Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுரமான மனிதஉரிமை மீறல்களை அறிக்கையிட்டதனால் யாழில் படுகொலை செய்யப்பட்ட ரஜிவர்மன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:-

rajivarmen%20funeral_CI.jpg

ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான குறிப்பினையும் சில நிபுடங்களுக்குள்; இணையத்தளத்தின் பிரசுரிப்பிற்காக வழங்க வேண்டியதோர் நிலையில் இக் கட்டுரை எழுதப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் போக்குவரத்துக்கள் முழுமையாக அற்றுப்போய் இருந்த சூழ்நிலையில் குடாநாடு முழுமையாக அவல நகரமாக மாறியிருந்தது. இக் காலப்பகுதியில் பணியைத் தொடர்ந்த இளம் துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்களில் செல்வராஜா ரஜிவர்மன் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். அரசு - புலிகள் சமாதான உடன்பாடு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தரத்தினை கற்றுவிட்டு தன்னை யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டத்திற்கான வெளிவாரி மாணவனாப் பதிவு செய்வு கொண்டு, சமகாலப்பகுதியில் புதிதாக யாழ் குடாநாட்டில் அரம்பிக்கப்பட்ட நமது ஈழநாடு பத்திரிகையில் தன்னை ஓர் அலுவலகச் செய்தியாளராக இணைத்து தனது ஊடகப் பணியை ரஜிவர்மன் ஆரம்பித்தான்.

இயல்பாகவே அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகக் தளராது செயற்பட வேண்டு என்று அவனுக்குள் இருந்த போராட்ட சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் தளமாகவே ஊடகத்துறை அமைந்தது. நமது ஈழநாடு பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராக இணைந்து கொண்ட அவனுக்கு காத்திரமான ஊடகப் பணியை நமது ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ராதேயன் மற்றும் செய்தி ஆசிரியர் கண்ணன் ஆகியோர் கற்றுக்கொடுத்தனர். அந் நிறுவனத்தின் சார்பாக அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள், மனித உரிமைமீறலகள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள்,கடத்தல்கள்; சார்ந்த செய்தியைத் திரட்டும் பணியை முழுநேரமாக ரஜிவர்மன ஏற்றுக்கொண்டு திறன்பட மேற்கொண்டான். பின்னர் அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடம் அவனுக்கு உள்ளுர் செய்தி பக்கம் ஒன்றினை கவனிக்கும் பொறுப்பினைக் கையளித்திருந்தது.

அவ்வாறு கையளித்து பணியாற்றி வந்த காலப்பகுதியில் நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சிவமகாராஜா சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டமையினைத் தொடர்ந்து அப் பத்திரிகை பிரசுரங்கள் முடங்கிப்போக தொழிலை இழக்கும் நிலைக்குச் செல்லும் நிலைமையினை செல்வராஜா ரஜிவர்மன் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. யாழ் குடாநாட்டில் ஊடகப் பணி என்பது மிகுந்த அச்சுறுத்தலுக்கான ஒன்றாக அமைந்த நிலையில்  பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் அனேகர் வீடுகளுக்குள் முடங்கிப்போகவும் பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்கும் நாட்டின் தென்பகுதிக்கும் செல்லவும் வேண்டியதாக நிலைமைகள் மோசமடைந்திருந்தன.

குடாநாட்டில் பத்திரிகை நிறுவனங்களுக்கான அச்சுத்தாள் மற்றும் ஏனைய மூலப்பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன. குடாநாட்டில் பத்திரிகைகள் இரண்டு பக்கங்களில் வெளிவரவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருந்தன. அப் பிரசுரங்களும் அச்சுத்தாள் கையிருப்பு உள்ளவரையே என்ற நிலைமை காணப்பட்டது. இவ்வாறானதோர் உத்தியோகபூர்வ ஊடக அடக்குமுறை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் துணிச்சலுடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளன் செல்வராஜா ரஜிவர்மன் தனது தொழிலைக் கைவிட எண்ணாது இயங்கினன். பல தடவைகள் வெளிப்படையாகவே, 'சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களை எப்படியெல்லாம் கடத்துகின்றார்கள்! மிரட்டுகின்றார்கள்! கொல்கின்றனர்! இவற்றினை எல்லாம் வெளியுலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இருக்கின்ற எமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்' என அவன் சம்பாசிக்க அவனது நண்பர்கள் கேட்டிருக்கின்றனர்;.

இவ்வாறாக ஓர் உணர்வுள்ள பத்திரிகையாளன், நமது ஈழநாடு பத்திரிகை செயலிழந்து போக சிறிது நாட்கள் யாழ் தினக்குரலிலும் பின்னர் தனது அடுத்த கட்ட ஊடக பயணத்திற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையினைத் தெரிவு செய்து கொண்டான். அந் நிறுவனத்தின் வரையரைக்கு இணங்க சென்றவுடன் அலுவலகச் செய்தியாளன் ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தான். அங்கு அச் சமயத்தில் அலுவலகத்தினை விட்டு வெளியில் செல்ல முடியாத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியில் சென்று செய்தி சேகரித்து வரும் இளம் துடிப்புள்ள பத்திரிகையாளனாக ரஜிவர்மன் பணியாற்றினான். உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காணமயில்நாதன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தற்போது இலங்கையில் இருந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பத்திரிகையாளர் குகநாதனின் வழிநடத்தலில் பணியாற்றும் இளம் பத்திரிகையாளனாக செல்வராஜா ரஜிவர்மன் பணியைத் தொடர்ந்தான்.

யாழ் குடாநாடு மயான தேசமாக அவலங்களின் வலயமாக எங்கும் எப்போதும் எதுவும் மனிதர்களுக்கு நடக்கலாம் என அச்சுறுத்தலான காலப்பகுதியில் தனது இரவு நேர பத்திரிகை அலுவலக கடமையினை முடித்துக்கொண்டு தன்னிடம் சொந்த சொத்து என இருந்த துருப்பிடித்து பல இடங்களில் உக்கிப்போன துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த சமயத்திலேயே பத்திரிகையாளன் செல்வராஜா ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டான்.  யாழ்ப்பாணம் நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்த ஸ்டான்லி வீதியின் முடிவில் அதாவது இராசாவின் தோட்டத்திற்குத் திரும்பும் இடத்தில் வைத்து அவனை துவிச்சக்கர வண்டியில் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் சுட்டுப்படுகொலை செய்தனர். அவ்வாறு சுட்டுப் படுகொலை செய்த இடத்திற்கு மிகச் மிகச்  சமீபமாக இராணுவ நிலையங்களும்; கடமையில் ஏராளமான இராணுவத்தினரும் இருந்திருந்தனர். நிலைமைகள் இவ்வாறிருக்க பத்திரிகையாளனை படுகொலை செய்தவர்கள் படுகொலையினை அடுத்து சகஜமாக  செல்வதற்குச் சந்தர்ப்பம் இருந்துள்ளது. 

இயல்பாகவே யுத்த அவலங்கள் காரணமாக குடும்ப வறுமையால் பத்திரிகையாளர் ரஜிவர்மன் பாதிக்கப்பட்டிருந்தான். எனினும் அவனது வீட்டுக் கஸ்டங்கள் ஒரு போதும் பகிரப்பட்டவையாக இருக்கவில்லை. மக்களின் அவலங்களை எழுதும் உச்சரிக்கும் ஒருவனாகவே அவன் இருந்தான். அவனது வருமானத்தில் தான் குடும்பம் இயங்கியது. வீட்டுக் கஸ்டங்களை கருத்தில் கொண்டு வேறு எதாவது மேலும் வருமானம் தரும் தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனைகூட அவனிடம் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஊடக நிறுவனங்களில் கிடைக்கும் குறைந்தளவு வருமானத்துடன் வாழ்வோம். கஸ்டங்களை பொருத்துக்கொள்வோம் என வாழ்ந்த ஒருவனாகவே அவன் இருந்தது அவனது மரணத்தில்; தான் தெரிய வந்தது. இறுதிக் கிரியைகள் மற்றும் அவனது பூதவுடலை கொண்டு செல்வதற்கான பிரேதப் பெட்டியைக் கூட கொள்வனவு செய்ய ஏற்றவாறு அவனால் தன் ஊடகப் பணி மூலம் பொருளாதாரத்தினை ஈட்டியிருக்க முடியவில்லை. ஊடக சமூகமே இறுதிக் கிரியைக்கு பண உதவி நல்கின. ஆனால் தன்னுடன் தனது மக்களையும் சமூகத்தினையும் இணைத்த ஓர் பத்தரிகையாளனாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினான். இதனை நேரடியாகவே இறுதி அஞ்சலி நிகழ்வில் கண்டுகொள்ள முடிந்தது.

மிகவும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியைச் செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வில் அன்றைய வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதியும் தற்போதைய யாழ் ஊடக அமையத்தின் ஆலோசகருமான பத்திரிகையாளர் இரட்ணம் தயாபரன் ரஜிவர்மன் விட்டுச் சென்ற பணியை எமது மக்கள் சந்ததி சந்ததியாக முன்னெடுப்பர் என உறுதியுரையாற்றினார். உண்மையிலேயே இலங்கையில் எங்கும் இல்லாத அளவில் குடாநாட்டில் ஓர் இளம் ஊடக அணியொன்று எப்போதும் இடையூறுகளை பொருட்படுத்தாது கடமையினை தொடர்கின்றது. அவ் அணி வருமானம், நேரம், காலம், பாதுகாப்பு என்ற விடயங்கள் பற்றி தமது பணியில் கருத்தில் கொள்ளாதே இயங்குகின்றது. இவைகள் அனைத்தும் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் விட்டுச் சென்ற தடங்களின் வழிநடத்தலா எனக் கூட என்னத் தோன்றுகின்றது.

பத்திரிகையாளர் ரஜிவர்மனின் படுகொலையைச் செய்தவர்களின் நோக்கம் தனியே ஓர் உயிரை மடடும் பழி எடுப்பதல்ல. மாறாக தமிழ் மக்களின் அவலங்களைக் கூறும் ஊடகப் பணியை யார் தொடர்கின்றீரோ அவர்களுக்கு மரணம் பரிசு எனக் கூறும் மிலேச்சமாகும். படுகொலையாளர்கள் ரஜிவர்மன் என்ற பத்திரிகையாளனைக் கொன்றதன் மூலம் மனித உரிமை, மக்களின் உயிர்வாழும் உரிமை தொடர்பில் நடைபெற்ற கொடூரங்களை வெளியுலகிற்குச் சொல்வதில் இருந்து பலரை மிரட்டி உறங்கவைத்தனர். எனினும் ஏதே ஒருவகையில் பலரும் மக்களின் மீதான அடாவடித்தனங்கள் குறித்து வெளிக்கொண்டே வந்தனர். பத்திரிகையாளர் ரஜிவர்மனின் படுகொலை ஜனநாயகத்தின் மீதான படுகொலை. மக்களின் அவலங்களைச் சொன்னதனால் நிகழ்ந்த படுகொலை

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106244/language/ta-IN/article.aspx

2009 காலப் பகுதியில் வன்னியில் பேரழிவு இடம்பெற்ற காலகட்டத்தில் அவற்றிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஏன் எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை என்று கேட்பவர்கள் அன்று யாழ் குடா நாட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்ததென்று ஞாபகம் மீட்ட இந்த செய்தி/அஞ்சலிக் குறிப்பு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு எனது இதய அஞ்சலிகள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அகவணக்கங்கள்..!

2009 காலப் பகுதியில் வன்னியில் பேரழிவு இடம்பெற்ற காலகட்டத்தில் அவற்றிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஏன் எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை என்று கேட்பவர்கள் அன்று யாழ் குடா நாட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்ததென்று ஞாபகம் மீட்ட இந்த செய்தி/அஞ்சலிக் குறிப்பு உதவும்.

இப்படி பட்ட சிந்தனை இருந்தால் போராட்டமே தொடங்கியிருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அகவணக்கங்கள்..! 

இப்படி பட்ட சிந்தனை இருந்தால் போராட்டமே தொடங்கியிருக்கக்கூடாது.

இதற்கு உங்களுக்கு காத்திரமான பதில் கொடுக்க முடியும். ஆனால் நாம் வழங்கும் பதில்களில் உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்வதில்லை என்பதால் தவிர்த்து விடுகின்றேன்.

இதுவரை எவர் கேட்ட கேள்விக்கு நான் பதில் அழிக்கவில்லை .(பலர் விழுந்த கூழ் பானைக்குள் நீங்களும் விழுந்துள்ளீர்கள் )

யாழ் உங்கள் இணையம் நீங்கள் விரும்பியது தான் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.அனைத்து ஊடகங்களும் அதைதான் அநேகம் செய்கின்றன .(சிங்களவனும் அதைதான் செய்தான் புலிகளும் அதைத்தான் செய்தார்கள் )

நீங்கள் சொல்வது சரியாயின் சிறிலங்கா அரசு செய்த இன்பம் செல்வம் கொலையுடன் எமது போராட்டம் முடிந்திருக்கும் .ஆனால் அது இன்னமும் பலரை போரட்டத்தில் சேர வழிவகுத்தது .முள்ளிவாய்கால் போர் நடந்த காலத்தில் சேர்ந்தவனே விட்டு விட்டு ஓடும் நிலை .உங்கள் வசதிக்கு ஏற்ப யாழில் எழுதி பச்சை எடுக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல .

2007 ஆண்டு நடந்த ஒரு ஊடகவியலாளர் கொலையையும் 2009  நடந்த முள்ளிவாய்காலையும் எப்படி ஒப்பிடீர்கள் என்று விளங்கவே இல்லை .

புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினரை புளொட் கொல்ல தேடியது புலி கொல்ல தேடியது இலங்கை இந்தியன் ஆமியும் கொல்ல தேடியது இருந்தாலும் தீப்பொறி அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தது .பலர் கொலை செய்யபட்டும் இருந்தார்கள் .யாழ் பல்கலைகழக மாணவர் தலைவர்களை புலிகள் கொலை செய்துகொண்டிருந்த போது தொடர்ந்து நியாயத்திற்காக பலர் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் )

புலிகள் ஆரம்பத்தில் இருந்தே இப்படியான போராடத்திற்கு ஒரு பொழுதும் மக்களை தயார் படுத்தவில்லை .அதைவிட என்பது தொண்ணுறுகளில் களில் இருந்த நிலையில் மக்களும் இல்லை .

Edited by arjun

இலங்கையை விட்டு வெள்ளையன் வெளியேறியதில் இருந்து நடந்த ஒரு இனத்தின் விடுதலை போரை யும் 
பின் சிங்க பேரின வாதத்தின் இராணுவ பேய் தமிழ் மக்களை எவ்வாறு நசுக்கியது என்பதையும் 
இவளவு விளக்கமாக வேறு யாராலும் எழுதமுடியுமா ?
என்று கேட்டால் நான் இல்லை என்றே அடித்து கூறுவேன்.
 
இதுக்கு பிறகும் ..............
 
கேள்விகளை கேட்கட்டாம்.
  • கருத்துக்கள உறவுகள்

2009 காலப் பகுதியில் வன்னியில் பேரழிவு இடம்பெற்ற காலகட்டத்தில் அவற்றிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஏன் எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை என்று கேட்பவர்கள் அன்று யாழ் குடா நாட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்ததென்று ஞாபகம் மீட்ட இந்த செய்தி/அஞ்சலிக் குறிப்பு உதவும்.

மக்கள் ஏன் ஒன்றாக இணைந்து ஏன் போராடவில்லை என்று கேட்டதையும், தனி ஒரு ஊடகவியலாளார் 2007 மரணமானதையும் ஒப்பிட்டு பார்த்து எழுதியுள்ளார்.இதில வேற அவர் ஊடகவியலாளாராம்[நிழலி]...நிழலியும்,இவரை மாதிரி புலி வேசம் போடுறாக்கள் எல்லோரும் இப்படித் தான்.புலி மட்டும் போராட வேண்டும்.மற்றவர் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். அப்படி நின்று வேடிக்கை பார்த்து 30 வருசப் போராட்டத்தை அடியோட அழித்தீர்கள்.எழுதின கருத்தை கூட அந்தத் திரியில் எழுத முடியாமல் இன்னொரு திரியில் வந்து எழுதியிருக்கார்.

சிங்களவன் அழித்தான்,உலக நாடுகள் சேர்ந்து அழித்தன,இந்தியா பழி வாங்கியது எல்லாம் இரண்டாவது விடயம்.மாற்று இயக்கங்கள் 5% உம் வராது.எங்கட போராட்டம் அழிந்ததற்கு முதற் காரணம் புலிகள் மட்டும் போராடினால் காணும் பின்னால் இருந்து பக்க பாட்டு பாடினால் போதும்என நினைக்கும்,இன்னும் அழிந்த பின்னும் பக்கப் பாட்டு பாடிக் கொண்டு இருக்கும் உங்கள மாதிரி ஆட்களால் தான்

இப்படி  சொல்வதும் ரதிதான்....

ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன.மனிதன் ஒருவன் அதைப் பார்தான்.துப்பாகியால் அதைச் சுட்டான்.உடனே 5 பறவைகள் பறந்து விட்டன.ஆனால் ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.

ஏன்?

ஏன்?

ஏன்?

கொழுப்பு...

உன்னை மாதிரியே!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110379&page=13

மக்கள் ஏன் ஒன்றாக இணைந்து ஏன் போராடவில்லை என்று கேட்டதையும், தனி ஒரு ஊடகவியலாளார் 2007 மரணமானதையும் ஒப்பிட்டு பார்த்து எழுதியுள்ளார்.இதில வேற அவர் ஊடகவியலாளாராம்[நிழலி]...நிழலியும்,இவரை மாதிரி புலி வேசம் போடுறாக்கள் எல்லோரும் இப்படித் தான்.புலி மட்டும் போராட வேண்டும்.மற்றவர் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும். அப்படி நின்று வேடிக்கை பார்த்து 30 வருசப் போராட்டத்தை அடியோட அழித்தீர்கள்.எழுதின கருத்தை கூட அந்தத் திரியில் எழுத முடியாமல் இன்னொரு திரியில் வந்து எழுதியிருக்கார்.

உங்கள் பதில் எனக்கு ஆச்சரியத்தினைத் தரவில்லை. ஏனென்றால் வழக்கம் போல எதனையும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத உங்கள் இயல்பு இதிலும் தெரிகின்றது.

தனித்த ஒரு ஊடகவியலாளர் கொலையான விடயத்தினை வைத்து மக்கள் இணைந்து போராடவில்லை என்று எங்கு எழுதியுள்ளேன்?

2005 இன் இறுதிக்காலத்தில் இருந்து 2009 இன் தொடக்கம் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் / வடக்கில்  ஏராளமானவர்கள் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தனர். இவர்களில் அநேகர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், முக்கியமாக பொங்கு தமிழ் நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், விழிப்புக் குழுத் தலைவர்கள், புலிகள் யாழில் அரசியல் அலுவலகம் திறந்து களப்பணி செய்த போது இணைந்து செயற்பட்டவர்கள், பாடசாலைகளில் மாணவர்களை இணைத்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்று ஏராளமானோர் 19 மாதங்களுக்குள் கண்டபடி சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இதில் ஆலய குருக்கள் கூட விட்டுவைக்கப்பட வில்லை, இவற்றை விட ஏராளமான அப்பாவி இளைஞர்கள் காரணமின்றி காணாமல் போனார்கள் (தென்மராட்சியில் தொண்டு செய்ய இரவில் கோயிலில் நின்ற 10 இற்கும் மேற்பட்ட பதின்ம வயது இளைஞர்கள் உட்பட)

மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர்கள், மனிதவுரிமையாளர்கள், துணிச்சலான பத்திரிகையாளர்கள் என்று அனைவரையும் கூடியவரைக்கும் துடைத்து அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இராணுவப் புலநாய்வுக் குழு மிக மோசமாக இயங்கிய காலம் அது. ஒரு மிகப் பெரிய அழித்தொழிப்பு நடவடிக்கை வன்னியில் இறுதியாக மேற்கொள்ளும் போது அதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தக் கூடிய  முதலாம் மட்டத்தில் உள்ளவர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், மிச்சம் இருப்பவர்களை அந்தக் கொலைகள் மூலம் அச்சுறுத்தியும் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

தற்காலிக சமாதான காலத்திற்கு முன்பாக இடம்பெற்ற இறுதி இராணுவ நடவடிக்கையான தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் போது பளையில் நிர்க்கதியாகி நின்ற மக்களை மீட்க யாழ்ப்பாண மக்கள் தீவிரமாக போராடியது போன்று இன்னொரு முறை நிகழக் கூடாது என்ற நோக்கில் இலங்கை இராணுவமும் அரசும் அன்று 2005 இல் இருந்து 2009 வருட தொடக்கம் வரைக்கும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தது.

ஈற்றில் 2009 இல்  வன்னியில் அழித்தொழிப்பு படுகொலைகள் இடம்பெற்ற போது மக்களை ஒன்று திரட்டி போராடக் கூடியவர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. அப்படி இருக்கக் கூடியவர்களும் கூட இடம்பெற்ற மோசமான படுகொலைகளின் அதிர்ச்சியினால் உறைந்து போயிருந்தனர்.

எந்த தேசத்திலும், இவ்வாறான ஒரு மோசமான அச்சுறுத்தலை எதிர்நோக்கிய மக்கள் தம்மை அதனூடாக தம்மை நிலை நிறுத்தி மீண்டும் ஒன்றிணைந்து போராட வெளிக்கிடுவதற்கு ஒரு கால அவசாகம் தேவைப்படும். இந்த கால அவசாகத்திற்குள் தான் வன்னி அழித்தொழிப்பு இடம்பெற்றது.

****

இங்கு ஊடகவியலாளர் ரஜிவர்மனின் கொலை ஒரு தனித்த கொலை அல்ல. நன்கு திட்டமிட்ட படுகொலை அரசியலின் ஒரு அங்கம். இந்த கட்டுரையில் கூட அன்று எத்தகையக சூழல் இருந்தது என்று மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இக் கொலையை ஒரு தனித்த ஊடகவியலாளரின் கொலை என்று மட்டம் கட்டும் அளவுக்குத் தான் உங்கள் அரசியல் அறிவு இருக்கின்றது.

எழுதின கருத்தை கூட அந்தத் திரியில் எழுத முடியாமல் இன்னொரு திரியில் வந்து எழுதியிருக்கார்.

இதன் அர்த்தம் என்ன? எந்த திரியில் எழுதின கருத்தினை இங்கு வந்து ஒட்டியுள்ளேன்?

எங்கட போராட்டம் அழிந்ததற்கு முதற் காரணம் புலிகள் மட்டும் போராடினால் காணும் பின்னால் இருந்து பக்க பாட்டு பாடினால் போதும்என நினைக்கும்,இன்னும் அழிந்த பின்னும் பக்கப் பாட்டு பாடிக் கொண்டு இருக்கும் உங்கள மாதிரி ஆட்களால் தான்

இதைச் சொல்ல உங்களுக்கு இருக்கும் அருகதை என்ன?

எத்தனை மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளீர்கள்? ஊடகங்களிலாவது போராட்டம் பற்றி தெளிவான கட்டுரைகளை எழுதியுள்ளீர்களா? புலம்பெயர்ந்த பின்பும் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு மக்கள் விடுதலைக்காக எந்தளவுக்கு உழைத்துள்ளீர்கள்? புலிகள் அழிந்து போன இந்த 5 வருடங்களில், புலிகள் இல்லாமல் அவர்களுக்கு பக்கப் பாட்டு பாடுகின்றவர்களின் குரல்களும் செயல் இழந்து போய்க் கொண்டு இருக்கும் இந்த 5 வருடங்களில் அங்குள்ள மக்களின் விடிவிற்காக என்ன செய்தீர்கள்? சரி புலிகளாலும் அவர்களுக்கு பக்கப் பாட்டு பாடுகின்றவர்களாலும் தான் மக்கள் அழிந்தனர் என்று சொல்லும் நீங்கள் இந்த 5 வருடங்களில் இனியும் மக்கள் அழியக் கூடாது என்ற நோக்கத்திற்காக என்ன என்ன விடயங்களை செய்தீர்கள்?  ஒரு நிரந்தர அரசியல் தீர்வொன்றே மக்களின் அழிவை தடுக்கும் எனும் போது இந்த 5 வருடங்களில் அதற்காக  என்ன செய்தீர்கள்?

மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் உங்களிடம் நான் கேட்ட இக் கேள்விகளுக்கு பதில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

2007 ஆண்டு நடந்த ஒரு ஊடகவியலாளர் கொலையையும் 2009  நடந்த முள்ளிவாய்காலையும் எப்படி ஒப்பிடீர்கள் என்று விளங்கவே இல்லை .

ரதிக்கு எழுதிய பதிலை வாசிக்கவும். உங்கள் கேள்விக்கான விடையும் அதில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நிழலி

 "ஈற்றில் 2009 இல்  வன்னியில் அழித்தொழிப்பு படுகொலைகள் இடம்பெற்ற போது மக்களை ஒன்று திரட்டி போராடக் கூடியவர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. அப்படி இருக்கக் கூடியவர்களும் கூட இடம்பெற்ற மோசமான படுகொலைகளின் அதிர்ச்சியினால் உறைந்து போயிருந்தனர்"

2009  மேயில மட்டும்  கணக்கா உறைஞ்சு போச்சினம் . :icon_mrgreen:

முள்ளிவாய்கால் முடிவு 2008 இல் நடந்திருந்தால் கதையே வேறு யாழ்பாணம்  பொங்கி இருக்கும் .

(அதுக்கு முதலும் பல தடவைகள் வீதிக்கு வந்து போராடினார்கள் கடைசியாக இப்போ டேவிட் கமரூன் வந்தபோதும் வீதிக்கு வந்தார்கள் இடையில உறைஞ்சினம் பாருங்கோ அங்குதான் நாங்கள் நிற்கின்றம் )

ரொம்ப  சுத்தம்

டேவிட்  கமரோன் வந்தபோது என்ன  பாதுகாப்பு இருந்தது என்பதைக்கூட  தெரியாத சூனியமா?

புலிக்காய்ச்சலா??

 "ஈற்றில் 2009 இல்  வன்னியில் அழித்தொழிப்பு படுகொலைகள் இடம்பெற்ற போது மக்களை ஒன்று திரட்டி போராடக் கூடியவர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. அப்படி இருக்கக் கூடியவர்களும் கூட இடம்பெற்ற மோசமான படுகொலைகளின் அதிர்ச்சியினால் உறைந்து போயிருந்தனர்"

2009  மேயில மட்டும்  கணக்கா உறைஞ்சு போச்சினம் . :icon_mrgreen:

முள்ளிவாய்கால் முடிவு 2008 இல் நடந்திருந்தால் கதையே வேறு யாழ்பாணம்  பொங்கி இருக்கும் .

ஓம் அண்ணை..  நீங்கள் Selective amnesia வந்தவர் போன்று நடிப்பதில் வல்லவர் என்று எனக்குத் தெரியும்.

இதே சனம் தான், 2002 இல் தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் போது பளையில் சனத்தினை இராணுவம் பிடிச்சு வைச்சு இருக்கும் போது பலகலைக் கழக மாணவர்களுடன் இணைந்து 10 நாட்களுக்கும் மேலாகப் போராடி மீட்டது.

இதே சனம் தான் நாளைக்கு மீண்டும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து தமக்கான விடுதலையைக் காண முற்படவும் போகுது. அப்பவும் நீங்கள் இப்படி அறம் கொட்டிக் கொண்டு தான் இருப்பியல்.

இதையும் சேர்த்துக்கொள்ளலாம்

இதே  சனம் தான்

சமாதான  காலத்தில்  முகமாலை  ஊடாக புலிகள் உள்ளே  வந்தபோது

ஓடிச்சென்று தூக்கிவந்தது...

இறுதி யுத்தத்தின் போது இயல்பு நிலையில் இருந்த யாழ்பாண மக்களை இயலாமையில் இருந்தமாதிரி பத்திரிகையாளர் கொலையில் வந்து முடிச்சு போட்டிர்கள் பாருங்கள் இதுதான் புலி அரசியல் .

(அழிவதற்கு முதன் நாளும் அடியை பார் என்று புலிகள் சொன்னதும் ஒரு காரணம்  )

"இதே சனம் தான் நாளைக்கு மீண்டும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து தமக்கான விடுதலையைக் காண முற்படவும் போகுது. அப்பவும் நீங்கள் இப்படி அறம் கொட்டிக் கொண்டு தான் இருப்பியல்."

மீண்டும் புலிகள் போல் ஒரு இயக்கம் உருவாகி  அந்த போராட்டத்தை முன்னர் அழித்தது போல் அழிக்காமல் இருக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதில் எனக்கு ஆச்சரியத்தினைத் தரவில்லை. ஏனென்றால் வழக்கம் போல எதனையும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத உங்கள் இயல்பு இதிலும் தெரிகின்றது.

தனித்த ஒரு ஊடகவியலாளர் கொலையான விடயத்தினை வைத்து மக்கள் இணைந்து போராடவில்லை என்று எங்கு எழுதியுள்ளேன்?

2005 இன் இறுதிக்காலத்தில் இருந்து 2009 இன் தொடக்கம் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் / வடக்கில்  ஏராளமானவர்கள் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தனர். இவர்களில் அநேகர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், முக்கியமாக பொங்கு தமிழ் நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், விழிப்புக் குழுத் தலைவர்கள், புலிகள் யாழில் அரசியல் அலுவலகம் திறந்து களப்பணி செய்த போது இணைந்து செயற்பட்டவர்கள், பாடசாலைகளில் மாணவர்களை இணைத்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்று ஏராளமானோர் 19 மாதங்களுக்குள் கண்டபடி சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இதில் ஆலய குருக்கள் கூட விட்டுவைக்கப்பட வில்லை, இவற்றை விட ஏராளமான அப்பாவி இளைஞர்கள் காரணமின்றி காணாமல் போனார்கள் (தென்மராட்சியில் தொண்டு செய்ய இரவில் கோயிலில் நின்ற 10 இற்கும் மேற்பட்ட பதின்ம வயது இளைஞர்கள் உட்பட)

மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர்கள், மனிதவுரிமையாளர்கள், துணிச்சலான பத்திரிகையாளர்கள் என்று அனைவரையும் கூடியவரைக்கும் துடைத்து அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இராணுவப் புலநாய்வுக் குழு மிக மோசமாக இயங்கிய காலம் அது. ஒரு மிகப் பெரிய அழித்தொழிப்பு நடவடிக்கை வன்னியில் இறுதியாக மேற்கொள்ளும் போது அதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தக் கூடிய  முதலாம் மட்டத்தில் உள்ளவர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், மிச்சம் இருப்பவர்களை அந்தக் கொலைகள் மூலம் அச்சுறுத்தியும் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

தற்காலிக சமாதான காலத்திற்கு முன்பாக இடம்பெற்ற இறுதி இராணுவ நடவடிக்கையான தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையின் போது பளையில் நிர்க்கதியாகி நின்ற மக்களை மீட்க யாழ்ப்பாண மக்கள் தீவிரமாக போராடியது போன்று இன்னொரு முறை நிகழக் கூடாது என்ற நோக்கில் இலங்கை இராணுவமும் அரசும் அன்று 2005 இல் இருந்து 2009 வருட தொடக்கம் வரைக்கும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தது.

ஈற்றில் 2009 இல்  வன்னியில் அழித்தொழிப்பு படுகொலைகள் இடம்பெற்ற போது மக்களை ஒன்று திரட்டி போராடக் கூடியவர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. அப்படி இருக்கக் கூடியவர்களும் கூட இடம்பெற்ற மோசமான படுகொலைகளின் அதிர்ச்சியினால் உறைந்து போயிருந்தனர்.

எந்த தேசத்திலும், இவ்வாறான ஒரு மோசமான அச்சுறுத்தலை எதிர்நோக்கிய மக்கள் தம்மை அதனூடாக தம்மை நிலை நிறுத்தி மீண்டும் ஒன்றிணைந்து போராட வெளிக்கிடுவதற்கு ஒரு கால அவசாகம் தேவைப்படும். இந்த கால அவசாகத்திற்குள் தான் வன்னி அழித்தொழிப்பு இடம்பெற்றது.

****

இங்கு ஊடகவியலாளர் ரஜிவர்மனின் கொலை ஒரு தனித்த கொலை அல்ல. நன்கு திட்டமிட்ட படுகொலை அரசியலின் ஒரு அங்கம். இந்த கட்டுரையில் கூட அன்று எத்தகையக சூழல் இருந்தது என்று மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.  இக் கொலையை ஒரு தனித்த ஊடகவியலாளரின் கொலை என்று மட்டம் கட்டும் அளவுக்குத் தான் உங்கள் அரசியல் அறிவு இருக்கின்றது.

இதன் அர்த்தம் என்ன? எந்த திரியில் எழுதின கருத்தினை இங்கு வந்து ஒட்டியுள்ளேன்?

மக்கள் எல்லோரும் இணைந்து மு.வாய்க்கால் யுத்தம் நடக்கையில் அதை நிறுத்த சொல்லி ஏன் போராட்டம் செய்யவில்லை என்று நான் கேட்டு எழுதியது இன்னொரு திரியில்.தனியே அரசிற்கு மட்டும் எதிராக போராட்டம் செய்யச் சொல்லவில்லை? இரு தரப்புக்கும் எதிராகச் செய்யச் சொன்னேன்.விளக்கமாய் எழுதியிருக்கேன்.விளக்கமில்லை என்டால் திரும்ப போய் வாசிக்கவும்.அந்த திரியில் வந்து பதில் எழுத முடியாமல் எதற்காக இங்கு காவி வந்தீர்கள்?

அது என்ன 2005 ஆண்டில் இருந்து ஆட்கள் செத்துக் கொண்டு இருந்தார்கள்?...அதற்கு முன் ஆட்கள் சாகவேயில்லையா? 58ம் ஆண்டில் இருந்து தமிழர்கள் செத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.அகிம்சை வழியிலும்,ஆயுத வழியிலும் மக்கள் போராடிக் கொண்டு தானே இருந்தார்கள்.பயந்து கொண்டு போராடமலா இருந்தார்கள்?

இறுதி யுத்தத்தில் வன்னியில் இருந்த கொத்து கொத்தாய் சாகும் போதும் பக்கத்தில் இருந்து கொண்டும் பார்த்திட்டு எப்படி அந்த மக்களால் அமைதியாக இருக்க முடிந்தது?...சிங்களவர்களால் உயிர் பயம் தமிழருக்கு எப்பவும் இருந்து கொண்டு தானே இருக்குது...மற்ற இடங்களில் உள்ள தமிழ்ருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது அதனால் அவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்டால் வன்னியில் உள்ளது எங்கட சனம் இல்லையா?....மக்களும்,புலிகளும் ஒன்றுல்லையா?...மக்கள் போராட்டத்தை யாராவது முன்னெடுக்க வேண்டும் என்றில்லை.ம்க்கள் எல்லோருக்கும் உள் இருந்து வர வேண்டும்.அப்படி வரவில்லை என்பது தான் என் கருத்து.மக்கள் போராட்டத்தை முன்னெர்டுக்க அப்போது யாரும் இல்லை என்பது சும்மா சடைக்கின்ற் கருத்து.போன வருடம் சில உலக நாடுகளில் மக்கள் போராட்டம் நடந்தது.

ரஜிவர்மனுக்கும் முன்னும்,பின்னும் எத்தனையோ ஊடகவியலாளார்,இறந்திருக்கினம்,இறந்து கொண்டு இருப்பினம்,இறப்பினம்...அவர் ஒரு ஊடகவியலளார்.உயிரை துச்சமாக மதித்துத் தான் இந்த தொழிலுக்கு வந்திருப்பார்.புலிக்கு ஆதரவாக எழுதியிருப்பார்...அவரது இறப்பை காரணம் காட்டி அதனால் தான் அப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள் போராடவில்லை என்ட பொருள்பட இந்த திரியில் முதலாவது கருத்தாக நீங்கள் எழுதியுள்ள கருத்தை திரும்பவும் வாசியுங்கோ.

நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்ன மண்ணாங்கட்டி புடுங்கினீங்கள் என்று நான் கேட்டேனா?...உங்களை மாதிரியும்,உங்களை மாதிரி பக்க பாட்டு பாடுற மாதிரி நடிச்சுக் கொண்டு அங்கே இருக்கிற மக்களை உசுப்பேத்திக் கொல்லேல்ல.இப்ப இங்கே இருக்கிற சிலர் அதைத் தானே செய்து கொண்டு இருக்கினம்....புலி,புலி என்று காசு சேர்த்து அந்த காசை புலிக்கும் கொடுக்காமல்,ஆயுத்மும் அனுப்பாமல் ஏமாத்தல்ல...அடிச்ச காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைக்கலேல்ல.இதுவே நான் அந்த மக்களுக்கு செய்த நல்லவை தான்

புலி,புலி என்று பக்கபாட்டு பாடி அந்த மக்களை அழிச்சது நீங்கள்.தூக்கி விட நாங்கள் தேவையோ?...நான் எந்த ஒரு இயக்கத்திலையோ,அரசியற் கட்சியிலையோ இருக்கவில்லை.அப்படி ஒன்று ஆரம்பிக்கின்ற நோக்கம் எனக்கில்லை....மக்களுக்கு அது பெற்று தருவேன்,இது பெற்று தருவேன் என ஏமாத்த விரும்பவில்லை .... மக்களை ஏமாத்த வேண்டிய தேவையும் எனக்கில்லை.அது சரி எப்போதிருந்து புலிப் பாட்டு பாடத் தொடங்கினீர்கள்? யாழுக்கு நீங்கள் வரும் எப்படியான கருத்துக்கள் எழுதினீர்கள் என்று மறந்து போச்சாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் திரியிலேயே வடிவாய் எழுதி இருக்கிறேன்.மாற்றுக் இயக்கக்காராரும்,மெத்தப் படிச்சாக்களும் தங்களால் முடியாது என்னவுடன் எப்பவோ ஒதுங்கிட்டார்கள்...எல்லாத்தையும் நீங்கள் அழிச்சு முடிய தூக்கி விட உங்களுக்கு அவர்கள் தேவையா?...வெட்கமாயில்லை உங்களுக்கு அவர்களை இப்ப உதவிக்கு கூப்பிட?

இதில வேற விசுகு அண்ணா என்னையும்,தங்களோட‌ சேர்ந்து பாட்டுப் பாடட்டாம்

Edited by ரதி

மக்கள் எல்லோரும் இணைந்து மு.வாய்க்கால் யுத்தம் நடக்கையில் அதை நிறுத்த சொல்லி ஏன் போராட்டம் செய்யவில்லை என்று நான் கேட்டு எழுதியது இன்னொரு திரியில்.தனியே அரசிற்கு மட்டும் எதிராக போராட்டம் செய்யச் சொல்லவில்லை? இரு தரப்புக்கும் எதிராகச் செய்யச் சொன்னேன்.விளக்கமாய் எழுதியிருக்கேன்.விளக்கமில்லை என்டால் திரும்ப போய் வாசிக்கவும்.அந்த திரியில் வந்து பதில் எழுத முடியாமல் எதற்காக இங்கு காவி வந்தீர்கள்?

முதலில் நீங்கள் எந்த திரியில் எழுதியுள்ளீர்கள் என்று காட்டுங்கள். யாழில் திறக்கப்படும் எல்லா திரிகளையும் பார்த்து கருத்துகளை வாசித்து பதில் எழுதும் அளவுக்கு எனக்கு கால நேரம் இங்கு கொட்டிக் கிடக்கவில்லை. அதே போன்று சில திரிகளில் ஒரு சில பதில்களை மாத்திரம் பார்த்து விட்டு மற்றவர்களின் கருத்துகளை வாசித்துப் போட்டு கருத்து வைக்க நேரம் இல்லாமல் சென்று விடுவதும் உண்டு.

நான் இந்த திரியில் எழுதியது முற்று முழுதாக மக்கள் ஏன் ஒன்றிணைந்து போராட முடியவில்லை என்பதைத் தான். 2005 இல் இருந்து 2007 வரைக்குமான பல படுகொலைகளின் மூலம் மக்களை கடும் அச்சுறுத்தலுக்குள் வைத்திருந்து, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர்களை கொன்றழித்த இலங்கை அரசின் செயல்களைத் தான்.

அது என்ன 2005 ஆண்டில் இருந்து ஆட்கள் செத்துக் கொண்டு இருந்தார்கள்?...அதற்கு முன் ஆட்கள் சாகவேயில்லையா? 58ம் ஆண்டில் இருந்து தமிழர்கள் செத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.அகிம்சை வழியிலும்,ஆயுத வழியிலும் மக்கள் போராடிக் கொண்டு தானே இருந்தார்கள்.பயந்து கொண்டு போராடமலா இருந்தார்கள்?

அந்த எல்லா காலங்களிலும் மக்களை ஒன்றிணைத்து போராட ஆட்கள் இருந்தார்கள். தலைவர்கள் இருந்தார்கள். பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் இருந்தார்கள். கடும் நெருக்குவாரங்கள் இருப்பினும் தலைமறைவாக செயற்படவும் மக்களை துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஒன்றிணைக்கவும் போதிய வெளியும் இருந்தது. ஆனால் 2005 இற்கு பின்னரான 2009 வரைக்குமான காலங்களில் அத்தகைய நிலை இருக்கவில்லை. அப்படி முயன்ற ஆயுதம் தூக்காதவர்களும் மிக மோசமாக அழித்தொழிக்கப்பட்டார்கள். மகிந்த யுகம் என்பது மற்ற எல்லா சிங்கள் அரசியல் தலைவர்களின் காலங்களை விடவும் திட்டமிட்ட ரீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முற்பட்ட அனைவரையும் அழித்தொழிக்கும் யுகமாக இருந்தது / இருக்கின்றது.

நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்ன மண்ணாங்கட்டி புடுங்கினீங்கள் என்று நான் கேட்டேனா?...உங்களை மாதிரியும்,உங்களை மாதிரி பக்க பாட்டு பாடுற மாதிரி நடிச்சுக் கொண்டு அங்கே இருக்கிற மக்களை உசுப்பேத்திக் கொல்லேல்ல.இப்ப இங்கே இருக்கிற சிலர் அதைத் தானே செய்து கொண்டு இருக்கினம்....புலி,புலி என்று காசு சேர்த்து அந்த காசை புலிக்கும் கொடுக்காமல்,ஆயுத்மும் அனுப்பாமல் ஏமாத்தல்ல...அடிச்ச காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைக்கலேல்ல.இதுவே நான் அந்த மக்களுக்கு செய்த நல்லவை தான்

நான் எழுதிய எந்த இடத்திலும் புலிகள் பற்றி ஒரு எழுத்தேனும் எழுதவில்லை. நான் எழுதியது அனைத்தும் மக்கள் ஏன் ஒன்றிணைந்து போராட முடியாமல் அன்று இருந்தது, அதன் கால சூழ்நிலை என்ன என்பதைப் பற்றித் தான். நான் புலிகள் பற்றி ஒன்றுமே எழுதாமல் மக்கள் ஏன் போராட முடியாமல் போனது என்பதைப் பற்றி எழுத நீங்கள் உங்களுக்கு இருக்கும் புலிக்காச்சலால் நான் புலிகளைப் பற்றி எழுதியிருக்கின்றேன் என்று கற்பனை செய்து கொண்டு பதில் எழுதியிருந்தீர்கள்.

எப்ப மக்கள் பற்றி எழுதியதை புலிகள் பற்றி எழுதியதாக கற்பனை செய்தீர்களோ அந்த நிமிடத்தில் இருந்தே மக்களும் புலிகளும் ஒன்று என்ற கருத்தியலைத் தான் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளீர்கள்.

புலி,புலி என்று பக்கபாட்டு பாடி அந்த மக்களை அழிச்சது நீங்கள்.தூக்கி விட நாங்கள் தேவையோ?...நான் எந்த ஒரு இயக்கத்திலையோ,அரசியற் கட்சியிலையோ இருக்கவில்லை.அப்படி ஒன்று ஆரம்பிக்கின்ற நோக்கம் எனக்கில்லை....மக்களுக்கு அது பெற்று தருவேன்,இது பெற்று தருவேன் என ஏமாத்த விரும்பவில்லை .... மக்களை ஏமாத்த வேண்டிய தேவையும் எனக்கில்லை.அது சரி எப்போதிருந்து புலிப் பாட்டு பாடத் தொடங்கினீர்கள்? யாழுக்கு நீங்கள் வரும் எப்படியான கருத்துக்கள் எழுதினீர்கள் என்று மறந்து போச்சாக்கும்

அதே நேரத்தில் நான் புலிகளுக்கு ஆதரவாக பக்கபாட்டு பல இடங்களில் பாடியிருக்கின்றேன். அவர்களின் போராட்டம், அவர்களின் தியாகம், அதில் உள்ள நியாயத்தன்மை ஆகியவற்றை அன்றில் இருந்து இன்று வரைக்கும் ஆதரித்து எழுதியிருக்கின்றேன். இதனை இனியும் செய்வேன். அதே நேரத்தில் அவர்கள் இழைத்த தவறுகள், மக்கள் மீதான தாக்குதல்கள், ஆயுதம் தூக்காத அரசியல் வாதிகளை கொன்றழித்த செயல்களை அன்றும் எதிர்த்தேன் இன்றும் இனியும் எதிர்த்தே வருவேன். புலிகள் தோற்று விட்டார்கள், இறுதி யுத்தத்தில் தவறு இழைத்து விட்டார்கள் என்பதற்காக அப்படியே U turn அடித்து புலிக்காச்சல் பேர்வழிகளுடன் சேர்ந்து கும்மி அடிக்க போவதில்லை. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் அவர்களை என்றுமே நேசிப்பதுடன் அதனை என் சந்ததிக்கும் எடுத்து சொல்கின்றவனாகவே இருப்பேன்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் எழுத இணைந்தது தேசம் நெட்டிலோ அல்லது தேனியிலோ அல்ல; யாழ் கருத்துக்களத்தில். புலிகளின் போராட்டத்திற்கான நியாயங்களை ஏற்று அவர்களை ஏற்றுக் கொண்ட ஒரு தமிழ் தேசிய தளத்தில்.

இதே யாழில் புலிகளில், தலைவரில் இருக்கும் அன்பினாலும் ஆதரவாலும் தலைவர் பிரபாகரன் அவர்களின் நிழற்படங்களை தொகுத்த திரியையும் நான் தான் திறந்தனான் என்பதை நினைவில் வைத்து இருங்கள். அன்றும் இன்றும் என்றும் புலிகள் மீது எத்தகைய விமர்சனங்கள், கேள்விகள், முகச்சுழிப்புகள் இருந்தாலும் புலிகளின் ஆதரவாளனாகத்தான் இருக்கின்றேன், இனியும் இருப்பேன்.

அந்தத் திரியிலேயே வடிவாய் எழுதி இருக்கிறேன்.மாற்றுக் இயக்கக்காராரும்,மெத்தப் படிச்சாக்களும் தங்களால் முடியாது என்னவுடன் எப்பவோ ஒதுங்கிட்டார்கள்...எல்லாத்தையும் நீங்கள் அழிச்சு முடிய தூக்கி விட உங்களுக்கு அவர்கள் தேவையா?...வெட்கமாயில்லை உங்களுக்கு அவர்களை இப்ப உதவிக்கு கூப்பிட?

எந்த திரி என்று சொல்லுங்கள், அதனை நான் பார்க்க. 

Edited by நிழலி
விடுபட்ட ஒரு வரியைச் சேர்க்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.