Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்துகிறது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
aksha-missile-150-news.jpg

சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும்.

ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்புக்கு 6 ஏவுகணைகளுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. என் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீண்ட தாமதமாக இருந்தாலும் இறுதியில் ஆகாஷ் ஏவுகணை நிறுவுவதில் வெற்றிகிடைத்து உள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் பாதுகாப்பு உற்பத்தி, பொதுத்துறை நிறுவனம் ஆகியவை நிறுவி உள்ளன.

வடகிழக்கில் ஆகாஷ் நிறுவப்பட்டதன் காரணமாக எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து 4057 கிலோமீட்டர் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக அர்த்த முள்ள மற்றும் நம்பகமான தடுப்பு அமைந்து உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=115427&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

எந்தப்பக்கம்?

சிங்களத்துப் பக்கம் எண்டால், சீனாக்காரன்ர ஏவுகணை துரத்தும்!

பாகிஸ்தான் பக்கமெண்டால் ....அங்கையும் சீனாக்காரன்ர ஏவுகணை....!

இமயமலைப் பக்கம் போனால், வாழைப்பழம் வாய்க்குள்ள வழுக்கி விழுகிற மாதிரி! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... இந்தியாவுக்கு, இப்பவாவது  தன்மானம் வந்ததே.....
மோடி வாழ்க. மோடி ஜிந்தாபாத்.

இந்தியாவுக்கு... வேறு அலுவல்கள் இல்லாததால்.....
இவ்வளவு நாளும், ஈழத் தமிழர் பிரச்சினையில்... குழப்பியடித்துக் கொண்டிருந்தவர்கள்.

இனி அதுக்கு... நேரம் இருக்காது. :)

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் டம்மி எண்டு நினைக்கப்போறான்.எதுக்கும் ஒருக்கா சுட்டு காட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் டம்மி எண்டு நினைக்கப்போறான்.எதுக்கும் ஒருக்கா சுட்டு காட்டுங்கோ

இவர்கள் ஆறு ஏவுகணையை நிறுத்தி, விளையாட்டுக் காட்ட.....

சீனாக்காரன்.... 6000´தை போட்டிட்டு, கம்மென்று போடுவான். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவையள் ஆரோடை விளையாடினாலும் பாக்கிஸ்தானோடை விளையாடேலாது....ஏனெண்டால் பாக்கிஸ்தானிட்டை இருக்கிறது அவ்வளவும் ஒரிஜினல் சாமான்கள்.
 
எல்லாம் made in usa  :D
 
ஆஹா.... இந்தியாவுக்கு, இப்பவாவது  தன்மானம் வந்ததே.....

மோடி வாழ்க. மோடி ஜிந்தாபாத்.

இந்தியாவுக்கு... வேறு அலுவல்கள் இல்லாததால்.....

இவ்வளவு நாளும், ஈழத் தமிழர் பிரச்சினையில்... குழப்பியடித்துக் கொண்டிருந்தவர்கள்.

இனி அதுக்கு... நேரம் இருக்காது. :)

அங்கதான் நீங்க தப்பு பண்ணுரிங்க சிறி, அவிங்களை பத்தி உங்களுக்கு தெரியாது எங்ககட பிரச்னையை குழப்பவெண்டே ஒரு குழு அலையுது... அதுக்கு சுப்புதான் இப்போதைக்கு தலிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

இசை,உங்கள் comment ஐஅ பார்த்து சிரித்து சிரித்து வயிறு நோகிறது....

This is very best comment I ever see.... Weldone...

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

இப்படி எல்லாம் நக்கல் அடிக்கப்படாது. சுப்பிரமணியம் சுவாமி.. வாயாலேயே.. ஆறை.. 12 ஆக்கி.. 12.. 24 ஆக்கி.. அடிச்சுக்கிட்டு இருப்பார். என்ன நினைச்சீங்க.. ஹிந்தியாவைப் பற்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த பின்னுமா இந்தியா மீது சந்தேகம்?

https://www.youtube.com/watch?v=WJJxy8PV4FU

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தினது ஒரு ஆறு நாளுக்கு விழாமல் நின்றாலே போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த பின்னுமா இந்தியா மீது சந்தேகம்?

https://www.youtube.com/watch?v=WJJxy8PV4FU

இந்த youtube.. மட்டும் உண்மையென்றால், இந்தியா தன்னுடைய வல்லரசு கனவை கைவிடுவது மேல்.... ஆனால் இந்தியா மட்டும் மங்கலயான் விண்கலத்தை செவ்வாய் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விட்டால் அவர்களை பிடிக்கமுடியாது. இப்போதே அவர்களின் கர்வம் தலைக்கு மேலே விட்டது..தங்கள் செலவு அமெரிக்காவின் maven mission ஐ விட 10மடங்கு குறைவால்..அதுமட்டுமல்லாமல் if India insert the satellite into the mars orbit successfully, இந்தியா தான் முதல்தடவையிலே வெற்றிகரமாக mission ஐ பூர்த்தி செய்த நாடஆகும். Insertion in mid September 2014

இதில் உள்ளது இந்தியப் படைகள் அல்ல. ஒரிஜினல் காணொளியில் தாய்லாந்து இராணுவம் என்றே இருக்க கண்ட ஞாபகம். மீள் ஏற்றுகைகளின் போது.. பார்வையாளர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தலைப்பிடுகிறார்கள். அந்த வகையில்.. இந்திய இராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு.. இந்தக் காணொளித் தலைப்பும் காணொளியும் சாட்சி. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இசை,உங்கள் comment ஐஅ பார்த்து சிரித்து சிரித்து வயிறு நோகிறது....

This is very best comment I ever see.... Weldone...

நன்றி.. :D என்ன செய்யிறது.. இவங்களை நினைச்சால் அதுவா வருது.. :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.