Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

Featured Replies

சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

attack-1.jpg

நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் "புலிப்பார்வை" திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார்.

attack-2.JPG

அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான போது மாணவர்கள் அரங்கத்திலிருந்தவாறே புலிப்பார்வைக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு, திரைப்படம் குறித்த சந்தேகக் கேள்விகளை எழுப்பி தங்களது ஜனநாயகவழியில எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

attack-3.JPG

அப்போது அரசியல் கட்சியின் பிரமுகர்களின் அடியாட்கள் மாணவர்கள் மீது கம்பிகள், பொல்லுகள் கொண்டு கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஒரு திரையரங்கிற்குள் எவ்வாறு இப்பொருட்கள் உள்ளே எடுத்து வரப்பட்டன என்ற சந்தேகத்துடன், தாக்குதல் நடத்துவற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே கட்சிகளினால் தயார் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

attack-4.JPG

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை மீட்டுக்கொண்டு அடியாட்களைக் கைது செய்யாது காயங்களுக்க உள்ளான மாணவர்களைக் கைது செய்து சிறையில் தடுத்து வைத்திருப்பது நீதிக்குப் புறம்பான செயற்பாடு என பலரும் விமர்சிக்கின்றனர்.

attack-5.JPG
நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

attack-6.JPG
attack-8.JPG
attack_0.png
புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட தயாராயிருக்கும் மாணவர் படை!

.http://www.pathivu.com/news/33188/57//d,article_full.aspx

Edited by chinnavan

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா... மாணவர்கள் முற்றுகை.. சீமானைக் கைது செய்ய கோரிக்கை!
 
 
சென்னை: புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவில் திடீரென புகுந்து போராட்டம் நடத்தினர் முற்போக்கு மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள். மாணவர் அமைப்பின் தலைவர் மாறன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது, சீமானைக் கைது செய்யக் கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
 
புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா... மாணவர்கள் முற்றுகை.. சீமானைக் கைது செய்ய கோரிக்கை! சிங்கள வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனை, சிறார் போராளியாகச் சித்தரித்துள்ளதாக புலிப்பார்வை படத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலச்சந்திரன் படுகொலை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்தெல்லாம் சர்வதேச விசாரணை நடக்கும் வேளையில், அதை திசை திருப்பும் ராஜபக்சேவின் முயற்சியே புலிப்பார்வை போன்ற படங்கள் என்று கூறி தமிழ் உணர்வாளர்கள், மாணவர் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
 
ஆனால் புலிப்பார்வை படத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்து கொண்டார். சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அதற்கு முன்பே மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரையரங்குக்குள் வந்துவிட்டனர். விழா நடந்து கொண்டிருந்தபோது, திரையரங்குக்குள் இருந்த மாணவர்கள் - இளைஞர்கள் சுமார் 50 பேர், திடீரென எழுந்து, மேடையில் இருந்த பாரிவேந்தரையும், சீமானையும் பார்த்து, "எங்களுக்கு சில கேள்விகள் இருக்கின்றன. முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்" என்று உரக்க குரல் கொடுத்தனர். ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினர்.
 
எனவே 'துரோகி சீமானைக் கைது செய்யுங்கள்.. அவரிடம் நாங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்', என்று தொடர் முழக்கமிட, அங்கிருந்த நாம் தமிழர், ஐஜேகே, பாஜக கட்சியினர் மாணவர்களைத் தாக்கினர். பாதுகாப்புக்காக இருந்த போலீசார் தலையிட்டு, மாணவர்களைக் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/students-protest-at-pulipaarvai-audio-launch-208699.html
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சீமான்...தொடரட்டும் உங்கள் பணி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனைக்கு மாணவர்களிடமும் புலிப்பார்வை குழுவினரிடமும் உள்ள விரிசல் தான் காரணம் எனலாம்.

 

சீமானின் நிலைப்பாடு இதில் தெளிவானது. புலிப்பார்வை படமும் அண்மையில் வெளியாகிய பல ஈழத்தமிழர் விரோத திரைப்படங்கள் போல வெளியாகாமல்.. அதனை நெறிப்படுத்தி வெளியிடச் செய்வதே சீமானின் நோக்கமாக உள்ளது. இதற்காக அவரைப் பாராட்டலாம். எல்லாரும் வெளியில்.. இருந்து.. போராடிக் கொண்டிருந்தால்.. படத்தை வெளியிடுபவர்கள் வேறு மார்க்கங்களை அணுகி முற்றிலும் எமக்கு பாதகமான படமாக இதனை வெளியிட முடியும். அந்த வகையில்.. சீமானின்.. இந்த அணுகுமுறையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. முற்றிலும் எமக்கு பாதகமாக வெளியிடப்படுவதை தடுப்பதே சீமானின் நோக்கமாக இருக்க முடியும்.

 

முன்னரும்.. ஹிந்தியர்களாலும்.. மலையாளிகளாலும் உருவாக்கப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பை காட்டிய போதும் அவை தமிழகம் தவிர வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. எமக்கு விரோதமான எமது நியாயங்களை பலவீனப்படுத்துவனவாக அவை அமைந்திருந்தன. இந்த நிலையை புலிப்பார்வையிலும் உருவாக்க சீமான் விரும்பி இருக்காமல் இருக்கலாம்.

 

மாணவர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால்.. அவர்கள் இதனை சீமானுக்கு எதிராக அன்றி.. புலிப்பார்வைக்கு எதிராக மட்டும் வைத்திருப்பதோடு.. இந்தப் போராட்ட சூழலை மையப்படுத்தி.. காரணம்காட்டி.. புலிப்பார்வை படக்குழுவினர் மீது சீமான் போன்ற தலைவர்களின் உதவியுடன் ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க பாவித்திருக்கலாம். அடிதடி.. என்று போய் இருக்கத் தேவையில்லை.

 

தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க காத்திருக்கும் சக்திகளுக்கே இதனால் இலாபமாகும். அத்தோடு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் இப்படியான உணர்ச்சிச் செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகின்றன.

 

சீமான் போன்ற தலைவர்கள் படக்குழுவினர் மற்றும் மாணவர்களுக்கிடையே தொடர்பாளர்களாக இருப்பதை விட்டு.. பிரச்சனைகள் பெரிதாக அனுமதிப்பது நல்லதல்ல. அது நாம் தமிழர் கட்சி கொண்ட கொள்கைக்கு உதவுமாப் போலும் இல்லை..!

 

ஆகவே எதிர்காலத்தில்.. இவ்வாறான உணர்ச்சிமிகு வேளைகளில் தலைவர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்ட இதர தரப்புக்களும் பொறுமையோடும்.. தொலைநோக்கோடும்.. ஒற்றுமையோடும் செயற்பட முன்னுரிமை அளிக்க வேண்டும்.. என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அதுவே பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இருக்க முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயலாகும் .இத்தாக்குதலை சீமானின் நாம் தமிழர் கட்சியும்,பாரிவேந்தர் கட்சியும் செய்ததாக செய்திகள் வருகின்றன.சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும்.அத்துடன் அனைவரும் கலந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முன்வரவேண்டும்.இந்த முரண்பாடுகளை உடனடியாக களைந்து தமிழர்கள் ஒன்று பட வேண்டும். மாணவ சக்தி மாபெரும் சக்தி. அதனைப் பகைப்பது வளர்ந்துவரும் கட்சிக்கு நல்லதல்ல.மேலும் இந்தக் காணொளியை த இந்து வெளியிட்டு இருப்பது வெளிச்சக்திகளின் சதிவேலையோ என்ற ஐயத்தையும் எழுப்புகின்றது.

  • தொடங்கியவர்

தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் திரையரங்கில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறார் - Audio
 

http://www.pathivu.com/news/33192/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

பொது விழாவில் வன்முறையைப் பாவித்த குண்டர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. சீமானுக்கு அட்டமத்தில் சனி நிக்குது போலை இருக்கு.. :lol:

இராசபக்ச எதை எதுபார்த்து தமிழ் நாட்டில் தன் கையாட்களினூடக சினிமாவில் ஊடுறுவியுள்ளாரோ அது நன்றாக நடக்கிறது.. தயவு செய்து உங்கள் அறிவுக்கு இரட்டிப்பாக வேலை கொடுங்கள்..அல்லது எல்லாம் சிதைந்து போகும். இது நல்ல அறிகுறி அல்ல.. ரோவும்,பார்ப்பனியமும்,ஆரியமும், சிங்களமும் வெவ்வேறு வழிகளில் தமிழர்மத்தியில் ஒற்றுமையாக ஊடுறுவியுள்ளனர்.. சில, பல தமிழர்கள் தங்களை அறிந்தும் அறியாமல் துணைபோகின்றார்கள். விரைவில் நெடுமாறன் ஐயா, கோபாலசாமி அவர்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மாணவர்கள் சார்பிலும் தவறுகள் உள்ளன. மேலும் மாணவர்கள் தாக்கியவர்களை எப்படி நாம் தமிழர் அமைப்பினர் என்று அடையாளம் கண்டார்கள் என்று புரியவில்லை.

 

மாணவர்கள்.. மேடையில் இருந்த சீமானை நோக்கி கூச்சலிட முன்னர் தமது விருப்பத்தை அவரிடம் எழுத்து மூலம் கையளித்திருக்கலாம். குழப்பம் விளைவிக்காது.. இந்த விடயத்தை மாணவர்களுக்குரிய அறிவுடன் கையாண்டிருந்தால்.. இந்தச் சம்பவங்களை தவிர்த்து தேவையான மாற்றங்களை நோக்கி படக்குழுவினரை கொண்டு வந்திருக்க முடியும்.

 

வெறுமனவே தூண்டிவிட்ட ஒரு நிகழ்வு போல ஆகி இருப்பது மாணவர்களின் போராட்ட சக்தி வீணடிக்கப்படும் வகையில் அமைந்தது உண்மையில் வருந்தத்தக்க ஒன்று.

 

இதில்.. சம்பந்தட்ட எல்லா தரப்புகளிலும் தவறுகள் உள்ளன. வெறுமனவே சீமானை.. நாம் தமிழரை மட்டும் போட்டுத் தாக்குவது தான்.. இவர்களின் நோக்கம் என்ன என்பதை தவறாகப் புரிய வைக்கிறது..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட சீமான் மகிந்த குடும்பத்திற்று "அடியை" கழுவிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல். சீமான் போன்ற தமிழின உணர்வாளர்கள், சர்ச்சைக்குரிய இந்நிகழ்சியை தவிர்த்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அவதானத்தின்படி, தவறாக சித்தரிக்கும் படங்கள் வெ ளிவராமல் இருக்க இரண்டு வகைகளில் செயற்படலாம்.

1) ஆரம்பத்திலேயே போராட்டங்களை செய்வது (மாணவர்கள்)

2) அரைகுறை புரிதலுடன் படம் எடுப்பவர்களை உள்ளிருந்தே திருத்தி எடுப்பது (நாம் தமிழர்)

ஆனால் இந்த இரண்டு தரப்பும் புரிதலுடன் செயற்படவேண்டியது அவசியம். இதற்குள் மகிந்தர் விரலை விட்டு ஆட்டுகிறார் என்பது அதிகப்படியான கற்பனை. :huh:

  • தொடங்கியவர்

''இது புலிப்பார்வை அல்ல இது நரிப்பார்வை'' தாக்குதலுக்கு உள்ளான மாணவன் செம்பியன்! -Audio

 

http://www.pathivu.com/news/33195/57//d,article_full.aspx

இப்படியான படங்களை தயாரிப்பவர்கள் உள் நோக்கத்துடன் தூண்டுதலில் தயாரிக்கிறார்கள், உண்மையில் எதிர்க்கவேண்டியவர்கள் முன் நின்று ஆதரிப்பது அவர்களை திருத்துவதற்கு உதவி செய்யாது. தமிழர்களிடையே மேலும் பிளவுகளை உண்டாக்கும். மாணவர்கள் உண்மையில் தங்களுக்கு தவறு என்பதை எதிர்க்கவே செய்வார்கள்.. அவர்களுடன் சுமுகமாக பேசி தீர்க்காமல் கேள்விகளுக்கு வன்முறையினால் தீர்ப்பு ஆரோக்கியமானதாக படவில்லை எங்கோ தப்பு நடக்கிறது. எதற்காக பாலச்சந்திரன் போராளியாக உடையில் காட்டவேண்டும்? இதனை சீமான் எதிர்க்காமல் இப்படத்தை ஆதரிக்க வேண்டும்? அல்லது ஒதுங்கி இருக்கலாம். இதில் ஏன் தனது கட்சி உறுப்பினர்களை மாணவர்களைத்தாக்க அமைதியாக இருக்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் குடைகின்றன? இப்படியே போனால் என்ன முடிவாகும். சிங்களத்திற்குதான் வெற்றி..ராசபக்சவின் எண்ணம் நிறைவேறும்.. இதனை ஆரம்பித்திலேயே தடுக்க வேணும்.

படம் எடுத்தவர் சிங்கள அரசுக்கு ஆதரவாக எடுக்காமல் விட்டாலும், இதை எமக்கு எதிரான சக்திகள் இதை நன்கு பயன்படுத்துகின்றன, குறிப்பாக இந்திய அரசியல் நிலை சிங்கள அரசுக்கு சாதகமாக இல்லை (சுப்பிரமணிய சுவாமியை தவிர)எனவே இப்படியான சில நடவடிக்கைகள் மூலம் பலவீனப்படுத்துவதே, இதை தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் செய்கிறார்கள்

இலங்கை முடிய இந்தியாவிலும் தமிழர்களை தங்களுக்குள் அடிபடவைக்கும் சிங்களவனின் திறமையை பாராட்டியே ஆகவேண்டும் .

மீண்டும் மீண்டும் நாங்கள் வெறும் உணர்ச்சி வசப்படும் மொக்கர் கூட்டம் என்று நிருபிக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு இது ஒரு கரும்புள்ளி ...

புலிப்பார்வை விழாவில் மாணவர்களை இரும்புகளால் தாக்கினர் நாம் தமிழர், பாஜக, ஐஜேகே கட்சியினர்

 

சீமானுக்கும் நாம்தமிழருக்கும் கூஜாதூக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அமைப்புகளுக்கும் சமர்பணம்

 

students-attack1_CI.jpg

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கியுள்ளதாக நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம் தமிழக ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.


இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே, ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.


பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான். விழா நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோஸம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோஸம் எழுப்பினர்.


உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி அடியாட்கள் பாய்ந்து வந்து, கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாதுகாப்புக்காக சென்றிருந்த பொலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்காமலேயே ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110625/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை விட சில புலம்பெயர் ஊடகங்களும்.. சில இந்திய ஊடகங்களும் தான் மகிந்தவின் ரோவின் விசிறிகள் போலத் தெரிகிறது.

 

இன்று புலிப்பார்வை.. பட ஒலிப் பேழை வெளியீட்டில் சீமான் ஆற்றிய உரை.

 

தமிழக மாணவர்களை சில ஊடகங்கள் தவறாக வழி நடத்துகின்றனவோ என்று தோன்றுகிறது..??!

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

10536823_1506009182969203_35099629563212

  • தொடங்கியவர்

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாளை பொள்ளாச்சியில்
 "உருவபொம்மை எரிப்பு  போராட்டம்" நடை பெறுகிறது!

இடம் : ஆக-17 ஞாயிறு
காலை10மணிக்கு.
காந்தி சிலை.

மாணவர்களை தாக்கிய 'சிங்கள கைக்கூலி 'எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்துவை கைது செய்.

இவண்.
தமிழ்நாடு மாணவர்
மன்றம்.

8344053307,
9486528682,
9095015269,
8110063702

http://www.pathivu.com/news/33211/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சீமான சரியாகத்தான் சிந்திக்கிறார்.. ஆனால் அட்டமத்து சனிதான் விடாது போல இருக்கு.. :lol:

  • தொடங்கியவர்

தடுத்து வைக்கப்பட்ட தமிழக மாணவர்கள் அனைவரும் விடுதலை! 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தனிப்பட்ட முறையில் சீமான் தலைவரோ எதிரியோ இல்லை.என் கேள்வி என்ன என்றால் சீமானுக்கு கொடுக்கும் முகியத்தில் 1 பங்கையாவது சம காலத்தில் மக்களோடு மக்களாக நின்று சேவை ஆற்றும் கிட்டதட்ட போராடும்(தனது வரம்புக்குள்)அமைச்சர் அய்கரநேசனுக்கு குடுக்காத உணர்வு விழலுக்கு இறைத்த நீர்ரே.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தனிப்பட்ட முறையில் சீமான் தலைவரோ எதிரியோ இல்லை.என் கேள்வி என்ன என்றால் சீமானுக்கு கொடுக்கும் முகியத்தில் 1 பங்கையாவது சம காலத்தில் மக்களோடு மக்களாக நின்று சேவை ஆற்றும் கிட்டதட்ட போராடும்(தனது வரம்புக்குள்)அமைச்சர் அய்கரநேசனுக்கு குடுக்காத உணர்வு விழலுக்கு இறைத்த நீர்ரே.

 

நீங்க எதுக்கு இப்ப அந்தாளை இதுக்க இழுக்கிறீங்க. அதை அங்குள்ள மக்களே வாக்குகளை போட்டு செய்திருக்காங்கல்ல. அதை அவங்க பார்த்துக்குவாங்க.

 

இது.. வேற. அது வேற. ஆட்டுக்க மாட்டை கலக்கப்படாது. :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.