Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிகிறது : அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 
f0f1f5f15f15f.jpg
 
வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் இரத்தின சபாபதி பிரபாகனின் தரிசனம் நூல் வெளியீட்டுவிழா பேராசிரியர் சபாஜயராஜா தலைமையில் நேற்றைய தினம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. 
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் முதற்பிரதியை வெளியிட்டு வைத்தார். 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக இலங்கைக்கான பிரதி இந்தியத் தூதுவர் பீ.குமரன், முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழருவி சிவகுமாரன், விரிவுரையாளர் ஸ்ரீபிரசாந்தன் ஆகியேர் பங்கேற்றதோடு, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், வீரகேசரி நிறுவன ஊழியர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேற்றைய தினம்(சனிக்கிழமை) இந்நாட்டில் வெளியாகும் பிரபல சிங்கள நாளேட்டில் என் தொடர்பான கேலிச்சித்திரமென்று வெளியாகியிருந்தது. ஆதில் என்னுடன் இருக்கும் அமைச்சரவை சகபாடிக்கு ஜனாதிபதி சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயைத்திறக்க வேண்டும் எனக் கூறுகின்றார்.
 
பின்னர் அவர் என்னைப்பார்த்து சாப்பிடும் போது மாத்திரம் தான் வாயை திறக்கும் படி சொல்கின்றார். ஆகவே நாம் வாயைத்திறப்பதற்கு சங்கடப்படும் காலமாக இருக்கின்ற போதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் ஆசிரியர் தலையங்கங்களை வெளியிடும் இந்நிகழ்வில் தையிரியமாகப் பேசலாம். காரணம் எனது பேச்சில் இருக்கும் ஏதாவது ஒரு விடயத்தை பயன்படுத்தி ஆசிரியர் தலையங்கத்தை தீட்டினால் எனது தலையும் தப்பிக்கொள்ளும் என கருதுகின்றேன்.
 
சரியான விடயத்தை சரியான நேரத்திலேயே செய்தாகவேண்டும் பிழையான நேரத்தில் செய்யும் சரியான விடயமும் பிழையாகப் போய்விடும் என எமது தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவு என்பது சரியான விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் பிழையான நேரமென்பதால் அவ்வாறான பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை. நாம் கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவை எடுப்பதற்காக கட்சி மட்டங்களில் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருந்தபோது சம்பந்தன் அவர்கள் மு.கா. கிழக்கு தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டும் அவ்வாறில்லாது விட்டால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாக போய்விடும் என காட்டமான கருத்தை முன்வைத்திருந்தார். எனது கட்சி மட்டத்திலும் இது குறித்துப் பலர் வாதங்களை முன்வைத்திருந்தனர். என்னைப்பொறுத்தவரையில் அன்று நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் ஆட்சியமைத்திருக்கலாம். இருப்பினும் நாம் எடுத்த முடிவில் தூரநோக்கமொன்றிருந்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
 
தற்போது சர்வதேசம் பலவிடயங்களை கூறியிருக்கும் போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் அரசு தாமதப்படுத்துகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் மு.கா தனித்துப் போட்டியிட்டிருந்தால் அரசுக்கு வடமாகாணத்தை நடத்தும் துணிவு சிறிதளவிலும் வந்திருக்காது. அரசியலைப் பொறுத்தவரையில் ஆட்களை பறிப்பதென்பது அவ்வளவு கடினமான விடயமில்ல என்பதை அனைவரும் சூட்சுமமாக அறிவார்கள். மு.கா எடுக்கும் முடிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும். பல விடங்களை துணிகரமான பேசுவதற்கு சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையிலும் பட்டறிவைக் கொண்டவன் என்பதன் அடிப்டையிலும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படுவன் என்பதன் அடிப்படையிலும் முடிவுளை எடுக்க வேண்டியேற்பட்டது. தமிழ் முஸ்லிம் சமூங்களை தமிழ் பேசும் சமூகம் என்பதன் அடிப்படையில் எமது வருங்கால நகர்வுகள் அதற்கான சரியான சூழலில் அமையும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பதை சிவசிதம்பரத்தின் நினைவுப்பேருரையில் அன்றைய தினம் தெரிவித்திருந்தேன். தற்போது எம்மைச் சூழ நடக்கும் விடங்களை பார்க்கும் போது அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற என்பது தெளிவாகத் தெரின்றது.
 
அதேநேரம் நடக்கும் அநீதிகளை அரசுடன் இருக்கும் போது தடுப்பதற்கான அந்தஸ்தும் எமக்கு கிடைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பத்திரிகையாளர்களை குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தண்டிப்பதற்கான சட்டத்தினை தண்டனை சட்டக் கோவையில் இருந்து மிகுந்த கடினத்திற்கு மத்தியில் அகற்றியிருந்தோம். அதன் பின்னர் 2005 ஆண்டிலிருந்து 2007வரையிலான காலப்பகுதியில் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது அமைச்சர்கள் யாருமே எதிர்த்து கருத்து வெளியிட முடியாதிருந்த நிலையில் அமைச்சரவையில் நான் இருந்ததன் காரணத்தினால் அதனை தடுகக்க கூடியதாகவிருந்தது. அதேபோன்று 13ஆவது திருத்தச்சட்டத்திருத்தச்சட்தின் முக்கியமான விடயங்களை மாற்றுவதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெற முனைந்த போது எனது உத்தியோக ப+ர்வ வெளிநாட்டு விஜயத்தை இடைநடுவில் நிறைவு செய்து விட்டு நேரடியாக அமைச்சரவைக்குச் சென்று அதற்கெதிராக குரல்கொடுக்க நான் எடுத்த போராட்டத்தின் ஊடாக அதனை மீட்கக் கூடியதாக இருந்தது. அடுத்து மு.கா கிழக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சியில் இருந்த போது நாடுநகர அபிவிருத்திச் சட்டமூலத்தை கொண்டுவந்திருந்த நாம் உயர்நீதிமன்றதிற்கு சென்று வாதாடியிருந்தன் காரணத்தால் அனைத்து மாகாணசபைகளின் அங்கீகாரம் இல்லாது நிறைவேற்றமுடியாது என்ற நிலைமைக்குக் கொண்டுவந்திருந்தோம்.
 
தெற்கில் இருப்பவர்களுடன் முட்டி மோதிக்கொண்டு நாம் எமது நிலைப்பாடுகளை நிலை நிறுத்துவதற்கு போராடுவதைவிடவும் புரிந்துணர்வுடன் சிலவிடயங்களை சாதிப்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும். சமூகங்களுக்கிடையில் காணப்படும் துருவப்படுத்தலை எதிரொலியாக ஊடகங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தெற்கில் இருப்பவர்களின் மனப்பாங்கை வெல்வற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும். யுத்தத்திற்கு பின்னரான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதனை சாத்தியப்படுத்துவது குறித்து பரந்துபட்ட அறிவை வளர்க்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்தவேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையில் தீவிரமானவர்கள் இருதரப்பிலும் இருக்கின்ற நிலையில் நடுநிலையான தீர்வினை எடுப்பதற்கு எமது நிலைப்பாடுகளில் வெற்றி பெறுவதற்கு கடினமாக இருக்கின்ற போதும் அரசியல் ரீதியான இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன் என்றார்.
 
ஆட்சியாளர்கள் சங்கடத்திற்குள்ளாகும் விடயங்களை அடிக்கடிப் பேசுவதால் நாம் சங்கடத்திற்குள்ளாகும் நிலைமை அடிக்கடியேற்படுகின்றது. இந்த நாட்டின் சிவில் சமூகம் நல்லாட்சிக்கான விடங்களில் புத்தூக்கதோடு ஈடுபட வேண்டும் என எண்ணுகின்றார்கள். நல்லாட்சிக்கான விடங்கள் தொடர்பில் பல விடயங்கள் பேசப்படுவதுண்டு. ஏதிர்காலத்தில் நல்லாட்சிக்கான முக்கியதொரு அச்சாணியான விடயமொன்று நடைபெறவேண்டுமென்றால் தகவல் அறிவதற்கான சட்டமூமொன்ற இந்நாட்டில் வந்தாக வேண்டும். இந்தய விடயம் சிலரால் ஜீரணிக்க முடியாத விடயமாக இருக்கின்ற போதும் இதனை வலியுத்தும் அழுத்தமான சிவில் சமூக போராட்டமொன்று அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னெடுக்கும் போது ஆளும் தரப்பில் இருந்தாலும் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அச்சானியான இவ்விடயம் அவசரமாக செயற்படுத்த வேண்டியிருக்கின்றது என மேலும் குறிப்பிட்டார்.
 
வடமாகாண முதலமைச்சரின் நம்பிக்கை
 
இதேவேளை அமைச்சர் ஹக்கீமின் கூட்மைப்புடன் இணைவு தொடர்பிலான கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்படுகையில், எமது இரு கட்சிகளும் சேரப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் அந்நிலைமை ஏற்படுவதற்கான காலம் தென்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
 

http://virakesari.lk/?q=node/362191

ஆமாம் பங்கு போட வந்திடுவம்.

"அதேநேரம் நடக்கும் அநீதிகளை அரசுடன் இருக்கும் போது தடுப்பதற்கான அந்தஸ்தும் எமக்கு கிடைக்கின்றது. " 

இதுவரை என்னத்தை தடுததீர்கள். எத்தனை வருடமாக நீதி அமைச்சராக இருக்கிறீர். உமக்கு கீழை நடந்த அநீதிகள் எத்தனை?. இப்ப எங்களுக்கு கொன்சம் வந்தால் அதிலும் எங்களுக்கு பங்கு வேணும் என்று உங்கள் நகர்வுகள்.  :huh: 

கிழக்கு மாகாணசபை தேர்தலின் பின் ஆட்சியமைக்க போகும் போது த.தே.கூ ஆட்சியமைக்க பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டு கைத்தொலைபேசிகளை அணைத்துவிட்டு பின்கதவால் அரசாங்கத்துடன் ஒட்டியவருக்கு இப்போ என்ன ஆடு நனையுதுன்னு கவலை! <_<

பொடுகு பல சேனைக்கு இந்த செய்தி வர பிரசாதம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே.  தமிழர்களுக்கு மதிகெட்டுப் போனாலொழிய இஸ்லாமியகளுடன் அரசியல் ரீதியில் இணைய மாட்டார்கள்.  தயவு செய்து அவர்களை நம்பி அவர்களுடன் எந்தவித கூட்டுச் சேரலையும் தமிழர்கள் செய்யக்கூடாது.  இது வரலாறு நமக்குப் புகட்டிய பாடம்.  செத்துப் போறவனுக்கு மருந்து பலியாது கெட்டுப் போறவனுக்குப் புத்தி பலியாது என்பார்கள்.  தமிழர்களை வஞசிக்கத் தருணம் பார்த்து இருக்கும் இவர்களிடம் ஏமாறாமல் நமது பாட்டில் நமது அரசியலைக் கொண்டு செல்லவேண்டும். கிழக்கு மாகாணசபையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகும்போது அதில் தமிழர்கள் இணைந்து கொள்ளாமலிருப்பதைத் தடுக்க இந்த நயவஞ்சக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  பிளீஸ் கவனம்.  நம் வழி தனிவழியாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"சரியான விடயத்தை சரியான நேரத்திலேயே செய்தாகவேண்டும் பிழையான நேரத்தில் செய்யும் சரியான விடயமும் பிழையாகப் போய்விடும் ..... கடந்த காலங்களில் பிழையான நேரமென்பதால் அவ்வாறான பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை ...." அடே அடங்கமாட்டேன் எங்கிரானே இந்த பயல். உங்களோடை இணையிரதுக்கு இப்ப எங்களுக்கு சரியான காலமில்லையின்னு நாங்க திருப்பி சொன்னா எப்பிடியிருக்கும் உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நரி சுயநலத்தோடும்

வேறு ஒருவரை  தன் வழிக்கு கொண்டுவரவும்

எல்லாவற்றையும்  இழந்து நிற்கும் எம்மை  பாவிக்கப்பார்க்கிறது

 

ஆனாலும்  எமக்கும் வேறு வழியில்லை

இதை  எப்படி   நாம் பாவித்துக்கொள்ளலாம்

என்பதை ஆராய்வதே புத்திசாலித்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம உள்ள எடுத்த ஹக்கீமுக்கு எதிரான முஸ்லீம்கள்.. கூட்டமைப்பை எதிர்ப்பார்க்கள். முஸ்லீம்கள் கூட்டாக எல்லோரும் சேர்ந்து கூட்டமைப்பில் இணைய வந்தால் மட்டுமே இதனை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். அதுவும் ஒரு சரியான புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நரி சுயநலத்தோடும்

வேறு ஒருவரை  தன் வழிக்கு கொண்டுவரவும்

எல்லாவற்றையும்  இழந்து நிற்கும் எம்மை  பாவிக்கப்பார்க்கிறது

 

ஆனாலும்  எமக்கும் வேறு வழியில்லை

இதை  எப்படி   நாம் பாவித்துக்கொள்ளலாம்

என்பதை ஆராய்வதே புத்திசாலித்தனம்

 

ஹக்கீம உள்ள எடுத்த ஹக்கீமுக்கு எதிரான முஸ்லீம்கள்.. கூட்டமைப்பை எதிர்ப்பார்க்கள். முஸ்லீம்கள் கூட்டாக எல்லோரும் சேர்ந்து கூட்டமைப்பில் இணைய வந்தால் மட்டுமே இதனை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். அதுவும் ஒரு சரியான புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ்.

 

நல்லதே நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனங்கள் தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இணைவது எங்களுக்கு ஒரு வகையில் பலன் தான். ஆனால் அதில் மேலாதிக்கத்தை இவரைச் செலுத்த அனுமதித்தோம் என்றால் அது பாதையைத் திசை திருப்ப வைக்கும். அது குறித்துத் தமிழ்க்கூட்டமைப்பு அவதானமாக இருத்தல் நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம்

Boss கொஞ்சம் அவசரப்பட்டு நவநீதம் பிள்ளையிடம் ஒரு Report கொடுத்துபோட்டார் அதனால உயர் பீடம் அண்ணனிட்ட செம கான்ட்டு , தப்பி தவறி கட்ச்சிய விட்டு அடித்து துரத்தினால் தலைவருக்கு போக இடமும் இல்லை செய்ய வேலையும் இல்லை .

அதான் Lite ஆ நூல் விடுறாரு.

சார் எஜமானின் எலும்பை நக்கி தின்றால் மட்டும் போதாது எஜமான் செமையாக தந்தால் அதையும் வாங்கத்தான் வேண்டும். 

 

நமக்கு பட்டும் புத்தி வரவில்லை என்றால் தந்தை செல்வா சொன்னது போல தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது .

 

தூரத்தில்

-------------

 

போங்கப்பா போய் புள்ள குட்டிங்கள படிக்கவைங்கப்பா  

Edited by நிழலி
வசை நீக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்துடன் டீல் சரிவந்தவுடன் கனிந்த பழம் அழுகிவிடும். தமிழ் மக்களின் போராட்டத்தின் மூலம் அவர்களுக்கு சிறிய நன்மை கிடைக்கபோகிறது என்று சிறிய நம்பிக்கை  அல்லது சிறிய ஒளிக்கீற்று தெரிந்தால் அழுகிய பழம் மீண்டும் கனித்துவிடும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்..! நோகுறது மட்டும் தான் நாங்கள்! தூரத்தில நொங்கு தெரிஞ்சால் தின்ன நீங்களும் வாங்கோ! :lol:

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-03-03-2014.jpg


துரத்தி போட்டார்களோ 

  • கருத்துக்கள உறவுகள்

"ஹக்கீம உள்ள எடுத்த ஹக்கீமுக்கு எதிரான முஸ்லீம்கள்.. கூட்டமைப்பை எதிர்ப்பார்க்கள். முஸ்லீம்கள் கூட்டாக எல்லோரும் சேர்ந்து கூட்டமைப்பில் இணைய வந்தால் மட்டுமே இதனை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். அதுவும் ஒரு சரியான புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ்" அடிப்படையில் சரிதான். ஆனால் தமிழனுக்கு இதிலும் நிச்சயமாக சாட்டையடித்தான் கிடைக்கும் ஆகவே எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. தமிழருக்கு போல் இல்லாமல் முஸ்லிம்களுக்கு ஓன்று விட்டால் இன்னுமொன்று எப்போதும் உண்டு. இனரீதியான சில விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.