Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க்கவி சோபாசக்தி தீபச்செல்வன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி சோபாசக்தி தீபச்செல்வன்

-    வ.ஐ.ச.ஜெயபாலன்

 

 

                     தமிழ்க்கவி, சோபாசக்தி, தீபச்செல்வன் மூவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். இவர்களுள் தமிழ்க்கவியைத்தான் எனக்கு நெடுங்காலமாகத் தெரியும். அவரை  இரண்டாவது வன்னி அரசு (தமிழ் ஈழ அரசு)க் காலக்கட்டத்தில் கிழிநொச்சியில் சந்தித்து நண்பரானேன்.  கிழிநொச்சியில் அந்தனிஜீவா தலைமையில் வந்த மலையக தமிழ் பிரதிநிதிகளுடனான ஒன்று கூடலில்தான் தமிழ்க் கவியை முதன் முதலாக சந்திததாக ஞாபகம். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கலைதுறையை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த கருணாகரன் விமர்சகர் நிலாந்தன் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். சந்திப்பின்போது பொறுப்பாளர்கள் மலையக தமிழ் அரசியல் பற்றி தெரிவித்த கருத்துடன் முரண்பட்டு விவாதித்தேன். அதற்காக அந்தனிகஜீவா எனக்கு நன்றி கூறினார். அந்தத் தருணத்தில் தமிழ்க்கவியும் என்னை ஆதரித்து குரல்கொடுத்தார்.வன்னியில் நான் சந்தித்த பிழைகளைத் தட்டிக்கேட்க்கும் ஒருசில போராளிகளுள் அவரும் ஒருவர். .

அதன் பின் வெகுகாலத்துக்குப்பின்னர் பரிசில் சோபாசக்தியை சந்தித்தேன். சந்திக்க முன்னமே சோபாசக்தியை நான் வாசித்திருந்தேன். அவர் முன்னைநாள் விடுதலைப் புலி போராளி என்பதையும் அறிந்திருந்தேன். அவருடைய கருத்துகள் சிலவற்றில் எனக்கு உடன்பாடிருந்தது. சிலவற்றில் விமர்சனம் இருந்தது.. ஆனாலும் நான் மதிக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் பட்டியலில் அவர் இடம்பெற்றிருந்தார். சந்தித்தபோது அவர் என்னைபற்றி குறிப்பாக சாதி ஒடுக்குதலுகெதிரான என்னுடைய பதின்ம வயதுக் (Teen age) கிளற்ச்சிகள் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது. எனது தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த கதைகள் அவை.. கெரிலாவில் தந்தையாரின் நிலத்தை ஏழைகளுக்குப் பகிரும் பாத்திரப் படைப்பில் என்னுடைய இளமை வாழ்வின் செல்வாக்கிருப்பதாகச் சொன்னார். அது உண்மையா என்பது எனக்குத் தெரியாது. நமக்கிடையிலான முரண்பாடுளும் விமர்சனங்களும் எம்முடைய நட்புக்கு ஒருபோதும் தடையாக அமையவில்லை.

கவிஞர்கள் என்ற வகையில் எனக்கும் தீபச்செல்வனுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அவருடனான தொடர்பு முகநூல்போன்ற இணைய  உடகங்களூடாகவே ஏற்பட்டது. இருவருக்குமான உறவும்கூட விமர்சனங்களால் செழுமைப் பட்ட உறவுதான். அவருடைய கவிதைகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர் உடகத்துறையில் முதுகலை கற்க்க சென்னை வந்தபோது நாம் நெருங்கிய நண்பர்களானோம்

இது மூன்று தலைமுறை கலை இலக்கியத் துறை நண்பர்கள் பற்றிய குறிப்பாகும். சோபா சக்தியும் தமிழ்க்கவியும் வெவ்வேறு காலக்கட்டங்களில் விடுதலைப் புலிகளோடு சம்பந்தப் பட்டிருந்தவர்கள். தமிழ்கவி விடுதலைப் புகளில் இணைந்த காலக் கட்டத்துக்கு முன்பே சோபாசக்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வில்லகிவிட்டார் என நம்புகிறேன். மாணவர் தலைவனாகவும் கவிஞராகவும் செயல்ப்பட்ட தீபச்செல்வன் பின்னர் ஊடகவியலாளராகவும் நிதர்சன்னத்தில் பணியாற்றி இருக்கிறார். ஒருவகையில் அவரும் பேனா தாங்கிய போராளிதான்.

அண்மையில் என்னுடை நண்பன் தீபச் செல்வன் சினேகிதி தமிழ்கவியின் நேர்காணல் தொடர்பாக தமிழ்க்கவியையும் நேர்கண்ட சோபாசக்தியையும் கண்டித்து எழுதியிருந்ததை யாழ் இணையத்தில் வாசித்தேன்.

நாங்கள் நால்வருமே துணிச்சலானவர்கள். நம் மனசில் சரியெனப்படுவதை இடம் பொருள் ஏவல் கண்டு அஞ்சாமல் சொல்லும் துணிச்சல் உள்ளவர்கள்.

சோபாசக்தி என்னையும் தமிழ்க் கவியையும் தீபச் செல்வனையும் நேர்கண்டு தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நேர்காணும் ஒரு ஊடகவியலாளராய் மிக கடுமையான கேழ்விகளூடாக உண்மை நிலையை வெளியே கொண்டுவரும் உரிமை அவருக்கு உண்டு. இன்னொரு ஊடகவியலாளராக தீபச் செல்வன் இதனை மறுக்க முடியாது. நானோ தீபச் செல்வனோ தமிழ்க் கவியோ சொல்லும் பதில்கள்தான் நேர்காணலில் முக்கியமானவை. அவற்றை சோபாசக்தி சிதைத்திருந்தால் வெட்டியிருந்தால் தீபச்செல்வன் மட்டுமல்ல நானும் சோபாசக்தியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பேன். தமிழ்க் கவியின் பேட்டியில் பல இடங்களில் “தலைவரிடம் நான் அளப்பரிய மரியாதை வைத்திருந்தேன், வைத்திருக்கிறேன். வைத்திருப்பேன்” என்பதுபோன்ற துணிச்சலான கூற்றுக்கள் நிரம்பியுள்ளன. தமிழ்க்கவியின் நேர்காணலில் அத்தகைய பகுதிகளைக்கூட வெட்டாமல் வெளியிட்டபின்னர் கேட்ட கேழ்விகளுக்காக சோபாசக்தியையோ  கொச்சைப் படுத்துவது நான் மதிக்கும் கவிஞனும் ஊடகவியலாளனுமான தீபச்செல்வனுக்கு பொருத்தமானதுமல்ல. அறமும் அல்ல.

தமிழ்கவி கூறிய பல விடயங்கள் புதியவையல்ல. அவற்றுள் முக்கியமான பலதை ஏற்கனெவே நான் தமிழகத்திலும் ஈழத்திலும் சந்தித்த வன்னிமக்கள் கூறக்கேட்டிருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வன்னியைச் சேர்ந்த பலர் அவர்களது உறவுகளூடாக இத்தகைய செய்திகளைத் கேழ்விப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கூற்றுகள் பிழையானவை என்று விவாதிக்கவும் தன்னிடமுள்ள முரண்பட்ட ஆதாரங்களை ஊடகங்களில் முன்வைக்கவும் ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் தீபச் செல்வனுக்கு உரிமையும் கடமையும் இருக்கிறது. அதனை தீபச்செல்வன் செய்திருந்தால் நான் தீபச்செல்வனைப் பாராட்டியிருப்பேன்.

தனது பதில் திரித்து வெளியிடப் பட்டிருந்தால் மட்டுமே தீபச்செலன்  கோபப்பட்டிருக்கலாம். வெளிநடப்புச் செய்யாமல் பதில் சொன்ன ஒரு நேர்காணலில் கேட்க்கப் பட்ட கேழ்விகளுக்காக நேர்கண்டவரைக் கோபிப்பது ஊடக தர்மமல்ல. .தீபச்செல்வனின் பின்வரும் கூற்று அத்தகையதே.  ..

 

”""முடிந்தவரை புலி எதிர்பாளர்களை உருவாக்குவதுதான் ஷோபாசக்தி போன்றவர்களின் கடமை. புலிகள் இயக்கத்திற்கு எதிரான அவதூறுகளை எழுதுவதும் மற்றவர்களை சொல்லத் தூண்டுவதும்தான் அவர்களது தொழில். அதற்காக அவர்கள் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கேட்ட சில கேள்விகளும் தமிழ்கவி அம்மாவிடம் கேட்ட சில கேள்விகளும் ஷோபாசக்தியின் குரூரத்தின் வெளிப்பாடுகளே. சில கேள்விகள் ஷோபாசக்திக்கு புலிகள் தொடர்பாக எந்த அறிவு இருந்திருக்கிறது என்ன பார்வை இருந்திருக்கிறது என்பதை  எல்லாம் தெளிவாகக் காட்டுகிறது.”""

 

.முக்கியமான சர்வதேச ஊடகங்களின் நேர்காணல்களுக்குப் பரீட்சயமான ஒருவன் என்கிற முறையில் இந்த கூற்றின் தர்க்கம் ஏற்புடையதாக ஊடகத் தர்மம் சார்ந்ததாக இல்லை.

 

தீபச்செல்வன் சமகாலத்தின் முன்னணிக் கவிஞன். துணிச்சலும் நேர்மையும் உள்ளவன். அதனால்தான் என்னுடைய முக்கிய கவிதைத் தொகுப்பான தோற்றுப் போனவர்களின் பாடலுக்கு அவனது முன்னுரையைக் கோரிப் பெற்றுப் பிரசுரித்தேன். தமிழ்கவியின் பேட்டி தொடர்பாக முன்வைத்த கருத்துக்களை தீபச்செல்வன் மீழாய்வு செய்யவேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  

யாழ் இணையத்தளத்தில் வல்வை சகாறா என்ற கனடாவில் வாழும் விடுதலைப் போராட்ட ஆதரவாளர் பின்வரும் கருத்தை எழுதியிருக்கிறார்.

 

""“தமிழ்கவி நிறைய விடயங்களைப்பகிர்ந்திருக்கிறார். துணிச்சலானவராக அவர் இருப்பதுதான் இன்று வரைக்கும் அவரை நிமிர்வாக வைத்திருக்கிறது. எதற்குமே அஞ்சாத பெண்ணாக தன்னை வெளிப்படுத்தி நாங்கள் அறிந்த விடயங்களையும் அறியாத விடயங்களையும் கூறியிருக்கிறார். அவருடைய கூற்றுக்கு மறுப்பு சொல்வதோ, இதை இப்போது சொல்லக்கூடாது என்று அழுத்தங்கொடுப்பதோ என்னைப் பொருத்தவரையில் என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. காரணம் கடந்தவற்றிலிருந்து நாம் எம்மை திடப்படுத்திக் கொள்ளவும், எமக்கான நிமிர்வை கைக்கொள்ளவும் அவருடைய கூற்றுகள் எமக்கு காலத்தின் தேவையாக இருக்கிறது. தமிழ்கவியின் இப்பகிர்வை பத்திரப்படுத்தி வைக்கும் அளவுக்கு இவற்றிலுள்ள விடயங்கள் இருக்கின்றன. பேசக்கூடியவர்களையெல்லாம் ஊமையாக்கிவிட்டு புலம் பெயர்ந்த பொய்மைத்தனங்களுக்குள் கட்டுண்டு நிற்க முடியாது.”""

 

அவரது கருத்து கவனிப்புக்கும் விவாதத்துக்கும் உரியது..

 

நாம் வந்து சேர்ந்த இடம்பற்றிய உண்மையை தேடி விசாரித்து  தெரிந்துகொண்டால் மட்டுமே நாம் செல்ல வேண்டிய இடத்துக்கான சரியான பாதையைக் கண்டடைய முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் கருத்தினை நவம் (சிவா சின்னப்பொடி) அவர்கள் தீபச்செல்வனின் பதிவில் எழுதியிருந்தார்: கவிஞரே உங்கள் பார்வைக்கு இதனை மீளவும் இங்கு பகிர்கிறேன்.

 

navam

உறுப்பினர்

  • photo-thumb-2907.jpeg?_r=1357552799
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.png
  • 464 posts
  • Gender:Male
  • Location:france

Posted Today, 03:09 AM

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்வது ஒன்று தான் நிகழ்கால மற்றும் எதிர்கால தவறுகளை தவிர்த்து முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி என்பது உண்மை .கடந்த கால தவறுகளைப் பற்றிய விமர்சனம் சுயவிமர்சனம் மீளாய்வு என்பனவும் அவசியம் என்பதும் உண்மை.ஆனால் அந்த விமர்சனம் சுயவிமர்சனம் மற்றும் மீளாய்வு என்பவற்றை எங்கே எப்போது எந்தத் தளத்தில் முன்வைப்பது  என்பது மிக முக்கியமானது.
அதிலும்  இத்தகைய விமர்சனம் சுய விமர்சனம் மற்றும் மீளாய்வு என்பன எப்போதும் எதிரிக்கு   சாதகமாக அவனது நலன்களுக்கு துணை புரியும் ஆபத்தை கொண்டவை என்பது முக்கியமானது.எதிரி பலமுள்ளவனாகவும் அவனுக்கு எதிராக போராடும் தரப்பு பலவினமாக உள்ள நிலையில் பகிரங்கமாக வைக்கப்படும் விமர்சனங்கள் போராடும் தரப்பையும் ஒடுக்கமுறைக்குள்ளான சமூகத்தையும் பலவீனப்படுத்தி பிளவு படுத்தும்.பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழனத்தை கருவறுக்க விஸ்வரூபம் எடுத்திரும் இன்றைய நிலையில் இத்தகைய விமர்சனங்கள் எமது மக்களை அவ நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி அடிமை வாழ்வை ஏற்கொள்ளும் நிலைக்கு தள்ளும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கொடிய ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள ஒரு  இனம் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் எதிரியை எதிர்கொள்ளும் ஆற்றலுக்கூடாகத்தான் தனது தவறுகளை பகிரங்கமாக விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.அதுவரை உள்ளக மட்டத்திலே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒரே வரியில் சொல்வதானால் சகோதரி தமிழ்கவி மாவீரர்களான தனது பிள்ளைகளின் விதைகுழிகளில் மலத்தை அள்ளிக் கொட்;டியிருக்கிறார்;.
 
'அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் எமது தலைவிதியல்ல-
எழுவதும் எதிர்த்துநிற்பதும் தடைகளை தகர்த்து முன்னேறுவதும் 
காலம் எமக்கிட்ட கட்டளை'
http://sivasinnapodi.wordpress.com/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, என் மதிப்புக்குரிய தோழி இதையெல்லாம் எப்பவோ தாண்டி வந்தாச்சு. நீங்களும் 2014லுக்கு வந்து சேரவேணும்.. காத்திருப்புடன் 

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது.
எல்லோரும் எப்போது 2065 க்கு வந்து சேர்விகளோ  தெரியவில்லை. நீங்கள் வரும்போது நாங்கள் அங்கு தங்கி நிற்போமா என்பதும் கேள்விக்குறிதான்.
இங்கே விளம்பர தாரரின் விளம்பரம் மிகவும் கட்டுபடுத்த பட்டிருக்கும்.
ஒரு பொருளின் உள்ளே என்ன இருக்கிறது என்பது உல்ற்றா ப்ளு ரே தெளிவுடன் 3டி  யில் காட்டப்படும்.
ஆகவே இனியும் அறிந்த பெயர்களை மட்டுமே வைத்து பொருட்களை சந்தையில் வாங்க வேண்டும் என்ற 
எந்த கட்டாயமும் இல்லை.
பெயருக்காக அதிக விலை கொடுத்து சோனி வாங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
அதை விட திறமையான தொழில்நுட்பங்கள் புகுத்த பட்டு சாம்சுங் சந்தைக்கு வருகிறது.
 
பழைய ஸ்பீகர்களில் பாட்டு கேட்கும் மக்களின் தொகை வெகுவாக அருகி வருகிறது. ஸ்பீக்கர் காரர்கள் இன்னமும் தமக்கு மட்டுமே பாட்டு போட தெரியும் என்ற நினைப்பில் போட்டு கொண்டு திரிகிறார்கள். அதைவிட துல்லிய தெளிவுடன் இசைகளை சிறிய ஹெட் போன்களில் மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள்.
 
முன்பு மகாபாரதம் தெரிந்துவிட்டால் .............. எதோ தமக்குத்தான் உலகம் தெரியும் என்று பீலா விடுவது சுலபமாக இருந்தது. அவளவு பெரிய புத்தகத்தை படிக்க எல்லோருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இலகுவாக எல்லா இடமும்  காவவும் முடியாது. இப்போ எந்த பக்கம் வேண்டும் என்று ஐ போனில் தட்டினால் விஷயம்  வெளியில் வருகிறது. 
 
பொருட்களை சந்தைக்கு கொண்டுவரும் போது அதற்குள் என்ன இருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.
ஏதும் இல்லாமல் சடைச்சு கொண்டு திரிந்தவர்கள் இப்போ சந்தை பக்கம் வருவதில்லை. சொந்தமாக இணைய பக்கங்கள் திறப்பது  இலகுவாக இருப்பதால். தாங்களே செய்து .... தங்களே பாவிப்பது போல் பாவனை காட்டி  வருகிறார்கள். இப்படி நிகழ்காலம் தெரியாத மூன்று முட்டாள்கள் சந்தித்துவிட்டால் 
அவருடையதை இவர்  வாங்குவது ...... இவருடையதை அவர் வாங்குவதும் என்று பண்ட மாற்றம் செய்துவிட்டு. பின்பு உலகிலேயே மிக சிறந்த பொருள் அதுதான் என்று புகழாரம் சூடி வருவார்கள். நன்றி கடனுக்கு  அந்த கொம்பனி யின் தயாரிப்பு முறை என்பதை நான் ஒருபோதும் ஏற்பதில்லை . ஆனால் அவர்கள்  தயாரித்த குறித்த பொருள்தான் உலகிலேயே பிரமாதாம் என்று பீலா விடுகிறார்கள்.
மக்கள் ஒரு வரியில் கேட்கிறார்கள் .....
பயனுள்ள விடயம் என்ன இருக்கிறது ?
 
நண்பர்களே ...........  
2065 இற்கு நீங்கள் விரைவாக வரும் பாக்கியம் கிடைத்தால். சிந்திப்போம் ... மன்னிக்கவும் சந்திப்போம்! 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையிலயோ அருச்சுணன் வில்லு.ஏன் கரட்டி ஓணானையே தேடுது கண்ணு.

Edited by poet

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ....

 

அதனுடன் சில உண்மைகள் நேரம் காலம்  அறிந்து சொல்வதும் நன்று , தவறுகள் நடந்து உண்மை உயிர் துறந்து போராடியது அதை விட உண்மை ...........................

புலிகள் பிழைவிடவில்லை என்று யாரும் சொல்லமுடியாது.ஆனால் அவர்கள் நிறைய சரிகளை செய்திருக்கிறார்கள்.
எதிரியின் தரப்போடு இருப்பவர்கள் அந்த பிழைகளை மட்டும்தான் மேலதிக புனைவுகளுடன் பூதக்கண்ணாடியால் பெருப்பித்து காட்டுகிறார்கள்.இது ஊடக தர்மமா?    

Edited by kkaran

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, என் மதிப்புக்குரிய தோழி இதையெல்லாம் எப்பவோ தாண்டி வந்தாச்சு. நீங்களும் 2014லுக்கு வந்து சேரவேணும்.. காத்திருப்புடன் 

 
கவிஞரே மன்னிக்க, சந்தர்ப்ப அரசியலுக்கும் ராஜதந்திர அரசியலுக்கும் வேறுபாடு உண்டல்லவா ? 2009இல் தான் இன்னமும் நானும் என்போல பலரும் இருக்கிறோம். காரணம் நாங்கள் இன்னும் துயர்களிலிருந்து விடுபடாதவர்களின் அவலங்களை மாற்றக்கூடிய ராஜதந்திர அரசியல் பாதையில் பயணிக்கிறோம். 2014 ஆண்டு பிறந்ததோடு பல்டி அடித்துக் கொள்வதுவா 2014 ஆண்டு பிறப்பின் பயன் ? ? 
 
தமிழ்க்கவியன்ரி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் அன்பும் இருந்தது. அவரது எழுத்துக்களுக்கு நானும் நீண்டகால வாசகி. அன்ரிக்கு அடிக்கடி சொல்வேன் அன்ரி எனத காதலியென. அந்தளவு அவவின் எழுத்தும் அவவின் துணிச்சலும் எனக்குப் பிடிக்கும். ஆனால் 2013இன் பின்னர் அன்ரி சந்தர்ப்ப அரசியலில் சிக்கியதை என்னால் மட்டுமல்ல அன்ரியின் எழுத்தை அவரது துணிச்சலை பிடித்த யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
தலைவனை பிடிக்கும் தலைவனின் கொள்கையை பிடிக்கும் ஆனால் தலைவனை நம்பிய அவர்வழி வந்த யாவரிலும் குறைபிடித்ததே பிடிக்கும் என்ற கொள்கையில் எனக்கு மறுகருத்துத்தான் உண்டு.
 
எனக்கும் தீபச்செல்வன் போல பல்லாயிரம் கேள்விகள் தமிழ்க்கவியன்ரியிடம் இருக்கிறது. அவற்றை நானும் எழுத விரும்புகிறேன். சோபா சக்தியின் கேள்விகள் போல என்னிடமும் என்போன்ற அன்ரியை நேசித்தவர்களிடமும் உண்டு இதே களத்தில் நாங்களும் கேள்விகளை எழுதுகிறோம். அதற்கான பதிலை எங்களுக்கும் தருவார் என நம்புகிறோம். 
 
விரைவில் தமிழ்க்கவியன்ரியிம் நாங்கள் கேட்கும் கேள்விகள் வரும்.....!
  • கருத்துக்கள உறவுகள்

எனது மனசாட்சிக்கு மதிப்பளிப்பதால்

மாவீரர்களது பெற்றோரை

மற்றும் தாயகவிடுதலைப்போரில் பங்காளீகளாக  இருந்தோரை நோக்கி

விரல் சுட்ட வருவதில்லை

தமிழ்க்கவிக்கு நான் எழதாததற்கும் எனது இந்தநிலையே  காரணம்

ஆனால் 

ஒன்றை  மட்டும் நான் புரிந்து கொள்கின்றேன்

அவர் எப்பொழுதும் ஒரு குறிக்கோளில் இருந்ததில்லை

அவரது பேட்டியே  அதை சொல்லி  நிற்கிறது

 

புலிகளை வசைபாடியபடியே

அவர்களுடன் மோதியபடியே 

தான் அவர்களுக்கான பேச்சாளராக இருந்தேன் என்கிறார்

இந்த இரு துருவ நாடகத்தை எவராலும் நடாத்தமுடியாது...

இந்த இரட்டை வேடம் தான் எம்மை அழித்தது  என்பதை அம்மா புரிந்து கொள்ளும் காலம் வரும்

அப்பொழுது

விமர்சனத்தை அம்மா  தரிசிப்பார்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஊரிலை, ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது எண்டு சொல்லுறவை.  இவையும் நல்லாப் படிச்சாக்காள் எண்டபடியாலை இவையின்ர சோறு வேகாது பாருங்கோ.  இவையெல்லாம் சும்மா கதிரையிலை இருந்து கொண்டு கிறுக்கத்தான் சரி.

 

 

அந்தம்மா ஏதோ சொல்ல உவையள் வேற எதாவது எழுதியிருப்பினம்.  அந்தம்மாவை நேரடியாகச் சந்தித்து ஆரும் ரகசியமாகக் கேட்டால்தான் உண்மை தெரியவரும்.

 

  கண்ணால் காண்பதும் பொய். 

காதால் கேட்பதும் பொய். 

தீர விசாரித்து அறிவதே மெய்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி.. இப்படின்னு ஒரு பெயரை வைச்சிக்கிட்டு.. யாரோ ஒரு ஜீவன்.. தனக்குத் தெரிந்த தமிழில் எதை எதையோ எழுத.. அதை எல்லாம்.. புலிகள் பற்றிய உண்மையின் சாட்சியம் என்று சிலர் வகுப்பெடுக்க விபரிக்க... பலரால் சமூக வலையில் அது ஓசில..பரப்பப்பட... எழுதினது உண்மையோ பொய்யோ.. என்ற அலசலுக்கு இடமில்லாமல்.. அது சமூக நச்சு விதைகளாக சமூகத்தில்.. ஊன்றப்படுகிறது. அது எனி வளர்ந்து இன்னும் எத்தனை துரோகிகளை உருவாக்குமோ யார் அறிவார்.

புலிகள் அமைப்பு என்பது தேசிய தலைவரை தலைமையாகக் கொண்ட... அவருக்குக்கும் இயக்க விதிமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும்.. எப்போதும் கட்டுப்பட்டு வாழ உழைக்க உறுதிபூண்ட மக்களே.

முன்னாள் புலி.. முள்ளிவாய்க்கால் புலி.. காட்டுப் புலி.. காட்டிக்கொடுப்புப் புலி.. கிலி.. என்ற கோஷ்டிகளின் கூக்குரல்களை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை. முள்ளிவாய்க்கால் என்ன.. தேசிய தலைவரின் வாசல் வரை.. சிங்கள அரசின் கூலிகளும்.. இந்தியக் கூலிகளும் நெருங்கியே வந்துள்ளனர். அவர்களும் கூடவே இடம்பெயர்ந்தும் போயுள்ளனர். வெளிநாடுகளுக்கு அகதிகளாக வந்தோரில் அவர்களும் அடக்கம். புலிகளுக்குள்ளும் அவர்கள் இருந்துள்ளனர். அது தமிழ்க்கவி உருவிலும் இருந்திருக்கலாம்... சோதிடக் கிழவர்கள் வடிவிலும் இருந்திருக்கலாம்.

எவன் எல்லாம் தமிழீழத்தையும்.. தாய் நாட்டையும்..தலைவரையும் புலிகள் அமைப்பையும் என்றும் மதிக்கிறானோ.. அவன் இவற்றிற்கு சாகும் வரை விசுவாசமாக இருப்பான் உழைப்பான். அவனே உண்மையான உணர்வுள்ள தமிழன். மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படவும் தேவையில்லை.. கணக்கில் எடுக்கவும் தேவை இல்லை.

புலிகளை மீளாய்வு செய்து.. உந்தப் பன்னாடைகள் தமிழீழம் எடுக்கப் போறதும் இல்ல... தமிழர்களுக்கு ஒரு விடிவை கொண்டு வரப் போறதும் இல்ல. தேசிய தலைவரின் வழிகாட்ட பாதையில் சென்றால் அன்றி வேற வழியில்.. தமிழீழமோ.. தமிழினத்தின் சமூக.. அரசியல் விடுதலையோ சாத்தியமில்லை. இந்த யதார்த்த நிலைப்பாட்டை உள்வாங்கிக் கொள்ளாத எந்த அரசியல் விமர்சனமும்.. வாசிக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டிய ஒன்றல்ல..! வேண்டும் என்றால் வாசித்து பொழுதுபோக்கிட்டு.. காறித்துப்பிட்டு போகலாம்..! அது உங்க சுதந்திரம் மக்களே..!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை இதில் பொயட் எழுதினத் சரி...தீபச்செல்வனையும்,சோபாசக்தி பேட்டி கண்டு எழுதியதாக ஞாபகம்.தமிழ்கவி கொடுத்த பேட்டி உண்மைக்கு முரணானது என்டால் அதை நிருபீக்க வேண்டியது ஊடகவியலாளானான தீ.செல்வனின் கடமை அதை விடுத்து சும்மா கண்டனம் தெரிவிப்பது ஊடகவியலாளாருக்கு அழகில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை. 2014ல் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆரோக்கியமமான விவாதங்கள் நடத்தக்கூடிய ஒரு தளமாக யாழ் மாறிவருகிறதை கண்டு மகிழ்ச்சி அடைகிறவர்களுள் நானும் ஒருவன். இன்னும்  யாழ் 2014க்கு முந்திய நிலைபாட்டில் எழுத சிந்திக்க முனைகிறவர்கள் யாழ் 2014க்கு வரவேணும் என்பது எனது வேண்டுகோள்.

.

சாந்தி நீங்கள் களத்தில் செய்யும் தொண்டு நிறுவன பணிகளை நான் எப்பவும் ஆதரிக்கிறவன். அதற்க்கு இராசதந்திர அணுகுமுறை அவசியம் என்ற உங்கள் கூற்றையும் ஆதரிக்கிறேன். ஆனால் களத்தில் இருந்து எழுதப்பட்ட அதிதீவிர வாதகருத்தை இங்கு வெட்டி ஒட்டியிருக்கிறீங்க இது போல பேசியதற்காகத்தானே என்னைக் கைது செய்து நாடு கடத்தினார்கள். இது நீங்க களப்பணி ஆற்ற உதவக்கூடிய ராசதந்திர செயல்பாடா? இல்லையே  இதை ஒரு விவாதமாக்கித். தொடர விருப்பமில்லை சாந்தி. 

Edited by poet

ஷோபா சக்திக்கு கொடுத்த வக்க்க்குவாக்கு மூலத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த மாதிரி ஏன் அவ விடுதலை புலிகளுடன் இருக்கும் போது இந்த சந்தேகங்களை அவர்களிடம் கேட்காமல் வாயை மூடி கொண்டிருந்தவ 

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞரே,
ஒருவரின் கருத்தை பகிர்வதில் எந்தவித ஜனநாயக மீறலும் செய்ததாக எந்த கருத்தாளரும் கோபிக்கவில்லை. தீபச்செல்வனின் கருத்தை ஒரு கருத்தாளராக பகிர்ந்தேன் அவ்வளவே. ஆனால் தமிழ்க்கவியன்ரியின் முன்னுக்குப் பின் முரண்பாடுகளும் தப்பித்தல் அரசியல்  பற்றிய விமர்சனம் எனக்கும் உண்டு. 
 
ஒரு கருத்தினை ஒரு வாசகியாக பகிர்ந்துள்ளேன் இப்பகிர்வை தயவு செய்து மனிதாபிமானப்பணிக்குள் இடைச்செருகல் செய்யாதீர்கள். தீபச்செல்வனும் என்னோடு இணைந்து கடந்த 5வருடங்களாக களப்பணிகளோடு இணைந்துள்ள ஒருவர். பலர் சொல்லாலே யாகம் செய்கிறார்கள் சிலர் மட்டுமே தலைவன் சொன்னது போல செயலுக்கு முன்னுரிமையும் சொல்லுக்கு கடையிடமும் கொடுத்து இயங்குகிறார்கள். ஆனால் சொல்வீரமே வெல்லுமென்ற உண்மையை முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் பலர் காவித்திரிவதைத் தான் ஏதென்று புரிய முடியவில்லை.
 
எதிரியோடு இராஜதந்திர அரசியல் யுத்தம் செய்யலாம் ஆனால் சந்தர்ப்ப அரசியல் செய்வது கனநாள் நிலைக்காது. அது ஒருநாள் தன்னை இழந்து போகும்.
 
நானோ தீபச்செல்வனோ மட்டுமல்ல இங்கு பலரும் களப்பணிகளில் தங்களை இணைத்துள்ளார்கள். பணிகளை அரசியல் தள்ளாட்டத்தினுள் புதைக்காமல் தீபச்செல்வனின் கருத்துக்கான கருத்தை பகிர்தலே சிறந்த கருத்தாடலை செய்ய ஏதுவாக இருக்கும். நீங்கள் நிச்சயம் சிறந்த கருத்தாடல் செய்வீர்கள் என நம்புகிறேன ஐயா.
 

Edited by shanthy

ஷோபா சக்திக்கு கொடுத்த வக்க்க்குவாக்கு மூலத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த மாதிரி ஏன் அவ விடுதலை புலிகளுடன் இருக்கும் போது இந்த சந்தேகங்களை அவர்களிடம் கேட்காமல் வாயை மூடி கொண்டிருந்தவ 

அதானே ,

தலைவரே நேரில் வந்து விளக்கம்  கொடுத்திருப்பார்.  :)

சோறு கூட தவிர்த்து இருக்கலாம் சோபா ...போன்றோர் ஆனால் அவர்களால் புலியை தவிர்த்து எழுத முடியாது என்பது உண்மை அதுதான் புலிகளின் பிரபாகரனின் வெற்றியும் கூட ..

 

அன்றும் இன்றும் அவர்களுக்கு சோறு போடுவது புலிகளே எவ்வளவு தியாகம் செய்த புலிகள் இவர்கள் சோற்றுக்கு தானே புனைத்து எழுதி திரியினம் இதுவும் ஒரு தியாகமா போகட்டும் விடுங்கோ .

 

தலைவன் நாமம் உச்சரித்துதானே அவர்கள் உணவே போகுது அதலால் பெருமை .

சோறு கூட தவிர்த்து இருக்கலாம் சோபா ...போன்றோர் ஆனால் அவர்களால் புலியை தவிர்த்து எழுத முடியாது என்பது உண்மை அதுதான் புலிகளின் பிரபாகரனின் வெற்றியும் கூட ..

 

அன்றும் இன்றும் அவர்களுக்கு சோறு போடுவது புலிகளே எவ்வளவு தியாகம் செய்த புலிகள் இவர்கள் சோற்றுக்கு தானே புனைத்து எழுதி திரியினம் இதுவும் ஒரு தியாகமா போகட்டும் விடுங்கோ .

 

தலைவன் நாமம் உச்சரித்துதானே அவர்கள் உணவே போகுது அதலால் பெருமை .

அப்ப இலங்கை அரசை பற்றி எழுதினால் மகிந்தா தான் சாப்பாடு போடுகின்றாரா உங்கள் எல்லோருக்கும் . :icon_mrgreen:

ஒருவரை ஒருவர் விமர்சிப்பதென்பதற்கு எங்கும் முடிவில்லை

புலி சார்பானவர்கள் ஏனையவர்களையும் ஏனையவர்ககள் புலிகளையும் முன்னாள் புலிகள் இன்நாள் புலிகளையும் புலிக்குள் புலிகளையும் என இவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்

 

இந்த விமர்சனங்கள் பிழைகளை திருத்தி சமூகத்தை முனநகர்த்துவதற்கானதா என்றால் நிச்சயமாக இல்லை

 

இந்த விமர்சனங்கள் சமூகத்தின் ஐக்கியப்பாட்டையும் ஒற்றுமையையும் கரிசனையாகக் கொண்டதா என்றால் நிச்சயமா அதுவும் இல்லைல.

 

இதன் அடிப்படையானது ஒருவன் முதுகை மற்றவன் ரத்தம் வரும்வரை சொறிவது, சொறிந்துகொண்டே இருப்பது... மாறி மாறி சொறிவது.

 

இவ்வாறான பிரச்சனைகளை பேசி எழுதி சமூகத்தில் அடயாளம் தேடுவது.

 

இவைகள் சாதி மத பிரதேசவாத பாரம்பரிய மனப்பிறள்வு நோய்க்கு உட்பட்டே அணுகப்படுகின்றது.

 

எவ்வகையான விமர்சனமாகட்டும் தேசியவாதமாகட்டும் இலக்கியமாகட்டும் மாக்சியமாகட்டுமம் எதுவானாலும் அவை இவ்வாறான நோய்க்கு உட்பட்டே அணுகப்படுகின்றது. அதனால் அவை எக்காலத்திலும் முழுமை அடைவதோ இல்லை முன்னேற்றகரமான விழைவை ஏற்படுத்துபவையோ இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் எவ்வகைப் போராட்டமும் எக்காலத்திலும் தனது இலக்கை அடையாது. எவ்வகை விமர்சனமும் எந்த ஒரு முன்னேற்றகரமான திசையில் செல்லாது.

 

ஒரு போராட்ட அமைப்பு இரண்டாக பிழந்தது பலவீனமானது என்பதை அது குறித்த விமர்சனத்தினுடாககவும் ஆராய்ச்சி ஊடாகவும் உணர்ந்துகொள்கின்றோம் என்றால் அதன் விழைவு ஒன்றாக இணைவதிலும் பலம் பெறுவதிலுமாகவே அறிவார்ந்த சமூகத்தில் இருக்க முடியும். ஆனால் நோய்வாய்ப்பட்ட சமூகத்தில் இரண்டு பிரிவு விமர்சனம் சொறிதல் போன்றவற்றின் பின்னால் 20 ஆக மேலும் பிழவடையும். இது கண்கூடாக காணும் உண்மை.

 

சம்மந்தப்பட்ட நேர்காணல் கேள்விகள் பதில்கள் எதிர்வினைகள் மத்தியஸ்தங்கள் எலல்லாம் எதிர்காலம் குறித்து எந்தப் பெறுமதியும் அற்றவை என்ற தெளிவுடன் இவற்றை அணுக முற்படவேண்டும்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புகுரிய சாந்தி நீங்கள் களத்தில் மிகுந்த நெருக்கடிகளுக்குள் நம் மக்களுக்கு அவசியமான தொண்டு நிறுவனப் பணிகள் செய்கிறவர். உங்கள் பணி சிக்கலின்றித் தொடர்வதற்கான இராசதந்திரம் புனைவு இலக்கியம் தவிர்ந்த அரசியல் கருத்து முரண்பாடான செயல்களை நிராகரிக்கிறது. இராசதந்திரத்தை அரசை சமாளித்து அவசியமான நற் பணிதொடரலாக மட்டும் பார்க்க வேண்டாம். அரசின் கவனத்தை ஈர்க்கிற விவாதங்களுக்குள் மாட்டுப்படாமையையும் அது கோரி நிற்கிறது. ஒருவர் எதிரிக்கு சார்பா இல்லையா துரோகியா இல்லையா என்கிற விவாதங்களும் உங்கள் பணியைப் பாதிக்கும். அதற்க்குத்தான் குறைந்தது 100 பேராவது இருக்கிறோமே.

 

ஈழத்தில் பசியிலும் மிடிமையிலும் உழலும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் பணியில் உங்களைப்போன்ற ஒருசிலர்தான் அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறார்கள். எழுதுகிற விவாதிக்கிற நமக்கெல்லாம் அது சாத்தியமில்லை.

 

உங்கள் பணிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

 

 

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞரே,
அரசியல் விவாதங்கள் அல்லது இலக்கிய அரசியல் சார்பு விவாதங்களில் பங்கேற்பதில்லையென்று தான் ஒதுங்கியிருந்தேன். கடந்த சில காலங்களாக அதிகம் கருத்து எழுதுவது கூட இல்லை. காரணம் பல இன்னல்கள் இடைஞ்சல்கள் ,காட்டிக்கொடுப்பு ,பழிதீர்ப்பு என பல களப்பணியாளர்களின் வாழ்வை விலைபேசிய தருணங்கள் என பல வகை இடைஞ்சல்கள். 
 
ஆனால் தமிழ்க்கவியன்ரி சொல்லும் தற்போதைய சந்தர்ப்ப அரசியல் அவரது நிலைப்பாடுகளை நானும் அவருடனான உறவின் மூலம் புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு சாட்சியமாக இருந்து கொண்டு அவரது ஆளுக்கு ஏற்ற அரசியல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமையாலேயே சில கருத்துக்களை நானும்  பகிர வேண்டிய நிலமை வந்தது.
 
மற்றும்படி எனக்கு யாரிலும் எவ்வித கசப்பும் இல்லை.
 
ஆயுதப்போராட்டம் வெல்லாது எனத்தான் முற்கூட்டியே அறிந்ததாக சொல்லும் தமிழ்க்கவியன்ரி எதற்காக ஆட்சேர்ப்பில் முன்னணியில் நின்றா ? அன்ரியின் பேச்சில் எடுபட்டு எத்தனை பேர் போராளிகளாகி மாவீரர்களாகினார்கள் ? அத்தனை உயிரின் பெறுமதியும் ஏன் அவரால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை ? இது போன்ற பல கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாதுள்ளது. 

 

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய சாந்தி நீங்களும் உங்கள் நற் பணியைப் பகிர்கிறவர்களும் சிக்கலின்றி வெற்றிபெறுவது மட்டுமே இப்ப முக்கியம். நீங்கள் இரண்டுகால்களையும் அந்த தோணியில் வைதிருந்தால் மட்டுமே அது சாத்தியம். உங்கள் கோபங்கள் ஈழத்து புனைகதை இலக்கியத்தை செழுமைப் படுத்தட்டுக்கும். தங்கள் நற் பணிகளுக்கு எனது ஆதரவும் நல் வாழ்த்துக்களும்.

அப்ப இலங்கை அரசை பற்றி எழுதினால் மகிந்தா தான் சாப்பாடு போடுகின்றாரா உங்கள் எல்லோருக்கும் . :icon_mrgreen:

ஒரு அரசும் ஒரு தனிமனிதனும் ஒன்றா அர்ஜுனன் அண்ணே ..

 

சும்மா போங்கோ பகிடி விடாமல் சிரியஸ்சா கதைக்கிற இடத்தில நின்று காமடி பண்ணிட்டு  :D  :D

மதிப்புகுரிய சாந்தி நீங்கள் களத்தில் மிகுந்த நெருக்கடிகளுக்குள் நம் மக்களுக்கு அவசியமான தொண்டு நிறுவனப் பணிகள் செய்கிறவர். உங்கள் பணி சிக்கலின்றித் தொடர்வதற்கான இராசதந்திரம் புனைவு இலக்கியம் தவிர்ந்த அரசியல் கருத்து முரண்பாடான செயல்களை நிராகரிக்கிறது. இராசதந்திரத்தை அரசை சமாளித்து அவசியமான நற் பணிதொடரலாக மட்டும் பார்க்க வேண்டாம். அரசின் கவனத்தை ஈர்க்கிற விவாதங்களுக்குள் மாட்டுப்படாமையையும் அது கோரி நிற்கிறது. ஒருவர் எதிரிக்கு சார்பா இல்லையா துரோகியா இல்லையா என்கிற விவாதங்களும் உங்கள் பணியைப் பாதிக்கும். அதற்க்குத்தான் குறைந்தது 100 பேராவது இருக்கிறோமே.

 

ஈழத்தில் பசியிலும் மிடிமையிலும் உழலும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் பணியில் உங்களைப்போன்ற ஒருசிலர்தான் அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறார்கள். எழுதுகிற விவாதிக்கிற நமக்கெல்லாம் அது சாத்தியமில்லை.

 

உங்கள் பணிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

 

 

சாந்தி, தனிப்பட்ட ரீதியில் நானும் உங்கள் அரசியல் / போராட்டம் சார்பான எழுத்துக்கள் தொடர்பாக இதே கருத்தைத் தான் கொண்டுள்ளேன். மிகவும் அவசியமான தொண்டு நிறுவனப் பணிகள் செய்கின்ற நீங்கள் இவ்வாறான அரசியல் கருத்துகளை எழுதும் போது அது அவற்றிற்கு பாதிப்பை உருவாக்காதா என்ற கேள்வி எனக்கு எப்போதுமே எழும்.

என்ன கருத்துகளை எழுதவேண்டும் என்றும் எப்படியான கருத்துகளுக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் உரிமை என்பதை அறிவேன். எனவே நான் மேலே சொல்லியிருப்பது என் தனிப்பட்ட எண்ணமாக மட்டும் பார்க்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.