Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியுடன் பேச விக்னேஸ்வரன் விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகத்தில், எப்படி மேற்ற்க்கு நாடுகளின் ஆட்டம் முடிந்து இந்திய சீனக் கம்பனிகளின் கை ஒங்கியிருக்கிறதோ அதே நிலை அரசியலிலும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. உலகின் மிகப்பெரும் தலை வலியாக மாறிவரும் ISIS தீவிரவாதிகளை அழிக்க சீனாவின் உதவி ஏற்கனவே கோரப்பட்டுவிட்டது. இந்த இரு வலிமையான சக்திகளையும் நாம் நண்பர்கள் ஆக்காது விட்டாலும் எதிரியாகவாவது ஆக்காமல் விட்டிருக்கலாம். குறிப்பாக இந்தியா. இந்தியாவையோ இந்தியர்களையோ சிங்களவர்களுக்குப் பிடிப்பதில்லை ஆனால் அவர்களையே வளைத்துப்போட்டு விடயங்களை சாதித்து விட்டார்கள்.  பொருளாதாரக் காரணங்களுக்காக அமேரிக்கா, பிரிட்டன் போன்ற எந்த மேற்குலக நாடும் இந்தியாவையோ சீனாவையோ பகைக்காது. குறிப்பாக சுயநல அமேரிக்கா எமக்காக எதுவுமே செய்யாது. ஐ.நா, பாதுக்கப்பு கவுன்சில் எல்லாம் ஏமாற்று வேலை. 

  • Replies 89
  • Views 3.7k
  • Created
  • Last Reply

நாந்தான் அந்த பிசாசு தமிழரை அழிக்குமாறு சிங்களவரை தூண்டிவிடுமோ என்று தான் தமிழர் நாம் பயப்படவேண்டும்.

துல்பேன் நீங்கள் சொல்லுவது சிறுபிள்ளைகளுக்கு "பூச்சாண்டி (பேய்/பிசாசு மாதிரி)" கதை சொல்லுவது போல....

இந்தியா ஏன் உங்களை அழிக்க தூண்ட வேண்டும்? நீங்கள் உங்கள் பாட்டை பார்த்தால்..அவர்கள் அவர்களின் அலுவலை பார்ப்பார்கள் (நீங்கள் நம்பும் மேற்கு நாடுகள் மாதிரி)...

எல்லாரும் தங்களின் நன்மைக்கே அலுவல்களை பார்க்கும் போது நீங்கள் ஏன் கடவுள் தருவார் என்று வானத்தை பார்ப்பான்???

எல்லாரும் ஒத்து கொள்ள வேண்டியது தலைவருக்கு இந்தியாவை கையாள தெரியாமால் எல்லாத்தையும் போட்டுடைத்தது... ஆனால் அதை விட்டு விட்டு....

உ+ம்: இந்தியாவை பாருங்கள்..ஆப்கானிச்தானாகட்டும்..பாகிஸ்தானாகட்டும்..பங்களாதேஷ், இலங்கை...இங்கேயெல்லாம் தமிழரை விட இந்தியாவை மூர்க்கமாக எதிர்த்தார்கள்..ஆனால் இப்போது எல்லா நாடுகளும் இந்தியாவோடு பணிந்தே போகிறார்கள்......கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவும் தன்னை நிலை வியாபாரரீதியாகவோ...அரசியல் ரீதியாகவோ நிலை நிறுத்துகிறது...ஆகவே எதையும் எடுத்தேன் கவுட்டேன் என்ற படியால் தான் எங்களுக்கு இந்நிலை....

இந்தியாவுக்கு ஈழத்தமிழரை கஷ்டப்படுத்துவதால் என்ன நன்மை? அதுவும் இந்தியாவோடு யாவரிலும் பார்க்க கூடிய உறவுகளை வைத்திருப்பவர்கள் தமிழர்கள்...

நாந்தான் நீங்கள் ஏற்று கொள்கிறீர்களோ இல்லையோ. சிங்களவர்கள் இந்தியாவை விட ஆயிரம் மடங்குநல்லவர்கள். தலைவர் இந்தியாவை கையாளதெரியாமல் என்ற வார்த்தையை இன்னும் எத்தனை வருடங்களுக்கு சொல்ல போகிறீர்கள். புலிகள் இல்லாத ஐந்து வருடமாகியும்  அரசியல் தீர்வு காண்பதற்கு அவர்களிடம் இன்னும் என்ன கையாளவேண்டி உள்ளது. எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் சொன்னார் திரு சம்பந்தர் அவர்களுக்கு வேலை சுலபமாகும். சொல்லுவீர்களா?

புலிகள் பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்கள் கையாண்டது பிழை என்றால் ஏன் இப்போது ஐந்து வருமாக யார் உள்ளார்கள். எப்படி கையாள்வது.  சொல்லுங்க. இவர்கள் கையாண்டதும் பிழையா? விக்கி பரம சாது அல்லவா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகத்தில், எப்படி மேற்ற்க்கு நாடுகளின் ஆட்டம் முடிந்து இந்திய சீனக் கம்பனிகளின் கை ஒங்கியிருக்கிறதோ 

நீங்கள் வர்த்தகத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மேற்கு நாடுகள் முதிர்ச்சி அடைந்த பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றன. ஆகவே அவற்றின் வளர்ச்சி வீதம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கிறது. சீனாவிலும் இந்தியாவிலும் முதலிட்டு, அங்கு கொள்வனவு செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ளவை மேற்கு நாடுகளில் உள்ள வணிக நிறுவனங்கள் ஆகும். இந்த அளவுக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சந்தை வாய்ப்பை வழங்கும் அளவுக்கு வலிமையான பொருளாதாரம் இன்றும் மேற்கு நாடுகளிலேயே இருக்கிறது. ஆபிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் மட்டும் பொருட்களை விற்று சீனாவும் இந்தியாவும் உயர் வாழ முடியாது. 

உண்மையில் இந்தியாவும் சீனாவும் மட்டுமல்ல இலங்கையும் கூட பொருளாதார ரீதியாக அமெரிக்காவை விட வேகமாக வளர்ந்து வருகிறது.

எம்மால் முடியும் என நினைத்தால் தான் அதனை செயல்படுத்த முடியும். உதாரணமாக யூத மக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். சொந்த நாடே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையும் ஒற்றுமையும் அவர்களை இன்று பலம் பொருந்திய நாடாக வைத்திருக்கிறது. 

யூதர்கள் தன்னம்பிக்கையாலும் ஒற்றுமையாலும் பலம் பெறவில்லை. அவர்கள் பலம் பெற்றது அமெரிக்க அரசின் ஆதரவினால். அமெரிக்க அரசு யூதர்களுக்கு இவ்வளவு நெருக்கமான ஆதரவை கொடுப்பதற்கு காரணம் தம்மிடம் அகதிகளாக வந்த யூதர்கள் தமக்கு செய்து தந்த அணுக்குண்டு காரணமாக.

அகதிகளாக ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் வந்த தமிழர்கள் அந்த நாடுகளுக்கு என்ன செய்து கொடுத்தார்கள்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

....

இந்தியாவுக்கு ஈழத்தமிழரை கஷ்டப்படுத்துவதால் என்ன நன்மை? அதுவும் இந்தியாவோடு யாவரிலும் பார்க்க கூடிய உறவுகளை வைத்திருப்பவர்கள் தமிழர்கள்...

இந்தியா தம் உறவாக நினைப்பது வட மாநிலங்களிலிருந்து இலங்கையில் கரை சேர்ந்த சிங்களவரை மட்டுமே, தமிழர்களை அல்ல, ஏனெனில் தமிழனின் மொழி, கலாச்சார வேர்கள் வட மாநிலத்தவரோடு முற்றிலும் வேறுபட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

தலைப்புக்கு சம்பந்தமிலாவிடினும் ஒரு கேள்வி.

உங்கள் பெயரில் உள்ள வன்னியன் எதை குறிக்கிறது? சாதியை இல்லை என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

உங்கள் பெயரில் உள்ள வன்னியன் எதை குறிக்கிறது? சாதியை இல்லை என்று நம்புகிறேன்.

யாருக்குத் தெரியும்? :)

நண்பனின் பெயர், நட்புக்காக சம்மதத்தின் பேரில் காவிக்கொண்டேன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி. விளக்கதுக்கு நன்றி. :)

நாந்தான் நீங்கள் ஏற்று கொள்கிறீர்களோ இல்லையோ. சிங்களவர்கள் இந்தியாவை விட ஆயிரம் மடங்குநல்லவர்கள். தலைவர் இந்தியாவை கையாளதெரியாமல் என்ற வார்த்தையை இன்னும் எத்தனை வருடங்களுக்கு சொல்ல போகிறீர்கள். புலிகள் இல்லாத ஐந்து வருடமாகியும்  அரசியல் தீர்வு காண்பதற்கு அவர்களிடம் இன்னும் என்ன கையாளவேண்டி உள்ளது. எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் சொன்னார் திரு சம்பந்தர் அவர்களுக்கு வேலை சுலபமாகும். சொல்லுவீர்களா?

புலிகள் பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்கள் கையாண்டது பிழை என்றால் ஏன் இப்போது ஐந்து வருமாக யார் உள்ளார்கள். எப்படி கையாள்வது.  சொல்லுங்க. இவர்கள் கையாண்டதும் பிழையா? விக்கி பரம சாது அல்லவா?

துல்பேன் உங்களினதும், புலி ஆதரவாளர்களினதும் கோரிக்கையை நினைக்க சிரிப்பாக இருக்கிறது...நீங்கள் இந்தியா ஏதாவது செய்யும் என்று ஒதுங்கியது மாதிரி அல்லவா கதைகிறீர்கள்...

இப்போது இந்திய அரசுக்கு இலங்கை தான் நெருங்கிய நண்பன்...ஆகவே பொறுத்திருங்கள்.....

முப்பது வருடம் இருந்தனீங்கள் இன்னொரு முப்பது வருடம் இருக்க மாட்டீர்களா???

ராஜீவின் கொலைக்கு பிறகும் இந்தியா நீங்கள் கேட்பதை உடனே கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களே....

வென்றவன் வைத்ததே வாய்க்கால்......

தோத்து போட்டும் வீரம் பேசுவதில் ஹமாஸையும் வென்று விடுவீர்கள்.....

இனி எதையும் எதிர்பாராமல் இருங்கள்..நல்லதே நடக்கும்... :)

(வேறு ஒன்றும் செய்ய முடியாது.....)

இந்தியா தம் உறவாக நினைப்பது வட மாநிலங்களிலிருந்து இலங்கையில் கரை சேர்ந்த சிங்களவரை மட்டுமே, தமிழர்களை அல்ல, ஏனெனில் தமிழனின் மொழி, கலாச்சார வேர்கள் வட மாநிலத்தவரோடு முற்றிலும் வேறுபட்டவை.

இது மிகவும் ஒரு முட்டாள் தனமான கருத்து....யாராவது வடஇந்தியனை பிடித்து கேளுங்கள்.....

இது புலிகளின் எடுபிடிகளின் கதை.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

..

இது மிகவும் ஒரு முட்டாள் தனமான கருத்து....யாராவது வடஇந்தியனை பிடித்து கேளுங்கள்.....

இது புலிகளின் எடுபிடிகளின் கதை.....

அப்படியா...?

தினந்தோறும் வட இந்தியர்களோடு பழகுவதால், அவர்களின் கருத்தை கேட்டதால் சொல்கிறேன்.. ஒருவேளை அது கனவாக இருக்குமோ? :icon_idea:

புலிகளை இழுக்காவிட்டால் உங்களுக்கு செமிக்காதே... :lol:

நன்றியப்பு.

அவர்கள்

அதற்கு அதற்கு என்று சில தியறிகளை  வைத்துள்ளார்கள்

நீங்கள் களத்தில் நின்று அறிவிப்பதெல்லாம் முட்டாள்தனமான முடிவுகள்... :(  :(

இப்பவாவது எமது நிலையை  புரிந்து கொள்ளுங்கள் ஐயா.. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த ராசவன்னியன் அண்ணைக்கே இந்தியாவைப்பற்றி பாடம் எடுக்கிறார் நான்தான்.. :o அதாவது குட்டி திருஞான சம்பந்தர்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

துல்பேன் நீங்கள் சொல்லுவது சிறுபிள்ளைகளுக்கு "பூச்சாண்டி (பேய்/பிசாசு மாதிரி)" கதை சொல்லுவது போல....

இந்தியா ஏன் உங்களை அழிக்க தூண்ட வேண்டும்? நீங்கள் உங்கள் பாட்டை பார்த்தால்..அவர்கள் அவர்களின் அலுவலை பார்ப்பார்கள் (நீங்கள் நம்பும் மேற்கு நாடுகள் மாதிரி)...

எல்லாரும் தங்களின் நன்மைக்கே அலுவல்களை பார்க்கும் போது நீங்கள் ஏன் கடவுள் தருவார் என்று வானத்தை பார்ப்பான்???

எல்லாரும் ஒத்து கொள்ள வேண்டியது தலைவருக்கு இந்தியாவை கையாள தெரியாமால் எல்லாத்தையும் போட்டுடைத்தது... ஆனால் அதை விட்டு விட்டு....

உ+ம்: இந்தியாவை பாருங்கள்..ஆப்கானிச்தானாகட்டும்..பாகிஸ்தானாகட்டும்..பங்களாதேஷ், இலங்கை...இங்கேயெல்லாம் தமிழரை விட இந்தியாவை மூர்க்கமாக எதிர்த்தார்கள்..ஆனால் இப்போது எல்லா நாடுகளும் இந்தியாவோடு பணிந்தே போகிறார்கள்......கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவும் தன்னை நிலை வியாபாரரீதியாகவோ...அரசியல் ரீதியாகவோ நிலை நிறுத்துகிறது...ஆகவே எதையும் எடுத்தேன் கவுட்டேன் என்ற படியால் தான் எங்களுக்கு இந்நிலை....

இந்தியாவுக்கு ஈழத்தமிழரை கஷ்டப்படுத்துவதால் என்ன நன்மை? அதுவும் இந்தியாவோடு யாவரிலும் பார்க்க கூடிய உறவுகளை வைத்திருப்பவர்கள் தமிழர்கள்...

ஈழத்தமிழருக்கு இலங்கையில் நடக்கும் கொடுமைகள் நீங்கள் அறியாததா?

சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் ஈழத் தமிழன் தனித்து வாழ விரும்புவதும் நீங்கள் அறியாததா?

இந்திய ஆழும் வர்க்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் ஈழம் பிரிந்தால் அது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தானது என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த மாயமானை அம்பெய்திக் கொல்ல எந்த ஒரு இந்திய  அரசியல்வாதிக்கும் துணிவு வரவில்லை.

அந்த மாயமானை நம்பி ஈழத் தமிழனின் ஈழக் கோட்பாட்டை இந்திய வல்லூறுகள்  சிங்களத்துடன் சேர்ந்து முடக்க நினைக்கின்றனர்.

அடுத்தது ஈழத்தில் தமிழனின் ஆதிக்கம் வந்தால் சிங்களம் சீனத்தின் கைகளில் வீழ்ந்து இந்திய ஒற்றுமைக்கு இன்னும் இடையூறுகளை ஏற்படுத்தலாம்.சீனர்கள் மட்டுமல்ல பாக்கிஸ்தான் ஊடுருவல் இலங்கையில் ஏற்கனவே நடந்துவிட்டது.எல்லாவற்றையும் சமாளிக்க இந்தியா சிங்களத்தை நம்பாவிட்டாலும் நம்பிய மாதிரி நடக்க வேண்டும்.

அதற்கு ஹிந்தியர்களுக்குக் கிடைத்தது தான் ஈழத்தமிழர்களும் அவர்களின் விடுதலைப் போராட்டமும்.

யூகோஸ்லாவியா, ரஸ்யா போன்று இந்தியாவும் சிதறும் காலத்தில்

ஈழத்தமிழர்களின் போராட்டம் வெற்றியடைய வாய்ப்புக்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாக்காரனும்,சீனாக்கரனும் ஏன் அவுஸ்ரேலியாவில் வந்து கை ஏந்துகிறார்கள்......யாருக்கும் பதில் தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நீங்க சொன்னது ரொம்பச்சரி, இந்தியா உடைந்து போகும் காலத்தில் இலங்கையை விட பலமான தனித்தமிழ் அரசொன்று தமிழகத்தில் உருவாகும். அது எமக்காக குரல் தரும், தனிநாடு அமையவும், ஏன் அனுராதபுரம் பொலநறுவை வரை பிடிக்கவும் உதவும்.

ஆனால் அதுக்கு இந்தியா உடையணும். உடைக்கணும். இந்த லூசுத்தனமான இந்தியத்தமிழர்கள் என்னவோ முதல்ல இந்தியன் பிறகு தமிழன் என்று பீத்திக்கிறார்கள். வைகோ, சீமான் கூட இந்தியா உடையணும் எண்டு நினைக்கிறாங்க இல்லை.

என்ன செய்யலாம்? மாணவரை உசுப்பேத்தி, தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓட வைக்கலாம். ஈழத்தில் நாம் செய்த சகோதர படுகொலையை அங்கும் விஸ்தரிக்கலாம். ராசவன்னியன் போன்றவர்களுக்கு, போரின் வலியை, இடம்பெயர்வின் கோரத்தை, வன்புணர்வின் சீரழிவை உணர்த்தலாம். யுத்தம் என்பது சாண்டில்யன், கல்கி கதைகளில் இருந்து எப்படி மாறு பட்டது எனக்காட்டலாம்.

இப்போ புரிகிறதா ஏன் தமிழ்தேசியத்தை பார்த்து, இந்தியாவும் தமிழக தலைமைகளும் இப்படி பயப்பிடுகிறார்கள் எனறு?

ஈழம் தனிநாடாவதற்க்கு இருக்கும் ஒரே நடைமுறைச்சாத்தியவழி, முதலில் தமிழகத்தை பிரிப்பதே.

இதை எப்படி செய்வதாய் உத்தேசம்?

புத்தன் - டாட்டா, லக்ஸ்மி மிட்டல், இன்னும் பல இந்திய முதளாளிகளிடம் எத்தனை வெள்ளைகள் கையேந்துது தெரியுமா?

எல்லா நாட்டிலும் ஏழைகள் இருப்பர், பணகாரரும் இருப்பர். இந்திய ஏழைகள் அவுசில் கையேந்தினம். அவுஸ் ஏழைகள் சோஷல் காசில் வாழீனம்.

இந்தியா ஏழைகளின் நாடு, ஆனால் ஏழை நாடல்ல. Wealth distribution அங்கு குறைவு. அவ்வளவே. Ian Chappell இற்கு ஒருதரம் Gavaskar சொன்னது. "Compared to the economic might of Mumbai, Melbourne is a village council". :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு இலங்கையில் நடக்கும் கொடுமைகள் நீங்கள் அறியாததா?

சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் ஈழத் தமிழன் தனித்து வாழ விரும்புவதும் நீங்கள் அறியாததா?

இந்திய ஆழும் வர்க்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் ஈழம் பிரிந்தால் அது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தானது என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த மாயமானை அம்பெய்திக் கொல்ல எந்த ஒரு இந்திய  அரசியல்வாதிக்கும் துணிவு வரவில்லை.

அந்த மாயமானை நம்பி ஈழத் தமிழனின் ஈழக் கோட்பாட்டை இந்திய வல்லூறுகள்  சிங்களத்துடன் சேர்ந்து முடக்க நினைக்கின்றனர்.

அடுத்தது ஈழத்தில் தமிழனின் ஆதிக்கம் வந்தால் சிங்களம் சீனத்தின் கைகளில் வீழ்ந்து இந்திய ஒற்றுமைக்கு இன்னும் இடையூறுகளை ஏற்படுத்தலாம்.சீனர்கள் மட்டுமல்ல பாக்கிஸ்தான் ஊடுருவல் இலங்கையில் ஏற்கனவே நடந்துவிட்டது.எல்லாவற்றையும் சமாளிக்க இந்தியா சிங்களத்தை நம்பாவிட்டாலும் நம்பிய மாதிரி நடக்க வேண்டும்.

அதற்கு ஹிந்தியர்களுக்குக் கிடைத்தது தான் ஈழத்தமிழர்களும் அவர்களின் விடுதலைப் போராட்டமும்.

யூகோஸ்லாவியா, ரஸ்யா போன்று இந்தியாவும் சிதறும் காலத்தில்

ஈழத்தமிழர்களின் போராட்டம் வெற்றியடைய வாய்ப்புக்கள் உள்ளன.

வாத்தியார்

ரென்சன் படக்கூடாது

உங்களுடைய  பிரச்சினை என்ன?

உங்களது அழிவுகள் என்ன?

அதை தடுப்பதற்கான தங்களது நடவடிக்கைகள் என்ன என்ன?

எதைப்பற்றியும் கவலையில்லை

நாங்க  சொல்லுறம்

நீங்க   கேட்கணும்

அவ்வளவு தான்...

இதில  

என்ர பிரச்சினைக்கு இது தான் தீர்வு என்று  சொன்ன

பிரபாகரன் ஏகாதிபத்தியவாதியாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அதுக்குப் பேர் சர்வாதிகாரம். ஏகாதிபத்தியம் எண்டா வேற விசயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அதுக்குப் பேர் சர்வாதிகாரம். ஏகாதிபத்தியம் எண்டா வேற விசயம். :)

எங்கட   பிரச்சினையைக்கேளாமல்

தனது சுயநலத்தை வைத்துக்கொண்டு

தீர்ப்புச்சொல்லி நசுக்கிறதுக்கு என்ன  பெயராம்....??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

...

என்ன செய்யலாம்? மாணவரை உசுப்பேத்தி, தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓட வைக்கலாம். ஈழத்தில் நாம் செய்த சகோதர படுகொலையை அங்கும் விஸ்தரிக்கலாம். ராசவன்னியன் போன்றவர்களுக்கு, போரின் வலியை, இடம்பெயர்வின் கோரத்தை, வன்புணர்வின் சீரழிவை உணர்த்தலாம். யுத்தம் என்பது சாண்டில்யன், கல்கி கதைகளில் இருந்து எப்படி மாறு பட்டது எனக்காட்டலாம்.

இப்போ புரிகிறதா ஏன் தமிழ்தேசியத்தை பார்த்து, இந்தியாவும் தமிழக தலைமைகளும் இப்படி பயப்பிடுகிறார்கள் எனறு?

ஹலோ அப்பு,

ஈழத்தின் வலி புரியாததல்ல

ஏற்கனவே புரிந்த வலியை மீண்டும் உணர்த்துவதால் எந்த புண்ணியமுமில்லை. உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்த்தது, அதை உங்களின் ஒற்றுமையின்மையால் கோட்டைவிட்டுவிட்டு, எம் மீது பாய்வதில் பயனில்லை. இன உறவுகள், துயருறுவதை மனந்தாளாமல் இனியாவது ஒற்றுமையாய் இருந்து சாதியுங்களப்பு என் சொன்னால் விதண்டாவாதம் செய்கிறீர்கள்.

வாழ்க வளமுடன்.

நாந்தான் இப்ப நான் எங்கே வீரம் பேசினேன். உங்களுக்கு கசப்பான ஒரு உண்மையை உங்களைப் போன்ற ஒரு சாதாரண உறவாக தெரிவித்தேன். அவ்வளவுதான். தமிழர்கள் முப்பது வருடமாக அல்ல அறுபது வருடமாக போராடுகிறார்கள் என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் தெளிவாக கூறுகிறேன். "புலிகள் இல்லாத பின்னரான காலப்பகுதியில் இந்தியாவின் நட்பை பேணும் தமிழர்தலைமை இருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என் று ஒதுக்கிய இந்தியா, ஏன் மிதவாத தமிழர் தலைமைக்கு கூட உதவவில்லை", என்று கேட்டால் அதுப்பற்றி எனக்கும் தெரியவில்லை என்று கூறுவதை விடுத்து பழைய முடிந்து போன புலிக்கதை பேசுகிறீர்கள். அதாவது கேள்வித்தாளில் இவ்வருடம் ஒரு கேள்வி வந்தால் அதற்கு பதில் உங்களுக்கு தெரியாவிட்டால் போனவருட வினாதாளில் வந்த உங்களுக்கு விருப்பமான சுலபமாக பதிலளிக்கக் கூடிய கேள்விக்கு பதில் கூறுவீர்களா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எங்கள் வலியை எம்மை தவிர யாரும் அறிய முடியாது.

உங்களுக்கு இது 30 மைல் தூரத்தில் தமிழன் நடத்திய வீரசாகசம். இன்னொரு ரஜனி படம்.

எமக்கு அப்படியில்லை. 7 கோடிபேர், என்னத்தை செய்து கிழித்தீர்கள்?

இந்தியாவின் கொள்கைக்கு எதிராக ஒரு லட்சம் பேர் ஆயுதம் ஏந்தி இருந்தாலே, நமக்கு விடிவு கிட்டியிருக்கும். இந்தியா தமிழரை கிள்ளிகீரையாக நடத்த துணிந்த்ஹிராது.

நீங்கள் அமைதி பூங்காவில் வாழவேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆனால் நாம் மட்டும் இன உரிமைக்காக சீரழிய நீங்கள் பொருளாதாரத முன்னேற்றம் மட்டுமே போதும் எண்டு வாழவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு.

நாங்கள் மட்டுமா தமிழர், நீங்களும் தானே?

கடைசி நேரத்தில் கூட காங்கிரஸை அரியணைக்கு அனுப்பினீர்களே? ஒரு தேர்தல் முடிவை கூட மாற்றமுடியாத உங்களை நம்பி அத்தனை பேரும் மாண்டு போனார்களே?

அது அப்படித்தான்

கேள்வி  எல்லாம் கேட்கக்கூடாது

அப்பறம் நீங்களும் புலிதான் நாம் அறிவோம் என்ற  பதில்தான் வரும்..

இல்லை எங்கள் வலியை எம்மை தவிர யாரும் அறிய முடியாது.

உங்களுக்கு இது 30 மைல் தூரத்தில் தமிழன் நடத்திய வீரசாகசம். இன்னொரு ரஜனி படம்.

எமக்கு அப்படியில்லை. 7 கோடிபேர், என்னத்தை செய்து கிழித்தீர்கள்?

இந்தியாவின் கொள்கைக்கு எதிராக ஒரு லட்சம் பேர் ஆயுதம் ஏந்தி இருந்தாலே, நமக்கு விடிவு கிட்டியிருக்கும். இந்தியா தமிழரை கிள்ளிகீரையாக நடத்த துணிந்த்ஹிராது.

நீங்கள் அமைதி பூங்காவில் வாழவேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆனால் நாம் மட்டும் இன உரிமைக்காக சீரழிய நீங்கள் பொருளாதாரத முன்னேற்றம் மட்டுமே போதும் எண்டு வாழவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு.

நாங்கள் மட்டுமா தமிழர், நீங்களும் தானே?

கடைசி நேரத்தில் கூட காங்கிரஸை அரியணைக்கு அனுப்பினீர்களே? ஒரு தேர்தல் முடிவை கூட மாற்றமுடியாத உங்களை நம்பி அத்தனை பேரும் மாண்டு போனார்களே?

என்ன சுருதி  மாறுது...

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் புலிகளுக்கு பின்னரான எம்தலைமையை இந்தியா கீழ்தரமாக, கிள்ளுகீரையாய் நடத்துகிறது என்பது கண்கூடு.

புலி மீதான வன்மம் இன்னும் தொடர்வது, நாம் அவர்களுக்கு எவ்வகையிலும் தேவையில்லாத used toilet paper போல இருப்பது, இலங்கையின் இந்திய அதிகாரிகளுக்கான லஞ்சம், சீனா பூச்சாண்டி இப்படி பல காரணங்கள்.

நீங்கள் கூட்டமைப்பு இந்தியாவை விட்டிவிட்டு மேற்கை நாடணும் என்பீர்கள்.

அவர்கள் மட்டும் என்ன திறமா? நோர்வே எந்த வகையில் இந்தியாவுக்கு உசத்தி?

மோடி சந்திக்கவாவது உடன்பட்டார்? கூட்டமைப்பால் ஒபாமா, கெரியை கூட இல்லை, ஒபாமாவின் டிரைவரை கூட சந்திக்க முடியாதுள்ள போது, ஒவ்வொரு தடைவையும் "இந்தியாவுடன் பேசுங்கள்" என்று மேற்க்கின் ராஜதந்த்ஹிரிகள் சொல்லும் போது,

இந்த்ஹியாவுக்கு சலாம் போடுவதை விட கூட்டமைப்புக்கு என்ன வழி இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்ர சுருதி எப்பவும் ஒண்டுதான். நீங்கள்தான் அடிக்கடி காதை பொத்திகொள்கிறீர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எங்கள் வலியை எம்மை தவிர யாரும் அறிய முடியாது.

உங்களுக்கு இது 30 மைல் தூரத்தில் தமிழன் நடத்திய வீரசாகசம். இன்னொரு ரஜனி படம்.

எமக்கு அப்படியில்லை. 7 கோடிபேர், என்னத்தை செய்து கிழித்தீர்கள்?

இந்தியாவின் கொள்கைக்கு எதிராக ஒரு லட்சம் பேர் ஆயுதம் ஏந்தி இருந்தாலே, நமக்கு விடிவு கிட்டியிருக்கும். இந்தியா தமிழரை கிள்ளிகீரையாக நடத்த துணிந்த்ஹிராது.

நீங்கள் அமைதி பூங்காவில் வாழவேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆனால் நாம் மட்டும் இன உரிமைக்காக சீரழிய நீங்கள் பொருளாதாரத முன்னேற்றம் மட்டுமே போதும் எண்டு வாழவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு.

நாங்கள் மட்டுமா தமிழர், நீங்களும் தானே?

கடைசி நேரத்தில் கூட காங்கிரஸை அரியணைக்கு அனுப்பினீர்களே? ஒரு தேர்தல் முடிவை கூட மாற்றமுடியாத உங்களை நம்பி அத்தனை பேரும் மாண்டு போனார்களே?

இது ஏற்கனவே பதிந்ததுதான்.

உங்கள் வாதப்படியே இருக்கட்டும்.

தமிழகத்தில் எத்தனை பேருக்கு ஈழப்போராட்டம் பற்றி போதிய வரலாற்றறிவிருக்குமென நினைக்கிறீர்கள்? இத்தனை வருட உங்கள் போராட்டமும் தமிழகத்தை மட்டுமே நம்பியா நடந்தது?

ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்,

ஈழத்தின் அத்தனை மக்களும் எந்த நாடுகளுக்கும் வெளியேறிச் செல்லாமல் ஒருங்கிணைந்து ஒற்றுமையாய் வீதிக்கு வந்து ஏன் போராடவில்லை? 30 மைல் தொலைவிலுள்ள தமிழக சொந்தங்களை விடுங்கள், முள்ளிவாய்க்காலில் உறவுகள் அழியும்போது யாழ்ப்பாணத்திலும், திரிகோணமலையிலும், மட்டக்கிளப்பிலும், மன்னாரிலும், கொழும்பிலுமுள்ள தமிழர்கள் என்ன செய்தார்கள்? நீங்கள் வாழ்வுக்கு போராட ஒன்றுகூட மாட்டீர்கள், ஆனால் உதவாக்கரை கந்தனுக்கு கும்மியடிக்க, அரோகரா பாட, கூட்டம் கூட்டமாய் உருளுவீர்கள்!

ஆனால் எங்களை நோக்கி நக்கலும், கேள்விக் கணைகளையும் தொடுப்பீர்கள்..! நல்ல நியாயமப்பு!

இக்கட்டான முள்ளிவாய்க்கால் நிலையில், தமிழகத்தின் அமைதி தவறுதான்.

உறவுக்காரன் கஷ்டம் தெரிந்திருந்தால் நிச்சயம் உதவுவான், ஆனால் சொந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒருங்கிணைந்த முடிவுகளில்தான் சிக்கலை தீர்க்கும் தீர்க்கமான முனைவும், செயலும் வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.