Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் வழங்கிய சந்திரசிறி!

Featured Replies

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி செவ்வாய்க்கிழமை  வழங்கினார்.

வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5 ஆம் திகதி வழங்கப்பட்டது.

அத்துடன், முதலமைச்சருக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை  முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/33740/57/10/d,article_full.aspx

நக்குண்டார் நாவிழந்தார் என்பது தெரிந்தால் சரி .

இனி இவருக்கும் அடிக்கடி காற்றுபோய்விடசந்தர்ப்பம் இருக்குமா? அவனின் சொகுசில் சென்று அவனை எதிர்த்து நன்றி கெட்டவராவாரா? காலம் பதில் சொல்லும். சிங்களத்தின் டெக்னிக்கே டெக்னிக்.உலக உதவிகளை சொகுசுகளாக மாற்றி ஆக்களை வாங்கும்(மன்னிக்கவும் வாங்க நினைக்கும்)டெக்னிக்..

  • கருத்துக்கள உறவுகள்

அதை  சந்தரசிறி  கொடுப்பதால்

எமது பார்வை  தப்பாக  இருக்கக்கூடாது

 

மாகாணசபைக்கான உரிமை அது

அதை வெறுத்து என்ன பலன்....??

மாகாணசபை உரிமை என்றால் அதைப்பயன்படுத்துவதில் தவறில்லை.விசுகு.என்றும் மாறாமல் இருந்தால் அதுவே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி விக்கி அங்கிளை எப்படி அழைக்கலாம். :rolleyes:

இந்த சந்திரசிறிக்கு எமது மக்களின் வரிப்பணத்ததில் சொகுசு வாகனம் வாங்கப்பட்ட போது ஏன் அது கையளிக்கப்படும் போட்டோக்கள் வெளிவரவில்லை. மக்கள் வரிப்பணத்ததில் மக்களால் கையளிக்கப்படும் வாகனங்கள் அவை. முதலமைச்சர்களுக்கு வழங்கி எந்த ஆளுனரும் போட்டோ எடுத்ததை நான் காணவில்லை.

இந்த சந்திரசிறிப்பயலே எமது மக்கள்வரிப்பணத்தில் சொகுசு வாகனம் ஓடிக்கொண்டு எமது பணத்தை எடுத்து எமது பிரதிநிதிகளுக்கு வாகனம் கொடுத்து அதைப் போட்டோ எடுத்து எமக்கு காட்டுவார். அதை எமது ஊடகங்களும் பிரசுரிக்கிறன.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி அமைதி விக்கி அய்யா பெற்றோலுக்கு பதிலா டீசலும் டீசலுக்கு பெற்றோலும் போடும் நவீண விஞ்ஞானி சந்தரசிறி குடுத்து வேண்டிக்கட்டபோறார் பொறுமை பொறுமை மக்களே. :lol:

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்சன் எடுக்கும் வரைக்கும் சிங்களத்துக்கு உழைச்சுப்போட்டு....   இப்ப சும்மா ரைம் பாசிங்குக்கு வந்த ஆளைப்போய் வறுத்தெடுக்கிறியள்.... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணத்தின் முதலமைச்சர் டோயோதாவில்-TOYOTA போகவேண்டி இருக்குகிறது, அதும் சிங்கள ஆளுநர் உடாக கொடுத்தது என்று கவலைபடாமல் , ஒரு கோடிக்கு வாகனம் வாங்கி போட்டார் என்று பதிவு அழ அதை பார்த்து நாங்கள் கவலைப்பட...; நல்லஇனம் அப்ப இது...::::இங்கே அசைலம் அடித்த, கள்ளமட்டை,......இன்ன பிற கோஷ்டிகள் எல்லாம் வாய்க்குள்ள போகாத காருகள், SUV கலீல் திரிகிறார்கள் அதை பற்றி கதைப்பார் இல்லை.

இது நடந்தது ஜூலை 7 என்று போட்டிருக்கு, இப்ப செப்டம்பர் 9..இப்பத்தான் சிங்கனுக்கு செய்தி தெரிந்து இருக்கிறது போல.. :(

  • கருத்துக்கள உறவுகள்

Ananthi_cycle_002.jpg

 

Ananthi_cycle_001.jpg

 

வட மாகாண சபை அமர்வுகளில், கலந்து கொள்ள...
சைக்கிளில் சென்று வரும் அனந்தி சசிதரனுக்கும், ஒரு கார் கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தி அக்காவிற்க்கு நாங்கள் ஒரு ஸ்போட்ஸ் மாடல் BMW அனுப்புவோம்....

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை விட.. மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருந்தால்.. இதுவும் நடக்கும்.. இன்னும் நடக்கும்.

 

இந்திய - இலங்கை ஒப்பந்தமே ஏமாற்று நாடகம்..! அதன் காட்சிகள் 1987 இல் இருந்து இன்று வரை தொடருது. எங்க தலைவிதி.. இதுகளை எல்லாம் செய்தியில படிக்கனுன்னு இருக்குது. :lol::icon_idea:


ரஷ்சியாகாரனும் தான் உக்ரைனில் போராளிகளுக்கு உதவுறான். நமக்கும் தான் ஹிந்திக்காரன் உதவினான்.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுதில்ல..! எங்கட விடுதலை என்பது ஹிந்தியா என்ற அந்த நந்தி குறுக்க நிற்கும் வரை.. நடக்கிறது ரெம்ப சிரமமான ஒன்று தான். ஆனால் காலம் எல்லாத்தையும் மாற்றும். அதுக்கு தமிழகம் இன்னும் விழிப்புணர்வு அடையனும். நாமளும்.. சீமான் நொள்ள.. வை.கோ நொள்ள என்று.. நமக்குத் தெரிந்த.. விசச் செடி.. நாசச் செடி.. வியாக்கியானங்கள் எழுதி.. உள்ளதையும் கெடுக்காமல் இருப்பது மிக அவசியம்..!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி கைதடி சந்தி வரைக்கும் காரில் வந்து - கடைசி 1 கிமிதான் சைக்கிள்ள போறவ

தனியாரிட்ட "போராட்டத்துக்கு" என்று லவட்டிய லான்சர் காரில் கிட்டுவும், பேர்ஜோவில் அடல் அன்ரியும் பயணித்தது போலதான் இதுவும்.

முதலமைச்சர் அமைச்சர்கள் தமது கடமைகளை ஆற்ற அரச வாகனங்கள் வழங்கப்படுவது உலக நடைமுறை. பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் மக்கள் வரிப்பணத்தில் வாகனங்களை பயன்படுத்துவது உலகில் இயல்பானது. அது அவர்களின் உரிமையும் கூட. அதில் எவரும் இங்கே தவறு காணவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வாகனங்களை பயன்படுத்தியதும் தவறானதல்ல. அவை போராட்ட தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டவை. ஆனால் அதை போட்டோ எடுத்து தாம் பிச்சை போடுவது போல் காட்டமுனைந்த விடயம் ஆளுநர் சந்திரசிறியினதும் ஶ்ரீலங்கா அரசினதும் கேவலமான பிரச்சாரம் என்பதே இந்த செய்தி சொல்லும் பிரதான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் அமைச்சர்கள் தமது கடமைகளை ஆற்ற அரச வாகனங்கள் வழங்கப்படுவது உலக நடைமுறை. பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் மக்கள் வரிப்பணத்தில் வாகனங்களை பயன்படுத்துவது உலகில் இயல்பானது. அது அவர்களின் உரிமையும் கூட. அதில் எவரும் இங்கே தவறு காணவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வாகனங்களை பயன்படுத்தியதும் தவறானதல்ல. அவை போராட்ட தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டவை. ஆனால் அதை போட்டோ எடுத்து தாம் பிச்சை போடுவது போல் காட்டமுனைந்த விடயம் ஆளுநர் சந்திரசிறியினதும் ஶ்ரீலங்கா அரசினதும் கேவலமான பிரச்சாரம் என்பதே இந்த செய்தி சொல்லும் பிரதான விடயம்.

பத்து பச்சை குத்தனும்.

அனந்தி கைதடி சந்தி வரைக்கும் காரில் வந்து - கடைசி 1 கிமிதான் சைக்கிள்ள போறவ

தனியாரிட்ட "போராட்டத்துக்கு" என்று லவட்டிய லான்சர் காரில் கிட்டுவும், பேர்ஜோவில் அடல் அன்ரியும் பயணித்தது போலதான் இதுவும்.

 

அப்பிடி எண்டால்  இத்தினை வருசமாய் 

  சித்தார்த்தன் ,  மாவை ,  சம்பந்தர் ,  எண்டு எல்லா டாடுகளும் சொந்தமாய் கஸ்ரப்பட்டு உழைச்ச காசிலை தான் வாகனம் ஓட்டுகினம்   ஆனந்தி அக்கா  ஆட்டையை போட்ட காசிலை  ஓட்டுறா... !! 

 

இதுக்கு ஒரு மாங்கா  பச்சை வேறை போட்டு இருக்குது... 

 

நல்லா வருவியள்... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.