Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்!: - சமூகன்

Featured Replies

ஆரவாரம் செய்து  ஏற்றுக்கொண்டிருப்போம்

நான் அங்கிருந்து அடிவாங்கிக்கலைக்கப்பட்டுத்தான் புலியானேன்.......

ஏதோ சிங்களவன் செய்ததே இல்லை  என்பது போலிருக்கு உங்கட கதை....

அவன் மண்ணில் மட்டுமல்ல

எமது மண்ணிலும் அவன் எம்மை நிம்மதியாக இருக்கவிட்டதில்லை :(  :(  :(

அப்படி அன்று செய்திருந்தால் அது சிங்கள பேரினவாதம் தனக்குத் தானே ஆப்பிறுக்கிய வேலையாகத் தானிருந்திருக்கும். எழுச்சி கொண்டிருந்த தமிழ் தேசியப் போராட்டத்திற்கு அரசே ஆள்ச்சேர்த்துக் கொடுத்து சர்வதேசம் முன் முழுதாக அம்பலப் பட்டு நின்றிருக்கும். தமிழர் மேல் உள்ள காதலால் தான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை, ஆனால் அப்படிச் செய்திருந்தால் அது சரியா என்பதே கேள்வி.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அன்று செய்திருந்தால் அது சிங்கள பேரினவாதம் தனக்குத் தானே ஆப்பிறுக்கிய வேலையாகத் தானிருந்திருக்கும். எழுச்சி கொண்டிருந்த தமிழ் தேசியப் போராட்டத்திற்கு அரசே ஆழ்ச்சேர்த்துக் கொடுத்து சர்வதேசம் முன் முழுதாக அம்பலப் பட்டு நின்றிருக்கும். தமிழர் மேல் உள்ள காதலால் தான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை, ஆனால் அப்படிச் செய்திருந்தால் அது சரியா என்பதே கேள்வி.

ஆப்பை

மாற்றி  இறுக்குகின்றீர்கள்

நான் வரல இந்த விளையாட்டுக்கு........ :(

எனது வீட்டில் நான் சொல்வது

நாலு பிள்ளைகள் எனக்கு

இந்த நாலும் ஒரு கூடையில் உள்ள  தக்காளிப்பழங்கள்

ஒன்று பழுதானால்

நிச்சயமாக அதைத்தூக்குவதைத்தவிர வேறு வழியில்லை எனக்கு என்று........

எனது வீட்டில் நான் சொல்வது

நாலு பிள்ளைகள் எனக்கு

இந்த நாலும் ஒரு கூடையில் உள்ள  தக்காளிப்பழங்கள்

ஒன்று பழுதானால்

நிச்சயமாக அதைத்தூக்குவதைத்தவிர வேறு வழியில்லை எனக்கு என்று........

இந்த உதாரணம் தக்காளிக்குப் பொருந்தும். பிள்ளைகளுக்குப் பொருந்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதாரணம் தக்காளிக்குப் பொருந்தும். பிள்ளைகளுக்குப் பொருந்தாது.

இப்படியே  பேசிக்கொண்டிருக்க அது லாயக்கு

ஆனால் களத்திலுள்ளவனுக்கு அந்தளவுக்கு காலமும் அழிவும்  இடம் தராது

முடிவுகள் எடுத்தாகணும்

இல்லையென்றால் எல்லாமே நாசம் என்றாகிவிடும்

அப்புறம் வந்து

தக்காளிக்கதை கூடவா இவர்களுக்கு தெரியவில்லை என்று எழுதுபவர்களும் நாமே....... :(  :(  :(

நீங்கள் எதை பற்றி சொல்லுகிறீர்கள்?

(நான் போட்ட அந்த முஸ்லீம்களின் சனத்தொகை விவரத்தை பற்றியதா?)

இல்லை என்றால்...

"செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு.... :):lol: )

கிளியின் சைஸ் பற்றிச் சொல்லவில்லை.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இறுக்கமான முஸ்லீம் சமூகத்துக்குள் இருந்து யார் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று வெளியே தெரியவரவில்லை. இயக்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கள் ஊருக்கு அருகில் கூரையில் walkie talkie மூலம் பேசிக்கொண்டிருந்த ஒருவர் பிடிபட்டார். சில வருடங்களின் பின் எல்லோரும் சேர்த்து அனுப்பப்பட்டார்கள்.

இறுக்கமான தமிழ் சமூகத்துக்குள் இருந்து யார் குண்டு வைக்கிறார்கள் என்று வெளியே தெரியவரவில்லை. அரசாங்கத்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருடங்களின் பின் எல்லோரையும் சேர்த்து உள்ளே போட்டு விட்டார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஒருமுறை அந்தத் தவறை செய்தார்கள். அதைச் செய்யாமல் விட்டிருந்தால் போராட்டம் தொண்ணூறுகளிலேயே முடிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் அது தவறு அல்ல.

கோத்தா ஒருமுறை எல்லாரையும் ஏத்தி வவுனியாவரை அனுப்பியவர்தான். மறந்துவிட்டதா??

காடையர்களைத் தூண்டிவிட்டு பலமுறை தமிழர்களை அரசாங்கமே விரட்டியடித்தது. மறந்துவிட்டதா?

அப்படி சிங்களவர்கள் செய்யாமல் விட்டிருந்தால் தமிழர்கள் கொழும்பையே விலைக்கு வாங்கி கோத்தாவின் உறவுகளையே அடிமைகளாக வீட்டு வேலைக்கு யாழ்ப்பாணம் கொண்டு போயிருப்பார்கள். சிங்கள இனமே அடிமை இனமாக மாறி அழிந்து போயிருக்கும்.

இங்கு கருத்து தெரிவிக்கும் எல்லோரும் ஏட்டிக்கு போட்டியாக மற்றவர்களை தாக்கியும் ஏளனம் செய்வதுமாக உள்ளார்களே தவிர ஆக்கபூர்வமான கருத்துக்கள் காண்பது அரிதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து தெரிவிக்கும் எல்லோரும் ஏட்டிக்கு போட்டியாக மற்றவர்களை தாக்கியும் ஏளனம் செய்வதுமாக உள்ளார்களே தவிர ஆக்கபூர்வமான கருத்துக்கள் காண்பது அரிதாக உள்ளது.

"எல்லோரும் ஏட்டிக்கு போட்டியாக மற்றவர்களை தாக்கியும் ஏளனம் செய்வதுமாக உள்ளார்களே தவிர" என்று நீங்கள் எழுதியதே மற்றவர்களை பற்றி. அதை தம்மை தாக்குவதாக அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இந்த கருத்து ஆக்கபூர்வமானதா?

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த திரியில் எழுதிய தமிழரின் இனவெறி, தமிழருக்கு எதிரான சிங்களவரின் இனவெறிக்கு ஏட்டிக்கு போட்டியாக அமைந்திருக்கிறது, அதைத்தான் நீங்கள் இந்த திரியில் அவதானிக்கிறீர்கள்.

  • இந்த இனவெறி இறங்கும் வரைக்கும் தமிழரும், முஸ்லிம்களும், சிங்களவரும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
  • அந்த நிம்மதியான தீர்வுக்கு முதல் படி, சிங்களவரில் மட்டுமல்ல தமிழரிடமும் இனவெறி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இரெண்டாம் படி அந்த இனவெறியை மேவி நாம் வெளிவர வேண்டும்.
இதற்கான முயற்ச்சிகள் ஆக்கபூர்வமானவை.

அவற்றையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

இன்றும் அமெரிக்கா உலகின் பலமுள்ள வல்லரசாகவும், பலரும் பின்பற்ற விரும்பும் வழிமுறைகளை கொண்ட நாடாகவும் இருப்பதற்கு உள்ள காரணங்களில் ஒன்று அமெரிக்கரில் பெரும்பாலானவர்கள் இந்த இனவெறியை மேவி வெளிவந்ததே ஆகும்.

  • கிறிஸ்துவை கொன்றதற்காக யூதர்களை கிறிஸ்தவர்கள் பல பரம்பரைகளாக வெறுத்து வந்தார்கள். அவ்வாறு வெறுப்பை அவர்கள் மதம் ஊட்டி வளர்த்தது. (இன்று சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் வெறுக்க தமிழர்கள் ஊட்டி வளர்க்க படுவது போல). ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் கொன்று குவிக்க பட்ட போது அந்த இன வெறுப்பையும் மீறி அமெரிக்கர்கள் யூதர்களை அரவணைத்து ஏற்றுக்கொண்டார்கள். கிடைத்த பலன்? யூதர்கள் செய்து கொடுத்த அணுக்குண்டு.
  • ஜப்பானை தாக்காத அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை குண்டு போட்டு அழித்து, வலிய சண்டைக்கு இழுத்த ஆசியாவின் மோசமான போர்க்குற்றவாளியான இன வெறியில் ஊறிய ஜப்பான் மீது அமேரிக்கா அணுக்குண்டு போட்டது. ஆனல் தான் செய்த அழிவுக்கு பரிகாரமாக ஜப்பானுக்கு பணத்தையும், தொழில்நுட்பத்தையும், சந்தை வாய்ப்பையும் அள்ளி கொடுத்து, ஜப்பானை தனக்கடுத்த செல்வந்த நாடாக்கியது.
  • ஒரு பரதேசி முஸ்லிமுக்கு பிறந்த அநாதை கலப்பு கறுப்பனான ஒபமாவை அமெரிக்க தேசத்தின் தலைவனாக்கி நாம் இனவெறியை வென்றவர்கள் என்று உலகுக்கு அமெரிக்கா வழிகாட்டி இருக்கிறது.
இவை ஒரு வெற்றி பெற்ற தேசந்தின் உதாரணங்கள். தமிழரும் பார்த்து பயின்று கொள்ள வேண்டிய குணாம்சங்கள். யாழ் களத்தில் உள்ள தமிழர்கள் தமக்குள் உள்ள இனவெறியை வெல்லா விட்டால் அவர்கள் ஆக்கபூர்வமாக எந்த பங்களிப்பும் செய்ய முடியாது. இனவெறி உண்டாக காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு இனத்தின் இனவெறியால் பாதிக்க படுவது இனவெறி உண்டாக ஒரு முக்கியமான காரணமாகும். ஆனால் அந்த இனவெறியை வெற்றி கொள்ளவிட்டால் எந்த வெற்றியும் தமிழருக்கு கிடைக்க போவதில்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

சரி.....இனவெறி வெற்றி கொள்ள ஆக்க பூர்வமான வழிகளை எவை ?

இப்படியே  பேசிக்கொண்டிருக்க அது லாயக்கு

ஆனால் களத்திலுள்ளவனுக்கு அந்தளவுக்கு காலமும் அழிவும்  இடம் தராது

முடிவுகள் எடுத்தாகணும்

இல்லையென்றால் எல்லாமே நாசம் என்றாகிவிடும்

அப்புறம் வந்து

தக்காளிக்கதை கூடவா இவர்களுக்கு தெரியவில்லை என்று எழுதுபவர்களும் நாமே....... :(  :(  :(

இந்த உதாரணத்தை அப்படியே முள்ளிவாய்க்காலுக்குப் பொருத்தி பாருங்கள். பேரினவாதிகள் கூட இப்படி ஒரு விளக்கம் கொடுத்துத் தானே ஆயிரக் கணக்கில் எமது மக்களைக் கொன்று குவித்தார்கள். நமக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் அது தக்காளிச் சட்னி என்ற மனநிலையில் தானே இன்னும் இருக்கிறோம்.

"எல்லோரும் ஏட்டிக்கு போட்டியாக மற்றவர்களை தாக்கியும் ஏளனம் செய்வதுமாக உள்ளார்களே தவிர" என்று நீங்கள் எழுதியதே மற்றவர்களை பற்றி. அதை தம்மை தாக்குவதாக அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இந்த கருத்து ஆக்கபூர்வமானதா?

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த திரியில் எழுதிய தமிழரின் இனவெறி, தமிழருக்கு எதிரான சிங்களவரின் இனவெறிக்கு ஏட்டிக்கு போட்டியாக அமைந்திருக்கிறது, அதைத்தான் நீங்கள் இந்த திரியில் அவதானிக்கிறீர்கள்.

  • இந்த இனவெறி இறங்கும் வரைக்கும் தமிழரும், முஸ்லிம்களும், சிங்களவரும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
  • அந்த நிம்மதியான தீர்வுக்கு முதல் படி, சிங்களவரில் மட்டுமல்ல தமிழரிடமும் இனவெறி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இரெண்டாம் படி அந்த இனவெறியை மேவி நாம் வெளிவர வேண்டும்.
இதற்கான முயற்ச்சிகள் ஆக்கபூர்வமானவை.

அவற்றையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

இன்றும் அமெரிக்கா உலகின் பலமுள்ள வல்லரசாகவும், பலரும் பின்பற்ற விரும்பும் வழிமுறைகளை கொண்ட நாடாகவும் இருப்பதற்கு உள்ள காரணங்களில் ஒன்று அமெரிக்கரில் பெரும்பாலானவர்கள் இந்த இனவெறியை மேவி வெளிவந்ததே ஆகும்.

  • கிறிஸ்துவை கொன்றதற்காக யூதர்களை கிறிஸ்தவர்கள் பல பரம்பரைகளாக வெறுத்து வந்தார்கள். அவ்வாறு வெறுப்பை அவர்கள் மதம் ஊட்டி வளர்த்தது. (இன்று சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் வெறுக்க தமிழர்கள் ஊட்டி வளர்க்க படுவது போல). ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் கொன்று குவிக்க பட்ட போது அந்த இன வெறுப்பையும் மீறி அமெரிக்கர்கள் யூதர்களை அரவணைத்து ஏற்றுக்கொண்டார்கள். கிடைத்த பலன்? யூதர்கள் செய்து கொடுத்த அணுக்குண்டு.
  • ஜப்பானை தாக்காத அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை குண்டு போட்டு அழித்து, வலிய சண்டைக்கு இழுத்த ஆசியாவின் மோசமான போர்க்குற்றவாளியான இன வெறியில் ஊறிய ஜப்பான் மீது அமேரிக்கா அணுக்குண்டு போட்டது. ஆனல் தான் செய்த அழிவுக்கு பரிகாரமாக ஜப்பானுக்கு பணத்தையும், தொழில்நுட்பத்தையும், சந்தை வாய்ப்பையும் அள்ளி கொடுத்து, ஜப்பானை தனக்கடுத்த செல்வந்த நாடாக்கியது.
  • ஒரு பரதேசி முஸ்லிமுக்கு பிறந்த அநாதை கலப்பு கறுப்பனான ஒபமாவை அமெரிக்க தேசத்தின் தலைவனாக்கி நாம் இனவெறியை வென்றவர்கள் என்று உலகுக்கு அமெரிக்கா வழிகாட்டி இருக்கிறது.
இவை ஒரு வெற்றி பெற்ற தேசந்தின் உதாரணங்கள். தமிழரும் பார்த்து பயின்று கொள்ள வேண்டிய குணாம்சங்கள். யாழ் களத்தில் உள்ள தமிழர்கள் தமக்குள் உள்ள இனவெறியை வெல்லா விட்டால் அவர்கள் ஆக்கபூர்வமாக எந்த பங்களிப்பும் செய்ய முடியாது. இனவெறி உண்டாக காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு இனத்தின் இனவெறியால் பாதிக்க படுவது இனவெறி உண்டாக ஒரு முக்கியமான காரணமாகும். ஆனால் அந்த இனவெறியை வெற்றி கொள்ளவிட்டால் எந்த வெற்றியும் தமிழருக்கு கிடைக்க போவதில்லை.

நீங்கள் கூறியதன் அடிப்படையில் தற்போது வெற்றி பெற்ற ஶ்ரீலங்கா பக்கத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. தோல்வி அடைந்த தமிழரின் பக்கத்தில் இருந்து வரும் பலவீனமான மக்களின் கருத்துக்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இனவெறி என்ற நோயால் பாதிக்கப்பட்ட நாட்டில் பலமான வெற்றிபெற்ற தரப்பில் இருந்தே இன் நல்லிணக்கம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் நிலமை உண்மையில் தலைகீழாக உள்ளது. வெற்றி பெற்ற தரப்பு இனவெறியை மேலும் ஆக்ரோஷமாக எண்ணை ஊற்றி எரிய வைப்பதிலேயே மிகவும் மும்முரமாக உள்ள நிலையில் நாட்டில் இனவெறி இல்லாத நிலை தோன்றுவது யதார்தத்திகு அப்பாற்பட்டதாகவே இன்னமும் உள்ளது. ஆகவே தங்கள் அறிவுரைகள் சிறந்ததெனினும் அதை எடுத்து முன்னெடுக்க வேண்டியவர்கள் ஆளும் தரப்பினரே. பாதிக்கப்பட்ட தரப்புக்களில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகள் கூட இனவெறியான கருத்துக்களாக வென்ற தரப்பினரால் முத்திரை குத்தப்பட்ட படும் நிலையே தற்போது உள்ளது. இதை கெளரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கெளரவ அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் ஒரு தடவை அல்ல பல தடவை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

 தங்கள் ஆக்கபூர்வமான இந்த கருத்துகளுக்கு முதற்கண் எனது நன்றிகள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த உண்மையை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க அரசு, ஐரோப்பிய யூனியன், கனேடிய அரசு போன்றவையும் ஏற்றுக்கொண்டு அதற்கமைவாக நடவடிக்கைகள் எடுத்து வருவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். பாதிக்கபப்ட்ட தமிழ் பேசும் மக்களும் ஏனைய சிறு பான்மை இலங்கையர் மட்டுமல்ல சிங்கள பௌத்தர்களின் சில தலைவர்களும் இந்த உண்மை நிலையை அறிந்து அதனை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி இனவெறி இல்லாத வாழும் வெளியை அங்குள்ள மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள நாம் உதவ முயல வேண்டும்.

நீங்கள் கூறியது போல இனவெறி இல்லாத வாழும் வெளியை ஏற்படுத்துவதில் ஆளும் தரப்புக்கு பெரும் பொறுப்பு உள்ளது. ஆளும் தரப்பை நிர்ணயிப்பதில் சிங்கள பௌத்த மக்கள் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றனர். ஆகவே அவர்களின் பங்களிப்பு இன்றி இனவெறி இல்லாத வாழும் வெளியை உருவாக்கி கொள்வது சாத்தியம் இல்லை.

சிலர் தனி நாட்டில் சிங்களவரின் செல்வாக்கு இருக்காது தானே? என்று கேட்பர். அது உண்மை அல்ல. சிங்களவர் அயல் நாட்டினராக செல்வாக்கு செலுத்துவர். எல்லை போர் முதல் ஏனைய நாடுகளின் நட்பு, வணிக உறவுகள் வரை அனைத்தையும் பாதிக்கும் சக்தியை சிங்களவர் கொண்டிருப்பர். அவை அனைத்துக்கும் மேலாக, இன்று இராணுவ பலமும் இன்றி மற்ற நாடுகளின் ஆதரவு என்றுமே கிடைக்காத நிலையில், தனி நாடு ஒரு நீண்ட கால கனவாகவே இருக்கிறது.

ஆகவே முடிவாக, இன வெறியற்ற வாழும் வெளியை உருவாக்குவதில் சிங்கள பௌத்தர்களுடன் இணைந்து தமிழர்களும் திட்டமிட்டு செயற்பட்டாலே அவ்வாறான வாழும் வெளியை உருவாக்குவதில் மிகவும் பற்று கொண்ட ஒரு ஆளும் தரப்பை உருவாக்கி கொள்ள முடியும். இவ்வாறான இன வெறியற்ற வாழும் வெளி சிங்களவர்களிலும் பார்க்க தமிழர்களுக்கே இன்று மிகவும் தேவையாக இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டிய ஒன்றல்ல.

சரி.....இனவெறி வெற்றி கொள்ள ஆக்க பூர்வமான வழிகளை எவை ?

இந்த நல்ல கேள்வியை கேட்டதற்கு நன்றி.

GW+with+slaves+at+Mt+Vernon.jpg

  • நாம் மற்றவர்களை மாற்ற முடியாது. நாம் அவர்களை மாறும் படி கேட்கலாம், மாற்றத்தின் நன்மை தீமைகளை கூறி சாம பேத தான தண்டத்தை பயன் படுத்தி பார்க்கலாம், ஆனால் இறுதியில் அவர்கள் தான் முடிவு எடுத்து தாமாக மாற வேண்டும். ஆகவே சிங்கள பௌத்தர்களை நாம் மாற்ற முடியாது. ( ஆனால் ஆளும் தரப்பை மாற்ற முடியும். - அது மனம் சார்ந்து அல்ல, அரசியல் சாணக்கியம் சார்ந்தது.)
  • நாம் நம்மை மாற்ற முடியும். நிறைவாக மாற்ற முடியும். இது நம் ஒவ்வோருவரின் தனிப்பட்ட்ட கட்டுப்பாட்டில் உள்ள விடயம். நாம் இனம் சம்பந்த பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் எழுத முதலும் சொல்ல முதலும் சிந்தித்துப் பார்த்து, இனவெறியை வென்று இந்த வார்த்தையை பிரயோகிக்கும் ஆற்றலை நான் கொண்டுள்ளேனா? என்ற கேள்வியை கேட்டு அந்த வார்த்தையை பயன் படுத்த முயற்சிக்க வேண்டும். எம்மில் உண்டாகும் மாற்றம் எம் செயலில், எம் கருத்துக்களில், எம் பிரச்சாரத்தில், எமது கலந்துரையாடல்களில் எதிரொலிக்கும். இது எமது செல்வாக்கை அபரிதமான அளவு அதிகரிக்கும். இதற்கு உதாரணம் அமெரிக்க அரசு. அமரிக்காவின் தேச பிதா என்று அழைக்கப் படுபவர்களில் முக்கியமானவர் ஜோர்ஜ் வாஷிங்டன். இவர் தனது காலத்தில் இனவெறி கொண்டு செயற்பட்டதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவர் கருப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தவர்.

    அமெரிக்க அரசும் அதை மறுப்பதில்லை. ஆனால் இன்று அமெரிக்க மக்களும் அரசும் எவ்வளவோ மாறி விட்டது. கருப்பரையே நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அமெரிக்க மக்கள் தம்மை இன வெறியில் இருந்து விடுதலை செய்து இருக்கிறார்கள். (இன்னும் கிட்டத்தட்ட அரவைவாசி அமெரிக்கா இந்த விடுதலையை பெறவில்லை.) இந்த அமெரிக்க வெற்றி எமக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

  • எம்மை நாம் மாற்றி கொண்டால் மட்டும் போதாது, அதனை அடுத்து இனவெறி இல்லாத வாழும் வெளியை உருவாக்க உழைக்கும் சிங்கள பௌத்தர்களுடன் இணைந்து அவர்களுக்கு முடியுமான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுவே அங்கு தமிழர்கள் இனவெறி இல்லாத வாழும் வெளியை பெற்றுக்கொள்ள வழி வகுக்கும்.

    இனவெறி இல்லாத ஆளும் தரப்பு, மக்களுக்கு மொழி மற்றும் தேவைகள் அடிப்படையிலான சுயாட்சியை என்றும் எதிர்க்காது. உதாரணமாக சீனாவில் ஹாங்காங் இருப்பது போல, ஒரு தமிழ் பேசும் மாநிலம், சிங்கபூர் போல வணிகத்தையும் ஆற்றலையும் முதன்மை படுத்தும் ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு வணிக மாநிலம், மற்றும் இலங்கைக்கே தனித்துவமான சிங்களவர்களின் கலாச்சாரத்தை பேணும் சிங்ககள கலாச்சார மாநிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்க இனவெறி இல்லாத ஆளும் தரப்பு எந்த மறுப்பையும் கூற முடியாது.

NimalkaFernando.jpg

1401348285_5803949_hirunews_wikramabahu.

Dr.%20Kumar%20Rupasinghe%20%202.img_assi

sunday_leader_frederica_jansz.jpg

Edited by Jude

இங்கு கருத்து தெரிவிக்கும் எல்லோரும் ஏட்டிக்கு போட்டியாக மற்றவர்களை தாக்கியும் ஏளனம் செய்வதுமாக உள்ளார்களே தவிர ஆக்கபூர்வமான கருத்துக்கள் காண்பது அரிதாக உள்ளது.

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி இல்லாத ஒரு வாழும் வெளியை இலங்கையில் கட்டி எழுப்பும் போது தனிநாடு, குடியேற்றம், பாகுபாடு போன்ற பிரச்சினைகள் தாமாகவே ஒழிந்து போகும்.

விக்கி, சம்பந்தர், சுமந்திரனின் முன்வருகை தமிழர் தரப்பில் இப்படியானதொரு முயற்சிக்கு தலைமை தாங்க ஆட்களிருப்பதை காட்டுகிறது.

முஸ்லிம்கள் தங்கள் முஸ்லீம்/காபிர் வெறுப்பு அரசியலை விட்டு ஒரு முற்போக்கு சக்தியை தமக்குள் ஏற்படுத்த வேண்டும்.அஸ்மினின் கட்சிக்கு இந்த தகுதி இருக்கிறது.

சிங்க்ளவர்கள் விக்ரமபாகு போன்ற ஒருவரின் கையை பலப்படுத்த வேண்டும்.

இதற்க்கு மூவின மக்களுக்கும் ஜனநாயக விழுமியங்களை போதிக்க வேண்டும். இதைத்தான் USAID செய்ய விழைந்தது. இனவெறியில் கட்டபட்டிருக் தம் அதிகாரத்தை இது ஆட்டம் காணா செய்யும் என்பதால் அரசு இதை உடனடியாக தடை செய்தது.

ஞானசாரர்கள், தமிழ்சிறீக்கள், பதியுதீன்கள், இப்படி நாம் எல்லோரும் இனவாதம் பேசித்திரிவதே அரசின் நீண்ட கால நிலைப்பை உறுதி செய்யும். அரசு வேண்டுவதும் அதையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள் . :icon_mrgreen:

மூட்டை....மூட்டையாய்  கட்டி  வைச்சிருக்கிறவர்  கொஞ்சம்கொஞ்சமாய் அவிட்டு விடப்போறார் கண்ணை மூடாமல் பாத்துக்கொண்டிருங்கோ.. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்!

muslimssl.png

இது தான் இன்று தமிழர் மத்தியில் பரவலாக இருக்கும் பொது புத்தி கருத்து." நாங்கள் அடிவாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், அரசாங்கத்துடன் கூடி கும்மாளம் போட்டவர்கள், ஏன் புலிகள் அழிக்கப்பட்ட பின்பும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான 18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். தமிழர்கள் வாங்கிய அடியை வாங்கிப் பார்க்கட்டும்!" எங்களை அடிப்பவன் யார் என்பதல்ல பிரச்சனை அடிவாங்குவதில் சமத்துவம் மிக முக்கியம். என்ன பெருந்தன்மை எம் தமிழர்களுக்கு!

சரி முஸ்லீம்கள் மட்டும்தான் தறுசெய்தார்களா? முஸ்லீம் இனத்தையே வடக்கில் இருந்து விரட்டியடித்த எம் தமிழர்களின் இன ஒடுக்குமுறையை என்னவென்று சொல்வது? கேட்டால், அதற்கு தான் மன்னிப்பு கேட்டுவிட்டோமே என்றொரு வியாக்கியானம்! விரட்டியடித்ததற்கு காரணம் காட்டிக்கொடுத்தார்களாம்! என்னய்யா கதையிது? முஸ்லீம்கள் காட்டிகொடுத்து புலிகள் இழந்த போராளிகள் எத்தனை? தோல்வியடைந்த தாக்குதல்கள் எத்தனை?. கருணா, கேபி,பிள்ளையான், டக்கிளஸ் செய்யாத துரோகத்தை, காட்டிக்கொடுப்பையா முஸ்லீம்கள் செய்து விட்டார்கள்?. இன்றும் அவர்களை தொப்பி பிரட்டி, சோனி,முக்கால் என்று இனவாதம் பேசி இழிவுபடுத்தி பேசி வருவதில் நாம் காணும் இன்பம் என்ன? சிங்கள மக்கள் தமிழர் மேல் இனவாதம் காட்டுகிறார்கள் என்று முறையீடு செய்யும் நாம் முதலில் முஸ்லீம் மக்கள் மீது காட்டும் எமது இனவாததில் இருந்து வெளியே வருவோம்!

கிழக்கில் இருக்கும் தமிழ், முஸ்லீம் முரண்பாடு என்பது ஒரு பிரதேசத்தில் வாழும் இரு இன மக்களிற்கிடையே உள்ள பிரச்சனைகள். இவை பொது தளத்தில் உருவாகும் தமிழ், முஸ்லீம் முரண்பாட்டின் தன்மையை பொறுத்து மாறுபடும். இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் உள்ள மொத்த முஸ்லீம்களில் 65% -70% தெற்கிலும் 30%-35% வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்(கீழுள்ள அட்டவணைப்படி) . தெற்கில் வாழும் அந்த மக்களில் அனேகமானவர்கள் வர்த்தகர்கள் முழுக்க முழுக்க சிங்கள தேசத்தின் சந்தையை நம்பி வாழ்பவர்கள். அந்த பேரினவாத தேசத்தில் பரவலாக, சிறிய சமூகங்களாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்பவர்கள்(அருகிலுள்ள இலங்கை படத்தின் படி ). இவ்வாழ்நிலைமூலம் இலங்கை முழுவதும் தமிழை பேசி அதை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றி வருபவர்கள். சிங்கள பெளத்த அரசுடன் இணக்கமான அரசியல் என்னும் அந்த 65-70% வீத முஸ்லீம்களின் தேர்வை தமிழர்களாகிய நாம் எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்!

சமீபத்தில் முஸ்லீம்கள் மீது நிகழ்ந்த திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளில் போராடினார்கள். தமது இனமக்களை அழிவில் இருந்து காப்பாற்ற எந்த மொழியில் கத்தமுடியுமோ கத்தினார்கள்.

முதலில் அந்த மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக குரல் கொடுப்பதை விட்டு விட்டு தமிழ், சிங்கள தரப்பில் இருந்து வந்த கேள்விகளும், விளக்கங்களும் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவை! "முஸ்லீம் என்பது தனி இனமா?முஸ்லீம் என்பவர் இஸ்லாமியத்தமிழர், முஸ்லீம் தேசியம் மதத்தேசியம், தமிழர்கள் இலங்கையர்கள் முஸ்லீம்கள் வந்து குடியேறிகள், உலக இஸ்லாத்துடன் அடையாளம் காட்டும் இலங்கை முஸ்லீம்கள் விதேசிகள்" என்று வலது, இடது பாரபட்சம் இன்றி ஆராய்சியில் இறங்கினர்.

ஒடுக்கப்படுபவனுக்கு ஆதரவாகவும் ஒடுக்குபவனுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் ஆராய்சி யாருக்கு வேண்டும் அய்யா? முஸ்லீம் மக்களின் போராட்டத்தின் மூலம் நாம் அனைவரும் கண்டறிந்த மிகப்பெரிய விடயம் என்னவென்றால்! மார்க்சியர்கள், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி திரியும் பலர் உண்மையில் பேரினவாதிகள், இனவாதிகள், குறுந்தேசிய வாதிகள் என்பதைத்தான். முஸ்லீம் மக்களின் போராட்டம் முன்னோக்கி வருவதைக்கண்ட இவர்கள் எங்கே தாம் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து, துடக்கு கழித்துக் கொண்டு போராட வந்திருக்கிறார்கள். சிலர் தாரை தம்பட்டத்துடன் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் முஸ்லீம் என்னும் துடக்கை எப்படி கழிக்கலாம் என்று ஆராய்சியுடன் தமக்குள் புலம்பித்திரிகின்றனர்.

"அது சரி என்னதான் இருந்தாலும், சிங்கள பெரியண்ணை, தமிழ் சின்னண்ணைமாரை தாண்டி இந்த தம்பி முஸ்லீம் போகலாமோ? இத நாங்கள் விடலாமோ?" என்ற எண்ணம் இன்று பல சிங்கள, தமிழ் பிரிவுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்காகத்தான் இன்று பலரும் பல பல அமைப்பு வடிவங்களில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவு என்று சொல்லி போராட வருவதன் அடிப்படை. முஸ்லீம் மக்களின் போராட்டம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை தந்ததோ இல்லையோ பலரின் முற்போக்கு வேசம் கலைய காரணமா இருந்திருக்கு.

தமிழரையும், முஸ்லீம்களையும், மலையக மக்களையும் ஒடுக்குவது சிங்கள பெளத்த பேரினவாதமப்பா! ஒடுக்கப்படும் நாம் எமக்குள் ஒன்று படாது ஒருவரை ஒருவர் பழிவாங்கும் மனப்பாங்குடன் இருந்தால் அனைவரின் அழிவுதான் மிஞ்சும். முஸ்லீம் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சில தமிழ்,சிங்கள எதிர்ப்பு குரல்களும், அரசியல் ரீதியான ஆதரவு அணுகுமுறைகளும் சற்று மகிழ்ச்சி தரும் விடயம்தான்.

அன்று உன்னை அடிக்கும் போது நான் சிரித்தேன்! இன்று என்னை அடிக்கும் போது நீ சிரிக்கிறாய்! நாளை நாம் அடிபடும் போது அவன் சிரிப்பான்! பின்பு நீ சிரிப்பதும், நீ அழுவதும் கூட அவன் குரலிலேயே இருக்கும்.

- சமூகன்

http://www.kural.co.uk/muslimssamookan

தமிழ் எழுத தெரியும் என்பதற்காக கட்டுரை எழுத தொடங்கினால் இப்படிதான் எழுதமுடியும்.
 
விடுதலை போராட்டம் என்பதை கோமணத்தை அவிழ்த்து பிள்ளை பெறுவது போன்றது என்றுதான் இவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இப்படி எழுத முடிகிறது.
 
முடிவுகளை காலம் களம் இடம் பொருள் என்பவைதான் முடிவு செய்கின்றன. 30 வருடம் முன்பு எடுத்த முடிவுகளை 30 வருடம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகளோடு. கிணற்று தவளை களால்தான்  ஒப்பிடு செய்ய முடியும்.
 
1990இல் இருந்த களநிலைமை விடுதலை போராட்டத்தின் வடிவம் 2009இல் இருக்கவில்லை.
1980களில் இந்திய பாகிஸ்தான் போட்டிகளின் தாக்கத்தை எதிரொலித்த இலங்கை போராட்ட களம் 2005 சீன ஜப்பானிய பொருளாதார முதலீட்டு போட்டிகளின் தாக்கத்தை எதிரொலித்துகொண்டிருந்தது.
1980 களில் எடுத்த முடிவுகள் போன்று 2009 யாராலும் முடிவுகளை எடுக்க முடியவில்லை. காலம் அதற்கு இடம் கொடுத்திருக்கவில்லை.
 
ஆனால் இனங்களின் தாற்பரியம் பூர்விகம் வாழும் புவியல் சார்பு நிலை என்பதன் தாக்கம் தொடர்நிலை அல்லது  பிணைப்பு சங்கிலி போன்றது.
"அரசியல்" என்ற சொல்லே மனிதனிடம் அதனால்தான் வந்தது ஒரு குழுமம் தனது வாழ்வாதாரத்தை ஒரு குறிப்பிட்ட  பிரதேசத்தில் தக்க வைத்து கொள்வது. இன்னொரு குழுமம் தமது பிரதேசத்தில் இல்லாத வளங்களை  இன்னொரு குழுமத்தின் பிரதேசத்தில் சூறையாடி கொள்ளும்போது ஆக்கிரமிப்பு உதயமாகிறது.
 
தமிழர்களுடைய விடுதலை போராட்டம் என்பதை புலிகளின் 30 வருட காலத்துக்குள் நடந்து முடிந்த கதையாக  எழுதி தம்மை தற்காலிக கதாநாயகர்களாக காட்ட முனைபவர்களின் கட்டுரைகள் இணையம் எங்கும் நாளும்  தரைவேற்ற பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
 
எல்லாளன் தோற்றபோது அனுராதபுரம் தமிழனிடம் இருந்து பறிபோனது. இதை கதையாக படித்து கொள்பவர்கள்  புலிகளின் தோல்வியில் மயிர் புடுங்குபவர்கள் .... ஏன் எல்லாளனில் ஒரு மயிரையும் புடுங்குவதில்லை??
விட்ட பிழைகளை திருத்தும் திருத்தொந்திகள் புலிகள் தோற்கும் முன்பு ஏன் எல்லாளன் ..... பண்டாரவன்னியன் ... சங்கிலியன்  விட்ட பிழைகளை பற்றி வாய்திறக்கவில்லை?
கராணம் தெளிவானது ........... இதுகள் கிணற்று தவளைகள் என்பதுதான் ஒரே காரணம். கடந்த காலம் தெரியாது........... எதிர்காலம் புரியாது. நேற்று நடந்ததாக யாரோ சொன்னதிற்கு வியாக்கினம் எழுதுவது  இணையத்தின்  புண்ணியத்தில் வசதியாகிவிட்டது. 
 
எமது இனம் எந்த இனத்தால் தோற்கடிக்க பட்டது நாம் யாரிடம் அடிவாங்கினோம் என்பது தமிழனாக  இருந்தவனுக்கு  தெரியும். கிணற்று தவளைகள் கத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்  தமிழனுக்கு இல்லை. சில புற்றிஈசல்கலுக்கு இருக்கலாம்.
 
"சட்டி சுட்டதடா கை விட்டதடா"  இது வெறும் சாதாரண அற்பமான மனித அறிவு. அதற்கு கூட வசதி இல்லாதவர்கள் கட்டுரை எழுதுகிறார்கள் என்பது கூட பராவியில்லை ..... அதை வாசித்து பாராட்டும் அளவிற்கு  வசதியான அறிவோடும் ஒரு கூட்டம் இருக்கிறது எனும்போது. மனித மூளை பற்றி அறிய வேண்டும்  எனும் ஆவல் எனக்கு அதிகமாகிறது.  
  • கருத்துக்கள உறவுகள்

  .

இந்த நல்ல கேள்வியை கேட்டதற்கு நன்றி.

GW+with+slaves+at+Mt+Vernon.jpg

  • நாம் மற்றவர்களை மாற்ற முடியாது. நாம் அவர்களை மாறும் படி கேட்கலாம், மாற்றத்தின் நன்மை தீமைகளை கூறி சாம பேத தான தண்டத்தை பயன் படுத்தி பார்க்கலாம், ஆனால் இறுதியில் அவர்கள் தான் முடிவு எடுத்து தாமாக மாற வேண்டும். ஆகவே சிங்கள பௌத்தர்களை நாம் மாற்ற முடியாது. ( ஆனால் ஆளும் தரப்பை மாற்ற முடியும். - அது மனம் சார்ந்து அல்ல, அரசியல் சாணக்கியம் சார்ந்தது.)
  • நாம் நம்மை மாற்ற முடியும். நிறைவாக மாற்ற முடியும். இது நம் ஒவ்வோருவரின் தனிப்பட்ட்ட கட்டுப்பாட்டில் உள்ள விடயம். நாம் இனம் சம்பந்த பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் எழுத முதலும் சொல்ல முதலும் சிந்தித்துப் பார்த்து, இனவெறியை வென்று இந்த வார்த்தையை பிரயோகிக்கும் ஆற்றலை நான் கொண்டுள்ளேனா? என்ற கேள்வியை கேட்டு அந்த வார்த்தையை பயன் படுத்த முயற்சிக்க வேண்டும். எம்மில் உண்டாகும் மாற்றம் எம் செயலில், எம் கருத்துக்களில், எம் பிரச்சாரத்தில், எமது கலந்துரையாடல்களில் எதிரொலிக்கும். இது எமது செல்வாக்கை அபரிதமான அளவு அதிகரிக்கும். இதற்கு உதாரணம் அமெரிக்க அரசு. அமரிக்காவின் தேச பிதா என்று அழைக்கப் படுபவர்களில் முக்கியமானவர் ஜோர்ஜ் வாஷிங்டன். இவர் தனது காலத்தில் இனவெறி கொண்டு செயற்பட்டதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவர் கருப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தவர்.

    அமெரிக்க அரசும் அதை மறுப்பதில்லை. ஆனால் இன்று அமெரிக்க மக்களும் அரசும் எவ்வளவோ மாறி விட்டது. கருப்பரையே நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அமெரிக்க மக்கள் தம்மை இன வெறியில் இருந்து விடுதலை செய்து இருக்கிறார்கள். (இன்னும் கிட்டத்தட்ட அரவைவாசி அமெரிக்கா இந்த விடுதலையை பெறவில்லை.) இந்த அமெரிக்க வெற்றி எமக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

  • எம்மை நாம் மாற்றி கொண்டால் மட்டும் போதாது, அதனை அடுத்து இனவெறி இல்லாத வாழும் வெளியை உருவாக்க உழைக்கும் சிங்கள பௌத்தர்களுடன் இணைந்து அவர்களுக்கு முடியுமான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுவே அங்கு தமிழர்கள் இனவெறி இல்லாத வாழும் வெளியை பெற்றுக்கொள்ள வழி வகுக்கும்.

    இனவெறி இல்லாத ஆளும் தரப்பு, மக்களுக்கு மொழி மற்றும் தேவைகள் அடிப்படையிலான சுயாட்சியை என்றும் எதிர்க்காது. உதாரணமாக சீனாவில் ஹாங்காங் இருப்பது போல, ஒரு தமிழ் பேசும் மாநிலம், சிங்கபூர் போல வணிகத்தையும் ஆற்றலையும் முதன்மை படுத்தும் ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு வணிக மாநிலம், மற்றும் இலங்கைக்கே தனித்துவமான சிங்களவர்களின் கலாச்சாரத்தை பேணும் சிங்ககள கலாச்சார மாநிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்க இனவெறி இல்லாத ஆளும் தரப்பு எந்த மறுப்பையும் கூற முடியாது.

NimalkaFernando.jpg

1401348285_5803949_hirunews_wikramabahu.

Dr.%20Kumar%20Rupasinghe%20%202.img_assi

sunday_leader_frederica_jansz.jpg

நன்றிகள் யூட்....இதே போன்ற மனப்பான்மையில்தால் சேர்.பொன் ராமநாதன் போன்றோர்சுதந்திரம் கிடைக்க முதலே முயற்சி செய்திருக்கினம் செயல்பட்டார்கள் என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டும்.அன்று அவர்கள் பிரிவினை என்ற பதமே பாவிக்கவில்லை.....தனி மாநிலம் பற்றியும் சிந்திக்கவில்லை.....இலங்கை சகலருக்கும் சொந்தம் என்ற கோட்பாட்டுடன் ....ஒத்துழைத்தார்கள்.....

அது உண்மையானாலும் அவர்கள் பெரும்பாலும் கொழும்பிலுள்ள தமிழர்களையே பிரதிநித்த்துவ படுத்தினார்கள். மற்றவர்களின் பிரச்சனைகளை சரிவர புரிந்து கொள்ளவில்லை. மேலும் அவர்களின் அணுகுமுறையில் தவறுகள் இருந்ததால் பின்னாளில் இந்த நிலை ஏற்பட்டது. அவர்கள் விட்ட தவறுகளை ஆய்வு செய்து அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் முயற்சி செய்ய வேண்டும். தமிழ் அரசு கட்சியும் விடுதலை புலிகளும் தாம் அவர்கள் விட்ட தவறுகளை விடாமல் இருப்பதற்காகவே தனிநாடு கோரி இருக்கலாம். ஆனால் தனிநாடும் சாத்தியம் அற்றதான பெரும் அழிவுக்கு வழி வகுத்த ஒரு அணுகுமுறை என்று இன்று காண்கிறோம். ஆகவே தவறுகளில் இருந்து பாடம் கற்று சரியான் பாதையை செய்ய வேண்டும்.

சேர்.பொன் இராமநாதன் தொடக்கம் தெரிஞ்சு வைச்சு கதைக்கிறியள்.....இனியும் இனியும் விட்ட பிழைகளிலையிருந்து பாடம் படிக்கோணுமெண்டால் இன்னுமொரு புதுப்பிரச்சனையை தொடக்கோணும்!!!!!!..........ஏதாவது ஐடியா இருக்கா?????  சரியான பாதையெண்டால் இன்னும் 100 வருசம் காணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

சேர்.பொன் இராமநாதன் தொடக்கம் தெரிஞ்சு வைச்சு கதைக்கிறியள்.....இனியும் இனியும் விட்ட பிழைகளிலையிருந்து பாடம் படிக்கோணுமெண்டால் இன்னுமொரு புதுப்பிரச்சனையை தொடக்கோணும்!!!!!!..........ஏதாவது ஐடியா இருக்கா?????

கடந்த கால பிழைகளில் இருந்து பாடம் படிக்க ஏன் புதுப் பிரச்சினை உங்களுக்கு தேவையாக இருக்கிறது?

கடந்த கால பிழைகளை ஆய்வு செய்து அவை பற்றி கலந்துரையாடுவதன் மூலம் தான் நாங்கள் அவற்றில் இருந்து பாடம் படிக்க முடியும், புதுப் பிரச்சினை தொடங்கியல்ல.

சரியான பாதையெண்டால் இன்னும் 100 வருசம் காணுமோ?

சரியான பாதையை அறிய 100 வருசம் தேவைப்பட்டால் உங்களுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.

  • அந்த 100 வருடங்களும் முயற்சி செய்து சரியான பாதையை கண்டு கொள்வது. யூதர்களுக்கு சரியான பாதையை கண்டு கொள்ள 2000 வருடங்கள் எடுத்தது.
  • அப்படி சரியான பாதையை கண்டுகொள்ள முயற்சி செய்ய விருப்பம், பொறுமை, அறிவு இல்லா விட்டால் பிழையான பாதையில் போய் அழிந்து போவது. ஏற்கனவே பிழையான பாதையில் போய் அரைவாசிக்கு மேல் அழிந்து போய் விட்டது. பிழையான பாதையில் மீதமும் அழிந்து போகும்.
உங்கள் தெரிவு என்ன?

இப்போ என்ன யாரவது போராட்டத்தை தொடங்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ என்ன யாரவது போராட்டத்தை தொடங்குங்கோ.

இறைவா ....நாங்கள் இப்படி ஜாலியா கொம்புயூட்டரில் தட்டிகொண்டிருப்பது பிடிக்கவில்லையா? இறைவா ஏன் இந்த சோதனை.... எந்த வழி நல்ல வழி என்று ரூம் போட்டு சிந்திக்கின்றோம்....நல்ல வழி கிடைத்தவுடன் போராட்டம் தான்....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.