Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாயில் தனியார் காணியில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்!

Featured Replies

 
kokkilai%2069859845216.jpg
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை, மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் நேற்று புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் இதுவரை வேலியும் அமைக்கப்படவில்லை.
 
இதுகுறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அசமந்தம் காட்டிவருகிறது என்றும் மக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே வைத்தியசாலைக் காணியையும் தனியார் ஒருவரது காணியையும் அபகரித்து அதில் விகாரை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தனியார் ஒருவர், தனது காணியை விடுவிக்கக் கோரி நீதிமன்றில் வழக்குத் தெடுத்திருந்தார். அந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண உறுப்பினர் து. ரவிகரனின் கவனத்துக்கு தாம் கொண்டுவந்துள்ளனர் என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். -
 
 
 

 

  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வெளிநாடுகளுக்கு ஓடிவந்து செற்றிலான தமிழர்களிடம் கேட்டால்..

 

1. விகாரை அமைப்பதால்.. தமிழர்களுக்கு கூலித்தொழில் கிடைக்கிறது.

 

2. விகாரை அமைப்பதால்.. பஞ்சம் பிழைக்க.. ஊதுபத்தி வியாபாரம் பெருகும்.

 

3. விகாரை அமைப்பதால்..பஞ்சம் பிழைக்க... பூ வியாபாரம் பெருகும்.

 

4. விகாரை அமைப்பதால்.. தமிழர்கள் பிச்சை எடுக்க இடம் கிடைக்கும்..!

 

5. விகாரை அமைப்பதால்.. தமிழ் குழந்தைகளுக்கு ஓசியில் ஊட்டச்சத்தான.. கிரி பத் கிடைக்கும்.

 

இதைச் சொல்லுறவைட பிள்ளைகள்.. சோபாவில் இருந்து.. பி எஸ் 4 விளையாடிக்கிட்டு இருக்குங்க..!!

 

இதுக்கு பெயர் என்ன தெரியுமோ.. தாயக மக்கள் மீதான அக்கறை......!!!!! :):rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் தாயக மக்களுக்கு பரிநிர்வாணம் கிடைக்கும்....

அப்பாடா தமிழருக்கு இப்படியாவது நிம்மதியான சாப்பாடும் வாழ்வும் கிடைச்சுதே என்று எல்லாம் வல்ல புத்த பெருமானை வேண்டி..வழிபடுவோம்.......புத்தரே அமைதி மார்க்கமானவர்....முக்காவாசி ஆசியநாடுகலுமே புத்தரை வழிபடுவன... :)

 

ஏதோ தமிழீழம் தான் வேணும் என்றவையிண்ட பிள்ளையால் P-S 4 விளையாடாமல் வெளிநாடுகளில் போராடுறது மாதிரி சிலபேர் பில்ட் அப் எல்லாம் கொடுக்கினம்.....

 

எல்லாம் அந்த புத்தனுக்கே வெளிச்சம்....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் அதில் வந்திருந்து அட்சய பாத்திரத்தை நீட்டுவார்.. புலம்பெயர் தமிழர்களும் கூட போய் அள்ளிக்கிட்டு வாங்க. கடனட்டைக்கு காசு அடைக்கலாம்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தமிழருக்கு இப்படியாவது நிம்மதியான சாப்பாடும் வாழ்வும் கிடைச்சுதே என்று எல்லாம் வல்ல புத்த பெருமானை வேண்டி..வழிபடுவோம்.......புத்தரே அமைதி மார்க்கமானவர்....முக்காவாசி ஆசியநாடுகலுமே புத்தரை வழிபடுவன... :)

 

ஏதோ தமிழீழம் தான் வேணும் என்றவையிண்ட பிள்ளையால் P-S 4 விளையாடாமல் வெளிநாடுகளில் போராடுறது மாதிரி சிலபேர் பில்ட் அப் எல்லாம் கொடுக்கினம்.....

 

எல்லாம் அந்த புத்தனுக்கே வெளிச்சம்....

 

 

எம்மில்   சிலரை வெறுப்பேற்றுவதற்காக

இந்தளவுக்கு நீங்கள் உங்களை  தரம் இறக்காதீர்கள்........ :(  :(  :( 

எம்மில்   சிலரை வெறுப்பேற்றுவதற்காக

இந்தளவுக்கு நீங்கள் உங்களை  தரம் இறக்காதீர்கள்........ :(  :(  :( 

 

பேசாமல் யாழ் கருத்து களம் என்பதை தனக்கு பிடிக்காதவர்களை வெறுப்பேற்றும் களம் என்று மாற்றுமாறு  நிர்வாகத்தினரை கேட்டு பாருங்கள்.

Edited by tulpen

.முக்காவாசி ஆசியநாடுகலுமே புத்தரை வழிபடுவன... :)

 

 

என்ன ஒரு உலக அறிவு அண்ணை   உங்களுக்கு....??? 

 

புத்தமத மக்களின் சனத்தொகை உலக அளவிலையே வெறும் 36 கோடி பேர்தான் அண்ணை....!!     ஆனால் இந்துக்கள்  90 கோடி பேர்...!!  

 

நாடுகள் வளியில் பார்த்தால் முக்காலவாசி  ஆசிய நாடுகள் பின்பற்றுவது இஸ்லாத்தை... !!  

 

ஒருவேளை  மாற்றுக்கருத்தாளர் எண்டாலே  மூண்டு கால் கதை தானோ....?? 

 

 

அப்பாடா தமிழருக்கு இப்படியாவது நிம்மதியான சாப்பாடும் வாழ்வும் கிடைச்சுதே என்று எல்லாம் வல்ல புத்த பெருமானை வேண்டி..வழிபடுவோம்.......புத்தரே அமைதி மார்க்கமானவர்....முக்காவாசி ஆசியநாடுகலுமே புத்தரை வழிபடுவன... :)

 

ஏதோ தமிழீழம் தான் வேணும் என்றவையிண்ட பிள்ளையால் P-S 4 விளையாடாமல் வெளிநாடுகளில் போராடுறது மாதிரி சிலபேர் பில்ட் அப் எல்லாம் கொடுக்கினம்.....

 

எல்லாம் அந்த புத்தனுக்கே வெளிச்சம்....

உண்மைதான் நான்தான் .சொத்து சேர்த்ததும் பிள்ளைகளை தனியார் பாடசாலைகளுக்கு அனுப்பியதும் விடுமுறை என்று சுற்றியடித்ததும் பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்ததும் விட்டு ,

தாங்களும் பிள்ளைகளும் நாள்முழுக்க நாட்டை நினைத்து பட்டினி கிடப்பது போல கதை .

உண்மைதான் நான்தான் .சொத்து சேர்த்ததும் பிள்ளைகளை தனியார் பாடசாலைகளுக்கு அனுப்பியதும் விடுமுறை என்று சுற்றியடித்ததும் பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்ததும் விட்டு ,

தாங்களும் பிள்ளைகளும் நாள்முழுக்க நாட்டை நினைத்து பட்டினி கிடப்பது போல கதை .

 

உதாரணமாய் சொன்னால் நீங்கள்  இந்தியாவிலை இருந்து போராடுகிறம் எண்டு தண்ணிப்பாட்டிகளிலை கலந்து கொண்டு  கூத்தடிச்சது போல தானே...?? 

 

கனடாவிலை  வீரமக்கள் தினம் எண்டு கூடி  சாப்பிட்டு புலியை பற்றி புறணிகதைச்சு கொண்டு கலைஞ்சு போவீங்களே  அதை போல...  

 

இன்னும்....?? 

Edited by தயா

தயா சொல்லுவதை பார்த்தால் புலிகளின் ஆதரவாளர்கள் எல்லாரும் வெளிநாடுகளின் ஒவ்வொருநாளும் விரதம் இருந்து ஜபம் செய்து ஒரு தவ வாழ்வை மேற்கொண்டு போராடுவது போலுள்ளது.......

 

(நான் ஆசியநாடு என்றது இந்தியாவிலிருந்து கிழக்காக....எனக்கு தெரியாது சைனாவில் உள்ள எல்லாரும் முஸ்லீம் என்று...மன்னிக்கவும்..எனது அறியாமையை எண்ணி வெட்கப்படுகிறேன்)

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

வளவுக்குள்ள நிக்கிற அரச மரத்தை புடுங்கிப்போட்டு,வேப்பமரத்தை நடவேணும்.

உதாரணமாய் சொன்னால் நீங்கள்  இந்தியாவிலை இருந்து போராடுகிறம் எண்டு தண்ணிப்பாட்டிகளிலை கலந்து கொண்டு  கூத்தடிச்சது போல தானே...?? 

 

கனடாவிலை  வீரமக்கள் தினம் எண்டு கூடி  சாப்பிட்டு புலியை பற்றி புறணிகதைச்சு கொண்டு கலைஞ்சு போவீங்களே  அதை போல...  

 

இன்னும்....??

தண்ணி அடிக்க எந்த இயக்கத்திலும் இடம் இருந்ததாக எனக்கு தெரியாது .தண்ணி அடிக்கிற நானே அங்கு இருந்த நாட்களில் அடிக்கவில்லைஆனால் புலிகள் மட்டும் விதிவிலக்கு கொடுத்தார்கள் தேசத்தின் குரலுக்கு .

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

"TNA ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம்" D. சித்தார்த்தன்:-
ஒன்று அண்ணன் சேனாதிராஜா அவர்கள் - சேனாதியண்ணன் மிகச் சிறிய பராயத்திலிருந்து தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றிலே, தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலே தன்னைப் பதித்துக் கொண்டவர் - ஜனநாயக போராட்டத்தில் மாத்திரமல்ல, பலாத்கார அல்லது வன்முறைப் போராட்டத்திலும் நேரடியாக இல்லாவிட்டாலும் - அப்போது வன்முறைப் போராட்டத்திலே தலைமை தாங்கிய எங்களுடைய இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா போன்றவர்களுடன் மாத்திரமல்ல, அவர்களைப் போலவே செயல் துடிப்புமிக்கவரும், எனது நண்பரும், தியாகியுமான சிவகுமாரன் போன்றவர்களுடன்கூட மிக நெருக்கமாக அன்பாக பழகி வந்தவர். அவர்களுடன் பழகியதால் மாத்திரமல்ல, அவருக்கு இருந்த வேறு ஈடுபாடுகள் காரணமாக ஏறத்தாழ நான்கு வருடங்கள் சிறைச்சாலைகளிலே சித்திரவதைக்குட்பட்டு வாடியவர்.

சிறைச்சாலையிலே அவரை அடித்து நொறுக்கி அங்கிருந்த மேலதிகாரியின் அறையிலே கொண்டுவந்து போட்டபோது, அங்கேயிருந்த குண்டூசியால் அங்கிருந்த மேசையிலேயே ஈழம் வாழ்க என்று எழுதி மீண்டும் அடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்று போடப்பட்டவர்.

தம்பி பிரபாகரன் - ஆரம்பத்திலே தமிழரசுக் கட்சியினுடைய செயற்பாடுகளிலே அவர் இல்லாது விட்டாலும்கூட - இளமையாக இருந்த காலத்திலேயே இன விடுதலைக்காக வன்முறை அரசியலில் ஈடுபடத் துவங்கிவிட்டார். அவருடனும் எங்களுடைய தலைவர் உமாமகேஸ்வரன், பத்மநாபா போன்றவர்கள் தமிழரசுக் கட்சி இளைஞர் பேரவை விடயங்களிலே தொடர்ந்து ஈடுபட்டு வந்தபடியால் அவர்களுடனும் மிக நெருக்கமாக பழகியவர் சேனாதியண்ணன் அவர்கள். அவர், இன்று தலைவராக வந்திருப்பதானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கும், இன்னும் வலுவாக ஒற்றுமைப் படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி.

அடுத்து நடைபெற்றிருக்கின்ற ஒரு மிக முக்கியமான சம்பவம், சம்பந்தன் அண்ணன் அவர்கள் இன்றுவரை ஐம்பதுக்கு ஐம்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வழிநடத்தி வந்தவர், அவர் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலே இருந்து விடுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக தலைமையேற்று வழிநடாத்துகின்ற பொறுப்பை ஏற்றிருப்பது மிகமிக முக்கியமான சிறந்த ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.

அது மாத்திரமல்ல, சம்பந்தண்ணரைப் பற்றி நான் ஒரேயொரு விடயத்தை கூறி, அவருடைய சிறப்பை ஏனையோருக்கும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.  அண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது அந்நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் அந்த பேச்சுவார்த்தையிலே குறிப்பிட்ட ஒரு விடயத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இந்த பிராந்தியத்திலே - இந்த பிராந்தியம் என்று அவர் கூறியது, தெற்காசியப் பிராந்தியத்தை - மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள் என விளித்துக் கூறினார். இது வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போன்றது. இதைவிட நாங்கள் எதுவுமே சம்பந்தன் அண்ணரைப் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை.

அந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம். மக்களும் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/111453/Default.aspx

"தல' இப்படி சொல்லும் பொழுது நாங்கள வால்கள் துள்ளி குதிச்சு கருத்து எழுதி அடிபடுவதில் பிரயோசனமில்லை.....சித்தருக்கு பிரபா தம்பி என்றால் சித்தரும் ,பிரபாவும் எங்களுக்கு அண்ணன்மார்டாப்பா....:D

Edited by putthan

வளவுக்குள்ள நிக்கிற அரச மரத்தை புடுங்கிப்போட்டு,வேப்பமரத்தை நடவேணும்.

 

அரசும் எங்கள் மரம் தான்...இந்தியாவில் ஆத்தங்கரையில்/எல்லாஇடமும் அரசமரங்களின் கீழ் பிள்ளையார் இருப்பார் என்று எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...

 

அரசும் வேம்பும் மண்ணையும் சுற்றாடலையும் காக்கும் மரங்கள்...ஆகவே புத்தர் கீழிருக்கிறார் என்று அரசமரங்களை வெட்ட மாட்டார்கள்...அது சுற்றுச்சூழலை காப்பாற்றும்.....

 

புத்தர் சிலைக்கு பக்கத்தில் ஒரு பிள்ளையாரை முருகனை..வைரவரை வைப்போம்...

 

(சிங்களவருக்கு முருகன் மேலும் வைரவர் மேலும் பயம்...ஆகவே அந்த சிலைகளை உடைக்க மாட்டார்கள்) :)

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வெளிநாடுகளுக்கு ஓடிவந்து செற்றிலான தமிழர்களிடம் கேட்டால்..

 

1. விகாரை அமைப்பதால்.. தமிழர்களுக்கு கூலித்தொழில் கிடைக்கிறது.

 

2. விகாரை அமைப்பதால்.. பஞ்சம் பிழைக்க.. ஊதுபத்தி வியாபாரம் பெருகும்.

 

3. விகாரை அமைப்பதால்..பஞ்சம் பிழைக்க... பூ வியாபாரம் பெருகும்.

 

4. விகாரை அமைப்பதால்.. தமிழர்கள் பிச்சை எடுக்க இடம் கிடைக்கும்..!

 

5. விகாரை அமைப்பதால்.. தமிழ் குழந்தைகளுக்கு ஓசியில் ஊட்டச்சத்தான.. கிரி பத் கிடைக்கும்.

 

இதைச் சொல்லுறவைட பிள்ளைகள்.. சோபாவில் இருந்து.. பி எஸ் 4 விளையாடிக்கிட்டு இருக்குங்க..!!

 

இதுக்கு பெயர் என்ன தெரியுமோ.. தாயக மக்கள் மீதான அக்கறை......!!!!! :):rolleyes::icon_idea:

 

சிங்களப் பகுதியில், சைவக் கோவில் இருக்கும் போது,

தமிழ்ப் பகுதியில் புத்த கோயில் கட்டுவதில் என்ன தவறு?

என்று கேட்கும், கூட்டமும் இருக்கு.

இது தொடர்பாக வெளிநாடுகளுக்கு ஓடிவந்து செற்றிலான தமிழர்களிடம் கேட்டால்..

 

 

உங்களைப்பற்றி சொல்லுறீங்களோ?  :lol:

 

இதை சொல்லிறவைட பிள்ளைகள் தான் பி எஸ் 4 விளையாடிதுகள் ஆனால் புலிகளின்ட பேரைச்சொல்லி காசு சேர்த்த கூட்டம் பி எம் டபிள்யூவில இப்ப சுத்தி திரியினம் அதுக்கு என்ன பதில்?   :icon_idea:

 

எம்மில்   சிலரை வெறுப்பேற்றுவதற்காக

இந்தளவுக்கு நீங்கள் உங்களை  தரம் இறக்காதீர்கள்........ :(  :(  :( 

 

நாந்தான் சொல்வதில என்ன தவறு? இங்கு சிலர் என்னவோ தாங்கள் தாயகத்தில் இருந்து போராடுவது போல மற்றைய புலம்பெயர் தமிழர்களை ஓடி வந்தவர்கள், அகதி தமிழர்கள் என்று அனைத்து திரிகளிலும் எழுதுவது உங்களுக்கு தரமானதாக தெரிகிறதா? அகதி தமிழனாவது உழைச்சு அந்த நாடு உயர வரி கட்டுறான்..சிலர் படிக்க வந்தன் என்டிட்டு வருசகண‌க்கா வியாக்கியானம் மட்டும் கதைச்சுக்கொண்டு திரியினம்  :wub:

சிங்கள அரசு வீதி அமைத்தால் ஏற்றுக்கொள்வோம் ரெயில் விட்டால் ஏற்றுக்கொள்வோம் மின்சாரம் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம். என்னும் உத்தியோகம் பதவி மானியம் எதுகொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் தமிழை வளர்த்த பௌத்தம் தமிழர் பகுதிக்குள் வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். (ஏற்றுகொள் ஏற்றுக்கொள்ளாதே என்று யார் அழுதார்? இல்லை தடுக்கத்தான் முடியுமா அது வேறு கதை)

பௌத்தம் மிக நல்ல மார்க்கம் அது தமிழர் பகுதிக்குள் வருவது மிக ஆரோக்கியமான விசயம். அதை கொண்டுவருவது பேரினவாதமாக இருந்தாலும் ஒரு நல்ல மார்க்கம் வருவது நல்லதே. எங்கே அடயாளமும் ஆடம்பரமும் சாதியமும் வளர்க்கும் சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத இந்து மதம் அழிந்துவிடுமோ என்ற நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இருந்த சைவத்தை புறந்தள்ளி இந்தியாவின் இந்துத்துவத்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்த கொண்டுவரலாம் என்றால் அதை விட பன்மடங்கு பௌத்தம் வரலாம்.

முப்பது வருட போரக்காலங்களில் கிறிஸ்தவமதம் பதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்திருக்கின்றது. அதே போல் நாளை பௌத்தத்தை தமிழர்கள் தழுவுவார்கள். அதற்கு விகாரைகள் பேருதவியாக இருக்கும். நல்லூரிலும் சரி கதிர்காமத்திலும் சரி தமிழரும் வழிபடுகின்றார்கள் சிங்களவர்களும் வழிபடுகின்றார்கள். அதே போல் மடுமாதவையும் வழிபடுகின்றார்கள். தமிழர்களும் அதே மனப்பான்மைக்கு எதிர்காலத்தில் வருவது ஆரோக்கியமானதே. தமிழ்த்தேசீயத்துக்கும் இந்துமதத்துக்கும் என்ன சம்மந்தம்? தமிழ்த்தேசீயத்தை சிதைப்பதின் முதற்காரணி இந்துமதம். சிலரோ அந்த இந்துமதத்தை வைத்து தேசீய எழுச்சியை கிழப்பப் பார்கின்றார்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் பௌத்த சமண சமயம் சார்ந்தது. பௌத்தமும் சமணமும் தமது படைப்புகளை தமிழ்மொழியிலேயே உருவாக்கினார்கள், கிறீஸ்தவம் கூட பைபிளை தமிழில் தான் கொடுத்தார்கள். அவை எந்த விதத்திலும் மொழிக்கும் அது சார்ந்த தேசீயத்துக்கும் பங்கமானதில்லை. இந்துமதமோ தமிழை நீச பாசை என்று சமஸ்கிருதத்தை நுழைத்து தாய்மொழிக்கு பங்கம் விழைவித்தது. சாதிகள் ஏற்றதாள்வுகள் அனைத்தையும் விதைத்து சமூகத்தையும் இனத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கியது. தமிழ்த்தேசீயத்திற்கு நெருக்கமானது சமண பௌத்த கிருத்துவ மதங்கள். தமிழ்த்தேசீயத்துக்கு விரோதமானது இந்துமதம். தமிழ்த்தேசீயத்தை நேசிப்போம் ! விகாரைகளை வரவேற்போம் !

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மார்க்கமும் (மனித கருத்துக்களின் தொகுப்பு) நல்லவைதான்,ஆனால் அந்த மார்க்கத்தை பின்பற்றும் அல்லது கடப்பிடிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடியாது....பெளத்த மதத்தை பின்பற்றுவதன் மூலம் தமிழன் சாதி ஏற்றத்தாழ்வை மறந்திடுவானா?அல்லது பெளத்த மத்தத்தை பின்பற்றும் சிங்களவ்ர்கள் எல்லாம் நல்லவர்களா ? இன்றும் மேட்டுக்குடி தமிழ் கிறிஸ்தவர்கள் கரையோர கிறிஸ்தவர்களை மணமுடிக்கமாட்டார்கள்....சியா சன்னி முஸ்லிமகள் வால் வெட்டுவரை செல்கின்றார்கள்....இன்றைய காலகட்டத்தில் சைவக்கோவில்கள் தமிழை வளர்க்க உதவுகின்றது.....புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பேசதெரியாவிட்டாலும் தமிழில் தேவாரம் பாடுகின்றார்கள்....

தமிழ்த்தேசீயத்தை நேசிப்போம் ! விகாரைகளை வரவேற்போம் !
வேறு சிலர் சிந்திப்பார்கள் இந்துக் கோவிலை கட்டுவோம் தமிழ்தேசியத்தை வளர்ப்போம் என.... :D
  • கருத்துக்கள உறவுகள்

புத்த தர்மத்தை போதிக்க புத்த கோவில் அவசியமில்லை. நூலகங்களில் போடப்படும் நூல்கள் போதும்.

 

தமிழ் மக்கள் புத்தரையோ.. புத்த தர்மத்தையோ எதிரியாகப் பார்க்கவில்லை. புத்தரின் பின்னாலும்.. புத்த கோவில்களின் பின்னாலும் ஒளிந்திருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதமும் அதன் ஆக்கிரமிப்பு.. இனச் சுத்திகரிப்பு கொள்கைகளுமே தான் எதிரிகளாகப் பார்க்கப்படுகின்றன.

 

சிலர் இதனைக் கூட புரிந்து கொள்ளாமல் தான்.. இத்தனை காலம்.. தமிழ் தேசியம்.. வர்க்கம்.. விகிதம்.. இயம்.. ஈயம்... அதுஇதென்னு.. கிழி கிழின்னு கிழிக்கினமா..??!

 

சமீபத்திய நூற்றாண்டுகளில்.. ஐரோப்பிய படையெடுப்புக்கள்.. மற்றும் சிங்கள படையெடுப்புக்களில் இருந்து.. தமிழ் காத்த சைவம்.. தமிழர்களோடு இருப்பது ஒன்றும் நீசம் கிடையாது. புத்த தர்மம் படிக்கலாம்.. அது பிரச்சனை இல்லை. அதன் பின்னால் ஆக்கிரமிப்புக் கொள்கைகள்.. இனவழிப்புக் கொள்கைகள்.. பேரினவாத நிலைப்பாடுகள் கொண்டு நகர்த்தப்படுவதுதான் ஆபத்தானது. விலக்கப்பட வேண்டியது..!!!

 

சிலருக்கு சிலது என்னதான் சொன்னாலும் புரியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கொக்கிளாய் ஆதார வைத்தியசாலையிலும் தனியார் காணியிலும் புதிதாக புத்த விகாரை

 

5150_content_download.jpg

 

முல்லைத்தீவில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

இந்த  இடத்தில் நேற்று  முன்தினம்  புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக      வைக்கப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உட் பகுதியில்  விகாரை அமைக்க ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப் பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைத்துள்ள போதும் இதுவரை வேலி அமைக்கப்படவில்லை. இதுகுறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அசமந்தம் காட்டிவருகிறது என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.  

 

ஏற்கனவே வைத்தியசாலைக் காணியையும் தனியார் ஒருவரது காணியையும் அபகரித்து அதில் விகாரை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தனியார் ஒருவர், தனது காணியை விடுவிக்கக் கோரி நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில்  அந்த இடத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அப் பகுதி மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

 

http://thinakkural.lk/article.php?local/jmsodtbko83897b957d4752312944ulmhrc4e92a822cc38703a3bcc3qcmdr#sthash.MWmEP1Me.dpuf

தயா சொல்லுவதை பார்த்தால் புலிகளின் ஆதரவாளர்கள் எல்லாரும் வெளிநாடுகளின் ஒவ்வொருநாளும் விரதம் இருந்து ஜபம் செய்து ஒரு தவ வாழ்வை மேற்கொண்டு போராடுவது போலுள்ளது.......

 

(நான் ஆசியநாடு என்றது இந்தியாவிலிருந்து கிழக்காக....எனக்கு தெரியாது சைனாவில் உள்ள எல்லாரும் முஸ்லீம் என்று...மன்னிக்கவும்..எனது அறியாமையை எண்ணி வெட்கப்படுகிறேன்)

இங்கினை நீங்கள் குடுத்த அளப்பரை பாத்து நானும் நீங்கள் என்னவோ உலக அறிவை கொஞ்சம் எண்டாலும் வைச்சு இருப்பியள் எண்டு நினைச்சன்...

ஆசிய நாடுகளுக்கும்  கிழக்காசிய நாடுகளுக்கும் நிறைய பிரதேச வித்தியாசம் இருக்கண்ணை... அது இருக்கட்டும்...

சீனாவிலை இருக்கும் சனம் பௌத்தம் எண்டா இவ்வளவு காலமும் நம்பி கொண்டு இருக்கிறீர்கள்... ?? சீனாவின் பெரிய மதங்கள் சோண், தாவோயிசம் மற்றும் அவர்களின் பாரம்பரிய மதங்களாகும் கிட்டத்தட்ட 60 வீதமான மக்களின் மதமும் அதுவே.... சீனாவின் வெறும் 16% மான மக்கள் மட்டுமே பௌத்த மதத்தை தழுவியவர்கள் அது கிட்டத்தட்ட 20 கோடி பேர்...

ஆனால் உலகின் பெரிய இஸ்லாமிய நாடு இந்தோநேசியா கிழக்காசியாவில் தான் இருக்கிறது அங்கு 21 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள்... !!கிழக்காசிய கூட்டமைப்பில் இருக்கும் இந்தியாவின் முஸ்லீம்கள் 17 கோடிபேர் ... இப்படியே மலேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் எண்டு எல்லாம் கணக்கு போட்டியள் எண்டால் ஒரு கணக்குக்கு வரமுடியும்...

எதையாவது சொல்லுறதுக்கும் முன்னம் கொஞ்ச உலக அறிவை பெருக்க முயலுங்கோ அண்ணை... !!

Edited by நியானி

இதில் ஏதும் பிழை இருப்பதாக தெரிவில்லை. நுணுக்கமாக பார்க்கப்போனால் புத்தரின் தாய்மொழி பிறக்கிருதம், இது ஆதிதமிழை அடிப்படியாக கொண்ட கிரியோல மொழி. யாரும் முடிந்தால், ப்ரித்தை தமிழில் மொழியாக்கம் செய்தால் நல்லம்... போகிரபோக்கை பார்த்தால் இதுதான் நடக்கும்போல இருக்குதுங்க்கோ.

எதிர்ப்புத்தெரிவிக்கிற ஹிண்டடூஸ்க்கு ஒரு விண்ணானம்.. அட சீ.. விண்ணப்பம், கண்ணாடி ஊட்டில இரிந்திகிட்டு கல்லெறியகூடாது பாருங்கோ..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

கோல்பேசில.. பனங்காய் மரம் நட முடியும் என்றால்.. கொக்கிளாயில் ஏன் புத்த விகாரை கட்டப்படாது.. என்ற பெரிய நியாயத்தை எடுத்து வைச்சிருக்கிறார் அண்ணன்.. பனங்காய். வாஸ்வதம் தான். ஆனால் உந்த புத்த விகாரையில்.. அண்ணன் பனங்காய் தான் தினமும் பிரித் ஓத வேண்டி இருக்கும்..! இல்ல.. நாலைஞ்சு பெளத்த சிங்களவர்களை சுற்றிவர அண்ணன் குடிமயர்த்த வேண்டும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் பேரீச்சைமரங்களை நடலாம் என்றால் ஏன் கொக்கிளாயில் அரசமரத்தை நடமுடியாது.?? :rolleyes: குறைந்தபட்சம் இது ஒரு உள்ளூர்மரம்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.