Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2880ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி சுனாமி வரும், உலகம் அழியும்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17-1408264220-tsunami-6000.jpg

2880ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி சுனாமி வரும் உலகம் அழியும்....

இப்படிச் சொல்வது விஞ்ஞானிகள்!

நியூயார்க்: 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள்.

அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா... எல்லாரும் உள்ள போகப் போறோம்' ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. கடந்தாண்டு கூட மாயன் காலெண்டரைக் காட்டி பயமுறுத்தினார்கள்.

இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ராட்சத விண்கல்...

அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம்.

1950 டிஏ...

அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ' என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2880ம் ஆண்டு...

மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாகவும், 2880-ம் ஆண்டில் இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பேரழிவு...

அப்படி இந்த விண்கல் மோதினால், பூமி அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து, தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படுமாம். அதன் மூலம் மனித குலம் முற்றிலுமாக அழியும் என அவர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

முரண்பட்ட தகவல்கள்...

அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ, இந்த விண்கல் பூமியில் மோதுவதில் 300 -ல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது என்கின்றனர்.

எது எப்படியோ, அப்போ நாம நிச்சயமா உயிரோட இருக்க மாட்டோம்ங்கறது மட்டும் நிசர்சனமான உண்மை !

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

17-1408264220-tsunami-6000.jpg

2880ம் எது எப்படியோ, அப்போ நாம நிச்சயமா உயிரோட இருக்க மாட்டோம்ங்கறது மட்டும் நிசர்சனமான உண்மை !

நன்றி தற்ஸ்தமிழ்.

இன்று ஒரு மாதிரி கிளுகிளுப்பு செய்தியெல்லாம் போட்டு விட்டு ...கடைசியில் குண்டை தூக்கி போடுறீயள்......அதுசரி 2880 உலகம் இருந்தால் என்ன அழிஞ்சால் என்ன எங்களுக்கு என்ன ....

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவ்வளவு காலம் ? அதற்க்கு முதலே அழியலாம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு மாதிரி கிளுகிளுப்பு செய்தியெல்லாம் போட்டு விட்டு ...கடைசியில் குண்டை தூக்கி போடுறீயள்......அதுசரி 2880 உலகம் இருந்தால் என்ன அழிஞ்சால் என்ன எங்களுக்கு என்ன ....

அதுதானே?
2080 மட்டும்  தாக்கு பிடித்தாலே போதும். மீதம் 800 வருடம் இருக்கிறது. அப்போது தரையில் இருக்க போர்ர் அடிக்குது என்று மனிதன் போய் கடலிலேயே கிராமங்கள் கட்டி வாழ தொடங்கி இருக்கலாம். அல்லது வானிலேயே வசிக்க தொடங்கி இருக்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவ்வளவு காலம் ? அதற்க்கு முதலே அழியலாம்  :D

no,no, no பேரன் ,பூட்டன் எல்லாம் பார்க்கவேணும்:D

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் பயப்பட வேண்டாம் , இப்பவே ஜிம்முக்கு போய் தம் பிடித்து உடம்பு தேத்தி எந்த விண்கல்லையும் எத்தி எறிந்து  பூமிக்கும் , யாழுக்கும் சேதமில்லாமல் பண்ணி விடுகின்றேன்...!

MASQUE-DIAPO-Oman.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=22rBeZVEGrg

நாங்கள் எப்பவோ சொல்லீட்டம்  :D  

அதுக்கு முன்னம் சனம் தானாக செத்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு முன்னம் சனம் தானாக செத்திடும்.

எனக்குத்தெரியும்

இதற்குள் சூறாவளி  வருவாரென்று......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் என்பது எப்போழுதுமே அழியாது. அழியப்போவதுமில்லை.

மனித இனம் வேணடுமென்றால் அழிநதுபோகலாம்.

இயற்கை தன்னை புதுப்பித்துக்கொண்டு மீண்டெழும். மனித இனத்தால் அது முடியாது. டைனோசர்களின் அழிவில் பிறந்தது மனித இனம். அப்பொழுதும் இயற்கை தன்னை புதுப்பித்துக்கொண்டது. 

மனித அழிவிற்கு பின்னரும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். பேராசையினாலே அழிந்துபோகும் இனம் மனித இனிம்.

மிருகங்களிற்கு பசித்தால் மட்டுமே இரை தேவைப்படுகின்றன. ஆனால் மனிதர்களிற்கு தேவையேற்படாவிட்டாலும் "சேர்த்து"வைக்கும் பேராசை. இருப்பவற்றை வைத்து வாழ தெரியாத இனம். இதுவே அழிவிற்கு வழி வகுக்கும்.

நன்றி  தாத்தா....

இருப்பது காடுகளிலோ

மலைகளிலோ...... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தாத்தா....

இருப்பது காடுகளிலோ

மலைகளிலோ...... :lol:  :D

இயற்கையுடன் முடிந்தளவு ஜக்கியமாகவி விட்டோம். தற்பொழுது காட்டின் வாசலில் இருக்கின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையுடன் முடிந்தளவு ஜக்கியமாகவி விட்டோம். தற்பொழுது காட்டின் வாசலில் இருக்கின்றேன். :D

(காடு வாவா என்கிற வயசுதானே??)

சரி  தாத்தா

உங்கள் வயசை உறுதிப்படுத்தியமைக்கு நன்றிகள்.. :lol:  :D

(அப்போ சுவிசில் நான் சந்தித்தது  உங்கள் பேரனையோ :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

(காடு வாவா என்கிற வயசுதானே??)

சரி  தாத்தா

உங்கள் வயசை உறுதிப்படுத்தியமைக்கு நன்றிகள்.. :lol:  :D

(அப்போ சுவிசில் நான் சந்தித்தது  உங்கள் பேரனையோ :lol: )

ஒரு பாலகனை பாத்து இப்படியெல்லாம் கேட்டா உலகம் அழியும் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலகனை பாத்து இப்படியெல்லாம் கேட்டா உலகம் அழியும் தானே :D

பாலகனா?

இது ஓவர்.... :D

உலகம் என்பது எப்போழுதுமே அழியாது. அழியப்போவதுமில்லை.

மனித இனம் வேணடுமென்றால் அழிநதுபோகலாம்.

உலகம் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள் ஊர்காவலன்? பூமியையா அல்லது பூமியும் அடங்கிய பிரபஞ்சத்தினையா?

பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்து செல்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக சொல்வதனால் பிரபஞ்சம் அழியாது. ஆனால் பூமி கண்டிப்பாக அழியும். சூரியனின் Big ban இன் மூலமோ அல்லது விண்வெளியில் உள்ள ஏதேனும் விண்கற்கள் மூலமோ இது நிகழும்.

உலகம் என்று பூமியை தான் சொல்கின்றேன். எனக்கு தெரிந்த வகையில் நீங்கள் சொல்லும் Big Ban மூலம் உலகம் மீண்டும் தனது ஆரம்பப்புள்ளிக்கு சென்று தன்னை மீண்டும் புதிப்பித்துக்கொள்ளும். சிறு தூசிகளாக மீண்டும் ஒன்றினைந்து (எத்தனையோ மில்லியன் ஆண்டுகள் ஆகலாம்) தன்னை தற்போதுள்ள வடிவத்திற்கு கொண்டுவரும் என்றே நம்புகின்றேன். 

பிரபஞ்சம் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 

அப்பொழுது

நாம் (மனிதர்கள்) இருப்போமா  என்பதே கேள்வி??

  • கருத்துக்கள உறவுகள்

உலகைப் படைத்தது யார்? என்பதே இன்றை பெருங்கேள்வியாக உள்ளது. உலகம் படைக்கப்பட்டதல்ல. அது எப்போதும் இருந்து வருகிறது. இயற்கை என்பது எப்போழுதுமே இருப்பது அதற்கு முன் இல்லை பின் இல்லை. நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம்.

இதை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் எம் முன்னோர் (பரிபாடலில்) பின்வருமாறு விளக்கியுள்ளனர்.

தொன்று தொட்டு நிகழும் இயற்கை நிகழ்வு என்னவெனில் புதிய உலகம் படைக்கப்படுவதும் பின்னர் அந்த உலகம் மிச்ச மீதியில்லாமல் அழிக்கப்படுவதுமே ஆகும் இங்கே எஞ்சி நிற்பது வெளியே. அந்த வெளியில் மீண்டும் ஒரு கரு தோன்றும். 

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படுவது பெருவெடிப்பு (Big Bang Theory) ஆனால் இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே எம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர் (பரிபாடல், இது பற்றி முழுமையாக இங்கே எழுதுவதை தவிர்க்கின்றேன்).

ஒன்றுமற்ற வெளியில் ஒரு கரு தோன்றுகிறது என்று போகிற போக்கில் எவராலும் எழுதிவிட முடியாது. இதையே வெள்ளையர்களின் அறிவியலின்படி Space என்று அழைக்கப்படுகின்றது

அறிவியலின்படி இந்த பெருவெடிப்பு ஆயிரத்து முன்னூறு கோடி ஆண்டுகளிற்கு முன்பு நிகழ்ந்தது. edward hubble என்பவர் 1920 ஆம் ஆண்டு "பிரபஞ்சம் நிலையானது அல்ல. அது எப்போதுமே விரிவடைந்து கொண்டே இருக்கிறது" என்றார். ஆனால் எந்த சோதனைகளும் எந்த தொழில்நுட்பங்களும் இல்லாமல் எமது முன்னோரான கீரந்தையார் எனும் புலவரால் இதே கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

அப்பொழுது

நாம் (மனிதர்கள்) இருப்போமா  என்பதே கேள்வி??

உயிரினங்கள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அது மனிதவடிவில் (எம்மை போல்) இருக்கும் என்று நான் நம்பவில்லை. பிரபஞ்சத்தில் அந்த சூழ்நிலையில் நிகழப்போகின்ற மாற்றங்களை பொறுத்தே உயிரினங்களின் வடிவம் அமையலாம். 

உண்மையில் இதுபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே போகலாம் பல சுவாரசியமான தகவல்கள் நம் முன்னோர்களே கண்டிறிந்துள்ளனர் ஆனால் அதை எல்லாம் நாம் நாகரீகம் எனற முறையில் நையாண்டி செய்துகொண்டே இருக்கின்றோம் இதனை எல்லாம் வௌளையர்கள் இப்பொழு தான் கண்டுபிடிக்க தொடங்கியுள்ளனர். 

Edited by ஊர்க்காவலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.