Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மாணவன் மீது கொடூரத் தாக்குதல்; மாணவியருக்கு வன்புணர்வு எச்சரிக்கை சப்ரகமுவ பல்கலையில் பதட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sabrakamuwa_student_006.jpg

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தமிழ் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் தமிழ் மாணவன் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் மொழிப்பிழைகளும் காணப்படுகின்றன. 
 
இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகமா லையைச் சேர்ந்த சந்திர குமார் சுதர்சன் (வயது 21) என்ற புதுமுக மாணவனே நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
பெரும்பான்மையின மாணவர்களாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாக அங்குள்ள சக மாணவர்கள் கூறுகின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழ கத்தில் கலைப் பிரிவின் கீழான சமூக விஞ்ஞான கற்கைநெறி, 
ஆறு மாத காலத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 
 
அதில் போதியளவு மாணவர்களை இணைப்பதற்கு இடமில்லை எனத் தெரிவித்து கற்கை நெறி இரு பிரிவுகளாக்கப்பட்டது. முதல் பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் முடிந்தபோதும், இரண்டாவது பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதிருந்தது.
 
அதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது பிரிவு மாணவர்களின் கற்கைநெறியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பிரிவில் 20 தமிழ் மாணவ, மாணவியர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். 
 
சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தில் ஒரே தடவையில் அதிகளவான தமிழ் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை இதுவே முதல்முறை. இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி, பண்டாரா விடுதியில், புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 தமிழ் மாணவ, மாணவியரின் பெயர் குறிப்பிட்டு எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப் பட்டிருந்தது. 
 
அதில் மாணவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறாவிட்டால் வெட்டிக் கொல்லப்படுவர் என்றும், மாணவியரை வன்புணர்வுக்குள்ளாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
கொச்சைத் தமிழிலும், சிங்களமும் கலந்து எழுதப்பட்ட துண்டுப் பிரசுரம் விடுதியில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. குறித்த விடுதிக்கு பாதுகாப்புக்கு விசேட ஊழியர் நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. 
 
இது தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் நிர்வாகத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் கடந்த சனிக்கிழமையும் அவ்வாறான துண்டுப்பிரசுரம் ஒப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் நேற்று அதி காலை 2 மணியளவில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட 20 மாணவர்களுள் ஒருவரான சுதர்சன், இயற்கை கடன் கழிப்பதற்காக விடுதியை விட்டு வெளியே வந்தபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதன் போது அங்கு நின்ற முகமூடி அணிந்த சில மாணவர்கள் சுதர்சனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். 
 
நெஞ்சுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளனர். "துண்டுபிரசுரம் ஒட்டிக் கொண்டிருந்த சிலரே தாக்குதல் நடத்தினர். அவர்கள் முகத்தில் மப்ளர் அணிந்திருந்தனர். தாக்கிபின்னர் கழுத்தை இறுக்கிக் கட்டினர். பின்னர் மயக்கமாகிவிட்டேன். தாக்குதல் நடத்தியவர்கள் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட தோற்றத்தை கொண்டவர்கள்.
 
அவர்களில் ஒருவர் உடலில் பச்சை குத்தியிருந்தார். அவர்களைத் என்னால் அடையாளம் காட்ட முடியும்'' என்று தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். 
 
தாக்குலுக்கு இலக்கான சுதர்சன் அரை மணித்தியாலத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து தவழ்ந்து சென்று தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்தே பலாங்கொட மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவருகின்றது.
 
இந்தத் தாக்குதல் விடுதியில் பாதுகாப்பு ஊழியர் இருக் கத்தக்கதாவே நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. 
 
அதேவேளை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோது தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்கு மூலத்திலேயே தம்மிடம் கையெழுத்துப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ள துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத் தப்பட்ட தமிழ் மாணவர்கள், அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர். 
 
தாம் முறைப்பாடு செய்த சமயம், இந்த அச்சுறுத்தலை நீங்களே திட்டமிட்டு நடத்தியுள்ளீர்கள். வேறு பல்கலைக் கழகத்துக்கு மாறுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளீர்கள் என்று பொலிஸார் கூறினர் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
sabrakamuwa_student_006.jpg
 
20140712_0757141.gif
 
http://www.onlineuthayan.com/News_More.php?id=330023289104263127

  • கருத்துக்கள உறவுகள்

10516653_879363628758049_73693054317063810553322_879364028758009_358688105483613

10540531_879364218757990_457261104381530

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகமா லையைச் சேர்ந்த சந்திர குமார் சுதர்சன் (வயது 21) என்ற புதுமுக மாணவனே நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்மை......உண்மை...உங்கள் நாடுதான்......எம்மை பிரித்து விடுங்கள்.எம்மை நாமே பார்த்துக்கொள்கின்றோம்.ஒரு தொந்தரவும் செய்ய மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
உடனடியாக தமிழ் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினால் .... தாம் அடித்து கொடுமைகள் செய்ய யாரும் இல்லாமல் போய்விட்டார்களே என்று. அவர்கள் கோபம் கொள்ள நேரிடும்.
அப்படி அவர்கள் கொலை செய்தாலும் 10 12 மாணவர்களைத்தான் கொலை செய்வார்கள்.
மரணங்களை விட்டு கொடுத்து தந்திரோபாயமாக வாழ்ந்தால்தான். அரசியலில் வெற்றி பெற முடியும்.
 
அடிக்கும்போது அவர்கள் அடிக்கிறார்கள் என்று வலியில் கத்தினால் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கலாம்.
மெளனமாக அடிகளை வாங்குவதே .... தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தரும்.

இது பின் நவீனத்துவ டக்ளா கிலிகிளு உபதேசமா? :o

நிங்கள் சொல்ல வாறதை இப்படியும் சொல்லலாமா...?? 

புலிகள் போராத்தை தொடங்காமல் விட்டு இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்குமா....??   இல்லை   அதுக்கும் முன்னம் இப்படி இன குரோத கலவரங்கள் தான் நடந்து இருக்கிறதா...??     

அப்படி நடக்க  இருந்தாலும் சர்வதேச நாடுகள் பாஞ்சு வந்து தமிழருக்காக முன் நிண்டு இருந்தன...   இப்ப பாருங்கோ...   பயங்கரவாதிகள் எண்டு யாரும் திரும்பி பாக்கிறது இல்லை... 

 ( வரலாறுகளை எங்கட சனம் படிக்கிறதும் இல்லை , அப்படி படிச்சாலும் ஞாபகம் கொள்ளுறதும் இல்லை எண்டது எனக்கு தெரியாதா என்ன..? )

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவச்சகோதரகளே,

ஒரு கணம் இப்படி ஒரு நிலை முஸ்லீம் மாணவர்க்கு வந்தால் அதை அவர்கள் எப்படிகையாள்வார்கள் என்று நிதானமாய் யோசித்து முடிவெடுங்கள். முடிந்தால் மற்றைய மாணவர்களுடன் கலந்துபேசி ஒரு சுமூக முடிவை எட்டப் பாருங்கள். முடியாவிட்டால் UGCயிடம் முறையிட்டு மட்டு அல்லது யாழுக்கு மாற்றலாகுங்கள்.

வெளியில் போகும் போது கவனமாய் இருங்கள்.

அதே போல் தம்பிள்ளைகளை டாப் யூனி க்கு அனுப்பி விட்டு புலத்தில் இருந்து உங்களை பலர் உசுப்பேத்தக் கூடும், அவர்களையிட்டும் அவதானமாயிருங்கள்.

இது உங்கள் வாழ்க்கை உங்கள் படிப்பு.

2003 மட்டு பல்கலையில் இருந்து இதே போல் வடக்குத் தமிழரை சக தமிழரே விரட்டியுள்ளோம். ஆக காட்டுமிராண்டித்தனம் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின்.... சென்ற தலைமுறையோ, இந்தத் தலைமுறையோ, வருகின்ற தலைமுறையோ.......
தமிழனுக்கு தீர்வு வழங்கவோ.... இணக்கமாக... வாழவோ  தயாரில்லை.
அதை தட்டிக் கேட்க  புறப்பட்டால்.... மட்டும்,  எம்மவரிடமிருந்து, எத்தனை காட்டிக் கொடுப்புகள்.
மானம் கெட்டவர்கள் வாழும் இனம், தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாம் முறைப்பாடு செய்த சமயம், இந்த அச்சுறுத்தலை நீங்களே திட்டமிட்டு நடத்தியுள்ளீர்கள். வேறு பல்கலைக் கழகத்துக்கு மாறுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளீர்கள் என்று பொலிஸார் கூறினர் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓமோம்  இப்படி தமிழும் ஆங்கிலமும் எழுதத்தெரிஞ்ச மாணவர்களுக்கு நிச்சயம் பல்கலைகழகம்  கிடைத்திருக்கும் 

சிலவேளை தாக்கப்பட்ட மாணவர் சித்தசுவாதீனமற்றவராக இருக்கலாம் அவரே அவரை தாக்கி விட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் 

போலிஸ்,வழக்கு என்று ஒன்றுக்கும் போய் விடாதீர்கள் பிறகு நீதிமன்றமே இதனை சொல்லிவிடும், கத்தி வெட்டுக்கு இலக்காகி இருக்கும் மாணவன்  பைத்தியக்காரன் என்றும் பெயர் எடுக்கவேண்டுமா...?  

UGC யிடமும் கவனம் உங்களை கத்தியால் வெட்டினார்களா இல்லை மரநாய் பிராண்டியதா என்று கேட்பார்கள் 

அண்ணை மருதங்கேணி சொன்னதுபோல் அனுசரிச்சு போங்கள் 

ஒவொரு நாளுமா வெட்டப்போகினம் அலுப்படிச்சால் வந்து வெட்டுவினம், கண்டும் காணாமல் இருந்து விடுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவச்சகோதரகளே,

ஒரு கணம் இப்படி ஒரு நிலை முஸ்லீம் மாணவர்க்கு வந்தால் அதை அவர்கள் எப்படிகையாள்வார்கள் என்று நிதானமாய் யோசித்து முடிவெடுங்கள். முடிந்தால் மற்றைய மாணவர்களுடன் கலந்துபேசி ஒரு சுமூக முடிவை எட்டப் பாருங்கள்.

அவர்களின் அறிவுரைப்படி நீங்களும் மதச்சடங்கு செய்து குல்லாவும்  அணிந்து செல்லுங்கள் . பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவச்சகோதரகளே,

ஒரு கணம் இப்படி ஒரு நிலை முஸ்லீம் மாணவர்க்கு வந்தால் அதை அவர்கள் எப்படிகையாள்வார்கள் என்று நிதானமாய் யோசித்து முடிவெடுங்கள். முடிந்தால் மற்றைய மாணவர்களுடன் கலந்துபேசி ஒரு சுமூக முடிவை எட்டப் பாருங்கள். முடியாவிட்டால் UGCயிடம் முறையிட்டு மட்டு அல்லது யாழுக்கு மாற்றலாகுங்கள்.

வெளியில் போகும் போது கவனமாய் இருங்கள்.

அதே போல் தம்பிள்ளைகளை டாப் யூனி க்கு அனுப்பி விட்டு புலத்தில் இருந்து உங்களை பலர் உசுப்பேத்தக் கூடும், அவர்களையிட்டும் அவதானமாயிருங்கள்.

இது உங்கள் வாழ்க்கை உங்கள் படிப்பு.

2003 மட்டு பல்கலையில் இருந்து இதே போல் வடக்குத் தமிழரை சக தமிழரே விரட்டியுள்ளோம். ஆக காட்டுமிராண்டித்தனம் அவர்களுக்கு மட்டும் உரியதல்ல.

எழுதப்பட்டிருக்கம் தமிழைப்பார்த்தால்

இதில் இசுலாமியத்தமிழரது பங்குள்ளது போலுள்ளதே....?

எழுதப்பட்டிருக்கம் தமிழைப்பார்த்தால்

இதில் இசுலாமியத்தமிழரது பங்குள்ளது போலுள்ளதே....?

எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. பொது பல சேனாவின் வேலையாக இருக்க சந்தர்ப்பம் மிகக் குறைவு. பொது பல சேனாவையும் தமிழரையும் கொளுவி விட்டு.... தாம்  தப்பித்துக் கொள்ளும் தந்திரமாகக் கூட இருக்கலாம்.  
 
சிங்கள இனவாதம் இந்தச் செயலைச் செய்தால் முதலில் சிங்கள நோட்டீஸில் இருந்து தான் தொடங்கும்.
 
சிங்கள் முஸ்லீம் பிரச்சனையில் தமிழர் விலகி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே எழுதினோம்.  :icon_idea:

நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.