Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கங்களை படமெடுத்த விரிவுரையாளருக்கு விளக்கமறியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.

குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/111112-2014-05-20-05-50-43.html

  • கருத்துக்கள உறவுகள்

----

மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.

------

 

பிருட்டம், என்றால்.... எந்தப் பகுதி?

  • கருத்துக்கள உறவுகள்

பிருட்டம், என்றால்.... எந்தப் பகுதி?

 

பிருட்டம் இல்லை பிட்டம். எழுத்துப்பிழை என நினைக்கிறேன் :D

பிட்டம் என்றால் மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி ஆகும். :lol:

இவர் எந்தப் பல்கலைக் கழக விரிவுரையாளர் என்பதும் அவர் ஆணா?பெண்ணா? என்பதும் செய்தியில் இல்லையாம்  :D

 

  • கருத்துக்கள உறவுகள்

பிருட்டம் இல்லை பிட்டம். எழுத்துப்பிழை என நினைக்கிறேன் :D

பிட்டம் என்றால் மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி ஆகும். :lol:

இவர் எந்தப் பல்கலைக் கழக விரிவுரையாளர் என்பதும் அவர் ஆணா?பெண்ணா? என்பதும் செய்தியில் இல்லையாம்  :D

ஆண்களின் பின்னழகை படம் எடுத்த பெண் விரிவுரையாளரை வன்மையாக கண்டிக்கிறேன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
எந்த ஆதாரமும் அற்ற வெறும் மொட்டை செய்தி.
 
எப்படி நம்புவது?

பிருட்டம் இல்லை பிட்டம். எழுத்துப்பிழை என நினைக்கிறேன் :D

பிட்டம் என்றால் மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி ஆகும். :lol:

இவர் எந்தப் பல்கலைக் கழக விரிவுரையாளர் என்பதும் அவர் ஆணா?பெண்ணா? என்பதும் செய்தியில் இல்லையாம்  :D
 

 
அநேகமாக (dermatologist) தேர்மட்லோகிஸ்ட் ஆகத்தான் இருக்கும்.
தோல்கள் பற்றி இவளவு ஆழமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். (medical college?)
 
research & development     மருத்துவத்துறைக்கு முக்கியமானது என்பதை கோர்ட் கவனத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

பிருட்டம் இல்லை பிட்டம். எழுத்துப்பிழை என நினைக்கிறேன் :D

 

மன்னிக்கவும் வாத்தியார் 'பிருட்டம்' என்பது சரியான வடசொல் வழக்கு. 'குண்டி' என்பதனை வடமொழியில் பிருஷ்டம் என்பர். பொதுவாக "ஷ" கொண்டுவரும் வடமொழிச் சொற்கள் தமிழுக்கு வரும்போது "ட" வாக மாறும்.

 

எடுத்துக்காட்டு:

விஷம் - விடம்

நிமிஷம் - நிமிடம்

உபநிஷதம் உபநிடதம்

நஷ்டம் - நட்டம்

 

அழகிய பெண்களின் பிருட்டம் மத்தாளத்துக்குக்கூட உவமிக்கப்படுவதுண்டு!. (நம்ம த.பெ. அல்ல :D)

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இசை மருதங்கேணி மற்றும் வாலி உங்களின் மேலதிக விளக்கங்களுக்கு
நன்றிகள் ( ஆளை விடுங்கப்பா சாமி இனிமேல் இந்தப்பக்கமே வரமாட்டன் ) :D :D :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோள்பட்டை பயிற்சி.......

 

b1d5e41e-7daf-44a4-96e1-63c117112fe9_S_s

 

முதலில் தரையில் விரிப்பை விரித்து நேராக படுத்து கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கழுத்து அழுத்தத்தை குறைக்க உங்கள் பின்புறம் மற்றும் தோள்கள் கீழ் ஒரு போர்வை வைத்துக் கொள்ளலாம்.. முதலில் உங்கள் கால்கள் இரண்டையும் இடுப்பு வரை மெதுவாக மேலே தூக்கவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது இடுப்பு வரை தூக்குவதோடு நிறுத்திக்கொள்ளலாம்.
 
பின்னர் நன்கு பழகிய பின்னர் உங்கள் கால்களை இடுப்பு, மார்பு வரை (உடல் முழுவதும் ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு) தூக்க வேண்டும். கைகளை உங்கள் இடுப்பிற்கு பேலன்சாக வைத்துக் கொள்ள வேண்டும். படத்தில் உள்ளது போல் செய்யவும். ஒரு நேர் கோட்டில் உங்கள் தோள்கள் முதல் கணுக்கால் வரை இருக்க வேண்டும்.
 
பின்னர் கால்களை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு வர வேண்டும்.. இந்த பயிற்சியை உயர் இரத்த அழுத்தம் அல்லது கண் நோய்கள் உள்ளவர்களும் கழுத்து அல்லது தோள்பட்டை காயம் உள்ளவர்களும்  செய்ய கூடாது. ஆரம்பத்தில் இந்த பயிற்சியை சுவற்றில் கால்களை வைத்து செய்யலாம்.
 
நன்கு பழகி பின்னர் சுவற்றின் துணையில்லாமல் செய்ய ஆரம்பிக்க தொடங்கலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிக்கும் போது பயிற்சியாளரின் துணையில்லாமல் செய்ய கூடாது. இந்த பயிறிசி செய்வதால் கழுத்து மற்றும் தோள்கள், பிட்டம் மற்றும் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. கால்கள், பிட்டம் போன்றவை அழகான வடிவம் பெறுகிறது
 
 
  • கருத்துக்கள உறவுகள்

குண்டி என்பது கெட்ட வார்த்தையா?
ஆங்கிலத்தில் Ass என்றும், ஜேர்மனில் Ash என்றும் சகஜமாக பாவிக்கும் போது....
தமிழ் இணையங்கள்.... மட்டும் வழக்கில் இல்லாத இலக்கிய  மொழியை... பாவித்து, நமக்கு ஏன் சிரமத்தை தருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்குள்ள சிறப்புகளில் ஒன்று.. இடக்கரடக்கல்.. குழூக்குறி..!

 

(சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள்[1]. அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும். - நன்றி தமிழ் விக்கிபீடியா)

 

அதனை பாவிக்காமல்.. ஆங்கிலேயன்.. எடுத்ததுக்கும் பெத்த அம்மாவை கீழ்த்தரமா பேசுறதை ஒத்த... வழக்கை கையாளுங்கோ என்றது ஏனென்று புரியல்ல. :)

 

அதுபோக...................

 

படம் எடுக்கேக்க.. வெளிய நீட்டுக்கொண்டும்.. துரித்துக் கொண்டும்.. காட்டிக் கொண்டும் நிற்கிற அங்கங்கள் சூமிங்கில்.. தெளிவா தெரியுறதுக்கு அந்தாள் என்ன செய்யும்... :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பிருட்டம் இல்லை பிட்டம். எழுத்துப்பிழை என நினைக்கிறேன் :D

பிட்டம் என்றால் மனிதனின் பின்புறத்தில் முதுகுக்குக் கீழ் இருக்கும் உட்காரும் பகுதி ஆகும். :lol:

இவர் எந்தப் பல்கலைக் கழக விரிவுரையாளர் என்பதும் அவர் ஆணா?பெண்ணா? என்பதும் செய்தியில் இல்லையாம்  :D

 

 

ஆணோ

பெண்ணோ.....

இவரிடம்  பெண்களும் ஆண்களும் கவனமாக இருங்கள்...

(வாத்தியாரை  மீண்டும் வரவழைக்கும் முயற்சி :D )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.