது நகர்த்தி இருக்கிறார்.. கொழும்பு பயணத்திலும் கதைக்கு திருப்பங்களை ஏற்படுத்தலாம்..  அடுத்த பகுதி எழுதுபவருக்கு பல கதைக்கான சம்பவங்களை சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறார் நிலாமதி. பாராட்டுகள்!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை அர்யுன் கதையை தொடர இருக்கிறார். அதற்கு முன் யாராவது எழுதுவதானால் எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் நீளமாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  புங்கையண்ணா

அந்தமாதிரி

பல  மைல் கீழிறங்கி  யோசித்தள்ளீர்கள்

அந்த நாளைய  ஆட்டங்களின் மீள்  ஓட்டம் போலும்

 

தொடருங்கள்

புங்கையண்ணா

இன்னும் மேலே தள்ளி  மெருகூட்டியுள்ளார்.

வணக்கம், விசுகர்..!

 

அந்த நாளைய ஆட்டங்களை, இங்கே எழுதினால் 'யாழ்' தாங்குமா? :icon_mrgreen:

 

அவற்றில் சிலவற்றை மட்டுமே பொறுக்கியெடுத்துக் கோர்த்த 'சின்ன மாலை" ! :D  

 

கருத்திட்டமைக்கும், வரவுக்கும் நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாள் கதை எழுதும்போது ஒரு கதையாகவே எழுதினேனே தவிர பழையன பற்றி நினைக்கவே இல்லை. புங்கை எழுதியதாய் வாசிக்க பழசுகள் நிறைய ஞாபகம் வந்திட்டுது. சிரிச்சு வயிறு நொந்துபோச்சு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் புங்கை. அவ்வளவு ரசனையாய் எழுதியிருக்கிறீர்கள் 

 

கருத்துக்கு நன்றிகள், சுமே!

 

உங்கள் முன்னெடுப்பு மிகவும் மெச்சப்பட வேண்டியதென்பதுடன், 'யாழ்' என்னும் கடலில் ஆழைப்புதைந்திருக்கும் 'முத்துக்களை' வெளியே கொண்டு வரவும் உதவும்!

 

கதை தொடங்கி இரண்டு நாட்கள் கூட முழுமையாக முடியவில்லை!

 

அதற்குள் மூன்று உறவுகள், கதைகளைப் பகிர்ந்திருக்கின்றார்கள் என்பது, 'யாழ்' களத்தின் எதிர்காலம், இன்றுடனோ அல்லது நாளையுடனோ முடிந்து போகப்போவதில்லை என்பதையும், எமது ஏற்றங்கள், இறக்கங்களுக்கேற்ப 'யாழும்' எம்மோடு உயர்ந்து, தளர்ந்து செல்கின்றாள் என்பதையுமே பறைசாற்றி நிற்கின்றது!  

 

கதை என்பது ஒரு காலத்தின் கண்ணாடி! ஒரு காலத்தின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே எனது பணிவான நம்பிக்கை!

 

கதை நகர்ந்து செல்லும் போது, தேவையென 'உறவுகள்' கருதினால், இன்னுமொரு 'பாகம்' எழுதுவதில் எனக்கு உடன்பாடே! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா இது கவிதையா கதையா என்று என் மனம் விவாதிச்சே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவ்வளவு 'கவித்துவமாக' இருக்கிறது உங்கள் கதை.

உங்கள் உவமானங்கள் 'சனிக்கிழமை காகம்', 'காளீ பக்தன்', 'யாழ்ப்பாணத்து காவோலைகள்', 'படிப்பு சோறு ' உங்கள் கதையை எங்கையோ கொண்டு செல்கின்றன.

இந்த கதை முடியக்கூடாது என்று, சிறுவயதில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய 100 'பல்லி முட்டை' இனிப்பை ஒவ்வொன்றாக சாப்பிடுவது போல என் மனம் ஏங்கியது.

தொடரும் என்று கண்ட போது, சூப்பி முடிந்த 50 சத ஐஸ்பழம் வாயிலே இனிக்க 'தடியை நக்கி கொள்ளும்' மனசைப்போல ஆகிவிட்டது என் மனசு.

நன்றிகள் உங்கள் 'அருமையான' எழுத்துக்கும் நேரத்துக்கும்.

நன்றிகள், முதல்வன்!

 

பிறக்கும் குதிரையின் 'கால்களின் அளவைப் பார்த்தே' அதன் எதிர்காலத்தைக் கணித்துக் கூறக்கூடிய மேதைகள் இருக்கின்றார்கள்!

 

நான், அந்த அளவுக்கு இல்லையெனினும், உங்கள் எழுத்துக்களை வைத்தே,உங்கள் எழுத்துக்களின் எதிர்காலத்தை  'எதிர்வுகூற' முடியும்!

 

அவ்வளவு அழகான உவமான, உவமேயங்கள் உங்கள் 'சிறு கருத்திலேயே' துள்ளி விளையாடுகின்றன!

 

இந்தக் கதையில், நீங்களும் இணைந்து பயணிக்க வேண்டுமென்பதே எனது பணிவான வேண்டுகோள்!

 

கடலில் எறிக்கின்ற 'நிலா' ப் போல அல்லாது 'யாழில்' தெறிக்கின்ற நிலாவாக மாறுங்கள்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில இப்ப இருக்கிறதே ஒரு கதைதான். அதைத்த் தேடித் பிடிக்கக் கூட கஸ்ரமோ ?????

 

கருத்து எழுத வேண்டிய திரியை ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இணைத்தால் நல்லது என நினைக்கின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியரின் கதை தொடர்வதில் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? 'மனைவி தப்பி ஓட்டம்!' திரியில் உள்ளதுபோல பலமுறை தொடரவும் முடியுமா. ??? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்கள் புங்கை....! அடுத்தது யார்....எப்ப...எப்ப...! ஸ் ஸப்பா.! :D

நன்றிகள் சுவியர்!

 

நான் கலக்கினது ஒரு பக்கமிருக்கப் பிறகு வந்த ஆக்கள் தான், இந்தக் கதையைத் தொடர்வதற்கு, பல வாசல்களைத் திறந்து விட்டுள்ளார்கள்! :D

 

நீங்களும் ஒருக்கா, உள்ளுக்குள்ள பூந்து விளையாடிப்பார்க்கவேண்டியது தானே! :icon_idea:

சுமோக்காவும் புங்கையூரான் அண்ணாவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். கதை நன்றாக செல்கின்றது. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கின்றோம்.

நன்றிகள் தமிழினி!

 

உங்கள் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேணும்!

 

சொல்லி வாய் மூட முதலே, மேலும் இரண்டு அத்தியாயங்கள் வந்திட்டுது! :D

கதையை நகர்த்தும் விதம் மிக அழகு. கெதியாய் தொடருங்கள்,  வாசிக்க மிக ஆவல்!!  :)

நன்றிகள் அலை!

 

உங்களுக்குக் கதை கேட்கிறது எண்டால், நல்ல விருப்பம் எண்டு எங்களுக்கு நல்லாவே தெரியும்! :D

புங்கையூரன், கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்!!  :D

 

நன்றிகள் சோழியன்!

 

உங்கள் 'அத்தியாயத்துக்காக' கண்களை அகலவிரித்தபடி காத்துக்கொண்டிருக்கிறேன்! :lol:

பூங்கையூரான் .. பிரமாதம்..

’பிள்ளை, ஏலுமெண்டால் தாரணியையும் கூட்டிக்கொண்டு போவன்...ஆமிக்காரரும் அதுவுமா ஊரெல்லாம் கெட்டுப் போய்க்கிடக்குது...’ ..கதையின் பாதையை மாற்றக்கூடிய  வரிகளை பதிந்து இருக்கிறீர்கள் ~ Action starts here; is it?

 

அந்த இடத்திலிருந்து, கதையைக் கொண்டு செல்ல ஒரு நல்ல வாய்ப்பு ஒரு இருப்பது உண்மை தான்!

 

ஆனால், பலர் சேர்ந்து எழுதும் போது, பலரது 'பார்வைகள்' கதையை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுவது தான், கதை நகர்வின் சிறப்பாக அமைந்து விடுகின்றது!

 

கிட்டத்தட்ட ஒரு 'கவியரங்கை' ஒத்த நிகழ்வு!

 

நீங்களும் உங்கள் 'பார்வையை' இதனுள் 'நுழைத்தால்' என்ன?  :D

 

அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன், சசி!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அச்சொட்டாக உள்ளது புங்கையூரன் அவர்களே வாழ்த்துக்கள் !!

"நிலா, நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும், நீங்கள் படிப்பில கவனம் செலுத்த வேண்டும் என மதுரன் கூறினான்!

‘தங்கள் காதலை அவன் வெறும் ‘வயசுக் கோளாறாக' ப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினான்!

நிலாவுக்கு அவனை நினைக்கப் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே தனக்கு ஒரு நிரந்தரமான ‘வாழ்க்கைத் துணை' கிடைத்துவிட்டதாகவே மகிழ்ந்து போனாள்!

அந்த நிமிடத்திலிருந்து அவனைத் தனது கணவனாகவே அவள் வரித்துக் கொண்டாள்!"

சுமேரியரின் கதை வாசித்து முடிய அதனை எப்படித் தொடரலாம் என்று யோசித்தேன்! மேலே உள்ள அத்தனை கருவும் என்னில் உதித்தது. பந்திக்குப் பிந்திவிட்டேன், இனி சோற்றுக்கு நான் எங்கேபோவேன்??.

உங்கள் வாலிப அனுபவங்களை வாசித்ததில், உங்களைப் பற்றிய ஒரு 'மதிப்பீடு' எனது மனதில் ஆழமாக ஏற்பட்டது என்பது உண்மை தான்!

 

இந்த மனிதன், தேவையில்லாமல் ஒரு நாளும் 'பிழையான வழியில்' போகாது என்பதே அது! எங்கட ஊர்ப்பாசையில சொன்னால், 'அலவாங்கு விழுங்கி' (கோவிச்சுக் கீவிச்சுப் போடாதேயுங்கோ  :D ) என்று அழைப்பார்கள்! மனிசன் லேசில தன்ர 'கொள்கைகளிலிருந்து' வளையாது என்று கருத்து!

 

அந்த எதிர்பார்ப்பையே, நீங்கள் தேடிய 'கருக்களில்' மறைந்திருக்கின்றது! :lol:

 

உங்கள் அனுபவங்களே நீங்கள் சொல்லும் 'சோறாகும்' !

 

அது உங்களிடம் நிரம்பவே இருக்கிறது எண்டு எங்களுக்கு நல்லாவே தெரியும்!

 

கருத்துக்கு நன்றிகள்!

சுமேரியரின் கதையின் ஆரம்பம் அலுப்புத்தட்டாமல் விறுவிறுப்பாய் சென்றது அழகு. வாழ்த்துகள்.

 

தொடரினை அடுத்து எடுத்துச் சென்ற புங்கையூரன் கதையினை தொய்ய விடாமல் எடுத்துச் சென்றது சிறப்பாய் இருந்தது.

கவிதை அழகு. வாழ்த்துகள்.

ஒரு பதிவை எழுதி முடித்தபின்னர், உங்கள் கருத்துக்காகக் காத்திருப்பது வழக்கம், கறுப்பி!

 

அது அனேகமாக, நல்ல வெயில் நேரத்தில  'கூவில்' கள்ளடிச்ச மாதிரி ஒரு 'கிக்கைத்' தரும்! :icon_idea: 

 

நன்றிகள், கறுப்பி! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிய பாதங்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள்!

 

அதே போல, இந்தத் தொடரானது நிலா அக்காவைத் தட்டியெழுப்பிக் கூட்டிக்கொண்டு வந்ததைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்! :icon_idea:

 

உங்கள் வலைப்பூ பற்றியோ, உங்கள் படைப்புகள் பற்றிய அறியாத பல புதிய உறவுகள், யாழில் இருக்கக் கூடும்! 

 

இருந்தாலும், கதையில் ஒரு பெரிய 'எதிர்பாராத திருப்பத்தை' உங்கள் 'அத்தியாயம்' ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்!

 

இனி எவ்வாறு தொடர்வது எனச் சிந்தித்து நின்றவர்களுக்கு, 'வானமே எல்லை' என்பது போல, கதையை விரித்துள்ளீர்கள்!

 

அதே நேரம், ஒரு 'ஆசிரியையின்' கடுமையான கண்டிப்பையும் உங்கள் அத்தியாயத்தில் நான் காணத் தவறவில்லை! :o

 

நன்றிகள், நிலாக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சரின் சிந்தனையானது, கதையை ஒரு 'கிராமத்துச் சமுதாயத்தின் வலையமைப்புக்குள்' அழகாக நகர்த்திச் செல்லுகின்றது!

 

பிறத்தியான் ஒருவன் வந்து, தங்கள் ஊருக்குள் உள்ள 'ஒரு தேவதையைக்' கவர்ந்து செல்ல முயலும் போது,

 

அட, நாங்கெல்லாம் கேணையர்களா? என்பது போல அவர்கள் உணர்வது, கிராமிய சமுதாய அமைப்பில், நிச்சயம் நிகழக்கூடியதே!

 

கிட்டத்தட்ட 'ஏமநாதன்', பாண்டி நாட்டுக்குள்ள வந்த 'பாணபத்திரனை' ப் போட்டிக்கு அழைத்த மாதிரி! :D 

 

பாணபத்திரனைக் காப்பாற்ற அந்தப் பரம சிவனே வந்தான்!

 

ஆனால் இந்தப் பஞ்சர் போட்ட பொறியை உடைக்க, யார் வரப்போகின்றார்களோ என ஆவலுடன் காத்திருக்கிறேன்! :D 

 

வாழ்த்துக்கள்,பாஞ்ச்! 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்களுக்கு நன்றி புங்கையூரன்!! :D

 

'பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா!!' மனதில் பதிந்தது போன்று,

 

புகழ்ச்சி வரும்போது மயக்கம் கொள்வதில்லை எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஒரு சமாதானமும் மனதில் பதிந்துதான் உள்ளது.

 

ஆனாலும் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற செய்தியும், அடிமனதில் ஒளிந்துள்ளதை மறுக்க முடியாது!.

 

புங்கையூரனின் புகழ்ச்சி என்னை ஏணியில் ஏற்றிவிட்டதை மறுப்பதற்கில்லை!.

 

நானாக விழுகிறேனா! அல்லது யாராவது தள்ளிவிட விழுகிறேனா பார்க்கலாம்!!. :o

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக தொடருகிறது, வாழ்த்துக்கள் உறவுகளுக்கு. காதல்/சஸ்பென்ஸ்/த்ரில்லர் எல்ல்லாம் எதிர் பார்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுக்குள்ள சகோதரி நிலாமதியும் , பாஞ்சும் எழுதிவிட்டார்கள். நன்றாக உள்ளது ,ஆயினும் ஒரு சந்தேகம். நிலாமதியின் தொடர் கடைசிப் பந்தியில்  கொழும்பு செல்லும் மதுரன் அடுத்த தொடரில் திரும்பி வந்தது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நிறையச் சம்பவங்கள் வந்துவிட்டன, கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாமோ என நினைப்பு, :D

 

விமர்சிக்கிறது சுலபம்தான், எழுதினால்தான் அந்தக் கஸ்டம் புரியும்...! :)

கொழும்பு பயணம்தானே.. எத்தனை தரமும் போய் வரலாம்.. எனினும் நிலாமதி எழுதிய பயணமும், பஞ்ச் எழுதிய கொழும்புப் பயணமும் ஒரே பயணமா என்பது கேள்விக்குறி... ஒரே பயணம் எனில் பல சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதது.

 

எனினும் பஞ்ச் அவர்களுக்கும் பாராட்டுகள்!! 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&p=990841

 

வில்லன்  வந்தாச்சு..... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.