Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவுணாவத்தை வேள்விக்கு நீதிமன்று தடை!

Featured Replies

kavunavathai%2023687d.jpg

கீரிமலை, கருகம்பனை, கவுணாவத்தை ஆலயத்தில் இம்முறை நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடா வெட்டுவதாக இருந்தால் பிரிவு 4 இன் கீழ் பிரதேச சபையிடம் முன் அனுமதி பெற்று வர்த்தமானி மூலம் பொது அறிவித்தல் விடுத்து இதனை மேற்கொள்ள முடியும் எனவும் நீதிமன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்காளாக நடைபெற்று வந்த வேள்வி திடீரென தடை செய்யப்பட்டமையால் சம்பந்தப்பட்டோர் கவலை தெரிவித்துள்ளமையுடன் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

malaum

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் ஜயா நீதிபதியாக இருக்கும் பொழுது வேள்வி நடத்தலாம் என தீர்ப்பு வழங்கிய ஞாபகம்....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ, கெட்டதோ... நான் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்!

தெய்வத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கேவலங்கள், எம்மை மனிதாபிமானமில்லாதவர்களா த் தான், உலகத்துக்கு எம்மை அடையாளம் காட்டி நிற்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் பெயரால் மிருகவதை.காட்டுமிராண்டித்தனம்.,

நீதிபதிக்கு ஒரு ஓப்போடு.

நான் இந்த தீர்ப்பை ஆதரிக்கவில்லை.

கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மிருகங்கள் ராசாவாட்டம் வாழும்.

மக்டோனால்ட் ஹப்பி மீல் கோழி 42 நாட்கள் நரகத்தில் வாழும்.

அப்படி என்ன மிருகவதை நடக்கிறது? நாலாம் மாடியிலா வேள்வி நடக்கிறது?

வெளிநாடுகளில் இருந்து மாமிசம் சாப்பிடுவோர் , மிருகவதை பற்றி பேசுவது முரண் நகை.

இந்த பன்றிகளால் திரும்ப கூட முடியாது.

பால் குடுக்கும் தாய்கள் கால்கள் கட்டுபட்டு முலையாள் ரத்தம் வரும் வரை குட்டிகளை குடிக்கவிடுவார்கள்.

தமிழ் நாட்டில், ஊரில் துள்ளும் புளூ குரோஸ் வெளிநாட்டில் வாயை பொத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ, கெட்டதோ... நான் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்!

தெய்வத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கேவலங்கள், எம்மை மனிதாபிமானமில்லாதவர்களா த் தான், உலகத்துக்கு எம்மை அடையாளம் காட்டி நிற்கும்!

ஒரு இன மக்களின் பண்பாட்டு முறையை "இந்த கேவலங்கள்" என்று நீங்கள் எழுதுவது தவறு. மிருகங்களை பலி கொடுப்பது யூத கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்களிலும் இடம்பெற்று வந்திருக்கிறது.

கொரியர்களும் சீனர்களும் பிளிப்பீனர்களும் நாய்களை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். பைபிள் மற்றும் குரான்  கால் பாதம் பிளவுபடாத மிருகங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்வதால்  யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நாய்களை சாப்ப்டுவதில்லை. ஆனால் அதற்காக கொரியர்களும் சீனர்களும் நாய்களை சாப்பிடுவதை விட்டுவிடவில்லை. இன்றும் அவர்கள் கலாச்சாரத்தில் நாய் இறைச்சி மிகவும் விலையான விருந்தாக முக்கியமான விருந்தாளிகளுக்கு வழங்கப்படுகிறது.உங்கள் பண்பாட்டை நீங்களே மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?

வெளிநாடுகளில் இருந்து மாமிசம் சாப்பிடுவோர் , மிருகவதை பற்றி பேசுவது முரண் நகை.

இந்த பன்றிகளால் திரும்ப கூட முடியாது.

பால் குடுக்கும் தாய்கள் கால்கள் கட்டுபட்டு முலையாள் ரத்தம் வரும் வரை குட்டிகளை குடிக்கவிடுவார்கள்.

தமிழ் நாட்டில், ஊரில் துள்ளும் புளூ குரோஸ் வெளிநாட்டில் வாயை பொத்தும்.

உண்மை. பறை அடிக்கும் ஆலயங்களில்தான் வேள்வியே நிகழ்கிறது.

அதிலிருந்தே புரியவில்லையா அதுதான் தமிழனின் ஆதி சைவ வழிபாடு என்று!!

ஆக, நாம் இருக்கும் இடத்தைவிட்டு (ஏனைய இனத்தவனுக்காக) இல்லாத இடந்தேடி எமது சுயங்களை அழித்து, அதில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

விக் இணைத்த காணொளிகளைப் பார்க்க முடியவில்லை. முன்பு அரசல் புரசலாக கேள்விப்பட்டதோடு சரி. இனிமேல் துரித உணவுகளை சாப்பிடவே முடியாது என்பதுபோல்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணையில் வளர்க்கும் மிருகங்கள் எமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவே வளர்க்கப்படுகின்றன. அவற்றை நன்றாகப் பராமரிக்கவில்லை என்று மிருகங்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் சிலர் "பேகன்"களாக மாறி இலை, குழை, கிழங்கு, தானியங்களைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. பாலைக் கூடக் குடிப்பதில்லை. இப்படியான நண்பர் ஒருவர் என்னுடன் வேலை செய்கின்றார். அவர் தினமும் விடிகாலையில் தனது தோட்டத்திற்குப் போய் வேலை செய்துவிட்டே அலுவலகத்திற்கு வருகின்றார்!

அத்தோடு மேற்கு நாடுகளில் மிருகங்கள் கொல்லப்படுவது அந்த மிருகங்கள் உணரமுன்னரே நடக்கும். ஊரில் வேள்விக்குப் பலியிடப்படும் ஆடுகள், கோழிகள் என்பன பல்வேறு வதைகளுக்கு ஆளாகியே கொல்லப்படுகின்றன. ஆடுகளை உரலில் அமத்திப் பிடித்து கழுத்தில் வில்லுக்கத்தியால் குத்தி கொட்டும் இரத்தத்தை பாத்திரத்தில் ஏந்தி அதை சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உறைப்புக் கூடிய செத்தல் மிளகாய், மிளகு எல்லாம் போட்டு வறுத்துச் சாப்பிட்டு, பின்னர் நன்றாகப் பிரட்டிச் சமைத்த ஆட்டிறைச்சியையும் நல்லெண்ணை முழுக்கடித்து விட்டுச் சாப்பிடும் நம்மவர்களுக்கு வேள்வி தடைசெய்யப்பட்டது கவலையான விடயம் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!

விக் இணைத்த காணொளிகளைப் பார்க்க முடியவில்லை. முன்பு அரசல் புரசலாக கேள்விப்பட்டதோடு சரி. இனிமேல் துரித உணவுகளை சாப்பிடவே முடியாது என்பதுபோல்தான் இருக்கு.

இங்குள்ள தம்மை விவசாயிகள் என்றழைக்கும் பல்தேசிய நிறுவனங்கள் இப்போது புகைப்படம் கூட பிடிக்க விடுவதில்லை.

இப்போது கோழி பண்ணைகள் மூன்று அடுக்கு வந்துவிட்டது. கோழி தீவன காசை சேமிக்க முதல் கழிவுகள் ஒரு பெல்டில் சென்று தீவனத்தில் கலந்து வரும். நீரில் எப்போதும் அன்டிபயோடிக் இருக்கும்.

இப்ப வெள்ளை கோட்டு விஞ்ஞானிகள் ஏன் மனிதருக்கு அன்டிபயோடிக் வேலை செய்யவில்லை என்று ஆராய்ச்சி செய்யினம்.

Antibiotic resistance now 'global threat', WHO warns

http://m.bbc.com/news/health-27204988

பண்ணையில் வளர்க்கும் மிருகங்கள் எமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவே வளர்க்கப்படுகின்றன. அவற்றை நன்றாகப் பராமரிக்கவில்லை என்று மிருகங்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் சிலர் "பேகன்"களாக மாறி இலை, குழை, கிழங்கு, தானியங்களைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. பாலைக் கூடக் குடிப்பதில்லை. இப்படியான நண்பர் ஒருவர் என்னுடன் வேலை செய்கின்றார். அவர் தினமும் விடிகாலையில் தனது தோட்டத்திற்குப் போய் வேலை செய்துவிட்டே அலுவலகத்திற்கு வருகின்றார்!

அத்தோடு மேற்கு நாடுகளில் மிருகங்கள் கொல்லப்படுவது அந்த மிருகங்கள் உணரமுன்னரே நடக்கும். ஊரில் வேள்விக்குப் பலியிடப்படும் ஆடுகள், கோழிகள் என்பன பல்வேறு வதைகளுக்கு ஆளாகியே கொல்லப்படுகின்றன. ஆடுகளை உரலில் அமத்திப் பிடித்து கழுத்தில் வில்லுக்கத்தியால் குத்தி கொட்டும் இரத்தத்தை பாத்திரத்தில் ஏந்தி அதை சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உறைப்புக் கூடிய செத்தல் மிளகாய், மிளகு எல்லாம் போட்டு வறுத்துச் சாப்பிட்டு, பின்னர் நன்றாகப் பிரட்டிச் சமைத்த ஆட்டிறைச்சியையும் நல்லெண்ணை முழுக்கடித்து விட்டுச் சாப்பிடும் நம்மவர்களுக்கு வேள்வி தடைசெய்யப்பட்டது கவலையான விடயம் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!

பண்ணையில் ஒருத்தரும் கால்நடைகள் வளர்ப்பதில்லை. தொழிற்சாலையில் தான் வளர்க்கபடுகிறது.

மற்றும் உலகத்தின் உணவை கட்டுபடுத்தும் 30 நிறுவனங்கள் மக்களை இரசாயன தொழிற்சாலை முறை எம்மை காப்பாற்றும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.

இரசாயன தொழிற்சாலை முறை உணவு விலையை குறைக்கவே.

மற்றும் உணவை சில முதலாளிகள் அமுக்கவே.

பில் கேட்சின் ஆப்பிரிக்கா விளையாட்டை கவனியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோழிக்கு கொடுக்கப்படும் இரசாயன தீவனத்தால் அவை அதீதமாக வளர்ந்து, எலும்பும், தசைநாரும் பலம் பெருகாத நிலையில் அவற்றால் இரண்டடி கூட நடக்க முடியாமல் உட்கார்ந்து விடுகின்றன.  :blink:

கோழிக்கு கொடுக்கப்படும் இரசாயன தீவனத்தால் அவை அதீதமாக வளர்ந்து, எலும்பும், தசைநாரும் பலம் பெருகாத நிலையில் அவற்றால் இரண்டடி கூட நடக்க முடியாமல் உட்கார்ந்து விடுகின்றன. :blink:

உண்மை. பறை அடிக்கும் ஆலயங்களில்தான் வேள்வியே நிகழ்கிறது.

அதிலிருந்தே புரியவில்லையா அதுதான் தமிழனின் ஆதி சைவ வழிபாடு என்று!!

ஆக, நாம் இருக்கும் இடத்தைவிட்டு (ஏனைய இனத்தவனுக்காக) இல்லாத இடந்தேடி எமது சுயங்களை அழித்து, அதில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இசுலாமியர் கடவுளுக்கு நன்றி சொல்லி ஆட்டின் கழுத்தறுத்தால், கலால்.

யூதர் கடவுளுக்கு நன்றி சொல்லி ஆட்டின் கழுத்தறுத்தால், கோசர்.

தமிழர் கடவுளுக்கு நன்றி சொல்லி ஆட்டின் கழுத்தறுத்தால், மிருகவதை.

நீதிபதிக்கு நன்றி.

பண்பாடு என்னும் பேரில் நடக்கும் காட்டுமிறாண்டிதனத்துக்கு முடிவு கட்டப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன மக்களின் பண்பாட்டு முறையை "இந்த கேவலங்கள்" என்று நீங்கள் எழுதுவது தவறு. மிருகங்களை பலி கொடுப்பது யூத கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயங்களிலும் இடம்பெற்று வந்திருக்கிறது.

கொரியர்களும் சீனர்களும் பிளிப்பீனர்களும் நாய்களை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். பைபிள் மற்றும் குரான்  கால் பாதம் பிளவுபடாத மிருகங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்வதால்  யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நாய்களை சாப்ப்டுவதில்லை. ஆனால் அதற்காக கொரியர்களும் சீனர்களும் நாய்களை சாப்பிடுவதை விட்டுவிடவில்லை. இன்றும் அவர்கள் கலாச்சாரத்தில் நாய் இறைச்சி மிகவும் விலையான விருந்தாக முக்கியமான விருந்தாளிகளுக்கு வழங்கப்படுகிறது.உங்கள் பண்பாட்டை நீங்களே மதிக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்?

மிருகங்களைப் பலியிடுவது, சைவத்தின் பண்பாடோ அல்லது எமது இனத்தின் பண்பாடோ இல்லை!

மிருக பலி தொடர்பான குறிப்புகள், வேதங்களில் காணப்படுகின்றது. விலங்குகள் ஓம குண்டங்களில் எறியப்பட்டுப் பின்னர் உணவாக உண்ணப்பட்டன!

ஓம குண்டம் போன்றவை, சைவத்தினுள் நுழைந்த போதும், விலங்குகள் ஓம குண்டத்தில் பலியிடப்படுவது இது வரை ஊடுருவவில்லை! நெய், நவதானியங்கள் போன்றவற்றையே இன்னும் உபயோகின்றார்கள்!

வள்ளுவன் கூட, கொல்லாமை, புலாலுண்ணாமை போன்றவற்றையே திரும்பவும், திரும்பவும் வலியுறுத்துகின்றான்!

புத்தர் கூடக் கொல்லாமையையும், புலால் உண்ணாமையும் வலியுறுத்தினார்!

தலாய் லாமா மரக்கறி சாப்பிடுகிறார்! ஆனால் அஸ்கிரிய பீடாதிபதி இறைச்சி சாப்பிடுகிறார் என்பதற்காக, இறைச்சி சாப்பிடுவது புத்த மதத்தின் பண்பாடாகி விடுமா?

கேரளத்தின் நம்பூதிரி பிராமணன் மீன் சாப்பிடுகிறான் என்பதற்காக, மீன் சாப்பிடுவது சைவத்தின் பண்பாடாகி விடுமா?

மதங்களும், கலாச்சாரங்களும் மனித வாழ்வை நெறிப்படுத்தவே தோன்றின..... காலப்போக்கின் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மதங்கள் வளைக்க்ப்பட்டதே வரலாறு!

ஒன்றை நாம் நியாயப்படுத்துவது என்பது எமது தேவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றது என்பதே உண்மையான நிலையாகும்!

சதாம் ஹுசையினின் படைவீரர்கள், இரவோடு இரவாகப், பாலைவனத்துப் பதுங்குகுழிகளுக்குள் B52 குண்டு வீச்சு விமானங்களை உபயோகித்துப் புதைக்கப் பட்டார்கள்!  இதனைச செய்வதற்கு, அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் மனச்சாட்சி அனுமதிக்கவில்லை. அதனால், அவர் ஆலோசனைக்குப் பரிசுத்த பாப்பரசரை அணுகினார்! 

பரிசுத்த பாப்பரசரும், அதற்கு அனுமதியளித்தார். 

விளைவு, ஐம்பதினாயிரம் 'பயங்கரவாதிகள்' அழிக்கப்பட்டார்கள். அவர்களது, மனைவிகள், குழந்தைகள்.... நிலை?

கருணை பொழிய வேண்டிய மதம், தனது கடமையை இங்கு செய்துள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா? நாகரீகத்தின் தொட்டில்களான நாடுகளின் 'பண்பாடு' எங்கே மறைந்துவிட்டது?

இதே பிழையை இந்து மதமும், அதன் பாதுகாவலர்களும் 'முள்ளி வாய்க்காலில்' நிகழ்த்திக் காட்டினார்கள்!

எனவே மதம் என்பது, எப்போதுமே, மனிதர்களின் பிழைகளை நியாயப் படுத்தும் ஒரு சாதனமாகவே தொழிற்படுகின்றது. வருங்காலத்திலும் அது அவ்வாறு தான் தொழிற்படும்!

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ஹுசையினின் படைவீரர்கள், இரவோடு இரவாகப், பாலைவனத்துப் பதுங்குகுழிகளுக்குள் B52 குண்டு வீச்சு விமானங்களை உபயோகித்துப் புதைக்கப் பட்டார்கள்!  இதனைச செய்வதற்கு, அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் மனச்சாட்சி அனுமதிக்கவில்லை. அதனால், அவர் ஆலோசனைக்குப் பரிசுத்த பாப்பரசரை அணுகினார்! 

பரிசுத்த பாப்பரசரும், அதற்கு அனுமதியளித்தார். 

விளைவு, ஐம்பதினாயிரம் 'பயங்கரவாதிகள்' அழிக்கப்பட்டார்கள். அவர்களது, மனைவிகள், குழந்தைகள்.... நிலை?

கருணை பொழிய வேண்டிய மதம், தனது கடமையை இங்கு செய்துள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

புங்கையுரான்,

இந்த தகவலை எங்கே படித்தீர்கள்? அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் பாப்பரசருக்கு எதிரான ஆங்கிலிகன் மதத்தை சேர்ந்தவர். பாபரசர் கத்தோலிக்க மதத் தலைவர். ஆகவே ஜோர்ஜ் புஷ் ஆலோசனைக்காக பாப்பரசரை அணுகி இருக்க மாட்டார். அதேவேளை பாப்பரசர்கள் உலகின் பெரும் போர்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்தததை அன்றைய பாப்பரசர்கள் கண்டும் காணாதது போல இருந்தார்கள்.

மதங்கள் கருணை பொழிவதற்காக உருவானவை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது வெறும் வெளித் தோற்றமே. மக்களையும் வளங்களையும் தமது தேவைகளுக்காக பயன்படுத்த சக்தி வாய்ந்த மனிதர்கள் மதங்கள் உருவாக்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

Bush and the Pope Meet
By Jeff Israely/Rome Thursday, June 07, 2007
360_bush_pope0609.jpgFranco Origlia / Getty Images

VATICAN CITY - Pope Benedict XVI meets US President George W. Bush at the Vatican June 9, 2007 in Vatican City.

At first glance, President Bush and Pope Benedict XVI offer a portrait in contrast: the swagger of a trust-my-gut Texan and the shyness of a cerebral theologian. But behind the photo-op set at Saturday's first-ever Bush-Benedict meeting were two men with some key traits in common. Both, of course, wield their words and policy with planetary reach thanks to the unique offices they hold. But there are also some notable parallels in the way they have come to exercise their respective global roles. More than six years into Bush's Presidency and two years into Benedict's papacy, it is clear that neither is cut from the traditional cloth of international diplomacy. Beyond what are indeed very different styles and backgrounds and job descriptions are leaders who pride themselves as straight talkers who act according to what they see as simple truths. Indeed, the head of the Roman Catholic Church and the born-again Protestant President acknowledge that their public deeds — and diplomacy, itself — are driven by a very palpable and personal religious faith. [an error occurred while processing this directive]

Though the agenda at their Vatican meeting — from Iraq to debt relief to abortion — featured points that both converge and diverge, the 35 minutes behind closed doors, which Bush called "a moving experience," was above all a meeting of two men of Christian devotion, says a Catholic Church insider. "The Pope knows he has a real believer in front of him," says the insider. "Bush's faith is seen here as something definitely authentic, even in its errors."

U.S. policy in Iraq is the "error" that sticks foremost in minds throughout the Church hierarchy, going back to Pope John Paul II's firm opposition to the original invasion in 2003. By all accounts, Benedict was in lockstep with his then boss in opposing the war, and has recently commented that there is "nothing positive" coming out of the situation in Iraq. Of particular concern in Rome is the destiny of the Christian minority in the country. Over the past week, a Catholic Chaldean priest and three deacons were killed in Mosul in northern Iraq, while another Chaldean priest and five parishioners have been abducted in Baghdad. Thousands of Christians are fleeing the war-ravaged country. However, for fear of risking a further deterioration of the situation facing Iraqi ethnic and religious minorities, few clerics are calling for immediate withdrawal of U.S. troops. Indeed, the official Vatican position is to support the Iraqi government. Nevertheless, the Vatican's official communique after the meeting with the American President cited the "worrying situation in Iraq." The Pope also raised another Mideast issue: the Palestinian-Israeli conflict, where many in the Vatican privately criticize the U.S. for not taking a more active role in mediating the divide.

The Vatican finds common ground with the Bush Administration on bioethical questions. Vatican Secretary of State Cardinal Tarcisio Bertone recently praised the White House on its anti-abortion stance: "The United States is a great country, and the current President has especially distinguished himself for some positive initiatives in favor of the defense of life from conception," Bertone told the newspaper Avvenire.

Of course, truth, even that which is believed to come from above, does not preclude the need for diplomacy. Private audiences with the Pope, such as the one with Bush, tend to be largely symbolic and often formal affairs, compared with the ongoing substantive talks and collaboration among the full-time diplomats. The meeting itself was an opportunity for Bush to remind America's Catholic voters of their "shared values" with the Pope: from opposition to stem-cell research to anti-poverty efforts in Africa. After meeting the Pope, Bush sat down with the Catholic aid group Communita di Sant'Egidio, which has been among the best unofficial arms of Vatican diplomacy, and encompasses the idea of faith-based initiatives so dear to the American President.

The Bush-Benedict meeting offered a cordial public face to relations between the Holy See and the U.S. But it often takes weeks and months to unpack what has happened in the closed-door talks. One possible topic of discussion is bound to stay secret: a papal trip to the U.S.

http://content.time.com/time/world/article/0,8599,1630845,00.html

"ஆன்மீகத்தினை பின்பற்றுவதற்காக நான் புலால் உண்பதை விட்டு விட்டேன்" என்று ஒருவர் இராமகிருஷ்ணரிடம் சொல்லியபோது இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் சிரித்ததாக சொல்லப்படுகின்றது.
 
இதற்கான விளக்கம், இந்த உலகமே பொய் என்னும் போது கொல்லல் என்பது எப்படி உண்மையாகும் ?
 
இராமகிருஷ்ணர் போன்ற உயர் நிலையில் உள்ளோர்க்கு பாவமும் புண்ணியமும் ஒன்று. அதாவது அவையும் பொய்யே.
 
ஆனால் சாதாரண மனிதருக்கு பாவ புண்ணியங்கள் அவசியமாகின்றன. இதன் அர்த்தம் பாவ புண்ணியங்கள் உண்மை என்பதல்ல. 
 
பாவ புண்ணியங்கள் போக்குவரத்து விதிகள் போன்றவை. ( Traffic rules ) போக்குவரத்து விதிகள் இல்லையேல் பயணம் இலக்கை அடைவது கடினம். இலக்கை அடைந்தவர்களுக்கு இவை தேவைய‌ற்றவை. 
 
நம்மைப் போன்ற உலக வாழ்க்கைப் பயணத்தில் இருப்பவர்களுக்கு இந்த விதிகள் அவசியமானவை.
 
சைவத்தின் பஞ்சமா பாவங்களில் கொல்தல் முதலாவது. 

நீங்க

எங்கேயோ  போய்விட்டீர்கள்.... :o  :o  :o

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன்,

இணைப்புக்கு நன்றி, இது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இரு சக்தி வாய்ந்த சர்வதேச தலைவர்கள் தமது வளநலன்கள் பற்றி மேற்கொண்ட சந்திப்பே அன்றி ஆன்மீக சந்திப்பல்ல. அதையே அந்த செய்தி சொல்கிறது. இன்றைய பாப்பரசரை (அரசர் என்பதை கவனக்க) இலங்கையின் கோத்தபாய சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைத்தார். அவரும் தை மாதம் போகிறார். கோத்தபாய ஆன்மீக தேவைகளுக்காக பாப்பரசரை சந்தித்ததாக தெரியவில்லை.நீங்களும் அப்படி சொல்லமாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இது பற்றி சுவாமி நிழலியானந்தா கூறுவது என்னவென்றால்

விலங்குகளுக்கு எதிரி என்று ஒன்றும் கிடையாது. அவை இன்னொரு விலங்கை கொன்றால் அதன் காரணம் அது அதற்கு இரை என்பதாலேயே ஆகும். இரைக்காக கொல்வது இயற்கை அதற்குள் விதைத்து இருக்கும் மரபணுக்களின் விதி.

மனிதனும் ஒரு விலங்கு

ஆகவே மனிதன் இரைக்காக விலங்குகளைக் கொல்லலாம். கொன்று அதன் இறைச்சியை Barbeque செய்தோ இல்லை நல்லா குழம்பு வைத்தோ அல்லது பொரிச்சோ உண்ணலாம்.  ஆனால் வழிபாட்டுக்காக கொல்லுதல் கூடாது.

ஏனெனில்  வழிபாடு என்பது இரைக்கானது அல்ல.

------

இதுவே இது தொடர்பாக சுவாமி நிழலியானந்தாவின் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

குட் கருத்து.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.