Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்

Featured Replies

rajini%20thiranagama%2055.jpg

1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.
 
வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார்.
 
1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த நூலை எழுதியமைக்காகவே இவர் படுகொலை செய்யப்பட்டார் என்றும் நம்பப்படுகின்றது. 'மனித உரிமைகளுக்கான பல்கலை ஆசிரியர்கள் - யாழ்ப்பாணம்' என்ற மனித உரிமைச் செயற்பாட்டகத்தின் ஸ்தாபக உறுப்பினர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் சனிக்கிழமை 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நினைவுக் கூட்டம் நடைபெறும். அன்று மாலை 2 மணிக்கு திருநெல்வேலிச் சந்தியில் இருந்து ஆரியகுளம் சந்தி வழியாக வீரசிங்கம் மண்டபம் வரை அமைதி, ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி, ரஜினி திரணகம நினைவாக ஊர்வலம் ஒன்று இடம்பெறும். அடுத்த நாள் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு "நீதியான ஜனநாயக சமூகத்தை நோக்கி...." என்ற தலைப்பில் யாழ். பல்கலைகழகததின் கைலாசபதி அரங்கில் ஒரு கருத்தரங்கும் நடைபெறும்.
 
  • Replies 118
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி சொல்லுறியள்....சுவிசில் இருந்து ஒரு அடி பொடி...(எழுத்தாளன் ,பேச்சாளன் ...என்ற நினைப்பில் வாழ்பவர்) எழுதுகிறார்...மனிதன் உடனே கொல்வானாம்....தெய்வம் நின்று கொல்லுமாம்...அதாவது புலிகளி கதையை முடித்தது ....இந்த பெண்மணியின் ..இறப்பிற்கு சரியான தண்டனையாம்....புலி மறைந்த பின் ..புழுகு ..புனுகு கூட்டத்தினரின் தொல்லை பொறுக்க முடியலையப்பா

ரஜனி திரணகம கொல்லப்பட வேண்டியவரா? 
இப்படி சிறுகச்சிறுக செய்த பல பிழையான விடயங்கள் தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. நியூட்டனின் மூன்றாம் விதி. 
  • கருத்துக்கள உறவுகள்

50 வருடமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நியூட்டனின் 3ம் விதி வேலை செய்யவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி திரணகம கொல்லப்பட வேண்டியவரா? 
இப்படி சிறுகச்சிறுக செய்த பல பிழையான விடயங்கள் தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. நியூட்டனின் மூன்றாம் விதி. 

இவருக்கு இதுக்குமட்டும் 3ம் விதி வேலைசெய்யவேண்டும் போல....மற்றவை எல்லாம் அப்புறம் போல ...

50 வருடமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நியூட்டனின் 3ம் விதி வேலை செய்யவில்லையே?

3ம் விதி என்பது போட்டு தள்ளுறது மட்டுமல்ல. சிங்கள பேரினவாதம் 50 வருசமா செய்த கொலைகளுக்கு எதிராக‌ தமிழர்களும் சர்வதேசமும் செயற்படுவதும் 3ம் விதி தான். ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர் தாக்கம் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் தாம், செய்த கொலைகளையும்..... விடுதலைப் புலிகள் மேல் போட்டு, தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்த பனைகள் எழுதியவர்களில்.. இடம்பெற்ற குழுவினரில்.. சிலர் கொழும்பை மையமாக வைத்துச் செயற்பட்டவர்கள். சிலர் மட்டுமே வடக்கை மையமாகக் கொண்டிருந்தனர்.

முறிந்த பனைகள்.. வெறுமனவே இயக்கங்களின் மனித உரிமை மீறல்களை மட்டும் சொல்லவில்லை. இந்தியப் படைகளின் மோசமான மனித உரிமை மீறல்களையும் எடுத்து வைத்தன. அதன் பின்னணியில்.. ரோவின் தூண்டுதலில்.. இந்தியக் கைக்கூலிகளாக செயற்பட்ட ஈபி ஆர் எல் எவ் ஒட்டுக்குழுவினரால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை சாட்சியங்களோடு.. அதே அமைப்பில் இருந்து பின் ஈபிடிபியில் இயங்கிய தினமுரசு அற்புதன் எழுதி இருந்தார். அதன்பின் அவர் டக்கிளஸ் தேவானந்த குழுவினரால் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

சிலர் முள்ளிவாய்க்கால்.. பாவத்தின் வி(பு)தைகுழி என்று இப்போது கருத்துச் சொல்லி திரிகிறார்கள். 1989 ஜே வி பி கிளர்ச்சியின் பின் தென்பகுதியில் முளைத்த புதைகுழிகளும்.. இவர்களைப் பொறுத்த வரை பாவத்தின் வி(பு)தைகுழிகள்.

போர் எங்கு நிகழ்ந்தாலும்.. அதற்கு பாவம் பரிகாரம் என்று போதிப்பவர்கள்.. தோற்றவர்கள் மீது பழிபோடுபவர்கள் எம்மினத்தில் அதிகம். இந்த ஈனப்பிறப்புகளில் மனிதம் என்பது மரத்துப்போன ஒன்று. சந்தர்ப்பவாதமானது. இதே பிறப்புகள்.. போர் இலக்கியங்களான மகா பாரதத்தையும்.. ராமாயணத்தையும் தூக்கிப் பிடிப்பது தான் ஏனென்று புரியவில்லை. அதற்கு மேடை போட்டு பட்டிமன்றங்களும்.. வழக்காடு மன்றங்களும் வைத்துப் பிழைக்கின்றன..! அங்கு மனித அழிவுகள் இடம்பெற்றதை ரசிக்கின்றன. அதன் பெறுதியே இதுவாக இருக்க முடியும்.

ஆனால்.. முள்ளிவாய்க்காலும் சரி.. செம்மணியும் சரி.. தென்னிலங்கை புதைகுழிகளும் சரி.. நிஜத்தில் இலங்கைத் தீவில்.. கொடிய சிங்கள அரச பயங்கரவாதமே ஆட்சி செய்கிறது.. என்ற உண்மையையே தசாப்தங்களாக சொல்லி வருகின்றது. அது மனித உரிமை மீறல்கள் என்பதற்கும் அப்பால்.. மனித இன அழிப்பை தொடர்ந்து உலகின் உருப்புமறைப்பு கொள்கைகளுக்குள் இருந்து தண்டனைக்கு வெளியில் இருந்து..செய்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்கிறது.

அதற்கு முடிவெழுத வேண்டிய நேரத்தில்.. முள்ளிவாய்க்கால் பாவத்தின் வி(பு)தைகுழி என்று பேசும்.. அநியாயப்படுவாரின்.. அறிவுச் சிறுமை என்பது அவர்களின் பேதமையின் வெளிப்பாடு. மனிதம் தொலைத்த நிலையின் வெளிப்பாடு.

முறிந்த பனைகள்.. இந்திய அராஜகம் குறித்துப் பேசிய அதேவேளை.. அதே காலத்தில் தென்னிலங்கையில் நிகழ்ந்தேறிய அராஜகங்கள் குறித்து.. மனித உரிமை மீறல்கள் குறித்து மெளனம் காத்தது. யாழ்ப்பாணத்தில் முறிந்த பனைகள் பற்றி பேசிய மனிதம்.. அம்பாந்தோட்டையில் உள்ள பனைகள் முறிந்து விழுந்தது பற்றி பேசவில்லை.  இவர்களின்.. "நீதியான ஜனநாயகம்" என்ற வேசத்துக்கு அது ஒரு சான்றும் கூட.

ஏதோ.. இந்திய அராஜகம் பற்றி பேசனுன்னா..இந்திய அராஜகம் + ஒட்டுக்குழு அராஜகம் பற்றிப் பேசலாம்.. கூடவே புலிகள்.. பற்றியும் பேசனுன்னு சட்டம் எழுதி வைப்பவர்கள்.. சிங்கள அராஜகம் பற்றி எழுதுவதில்லை. காரணம்.. பதவிகள்.. அங்கு காவல் காக்கின்றன. காத்தன..!!!!!!! இது தான் நம்மவரின் மனிதாபிமான அக்கறையின் உண்மை முகம். "நீதியான ஜனநாயகம்" என்ற இவர்களின் உச்சரிப்பின் பின்புலம்..!!!!! 

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளக்கங்கள்....நெடுக்கர்.ஜூட்,,தமிழ் ஶ்ரீ........இந்தப் புற்றுப் பாம்புகL..இப்படியான நேரத்தில்தான்  தோலுரிக்கிறவை...

Edited by alvayan

அந்த பயம் தான் தேவை .

  • கருத்துக்கள உறவுகள்

3ம் விதி என்பது போட்டு தள்ளுறது மட்டுமல்ல. சிங்கள பேரினவாதம் 50 வருசமா செய்த கொலைகளுக்கு எதிராக‌ தமிழர்களும் சர்வதேசமும் செயற்படுவதும் 3ம் விதி தான். ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர் தாக்கம் இருக்கும்

மேற்கு நாடுகள் 1000 வருடங்களாக செய்யும் கொலைகள், நாடு பிடிப்புக்கள் போன்றவற்றுக்கு நியூட்டனின் 3ம் விதி என்ன செய்தது?
 
நியூட்டன் இவைகளுக்கு தான் 3ம் விதியை வகுத்தார் என்பதை உங்கள் மூலம் தான் அறிந்தேன். பச்சை வேறு.  :icon_mrgreen:

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

அற்புதன் எழுதினால் அது சரியாகிவிடுமா?

ஆயிரம் பேர்கள் ஆயிரம் எழுதினாலும் சொன்னாலும் நடந்த  பல விடயங்கள் விடயங்கள் அனைவரும் அறிந்ததுதான் .

எந்த இயக்கமும் தான் செய்த கொலையை  உரிமை கோரமுடியாமல் போனால்அதில்  இருந்து  தெரியவேண்டும் தாங்கள் செய்தது பிழை என்று அவர்களுக்கே தெரியும் என்று

.அந்த பட்டியலில் பல பெயர்கள் இருக்கு .

கேவலம் கேட்ட இனம் அடிமையாய் வாழ்வதில் வியப்பில்லை .

அற்புதன் எழுதினால் அது சரியாகிவிடுமா?

அற்புதன் எழுதியது ஓரளவுக்கு சரியாக இருக்கலாம். அற்புதன் முதலில் ஈபியில் இருந்து பின் ஈபிடிக்கு சென்றவர். ஈபிடிபியின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய தலைவராகவும் இருந்தவர். டக்ளஸால் போட்டுத் தள்ளும் வரைக்கும் ஈபிடிபியின் மூத்த உறுப்பினராகவும், யாழ்ப்பாணத்து எம் பியுமாக இருந்தவர்.

ராஜினியை கொன்றது பற்றி அதனை ஏவிய ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிந்து இருக்காது.  ராஜினி கொல்லப்படும் காலத்தில் அன்று யாழில் கோலோச்சிக் கொண்டு இருந்தது புலிகள் அல்ல. மண்டையன் குழுவும், பதமநாபாவின் கொலைக் குழுவான ஈபி யும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி திரணகம நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இந்த வார இறுதியில்

மாவீரருக்கு அஞ்சலி  செலுத்தமுடியாத பூமியில்

இவருக்கு அஞ்சலி  செலுத்தமுடிகிறது  என்றால்

இதன் நோக்கமும்

அனுமதிப்பும் புரிந்து கொள்ளக்கூடியதே........ :( 

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும் 

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும் 

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

ராஜினியை கொன்றது பற்றி அதனை ஏவிய ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிந்து இருக்காது.  ராஜினி கொல்லப்படும் காலத்தில் அன்று யாழில் கோலோச்சிக் கொண்டு இருந்தது புலிகள் அல்ல. மண்டையன் குழுவும், பதமநாபாவின் கொலைக் குழுவான ஈபி யும் தான்.

பத்மநாபா விட்டு செண்ற சுரேஸ் பிரேமசந்திரனின் தலைமையிலான மண்டையன் குழு எண்டு வரவேண்டும் நிழலி...

தினமுரசு பத்திரிகையில் “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” அற்புதன் எழுதிய அரசியல் தொடர் 176 (ஏப்பிரல் 12 – 18.1998 )

ரஜனி திரணகம

http://www.padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

Edited by சிறி

உந்த தொடர் வாசித்துதான் நான் எமது போராட்டத்தில் நடந்ததை அறிய வேண்டிய தேவை எதுவும் இல்லை .

போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்தர்களுக்கு புல்லரிக்க எழுதிய தொடர் அது .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் தனக்கு விருப்பமான ஆட்கள் சொல்வதை தான் நம்புவார். அதாவது தமிழ் மக்களால் கைவிடப்பட்ட ஆட்கள் எழுதினால் தான் நம்புவார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

இதுவரை இப்படி ஒரு கண்கண்ட சாட்சி இருக்கிறார் என்றோ இப்படி ஒரு பதிவு இருப்பதாகவோ நான் அறியவில்லை.

லங்கா வெப் முதல் தேனீ வரை தவறாமல் படித்தும் காணாத இந்த பதிவு - அருண் நீங்களாவது இதை தர முடியுமா?

  • அந்த வைத்தியரின் பெயர் என்ன?
  • அவருக்கு சுட்டவரை முன்னரே தெரியுமா?
  • சுட்டவர் விடுதலை புலிகளில் இருந்ததை அறிந்திருந்தாரா?

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும் 

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும் 

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

சுட்ட அன்று யாழ் பல்கலைக்கழக நூல்நிலைய வாயிலில் கையால் எழுதி நாம் இதை செய்யவில்லை. தயவு செய்து எம்மை நம்புங்கள். புத்தகம் எழுதுவதற்காக நாம் இப்படி செய்ய மாட்டோம் என்று ஒட்டி இருந்த்தது. காலையில் நான் அதை பார்த்தேன். மதியம் அந்த பிரசுரத்தை காணவில்லை.

இந்த கொலையும் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலை போல செய்யப்பட்டுள்ளது.

அருண்,

நீங்கள் பிளாட்டில் இருந்தீர்கள். சித்தார்த்தன் இன்று அதன் தலைவர். அவரின் தந்தையான தர்மலிங்கம் அவர்களை யார் கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

உங்களுக்கு இலங்கை சிக்கலில் உள்ள ஆழம் எவ்வளவு தூரம் புரியும் என்பதை இதற்கான பதில் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா லண்டன் கனடா  ஆகிய இடங்களில் பெரும்பாலான காலத்தை களித்து விட்டு பக்கத்தில் இருந்து கண்டதாக சொல்வதில்  அர்ஜுன் வல்லவர். அதிலும் புலிகளுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு  yes sir சொல்லக்கூடியவர்,

தமிழ் உலகிற்க்கு தேவையான சிலர் இந்த போராடத்தின் போது சரியாகவோ / பிழையாகவோ கொல்லபட்டு விட்டார்கள். ஒட்டு குழுக்கள் / அராசங்கம் 95 % என்றால் புலிகள் 5% ( இந்த விகிதாசாரம் உங்கள் கணிப்பு) ஆனால் இழப்பு தமிழர்களிற்கே....

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இப்படி ஒரு கண்கண்ட சாட்சி இருக்கிறார் என்றோ இப்படி ஒரு பதிவு இருப்பதாகவோ நான் அறியவில்லை.

லங்கா வெப் முதல் தேனீ வரை தவறாமல் படித்தும் காணாத இந்த பதிவு - அருண் நீங்களாவது இதை தர முடியுமா?

  • அந்த வைத்தியரின் பெயர் என்ன?
  • அவருக்கு சுட்டவரை முன்னரே தெரியுமா?
  • சுட்டவர் விடுதலை புலிகளில் இருந்ததை அறிந்திருந்தாரா?

சுட்ட அன்று யாழ் பல்கலைக்கழக நூல்நிலைய வாயிலில் கையால் எழுதி நாம் இதை செய்யவில்லை. தயவு செய்து எம்மை நம்புங்கள். புத்தகம் எழுதுவதற்காக நாம் இப்படி செய்ய மாட்டோம் என்று ஒட்டி இருந்த்தது. காலையில் நான் அதை பார்த்தேன். மதியம் அந்த பிரசுரத்தை காணவில்லை.

இந்த கொலையும் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலை போல செய்யப்பட்டுள்ளது.

அருண்,

நீங்கள் பிளாட்டில் இருந்தீர்கள். சித்தார்த்தன் இன்று அதன் தலைவர். அவரின் தந்தையான தர்மலிங்கம் அவர்களை யார் கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

உங்களுக்கு இலங்கை சிக்கலில் உள்ள ஆழம் எவ்வளவு தூரம் புரியும் என்பதை இதற்கான பதில் காட்டும்.

ஐயா

இந்தப்போராட்டம் என்பது எம் கண்முன்னால் நடந்தது

நாம் ஒவ்வொருவரும்

எம்மால் முடிந்தளவில்

பங்காளிகளாக இருந்த    போராட்டம்.

இதில் கதைகளை நாம் அறிவோம்

அர்யூனைப்பொறுத்தவரை..

பழி  உணர்வை  வைத்துக்கொண்டு

அதனால் போராட்டமே  அழிந்தாலும்  பரவாயில்லை

என்று திரிபவர்.

யாழ் அதை அறியும்......

யாழில் கூட தற்போதைய அவரது நடவடிக்கைகள்

கருத்துக்களத்தில் அரசியல் பகையான ஆட்களின்  செயல்களுக்கு

எதிராக எவர் எழுதினாலும்

அவர்களை  ஆதரிப்பதாகவும்

பச்சை போடும் அளவுக்கே உள்ளது....

இது தான் அவரது இலக்கு...

அரசியல்..

மற்றும் அறிவுயீவித்தனம்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரை கண்ணால் கண்ட சாட்சி எழுதிய பதிவு வாசிக்கவில்லை போல ,

அவர் இப்ப ஆஸியில் வைத்தியராக இருக்கின்றார் .

ஒருவரை சுட்டால் இன்ன பிழை விட்டார் சுட்டோம் என்று துணிவாக சொல்லவேண்டும்

அல்லது பிழையாக சுட்டுவிட்டோம் என்று பெருந்த்னமையுடன் மன்னிப்பு கேட்கவேண்டும்

இரண்டும் இல்லாமல் பேடியாக சளாப்பக்கூடாது .

எவர் என்று சொல்லுங்கோவன் நான் அவரிடம் கேட்டு இங்கு வந்து எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.