Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் பிரசாரங்களில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நரேந்திர மோடி! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரசாரங்களில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நரேந்திர மோடி! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறுகிறது. 

[sunday, 2014-04-20 10:20:44]
narendra-modi-200414-150.jpg

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின் போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிஐ, த ஹிந்து போன்ற பத்திரிகைகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் எதிர்வுகூறியுள்ளது.

  

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைந்தால் அயல்நாடுகளான இலங்கை, மலேசியா, பிஜி ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இந்திய முன்னுரிமை வழங்கும் என்று நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதை அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் குறித்தும் குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் படையினரால் தாக்கப்படுவது குறித்தும் மோடி தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்வதற்கு மத்திய காங்கிரஸ் நிர்வாகத்தின் உரிய செயற் திறனின்மையே காரணம் என்று மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் அதிகாரப் பரவாலாக்கத்தின் அவசியம் குறித்து பாரதீய ஜனதா கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளமையையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

http://seithy.info/breifNews.php?newsID=107769&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இவர்களைப் பேச வைக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் தமிழகத்தின் செயற்பாட்டாளர்கள்தான்.

இசை யார் பேச வைப்பது என்பது இங்கு பிரச்சினை இல்லை. பேசுவதை அவர் செயற்படுத்தி ஈழத்தமிழர்கள் கெளரவமாக வாழ நீதியான அரசியல் தீர்வுக்கு உதவி செய்ய வேண்டும். அதை செயற்படுத்தும் பலம் அவருக்கு இருக்க வேண்டும் அதற்கு அவரை தயிர்சாத புளியோதரைக் கும்பல் அனுமதிக்க வேண்டும். அங்கு தான் பிரச்சனை உள்ளது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இவர்களைப் பேச வைக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் தமிழகத்தின் செயற்பாட்டாளர்கள்தான்.

 

தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் இவர்கள் எப்படி தொப்பிபிரட்டுவார்களென புரியும். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை முழுமையாக நம்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் இவர்கள் எப்படி தொப்பிபிரட்டுவார்களென புரியும். :)

செயற்பாட்டாளர்கள் என்று நான் குறிப்பிட்டது நெடுமாறன் ஐயா, வைகோ அண்ணன், சீமான் போன்றவர்களை மட்டுமே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மோடி கை தேர்ந்த அரசியல் வாதி. தமிழ் மக்களின் வாக்கை பெற இப்படி பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார்.

காங்கிரஸ்  இல்லாம போறதே நல்லது.  இவருக்கும் கடிவாளம் தான்  கூட்டு ஆட்சி தான். இந்தியா உருப்பட்ட  மாதிரிதான்.  

மோடி வந்து ஒரு ********  ************* மாட்டார். இப்பிடி பலர் வந்து போயாச்சு அந்த வரிசையில் மோடியும் ஒன்று. இந்தியாவில் ஆட்சியமைக்க அவருக்கு முதலில் பெரும்பான்மை வேண்டும்.

Edited by nunavilan

தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு ஓரளவு ஆசனங்கள் கிடைக்கும் என்றால் நிச்சியம் மோடியிடம் இருந்து நன்மைகள் எதிர்பார்க்கலாம்.
 
ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் பா.ஜ.க ஆட்சி சிங்களவருக்கு சார்பாக இருக்காது.

இப்படி இவர்களைப் பேச வைக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் தமிழகத்தின் செயற்பாட்டாளர்கள்தான்.

 

இதற்காகவாவது வைகோவை பாராட்டலாம் தானே....அவர் இவருன் சேராவிட்டால் இவர் அப்படி கதைதிருப்பாரா?

தமிழரின் தேவைகளை தமிழ் MP களே முன்னெடுக்க வேண்டும்....ஆனால் தமிழ்MP கள் ஊழழில் கொழுப்பதால்...ஒன்றும் செய்ய முடிவதில்லை........அதிதேவையான ரயில் போக்குவரத்துகளையே முறையாக தமிழ்நாட்டு மக்களுக்கு செயல்படுத்த முடிவதில்லை....இவ்வளவிற்கும் தென்னக ரயில்வே லாபத்தில் செயல் பட முடியும்....மற்ற மாகாணங்களை போலல்லாமல்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.