Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் பாலஸ்த்தீன நெருக்கடியில் ஈழத்தமிழரின் நிலைப்பாடு என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி இங்கு பதியப்படக் கூடியதுதானா என்பதுபற்றி யோசிக்காமல் எழுதுகிறேன். ஆனாலும், அண்மைய நாட்களில் உலக செய்திகளில் தலைப்புச் செய்தியாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபற்றி எமக்குள் பல்வேறான கருத்துக்கள் இருக்கலாம். இதுபற்றிப் புரிதலுக்கான ஒரு தளமாக இதனை நினைத்ததனால் இங்கு எழுதுகிறேன்.

நான் நினைப்பவை சரியாக இருக்கவேண்டும் என்றில்லை.

எனது முஸ்லீம்கள் பற்றிய பார்வை இலங்கையில் அந்த இனத்துடனான எனது இனத்திற்கு இருக்கும் உறவின் அடிப்படையேலேயே அமைந்திருக்கிறதென்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு எழுதுகிறேன்.

நான் என்னை எவ்வளவுதான் மனிதாபிமானியாக, நடுவுநிலமை வாதியாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும்கூட, முஸ்லீம்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ வரும்போது, நான் முற்றான தமிழ் இனவாதியாகவே இருந்து வந்திருக்கிறேன், இனியும் அப்படியே இருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

அவ்வப்போது அரசியல் இலாபங்களுக்காகவும், நற்பெயருக்காகவும் நான் எழுதும் கருத்துக்கள் எனது உண்மையான மனோநிலையைப் பிரதிபலித்ததில்லை.

யாழ் முஸ்லீம்களுக்கெதிராக புலிகள் செய்த கட்டாய வெளியேற்றமும், கிழக்கில் செய்த தாக்குதல்களும் என்னைப்பொறுத்தவரையில் அப்போதைய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சரியாக இருந்தன என்று நான் நம்பினாலும் கூட, மற்றவர்களுக்காகவும், எல்லாமே இன்று பிழைத்துவிட்டதே என்பதற்காகவும் தவறென்று எழுதினேன். இது சிலவேளை புதிய நண்பர்களையும், புதிய எதிரிகளையும் ஏற்படுத்தியிருந்தன. 1993-94 இல் சரிநிகர்ப் பத்திரிக்கையில் முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றி நான் எழுதிய கட்டுரை வெளிவந்தபோது பல முஸ்லீம்கள் ந்ண்பர்களானார்கள். அதேபோல் பல தமிழ்நண்பர்கள் என்னை எதிரியாகப் பார்க்காவிட்டாலும் கூட கடிந்து கொண்டார்கள்.

இப்படி நடுவுநிலமை வேசம் போடுவதால் நான் இதுவரை கண்டது எதுவுமில்லை.

உலகில் நடு நிலைமை வகித்து அழிந்து போன ஒரு இனம் என்றால் தமிழ் இனம் தான்.தமிழர் மாகாணமாக இருந்த கிழக்கு மாகாணாம் முஸ்லீம் மாகாணமாக மாறியது என்று பார்க்க எவரும் தயார் இல்லை,இன்னும் சில வருடங்களில் வன்னியும் முஸ்லீம் மாவட்டம் ஆகும், அதுக்கு பின்னர் நல்லூர் கந்தனுக்கு புல்டோசர் வரும்,அதுக்கு பிற்கு தான் எமது முட்டாள் தமிழனுக்கு புத்தி வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, இனி திரி தொடங்கப்பட்டதன் காரணத்துக்கு வருகிறேன்.

இன்று காசாவில் நடப்பதற்கும் 2009 இல் எமது மக்களுக்கும் நடந்ததற்குமிடையில் அதிக வேற்றுமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

காஸாவில் நாள்தோறும் 100 மக்களாவது இஸ்ரேலின் தாக்குதலில் இறப்பதாக மேற்குலக ஊதுகுழலான பி.பி.ஸி யே எழுதுகிறது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் கூட கண்டிக்கின்றன. இஸ்ரேலினை நண்பர்கள் என்று இதுவரை சொல்லி வந்தவர்கள் கூட இப்போது கண்டிக்கிறார்கள்.

அண்மையில் பாலஸ்த்தீனர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல ஈழத்தமிழரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.

எனது கேள்வி என்னவென்றால், நாம் பாலஸ்த்தீனர்கலை எதற்காக ஆதரிக்கவேண்டும், இவ்வாறு ஆதரிப்பதன்மூலம் நாம் அடையவிரும்பும் அரசியல் லாபம் என்ன ? அல்லது எந்த அரசியல் லாபமும் இன்றி வெறும் மனிதநேயம் சார்ந்து நாம் ஆதரிக்கின்றோமா??

தினமும் 100 பேர் கொல்லப்படுகிறார்கள், கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன, மக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்கின்றார்கள், கொல்லப்படுபவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குகின்றனர்.

இது எமக்கும் 2009 வரை நடந்ததுதான். ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும் ?

எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டிருக்கும் இனம் என்பதால் பாலஸ்த்தீனர்களை ஆதரிக்க வேண்டுமா?

நான் ஏன் அவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை எழுதுகிறேன். உங்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள விருப்பம்.

- அரபுலகம் என்பது பாலஸ்த்தீனர்களையும் உள்ளடக்கியதுதான். இன்றுவரை இந்த அரபுலகமும், பாலஸ்த்தீனமௌம் சிங்கள பவுத்த அரசை சர்வதேச அரங்கில் ஆதரித்தே வந்திருக்கின்றன. ஐ. நா சபையில் இலங்கைக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் முழு அரபுலகமும் எமக்கெதிராகவே வாக்களித்தது.

- இன்றுவரை பாலஸ்த்தீனத்தில் அரசியல்த் தலமை மகிந்த ராஜபஷவின் நெருங்கிய நண்பர்களாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழரின் போராட்டம் பயங்கரவாதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளதோடு, ஈழத்தமிழர்களுக்கெதிரான போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்றும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே, அரபுலகத்திற்குள் அடங்கும் பாலஸ்த்தீனம் எமக்கெதிராக மகிந்தவை ஆதரிக்கும்போது, நாம் அவர்களை ஆதரிப்பதனால் எதை அடைய விரும்புகிறோம் ?

- சரி, கொல்லப்படுவது பொதுமக்கள் என்கிற மனிதாபிமானப் பார்வையில் நாம் ஆதரவளிக்கிறோம் என்றால், உலகில் நடக்கும் அனைத்துப் போர்களிலும் நாம் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டோமா?

- பாலஸ்த்தீனத்தை ஆதரிக்கும் எமது முடிவு, மறைமுகஆக இஸ்ரேலினை எதிர்ப்பதாகவும், இஸ்ரேல் சார்ந்த மேற்குலகுடன் முரண்படுவதாகவும், இஸ்லாமிய அடைப்படைவாதத்துடன் எம்மை அடையாளம் காண்ப்பிபதாகவும் இருக்கும் பட்சத்தில் நாமடைய விரும்பும் இலாபம் என்ன?

இதுபோல உங்களுக்கும் பல கருத்துக்கள் இருக்கலாம், ஆகவே தொடருங்கள்.

இது வரை அரபு உலகம் எம்மை ஆதரிக்கவில்லை என்பதால் நாம் அவர்களை எமது நிரந்தர எதிரியாக்குவது எமக்குத் தான் கேடு.

இந்த உலகைல் நாம் புதிய புதிய நண்பர்களைத் தேடிக் கொள்ள வேண்டும். ஒருவன் அடிபடும் போது அவனுக்கு நீங்கள் உதவினால் அவன் அந்த உதவியை மறக்க மாட்டான்.

நாம் இந்த உலகில் நண்பர்களை உருவாக்கவும், நீதியின் பால் நிக்கவும், பலஸ்தீர்னர்களை ஆதரிப்பது முக்கியம். இதனை இங்கே புலம்பெயர் தேசத்தில் செய்வது முக்கியம். நாம் பலஸ்தீனத்தில் நடப்பதை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு ஏன் இந்த உலகு பலஸ்தீனத்துக்கு நீதி வழங்கும் போது எமக்கும் வழங்க வேண்டும் என்று கூற வேண்டும். ஏன்னில் பலஸ்தீனர்களின் பிரச்சினை எமது பிரச்சினையை விட மிகவும் உலகமயப்படிருக்கு. பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மேற்குலகிலே பல சக்திகல் இயங்குகின்றன. நாம் இவர்களையும் எமக்கு ஆதரவாகத் திருப்ப வேண்டும்.

இதன் பாற்பட்டு குருபரன் லண்டனில் ஆற்றும் பணி குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனப் பிரச்சனை எம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது. இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமேயில்லை.  ஐசிஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் கொல்லும் சியா முஸ்லீம்களின் எண்ணிக்கை இஸ்ரேல் கொல்லும் முஸ்லீம்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். கடந்த சில தினங்களில் அது 1200 க்கும் அதிகமானவரின் தலையை வெட்டி உள்ளது.
 
இஸ்ரேலையோ பலஸ்தீனத்தையோ பகைக்காமல் நாம் நமுடைய வேலையைப் பார்ப்பதே நல்லது. சிங்கள் முஸ்லீம் பிரச்சனையில் நம்மில் பெரும்பாலானோர் எந்தப் பக்கத்தையும் சாரவில்லை. அதன் விளைவு யாரையும் நாம் பகைக்கவில்லை. எக்கேடும் வரவில்லை.  
 
இன்று அமெரிக்காவே சிங்கள யுத்தக் குற்றவிசாரணையில் தீவிரமாக இருப்பதால் அமெரிக்காவிற்கு எதிரான எந்தச் செயற்பாடும் எமக்கு நல்லதல்ல.
 
அமைதியாக‌ இருப்பதே நல்லது.
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் இலாப நட்டக் கணக்கை ஒரு பக்கம் வைத்து விடலாம்! பலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேலினால் கொல்லப் படுகிறார்கள். நான் மற்றவர்களோடு சேர்ந்து எதிர்ப்பதால் இதை நிறுத்த முடிந்தால் எனக்கு இலாபமும் நட்டமும் பற்றி அக்கறை இல்லை. எனக்கென்ன இலாபம் எண்டு இக்குழந்தைகளின் உடல்களைக் கடந்து போனால் நான் இரவில் நித்திரை கொள்ள முடியாது!அரபு நாட்டவர்கள் எங்கள் எதிரிகளாக இருக்கலாம். எதிரியை எதிர் கொள்ளும் போது அவர்கள் போல நாமும் மாறாது இருப்பதே நமது வெற்றியாக இருக்க வேணும்! எனவே பலஸ்தீனர் எமக்குச் செய்ததை அவர்களுக்குத் திருப்பிச் செய்யாமல் இருப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் நாடுகளில் இதுவரை எமக்கு ஆதரவான நாடொன்றை இங்கு எவராவது சுட்டிக் காட்ட முடியுமா? அரபுலகம் மட்டுமல்லாமல் எமக்கு அண்மையிலிருக்கும் மலேஷியாகூட எமக்கெதிரான நிலைப் பாட்டில்த்தான் இருக்கிறது. இந்தோனேசியா பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அரபுலகம் மேற்கு நாடுகளுக்கெதிரானது. ஆகவே மேற்குலகிற்கெதிராக எந்தவொரு நாடு சண்டித்தன் காடினாலும் அவை நிச்சயம் அந்த நாட்டிற்கு உதவும். சிங்களத்துக்கு ஆதரவான அரபுலக நிலையென்பது இதனடிப்படையிலேயே அமைந்தது.

தமக்கு ஒத்த ஆக்கிரமிற்கெதிராகப் போராடிய ஈழத்தமிழரின் போராட்டத்தை பாலஸ்த்தீனப் போராளிகளால் பயங்கரவாதமாகத்தான் பார்க்க முடிகிறதென்றால், இவர்களை எப்படி நாம் நண்பர்களாக்க முடியும் என்று யாராவது சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு இலங்கையில் நடப்பது நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் எமது போராட்டத்தைப் பயங்கரவாடஹ்ம் என்றுதான் பார்க்கிறார்களென்றால் நிச்சயம் அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது, தெரிந்துகொண்டே சிங்களத்துக்கு அதன் மேற்குல வெறுப்பிற்காகவே ஆதரிக்கிரார்கள் என்பதுதான் அது. இப்படியானவர்களை எம்மால் எப்படி நண்பர்களாக்குவது ?

சரிதான்,

ஆனால் செஞ்சோலையிலும், புதுக்குடியிருப்பிலும், இன்னும் வன்னியில் பல இடங்களிலும் இதேபோல் எமது குழந்தைகள் கொல்லப்பட்டனவே. அப்போது அது பயங்கரவாதமாகத்தான் பாலஸ்த்தீனர்களுக்குத் தெரிந்ததே??

நாம் அவர்களை ஆதரிக்கவும் வேண்டாம், எதிர்க்கவும் வேண்டாம். அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

ரகு நீங்கள் எவ்வளவு கத்தினாலும் எம்மவர்களது மண்டையில் ஏறாது , முஸ்லிமிடம் எமது இனத்தை இறையாக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டி நிற்பவர்களை திருத்தவே முடியாது !!!!
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ரகு

இப்படி ஒரு திரியை  பேசலாம் வாங்க என  நான் திறக்கலாம் என  இருந்தேன்

இந்தப்பிரச்சினையில்

போராடப்புறப்பட்ட இனம்

பாதிக்கப்பட்ட இனம்

அழிவுகளைச்சந்தித்து நிற்கும் இனம்

நிலத்துக்கு சொந்தக்காறரான  இனம்

ஆக்கிரமிப்பக்கு உள்ளான  இனம்.....

உண்மையில் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிப்பவன்

 எந்தப்பக்கம் நிற்கும்???

என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும்

எனது கேள்வி  ஒன்றுள்ளது

புலிகள்

போராளிகள் தப்புச்செய்துவிட்டதாகவும்

அவர்கள்  வளைந்து குனிந்து சென்றிருக்கலாம் என்றும்

அவர்கள் மண்டையைப்பாவித்திருக்கவேண்டும் என்றும்

அறிவுயீவிகளின் தொடர்புகளை  அவர்கள் பேணியிருந்தால் வென்றிருக்கலாம் எனவும் பலவாறு குற்றம் சாட்டும்

எமது அறிவுக்கூட்டத்திடம் ஒரு கேள்வி

இன்று  பலஸ்தீனம் என்ன  செய்தால் வெல்லலாம்???

என்ன  செய்தால் அவர்களின் உரிமைப்போர் அவர்களது நிலத்தை  காப்பாற்றும்????

இந்தக்கேள்விக்கு நீங்கள் வைக்கும் பதில்

நடக்கணும்

வெற்றி  பெறணும்

இல்லையென்றால் புலிகளது போராட்டம் பற்றி  எந்த விமர்சனமும் செய்யும் தகுதி  உங்களுக்கு இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் நாடுகளில் இதுவரை எமக்கு ஆதரவான நாடொன்றை இங்கு எவராவது சுட்டிக் காட்ட முடியுமா? அரபுலகம் மட்டுமல்லாமல் எமக்கு அண்மையிலிருக்கும் மலேஷியாகூட எமக்கெதிரான நிலைப் பாட்டில்த்தான் இருக்கிறது. இந்தோனேசியா பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அரபுலகம் மேற்கு நாடுகளுக்கெதிரானது. ஆகவே மேற்குலகிற்கெதிராக எந்தவொரு நாடு சண்டித்தன் காடினாலும் அவை நிச்சயம் அந்த நாட்டிற்கு உதவும். சிங்களத்துக்கு ஆதரவான அரபுலக நிலையென்பது இதனடிப்படையிலேயே அமைந்தது.

தமக்கு ஒத்த ஆக்கிரமிற்கெதிராகப் போராடிய ஈழத்தமிழரின் போராட்டத்தை பாலஸ்த்தீனப் போராளிகளால் பயங்கரவாதமாகத்தான் பார்க்க முடிகிறதென்றால், இவர்களை எப்படி நாம் நண்பர்களாக்க முடியும் என்று யாராவது சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு இலங்கையில் நடப்பது நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் எமது போராட்டத்தைப் பயங்கரவாடஹ்ம் என்றுதான் பார்க்கிறார்களென்றால் நிச்சயம் அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது, தெரிந்துகொண்டே சிங்களத்துக்கு அதன் மேற்குல வெறுப்பிற்காகவே ஆதரிக்கிரார்கள் என்பதுதான் அது. இப்படியானவர்களை எம்மால் எப்படி நண்பர்களாக்குவது ?

சரிதான்,

ஆனால் செஞ்சோலையிலும், புதுக்குடியிருப்பிலும், இன்னும் வன்னியில் பல இடங்களிலும் இதேபோல் எமது குழந்தைகள் கொல்லப்பட்டனவே. அப்போது அது பயங்கரவாதமாகத்தான் பாலஸ்த்தீனர்களுக்குத் தெரிந்ததே??

நாம் அவர்களை ஆதரிக்கவும் வேண்டாம், எதிர்க்கவும் வேண்டாம். அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

ரகு, உங்கள் கருத்துக்கள், தமிழர்களுக்கு பலஸ்தீனப் படுகொலைகளை தடுக்கும் சக்தி இருந்தும் பாவிக்காமல் சும்மா பார்த்திருக்க வேணும் என்பதாக விளங்குது. என் கருத்து, தமிழர்களாலோ அல்லது பல ஐரோப்பிய நாடுகளாலோ கூட இஸ்ரேலின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் ஏற்படுத்த இயலாது. அமெரிக்காவினாலும், அரபு நாடுகளாலும் மட்டுமே இது முடியும். அதே போல பலஸ்தீனம், நாடு என்ற தகுதி கூட இல்லாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவினால் தமிழர்களின் கள நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் சொல்வது, நாம் ஏதோ மடிக்குள்ள கட்டி வைத்துக் கொண்டு கொடுக்காமல் சாதிக்கிறம் எண்ட தோரணையை விட்டுப் போட்டு, அப்பாவிகள் கொல்லப் படும் போது எதிர்ப்புக் குரலை மற்றையவர்களோடு சேர்ந்து கொடுக்க வேணும். "யூதர்கள் ஆறு மில்லியன் பேர் கொல்லப் பட்ட போது சம காலத்தில் யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பாததால், இண்டைக்கு அவர்களே எதிர்ப்புக் குரல்களை உதாசீனம் செய்யும் ஒரு மரத்துப் போன மன நிலையில் இப்படி நடந்து கொள்கிறார்கள்" என ஒரு உளவியல் நோக்கு இருக்கிறது. தமிழர்களும் அப்படி ஆகி விடக் கூடாது என நான் அஞ்சுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

பலஸ்தீனப்பிரச்சினை ஈழப் பிரச்சினையை விடச் சிக்கலானது! இப்ப இரண்டு தரப்பும் தமது என்று அடி படும் பகுதி, ஜோர்தானின் ஒரு பகுதியாக இருந்தது. பலஸ்தீனம் என்றொரு நாடு முன்னர் இருக்கவில்லை என்பதால் தாம் பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று இஸ்ரேல் சொல்கிறது. தமிழர் சிங்களவர் பிரச்சினை இப்படி இடியப்பச் சிக்கல் அல்ல! தமிழர் அரசு ஐரோப்பியர் வரமுதல் சிறி லங்காவில் இருந்தது. ஆங்கிலேயர் இணைத்து ஆட்சி செய்தார்கள், திருப்பிப் பிரிக்க மறுத்தார்கள், நாம் சிறுபான்மை ஆனோம்- எங்கள் பிரச்சினை இவ்வளவு எளிதானது!

நன்றி  

நான் அந்தளவுக்கு போகவில்லை

இன்று காசாவில் பலஸ்தீனம்

என்ன  செய்யவேண்டும்???

இண்டைக்கு ஹமாசுக்கும்  இஸ்ரேலுக்கும் காசாவில்  நடக்கும் போரில் இஸ்ரேலியர்களின் ஆழுகைக்குள் இருக்கும்  வெஸ்ற் பாங்கில் இருக்கும்  பலமான அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...    வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்... 

இஸ்ரேலை சுற்றி  ஜோர்டான்,  லெபனான், சிரியா,  எகிப்து எண்று  கிட்டத்தட்ட  6 கோடி மக்கள் தொகையாக கொண்ட முஸ்லீம் நாடுகள் எல்லையாக இருக்கின்றன்... 

இவர்கள் யாரும் கேக்காத போது  அடிவேண்டி ஒடுங்கி போய் இருக்கும் 35 லட்ச்சம் தமிழன் என்னத்தை செய்ய முடியும்...?? 

அடிவேண்டும் மக்களின் உணர்வை மட்டும் புரிந்துகொள்ளலாம்...  மற்றும் படி அவர்களை போல கையாலாகாத கூட்டம் தான் நாங்களும்... 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உலகத்தில் யார் எந்த மூலையில அடிபட்டு செத்தாலும் எனக்கு கவலையில்லை.ரகு சொன்ன மாதிரி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு கொடுத்தால் மேற்கு நாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு எதிராக மாறும் என்பது வெறும் பேத்தல்...ஏதோ மே.நாடுகளுக்குத் தெரியாமல் சிங்கள அரசு மாத்திரம் தனியே இருந்து எம்மை அழித்து முடித்த மாதிரி ரகுவின் கதை இருக்குது. மே.நாடுகளும் சரி,முஸ்லீம் நாடுகளும் சரி தமது தேவைக்கு ஏத்த மாதிரி சுயநலமாய் நடந்து கொள்கிறது.தமிழன் மட்டும் தான் பாவம் பார்த்து அழிந்து போய்க் கொண்டு இருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்து.

1) 2009 முள்ளிவாய்க்காலுக்கும் 2014 காசாவுக்கும் ஒரு விதியாசமும் இல்லை.

2) 2005 மாவிலாறில் புலிகள் நடந்ததுகொண்டதுக்கும் 2014இல் தேவையில்லாமல் ராக்கெட்டு விட்டு வாங்கி கட்டும் ஹமாசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

3) அங்கே எம்மக்கள் ஊடகம் ஐசிஆர்சி ஏதும் இன்றி அழிக்கப் பட பெரிய நாடு, சிறிய நாடு, பலத்தீனியர்கள் சுய்டானியர் என்று யாரும் திரும்பி பார்க்கவில்லை. காசாவுக்கு பலர் உச்சு கொட்டுகிறார்கள்.

4) நாம் இந்தவிதத்தில் பலதீனியருடம் உருவகப்பட்டாலும், இன்னோர் வகையில், சொந்தநாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு அலையும் ஏதிலிகளாக, நாடு அமைக்கும் விருப்பர்களாக நாம் யூதர்களுடனும் உருவகப்படுகிறோம்.

5) நாம் யாரை ஆதரிப்பது என்பது விழுமியங்களுக்கு அப்பால், இன நலம் சார்தே இருக்க முடியும். அவ்வகையில் வல்லோன் அமெரிக்கா ஆதரிக்கும் இஸ்ரேல் சார்பு நிலையே தமிழ் அமைப்புகள் எடுக்க வேண்டும்.

என் கருத்து.

1) 2009 முள்ளிவாய்க்காலுக்கும் 2014 காசாவுக்கும் ஒரு விதியாசமும் இல்லை.

2) 2005 மாவிலாறில் புலிகள் நடந்ததுகொண்டதுக்கும் 2014இல் தேவையில்லாமல் ராக்கெட்டு விட்டு வாங்கி கட்டும் ஹமாசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆக மாவிலாற்று வாய்க்கால் கதவை புலிகள் மூடாமல் விட்டு இருந்தால் இலங்கை அரசாங்கம் போரை ஆரம்பித்து இருக்காது...??  அப்படியா...?? 

அதுவரைக்கும் இறுக்கமான போர் நிறுத்தத்தை இலங்கை படைகள் கடைப்பிடிச்சு கொண்டு இருந்தது எண்டுறீயள்...

வரலாற்றிலையும் நீங்கள் சூரன் தான்... 

ஹமாஸ்  ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் அடிச்சதை யார் அண்ணை உறுதிப்படுத்தினவை...??   ஹமாசா...??  இல்லை இஸ்ரேலிய இராணுவமா...?? 

உங்களை மாதிரி  ஆக்கள் இருக்கிறதாலைதான்  உலக பிரச்சார ஊடகங்கள் எல்லாம்  வேலை செய்யுது... 

Edited by தயா

எனது முகநூல் தொடுப்பில் இணைக்கப்பட்டவை

00000

இசுரேலுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானத்தில் வாக்களித்த நாடுகள் இசுரேலினை பயங்கரவாதநாடாக அறிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பொருளாதார தடையை முன்வைக்கின்றன, தமது பிரதிநிதிகளை திரும்பபெருகின்றன, இசுரேலின் தூதரகத்தினை மூடச் சொல்கின்றன.

இலங்கையின் மீதும் தீர்மானம் கொண்டுவந்து தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்கிறேன் என்று சொன்ன அமெரிக்கா, மேற்குலக நாடுகள் இலங்கையோடு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுகின்றன, 

முதலீடுகள் செய்கின்றன, 

சுற்றுலாதுறையை வளர்க்கின்றன, 

சிவப்புகம்பள வரவேற்பு கொடுக்கின்றன, 

காமன்வெல்த் நாட்டின் தலைவராக்குகிறது, 

ராணுவ ஒப்பந்தங்கள் போடுகின்றன, 

ராணுவ பயிற்சிக்கு ஏற்பாடு செய்கின்றன, 

தமிழீழ தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புகின்றன, 

புலிகள் மீதான தடையை நீட்டிக்கின்றன, 

புலிக்கொடியோடு போராட தடைவிதிக்க முயலுகின்றன, 

புலிகளையும் விசாரிக்கவேண்டுமென்று சொல்கின்றன......

வெனிசூலா, பிரேசில், பொலிவீயா, சிலி, துருக்கி போன்ற நாடுகள் இசுரேலுடன் தூதரக தொடர்புகளை துண்டித்துள்ளது. அமெரிக்கா தனது சுயநலத்திற்காகவும், ஆக்கிரமிப்பிற்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காகவும் ‘தமிழர் பிரச்சனையை’ பயன்படுத்துகிறது என்று ராஜபக்சே அரசு இந்த நாடுகளில் தமது தொடர்புகள், இந்தியாவின் உதவி கொண்டு வெற்றிகரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. இதனால் இந்த நாடுகள் அமெரிக்காவின் எதிரியான இலங்கை தமக்கு நண்பன் என்று ராஜபக்சேவிற்கு துணை செய்கின்றன.

ஆனால் , ஈழப்படுகொலை போரின் சூத்திரதாரியான அமெரிக்கா, இலங்கையுடனான தமது மறைமுக உறவின் மூலமாக தமிழர்களை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கு துணை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இதுவரை இலங்கையின் மீது எந்த வித நெருக்கடியையும் முன்னகர்த்தாமல் இலங்கையுடன் வர்த்தக-ராணுவ உறவுகளை பலப்படுத்துகிறது. இதைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும் நமது அமெரிக்க ஆதரவு உறவுகள் மெளனம் காக்கிறார்கள்.

“புலிகளையும் விசாரிக்கவேண்டும், அவர்கள் பயங்கரவாதிகள்” என்று அமெரிக்கா சொல்கிறது. நமது அமெரிக்க ஆதரவு நண்பர்கள் மெளனம் காக்கிறார்கள்; இன்னும் சிலர் இதை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள்.

தமிழீழவிடுதலை கோரிக்கையையும், ஆதரவு தளத்தினையும் மேற்குலகமும், அமெரிக்காவும் அழித்தெடுக்கும் வரை நமது நண்பர்கள் மேற்குலகினை புரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது போராட்ட களம் அவர்களுக்காக இருக்கப்போவதும் இல்லை.

மூன்றாம் உலகநாடுகளே, விடுதலை போராட்டத்தில் துணை நிற்கும்.

மேற்குலகம்-அமெரிக்கா நமது விடுதலை கோரிக்கையை வைத்து வியாபாரம் பேசும்.

நாம் எப்பொழுது மூன்றாம் உலக நாட்டு மக்களிடத்தில் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றினை கொண்டு சென்று நீதியை வெல்வதற்கு துணைக்கு தோழமையாக் அழைக்கிறோமோ அன்றுதான் உலகம் நம்மோடு நிற்கும்.

மேற்குலகின் ஆதரவு கிடைத்த பொழுதிலும், கருணாநிதியைப் போல பல அரபுநாடுகள் அமைதி காத்து இசுரேலுக்கு துணை செய்த போதிலும் இசுரேல் இன்று தனித்து விடப்படுகிறது... 

புறக்கணிக்கப்படுகிறது....

பாலஸ்தீனம் உலகமக்களின் ஆதரவினை பெறுகிறது. பாலஸ்தீன விடுதலையை தடுக்க முடியாது..

இசுரேலின் அக்கிரமம் வீழ்வதை அமெரிக்காவால், மேற்குலகால் தடுக்க இயலாது.

மூன்றாம் உலகநாடுகளே நமக்கான தோழர்கள். ஏகாதிபத்திய திருடர்கள் அல்ல. விழித்துக்கொள்வோம்.

பின்வரும் வரிகளை வாசியுங்கள். இதே போன்றொதொரு நிலையை இலங்கை மீது ஏற்படுத்தாமல் ஈழம் சாத்தியமில்லை.

”தென்னாப்பிரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராட்டம் எப்படி ஒரு பரந்துபட்ட மக்கள் ஆதரவு தளத்தினை உலக அளவில் பெற்றதோ அதைப் போன்றதொரு நிலைக்கு பாலஸ்தீனம் நகர்ந்திருக்கிறது. இனிமேலும் இசுரேலுக்கு உலகம் முன்பு போல் இருக்காது”

“Israeli authorities and their supporters must understand that the Palestinian cause, like the anti-apartheid movement in South Africa, has reached a critical mass. Things will never be the same again.”

http://www.dailysabah.com/opinion/2014/07/26/operation-protective-edge-aggravates-israels-isolation

On July 8, Israel initiated Operation Protective Edge under the pretext of responding to the kidnapping...
DAILYSABAH.COM

  • கருத்துக்கள உறவுகள்

9ம் வகுப்பு சமூககல்வியில் உடனடிக்காரணம் நீண்டகால காரணம் என்று படிச்சிருப்பியள். மாவிலாறுக்கு முன் இரு தரப்பும் பரஸ்பரம் பல தடவை யுத்த நிறுத்தை மீறினாலும் (SLMM ஆறிக்கையை வாசிக்கவும்). ஆப்படிக்க காத்திருந்த அரசுக்கு, மாவிலாறு மூலம் யுத்தத்தை தொடங்க ஒரு உடனடிக் காரணத்தை புலிகளே அமைத்துக் கொடுத்தனர்.

ஹமாசின் சுரங்கங்களை அழிக்க காத்திருந்த இஸ்ரேலுக்கு ராக்கெட் விட்டு, ஹமாசே வழிசமைத்துக்கொடுத்தது.

ஹமாஸ் ராக்கெட் விடுவதை அவர்களே உரிமை கோரியுள்ளனர் அண்ணை.

யாழுக்குள் குண்டுசட்டி ஒட்டாமல் மற்றய விடயங்களையும் கொஞ்சம் படிச்சு வையுங்கண்ணே.

இப்பொழுது அதாவது பலஸ்தீனத்துக்கு ஆதரவான சிரியா போன்ற‌ நாடுகள் உள்நாட்டு கலகங்களில் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஹமாஸ் வலிந்து றொக்கட் தாக்குதலை ஆரம்பித்து புதிய யுத்தம் ஒன்றைத் தொடங்குவதின் தார்ப்பரியம் பற்றி பல கேள்விகள் உள்ளன. பின் புலம் பலமிழந்த நிலையில் யுத்தம் ஆரம்பித்தால் முடிவு எப்படி இருக்கும் என்பது போன்ற கேள்விகள்..
 
இதற்கு வைக்ககூடிய தர்க்க ரீதியான பதில்கள்...
 
1. பலஸ்தீனம் இஸ்ரேலினால் தாக்கபடும் போது அரபுலகம் உணர்வு பூர்வமாக ஒற்றுமைப் படுவதால் உள்நாட்டுக்கலகங்களை தணிப்பது.
 
2. ஈரான் தன் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை பலஸ்தீனத்தில் சோதிப்பது. அதனை சீர்படுத்துவது. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் பொருளாதார ரீதியாக  தாக்குவது. இந்த ரொக்கட்டுகளைத் எதிர்த்து தாக்கும் இஸ்ரேலிய றொக்கட்டுகள் மிகவும் விலை கூடியவை. இதற்காக அமெரிக்கா இதுவரை 700 மில்லியன் டொலர்களும் இன்று மேலதிகமாக 225 மில்லியன் டொலர்களும் இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது. 1 பில்லியன் டொலர்கள்.
 
3. இஸ்ரேலை பிரச்சனையான நிலையில் வைத்திருப்பது. இதன் மூலம் உள்நாட்டுக்கலகங்களில் மூழ்கிக் கிடக்கும் இஸ்ரேலின் அயல் நாடுகளில் இஸ்ரேல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனக்கு சாதகமான ஏதாவதையும் செய்யும் சூழ்நிலையை அகற்றுவது. இஸ்ரேலிய படைகளை பலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தி அவர்களை அங்கு மினக்கட வைப்பது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மாவிலாற்று வாய்க்கால் கதவை புலிகள் மூடாமல் விட்டு இருந்தால் இலங்கை அரசாங்கம் போரை ஆரம்பித்து இருக்காது...??  அப்படியா...?? 

அதுவரைக்கும் இறுக்கமான போர் நிறுத்தத்தை இலங்கை படைகள் கடைப்பிடிச்சு கொண்டு இருந்தது எண்டுறீயள்...

வரலாற்றிலையும் நீங்கள் சூரன் தான்... 

ஹமாஸ்  ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் அடிச்சதை யார் அண்ணை உறுதிப்படுத்தினவை...??   ஹமாசா...??  இல்லை இஸ்ரேலிய இராணுவமா...?? 

உங்களை மாதிரி  ஆக்கள் இருக்கிறதாலைதான்  உலக பிரச்சார ஊடகங்கள் எல்லாம்  வேலை செய்யுது... 

தயா,

ஹமாஸ் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், தம்மிடம் 10, 000 ராக்கெட்டுக்கள் இருப்பதாகவும் அவற்றில் சுமார் 2000 ராக்கெட்டுக்கள் வரை இஸ்ரேல் மீது ஏவியிருப்பதாகவும் உரிமைகோரியிருப்பது உங்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை. அப்படியிருக்க, அவர்கள் ராக்கெட் தாக்குதல் நடத்துவதை கண்டீர்களா என்று கேட்பது சரியா??

அடுத்தது, இஸ்ரேலின்  3 இளைஞர்களைக் கடத்திக்கொண்டு போய்க் கொன்றதுடந்தான் இந்த மோதலே ஆரம்பமானது. ஹமாஸ் பொல்லைக் கொடுக்க இஸ்ரேல் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டு பேயாட்டம் ஆடுகிறது. 3 இளைஞர்களின் உயிருக்காக இப்போது 1700 பாலஸ்த்தீனர்களும் 62 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல இப்போது ராக்கெட் ஏவுதளங்களையும், இஸ்ரேலினுல் ஊடுருவ அமைக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிப்பதையும் தாண்டி ஹமாஸினை முடிந்தவரை பலவீனப்படுத்துவதுவரை செல்கிறது.

அரபுலகின் ஜாம்பவான்களே வாயை மூடிப் பேசாமல் வேடிக்கை பார்க்கும்போது நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அரபுலகமே சியா - சுன்னி மதமோதலுக்குள் ஒருவர் ஒருவரை அழிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகையில் நாம் என்ன செய்யமுடியும்?

விடுங்கள், ஒரு தரப்பு போதுமடா சாமி என்கிற நிலைக்கு வரும்போது மோதலும் நின்றுவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது முகநூல் தொடுப்பில் இணைக்கப்பட்டவை

00000

இசுரேலுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானத்தில் வாக்களித்த நாடுகள் இசுரேலினை பயங்கரவாதநாடாக அறிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பொருளாதார தடையை முன்வைக்கின்றன, தமது பிரதிநிதிகளை திரும்பபெருகின்றன, இசுரேலின் தூதரகத்தினை மூடச் சொல்கின்றன.

இலங்கையின் மீதும் தீர்மானம் கொண்டுவந்து தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்கிறேன் என்று சொன்ன அமெரிக்கா, மேற்குலக நாடுகள் இலங்கையோடு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுகின்றன, 

முதலீடுகள் செய்கின்றன, 

சுற்றுலாதுறையை வளர்க்கின்றன, 

சிவப்புகம்பள வரவேற்பு கொடுக்கின்றன, 

காமன்வெல்த் நாட்டின் தலைவராக்குகிறது, 

ராணுவ ஒப்பந்தங்கள் போடுகின்றன, 

ராணுவ பயிற்சிக்கு ஏற்பாடு செய்கின்றன, 

தமிழீழ தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புகின்றன, 

புலிகள் மீதான தடையை நீட்டிக்கின்றன, 

புலிக்கொடியோடு போராட தடைவிதிக்க முயலுகின்றன, 

புலிகளையும் விசாரிக்கவேண்டுமென்று சொல்கின்றன......

வெனிசூலா, பிரேசில், பொலிவீயா, சிலி, துருக்கி போன்ற நாடுகள் இசுரேலுடன் தூதரக தொடர்புகளை துண்டித்துள்ளது. அமெரிக்கா தனது சுயநலத்திற்காகவும், ஆக்கிரமிப்பிற்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காகவும் ‘தமிழர் பிரச்சனையை’ பயன்படுத்துகிறது என்று ராஜபக்சே அரசு இந்த நாடுகளில் தமது தொடர்புகள், இந்தியாவின் உதவி கொண்டு வெற்றிகரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. இதனால் இந்த நாடுகள் அமெரிக்காவின் எதிரியான இலங்கை தமக்கு நண்பன் என்று ராஜபக்சேவிற்கு துணை செய்கின்றன.

ஆனால் , ஈழப்படுகொலை போரின் சூத்திரதாரியான அமெரிக்கா, இலங்கையுடனான தமது மறைமுக உறவின் மூலமாக தமிழர்களை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கு துணை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இதுவரை இலங்கையின் மீது எந்த வித நெருக்கடியையும் முன்னகர்த்தாமல் இலங்கையுடன் வர்த்தக-ராணுவ உறவுகளை பலப்படுத்துகிறது. இதைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும் நமது அமெரிக்க ஆதரவு உறவுகள் மெளனம் காக்கிறார்கள்.

“புலிகளையும் விசாரிக்கவேண்டும், அவர்கள் பயங்கரவாதிகள்” என்று அமெரிக்கா சொல்கிறது. நமது அமெரிக்க ஆதரவு நண்பர்கள் மெளனம் காக்கிறார்கள்; இன்னும் சிலர் இதை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள்.

தமிழீழவிடுதலை கோரிக்கையையும், ஆதரவு தளத்தினையும் மேற்குலகமும், அமெரிக்காவும் அழித்தெடுக்கும் வரை நமது நண்பர்கள் மேற்குலகினை புரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது போராட்ட களம் அவர்களுக்காக இருக்கப்போவதும் இல்லை.

மூன்றாம் உலகநாடுகளே, விடுதலை போராட்டத்தில் துணை நிற்கும்.

மேற்குலகம்-அமெரிக்கா நமது விடுதலை கோரிக்கையை வைத்து வியாபாரம் பேசும்.

நாம் எப்பொழுது மூன்றாம் உலக நாட்டு மக்களிடத்தில் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றினை கொண்டு சென்று நீதியை வெல்வதற்கு துணைக்கு தோழமையாக் அழைக்கிறோமோ அன்றுதான் உலகம் நம்மோடு நிற்கும்.

மேற்குலகின் ஆதரவு கிடைத்த பொழுதிலும், கருணாநிதியைப் போல பல அரபுநாடுகள் அமைதி காத்து இசுரேலுக்கு துணை செய்த போதிலும் இசுரேல் இன்று தனித்து விடப்படுகிறது... 

புறக்கணிக்கப்படுகிறது....

பாலஸ்தீனம் உலகமக்களின் ஆதரவினை பெறுகிறது. பாலஸ்தீன விடுதலையை தடுக்க முடியாது..

இசுரேலின் அக்கிரமம் வீழ்வதை அமெரிக்காவால், மேற்குலகால் தடுக்க இயலாது.

மூன்றாம் உலகநாடுகளே நமக்கான தோழர்கள். ஏகாதிபத்திய திருடர்கள் அல்ல. விழித்துக்கொள்வோம்.

பின்வரும் வரிகளை வாசியுங்கள். இதே போன்றொதொரு நிலையை இலங்கை மீது ஏற்படுத்தாமல் ஈழம் சாத்தியமில்லை.

”தென்னாப்பிரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராட்டம் எப்படி ஒரு பரந்துபட்ட மக்கள் ஆதரவு தளத்தினை உலக அளவில் பெற்றதோ அதைப் போன்றதொரு நிலைக்கு பாலஸ்தீனம் நகர்ந்திருக்கிறது. இனிமேலும் இசுரேலுக்கு உலகம் முன்பு போல் இருக்காது”

“Israeli authorities and their supporters must understand that the Palestinian cause, like the anti-apartheid movement in South Africa, has reached a critical mass. Things will never be the same again.”

http://www.dailysabah.com/opinion/2014/07/26/operation-protective-edge-aggravates-israels-isolation

On July 8, Israel initiated Operation Protective Edge under the pretext of responding to the kidnapping...
DAILYSABAH.COM

திருமுருகன் காந்தியின் ஈழத்தமிழர் மீதான கரிசணைக்குத் தலைவணங்கும் அதேவேளை, அவரைச் சுற்றியிருக்கும் சிலர்பற்றியும் பேசவேண்டியிருக்கிறது. அவரது வலது கரம் ஒரு இஸ்லாமியத் தமிழர். நிச்சயம் பாலஸ்த்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலிற்கு எதிரான நிலைய எடுக்கவேண்டும் என்கிற கட்டாயம் திருமுருகனுக்கு இருந்திருக்கும். அதனால்த்தான் இஸ்ரேலினைக் கண்டிக்கிறார். அவரது மே 17 இயக்கத்தின் பல உறுப்பினர்கள் இஸ்லாமியர்களே.

டுவிட்டர் தளத்தில் அவரது இதுதொடர்பான பதிவொன்றினைப் பார்த்தேன். அதில் 1980 களின் ஆரம்பத்தில் பாலஸ்த்தீனப் போராளிகள் ஈழப் போராளிகளுக்கு அயுதப் பயிற்சி கொடுத்ததாகவும் அதனால் அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் எழுப்ப வேண்டும் என்று எழுதியிருந்தார்யீதற்கு ஒருவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார், "பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் பணத்தைப் பெற்றுக் கொண்டே பயிற்சியளித்ததாகவும், அதே காலத்தில் இஸ்ரேலும்கூட பயிற்சியளித்ததாகவும், அப்படியிருந்தால் நாம் ஒரேநேரத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்த்தீனத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றும் எழுதியிருந்தார். இதற்கு திருமுருகன் பதில் எழுதவில்லை. என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏதோ வீட்டோ அதிகாரம் வைச்சிருக்கிற ஆக்கள் மாதிரியும் அதை வைச்சு யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற மாதிரியும் ஓடுப்பட்டு திரியுறம்.மூஞசுறு தான போக வழிஇல்லையாம் கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்து.

5) நாம் யாரை ஆதரிப்பது என்பது விழுமியங்களுக்கு அப்பால், இன நலம் சார்தே இருக்க முடியும். அவ்வகையில் வல்லோன் அமெரிக்கா ஆதரிக்கும் இஸ்ரேல் சார்பு நிலையே தமிழ் அமைப்புகள் எடுக்க வேண்டும்.

முழுமையாக உடன்படுகிறேன்.....நேர்மை,நியாயம் எல்லாம் தனிமனிதவாழ்க்கைக்கு சரிபட்டு வரும்....அரசியலுக்கு சரிபட்டு வராது.ஏன் மனிதாபிமானமும் கூட தனிமனித வாழ்க்கைக்குதான். அண்மையில் சுட்டுவீழத்தப்பட்ட விமானசிதைவுகளை பார்வையிடுவதற்கே அர்சியலும் அதிகாரமும் புகுந்து விளையாடுகின்றது......நாம் பலஸ்தீனருக்கு ஆதரவளிப்பதலோ அல்லது பலஸ்தீனர் எமக்கு ஆதரவளிப்பதாலோ ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.....பலஸ்தீனருக்காக எமது இயக்கங்கள் ஆரம்ப காலகட்டத்தில் பெருமெடுபிலான் போராட்டங்களை செய்தது முக்கியமாக ஈ.பி. எல்.ஆர்.........

  • கருத்துக்கள உறவுகள்
மூன்றாம் உலகநாடுகளே, விடுதலை போராட்டத்தில் துணை நிற்கும். மேற்குலகம்-அமெரிக்கா நமது விடுதலை கோரிக்கையை வைத்து வியாபாரம் பேசும். நாம் எப்பொழுது மூன்றாம் உலக நாட்டு மக்களிடத்தில் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றினை கொண்டு சென்று நீதியை வெல்வதற்கு துணைக்கு தோழமையாக் அழைக்கிறோமோ அன்றுதான் உலகம் நம்மோடு நிற்கும்.
மூன்றாம் உலகநாட்டுமக்களுக்கு வறுமையிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்பதே குறிக்கோள். மூன்றாம் உலகநாட்டில் உள்ள மக்களின் பிரச்சனை எல்லாம் எப்படி முதலாம் உலகநாட்டு மக்களாக வரலாம் என்பதே ......கற்பனையில் தோழர்கள் என்றும்,எகாதிபத்தியம் என்றும் மக்கள் போராட்டம் என்றுமெழுதலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை......

9ம் வகுப்பு சமூககல்வியில் உடனடிக்காரணம் நீண்டகால காரணம் என்று படிச்சிருப்பியள். மாவிலாறுக்கு முன் இரு தரப்பும் பரஸ்பரம் பல தடவை யுத்த நிறுத்தை மீறினாலும் (SLMM ஆறிக்கையை வாசிக்கவும்). ஆப்படிக்க காத்திருந்த அரசுக்கு, மாவிலாறு மூலம் யுத்தத்தை தொடங்க ஒரு உடனடிக் காரணத்தை புலிகளே அமைத்துக் கொடுத்தனர்.

ஹமாசின் சுரங்கங்களை அழிக்க காத்திருந்த இஸ்ரேலுக்கு ராக்கெட் விட்டு, ஹமாசே வழிசமைத்துக்கொடுத்தது.

ஹமாஸ் ராக்கெட் விடுவதை அவர்களே உரிமை கோரியுள்ளனர் அண்ணை.

யாழுக்குள் குண்டுசட்டி ஒட்டாமல் மற்றய விடயங்களையும் கொஞ்சம் படிச்சு வையுங்கண்ணே.

அண்ணை உந்த குண்டு சட்டி குதிரை ஓட்டுற ஆக்களை நிறைய பாத்தாச்சு... 

இஸ்ரேலின் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம்  இரண்டு யூத இளைஞர்கள் இனம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டதாகும்   ஹமாஸ் இதற்க்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை எண்று மறுத்தும் இருந்தது...

கொல்லப்பட்ட இளைஞர்களுக்காக நீதி கேட்டு  இஸ்ரேலில்  யூதர்களால் போராட்டங்கள் வெடித்து  இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மீதே  கல்லெறி வீச்சில் ஈடுபட்டது  போண்ற கொதி நிலைக்கு யூதர்கள் போய் இருந்ததை  குளிர்விக்க  இஸ்ரேலிய  அரசு எடுத்த நடவடிக்கைதான்  இந்த  காசா மீதான போர்...

உங்களை மாதிரி  ஆக்களுக்கு சொல்லப்பட்ட கதை தான் ஹமாஸ் ஏவுகணை வீசியது... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.