Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழ் பாடகி ஜெசிக்கா எஸ்.பி பாலசுப்பிரமணியத்துடன் நிற்கும் காட்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் ராஜவன்னியன், விசு. என்னைத்தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் வாக்களித்தது தமிழருக்குத்தான் என்பதனை மேலே சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்லவந்தது தமிழரல்லாதவர்களும் இம்முறை நன்றாகப் பாடுகிறார்கள். அதனால்தான் நடுவர்கள் அவர்களைத் தெரிவு செய்கிறார்கள். சிட்னியில் சென்றவருடம் ஈழத்து அகதிகளுக்கு உதவுவதற்காக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மிகவும் குறைந்த சம்பளத்துடன் விஜயபிரகாஸ் என்ற தமிழர் அல்லாத பாடகர் கலந்து கொண்டார். சிட்னியில் தமிழரான மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞரின் நிகழ்வு தவிர்க்கமுடியாத காரணமாக நடைபெற முடியவில்லை. ஆனால் அவர் அந்நிகழ்வுக்கு உரிய முழுப்பணத்தினையும் வாங்கியிருக்கிறார். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர் இதனால் கடனாளியாகி உடல் நலமற்ற நிலையிலும் அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்த காசினைக் கேட்டிருக்கிறார். ஆனால் காசுதான் பெரிது என்று நினைக்கும் அந்தப் பெரியவரினால் நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர் நோய்வாய்ப்பட்டு அண்மையில் காலமானார். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவருக்கு உதவுவதற்கு தமிழரல்லாத முன்னணிப்பாடகர்கள் சிலர் உதவிசெய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Replies 159
  • Views 15.4k
  • Created
  • Last Reply

ஐயா

உங்களை  தப்பாக புரிந்து கொள்வேனா??

நம்ம இனம் இப்படி 

அடுத்தவருக்கு உதவி உதவி

தான் கீழிறங்குதே என்ற ஆதங்கம் மட்டுமே..

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படும்

நாவலர் குறும்படப்போட்டிக்கு

தமிழகத்திலிருந்து 

திறமையான இயக்குநரை வரவழைத்து

குறும்படத்தேர்வுகளைச்செய்வது வழமை. (காரணம் ஒன்றுமில்லை .எம்மவருக்கு நாம் சொன்னால் கேட்கமாட்டார்கள்.  மணி கட்டிய மாடு சொல்லணும்)

அந்தவகையில் இதுவரை வந்தவர்கள்

தங்கர்பச்சான்

பாலாயி சக்திவேல்

சசி

இந்தமுறை துரை என்பவர் பேச்வார்த்தையில் உள்ளார்...

பார்த்தால் தெரியும் யாரிவர்கள் என்று...?

வந்து போகும் செலவைத்தவிர வேற எதையும் வாங்காதவர்கள்...

அதிகம் தூரம் போகவேண்டாம்

எமதூரைச்சேர்ந்த V.C குகநாதனையே இத்தனை வருடமாக கேட்டு கேட்டு களைத்துவிட்டோம்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு.. விஜய் பிரகாஷ் மும்பையில் வாழ்ந்துவரும் தமிழர் என்று சொன்னார்களே.. அதுபோல ஹரிகரனும்??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசு. விஜய பிரகாஸ் கன்னடம். கரிகரன் மலையாளம். இரண்டு வருடங்களுக்கு முன்பு சிட்னியில் நடைபெற்ற தாயக மக்களுக்காக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சத்திய பிரகாஸ், சாயிசரன், கிருஸ்ணமூர்த்தி போன்ற சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்றியவர்கள் அழகான அந்தப் பனை மரம் என்ற பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. சென்றவருடம் தாயகப் பாடலை கரிகரசுதனும் அதற்கு முதல் வருடம் சந்தோசும் பாடியிருந்தார். அமெரிக்காவில் வெட்னா(அமெரிக்கா தமிழ்ச் சங்கக்கூட்டமைப்பு) என்ற நிகழ்வு ஒவ்வொருவருடமும் நடைபெறும். ஒருமுறை பல தமிழ் கலைஞர்கள் அதிக பணம் கேட்க பாடகி சித்திரா மிகவும் குறைந்த செலவில் பாடியிருந்தார். சுப்பர்சிங்கர் போட்டி ஒன்றில் ஜெசிக்கா கன்னத்தில் முத்தமிட்டாய் படப் பாடலைப் பாடும்போது பாடகி சித்திரா அவர்கள் ஈழம் என்று தான் குறிப்பிட்டார். சிறிலங்கா என்றோ இலங்கை என்றோ குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு.. நானும் அன்று ஒரு பதிவில் கண்டேன். தமிழ் ஈழப் பாடல் என்று குறிப்பிட்டார் சித்ரா.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு..

புரிதலுக்கும்  நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

....சிட்னியில் சென்றவருடம் ஈழத்து அகதிகளுக்கு உதவுவதற்காக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மிகவும் குறைந்த சம்பளத்துடன் விஜயபிரகாஸ் என்ற தமிழர் அல்லாத பாடகர் கலந்து கொண்டார். சிட்னியில் தமிழரான மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞரின் நிகழ்வு தவிர்க்கமுடியாத காரணமாக நடைபெற முடியவில்லை. ஆனால் அவர் அந்நிகழ்வுக்கு உரிய முழுப்பணத்தினையும் வாங்கியிருக்கிறார். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர் இதனால் கடனாளியாகி உடல் நலமற்ற நிலையிலும் அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்த காசினைக் கேட்டிருக்கிறார். ஆனால் காசுதான் பெரிது என்று நினைக்கும் அந்தப் பெரியவரினால் நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர் நோய்வாய்ப்பட்டு அண்மையில் காலமானார். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவருக்கு உதவுவதற்கு தமிழரல்லாத முன்னணிப்பாடகர்கள் சிலர் உதவிசெய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.

வருந்தத்தக்கதும், கண்டிக்கத் தக்கதுமாகும்.. புகழேனியில் ஏறியவுடன் மமதையும், அலட்சிமும் கொண்ட சில தமிழரால் மற்றவர்களுக்கு மனச் சோர்வையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றனர்.. அந்த 'இசை மகராசன்' யாரென சொல்ல இயலுமா?

புரிதலுக்கு, நன்றி கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு, இசைக்கலைஞன் , ராசவன்னியன். அவ்விசைக் கலைஞரின் பெயரை நான் குறிப்பிடவிருப்பமில்லை. அவர் சிலவேளை மனம் திருந்தி இறந்தவரின் குடும்பத்துக்கு பிற்காலத்தில் உதவலாம். அவர் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர். அவர் இசை அமைத்த பாடல்கள் மிகவும் பிரபல்யமானவை. அவரின் பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடின. அவர் இசை அமைத்த படங்கள் பல. அவர் பல இயக்குனர்கள், கவிஞர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்டிருக்கிறார். இங்கு யாழில் பலர் அவரின் பாடல்களை விரும்பிக் கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

கடந்த இரு நாட்களாக நடந்த நிகழ்வுகளில் எல்லோரும் தங்கள் குடும்ப பின்னணி கஸ்டம் நஸ்டம் அப்படி இப்படியெல்லாம் போட்டுவிளாசினார்கள் போதாக்குறைக்கு எப்படி அனுதாபம் பெறுதல் என்றும் வடிவாக முயற்சி செய்திருந்தார்கள் எது எப்படியோ?
இது ஒரு போட்டி நிகழ்வு.வெற்றியாளர் திறமையின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்படவேண்டும்.அனைவரினதும் ஒரு வருட கடின உழைப்பு.அதைவிட நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் கோடிக்கணக்கில் குழந்தைகளுக்காக கொட்டிச் செலவழித்திருக்கிறாகள்.இது ஒன்றும் காமடி பண்ணும் நிகழ்ச்சியல்ல.ஆகவே நடுவர்களுடன் இணந்து மக்களும் தகுதியானவர்களுக்கு வாக்களித்து இம்முறை நிகழ்வின் உண்மைத்தன்மையை உலகிற்கு எடுத்துரையுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜெசிக்கா வெல்லவேண்டும் என சிலவாக்குகள் பதிந்திருந்தேன். அவர் வெல்ல வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனது மனச்சாட்சியின்படி சிறிசாவும் அனுசாவும் ஜெசிக்காவினை விட நன்றாகப் பாடுவார்கள். ஜெசிக்காவும் நல்ல பாடகி. ஆனால் அவரைவிட சிறிசா, பரத், பூர்த்தி,கரிப்பிரியா போன்றவர்கள் நன்றாகப் பாடக்கூடியவர்கள். தேவையில்லாமல் அவர்கள் தெழுங்கர், மலையாளி என்று எதுக்கெடுத்தாலும் பிழை பிடிக்காதீர்கள்.

உங்கள் கருத்தை நான் நூறுவீதமும் ஆதரிக்கிறேன். அதில் மாற்றமில்லை. ஆனால் போட்டி என்று வரும்பொழுது ஒரு இம்மியளவு தவறோ, பிழைதானும் இருந்தால் நாங்கள் அதனைக் கருத்தில் எடுத்துக்கொள்வோம் என மிகவும் கறாராக அடிக்கடி நடுவர்கள் கூறும்போது அவர்களுடைய நேர்மை உள்ளத்தைக் கவர்ந்தது . முன்பு அயீத் தவறுவிட்டபோது மனோ கண்ணிர்விட்டு அழுதும் அவனை வைல்காட்டுக்கு அனுப்பி எடுத்தார்கள். அது நடுவர்கள்மேல் மேன்மேலும் நன்மதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் பூர்த்தி தவறுசெய்தபோது ஏன் அதனைத் தவறாக அவர்கள் எடுக்கவில்லை.? தவறாக எடுத்துக்கொண்டால்... யெசிக்கா என்ற ஒரே ஒரு தமிழ்ப்பிள்ளை அங்கு தெரிவாகிவிடுவாரே என்ற ஆதங்கமா?? இதுவேதான் நடுவர்கள் இனரீதியான சார்பு நிலையைக் கொண்டுள்ளார்கள் என்ற என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. அதனை நிரூபிக்கும் வண்ணம் யெசிக்கா அதிகவாக்குகளைப் பெற்றுள்ளதைப் பாராட்டாமல் "மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என மனோ ஏன் கூறவேண்டும், அந்தநேரம் அவர் முகத்தில் இயல்பான மகிழ்ச்சி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதுவேதான் அவர்கள் இனரீதியான சார்புநிலை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
சூப்பர்  சிங்கர் இன்றைய நிகழ்ச்சி இப்போது தான் பார்த்தேன்... ஸ்ரீஷா ..மற்றும் ஜெஸிக்கா இருவருமே மற்றைய மூவரையும் விட திறமாக பாடி இருந்தார்கள். ஜெஸிக்கா  அடுத்த அடுத்த சுற்றுகளிலும் தெரிவாவார் என்று தெரிகிறது. இயல்பாக அருமையாக பாடுகிறார்.
ஸ்ரீஷா நிச்சியம் இறுதி போட்டியில் பாடுவார்!!!

ஈழத்தமிழருக்கெதிராக மற்றுமொரு சதி செய்யும் விஜய் தொலைக்காட்சி.

இம்முறை நடந்து கொண்டிருக்கும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்வில் ஜெசிக்காவென்ற ஈழத்து வம்சாவழி புலம் பெயர் பாடகிக்கு பல லட்சங்களாக மக்கள் அளித்த வாக்குகளைக்கண்டு மிரண்ட விஜய் 

தொலைக்காட்சி நிருவாகம். மக்களின் வாக்குகள் இம்முறை ஜெசிக்காவுக்கு கிடைக்க கூடாது என்பதைக்கருத்தில் கொண்டு வெளி நாட்டு ரசிகர்கள் அதுவும் ஐரோப்பிய ரசிகர்களை குறி வைத்து பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதோடு ..யூ டியூப் (YOU TUBE) தளத்தில் கூட இருட்டடிப்பு செய்துள்ளது. இதைவிட முக நூலிலிருந்த யூனியர் சுப்பர் சிங்கர்4 (Super singer 4) என்ற கணக்கையும் வாபஸ் பெற்றுள்ளார்கள்.இந்தியாவில் உள்ள சகல பத்திரிகைகளுக்கும் இந்த செய்தி போய் சேர ஆன நடவடிக்கையை மக்கள் இணைந்து எடுக்க வேண்டும்....... காப்புரிமை முக்கியம் தான் இவ்வளவு காலமும் படுத்து தூங்கிய விஜய் தொலைக்காட்சி தற்போது ஜெசிக்காவிற்கு கிடைத்த வாக்குகளைக்கண்டு மிரண்டதன் நோக்கம் தான் என்ன?

வாக்களிக்க

http://www.supersinger.in/

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை நான் நூறுவீதமும் ஆதரிக்கிறேன். அதில் மாற்றமில்லை. ஆனால் போட்டி என்று வரும்பொழுது ஒரு இம்மியளவு தவறோ, பிழைதானும் இருந்தால் நாங்கள் அதனைக் கருத்தில் எடுத்துக்கொள்வோம் என மிகவும் கறாராக அடிக்கடி நடுவர்கள் கூறும்போது அவர்களுடைய நேர்மை உள்ளத்தைக் கவர்ந்தது . முன்பு அயீத் தவறுவிட்டபோது மனோ கண்ணிர்விட்டு அழுதும் அவனை வைல்காட்டுக்கு அனுப்பி எடுத்தார்கள். அது நடுவர்கள்மேல் மேன்மேலும் நன்மதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் பூர்த்தி தவறுசெய்தபோது ஏன் அதனைத் தவறாக அவர்கள் எடுக்கவில்லை.? தவறாக எடுத்துக்கொண்டால்... யெசிக்கா என்ற ஒரே ஒரு தமிழ்ப்பிள்ளை அங்கு தெரிவாகிவிடுவாரே என்ற ஆதங்கமா?? இதுவேதான் நடுவர்கள் இனரீதியான சார்பு நிலையைக் கொண்டுள்ளார்கள் என்ற என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. அதனை நிரூபிக்கும் வண்ணம் யெசிக்கா அதிகவாக்குகளைப் பெற்றுள்ளதைப் பாராட்டாமல் "மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என மனோ ஏன் கூறவேண்டும், அந்தநேரம் அவர் முகத்தில் இயல்பான மகிழ்ச்சி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதுவேதான் அவர்கள் இனரீதியான சார்புநிலை கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. 
 
நடுவர்களே பாகுபாடு வெளிப்படியாக காட்டும் போது பார்வையாளர்கள் ஏன் காட்டக்கூடாது??

இன்று நடந்துகொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் 4 இறுதி நிகழ்வில் இருந்து சில இணைப்புக்கள்....

ஜெசிக்காவின் பாடலை 12 ம் நிமிடத்தில் கீழ் வரும் இணைப்பில் கண்டு மகிழலாம் :)

Edited by தமிழினி

பலரை கண்ணீரில் ஆழ்த்திய "விடை கொடு எங்கள் நாடே...."

( 25:30 நிமித்தில் இருந்து )

Edited by தமிழினி

10981962_766381263431372_131019700059376

  • கருத்துக்கள உறவுகள்

Thanush இன் கண்களையும் கலங்கடித்து

இந்த மக்கள் வெள்ளத்துக்கு மட்டுமல்ல

உலகெல்லாம் எமது வேதனையை விதைத்த யெசிக்காக்கு தமிழினம் நன்றி சொல்லணும்

Thanush சொன்னது போல் அவருக்கே தெரியாது

எவ்வளவு பெரிய விடயத்தை அவர் செய்து முடித்திருக்கிறார் என்பது..

முக்கிய காலகட்டத்தில் பிரான்சிலிருந்து

பிரேம் கோபால்

பிரேமினி  இருவரும் எம்மை அடையாளம் காட்டி அந்தவேளை தமது கடமையைச்செய்தார்கள்

இன்று யெசிக்கா

எமக்குக்கிடைக்கும் மேடைகளில் எம்மால் 

எம்மினத்தின் அழிவுகளை மறக்காமல் பதிவிடுவோம் என பதிந்து தனது கடமையைச்செய்துள்ளார்

எந்த துரும்பாயினும் அதை எம்மவர் பயன்படுத்தணும் என்பதே எனது வேண்டுகோள்..

  • கருத்துக்கள உறவுகள்

1 ஶ்ரீசா

2 பரத்

3 ஹரிப்பிரியா

4 ஸ்பூர்த்தி

5 அனுஷியா

6 ஜெஸிக்கா

:D

  • கருத்துக்கள உறவுகள்

1 ஜெஸிக்கா
2 ஜெஸிக்கா
3 ஜெஸிக்கா
4 ஜெஸிக்கா
5 ஜெஸிக்கா
6 ஜெஸிக்கா

:lol:

I like that her second round song.

  • கருத்துக்கள உறவுகள்

1 ஶ்ரீசா

2 பரத்

3 ஹரிப்பிரியா

4 ஸ்பூர்த்தி

5 அனுஷியா

6 ஜெஸிக்கா

:D

ஈழத்தமிழேண்டா.... :lol:  :D  :D

1 ஶ்ரீசா

2 பரத்

3 ஹரிப்பிரியா

4 ஸ்பூர்த்தி

5 அனுஷியா

6 ஜெஸிக்கா

:D

1. பரத்

2. ஸ்பூர்த்தி

3. சிறிசா

:o  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்பூர்த்தி முதலாம் இடம்,

ஜெசிக்கா இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

ஜெசிக்காவிற்கு நீண்ட பயணம் மைல்கள் தாண்டி. இரண்டாம் இடம் பெரிய விடயம். படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெஸிக்கா தன் பரிசை இந்தியாவிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் பாதி பாதி கொடுக்கிரா, சூப்பர்ப்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.