Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி

[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 10:51 GMT ] [ கார்வண்ணன் ]

அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குப் படகுகளில் அகதிகள் செல்வதைத் தடுப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்கான சிறிலங்கா சென்ற அவர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 7ம் நாள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற றியர் அட்மிரல் மிச்சேலர் நூனன், தருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளையும், போர்ப்படகுகளையும் பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளைத் தவறாமல் பார்வையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் அவற்றைப் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

aus-admiral1.jpg

aus-admiral2.jpg

http://www.puthinappalakai.com/view.php?20140511110500

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளைத் தவறாமல் பார்வையிட்டு வருகின்றனர்.

உலகமே வியக்கும் வண்ணம் பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த ஒரு போராட்டத்தை...... கேணைத்தனமாக அழித்துவிட்டு.........அதன் சாரம்சத்தை  தேடுகின்றார்கள். கேவலம் கெட்ட உலகமிது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளது போர்த்தளபாடங்களை தமிழர்களது அறிவியலின் அடையாளங்களாகக் கருதியோ அன்றேல் எமது ஆரம்பத் தொழிநுட்ப அறிவாற்றலின் எச்சங்களாகக் கருதியோ, எம்மால் சர்வதேச அளவில் காப்புரிமை பெற்றுக்கொள்ளமுடியாதா?

தவிர புலம்பெயர்தேசங்கள் எங்கும் முள்ளிவாய்க்காலுக்குப்பின்பு விடுதலைப்புலிகளுடன் களத்தில் நின்ற இப்போர்த்தளபாடங்களது வடிவமைப்பாளர்கள் சிதறுண்டுபோய்க்கிடக்கிறார்கள் அவர்களை ஒன்றுபடுத்தி எதாவது செய்யமுடியுமா? அதாவது இவற்றின் மாதிரிகளை உருவாக்கி அவற்றிற்குக் காப்புரிமை பெற்று சிறு கண்காட்சிக்கூடம் ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்கமுடியுமா?

நான் அறிந்தமட்டில் யூ என் எச்  சி ஆர் மூலம் பதிவுசெய்து தாய்லாந்தில் தங்கியிருக்கும் ஒருசில,  தங்களை அடையாளம்காட்டாத முன்னால் புலி உறுப்பினர்களில் சிலரை எப்படியோ அமெரிக்கா மேப்பம்பிடித்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றதாக ஒரு செய்தி இருக்கு, அதுக்கும் இவற்ருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

அதுக்காக, அமெரிக்காவிடம் இல்லாத தொழில் நுட்பம் புலியிடம் இருந்ததா எனக்கேட்காதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அதை பார்த்த அவுஸ்ரெலியன் இப்படி சொல்லியிருப்பான்...... ...... wow that's amazing mate,I've never seen anything like this :D

ஏன் அவுஸில யுரியுப் வேலை செய்யாதோ..??!

விடுதலைப்புலிகள்.. இந்தப் போர் படகுகளை ரகசியமாக வைத்திருக்கவில்லை. இவை போர்க்களத்தில் பாவிக்கப்பட்ட அனைத்து விடீயோக்களும் வெளியிடப்பட்டிருந்தன. அவை எல்லாம்.. உலக புலனாய்வாளர்களின் கைக்கு எட்டியே இருக்கும். அவர்களும் பகுத்தாய்ந்து முடித்தே இருப்பார்கள்.

குறிப்பாக.. அமெரிக்க யுத்தக்கப்பல் வளைகுடாவில் வைத்து தகர்க்கப்பட்ட பின்.. கடற்புலிகள் மீதான கண்ணோட்டம் கூடியது.

ஆக.. இதெல்லாம்.. புதினம் காட்டல். விடுதலைப்புலிகளுக்கு இதெல்லாம் நன்கே தெரியும். எது எதிரிக்கு கிடைக்கனும்.. எது எதிரிக்கு கிடைக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்தனர்.

இப்பவும்.. இவை விடுதலைப்புலிகளின் படகுகள் என்று தான் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தப் படகுகள் வடிவமைப்பில்.. சிறந்ததாக இருந்தாலும்.. அவற்றின் உள்ளக... தொழில்நுட்பம்.. மட்டுப்படுத்திய ஒன்றே. அந்த வகையில்.. இந்த வடிவமைப்பை வைச்சு.. உள்ளக தொழில்நுட்பத்தை மேம்படுத்தி.. வல்லரசுகள் எதிர்கால.. போர்ப்படகுகளை வடிவமைக்கலாம். ஏலவே இந்தியாவும்.. சிறீலங்காவும் கூட்டாக அதைக் கொள்ளையடித்தே வைத்துள்ளன.

விடுதலைப்புலிகளின் அநேக வடிவமைப்புக்கள்.. களத் தேவைக்கு ஏற்றார் போல இருந்தன. காரணம்.. ஆழம் கூடிய.. குறைந்த பகுதியில்... வேகமாகப் போக.. எமக்கு இவை தேவைப்பட்டன. அதற்கேற்ப வடிவமைப்புக்கள் உள்ளன. ஆனால்.. இதனையே மரபுவழி.. ஏவுகணை கொண்ட போர்க்கப்பல்களை கொண்டவர்களுக்கு.. இவற்றின் தேவை குறைவு.

ஆனாலும்.. விடுதலைப்புலிகள் மேற்கொண்ட.. வெற்றிகரமான போர்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதல்கள் என்பது.. உலக நாடுகளை கொஞ்சம்... சிந்திக்கவே செய்ய வைத்தன. தங்கள் போர்க்கல வடிவமைப்பில்.. மாற்றங்களை கொண்டு வரவும் தூண்டின. அந்த வகையில்..  இந்த வடிவமைப்புக்கள்.. இவர்களைக் கவர்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. :icon_idea:

புலிகளது போர்த்தளபாடங்களை தமிழர்களது அறிவியலின் அடையாளங்களாகக் கருதியோ அன்றேல் எமது ஆரம்பத் தொழிநுட்ப அறிவாற்றலின் எச்சங்களாகக் கருதியோ, எம்மால் சர்வதேச அளவில் காப்புரிமை பெற்றுக்கொள்ளமுடியாதா?

தவிர புலம்பெயர்தேசங்கள் எங்கும் முள்ளிவாய்க்காலுக்குப்பின்பு விடுதலைப்புலிகளுடன் களத்தில் நின்ற இப்போர்த்தளபாடங்களது வடிவமைப்பாளர்கள் சிதறுண்டுபோய்க்கிடக்கிறார்கள் அவர்களை ஒன்றுபடுத்தி எதாவது செய்யமுடியுமா? அதாவது இவற்றின் மாதிரிகளை உருவாக்கி அவற்றிற்குக் காப்புரிமை பெற்று சிறு கண்காட்சிக்கூடம் ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்கமுடியுமா?

நான் அறிந்தமட்டில் யூ என் எச் சி ஆர் மூலம் பதிவுசெய்து தாய்லாந்தில் தங்கியிருக்கும் ஒருசில, தங்களை அடையாளம்காட்டாத முன்னால் புலி உறுப்பினர்களில் சிலரை எப்படியோ அமெரிக்கா மேப்பம்பிடித்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றதாக ஒரு செய்தி இருக்கு, அதுக்கும் இவற்ருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா?

அதுக்காக, அமெரிக்காவிடம் இல்லாத தொழில் நுட்பம் புலியிடம் இருந்ததா எனக்கேட்காதையுங்கோ.

கருங்கல்லிருந்தா சிற்பம் வந்துவிடுமா? இருக்கும் தொழில் நுட்பங்களை பாவித்து கட்டுமானம் செய்ய வட அமெரிக்காவில் பற்றா குறை.

ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து போர் விஞ்ஞானிகளை தூக்கி சென்றார்கள்.

எனது கனடிய இராணுவ அதிகாரி நண்பரை கேட்டேன்.

பிரபாகரனை பிடித்தால் என்ன செய்வீர்கள்?

நண்பர்: சகல வசதியும் செய்து கொடுத்து நிரந்தர அறிவுரையாளரா வைத்திருப்போம்.

நான்: அப்படியா ஏன்?

நண்பர் ஏளனாமா பார்த்து: அவருக்கு இருக்கும் போர் அனுபவம் இங்கு ஒருத்தரிடம் இல்லை.

 இதை காமெடி பகுதிக்கு மூவ் பண்ணினாலும் பண்ணலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில படங்களில் dark comedy எண்டு ஒருவகையுண்டு. இப்ப தமிழ்ழ சூது கவ்வும் அப்படி ஒரு படம். மும்பை எக்ஸ்புரசும் இந்தவகையே. ஓரளவு eccentric கதாபாத்திரங்கள் தமது வாழ்க்கையை ரொம்ப சீரியசா கொண்டு போகுங்கள். உணர்ச்சி சும்மா பொங்கும்.

வெளியால இருந்து பார்க்கிற enlightened viewer க்கு சிரிப்பில விலா ஒடியும்!

நாந்தான் - இந்த வகை படங்கள் உங்களுக்கு பிடிக்கும் போல தெரியுது. தேடிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகத்தின் ராணுவத் தளபதி என் உற்ற நண்பன் அவரை நான் கேட்டேன் உங்க எல்லாருக்கும் மண்டை ஏன் கூராயிருக்கு?

அவர் எதோ தன்ர பாசைல சொன்னார். எனக்கு விளங்கேல்ல.

பாசை தெரியாமல் உற்ற நண்பனாம் அப்ப நீங்கள் அந்த அதுவா?    ......................................... :D

 இதை காமெடி பகுதிக்கு மூவ் பண்ணினாலும் பண்ணலாம் :)

தற்போதைக்கு யாழ்கள காமெடி பீஸ் தாங்கள்தான் எங்களைபொறுத்தவரை :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

ஆங்கில படங்களில் dark comedy எண்டு ஒருவகையுண்டு. இப்ப தமிழ்ழ சூது கவ்வும் அப்படி ஒரு படம். மும்பை எக்ஸ்புரசும் இந்தவகையே. ஓரளவு eccentric கதாபாத்திரங்கள் தமது வாழ்க்கையை ரொம்ப சீரியசா கொண்டு போகுங்கள். உணர்ச்சி சும்மா பொங்கும்.

வெளியால இருந்து பார்க்கிற enlightened viewer க்கு சிரிப்பில விலா ஒடியும்!

நாந்தான் - இந்த வகை படங்கள் உங்களுக்கு பிடிக்கும் போல தெரியுது. தேடிப் பாருங்கள்.

:lol::D மூடர் கூடமும், சூது கவ்வுமும் எனது all-time favorite <_<

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரையும்,புலிகளையும் அவமானப்படுத்தவும்,கேவலப்படுத்தவும் மாற்று இயக்கங்களும்,மா.கருத்துக்காராரும் தேவையில்லை.விக் போன்ற ஆட்களே போதும்.

மா.கருத்துகாரருக்கு பிரபாவின் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு...பிரபா நடமாடும் மட்டும் அவர்கள் மூச்....

இப்போதுள்ள கூத்துகளை பார்த்தால்...புலிகளுக்கு பிரச்னை உள்ளுக்குள்ளேயே இருந்திருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 இதை காமெடி பகுதிக்கு மூவ் பண்ணினாலும் பண்ணலாம் :)

அண்ணே இது நெருப்புப் பெட்டியில் செய்ததில்லை அண்ணே. காமடிப்பகுதிக்கு நகர்த்த. எத்தனையோ தடைகளுக்கு மத்தியிலும் வார்த்தெடுத்தது. :)

ஏன் அவுஸில யுரியுப் வேலை செய்யாதோ..??!

விடுதலைப்புலிகள்.. இந்தப் போர் படகுகளை ரகசியமாக வைத்திருக்கவில்லை. இவை போர்க்களத்தில் பாவிக்கப்பட்ட அனைத்து விடீயோக்களும் வெளியிடப்பட்டிருந்தன. அவை எல்லாம்.. உலக புலனாய்வாளர்களின் கைக்கு எட்டியே இருக்கும். அவர்களும் பகுத்தாய்ந்து முடித்தே இருப்பார்கள்.

குறிப்பாக.. அமெரிக்க யுத்தக்கப்பல் வளைகுடாவில் வைத்து தகர்க்கப்பட்ட பின்.. கடற்புலிகள் மீதான கண்ணோட்டம் கூடியது.

ஆக.. இதெல்லாம்.. புதினம் காட்டல். விடுதலைப்புலிகளுக்கு இதெல்லாம் நன்கே தெரியும். எது எதிரிக்கு கிடைக்கனும்.. எது எதிரிக்கு கிடைக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்தனர்.

இப்பவும்.. இவை விடுதலைப்புலிகளின் படகுகள் என்று தான் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தப் படகுகள் வடிவமைப்பில்.. சிறந்ததாக இருந்தாலும்.. அவற்றின் உள்ளக... தொழில்நுட்பம்.. மட்டுப்படுத்திய ஒன்றே. அந்த வகையில்.. இந்த வடிவமைப்பை வைச்சு.. உள்ளக தொழில்நுட்பத்தை மேம்படுத்தி.. வல்லரசுகள் எதிர்கால.. போர்ப்படகுகளை வடிவமைக்கலாம். ஏலவே இந்தியாவும்.. சிறீலங்காவும் கூட்டாக அதைக் கொள்ளையடித்தே வைத்துள்ளன.

விடுதலைப்புலிகளின் அநேக வடிவமைப்புக்கள்.. களத் தேவைக்கு ஏற்றார் போல இருந்தன. காரணம்.. ஆழம் கூடிய.. குறைந்த பகுதியில்... வேகமாகப் போக.. எமக்கு இவை தேவைப்பட்டன. அதற்கேற்ப வடிவமைப்புக்கள் உள்ளன. ஆனால்.. இதனையே மரபுவழி.. ஏவுகணை கொண்ட போர்க்கப்பல்களை கொண்டவர்களுக்கு.. இவற்றின் தேவை குறைவு.

ஆனாலும்.. விடுதலைப்புலிகள் மேற்கொண்ட.. வெற்றிகரமான போர்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதல்கள் என்பது.. உலக நாடுகளை கொஞ்சம்... சிந்திக்கவே செய்ய வைத்தன. தங்கள் போர்க்கல வடிவமைப்பில்.. மாற்றங்களை கொண்டு வரவும் தூண்டின. அந்த வகையில்..  இந்த வடிவமைப்புக்கள்.. இவர்களைக் கவர்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. :icon_idea:

அருமை நெடுக்ஸ்.
 
மேலும், 
 
அமெ. கடற்படை தன் கடற்கலன்களின் பருமனைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தீர்மானத்தில் கடற்புலிகளின் கடற்கலன்களின் வடிவமைப்பு, போர்க்கலை [ Tactics / Strategy ] என்பன வற்றின் செல்வாக்கு இருக்கும் அல்லது அவற்றில் உள்ள நன்மைகளை அவர்கள் கண்டு பயன்படுத்த விளைந்திருப்பார்கள்.
 
எதிரிகளின் சூட்டு வல்லமை அதிகரித்துள்ள நிலையில் பாரிய கடற்கலன்கள் கூண்டோடு எமலோகம் அனுப்பும் பொறிகளாகலாம். உதாரணமாக சீனா சிறிய அணு ஆயுதம் [ Tactical nuclear weapon ] ஒன்றைப் பாவித்து பாரிய அமெரிக்க‌ விமானந்தாங்கிக் கப்பலை ஒரு கணத்தில் அழிக்கலாம்.

இதை காமெடி பகுதிக்கு மூவ் பண்ணினாலும் பண்ணலாம் :)

அரசியல், இராணுவம் பற்றி ஒன்றும் தெரியாமல் சும்மா சிறி லங்கா ஒட்டுக்குழு பீலா காட்டுவோருக்கு காண்பதெல்லாம் கொமெடியா தான் இருக்கும்.

கடந்த ஐம்பது வருடத்தில் எத்தனை இராணுவ தலைவர்கள் இரண்டு நாட்டு இராணுவங்களுடன் 30 வருடமா போர் தொடுத்த அனுபவம் உள்ளவர்கள்?

சுருட்டுக்காக எட்டி மிரித்தவரை மாவீரன் என்று நீங்கள் கனடாவில் இருந்து படம் காட்டுவதிலும் பார்க்க பெரிய கொமெடி இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.