Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி : புதிய அரிசி கண்டுபிடிப்பு.

 

Tamil_News_large_1064490.jpg

 

 

 
நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம். 
 
இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
 
 
மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுகின்றன. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அரிசி உணவே வாழ்வாதாரமாக உள்ளது. இத்தகைய அரிசியே மனிதனுக்குத் தோன்றும் நோய்களின் ஆதாரமாக விளங்குகிறது.
 
 
அதனால், 'சென்னை மோகன்ஸ் டயபடிக் சென்டர்' அதிக நார்ச்சத்து உடைய வெள்ளை அரிசி வகையைக் கண்டறிந்துள்ளது. விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து, இந்த அரிய வகை அரிசியை உற்பத்தி செய்து வருகிறது, இந்நிறுவனம்.
 
 
இதுகுறித்து, டாக்டர் மோகன்ஸ் டயபடிக் சென்டர் தலைவர், டாக்டர் மோகன் கூறியதாவது:
 
 
நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம் : துரிதமான தொழில் மயமாக்கத்தின் அலையால், புதுமை, நவீனம் என்ற பெயரில் உணவு முறைகளும் மாற்றம் கண்டு விட்டன. அரிசி அரவையின் போதான பதப்படுத்துதல், பாலிஷ் எனப்படும் பட்டை தீட்டப்படுதல் போன்ற பல பரிமாணங்களால் அரிசியின் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
 
 
தற்போது கிடைக்கும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில், ஒரு மனிதனுக்குத் தேவைப்படும், மூன்றில் இரண்டு பங்கு கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தும், 60, - 70 கலோரிகளும் கிடைத்து விடுகிறது. இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில், நார்ச்சத்து மற்றும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் பெருமளவில் அழிந்து விடுகின்றன. உண்டவுடன் ஜீரணமாகி விடும் இந்த அரிசியால், உடலில் ரத்தத்தின் சர்க்கரை அளவு விரைவில் கூடிவிடுகிறது.
 
எங்கள் நிறுவனம் நடத்திய ஆய்வில், இத்தகைய வெள்ளை அரிசியால் தான், நம்நாட்டில், 'டைப் 2' எனப்படும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் பெருகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய சுத்திகரிக்கப்படும், பாலிஷ் செய்யப்படும் தானிய வகைகளால், இன்சுலின் (கணையத்தில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன்) சுரப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் தாக்கம் தென்னிந்திய மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக அதிகமான நீரிழிவு நோயாளிகளுடன், உலக அளவில் இந்திய இரண்டாம் இடம் வகிக்கிறது. அதற்கு முதன்மை காரணம், பாலிஷ் செய்யப்படுவதால் நார்ச்சத்து குறைந்த தானிய வகைகளை எடுத்துக் கொள்வதே. அதனால், உணவு முறையில், மிக விரைவிலேயே மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
 
நீரிழிவுடன் தொடர்புடைய அதன் பாதிப்புகளை தடுப்பதற்காக, சத்து மிகுந்த தானிய வகைகளை உற்பத்தி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதனால், விவசாய விஞ்ஞானிகளுடன் சென்னை டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மோகன்ஸ் ஹெல்த் கேர் புராடக்ட்ஸ் இணைந்து 'டாக்டர் மோகன்ஸ் ஹை பைபர் ரைஸ்' (நார்ச்சத்து மிகுந்த அரிசி) உற்பத்தி செய்துள்ளது. பொன்னி அரிசியின் வகையைச் சார்ந்த இந்த அரிசி, பாலிஷ் செய்யப்பட்டாலும் அதன் தன்மையை இழக்காது. ஆராய்ச்சியில் பல வித ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு, (Mஉடடிஒன் Bரெஅடிங்) பழங்கால முறைப்படி, கிட்டத்தட்ட, 1960ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் கையாளப்பட்ட முறைப்படி விளைவிக்கப்படுகிறது.
 
*டாக்டர் மோகன்ஸ் ஹை பைபர் ரைஸ்' குணநலன்கள்...
 
இது, அரிசி வகையைச் சார்ந்தது. ஒர்ய்ழ சடிவ எனப்படும் இந்த அரிசியில் சாதாரண அரிசியை விட, ஐந்து மடங்கு நார்ச்சத்து அதிகம். மற்ற அரிசிகளுடன் ஒப்பிடுகையில், இதன் தோற்றம், சமைக்கும் முறை, சுவை போன்றவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. சாப்பாடு போன்றே இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் போன்ற சிற்றுண்டி வகைகள் செய்யவும், இந்த அரிசி ஏற்றது. இயற்கை முறையிலான நார்சத்துக்களை கொண்டுள்ளதால், பக்க விளைவுகள் ஏதும் வராது.
 
12 மாதங்கள் வரை இதை காற்றுப்புகாத, ஈரம்படாத டப்பாக்களில் இருப்பு வைத்து பயன்படுத்தலாம். மற்ற அரிசிகளைப் போல இதையும் கழுவி, சமைக்கலாம். அதனால், சத்துக்கள் அழிவதில்லை.உணவு உண்ட பின், மற்ற சாதாரண அரிசிகளைப் போலில்லாமல், ரத்தத்தில் மிக மெதுவாகவே சர்க்கரை அளவை கூட்டுகிறது. இது, ஆரோக்கியமான செயலாகும். ஆனால், மிக நல்லது என்பதற்காக, இந்த அரிசியையும் தேவைக்கதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவு நிபுணர் அல்லது மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
 
சாதாரண அரிசிக்கு மாற்றான இந்த அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்துக்கும் ஏற்றது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் குடும்பங்கள், அன்றாடம் இதைதங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
 
இந்த அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி, தற்போது பச்சை அரிசி வகையில் கிடைக்கிறது. விரைவில் புழுங்கல் அரிசி வடிவிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இத்துடன் அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி ரவையும் கிடைக்கிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, எங்களது நிறுவனங்கள் மற்றும் முன்னணி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் இந்த அரிசி கிடைக்கும்.
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......அப்ப இனி சோறு சாப்பிடலாம் எண்டு சொல்லுறீங்கள்? :lol:

 

வித்தியாசமா யோசிக்காதீங்க... அப்பாவின் நினைவு ஒரு தரம் வந்து கண்ணில் திரையிட்டுச் சென்றது!

 

ஒரு வேளை, இந்த அரிசி வகை முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்.....இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருப்பேன்!

 

 

காலத்தின் தேவையறிந்த பதிவு.... நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்
// 'சென்னை மோகன்ஸ் டயபடிக் சென்டர்'// அதிக நார்ச்சத்து உடைய வெள்ளை அரிசி வகையைக் கண்டறிந்துள்ளது. விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து, இந்த அரிய வகை அரிசியை உற்பத்தி செய்து வருகிறது, இந்நிறுவனம்.
 
தமிழனின், கண்டுபிடிப்பு என்பதால்.... இரட்டிப்பு மகிழ்ச்சி.
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி , பிரயோசனமான பதிவு...!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......அப்ப இனி சோறு சாப்பிடலாம் எண்டு சொல்லுறீங்கள்? :lol:

 

வித்தியாசமா யோசிக்காதீங்க... அப்பாவின் நினைவு ஒரு தரம் வந்து கண்ணில் திரையிட்டுச் சென்றது!

 

ஒரு வேளை, இந்த அரிசி வகை முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்.....இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருப்பேன்!

 

 

காலத்தின் தேவையறிந்த பதிவு.... நன்றிகள் !

 

 

எப்ப  பாரு

சாப்பாடே நினைப்பு

வாய்க்குள்  போடுவதை  பார்த்து போடாமல்

எதுவும் நிரந்தரமில்லை............

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்......அப்ப இனி சோறு சாப்பிடலாம் எண்டு சொல்லுறீங்கள்? :lol:

 

வித்தியாசமா யோசிக்காதீங்க... அப்பாவின் நினைவு ஒரு தரம் வந்து கண்ணில் திரையிட்டுச் சென்றது!

 

ஒரு வேளை, இந்த அரிசி வகை முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்.....இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருப்பேன்!

 

 

காலத்தின் தேவையறிந்த பதிவு.... நன்றிகள் !

 

மருந்து மாத்திரைகளை விட நாம் உண்ணும் உணவே மருந்தாகவும் இருக்கவேண்டும் என என் குடும்ப டாக்டர் அடிக்கடி சொல்வார்.
 
உங்களைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வேதனை தெரியும். :(

 

// 'சென்னை மோகன்ஸ் டயபடிக் சென்டர்'// அதிக நார்ச்சத்து உடைய வெள்ளை அரிசி வகையைக் கண்டறிந்துள்ளது. விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து, இந்த அரிய வகை அரிசியை உற்பத்தி செய்து வருகிறது, இந்நிறுவனம்.
 
தமிழனின், கண்டுபிடிப்பு என்பதால்.... இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

 

 இவ்வுலகில் தமிழர்கள் கண்டு பிடித்த விடயங்கள் எண்ணிலடங்காது.   :)

பகிர்வுக்கு நன்றி , பிரயோசனமான பதிவு...!

 

சுவியர் வருகைக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப  பாரு

சாப்பாடே நினைப்பு

வாய்க்குள்  போடுவதை  பார்த்து போடாமல்

எதுவும் நிரந்தரமில்லை............

 

கனடாவிலையே ஒருத்தர் சோறும் கோழிக்கறியோடைதான் ஆபிஸ் வேலைக்கு போறாராம்......ம்....பண்ணியில் பாண்ணிப்பாருங்கோவன்....... :D

பகிர்வுக்கு நன்றி

 

வருகைக்கும் நன்றி நிலாமதி.  :)

எப்ப  பாரு

சாப்பாடே நினைப்பு

வாய்க்குள்  போடுவதை  பார்த்து போடாமல்

எதுவும் நிரந்தரமில்லை............

 

நிரந்தரமாக இருந்த, இருக்கும் ஒருவரையாவது காட்டுங்கள்.  நாங்களும் பார்த்துக் கொள்கிறோம்.  அதேபோல், சாப்பாடே இல்லாமல் இருக்கும் ஒருவரையும் காட்டுங்கள்.

 

கனடாவிலையே ஒருத்தர் சோறும் கோழிக்கறியோடைதான் ஆபிஸ் வேலைக்கு போறாராம்......ம்....பண்ணியில் பாண்ணிப்பாருங்கோவன்....... :D

 

வருகைக்கும் நன்றி நிலாமதி.  :)

 

கு.சா.  இங்கு தமிழர்கள் மட்டுமல்ல, மற்றைய இனத்தவர்களும் சோறு சாப்பிடப் பழகி விட்டார்கள்.   அநேக ரெஸ்ரோறன்களில் இப்போது சோறும் ஒரு ஐயிட்டம் ஆகிவிட்டது.   :)

 

சின்ன வயதிலிருந்தே சாப்பாட்டு விடயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் இந்தப் பிரச்சனைகள் வராது.  நிறையச் சாப்பிட்டால்தான் வளரலாம் என்று சொல்லிச் சொல்லி வயிறு வெடிக்கும்வரை சோறைச் சாப்பிட வைத்தால் இப்படித்தான் அவதிப்படவேண்டும்.  இப்போது வளர்ந்து வரும் பிள்ளைகளுக்காவது ஆரோக்கியமாகச் சாப்பிடப் பழக்கி விடுவோம். 

 

நுணாவிலான் ஒரு திரியில் குறிப்பிட்டிருந்த ஒரு குறிப்பு (கடும் சீரகம் மற்றும் வெந்தயம் என்று நினைக்கிறேன்)  நீரிழிவு நோய்க்கு உகந்தது என்று சமீபத்தில் நானும் அறிந்து கொண்டேன்.  எனக்குச் சொன்னவரும் நீரிழிவு நோயுள்ளவர்தான்.  ஏற்கனவே நுணாவிலான் குறிப்பிட்டிருந்ததால் நான் இங்கு பதியவில்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரழிவு நோய்க்கு சோறுமட்டும் காரணமில்லை என நினைக்கின்றேன். சோற்றை விட பல பந்தா உணவு வகைகளும் மன அழுத்தமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. :)

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப  பாரு

சாப்பாடே நினைப்பு

வாய்க்குள்  போடுவதை  பார்த்து போடாமல்

எதுவும் நிரந்தரமில்லை............

என்னத்தைச் சொல்லுறது...?

 

பாத்துப்போட்டால் மட்டும் வாழ்க்கை நிரந்தரமா என்ன? :D

 

ஆனால் கொஞ்சக்காலம்... நட்ட மரங்கள்.. பூக்கிறதையும், காய்க்கிறதையும் பாக்க வேணுமெண்டு ஆசை....!

 

அதை விடக் காசு, பணம் எண்ட மாதிரி ஆசையெல்லாம் என்னிடம் இல்லை..! :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

http://store.healingifts.com/goorbimeteaw.html

 

http://www.livestrong.com/article/273617-what-are-the-health-benefits-of-gohyah-tea/

 

நன்றி குசா பகிர்வுக்கு. இந்த தேநீர் தினம் அருந்தினால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாகக் கண்டுபிடிக்கும் அரிசிகள் பழையவை போல் சுவையாக இருப்பதில்லை. சிவப்பு பாஸ்மதி என்று ஒன்றை அறிமுகப் படுத்தினர். ஆனால் வாயில் வைக்க முடியவில்லை. குமாரசாமி சொன்னதுபோல் நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பல. உணவுகள் பல. சோற்றை மற்றும் வைத்து நாம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும் என்று கூற முடியாது.

GMO தானியங்கள் முறைப்படி நீண்டகாலம் பரீட்சிக்கப்பட்டபின் பாவனைக்கு விடப்பட வேண்டும். பெரும்பாலும் GMO தானிய கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் பெரும் வியாபார நிறுவனங்கள் இருக்கும். இவை மனித உடலில் நீண்டகால மாற்றங்களை உண்டாக்கக் கூடியன. அத்துடன் இவை பயிரிடப்படும் சூழலிலும் (ecosystem) மாற்றங்களை ஏற்படுத்த வல்லன. சில வகைத் தானியங்கள் காற்றையும் இயற்கைக்கு மாறாக மாசுபடுத்தக் கூடியன.

 

பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த இயற்கை வகைத் தானியங்களில் நார்த்தன்மை அதிகமானவற்றைத் தெரிவு செய்து அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு பற்றிய அறிவூட்டலும் கணிசமான அளவு நீரிழிவு நோய்களைக் குறைக்க உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரமாக இருந்த, இருக்கும் ஒருவரையாவது காட்டுங்கள்.  நாங்களும் பார்த்துக் கொள்கிறோம்.  அதேபோல், சாப்பாடே இல்லாமல் இருக்கும் ஒருவரையும் காட்டுங்கள்.

 

 

எனது  கருத்தில் ஒரு மயக்கம் இருப்பது

நீங்கள் சுடடிக்காட்டிய  பின்னர் தான் தெரிகிறது..

 

 

நான் நிரந்தரம் என்று சொன்னது

நீரளிவு நோய்க்கோ

அல்லது வேறு நோய்களுக்கோ இவ்வாறான கண்டுபிடிப்புக்கள்இ நிரந்த தீர்வைத்தராது

அதனூடாக வேறு பக்கபவிளைவுகள் வரும் என்பதற்காகவே.

 

அதனால்  தான்

வாய்க்குள்   போடுவதை குறைத்தால்

அல்லது   என்ன  போடுகின்றோம் என  பார்த்துப்போடுதலே

நிரந்தர பாதுகாப்பைத்தரும் என எழுதினேன்..

 

மற்றும்படி

உங்களது கேள்விக்கான அப்படியொரு கண்டு பிடிப்பைச்செய்தால்

உங்களிடமா தருவேன்??

உலகத்தில்  இன்றையநிலையில் அதிக பெறுமதியான கேள்வி  இதுதானே.. :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.