Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் சீக்கிரம் கல்யாணம், பண்ணிக்கணும் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27-1411815621-4rel.jpg

ஏன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் தெரியுமா?

எந்த ஒரு உறவாக இருந்தாலும், கல்யாணம் தான் மிகவும் உயர்ந்த ஒரு உறவாக உள்ளது. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க கல்யாண நாள் அப்படிங்கறது ஒருத்தர் பல நாளா காத்துகொண்டிருந்த எல்லையில்லாத மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரக்கூடிய நாள். கல்யாணத்திற்காக தயாராவதற்கு முன் பல விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. மக்கள் பல வயதுகளில், பல சூழ்நிலைகளில் திருமணம் புரிகிறார்கள். நாம் இப்போது திருமணத்தை தள்ளிப்போடாமல் சீக்கிரம் செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களைப் பற்றி அலசுவோம்.

இந்த காரணங்களை ஆராயும்போது இதனால் ஏற்படும் பயன்களில் மூழ்கிவிடுவோம். எனவே, சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டியதற்கான சில காரணங்களைப் பார்க்கலாம் வாங்க.

ஒரு வலுவான பற்றுணர்வு.

திருமணம் எப்போதுமே இருவருக்கிடையில் உள்ள ஒரு வலுவான பற்றுனர்வுடன் தொடர்புடையது. இளம் வயதில் திருமணம் செய்வதால், ஒரு வலுவான உறவுமுறையை வெகு நாட்களுக்கு மகிழ்ச்சியையும், பரவசத்தையும் அடைய முடிகிறது.

இளம் வயதில் பொறுப்பு.

விரைவில் திருமணம் செய்வதில் இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு அம்சம். திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதன் மூலம், இளம் வயதிலேயே பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படலாம்.

அறிவு முதிர்ச்சி.

திருமணம் மனதளவில் ஒரு நல்ல முதிர்வு நிலையை அடைய உதவுகிறது. நீங்கள் மனதளவில் முதிர்வற்றவராக இருந்தால், முதிர்ச்சி அடைவதற்கு ஒரு நல்ல வழி திருமணம். என்ன வித்தியாசமா இருக்கா?

புரிதல்.

இளம் வயதில் திருமணம் புரிவது இளம் வயதிலேயே நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது. பல தியாகங்கள் மற்றும் விட்டுக்கொடுத்தல்கள் காரணமாக, நீங்கள் நெடுநாட்களுக்கு பல சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய நல்ல அனுபவம் வாய்ந்தவராக திறனுள்ளவாராக மாறிவிடுவீர்கள்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவில் 25 வயதில் ஆன்ரியாகி.. 45 வயதில் பாட்டி ஆகும்.. குடும்ப அமைப்புக்கான விளக்கம். அதனால் தான் இந்தியா அளவு கணக்கில்லாமல் பெருகி.. சீரழியுது.

சிறுவயதில் திருமணம் செய்வதால்.. பல இளவயது அனுபவங்களை.. கல்வியை.. தொழிலிடத்தில்.. தீவிரமாக உழைப்பதை.. இழக்கிறார்கள். மேலும்.. குடும்பச் சுமை என்ற தலையிடியால்.. மிக குறுகிய வயதில் நோய்வாயும் படுகிறார்கள்..!

ஒரு குடும்ப வாழ்வு சிறக்கனுன்னா.. வெறும் ஆணும் பெண்ணும் இருந்தால் போதாது. அந்த உறவு அதிக காலம் நீடிக்காது. வலுவான பொருண்மிய.. கல்வி.. சமூக பின்னணிகள் இருந்தால் மட்டுமே.. வாழ்க்கை சிறக்கும். அதற்கு நிறைய அனுபவங்கள் அவசியம். அது இளவயதில் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

ஒரு நிறுவனத்துக்கு முகாமையாளராகக் கூட ஒரு குறிப்பிட்ட வயதெல்லையை அடைய வேண்டி உள்ளது. அதுவரை பயிற்சி முகாமையாளராகத்தான்.. அல்லது உதவி முகாமையாளராகத்தான் விடுகின்றனர். ஒரு நிறுவனத்துக்கே இப்படின்னா.. குடும்பம் என்ற ஒரு நிறுவனத்தை.. வெறும் ஆண் - பெண் உடற்கவர்ச்சியை மையமாக வைச்சு.. எத்தினை நாளைக்கு ஓட்டுவது..????!

சிந்திக்கனும்.. செயற்படனும்...!! :)

_74342603_jenkins.jpg

Jenkins, 33, was with Levitas, 36, when she collected her OBE in March for her services to music and charity work.

Singer Katherine Jenkins has become engaged to American film director and artist Andrew Levitas.

-bbc

  • கருத்துக்கள உறவுகள்

25 - 30 வயதுக்குள் திருமணம் செய்துவிடவேண்டும். வயது போகப்போக பாலுறவு கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தாலும் வேட்கை குறைந்துகொண்டுபோகும். ஆடவேண்டிய ஆட்டமெல்லாம் 40 வயதுக்குள் ஆடிவிடவேண்டும். அதுக்குப் பிறகு நடப்பது எல்லாம் போனஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலிசார் வெறும் உடலுறவு சம்பந்தப்பட்டு திருமணத்தைப் பார்க்கப்படாது. பிறகு திருமணம் ஆன பின்.. குழந்தை உருவாகிச்சின்னா.. அப்புறம் உடல் உறவுக்கு... என்ன பண்ணுவீங்க...????! அப்பவும் வன்புணர்வு செய்வீங்களா..?????!

திருமணம் என்பதை உடல் உறவு பந்தமாக பார்க்கும் குறுகிய.. பக்குவமற்ற மனப்பான்மையே இளவயது திருமணங்களை ஊக்குவிக்கின்றன. அது தவறு ஆகும்..! அதுவும் இந்த நவீன.. நீண்ட சராசரி ஆயுளோடு மனிதன் வாழத்தக்க உயர் மருத்துவ தகவுள்ள உலகில்...!!

_77875332_clooney_alamuddin_sunday_reute

A host of fellow stars descended on the Italian city's canals for the union between the film world's most eligible bachelor, 53, and Ms Alamuddin, 36.

பிரபலங்கள் இப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். :lol:  (இதைப்படிக்கும் யாழ் கள குடும்பஸ்தர்கள் சிலருக்கு இளமை திரும்பக் கூடும்.) :D

http://www.bbc.co.uk/news/world-europe-29396682

Hollywood star George Clooney has married human rights lawyer Amal Alamuddin in Venice, in one of the most eagerly anticipated events of the showbusiness year.

  • கருத்துக்கள உறவுகள்

சார் என்னுடைய வாழ்க்கை முறைபற்றித்தான் என்னால் கூறமுடியும் :D பிரபலங்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. திருமணமாகி ஏறக் குறைய ஒருவருடத்தில் மகன் பிறந்தான். கர்ப்பமாகி 6-1/2 மாதங்கள் வரை உறவு இருந்தது. அதன் பிற்கு வேறுவழிகளைக் கடைப்பிடித்தோம். அவற்றை நாகரிகம் கருதி இங்கு சொல்லமுடியாது. இங்கு குழந்தை உருவாகிச்சின்னா என்ற பிரச்சினை எழவே இல்லை.

அந்த மாதிரி விடயங்களில்.. பலே கில்லாடியான ஆள் போல நீங்க.

ஆனால்.. எல்லா ஆண்களும் இப்படி நடந்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது. சிலர் எல்லா விடயங்களிலும்.. அவதானமும்.. கூடிய கவனமும்.. எச்சரிக்கையும் உள்ளவங்களாக இருக்க விரும்புவார்கள்..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

ஒரு நிறுவனத்துக்கு முகாமையாளராகக் கூட ஒரு குறிப்பிட்ட வயதெல்லையை அடைய வேண்டி உள்ளது. அதுவரை பயிற்சி முகாமையாளராகத்தான்.. அல்லது உதவி முகாமையாளராகத்தான் விடுகின்றனர். ஒரு நிறுவனத்துக்கே இப்படின்னா.. குடும்பம் என்ற ஒரு நிறுவனத்தை.. வெறும் ஆண் - பெண் உடற்கவர்ச்சியை மையமாக வைச்சு.. எத்தினை நாளைக்கு ஓட்டுவது..????!

சிந்திக்கனும்.. செயற்படனும்...!! :)

ஒரு குடும்பத் தலைவன் ஆவதையும், நிறுவன முகாமையாளர் ஆவதையும் ஒரு தராசில் வைத்துப் பார்க்கும் உங்களுக்கு, பக்குவம் காணாது என்று நினைக்க வேண்டியுள்ளது.

குடும்பத் தலைவன் ஆனவுடன்.... பொறுப்புகள், ஆட்டோமற்றிக்காக  வந்து ஒட்டிக் கொள்ளும். :D

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பங்கள் இன்று நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டன. இன்றைய வர்த்தக சமூக உலகில் குடும்பம் என்பது நிறுவனமயப்படாமல் இருக்க முடியாது.

அங்கும் இலாப  நட்டம் பார்த்துத்தான் திருமணங்களே நடக்கின்றன. ஏன் விவாகரத்துக்களே நடக்கின்றன..!

ஊரில் ஒருவர் 16 வயதில் 24 வயது உள்ள ஒரு ஆசிரியை மீது காதலில் வீழ்ந்தார். திருமணத்திற்கு முந்தைய உறவு வைத்தார். வழமை போல.. எல்லா உயிரினங்களிலும் நடப்பது போல.. பெண் கர்ப்பமாச்சுது. 16 வயசு ஆளின்.. படிப்புப் போச்சுது. திருமணம் கட்டி வைக்கப்பட்டார். உழைப்புக்கு வழியில்ல. திருடத் தொடங்கினார். பிடிபட்டார். பின் தகப்பன் பிடிச்சு.. கனடாவுக்கு அனுப்பிவிட்டார். இப்ப என்ன பாடோ தெரியல்ல..!!!

இது ஒரு உதாரணம்...!!!!

திருமணம் என்று 10 பேர் சேர்ந்து கழுத்தில மாலை மாத்தி.. தாலி கட்டி விச்சு.. சாப்பாடு சாப்பிட்டு போயிடுறதும் இலகு. அதன் பின் ஆண் - பெண் விலங்குகள் ஒன்றை ஒன்று உடல்... இனக் கவர்ச்சியில்.. இணைந்து மகிழ்வதும் சகஜம். அதற்கு அப்புறம் தான்.. வாழ்க்கையே திசை மாற ஆரம்பிக்கும். சுதந்திரமா இருந்தவனுக்கு.. தேவையில்லாத பொறுப்புக்கள் வரும். அந்தப் பொறுப்புக்கள் அவனது சக்தி மிஞ்சிப் போனால்.. மாடா உழைக்கும் நிலை வரும். அதனால் தன்னிலை இழப்பான். தன்னை கவனிப்பதையே நிறுத்துவான். கேணயவன் ஆவான். பேயன் ஆவான். ஏன் பெண்ணையன் கூட ஆவான்.  தேவையா இது..?????!

எப்பவும் ஒரு ஆண் தன்னை ஒரு வலுவான இராணுவத்திற்கு சமனாக வைச்சிருக்கனும். அவனிடம்.. கல்வி இருக்கனும். பணம் இருக்கனும். இருப்பிடம் இருக்கனும். அவனின் சொந்த வாழ்க்கையை அவனே தீர்மானிக்கிற பக்குவம் இருக்கனும். இவ்வளவும் இருக்கும் பட்சத்தில்.. அவன் விரும்பத்தக்க ஒரு வாழ்க்கை துணை அமைந்தால்.. அதுவும் அவனுடைய சுதந்திரத்தை பாதிக்காத வாழ்க்கை துணை அமைந்தால்.. மட்டும் தான் வாழ்க்கை சிறக்கும்.

இல்லைன்னா.. இள வயது திருமணம் செய்திட்டு.. அப்புறம்.. நடுவயதில்.. விவாகரத்து ஆகிட்டு.. அப்புறம் கள்ளத் தொடர்பு வைச்சுக்கிட்டு.. இல்ல விவாகரத்து ஆகாமலே கள்ளத் தொடர்பு வைச்சுக்கிட்டு.. இல்ல மனைவிக்கு.. கணவனுக்கு தெரியாமல்.. பூசாரி உட்பட வாய்க்கிறவன்/ள்  கூட எல்லாம்.. டேட்டிங் போய்க்கிட்டு எல்லாம் வாழ்வது வாழ்க்கை கிடையாது. அது விபச்சாரம்..!!!

குடும்பம் என்பது சாதாரண ஆண் - பெண் உடலுறவு சம்பந்தப்பட்ட ஒரு அலகு அல்ல. அது ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அதாவது எங்கள் உடலை ஆக்கியுள்ள பல கோடி கலங்களில்.. ஒன்றைப் போன்றது. ஒரு கலத்தில்.. புற்றுநோய் மாற்றம் கண்டாலே போது.. மொத்த உடலும்.. பாதிக்கப்படலாம். அதுபோலத்தான்.. குடும்பம் என்ற அலகும்.

குடும்பம் என்பதை சரியாக வலுவாக கட்டியமைக்காத காரணத்தாலும் தான் தமிழ் சமூகம்.. அரசியல்.. பொருண்மிய.. சமூக ரீதியில்.. தன் தனித்துவத்தை தக்க வைக்க முடியாமல்.. நாடோடிகளாக வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது. சிந்திச்சுப் பாருங்க.. நீங்கள்.. எல்லாம் வெளிநாட்டுக்கு வரேல்ல.. ஒரு குடும்பம் வைச்சிருக்கீங்க.. அது எப்படி இருக்கும் என்னு...?????!  சும்மா கதை அளக்கலாம். ஆனால் பக்குவப்பட்டு சிந்திக்கும் இன்றைய இளைய சமூகத்தின் ஒரு பகுதியிடம்.. உந்தக் கதைகள் எடுபடாது. சிந்திக்கத் தவறும் இளைய சமூகத்தை தவறாக வழிநடத்தக் கூடாது. அவர்களும் சிந்திக்க வழிகாட்டனும்..!!!

ஆணோ பெண்ணோ.. சுய சார்ப்புள்ளவனாக/ளாக வாழும் நிலையில் உள்ள போது மட்டும் தான் திருமணம் பற்றி சிந்திக்கனும். அதுமட்டுமன்றி அந்த ஆண் அல்லது பெண்ணிடம் போதிய கல்வி.. சமூக.. உலக.. அறிவு இருக்கனும்...! இல்லைன்னா.. வளமான குடும்பங்கள் அமைய முடியாது. அது வளமான சமூகத்தை கட்டி அமைக்க உதவாது. அது அந்த இன மக்களையே பலவீனப்படுத்தும்..!!! :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை எனக்குத்தெரிய கனசனம் கலியாணம் கட்டி பிள்ளைபெத்துப்போட்டும் படிப்பு,பட்டம்,வேலை எண்டு முன்னேறியிருக்கினம். :icon_idea:

மனம் பக்குவமாயிருந்தால்  ஐம்பது வயதிலையும் படிக்கலாம் பட்டமெடுக்கலாம்....கலியாணத்தை செய்ய வேண்டியவயதிலை செய்திடோணும்....காலம் பிந்தினால் தம்பி டொய்ங்ங்ங்ங்ங்.. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

50 வயசில யுனிக்கு வாறவை.. தாங்களும் தங்கட பாடும் என்று பிறரோடு சரியா கலக்க முடியாத நிலையில் தான் இருக்கினம். சிலர் விதிவிலக்காவும் இருக்காங்க.

ஆனால் 60 வயசில் கலியாணம் கட்டி.. பிள்ளை குட்டின்னு.. பெத்திட்டு இருக்காங்க..!!! ஏன் ரேப் கூட செய்யுறாங்க.

எல்லாம்.. சாதிக்கனுன்னு மனசு வைச்சா சாதிக்கலாம். வயசு என்ற சும்மா இலக்கங்கள் அதுக்கு.. தடையாக இருக்க முடியாது. தேவைன்னா வயக்கராவையும் உபயோகிக்கலாம். அங்க ஒன்றும் டொய்ங்ங்ங் ஆகாது. :lol::D

இதெல்லாம் தோல்வி  அடைந்தவர்கள்

தாமதமானவர்களின்  உதாரணம்....

நாங்க

சாதாரண மனித வாழ்வையும்

காலத்தே பயிர் செய் என்பதையும் பேசலாமே ராசா... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தோல்வி  அடைந்தவர்கள்

தாமதமானவர்களின்  உதாரணம்....

நாங்க

சாதாரண மனித வாழ்வையும்

காலத்தே பயிர் செய் என்பதையும் பேசலாமே ராசா... :icon_idea:

தவறு.

காலத்தே பயிர் செய் என்று ஒளவை பாட்டியார் காலத்தில் வைச்சு அதனை சிந்திக்கப்படாது. அன்றைய காலத்தில் சராசரி மனித வாழ்க்கைக்காலம்.. 35.. 40 வருடங்கள் என்று வைச்சுக்கொள்ளலாம்.

இன்று அதுவே 80.. 90 என்று ஆகிவிட்டது.

இந்த நிலையில்.. 20 வயசில் கலியாணம் கட்டில்.. 40 வயசில் தாத்தா ஆனால்.. மிகுதி 40.. 50 வருடங்கள் தாத்தா நிலையில் கழியும் நிலை...???!

இன்றைய நவீன மருத்துவ உலகில்.. மனிதனுக்கு தேவையான உணவும்.. ஊட்டச்சத்தும்.. மருந்துகளும்.. மருத்துவ வசதிகளும்.. சூழல் பாதுகாப்பும்.. சுகாதாரமும்.. மேம்படுத்தப்பட்டு.. ஆயுள் காலம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்.. காலத்தே பயிர் செய் என்ற வாக்கியத்தில்.. அமையும் கால அளவில் மாற்றம் என்பது அவசியமாகியுள்ளது. அத்தோடு இன்றைய வாழ்க்கை காலம்.. தொழில்.. வர்த்தக நிறுவன மயப்பட்டுள்ளதால்.. போட்டி சமூக அமைப்பு உள்ளதால்.. நிறைய இளைய வயதில் தேடல் செய்ய வேண்டி உள்ளது. அதனை குடும்பம் செய்வதில் கழித்தால்.. பின்னாடி வயோதிப மடங்கள் கூட சரியாக கிடைக்குமோ தெரியாது.

எனவே இது மாற்றி யோசிக்க வேண்டிய காலம். பழையதை பிடிச்சுக் கொண்டு நிற்கக் கூடாது. கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி யோசிக்க வாழப் பழகிக்கனும்..!! இளைய சமூகம் அதை நோக்கியே செல்கிறது..!!! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது வைத்தியத்துறை  சம்பந்தப்பட்டது

நீங்கள் அதில் நிபுணர்

எந்த வயதில் பிள்ளை  பெற்றுக்கொள்ளலாம்  என்பதும்

எது பிள்ளைக்கு நல்லது என்பதும் நீங்கள் அறியாததா??

எனது கடைசிப்பிள்ளை ஐனிக்கும் போது

எனது மனைவிக்கு 36 வயசு..

இதுவே தாமதம் என்று தான் வைத்தியர்கள் சொன்னார்கள்

இது எனது அனுபவம்....

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்கு பருவத்தில  பயிர் செய்யாட்டால் நிலம் மட்டும் தரிசாகாது. பயிரும் பயிராகாது. இத்தனை அனுபவத்தர்கள் சொல்லிறம் வீணா அடம் பிடிக்க வேண்டாம். நான் இருபது வயதில் திருமணம் செய்து இன்றுவரை  கணவருடன் சந்தோசமாகத்தான் இருக்கிறன். எதுக்கும் இன்னும் காலம் போகேல்ல. இனி எண்டாலும்  கரை சேருற வழியைப் பாருங்கோ.

ஓ நெடுக்ஸ் வைத்திய நிபுணர் என்பது எனக்கு இதுவரை தெரியாதே அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக வாழ்க்கையில் ஊறியிருப்பவர்களுக்கு நெடுக்ஸ் சொல்வது ஏற்புடையதாக இருக்கலாம்

50 இல்லை கட்டி 65 இல் பிள்ளையே தகப்பனைத் தாத்தா என மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யாவிட்டால் சரி :D:lol:

14, 15 வயதுப் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதற்கு  தாத்தாக்களால் முடியாது. :D 

  • கருத்துக்கள உறவுகள்

இது வைத்தியத்துறை  சம்பந்தப்பட்டது

நீங்கள் அதில் நிபுணர்

எந்த வயதில் பிள்ளை  பெற்றுக்கொள்ளலாம்  என்பதும்

எது பிள்ளைக்கு நல்லது என்பதும் நீங்கள் அறியாததா??

எனது கடைசிப்பிள்ளை ஐனிக்கும் போது

எனது மனைவிக்கு 36 வயசு..

இதுவே தாமதம் என்று தான் வைத்தியர்கள் சொன்னார்கள்

இது எனது அனுபவம்....

அது அப்ப. இது இப்ப.

இப்ப பிரிட்டனில் தாயாகும் பெண்களின் சராசரி வயது 30... என்றாச்சுது.

அரச குடும்பமே.. 30 தாண்டித்தான் கல்யாணம் கட்டுது..! ஆனால் ஊரில ஆண்டிக்குடும்பம் 16 வயசில கட்டுது. காரணம்.. வறுமை. வறுமையோட பிள்ளைப் பெத்து.. அதுக்கு என்னத்தை ஊட்டி வளர்க்கிறது. வறுமையில் பொழுதுபோக்க.. இலகுவாகக் கிடைப்பது.. உடலுறவு போல..!!!! அதெல்லாம் வாழ்க்கை ஆகாது. வாழ்க்கை என்பது நாமே திட்டமிட்டு அமைத்துக் கொள்வது. விபத்தில் விளைந்தால்.. அது சிரமங்களை சந்திச்சு தான் சீரமைய முடியும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்கு பருவத்தில  பயிர் செய்யாட்டால் நிலம் மட்டும் தரிசாகாது. பயிரும் பயிராகாது. இத்தனை அனுபவத்தர்கள் சொல்லிறம் வீணா அடம் பிடிக்க வேண்டாம். நான் இருபது வயதில் திருமணம் செய்து இன்றுவரை  கணவருடன் சந்தோசமாகத்தான் இருக்கிறன். எதுக்கும் இன்னும் காலம் போகேல்ல. இனி எண்டாலும்  கரை சேருற வழியைப் பாருங்கோ.

20 வயதில கலியாணம் செய்த உங்களிடம் சில கேள்விகள்..

1. உங்களின் உயர்கல்வித் தகமை என்ன..?!

2. உங்களின் வேலை அனுபவம் என்ன..??!

3. உங்கள் (தனிப்பட்ட) ஆண்டு வருமானம் என்ன..??!

4. உங்களின் சிறப்பு தகமைகள் என்ன..??!

5. நீங்கள் குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் என்ன..??!

6. நீங்கள் சொந்தமாக உங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த அசையாத.. அசையும் சொத்துக்களை வைச்சிருக்கீங்களா..??! (கணவரின் உழைப்பில் வந்தவை அல்ல..!!)

(இந்த 6 கேள்விக்கும் பதில் சொல்லுங்க.. மிகுதியை சமூகத்திற்கு நாங்கள் சொல்லுறம்..) :D:icon_idea:

மேற்குலக வாழ்க்கையில் ஊறியிருப்பவர்களுக்கு நெடுக்ஸ் சொல்வது ஏற்புடையதாக இருக்கலாம்

50 இல்லை கட்டி 65 இல் பிள்ளையே தகப்பனைத் தாத்தா என மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யாவிட்டால் சரி :D:lol:

14, 15 வயதுப் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதற்கு  தாத்தாக்களால் முடியாது. :D

முஸ்லீம்கள் 7 கலியாணம் செய்து.. பிள்ளை பிள்ளை பெறும் வரை.. பிள்ளைப் பெறுகிறார்களே. யாரும்.. அதனை குறை சொல்லுறதா தெரியல்லையே..????! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

20 வயதில கலியாணம் செய்த உங்களிடம் சில கேள்விகள்..

1. உங்களின் உயர்கல்வித் தகமை என்ன..?!

2. உங்களின் வேலை அனுபவம் என்ன..??!

3. உங்கள் (தனிப்பட்ட) ஆண்டு வருமானம் என்ன..??!

4. உங்களின் சிறப்பு தகமைகள் என்ன..??!

5. நீங்கள் குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் என்ன..??!

6. நீங்கள் சொந்தமாக உங்கள் சொந்த உழைப்பில் அசைத.. அசையும் சொத்துக்களை வைச்சிருக்கீங்களா..??! (கணவரின் உழைப்பில் வந்தவை அல்ல..!!)

(இந்த 6 கேள்விக்கும் பதில் சொல்லுங்க.. மிகுதியை சமூகத்திற்கு நாங்கள் சொல்லுறம்..) :D:icon_idea:

அழுதிடுவன்

சொல்லிப்போட்டன்... :(

  • கருத்துக்கள உறவுகள்

அழுதிடுவன்

சொல்லிப்போட்டன்... :(

எனக்குத் தெரிய அக்கா.. கோவில் அர்ச்சனை தட்டம் வாங்கவும் அவரிட்ட காசு கேட்டு ஓடினது தெரியும். ஆனால் அக்காக்கு தெரியாது. :lol::D  உப்படி வாழுறது என்றால் 16 வயசில கட்டி.. அடிமாடாய் வாழலாம் தானே. அதெல்லாம் வாழ்கையா..???! 

வெளிநாடுகளில் எம்மவர்கள்.. பெட்டையள 18 வயசில கட்டிட்டு வந்து.. பிள்ளை பெறும்.. வளர்க்கும் இயந்திரமாக பாவிப்பதையும் காண்கிறோம்.  அதுகள் உள்ளுக்க படுற வேதனைகள்.. எவருக்கும் தெரியாது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

20 வயதில கலியாணம் செய்த உங்களிடம் சில கேள்வி

முஸ்லீம்கள் 7 கலியாணம் செய்து.. பிள்ளை பிள்ளை பெறும் வரை.. பிள்ளைப் பெறுகிறார்களே. யாரும்.. அதனை குறை சொல்லுறதா தெரியல்லையே..????! :lol::D

அதைத்தானே நாங்களும் சொல்கின்றோம்

 உலகிலே சிறந்த வலு மனித வலு என்பது அவர்களுக்குத் தெரிகின்றது.

அதனால் உற்பத்தியைக் கைவிடுவதில்லை. :D

அதேபோல நாங்களும் நேரத்திற்கு விதைத்தால் மட்டுமே பேரன் பூட்டி

கொள்ளுப்பேரன் என உற்பத்தியில் முன்னேறலாம். :lol::D

அதுவும் நேரத்துக்கு விதைத்தால்தான் மறுபடியும் வீரிய விதைகள் கிடைக்கும்..  :icon_idea:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்றது கையளவு கல்லாதது கடலளவு எண்டு சொல்லுவினம் அதுமாதிரித்தான் அனுபவங்களும்.. :icon_idea:

எல்லாம் வந்தாப்பிற்குதான் கலியாணமெண்டு தம்பி அடம்புடிச்சால் sign0186.gif

கடைசியிலை நெடுக்குராசனுக்கு இந்த நிலமையிலைதான் கலியாணம்... :D  :lol: 9701520-cartoon-of-old-man-with-a-walkin

விசுகர்!  நீங்களாவது பக்குவமாய் எடுத்து சொல்லுங்கப்பா........ :(

  • கருத்துக்கள உறவுகள்

20 வயதில கலியாணம் செய்த உங்களிடம் சில கேள்விகள்..

1. உங்களின் உயர்கல்வித் தகமை என்ன..?!

2. உங்களின் வேலை அனுபவம் என்ன..??!

3. உங்கள் (தனிப்பட்ட) ஆண்டு வருமானம் என்ன..??!

4. உங்களின் சிறப்பு தகமைகள் என்ன..??!

5. நீங்கள் குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் என்ன..??!

6. நீங்கள் சொந்தமாக உங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த அசையாத.. அசையும் சொத்துக்களை வைச்சிருக்கீங்களா..??! (கணவரின் உழைப்பில் வந்தவை அல்ல..!!)

(இந்த 6 கேள்விக்கும் பதில் சொல்லுங்க.. மிகுதியை சமூகத்திற்கு நாங்கள் சொல்லுறம்..) :D:icon_idea:

முஸ்லீம்கள் 7 கலியாணம் செய்து.. பிள்ளை பிள்ளை பெறும் வரை.. பிள்ளைப் பெறுகிறார்களே. யாரும்.. அதனை குறை சொல்லுறதா தெரியல்லையே..????! :lol::D

அவ சிவனே என்டு வீட்டில அசையாமல் இருந்த ஒரு சொத்தையும்  தண்ணியை ஊத்தி அசைச்சுப் போட்டா ...!

இப்ப அசையும் சொத்தெண்டு இருக்கிறது  தோட்டத்தில நிக்கிற நாலைந்து றோசாச் செடிதான்...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

கற்றது கையளவு கல்லாதது கடலளவு எண்டு சொல்லுவினம் அதுமாதிரித்தான் அனுபவங்களும்.. :icon_idea:

எல்லாம் வந்தாப்பிற்குதான் கலியாணமெண்டு தம்பி அடம்புடிச்சால் sign0186.gif

கடைசியிலை நெடுக்குராசனுக்கு இந்த நிலமையிலைதான் கலியாணம்... :D  :lol: 9701520-cartoon-of-old-man-with-a-walkin

விசுகர்!  நீங்களாவது பக்குவமாய் எடுத்து சொல்லுங்கப்பா........ :(

அப்ப லேட்டா கல்யாணாம் கட்டினால், தடியை இப்படி கீழதான் பிடிக்க வேண்டுமோ?

எவ்வளவு நிபுணராக இருந்தும் என்ன பயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.