Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சீல தானே துப்ப போறீங்க... துப்புங்க எசமா துப்புங்க...

M_Id_427412_Chidambaram.jpg

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை . இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது . 

 

அர்ஜூன், இந்த திரியாவது விட்டு வையுங்களேன்! :):o

 

  • கருத்துக்கள உறவுகள்

அழகிரி ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை .

இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது .

அய்யோ ராமா ஆஆஆஆ...

1374548453.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாகை அதிமுக வேட்பாளர் கே. கோபால் 77, 141 வாக்குகள் முன்னிலை

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய நேரப்படி காலை 11:00 மணி
புதுச்சேரியில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான நாராயணசாமி முன்னிலை வகிக்கிறார். என்.ஆர். காங்கிரசின் ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய நேரப்படி காலை 10:45 மணி
தமிழ்நாட்டில் முன்னிலை விவரங்கள் தெரிந்துள்ள 29 தொகுதிகளில், அ.தி.மு.க. 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
முன்பு முன்னிலை பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி சுமார் 20 ஆயிரம் வாக்குகளையும் திருமாவளவன் சுமார் 16 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர்
மிகவும் கவனிக்கப்பட்ட நீலகிரி தனித் தொகுதியில் திமுக வேட்பாளர், முன்னாள் மத்திய அமைச்சர்,ஆ. ராசா பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சி. கோபாலகிருஷ்ணன் ராசாவைவிட 8,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அரக்கோணத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி. ஹரி தி.மு.க. வேட்பாளர் இளங்கோவைவிட இரண்டாயிரம் வாக்குகள் முன்னிலை.
கடும் போட்டியில் சிதம்பரம் தொகுதி
சிதம்பரம் தனித் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் ஊசலாட்டத்தில் இருக்கிறார். முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்த அவர்,இரண்டாவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசியைவிட இரண்டாயிரம் வாக்குகள் அவர் முன்னிலை பெற்றுள்ளார்
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணி ஷங்கர் ஐயர் பின் தங்கி வருகிறார்
விருதுநகர் தொகுதியில் வைகோ பின்னடைவு
முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணன் 7716 வாக்குகளையும் தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலு 4717 வாக்குகளையும் வைகோ 4668 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
 
bbc
  • கருத்துக்கள உறவுகள்

விருது நகர் வை.கோ மூன்றாவது இடத்தில் நிற்கிறார். அதிமுக - 28339 , திமுக - 12387, மதிமுக - 12254

அர்ஜூன், இந்த திரியாவது விட்டு வையுங்களேன்! :):o

 

காங்கிரசின் தோல்வியையும் கருணாநிதியின் தோல்வியையும் ஒப்பு கொள்ளும்  உங்கள் மனம் இதை ஏன் ஒப்புகொள்ளுதில்லை .

உண்மை எதுவென்றாலும் ஏற்றுகொள்ளுவோம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தில் திருமாவளவன் இப்பொழுது 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார் . விடுதலைச் சிறுத்தைகள் - 35003, அதிமுக - 45263, பாமக - 29862

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க படு தோல்வியை அடுத்து தி மு க வின் தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி நீக்கப்பட்டு அழகிரி அவர்கள் தி மு க பொறுப்பை எடுத்து இருக்கின்றார்.....

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமாரியில் மீண்டும் பாரதிய ஜனதா முன்னிலை. காங்கிரஸ் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக - 24737 , காங்கிரஸ் - 21150, அதிமுக - 14219

மத்திய சென்னையில் தற்பொழுது தயாநிதி மாறன் 2ம் இடத்தில் இருக்கிறார். அதிமுக- 21436 ,திமுக - 21288, தேதிமுக - 10085

  • கருத்துக்கள உறவுகள்
பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைகிறது !: இந்தியாவின் பிரதமராகிறார் நரேந்திர மோடி!!
16 மே 2014
மிகப்பெரும் தோல்வியை நோக்கி காங்கிரஸ்-
modi_CI.jpg

லோக்சபா தேர்தலில் இதுவரையிலான முடிவுகள் அடிப்படையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதுவரையிலான முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி 315 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் மாநிலக் கட்சிகள் 152 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 70 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருப்பதால் மத்தியில் ஆட்சியை அமைக்கிறது. அக்கட்சியின் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106964/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி: 335

 

காங்கிரஸ்: 65

 

மற்றவை:146

 

அதிமுக:36

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் 39 மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. புதுவையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

முன்னிலை தொகுதிகள் விவரம்:

 

01. தென்சென்னை - அதிமுக

02. மத்திய சென்னை - அதிமுக

03. வடசென்னை  - அதிமுக

04. திருவள்ளூர் - அதிமுக

05. ஸ்ரீபெரும்புதூர்  - அதிமுக

06. காஞ்சீபுரம் - அதிமுக

07. அரக்கோணம் - அதிமுக

08. வேலூர் -       அதிமுக

09. கிருஷ்ணகிரி - அதிமுக

10. தர்மபுரி -           பாமக

11. திருவண்ணாமலை - அதிமுக

12. ஆரணி -         அதிமுக

13. விழுப்புரம் - அதிமுக

14. கள்ளக்குறிச்சி - அதிமுக

15. சேலம்  -        அதிமுக

16. நாமக்கல் -      அதிமுக

17. ஈரோடு -           அதிமுக

18. திருப்பூர் -           அதிமுக

19. நீலகிரி -           அதிமுக

20. கோவை -           அதிமுக

21. பொள்ளாச்சி - அதிமுக

22. திண்டுக்கல் - அதிமுக

23. கரூர்    -      அதிமுக

24. திருச்சி -          அதிமுக

25. பெரம்பலூர் - அதிமுக

26. கடலூர் -          அதிமுக

27. சிதம்பரம் -          அதிமுக

28. மயிலாடுதுறை - அதிமுக

29. நாகபட்டினம் - அதிமுக

30. தஞ்சாவூர் -         அதிமுக

31. சிவகங்கை - அதிமுக

32. மதுரை -    அதிமுக

33. தேனி       -     அதிமுக

34. விருதுநகர் - அதிமுக

35. ராமநாதபுரம் - அதிமுக

36. தூத்துக்குடி -    அதிமுக

37. தென்காசி -        அதிமுக

38. திருநெல்வேலி - அதிமுக

39. கன்னியாகுமரி - பாஜக

40. புதுவையில்  -     காங்கிரஸ்

 


-தினமணி
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நேரப்படி காலை 11:15 மணி

அதிகாரபூர்வமாக முன்னிலை தெரிந்துள்ள 37 தொகுதிகளில் அ.தி.மு.க. 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

 

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் பாரதிய ஜனதாக் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த காங்கிரஸ் கட்சியின் எச் வசந்தகுமார் தற்போது பின்தங்க ஆரம்பித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்க்ரஸ் கட்சியின் நாராயணசாமியின் முன்னிலை நீடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 2 சுற்றுகளின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 26,309 வாக்குகள் முன்னிலை  

By dn, நாகப்பட்டினம்,

 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 2 சுற்றுகள் நிறைவில், அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 26,309 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 25,696 வாக்குகள் பெற்றார்.  மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர்அலி 11,851 வாக்குகளும், பாமக வேட்பாளர் க. அகோரம் 10,622 வாக்குகளும் பெற்று முறையே 2 மற்றும் 3-ம் இடங்களைப் பெற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் 3,047 வாக்குகள் பெற்று 4-மிடம் பெற்றார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுப்படி, அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியை விட  13,845 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றார்.

2-ம் சுற்று... 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 23,981 வாக்குகள் பெற்றார். மமக வேட்பாளர் செ. ஹைதர்அலி 11,517 வாக்குகளும், பாமக வேட்பாளர் க. அகோரம் 9,998 வாக்குகளும் பெற்றனர்.  2-ம் சுற்றில் மட்டும் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் , மமக வேட்பாளரை விட 12,464 வாக்குகள் அதிகம் பெற்றார்.

இதன் மூலம், 2 சுற்றுகளின் நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியைவிட 26,309 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

 


-தினமணி

உலகின் மிகப்பெரிய, கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்ட இந்தியாவில் எந்தவித திறமையோ, குறிப்பிடத்தக்க புத்திக்கூர்மையோ இல்லாத ராகுலை பிரதமராக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கினால்...
  • கருத்துக்கள உறவுகள்

2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை

மதுரை : 2 -வது ரவுண்ட் நிலவரம்

அதிமுக - ஆர்.கோபாலகிருஷ்ணன் - 29,156

திமுக  - வ.வேலுச்சாமி - 14,938

தேமுதிக -சிவமுத்துகுமார் -  7,349

காங்கிரஸ் - பரத்நாச்சியப்பன் - 2,191

சிபிஎம் - பா.விக்கிரமன் - 1892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உலகின் மிகப்பெரிய, கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தைக் கொண்ட இந்தியாவில் எந்தவித திறமையோ, குறிப்பிடத்தக்க புத்திக்கூர்மையோ இல்லாத ராகுலை பிரதமராக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கினால்...

'காந்தி' ட்ரேட் மார்க்கை கொள்ளையடித்து, கண்ட கழுதைகளின் கழுத்தில் கட்டினாலும் மக்கள் ஏமாந்து வாக்களிப்பார்கள் என்ற தவறான நினைப்பிற்கு சரியான படிப்பினையை காங்கிரசுக்கு கொடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி; நாராயணசாமி முன்னிலை

1368011922-2304.JPG

Tamil Nadu - Virudhunagar Counting In Progress Candidate Party Votes

 

RADHAKRISHNAN T All India Anna Dravida Munnetra Kazhagam 39851

VAIKO Marumalarchi Dravida Munnetra Kazhagam 23834

RETHINAVELU S Dravida Munnetra Kazhagam 21445

MANICKAM TAGORE B Indian National Congress 3320

 

Last Updated at 11:51 AM On 16/5/2014

Edited by VENDAN

  • கருத்துக்கள உறவுகள்
சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக 12,587 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 
 

சிவகங்கை மக்களவைத் தொகுதி முதல் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன் 12,587 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

முதல் சுற்று வாக்குகள் முடிவு.அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 24,396, திமுக வேட்பாளர் சுப.துரைராஜ் 11,809, பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 6,866, காங். வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் 6,111, இந்திய கம்யூ. வேட்பாளர் கிருஷ்ணன் 975, நோட்டா 418.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்., கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தோல்விமுகம்! :lol:

மொத்தம் 621 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம்! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Araathu அராத்து

ஜெயலலிதா - தி ரியல் வின்னர்.

இந்த தேர்தலில் மோடிக்கு அடுத்து ரியல் ஹீரோ அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதாதான். இந்தியா முழுக்க மோடி அலை அடித்தபோது , மற்ற கட்சியினர் எல்லாம் மோடி அலை இல்லை இல்லை என புலம்பிக்கொண்டு இருக்கையில் , மோடி அலை பற்றி பேசாமலேயே , மோடி அலையை தமிழகத்தில் கிளம்ப விடாமல் அடித்தவர் ஜெ மட்டுமே. மேற்கு வங்கத்தில் கூட பாஜக 3 தொகுதிக்கு மேல் வெல்லும் போலத்தெரிகிறது.

இந்திய அளவில் , பாஜக , காங்கிரஸுக்கு அடுத்து எம்பிக்கள் அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கிறது அதிமுக.

எம்ஜியார் கூட செய்யாத , நினைத்துப்பார்க்காத சாதனை இது. ஒரு கூட்டணியும் இல்லாமல் அநாயாசமாக சாதித்துக்காட்டியுள்ளார்.

கலைஞர்தான் ராஜதந்திரி , ஜெயலலிதாவிற்கு ஒன்றும் தெரியாது , திமிர் பிடித்தவர் , எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுபவர் என்ற விமர்சனங்கள் பல்லாண்டு கால அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுவது உண்டு. அது எல்லாம் வெற்று உளறல்கள் என்று வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் காட்டிக்கொண்டுள்ளன.

பெரியார் மண்ணாக இருந்தாலும் , பெரியார் வழித்தோன்றல்களின் திராவிட கட்சிகள் கோலோச்சும் மாநிலமாக இருந்தாலும் , பெண்களை அரசியல் மேடையில் அருவருக்கத்தக்க வகையில் அதிக பட்சம் இழிவு படுத்தும் மாநிலம் தமிழகம்தான். இந்தப்பின்னணியில் ,ஒரு பெண்ணாக அவரின் இந்த சாதனை இமாலய சாதனை.

ஆனாலும் அம்மாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. பாஜக 273 இடங்களை தனியாகவே தாண்டும் போலத்தெரிவதால் , 37 எம்பிக்களை வைத்திருந்தும் மத்தியில் அம்மாவால் ஆதிக்கம் செலுத்தவே முடியாது. மத்திய அரசை அனுசரித்துப்போவதும் அம்மாவுக்கு கை வராத கலை.

திமுகவுக்கு பிரச்சனை இல்லை , பொத்தாம் பொதுவாக இனி மத்திய மாநில அரசுகளே ! என தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை .

இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது .

 

புலிகள் தோன்றியிராது போயிருந்தால்......! இன்று வெளிநாடுகளில், தமிழர் என்றால் அது என்ன? எங்கு இருக்கிறது? என்று கேட்கும் நிலையே தொடர்ந்திருக்கும். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.