Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடு பிடித்துள்ள சுவரொட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1a(784).jpg
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு தலைநகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'ஐரோப்பிய ஒன்றியம்  தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது.

'புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி  ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமைகோரியுள்ளது. 

இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை  கடந்த வியாழக்கிழமை (16),  ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்நதமை குறிப்பிடத்தக்கது.
2(4130).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130361-2014-10-18-07-02-07.html

  • கருத்துக்கள உறவுகள்

தடையை கொண்டு வந்த விதம்தான் பிழை.. தடை பிழை என்று சொல்லவில்லை..

இதை இங்கே மணிக்கணக்காக எடுத்துச் சொல்லும் கோசன், நான்தான் போன்றவர்கள் தற்போது கொழும்பு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.. :wub: போஸ்டர் ஒட்டியவர்களுக்கு பாடம் எடுக்கப்படவுள்ளது.. :D வதந்தியின்பேரில் ரணில் பாதிக்கப்படுவதை இவர்கள் இருவரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போஸ்டரை ஒட்டியவர்களுக்கு தீர்ப்பை பற்றி கவலை இல்லை, புலிப்படம் காட்டி மகிந்த வெண்டால் போதும்.

இங்கே துள்ளி குதிப்பவர்களுக்கும் அப்படியே - தாம் வென்று விட்டதாயும் தடை நீங்கி விட்டதாயும் மனப்பால் குடிதால் போதும்.

முன்னையவர்கள் சுளியர்கள், பின்னையவர்கள் மொக்குக் கூட்டம்.

உண்மையில் இங்கு யாருமே துள்ளி குதிக்கவில்லை. ஏதோ ஒரு சிலர் புரியாமல் ஏதோ எழுத எங்கே என்று காத்திருந்தது போல் அந்த ஒரு சிலருக்கு பதில் சொல்ல நாள் முழுவதையும் செலவிடுபவர்கள உண்மையான மொக்கை கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போஸ்டரை ஒட்டியவர்களுக்கு தீர்ப்பை பற்றி கவலை இல்லை, புலிப்படம் காட்டி மகிந்த வெண்டால் போதும்.

இங்கே துள்ளி குதிப்பவர்களுக்கும் அப்படியே - தாம் வென்று விட்டதாயும் தடை நீங்கி விட்டதாயும் மனப்பால் குடிதால் போதும்.

முன்னையவர்கள் சுளியர்கள், பின்னையவர்கள் மொக்குக் கூட்டம்.

கடந்த இரண்டு நாளா இரவு பகலா யார் துள்ளிகுதிச்சதுஎன்டு எங்களுக்கு தெரியும்  :rolleyes:  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போஸ்டரை ஒட்டியவர்களுக்கு தீர்ப்பை பற்றி கவலை இல்லை, புலிப்படம் காட்டி மகிந்த வெண்டால் போதும்.

இங்கே துள்ளி குதிப்பவர்களுக்கும் அப்படியே - தாம் வென்று விட்டதாயும் தடை நீங்கி விட்டதாயும் மனப்பால் குடிதால் போதும்.

முன்னையவர்கள் சுளியர்கள், பின்னையவர்கள் மொக்குக் கூட்டம்.

கோஷான்,

உங்கள் கருத்துக்களில் உள்ள உண்மையை ஆதரிக்கும் அதே வேளை, அதை நீங்கள் முன்வைக்கும் விதம் தான் பலரைச் சங்கடப் படுத்துகிற்து என்று நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு, புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறான அடிப்படையில் கொண்டுவரப்படதென்கிற நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் யதார்த்தமானவை. ஆனால் அதை நீங்கள் சொல்லும்விதம்தான் பலரைக் காயப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர என்போன்ற பலருக்கு அவர்கள் மேல் அபிமானம் என்றும் இருந்துகொண்டுதான் இருக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர்களின் போராட்டத்தின் வீரியம், தாக்குதல்களில் அவர்கள் ஈட்டிட்ய வெற்றிகள், தமிழரின் தாயகத்துக்கான அவர்களது அயராத முயற்சி...இப்படிப் பல இருக்கலாம். இவைதான் மற்றைய இயக்கங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்தின. அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டிலிருந்துகொண்டதும், சில மக்கள் விரோத செயற்பாடுகளும் அவர்கள் மீதான புலிகளின் தாக்குதல்களுக்கும், தடைகளுக்கும் காரணமாக அமைந்தன என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு இதில் வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்பதனையும் ஏற்றுக்கொள்கிறேன்.

புலிகள் தம்மை மக்கள் முன் வெளிப்படுத்திய விதம்தான் அவர்களின் தவறுகளைக் கூடச் சர்வ சாதாரணமாக என்னைப்போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள்வும், சரியென்று வாதிடவும் காரணமாக்கின என்று நினைக்கிறேன்.

2009 ற்குப் பிறகு புலிகளில்லாத ஒரு தமிழ் ஈழ அரசியல் என்பதை என்னைப் போன்ற பலர் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. புலிகள் ராணுவரீதியில் அழிக்கப்பட்டார்கள் என்பதை என்னால் அன்று ஜீரணிக்கவே முடியவில்லை. எல்லாம் கனவாகிவிடாதா என்றுகூட ஏங்கியிருக்கிறேன். தனிமையில் பலமுறை அழுதிருக்கிறேன். இன்றுவரை அவர்களின் இழப்பு என்னைக் கவலை கொள்ளச் செய்கிறது.

என்னைப்போன்றே பலரும் இங்கே புலிகளின் அபிமானிகள்தான் என்பதை நீங்கள் கருத்துக்களிலிருந்து அறிந்திருப்பீர்கள். 2009 இற்குப் பின்னர், நம்பிக்கையின் கீற்றுக்கள்  எங்காவது தெரிகின்றானவா என்று பலரும் பார்த்துக்கொண்டிருக்க வந்ததுதான் இந்த ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்பு. இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு உப்புச் சப்பில்லாத ஒன்றாகத் தெரியலாம். ஏனென்றால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று தீர்ப்புச்  சொல்லவில்லை, தடை கொண்டுவந்த விதம்தான் பிழை என்கிறது அந்த நீதிமன்றம், ஆகவே இதனால் எதுவுமே பெரிதாக மாறிவிடப்போவதில்லை, நடந்துவிடப்போவதில்லை என்பதை எளிதில் புரிந்துகொண்டு விட முடியும்.

ஆனால் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் நிலையில் என்னைப் போன்றவர்கள் இல்லை. எமக்கு இது புதிய நம்பிக்கையைத் தரும் ஒரு ஆரம்பம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. பொய்யாகவேனிலும் நம்பத் தோன்றூகிறது. ஏனென்றால் இந்த 5 வருடங்களில் தோல்விகளையும், காட்டிக் கொடுப்புக்களையும், நய வஞ்சகத்தனங்களையும், தொடர்ச்சியான சிங்கள் ஆக்கிரமிப்புக்களையும் மட்டுமே கண்டு வந்த எமக்கு இது ஒரு ஒளிக்கீற்று. சனல் 4 இனைப் போல, நவிப்பிள்ளையைப் போல, இலங்கைக்கெதிரான தீர்மானங்களைப்போல இதுகூட ஒரு நம்பிக்கைக் கீற்றுத்தான். நாளையே அது மின்னி மறைந்தும் விடலாம். ஆனால் இன்றைக்கிதுபோதும் என்கிறது மனது. ஆகவே எழுதுகிறோம். நாங்கள் இதுவரை நினைத்தவையும், விரும்பியவையும் நடக்கவில்லை. இதுவும் அப்படியே போகலாம்.

இதனை விளங்கிக் கொண்டால் நீங்கள் ஆத்திரப்படத் தேவையில்லை.

கோஷான், ....

ரகு நீங்கள் சொல்லுவது மிக மிக சரி  ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் ...இங்கு துள்ளுபவர்களை பார்த்தால் 2009க்கு முன் எப்படி மக்களை உருட்டி பிரட்டி காசு சேர்த்தவர்கள் செய்யும் செயலாகவே உள்ளது.. (அதாவது அவர்கள் வந்து கேட்டால் மக்கள் மறு பேச்சு பேசாமல் கொடுக்க வேண்டும் என்று..தலைவர் சொல்லிட்டார் நீங்கள் தரத்தான் வேண்டும்...)..இங்கு ஆடுபவர்களும் அதே தொனி அதாவது அவர்கள் சொல்வது எல்லாம் சரி..மற்றவர்கள் அடங்க வேண்டும் என்பது......பின் இவர்களை பார்த்து திருப்பி கதைக்காவிட்டால்...நாம் திருப்பியும் ஆரம்பித்த இடத்துக்கே செல்வோம்.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இன்னும் சிறு கூண்டுக்குள்ளேயே நிற்கின்றீர்கள். 

நீங்கள் இன்னும் சிறு கூண்டுக்குள்ளேயே நிற்கின்றீர்கள். 

கூண்டை விட்டு எப்போவோ வெளியே வந்தாயிற்று...

கூண்டுக்குள் திருப்பியும் அடைப்பார்களோ என்று தான் எதிர்ப்பது...

ரகு நீங்கள் சொல்லுவது மிக மிக சரி  ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் ...இங்கு துள்ளுபவர்களை பார்த்தால் 2009க்கு முன் எப்படி மக்களை உருட்டி பிரட்டி காசு சேர்த்தவர்கள் செய்யும் செயலாகவே உள்ளது.. (அதாவது அவர்கள் வந்து கேட்டால் மக்கள் மறு பேச்சு பேசாமல் கொடுக்க வேண்டும் என்று..தலைவர் சொல்லிட்டார் நீங்கள் தரத்தான் வேண்டும்...)..இங்கு ஆடுபவர்களும் அதே தொனி அதாவது அவர்கள் சொல்வது எல்லாம் சரி..மற்றவர்கள் அடங்க வேண்டும் என்பது......பின் இவர்களை பார்த்து திருப்பி கதைக்காவிட்டால்...நாம் திருப்பியும் ஆரம்பித்த இடத்துக்கே செல்வோம்.....

இங்கு நீங்கள் கூறுவது போல் பாரியளவில் எவரும் துள்ளிக்குதிக்கவில்லை. ஒரு சிலர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி சந்தோசமாக தமது கருத்தை தெரிவித்துள்ளார்கள். அவ்வாறாக அவர்கள் சந்தோசம் அடைவது இயல்பானதே. அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை. இதை விட ஆயிரம் மடங்கு அடக்குமுறை செய்யும் சிங்களவனிடம் பணிந்து போக வேண்டும் என பாடம்எடுக்கும் நீங்கள் அடக்குமுறை பற்றி பேசுகிறீர்கள். எந்த அடக்குமுறையையும் அநீதியையும் எதிர்த்து போரிடவேண்டும் என்று தன்னையே கொடுத்த சேகுவராவிற்கே அவமானம். புலிகளின் தவறுகள் கண்டிக்கபடவேண்டியது. வாசஸ்தவம் தான். தமிழ் மக்களுக்கு அந்த அருகதை உண்டு.  ஆனால் சிங்கள பேரினவாத அரசிற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு அந்த அருகதை இல்லை.

டிரிங்கோ இங்கு நானோ..அல்லது வேறு யாருமோ சிங்களவனுக்கு அடங்கி போ என்று சொல்லி போட்ட பதிவை காதடுங்கள்....நன்றி....

டிரிங்கோ இங்கு நானோ..அல்லது வேறு யாருமோ சிங்களவனுக்கு அடங்கி போ என்று சொல்லி போட்ட பதிவை காதடுங்கள்....நன்றி....

நீங்கள் நேரடியாக அப்படி கூறவில்லை.ஆனால் உங்கள் பதிவுகளில் பல அதையே சுட்டி நிற்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். புலிகளை எப்போதும் வசைபாடும் நீங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிர்வாக ரீதியாக தவறுகளை இங்கு மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது கூட  உடனடியாக முந்தி கொண்டு வந்து அரசிற்கு வக்காலத்து வாங்குவீர்கள். அரசின் பிரதிநிதிபோல் பேசுவீர்கள்.இதற்கான ஆதாரங்கள் யாழில் பல திரிகளில் காணலாம். உங்களுக்கும் அது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். புலிகளின் இறுதிகாலத்தில் நடைபெற்ற பணமோசடிகள் பற்றி திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள். ஒரு  நிழல் அரசை நிர்வகித்த ஆயுத போராட்ட இயக்கம் தனது பாரியளவான பண தேவை மற்றும் பண கையாள்கை போன்றவற்றை சட்டரீதியாக செய்ய முடியாத நிலையில் தனி நபர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது தவிர்க்கமுடியாதது. புலிகள் பாரிய இராணுவ தோல்வியை சந்தித்த நிலையில் கேட்க ஆளில்லாத நிலையில் அந்ததனிநபர்கள் பண மோசடிகளில் ஈடுபடுவது இயல்பானதே. புலிகள் பலத்துடன் இருந்த போது இத்தககைய பண மோசடிகள் இடம்பெற்றால் கடும் தண்டனை கொடுப்போர்கள்.  இதற்காக  மீண்டும் மீண்டும் வசைபாடும், வசை பாடிவரும் நீங்கள் சட்டபூர்வமான இலங்கை அரசின் தொடர்சியாக நடந்து வரும் பல கோடிக்கணக்கான பணமோசடி ஊழல்கள் குறித்து மூச்சு கூட விடுவது கிடையாது. இவை எல்லாம் எமது நாட்டு  மக்களின் வரிப்பணம் தானே. ஏன் அது பற்றி நீங்கள் பேசுவதில்லை. இலங்கையில் பண மோசடி சேய்பவர்களை எல்லாம் ஆட்சியில் உயர் பீடத்தில் உள்ளவர்களே. அதுவும் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக ஆட்சியில்.

டிரிங்கோ எனது நிலைப்பாடு புலிகளும் இலங்கை அரசும் ஒரே மாதிரியானவர்களே...இலங்கையரசு சிங்களம் பேசி எங்களை (சாதாரண தமிழ் மக்களை) கட்டுபடுத்துகிறது... புலிகள் தமிழ் பேசி எங்களை கட்டுபடுத்துகிறார்கள்..ஆகவே எனது பார்வையில் புலியும் ஒன்று..இலங்கை அரசும் ஒன்று..ஒன்றை விட ஒன்று திறம் அல்ல.... அப்படியே எனது பதில்கள் இங்கு இருக்கும்...

தமிழீழம் கண்டாப்பிறகு அங்கு பாலும் தேனும் ஓடும்..மாதம் மும்மாரி பொழியும்...மனு நீதி சோழனுக்கே தலைவர் பாடம் எடுப்பார் என்பவர்களை சீண்டுவதாகவே எனது பதில் இருக்கும்...

என்னை பொறுத்தமட்டில் அடிபட்டு இன்றே சாவோம்.....அடிபடாமல் இன்னும் ஒரு கிழமையில் சாவோம் என்றால்..அடிபடாமல் அந்த ஒரு கிழமையும் உயிரோடு இருந்து தப்ப வழி பார்ப்போம் என்ற நிலை தான்....

தேர்தல் பிரச்சாரத்துக்காகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இல்லை நீங்கள் அவ்வாறு பார்க்கவில்லை இரண்டையும் ஒரே மாதிரி பார்ப்பதாக பதில் கூறி மழுப்புகிறீர்கள். தவிர எப்போதும் சிங்கள அதிகார வர்க்கம் செய்தும் பாரிய கொள்ளைகள், பண மோசடி குறித்தோ, அவர்களின் அஜாகரம் பற்றியோ நீங்கள் பேசுவதில்லை. புலிகள் பற்றி மட்டுமே வசைபாடுகிறீகள். காரணம் அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பது மட்டும் தான். மற்றபடி அவர்களிம் தவறுகள் பற்றி கூட உங்களுக்கு அக்கறை இல்லை.

இலங்கையரசிடம் இருந்து நான் காசை விட்டெறிந்து உயிர் தப்பலாம்...ஆனால் புலிகளிடம் அதுவும் முடியாது...ஆகவே நான் இலங்கையரசை பற்றி கவலைப்பட தேவையில்லை...

காசிருந்தால் இலங்கையரசு இயந்திரம் நான் நினைக்கும் படி  (எனக்கு தேவையானவற்றை ) செயல்படும்...இல்லையென்றால் அது வைக்கும் சட்டத்தின் படி நான் வளைவேன் (புலிகளிடமும் அதையே செய்தோம்)....

ஆகவே தான் நான் இலங்கையரசை பற்றி நான் கவலைப்பட போவதில்லை... மற்றது இப்போது இலங்கையரசை பகைத்து விட்டு இலங்கை போக முடியுமா???? ---2009க்கு முன் புலிகளை பற்றி அவதூறு கதைத்து விட்டு யாழ்/வன்னி போகமுடியுமா???

இப்போது சுயநலமாக இருப்பதை விட வேறு வழியில்லை...

உண்மைதான் நாந்தான். இலங்கையை பொறுத்தவரை நீங்கள் நினைப்பது தான் சரி.  நீங்களோ நானோ அங்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக சிறு முணுமுணுப்பு கூட செய்யாமல் தான் அங்கு செயற்பட வேண்டும். யார் தவறிழைக்கிறாரோ அதைப்பற்றி அக்கறைபடாமல் யார் பலத்துடன் இருக்கிறார்களோ அவர்கள் செய்வதை சரி என்று கூறுவது தான் இலங்கை போன்ற நாடுகளில் பாதுகாப்பாக வாழும் வழிமுறை. நன்றிகள் நாந்தான்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இங்கே பழைய தவறுகளை ஏற்கும் பக்குவம் யாருக்கும் இல்லை. நான் ஒரு கட்சியோ, இயக்கமோ சாராதவன் தவறுகளை சுட்டி கட்டுவதால் என் மீது விழும் வசவுகளைப் பாருங்கள்.

இவர்களுக்கு இப்ப்டி சொன்னாலே உறைக்குதில்லை. தடவி தடவிச் சொன்னால் மட்டும்?

சிங்கள இனவாதிகள் எவ்வாறு அரசுக்கு எதிராக பேசும் அனைவரையும் புலிகள் என்று அழைக்கிறார்களோ அவ்வாறே இவர்களும் புலிகளுக்கு எதிராக யார் என்ன கூறினாலும் அவர்கள் சிங்கள கைகூலி, ஒட்டுக்குழு என்று வசை பாடுகின்றனர்.
இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.