Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு

Featured Replies

நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு.

இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் முன்னால் நோர்வே வெளியேறக் கோரி சிங்களவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நோர்வே தூதரகம் முன்னால் தீக்குளித்த நபர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிற்சைகள் பலனின்றி மருத்துவமனைலேயே உயிரிழந்துள்ளார்.

pathivu

என்ன இது இந்தியா காறர் கொடுத்த அட்வைசோ....???

அது தான் நமக்கும் நல்லம்

சண்டை வந்தாதான் நாங்கள்

சமதானமாய் வாழைலாம்

இப்படி இன்று மக்கள் பேசினம்...

ஏன் உவர் ரம்குலவ குழளிக் விட்டிருக்கலாமே...

உலகம் எல்லாம் திரும் பாத்திருக்கும்....

கா..கா..கா..

உவங்கட அரிசியும் மாவும்...சா...சா...

நாற்றம் கண்டியளே....

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் தீ குளிச்சவன். யார் பாத்த வச்சார்களோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் தீ குளிச்சவன். யார் பாத்த வச்சார்களோ??

வேறு யார், சிவப்பு சட்டைக்காரன் அல்லது மொட்டை அடிச்சவன்!

இப்படியே எல்லாச் சிங்களவரும் தீக்குளிச்சால் பிரச்சனை சீக்கிரம் தீர்ந்து போய்விடும். :twisted:

வேறு யார், சிவப்பு சட்டைக்காரன் அல்லது மொட்டை அடிச்சவன்!

யார் பத்த வைச்சவர்களைத்தானே சொல்லுரீங்கள்.... :wink: :lol::lol:

அப்ப சர்வதேச நிலமைகள் அந்தளவுக்கு மாறிட்டுதா? என்ன சமாதானம் அண்ணையின் கவலை எல்லாம் உந்த சிங்களவருக்குத் தெரியாதோ? சிங்களவர் மோடரோ இல்லை இந்தச் சமாதான அண்ணை தான் மோடரோ? ஒண்டுமா விளங்கேல்ல?

சா சா அவருக்கு கவலை எல்லாம் தமிழரை பற்றித்தானாம்... :lol::lol::lol:

3000 வருடங்கள் பாரம்பரியத்தின் காவலனாம் 8)

யாரோ ஒரு அப்பாவி சிங்களவன் தெற்கு அரசியல்வாதிகளின் இனவெறி பேச்சுகளை கேட்டு அநியாயமா உயிரை விட்டிருக்கார். இந்த சம்பவமே இன்னும் கொஞ்ச சிங்களவர்களை உசுப்பேத்த இனவெறியர்களுக்கு உதவும் என்பதுதான் கவலைக்குரிய விடயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு யார், சிவப்பு சட்டைக்காரன் அல்லது மொட்டை அடிச்சவன்!

யாரோ ஒரு அப்பாவி சிங்களவன் தெற்கு அரசியல்வாதிகளின் இனவெறி பேச்சுகளை கேட்டு அநியாயமா உயிரை விட்டிருக்கார். இந்த சம்பவமே இன்னும் கொஞ்ச சிங்களவர்களை உசுப்பேத்த இனவெறியர்களுக்கு உதவும் என்பதுதான் கவலைக்குரிய விடயம்

இதைத்தானேப்பா சிங்கள இனவெறியரசும் நமக்கெதிராகச் சொல்லுறாங்க. இதயே நீங்களும் திரும்பச் சொன்னா அப்ப அவங்க சொல்லுறது உண்மையா :roll:

சிங்களவர்களிடம் தற்போது தனது இனம், சிறீலங்கா தனக்கு மட்டுமே உரியது என்னும் நிலை மிகவும் அழமாக விதைக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழர்கள் இன்னும் பிரிந்து நிற்க முயல்வதுதான் வேதனைக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் புட்டுக்கிட்டானாம்

அவருக்கு 3 பிள்ளைகளாம்!

ஆசை வார்த்தை காட்டி மோசம் செஞ்சிட்டாங்கள்!

பாவம் அவருக்கு என்ன பொருளாதார கஸ்டமோ?

வராதா பின்ன?

கூப்பிட்ட நேரமெல்லாம் சிவத்த சட்டை போட்டுக் கொண்டு நாய்குட்டி மாதிரி கொடி பிடித்துக் கொண்டு பின்னால் திரிந்தால் வந்த வினை!

பாவம் மனுசன் தன்னுடைய பொருளாதார கஸ்டத்தைப் பற்றி கொஞ்சம் யோசித்திருப்பார்!

சிங்கள ஊடகங்களின் மாயத்திரைக்கு அங்கால பார்கிற வசதி அவருக்க இருந்திருக்காது!

நோர்வேக்காரன் தான் எல்லாத்திற்கும் காரணம் என்ற வீரவன்சவின் வீரவசனத்திற்கு உணர்சிவசப்பட்டுட்டார்.

அவரின் ஆத்மா சாந்தியடைவதாகுக!

யாராவது அவரிடம் பேசின காசை JVP இடமிருந்து குடும்பத்திற்கு வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுங்களேன்?

:cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006100801.jpg

இதுதான் அந்த தீக்குளிப்பா?

நன்றி சங்கதி

தெசியக்கொடியின் மதிப்புதெரியுமா இந்த மைசூர் பருப்பு எதிர்பாளர்களுக்கு

அதுவும் விபச்சாரியின் சகோதரனை தலைவனாக கொண்ட கட்சி நினைக்க சிரிப்பாகவில்லை

நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளோடு ஒப்பிடுகையில் விபச்சாரம் செய்வது எவ்வளவோ மேல்..........................சத்தியமா இதை நான் சொல்லேலை இந்த சிவப்புச் சட்டை தலைவன்தான் சொன்னது............

நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளோடு ஒப்பிடுகையில் விபச்சாரம் செய்வது எவ்வளவோ மேல்..........................சத்தியமா இதை நான் சொல்லேலை இந்த சிவப்புச் சட்டை தலைவன்தான் சொன்னது............

அப்ப தன்னைவிட தன் அக்கா ஒழுக்கமானவா எண்டு சொல்லுரார் போல நல்லது நடக்கட்டும்

ஒரு நாள் ஒரு பெரிய பார்ட்டி நடக்குமாம் அங்கு பலபேர் கூடி இருப்பார்கள் அப்போது ஒருவார் ஒரு அறிவிப்பு விடுவாராம் இந்த நீச்சல் குளத்தில் கனக்க பாம்பு முதலைகள்

இருக்கு யார் இந்த கரையில் இருந்து அடுத்த கரை வரை நீந்தி வருகிறார்களோ அவருக்கு வெகுபொறுமதியான பொருள்கள் பரிசாக கொடுக்கப்படும் என்று யாரும் நீந்த முயற்ச்சிக்கவில்லை ஆனா திடிர் என்று ஒருவார் குதித்து நீந்தி அடுத்த கரைக்கு வந்துவிடுவார் எல்லோரும் அவரிடம் எப்படி உங்களால் முடிந்தது என்று கேட்டனராம் அப்போது அவர் சொன்னாரம் எந்த பரதேசி என்னை தண்ணிக்குள்ளே தள்ளி விட்டது என்று இப்போ எனக்கு தெரியனும் என்று :P

அப்படி தான் இதுவும் :P :P :P :P :P

அப்ப தன்னைவிட தன் அக்கா ஒழுக்கமானவா எண்டு சொல்லுரார் போல நல்லது நடக்கட்டும்

29723021up9.gif

29723021up9.gif

:P :P :lol::lol:

ஜமுனா targo road சுவிமிங் புூல்ல நிண்டவா

ஜம்மு டீ குடிக்கிறது என்று சொல்லுறதை இந்த மனுசன் தப்பா எடுத்து விட்டான் போல

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

கடனைச் செலுத்த முடியாமல் தான் அவர் இறந்தவராம். தினக்குரலில் வந்த செய்தி

ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப்பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் படத்துடன் வெளியான செய்தியொன்றை வாசித்தபோது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைக்கு எதிராகத் தென்னிலங்கையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தீக்குளித்துத் தற்கொலை செய்கின்ற அளவுக்கு `தீவிரவாதிகளாக' மாறிவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசிய நலன்களுக்கு நோர்வே துரோகமிழைப்பதாக ஆத்திரமடைந்த ரேமண்ட் பெரெய்ரா என்ற 45 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு வார்ட் பிளேஸில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக தனக்குத்தானே தீமூட்டித் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவர் மரணமடைந்ததாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நோர்வே தூதரகத்தை நோக்கி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியதற்கு மறுநாள் இடம்பெற்ற இச்சம்பவம் முதற்தடவையாக ஒருவர் நோர்வேக்கு எதிரான இயக்கத்தில் தனக்குத்தானே தீமூட்டிய சம்பவமாக அமைந்ததாகவும் தீவிர தொழிற் சங்கவாதியான அவர் ஜே.வி.பி.யுடனோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனோ தொடர்புடையவரல்ல என்ற போதிலும், முதல்நாள் ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான பெரெய்ரா நோர்வேயை வெள்ளைப் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை எடுத்து வந்ததாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. `நோர்வேயைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் எனது தந்தையார் இலங்கையில் இருந்து நோர்வே வெளியேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார். நாட்டை நேசித்த அவர் இராணுவத்தில் நான் சேருவதை விரும்பினார்' என்று பெரெய்ராவின் மகன் சுரேஷ் ஷமாரா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறு நாளான திங்கட்கிழமை இன்னொரு ஆங்கிலப் பத்திரிகை நோர்வேயின் செயற்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பெரெய்ரா தனக்குத் தானே தீ மூட்டவில்லையென்றும் பட்ட கடனைச் செலுத்த முடியாததால் விரக்தியடைந்தே அவர் அவ்வாறு செய்து கொண்டதாக மரண விசாரணையின் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் முன்பக்கச் செய்தி வெளியிட்டது. நிதிக் கம்பனியொன்றின் ஊடாக கொள்வனவு செய்த முச்சக்கர வண்டிக்கான மாதாந்தத் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமலும் நெருக்கடியை எதிர் நோக்கிய பெரெய்ரா ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்திய தினம் மது அருந்தி விட்டு இரத்மலானை வீட்டில் இருந்தாரே தவிர, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. அத்துடன், அவர் எந்தவிதமான அரசியல் தொடர்புமற்றவர் என்று மனைவி மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாகவும் அச் செய்தியில் கூறப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிறிதொரு ஆங்கிலத் தினசரி `கடன் பளு காரணமாக மரணம்' என்ற தலைப்பில் பெரெய்ராவின் தற்கொலை பற்றிச் செய்தி வெளியிட்டது. நண்பர் ஒருவரிடம் கடனாக வாங்கிய பணத்தை பெரெய்ராவினால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சம்பவத்திற்கு முதல் நாள் அவரது வீட்டுக்கு வந்த நண்பர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாமதமாவது குறித்து பெரெய்ராவிடம் ஆத்திரத்தை வெளிக் காட்டினார். மறு நாள் காப்புறுதித் தவணைப் பணத்தைச் செலுத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற அவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் நம்புகின்றனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப் பத்திரிகை பெரெய்ராவின் தற்கொலைக்கு முற்று முழுதாக அரசியல் காரணத்தை கற்பிக்கும் தொனியிலேயே செய்தியை வெளியிட்டிருந்தது. மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நோர்வே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய சந்தர்ப்பத்தில், நோர்வேயின் செயற்பாடுகள் மீது ஏற்கனவே பேரினவாதச் சக்திகளினால் தெரிவிக்கப்பட்டு வரும் வெறித்தனமான குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் சிங்களமக்கள் மத்தியில் சமாதான முயற்சிகள் தொடர்பில் மேலும் குரோத உணர்வைத் தூண்டிவிடும் நோக்கிலும் இச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கடன் பளு காரணமாக தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டு பரிதாபகரமாக மரணமடைந்த பெரெய்ராவின் மரணத்தை மிகவும் வெறுக்கத்தக்கமுறையில் ஓர் அரசியல் தொனியுடனான செய்தியாக்குவதில் அந்த வாரப்பத்திரிகை கடைப்பிடித்த அணுகுமுறை அநாகரிகமானது என்பதே எமது அபிப்பிராயம். தென்னிலங்கையில் மக்களை சமாதான முயற்சிகளுக்கு எதிராகத் திருப்புவதில் எந்தளவு தூரத்துக்கு பத்திரிகைகள் பிற்போக்குத் தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தும் இன்னொரு உதாரணம் இதுவாகும்.

நேற்றைய தினம் உலக உள ஆரோக்கிய தினமாகும் (ஙிணிணூடூஞீ ?ஞுண?ச்டூ ஏஞுச்டூ?ட ஈச்தூ).அத்தினத்திற்கான தொனிப்பொருள்` விழிப் புணர்வைக் கட்டியெழுப்புதல் - ஆபத்தைக் குறைத்தல்; உளநோயும் தற்கொலையும்' என்பதாகும். உள ஆரோக்கியக் குறைபாடுகளினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உலகில் கடுமையாக அதிகரித்திருப்பதன் காரணத்தினால், அத்தகைய தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத்தடவை அந்தத் தொனிப் பொருளில் உலக உள ஆரோக்கிய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பெரெய்ராவின் தற்கொலையும் அது தொடர்பில் செய்தி வெளியிடுவதற்கு அந்த ஆங்கில வாரப் பத்திரிகை கொண்ட அணுகு முறையும் தற்கொலையைநாடுபவர்களை விட, உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஊடகத்துறையில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியாமல் கிளப்புகின்றன.

தீக்குளித்தவரின் விடயம் வித்தியாசமானதாம். அவர் நாட்டுப் பற்றினாலோ Nஐவிப்பினருக்காகவோ தீக்குளி;க்கவில்லையாம். சந்தர்ப்பததை சிப்புபாடுகள் சாதகமாக்கப் பார்கிறார்கள் என்று ஒரு செய்தி கசியுது. பொறுத்திருந்து பாப்பம்;

ஈழத்திலிருந்து

ஐhனா

இப்படி பல சிங்களவர் மனமுவந்து தீக்குளித்தால் விகிதாசாரத்தில் மாற்றம் வருமோ?

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லாம் இறந்த ஒருவரைப் பற்றி கதைக்க கூடாது என்று சொல்ல ஆட்கள் வரப்போகினம் :!: :!: :!:

அடக்கி வாசியுங்கோ :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லாம் இறந்த ஒருவரைப் பற்றி கதைக்க கூடாது என்று சொல்ல ஆட்கள் வரப்போகினம் :!: :!: :!:

அடக்கி வாசியுங்கோ :wink: :wink:

ஆமாம் குறுக்காலபோனவனை இன்னும் காணெல... :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.