Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால தமிழக அரசியல்

Featured Replies

இரண்டு முக்கிய தேவைப்பாடுகளை இந்தக் கைது ஏற்படுத்தி உள்ளது.

 

1. தமிழகத்தை தமிழர்களின் கையில் கையளிப்பது.

 

2. ஹிந்திய தேசியவாதிகள் தமிழகத்தில் காலூன்ற இடமளிப்பது ஆபத்தானது என்ற உணர்தலை ஏற்படுத்த வேண்டி உள்ளது.

 

தமிழகத்தை தமிழர்கள்.. தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள்.. மதச் சார்பற்ற.. ஊழல் அற்ற.. அபிவிருத்தி கண்ட.. தமிழகத்தை விரும்புவர்கள் ஆள வேண்டிய கட்டாயம் இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

 

சுப்பிரமணியம் சாமி போன்ற ஹிந்திய தேசிய வெறியர்கள் தமிழகத்தை நாசம் செய்வதற்கு.. ஊழல்களையும்.. உறுதியற்ற அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக்கி அதனூடாக தங்கள் ஆதாயங்களை.. ஹிந்திய தேசியத்தை பலப்படுத்த முனைவதற்கு எதிராக தமிழக மக்கள் தங்களின் நலன்சார்ந்து.. எதிர்கால அரசியல் சார்ந்து.. பொருண்மியம் சார்ந்து தங்களைப் பலப்படுத்தக் கூடிய ஒரு அரசியலை நோக்கி  நகர இந்தக் கைது உதவியுள்ளது என்றால் மிகையல்ல.

 

இந்த ஜெயலலிதா.. காங்கிரஸோடு கூட்டணி வைத்தால்.. அதற்கு சார்ப்பான கொள்கை வகுப்பார். பா ஜ கவோடு கூட்டணி வைத்தால் அதற்கு சார்ப்பான கொள்கை வைப்பார். தமிழகத்துக்கு என்று கொள்கை வகுத்துச் செயற்பட்டது கிடையாது. தனது பதவிக்கு எது பாதுகாப்போ அதை நோக்கி அவர் நகர்ந்தார். கருணாநிதி இதற்கு விதிவிலக்கு அல்ல..!

 

இந்த நிலையில்.. தமிழகம்.. பல துறைகளில்.. திராவிடக் கட்சிகளால்.. பிந்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரளா.. தமிழகத்தை காட்டிலும் பல துறைகளில் முன்னேறி உள்ளது. கர்நாடகா அப்படி. ஆந்திரா அப்படி.  இந்த திராவிடக் கட்சிகள்.. ஹிந்தி தேசியவாத காங்கிரஸையும்.. பா ஜ க வையும் சரிக்கட்டி.. அரசியல் செய்யும் சித்தாந்தத்ததை.. தமிழக விரோதமாக செய்து வந்துள்ள நிலையில்..

 

இந்தக் கைது.. தமிழகத்தில் புதிய.. தமிழ் தேசிய.. அரசியலுக்கான வலுவான காரணங்களை கண்டறியவும்.. மக்களிடத்தில் அதனை முன்னிறுத்தவும் தகுந்த வலுவான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

 

அந்த வகையில்.. இந்தச் சூழலை..பயன்படுத்தி.. தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகள்.. தமக்கிடையே ஒற்றுமையை பேணி.. தமிழகத்தை 21ம் நூற்றாண்டுக்குரிய வளர்ச்சி நோக்கியும்.. தமிழர்களின்.. தமிழகத்தின் பாதுகாப்பை.. இருப்பை.. மதிப்பை பேணத்தக்க அரசியல் சூழல் ஒன்றை தமிழகத்தில் உருவாக்கப் பாடுபடுதல் அவசியமாகும்.

 

வை.கோ.. சீமான்.. ராமதாஸ்.. திருமாவளவன்... உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்தப் புதிய முயற்சிக்கு சந்தர்ப்பம் அளிப்பார்களா அல்லது தமிழக மக்களை சினிமா கூத்தாடிகளின் பின் அலையவிட்டு தமிழகத்தை இன்னும் பல தசாப்தங்களுக்கு சீரழிய அனுமதிப்பார்களா..???! பொறுத்திருந்து பார்ப்போம். :icon_idea:

 

நெடுக்கு ஏன் திருமாவளவனை இதற்குள் சேர்த்தீர்கள், அவர் ஒரு தமிழ் இன உணர்வாளர் இல்லையே , கேவலமாக திராவிடத்தை காட்டி சாதி அரசியல் செய்பவர்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அல்லது அதிமுக வின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்தக்கட்சியாலும் தலை நிமிர முடியாது.

தமிழக மக்கள் மனதில் இல்லை ரத்தத்தில் ஊறிய திராவிடக்கட்சிகளின் ஆதரவை யாராலும் பிரிக்க முடியாது.  

ஆனால் தொகுதிப்பங்கீட்டின் அடிப்படையில் அவர்களில் யாராவது ஒருவருடன் காங்கிரஸ் அல்லது பா ஜ க கூட்டமைக்கும் பட்சத்தில் மற்றவர்கள் தமிழ் நாட்டில் காலூன்ற  வாய்ய்ப்புக்கள் உள்ளன.

அதிகமாக தி மு க வுடன்  பி ஜே பி + ரஜனியின்  அரசியல் ஆரம்பம்
அதிமுக வின் பலத்த வாக்குப்பலத்தைக் குலைத்து ஒரு கூட்டு அரசு அடுத்த தேர்தலில் அமையலாம்.

அது வரைக்கும் அம்மாவின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது பெரிய கேள்விக்குறி. இத்தனை சொத்துக்களைக் குவித்தும் அரசியலில் இல்லாமல் சிறையில் இருப்பதைத் தவிர்க்க அவர் முழு  பண பலத்துடன் செயற்படலாம்.

கடவுளே என்று ரஜனிக்கும் விஜயுக்கும் ஏதாவது சீக்கு..கீக்கு வரவைத்து அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்று.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா கற்பனை குதிரையை தட்டி விட எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம்.

இதில விசுகர் சீமான் இதுவரை எதிலும் தோத்ததில்லை எனும் கேமெடி வேற.எலெக்சனும் கேட்டதில்லை, ஆயுதப்போரும் செய்ததில்லை. மேடைப்பேச்சில் அல்லது சினிமா எடுப்படிதில் தோக்கவில்லை என்பதே சரி.

தமிழ்நாட்டில் திமுக முகாமில் வைகோ விஜயகாந்த் சேருமாப்போல தெரியும் தருவாயில் இந்த தீர்ப்பு வந்துளது. ஜெயாவின் வெற்றிடத்தை நிரப்பும் ஆசையில் வைகோ விஜயகாந்த் திமுக கூட்டில் ஐக்கியமாகாமல் போனால்,அது ஜெக்கே சாதகமாய் அமையும்.

சீமான் ஜெவின் ஒற்றன். ஜெயுக்கே பெப்பே கொடுத்துவிட்டு கட்சியை கைப்பற்றும் அளவுக்கு சீமானிடம் கள்ளத்தனம் நிறைந்த்ஹிருந்த்ஹாலும், ஜெக்கும் இது தெரியும். என்னவே தான் கடையில் இருந்து மிகத்தூரதில் சீமானை வைத்தார். ஜெ லாலுபிரசாத் போல முதலலமைச்சர் பதவியை இழந்தாலும் கட்சியை தன் இரும்பு பிடியில் வைத்திருப்பர் என்றே தெரிகிறது. ஜெயாவை குறைத்து மதிப்பிட்டு கதை முடிந்ததாய் முன்பும் பலதடவை பலர் எழுதினர். காலம் அவர்கள் முகத்தில் கரி பூசியது.

மோடி பற்றி நாதமுனி சொலவது அதீத கற்பனை. ஊழல் மன்னன் எதியூரப்பாவை கட்சியில் மீளச் சேர்த்தவர்தான் மோடி. தேவைப்பட்டால் அம்மா காலிலும் விழுவார்.

வைகோ, சீமான், விஜயகாந்த் வெளியில் இருந்து கட்சி நடத்துவதிலும் திறமாக உள்ளே இருந்தபடி ஜெயா நடத்துவார்.

ஓபி விசுவாசமாக நடப்பாரா, நடராஜன் என்ன செய்வார், கலைஞர் அதிமுகவை உடைக்க என்ன செய்வார் என்பவைதான் ஜெயா முன் உள்ள சவால்கள்.

விசுகு ஐயா ரொம்பத்தான் கிச்சு கிச்சு மூட்டுகின்றார்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை காலியாகும் என்பதை விட்டுவிட்டு மக்களால் விரும்பப்படும் தலைமையாக வந்து நல்லாட்சி செய்யவேண்டும். அதற்கு இந்தத் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லுபவர்கள் எவரும் லாயக்கானவர்களாக எனக்குப்படவில்லை.

தமிழ் உணர்வாளர்கள் பட்டியலில் சில புலம் பெயர்ந்தவர்கள் பெயர் விடுபட்டு விட்டது . :lol: .

அண்ணை சொன்ன பட்டியலில் இருப்பவர்கள் முழு பேரும் சேர்ந்தாலும் கட்டு காசு எடுக்கபோவதில்லை .கனவில் தமிழ் ஈழம் அமைத்தது போல தமிழ் நாட்டு ஆட்சியையும் பிடிக்கலாம் .

 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னமும் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு அதிமுக ஆட்சிதான் .யாருக்கும் அந்த கட்சியில் இருந்து இடைக்கால முதலமைச்சராக வரலாம் அதன் பின் ஜெயிலால் வந்து ஜெயலலிதா தான் முதலமைச்சர் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள் பட்டியலில் சில புலம் பெயர்ந்தவர்கள் பெயர் விடுபட்டு விட்டது . :lol: .

அண்ணை சொன்ன பட்டியலில் இருப்பவர்கள் முழு பேரும் சேர்ந்தாலும் கட்டு காசு எடுக்கபோவதில்லை .கனவில் தமிழ் ஈழம் அமைத்தது போல தமிழ் நாட்டு ஆட்சியையும் பிடிக்கலாம் .

 

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னமும் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு அதிமுக ஆட்சிதான் .யாருக்கும் அந்த கட்சியில் இருந்து இடைக்கால முதலமைச்சராக வரலாம் அதன் பின் ஜெயிலால் வந்து ஜெயலலிதா தான் முதலமைச்சர் . 

 
நீங்களும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:
 
தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும்.
 
ஜெயலலிதா புயல் ஓயும் நேரம் வந்துவிட்டது போல தெரிகிறது...
 
என்ன நடக்கும் என்றால், அம்மா தமிழ் நாட்டு ஜெயிலுக்கு 'Transfer' ஆவர்.
 
பின்னர் சென்னை ஹை கோர்ட் இல் பெயில் கேட்பார். அப்பீல் செய்து அது வரும் வரை டம்மி வைத்து ஆட்சி செய்வார்.
 
ஆனால் மீண்டும் முதல்வராக முடியாது.
 
ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்ட சரவண பவன் ஹோட்டல் ஓனர் ராஜகோபால், அப்பீல் பண்ணி விட்டு வருசக் கணக்கில் வெளியே இருந்து வியாபாரம் பார்கிறார்.

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடி பற்றி நாதமுனி சொலவது அதீத கற்பனை. ஊழல் மன்னன் எதியூரப்பாவை கட்சியில் மீளச் சேர்த்தவர்தான் மோடி. தேவைப்பட்டால் அம்மா காலிலும் விழுவார்.

 

 

ஆம் அது பிரதமராக முன்னர்.
 
அசுர பலத்துடன் வெல்வது குறித்து மோடி எதிர்பாரதால் எதியூரப்பா மீண்டும் சேர்க்கப் பட்டார்.
 
இப்போது தூக்கி எறியப் படுவார் என்பதால் எதியூரப்பா அடக்கி வாசிக்கிறார்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி அமைக்க நல்ல சந்தர்ப்பம், இந்தியனாக இல்லாமால் தமிழனாக சிந்தித்து முடிவெடுக்க நல்ல ஒரு சந்தர்ப்பம்

 

இது.... வாசிப்பதற்கு சந்தோசமாக இருந்தாலும், நடை முறையில் எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி.

முதலில்.... ராமதாசின் பா.ம.க., விஜயகாந்தின் தே.மு.க. கூட்டணியில் வந்தாலும்..... ஒருவர் இருக்கும் மேடையில் மற்றவர் ஏற மாட்டார். அவர்கள் உள்குத்தும், குடைச்சலும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

வைகோவின் ம.தி.மு.க. மேற்கூறிய.... ஒரு கட்சியுடன் சேர்ந்தாலும், தலைமை பொறுப்பை மற்றவர்களே.... வைத்துக் கொள்வார்கள். அதனை... வை.கோ. எவ்வளவு தூரம் விரும்புவார் என்று தெரியவில்லை. சீமானும், வைகோவும் சேர்ந்து போட்டியிட்டாலும் அவர்களின் வாக்கு வங்கி, ஆட்சியமைக்க போதாது.

  • கருத்துக்கள உறவுகள்

------

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னமும் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு அதிமுக ஆட்சிதான் .யாருக்கும் அந்த கட்சியில் இருந்து இடைக்கால முதலமைச்சராக வரலாம் அதன் பின் ஜெயிலால் வந்து ஜெயலலிதா தான் முதலமைச்சர் . 

 

ஜெக்கு... இப்பவே..... முதுகு வலி, மூட்டு வலி, நெஞ்சு வலி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

அடுத்த பத்துப் பன்னிரண்டு வருடம் தாக்குப் பிடிப்பாரா. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா, கருனாநிதி, அவர்களை வழக்குகளால் தமிழக அரசியலிலிருந்து ஓரம்கட்டி வைகோ சீமான் நெடுமாறன் போன்றோரை தேசியபாதுகாப்புச்சட்டத்தின்மூலம் அரசியல் செய்யாது தடைபோட்டு, தமிழர்க்கான கடிவாளத்தை வடக்கு தன்னிடம் எடுத்து தென்னகத்தின் நெல்விளையும் பகுதியான காவேரி டெல்டா பகுதியான தஞ்சைப்பகுதியை மீதேன் வாயு எடுப்பதற்காக இருக்கும் தடகளை அகற்றி தமிழகத்தை சுடுகாட்டுப்பாலைவனமாக்கி சுயசார்பில்லாத ஒரு தேசமாக ஆக்குவதற்கான முதலாவது படிநிலையே ஜேயின்மீது போடப்பட்டிருக்கும் தடைகள்

 

ஜெயா அம்மையார் இதிலிருந்து மீண்டெளுந்து வருவார் என்பதே எனது அபிப்பிராயம்

 

வந்தால் முன்னையதைவிட அதிக பலத்துடனேயே வருவார் கடந்தகாலங்களில் அவர் விடையத்தில் இப்படித்தான் நடந்தது

 

இதன்மூலம் எம்ஜிஆர் கண்ட தமிழகத்துடன் ஈழத்தை இணைக்கும் கனவும் அவருக்கு வசப்படும்..

 

ஜெயலலிதா அம்மையார் என்பவர் ஒரு தனிநபர் அவருக்குக் குடும்பமோ நெருங்கிய சொந்தபந்தமோ எதுவுமில்லை. தமிழகத்தில் இதேபோன்று வேறுயாராவது கையில் கட்சி இருக்குமானால் இன்று அதிமுக தலைமைச்செயலகம் சின்னாபின்னமாகி இருக்கும்.

 

(சொல்லப்போனால் கேட்பதற்கு நாதியில்லாதவர் என்று சொல்வார்களே அதுபோல)

 

ஏன் என்று கேட்பதற்கே ஒரு உறவினர்கூட பக்கத்தில் இல்லை கணவரோ பிள்ளையோ இல்லை, இருந்தும் முதல்வராக இருந்தவர் சிறையில் ஏழுகோடி மக்களை தன்னகத்தேகொண்ட தமிழகம் சிறிய சலனங்களைச் சந்தித்தாலும் அமைதியாகவே இருக்கின்றது.

 

இத்தனைக்கும் காரணம் ஜெயலலிதா என்ற ஒற்றைச்சொல்லே காரணம.

 

இன்னுமொரு விடையம் ஸ்பெக்ரெம் எனும் காரணத்துக்காகவே கருனாநிதி தமிழின இனப்படுகொலையை காணாதிருந்தார். ஆனால் கழுத்தில் பதினாறு வருடங்களாக வழக்குக் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது அனால் ஈழத்தமிழவிடையத்தில் அவர் இறுதிக்காலத்தில் சாதித்தவை ஏராளம். தமிழ்நாட்டின் தமிழின உணர்வாளகளது களப்பணி காரணமானாலும் அவரது பங்கும் கவனிக்கப்படவேண்டும்.

 

காலம் யாரையும் எந்தப்புள்ளியிலும் நிரந்தராமாக விட்டுவைப்பதில்லை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ மீண்டு வரனும். வந்து ஜெ... ஜெயில் போனதைக் கொண்டாடும்.. சுப்புவை.. சொறீலங்காவை.. பழிவாங்கனும். அப்படி நடந்தால் கூட சந்தோசமே..!!

 

ஜெ க்கு இந்தத் தீர்ப்பு ஒரு அடிதான். அவர் சட்ட ரீதியில் இதனை எதிர்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஆனாலும் அவரின் பெயருக்கு புகழுக்கு.. இந்தத் தீர்ப்பு...பேரடி. அதில் இருந்து முற்றாக அவர் விலகனுன்னா.. நிறைய சட்ட ரீதியில் சாதித்துக்காட்டி ஆகனும்..!!!

 

ஜெ ஊழல்.. கருணாநிதி.. குடும்ப ஊழல்... குடும்ப அரசியல்.. விஜயகாந்த் குடும்ப அரசியல்.. இவற்றை எல்லாம் கணக்குப் போட்டு இன்றைய இந்தச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள.. தமிழ் தேசிய தமிழக சக்திகள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவது தான் அவர்களின் எதிர்கால அரசியலுக்கும்.. தமிழக மக்களுக்கும்.. தமிழ் மக்களுக்கும் நல்லது..! அதற்காக ஜெ வை.. பகைக்கனுன்னு இல்லை. கருணாநிதியை பகைக்கனுன்னு கிடையாது..!!

 

எப்படி பார்த்தாலும்.. சுப்பு.. மவனே நீயா மாட்டிக்கிட்டா..!! :lol::D

Edited by nedukkalapoovan

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=146564&p=1045923

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரும் ஓ.பன்னீர்செல்வம் அம்மாவை மீட்டுவருவதற்கே தனது முதல்வர் பதவியை முழுமையாகப் பயன்படுத்துவார். அம்மாவின் அசைக்கமுடியாத விசுவாசி. இதனை முன்பும் நிரூபித்துள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.