Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை சகாறாவின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வாவின் எழுத்து சகாராக்காவின் கவிதைப் புத்தகத்தின் பக்கம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தது போல் மிகவும் சந்தோசமாக இருந்தது.இப்போ விஸ்வா எங்கு எல்லாம் எழுதி இருக்கிறார் என்று தேடித் தேடி படிக்க வைத்து விட்டார்..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி விஸ்வா. :)

  • Replies 152
  • Views 10.9k
  • Created
  • Last Reply

உங்கள் எல்லோருக்கும் தனித்தனியாக பதில் எழுத ஆசை தான். ஆனால் இந்த திரி சகாறா அக்காவிற்கானது இதில் வாழ்த்தப்பட வேண்டியவர் அக்கா தான். அவரது இலக்கிய பணி முன்னர் இவையெல்லாம் ஒன்றுமில்லை. இருப்பினும் எனது பதிவுகளை மனமகிழ்ந்து வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் தம்பியின் அன்புகளும், நன்றிகளும். எனது எழுத்து உங்களுக்கு பிடித்தபடியாக இருப்பது உற்சாகத்தை தருகிறது. இதற்கு முழுமுதற் காரணம் நீங்களன்றி யாருமில்லை. விருப்பு வாக்கிட்டும் வாழ்த்தியும் அன்பு செய்த அனைவருக்கும் என் நன்றிகள்...

காலம் கடந்து நிலைத்து நிற்கும் காவியங்களை தொடர்ந்தும் அக்கா நீங்கள் எழுத வேண்டும் என்பதே அவா...

Edited by ராஜன் விஷ்வா

நன்றி விஷ்வா! நாமே போய் வந்த மாதிர் இருக்குது.

முடியல! மரச்சுவரில் தலையை முட்டினால் சுவர் தான் உடையும்! அடக்கிக் கொண்டேன்! :D:lol:

வெற்றி வெற்றி வெற்றி

குருகுலத்திற்க்கு எதிராக சதி செய்தவர்கள் படிப்படியாக பின்னடைவை சந்தித்துக் கொண்டு வருகிறார்கள். நாம் இனி தான் கவனமாக இருக்க வேண்டும் குருநாதா. ஒன்றாய் இருப்பவர்களை பிரிக்க உந்த அமெரிக்கா என்ன வேலையெண்டாலும் செய்யும் :D

Edited by ராஜன் விஷ்வா

அழகான மொழி நடை விஷ்வா. வார்த்தைகள் கட்டியிழுக்கின்றன.

நிகழ்வை நேரில் காண்பதுபோல இருக்கிறது வர்ணனை. ஒரு படைப்புக்கு உரிய எழுத்து நடை. சிறுகதை எழுத முயற்சி செய்யடா. நிச்சயம் வெற்றி பெறுவாய்.

நன்றி நெற்கொழு அண்ணா. முயற்சி செய்கிறேன் உரிய பருவத்தில் :)

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்
கவிதாயினி வல்வை சகாறா அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வுபற்றிய ராசன் விசுவா தம்பியின் வர்ணனை யாழில் செகசோதியாகப் பிரகாசிக்கிறது. அதன் ஒளி கண்களையும் கூசவைக்கிறது.  :wub:
 

மிக நன்றாக இருக்கின்றது எழுதுவும் விதம் ,தொடருங்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி அக்கா.விழாவுக்கு வந்தவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்பி இருக்கலாம்.குறைந்த பட்சம் உங்களைப் பார்க்க கோயம்புத்தூரில் இருந்து வந்தவருக்காவது உணவு கொடுத்தாவது அனுப்பியிருக்கலாம்:D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

மிகுதி சிறப்புரைகள் தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மிகுதி தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டு விழாவிற்க்கு வாழ்த்துக்கள்.மற்றும் விஸவாவின் பங்கு பற்றலும் அவரது எழுத்தும் அபாரம்

சிறப்பாக நடைபெற்ற ,நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்க்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

விஷ்வாவின் எழுத்து நடையும் எழுதிய விதமும் அருமை. சகாறா அக்கா பட்டினி போட்டு அனுப்பியிருப்பினும் அதை பொருட்படுத்தாது இவ்வளவு சுவாரசியமாக எழுதி விஷ்வா உண்ணாத வீட்டுக்கு கூட இரண்டகம் பண்ண மாட்டார் என்று நிரூபித்து விட்டார் :)

  • கருத்துக்கள உறவுகள்

:D :D விஷ்வாவுடன் கூடப் போனவரை நினைச்சன் ...! :) :)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

10682233_10152472526896551_6972276702287

 

 

10648417_10152472526486551_9196065829707

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 6-9-2014 சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற என்னுடைய நூல் வெளியீடுபற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் இந்தத்திரியில் எனக்கு வாழ்த்துகளை தெரிவித்து கலகலப்பாக்கி உலவிய அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி உரைக்கின்றேன். உங்கள் அன்புக்கு என்றும் கடமைப்பட்டவளாக என்னை நிறுத்தி வைத்திருக்கும் உறவுகளே உங்கள் அனைவருக்கும் தனித்தனியே பதில் வரைய முடியாத குறுகிய மணித்துளிகளுக்குள் தற்சமயம் உலவிக் கொண்டிருக்கிறேன். எல்லோருடைய பதிவுகளும் என்னை உற்சாகமூட்டியதோடு மட்டும் நின்று விடாமல் எதிர்காலத்தில் தத்தம் நூல்களை வெளியிட முயலும் அனைவருக்கும் பேருவகையை உருவாக்கும் விதமாக அமைந்திருக்கின்றன. அதற்காகவும் எல்லோருக்கும் நன்றியுடன் எனது உவகையையும் பரிமாறிக் கொள்கிறேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

10682233_10152472526896551_6972276702287

 

 

10648417_10152472526486551_9196065829707

 

நன்றி பகிர்வுக்கு சகாரா. கனடாவில் உங்கள் விழா நடைபெறும் போது எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியை காண விரும்புகின்றேன். வந்தவர்களில் பலரின் முகத்தில் மகிழ்ச்சியை காணவில்லை. பிடித்து வைத்த பொம்மைகள் மாதிரியில்லாமல். பின்னுக்கு நிற்க்கும் அம்மா யார்? வாய்பொத்தி அழுகின்ற மாதிரியிருக்கு. ஒருவரிலும் மகிழ்ச்சியை காணவில்லை. விஷ்வா உங்கள் எழுத்துநடை அருமை, கண் மூடி தியானம் செய்ய இதுவா இடம்? :D

  • தொடங்கியவர்

நன்றி பகிர்வுக்கு சகாரா. கனடாவில் உங்கள் விழா நடைபெறும் போது எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியை காண விரும்புகின்றேன். வந்தவர்களில் பலரின் முகத்தில் மகிழ்ச்சியை காணவில்லை. பிடித்து வைத்த பொம்மைகள் மாதிரியில்லாமல். பின்னுக்கு நிற்க்கும் அம்மா யார்? வாய்பொத்தி அழுகின்ற மாதிரியிருக்கு. ஒருவரிலும் மகிழ்ச்சியை காணவில்லை. விஷ்வா உங்கள் எழுத்துநடை அருமை, கண் மூடி தியானம் செய்ய இதுவா இடம்? :D

 

உடையார்,  இது அநேகமாக அகவணக்கம் அல்லது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப்படங்களாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,  இது அநேகமாக அகவணக்கம் அல்லது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப்படங்களாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

 

நன்றி நிழலி, நான் அதை நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வா பொடியன் அழகாக நிகழ்வினை எழுதியிருக்கிறான். பாராட்டுக்கள் பொடியா. 

வாழ்த்துக்கள் சகாறா. விழா பற்றிய விஷ்வாவின் விவரிப்பும் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

"புலவர்" புகழ்ச்செல்வி பரணிப்பாவலன் எழுதிய நூல் வெளியீட்டுவிமர்சனம்

 

10641067_10152480259996551_2173615959317
Wednesday 17th of September 2014 11:26:45 AM

உயிர் எழுத்து

நாளும் பல நூல் பூக்கிறது பல நூல்கள் நூலாம்படையை மாறி பயன் இல்லா கிடக்கிறது சில நூல் மட்டும் வருங்காலம் நோக்கி பயணிக்கிறது,உயிர் மெய் ஆய்தம் என மூவகை எழுத்தால் நாம் கூட்டும் படை யானது பிறரை தட்டி எழுப்ப வேண்டும் அப்படி எழுப்பும் சொல்படை தான் மொழியை மண்ணை மீட்கவும் மாந்தனை மாந்தனாய் மாற்றவும் முடியும்.247 சொல்லால் கட்டும் சொற்றொடர் பல செய்தியை தாங்கி வரும் சொல்லாடல் தான் உலகினையே புரட்டி போடும்.புறநானுறு அகநானுறு பத்துப் பாட்டு எட்டுத் தொகை எல்லாம் இன்றும் நம்மிடம் வாழ்கிறது என்றால் தமிழின் சிறப்புதானே ,உலக மாந்தனை நல்வழி படுத்தும் திருக்குறள் மண்ணில் வாழ்கிறது என்றால் அந்த பாடல்களில் வரும் கருத்து சொல்வளம் தானே. ஆனால் இன்றைக்கு இதுபோல் நூல்கள் வருவதில்லை கரணியம் மொழி இனம் பற்றிய சிந்தனை பலருக்கு இல்லை. ஒரு போராட்டம் தொடங்க முதலில் தேவை எழுத்து எனும் படை தான் அந்த படை யால் கருத்தினை மக்களிடம் கொண்டு சென்று படைக்கு வீரனை திரட்ட முடியும் இது தான் பலவிடுதலை களத்தின் வரலாறு அவ்வகையில் அதே கருத்து செழுமையுடன் தமிழினத்திற்கு இருநூல் கிடைத்து உள்ளது.களத்தில் உள்ளவர்கள் எழுதும் இலக்கியம் புலத்தில் உள்ளவர்கள் படைக்கும் இலக்கியம் என இருவகையாய் பிரித்தாளும் இரண்டுமே விடுதலை தீயினை ஏந்தித்தான் வருகிறது. களத்தில் ஏற்பட்ட வலியுடன் கருத்தரிக்கும் எழுத்து வலிமை உடையதாய் இருக்கும் களத்திற்கு வெளியே உள்ளவர்களின் எழுத்தானது வலி இருக்கும் ஆனால் வலிமை இருக்காது என்பது பொதுவான கருத்து இதை முறியடிக்கும் நூலாகத்தான் அம்மா வல்வை சகாறா அவர்களின் நூலினை பார்க்கிறேன்.கடந்த 6.9,2014 இல் தமிழர் நாட்டில் உள்ள சென்னையில். அய்யா நெடுமாறன் தலைமை ஏற்க அண்ணன் கொளத்தூர் மணி உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் ஓவியர் புகழேந்தி அம்மா பத்மாவதி விவேகனந் தான் போன்றேர் கருத்துரை நல்க அண்ணா வல்வை குமரன் அவர்கள் தொகுப்புரை செய்திட இறுதியாய் பாவலர் வல்வை சகாறா ஏற்புரை ஏற்றார். வேங்கையன் பூங்கொடி என்ற பா புதினமும் காவியத் தூதுஎனும் உரைவீச்சும் தமிழர்க்கு தமிழ்க்கு வலிமை சேர்க்கும் தமிழ்படைக்கு பெருமை கூட்டும் ----புகழ்ச்செல்வி பரணிப்பாவலன்
 

 

மூலம் :- http://www.tamilsguide.com/details.php?nid=6&catid=123560

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,  இது அநேகமாக அகவணக்கம் அல்லது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப்படங்களாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்

 

நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,  இது அநேகமாக அகவணக்கம் அல்லது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப்படங்களாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

 

வல்வை சகாறா அவர்களின் எழுத்தும் நோக்கமும் தமிழர்கள் பற்றியும் அவர்களின் வாழ்வுபற்றிய அக்கறையும் கொண்டுள்ளதையே அவரின் பதிவுகள் அனேகமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அகவணக்கமும் மண்ணின் மைந்தர்களை நோக்கியதாகவே நிச்சயம் இருந்திருக்கும். இந்த நினைவு, நிகழ்வைப் புனிதமாக்கிக் காட்சிப்படுத்துகிறது. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.