Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் யுத்தம் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுல இராணுவத்தின் இழப்ப பாத்து மகிழ கூடாதுன்னு சொன்ன சிலர் மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்ட போது..போட்டி போட்டு கொண்டு மகிழ்ந்தவர்கள்....

  • Replies 133
  • Views 21.6k
  • Created
  • Last Reply

சுண்டல் பாபா நான் தானே குறிபிட்டு இருந்தேன் நீங்கள்

இதுல இராணுவத்தின் இழப்ப பாத்து மகிழ கூடாதுன்னு சொன்ன சிலர் மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்ட போது..போட்டி போட்டு கொண்டு மகிழ்ந்தவர்கள்....

ஒன்று சொன்னால் அவர்கள் அப்படி வேறு ஒன்று தான் சொல்வார்கள் அவர்களுக்கு ஆமாம் போட்டால் தான் இங்கு நிற்கலாம்

:wink: :wink:

நக்குவது நிற்கற்க நிற்கற்கின்

புலம்புவது இயல்பே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் வெல்லுகினற பொழுது மகிழ்வோம்..இழப்புகள் ஏற்படுகின்போது அழுவோம் இது எங்கள் உரிமைஃஃஃ

ஆனா தமிழன் வெல்லுறதுக்கு ஒரு மண்ணும் செய்ய மாட்டம்.. :lol:

தூயவன் உண்மையில் உறவுகளை பறிகொடுத்து கை காலை இழந்து அவலங்களை நேரே பாத்து அனுபவித்து கொண்டிருக்கும் தாயகத்தில் உள்ள மக்கள் எதிரியின் உடல்களை பார்த்து கொண்டாடி கொக்கரிப்பார்களா என்பது சந்தேகம். முன்பு எனது மட்டுப்படுத்தப்பட்ட சில அவதானங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புகளை நினைவு மீட்டி கதறி ஒ அழுதவதை கண்டிருக்கிறேன்.

ஆனால் இங்கு படங்களில் அவலங்களை பார்த்தவர்களும் வானொலியில் தொலைக்காட்சியில் கேட்டவர்களும் இணையத்தில் பத்திரிகைகளில் வாசித்தவர்களும் தான் எதிரியின் உடல்களை படத்தில் பார்த்து கொண்டாடி கொக்கரிக்கிறார்கள்.

எதிரிக்கு தீங்கிழைக்காதே பூச்செண்டு குடு என்று சொல்லவில்லை. அவன் சாகும் போது அழுவதாக நடி என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு களமாக குழுவாக இனமாக கூத்தாடி கொக்கரிப்பது தவறு.

இறந்த இராணுவத்தின் உடல்கள் ஏன் கிளிநொச்சிவரை வந்தது? ஏன் அவற்றை மக்கள் பார்க்க அனுமதித்தார்கள் என்பதற்கு காரணங்கள்?

-1- உடல்கள் வவுனியா எல்லை ஊடாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். சண்டை நடக்கும் முகமாலையூடாக செஞ்சிலுவைச் சங்கம் எடுத்து செல்ல முடியாது மற்றது போர்முனையில் சென்று பொறுப்பும் ஏற்கமாட்டார்கள்.

-2- கிளிநொச்சி மக்கள் செறிந்து வாழும் வன்னிப்பிரதேசங்களில் முக்கியமானது. கடந்த விடுதலைப் புலிகள் ஏட்டில் வன்னி நோக்கிய பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிறீலங்கா தயாராகி வருகிறது. மக்கள் போராட்டத்தில் இணைந்து அழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு கட்டுரை இருக்கு அதை வாசித்தால் புரிந்து கொள்ள உதவும்.

என்னை கருத்தாளனாக பாருங்கோ கொளரவியுங்கோ என்று கேக்கவில்லை.

நக்குவது நிற்கற்க நிற்கற்கின்

புலம்புவது இயல்பே

நீங்களும் வள்ளுவரை போல குறள் ஒன்று சொல்ல வாறீங்கள் அதை விளங்குற மாதிரி சொல்லலாமே

:roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸின் கோபம் புலத்தில் உள்ளவர்கள் தமது கடைமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் வந்தது.

தமிழீழத் தனியரசை நோக்கிப் புலிகள் களத்தில் போராடுகின்றார்கள், புலத்தில் உள்ளவர்கள் எமது நியாயப்பாட்டை சரியாக பிரச்சாரப்படுத்தாதனால்தான், மேற்கு நாடுகளில் தடைகளும், வேறு பிரச்சினைகளும் வந்துள்ளன. எனவே இனியும் தாமதிக்காமல் எமது கடைமைகளை செய்ய முன்வரவேண்டும்.

நம்மில் பலர் அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல், உணர்வுபூர்வமாக தம்மை வெளிப்படுத்துகின்றார்கள். இராணுவத்தினர் யாழில் தோல்வி அடைந்து பின்வாங்கினால் அது இராணுவ வெற்றிதான். அதை எப்படி அரசியல் வெற்றி ஆக்க முயலலாம் என்பதை புலத்திலுள்ளவர்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

நாம் இன்னும் தாண்ட வேண்டிய வேலிகள் கனக்க இருக்கு.முக்கியமா சர்வதேசம் என்கின்ற ஒரு மிக பெரிய வேலி இருக்கு, அமெரிக்கத் தூதுவர் ஆகாசி எல்லாரும் வரப் போகினம்.ரணிலையும் மகிந்தரையும் ஓரணியில கொண்டு வந்திட்டாங்கள்,இந்தியாவும் கைக்குள்ள.அமரவன்ஸ நாட்டை விட்டே ஓடி விட்டார்.இந்த நிலையில அவர்கள் கவனம் எங்கள் பக்கம் தான் திரும்பும்.இனித் தான் போராட்டத்தின் உண்மயான தடையள் வெளியால வரும்.புலம் பெயர் வாழ் தமிழர்களின் பங்களிபு இனித் தான் தேவைப் படும்.இதனை உணராமல் ஒரு களத்தில் கிடைத்த இராணுவ வெற்றி தாம் குத்தகைக்குக் குடுத்த காணியில் கிடைச்ச அறுவடையைப் போல் துள்ளிக் குதித்தால் , நிலமைகளைச் சரிவரக்கவனிக்காது களமிறங்கிய சிங்களத்தைப்போல் நாமும் ஆகி விடுவோம்.

இந்த வெற்றியானது இருபத்திரண்டு மாவீரர்களின் ஈகையாலும்,பல்லாயிரம் போராளிகளின் உழைப்பினாலும் ஏற்பட்டது.இதனைப் பெற நாம் ஒவ்வொருவரும் எந்தளவு ஒத்தாசையை வழங்கி உள்ளோம் என்று யோசிக்க வேண்டும். குத்தகைக்குக் கொடுப்பவனை விட உழைப்பவன் தான் தனது உதிரத்தாலும்,வேர்வையாலும் நிலைத்தைப் பண்படுத்தி அறுவடை செய்கிறான்.அவனுக்கு நாங்கள் எந்தளவு உதவியிருகிறம் எண்டு யோசிக்க வேணும்.இனியும் நாங்கள் வழங்கும் உதவிகள் தான் நிரந்தரமான சமாதனத்தை ஏற்படுத்தும் என்றும் யோசிக்க வேணும்.

இதே களத்தில் இப்போது இது தம்மால் பெறப்பட்ட வெற்றியைப்போல், தாம் சிறிலங்கா இராணுவத்தை அடித்து விரட்டியதாக கூதூகலிக்கும் எத்தினை பேர், புலிகளின் அரசியல் தந்திரோபாயம் பற்றியும்,புலிகளின் தலமைத்துவம் பற்றியும் சில கைகூலிகளால் எழுதப்பட்ட விமர்சங்களுக்கு மினக்கெட்டு இங்கு பதில் எழுதி இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் தான் வேலைகள் இருகின்றன, இப்போது வீரம் பேசும் பலர் அப்போது எல்லாம் எங்கு போயிருந்தீர்கள்?

இனி நாம் செய்ய வேண்டியது கனக்க இருக்கு, அதனைச்செய்வோம், அதை விடுத்து இன்னொருவன் போரடி பெற்ற வெற்றியில் இருந்து வீரம் பேசுவதை விடுவோம்.களத்தில இனித் தான் இந்த சமாதானம் இடைக்காலத் தீர்வு என்று சொல்லிக் கொண்டு கன கூலிகள் களம் இறங்கும் .அதுகளுக்கு எதிரா எழுதுங்கோ. இனித் தான் புலம் பெயர்ந்தவர் களம் இறங்க வேண்டிய தருணம் வரும், அப்போது உங்கள் வீரத்தை செயற்பாடினூடாகக் காட்டுங்கள்.

புலத்திலுள்ளவர்கள் சிந்தித்து செயற்படவேண்டும்

என்ன சொல்ல வாறீயள் எண்டு விளங்கேலை சிந்திச்சு செயல்பட எங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் அது இப்போ வன்னியில் மாத்திரம் தான் இருக்குது நாங்கள் இருக்கிற நகர் பகுதியில் 2004ம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு வாழை கட்டின ஆட்களையும் தேடி மண்டேலை போடுறாங்கள் பிறகு என்னத்தை செய்யிறது.............அதிலை சொல்ல வெட்கமாக கிடக்கு 2004 வாழையை வாங்கிக் கட்டின பார்ட்டிதான் இப்ப வந்து மண்டேலை போடுது...............அட கடவுளே..........சா.........கருணா???????????????

புலத்தை தவறுதலாக ஈழம் எண்டு நினைச்சிட்டன் போல கிடக்கு

என்ன சொல்ல வாறீயள் எண்டு விளங்கேலை சிந்திச்சு செயல்பட எங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் அது இப்போ வன்னியில் மாத்திரம் தான் இருக்குது நாங்கள் இருக்கிற நகர் பகுதியில் 2004ம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு வாழை கட்டின ஆட்களையும் தேடி மண்டேலை போடுறாங்கள் பிறகு என்னத்தை செய்யிறது.............அதிலை சொல்ல வெட்கமாக கிடக்கு 2004 வாழையை வாங்கிக் கட்டின பார்ட்டிதான் இப்ப வந்து மண்டேலை போடுது...............அட கடவுளே..........சா.........கருணா???????????????

வன்னியில இருகிற சனம் ஒன்று பட்டு போராடத் துணித்ததால தான் இப்ப வன்னியில பாதுகாப்பு இருக்கு.எங்கட பாதுகாப்புக்கு இன்னொருத்தன் வந்து சாக வேணுமோ இல்லை நாங்கள் எல்லாரும் சேர்ந்து போராட வேணுமா என்பதை நாங்கள் நாங்கள் தான் தீர்மானிக்க முடியும்.ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு,எவ்வளவுக்கு எவ்வளவு நாங்கள் எல்லாரும் எங்களால் இயன்ற அளவு உதவுறமோ அவ்வளவுக்கு அவ்வளவு எல்லாருக்கும் பாதுகாப்புக் கிடைக்கும். நாங்கள் தான் புலிகளுக்கு அந்த வல்லமையை வழங்க முடியும்.

உருக்குலைந்த மேலும் 43 சிறிலங்கா இராணுவத்தினரின் உடல்கள் உகந்த இராணுவ மரியாதையுடன் எரிப்பு: இளந்திரையன்

illam20060829.jpg

யாழ். முகமாலை முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் 43 உடல்கள் முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு இன்று வெள்ளிக்கிழமை இளந்திரையன் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் 74 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னரங்க நிலையில் சற்று நல்ல நிலையில் இருந்த மேலும் 4 உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவையும் ஒப்படைக்கப்பட உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு இராணுவத்தினரின் உடலை ஒப்படைத்துள்ளோம்.

முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் உடலங்களிலிருந்து சொந்த விவரங்கள் மற்றும் அடையாளங்களை எடுக்க முடியுமாயின் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருக்கிறோம் என்றார் இளந்திரையன்.

puthinam.com

களத்திலை அரசாங்கத்தினுடைய கால்களை ந.....பவர்கள் புலிகள் எதிலாவது பின்வாங்கினால் அதைப்பற்றி தம்பட்டம் அடிப்பார்கள்.இராணுவம் ஏதாவது ஒரு பகுதியை பிடித்தால் அதற்காக ஜானாதிபதி கேக்வெட்டினால் அவர்கள் வெட்டும்போது நிலத்தில் விழும் துகள்களுக்காக நாக்கை தொங்கவிட்டு காத்திருப்பார்கள்.

அவர்கள் நக்கிறது நிற்காதவரை இராணுவம் கொல்லபட்டால் ஜீவகாருண்யம் பேசுவார்கள்.

இதற்கொரு முடிவு மோகன்தான் எடுக்கவேணும்.

மோகன் எப்படி வசதி நீங்கள் முடிவெடுக்கின்றீர்களா? அல்லது நாம் ஏதாவது செய்யவேண்டுமா? :twisted: :twisted:

உருக்குலைந்த மேலும் 43 சிறிலங்கா இராணுவத்தினரின் உடல்கள் உகந்த இராணுவ மரியாதையுடன் எரிப்பு: இளந்திரையன்

illam20060829.jpg

யாழ். முகமாலை முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் 43 உடல்கள் முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு இன்று வெள்ளிக்கிழமை இளந்திரையன் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் 74 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னரங்க நிலையில் சற்று நல்ல நிலையில் இருந்த மேலும் 4 உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவையும் ஒப்படைக்கப்பட உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு இராணுவத்தினரின் உடலை ஒப்படைத்துள்ளோம்.

முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் உடலங்களிலிருந்து சொந்த விவரங்கள் மற்றும் அடையாளங்களை எடுக்க முடியுமாயின் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருக்கிறோம் என்றார் இளந்திரையன்.

puthinam.com

உவர் இளந்திரயனுக்கு மனிதாபிமானம் கூடிப்போட்டுது, அவங்கள் உடையக் கிழிச்சு எவ்வளவு அசிங்கம் செயிறாங்கள் உவயள் என்னடா எண்டா இராணுவ மரியாதை செய்கினமாம். :twisted:

நாரதர், என்னை பொறுத்தவரை அவர்கள் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து முறையாவது ஒளிபதிவு செய்து வெளியிட வேண்டும். எவ்வாறு இறந்த இராணுவத்தினரின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்களிற்கு தெரியப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதே முக்கியம் இதற்கும் தேவை.

அந்த ஒளிப்பதிவு உடலை பெறமுடியாது தவிக்கும் குடும்பத்தாருக்கு பெறுமதியானது. அந்த மரியாதையையும் முக்கியத்தையும் கொடுத்த புலிகள் எதிரிகளாக அன்று முதல் பல சிங்கள மக்களிற்கு தெரியமாட்டார்கள். சுதந்திர தமிழீழமும் சிறீலங்காவும் 2 நாடுகளாக ஆனால் சமாதனமாக வாழ வேண்டும். அதற்கு சிங்கள மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் விசமப்பிரச்சாரங்கள் மத்தில் வெல்வது முக்கியம்.

இங்கு நாம் கீழ் இறங்கி போகவில்லை. நிதானமாக நேர்மையாக இருக்கிறம் என்றதற்கு இன்னொரு வெளிப்பாடு.

அப்பாவி கிராமப்புற சிங்கள இளஞர்களுக்கு இனவாத வெறி ஊட்டி , சிறிலங்காவினதும் தமிழ் ஈழத்தினதும் வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும் உந்த இனவதா அரசை நோக்கித் தான் எமது போரே ஒழிய ,அந்த சிங்கள கிராமத்து இளஞர்களுடன் அல்ல என்பதையும், தாங்கள் எதிரி நாட்டுடன் சர்வதேசப் போர் முறைமைகளுக்கு அமைவாகவே நடந்து கொள்கிறோம் என்பதையும் புலிகள் காட்டி உள்ளனர்.

இதன் தாக்கம் தெரிய சிங்கள மக்களுக்கும் புலிகளும் தமிழரும் யார் என்பதைக் காட்ட வேண்டும்.இதன் மூலம் இந்த சிங்கள மக்களினதும் விடிவு உந்த சிங்கள இனவெறி அரசின் அஸ்த்தமனதிலே தான் இருகிறது என்பதையும் நாம் காட்ட வேண்டும்.யார் மனித உயிர்களின் மேல் கரிசனை உடையவர்கள் என்பதையும்,சிங்கள அரசு எவ்வாறு இவர்களை பலியிடுகிறது என்பதையும் நாம் காட்ட வேண்டும்.புல ஊடகங்களும் இதற்கு முக்கியதுவம் கொடுத்து வெளி நாட்டினருக்கும் யார் உண்மையான பயங்கரவாதிகள் என்பதையும் யார் மனித நேயர்கள் என்பதையும் காட்ட வேண்டும்.

இப்போது ஒட்டுமொத்தமாக அவமானப் பட்டு நிற்கிறது அரசு. புலிகள் எல்லா விதத்திலும் அரசிற்கு பதில் சொல்லியிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

முகமாலை சம்பவத்தை நாங்கள் துரதிஷ்டவசமான நிகழ்வாகவே பார்க்கின்றோம். கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

[Friday October 13 2006 01:36:50 PM GMT] [யாழ் வாணன்]

விடுதலை புலிகள் முன்னொருபோதும் இல்லாதவாறு தமது முழுமையான பலத்தை பிரயோகித்து முகமாலை பகுதியில் அரச படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான தினங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல என்று திட்ட மிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

முகமாலை மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ள பேச்சவார்த்தையை பாதிக்காது என்று அரசாங்கம் நம்புகின்றது. பேச்சுவார்த்தை நடந்தாலும் அரசாங்கத்தின் பதில் தாக்குதல்கள் தொடரும் என்பதனை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை பாதிக்குமா? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.

முகமாலை பகுதியில் புலிகள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தமது பலத்தை பிரயோகித்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அரச படைகள் புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. புலிகள் இரு தடவைகள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு ஊடுருவ முயன்றனர்.

இந்த மோதல் சம்பவங்களில் இராணுவத்தரப்பில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. பலியான இராணுவ வீரர்களின் சடலங்களை பொறுப்பேற்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

பேச்சுவார்த்தைக்கான திகதிகள் நிர்ணையிக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இரு தரப்புக்களும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் புலிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இது புலிகளின் வழமையான செயற்பாடு என்றே நான் கூறுவேன். கடந்த 22 வருடங்களாக புலிகள் இதனைதான் செய்து வருகின்றனர்.

ஆனால் இம்முறை பேச்சுவார்த்தை வரலாற்றில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைவிட சற்று வித்தியாசமானது. காரணம் இம்முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்ப

சண்டை களத்தில் நிக்குறவர்கள் உணர்ச்சி வசபடாமல் தெளிவா இருக்கிறார்கள். ஆனால் இங்கு கருத்துகளத்தை பார்க்கும் போது??????? தெளிவற்ற கருத்துகளும் உணர்ச்சி மோதல்களும்தான் ஏற்ப்படுகிறது. கருத்துகளத்தோடு சேர்த்து இன்னொரு உணர்ச்சி களத்தையும் உருவாக்கினால் என்ன??? பெரும்பாலும் இங்கு எல்லோருக்கும் இந்த விடயத்தில் ஒத்த கருத்தே இருக்கிறது. ஆனாலும் அதை வெளிக்காட்டும் விதந்தான் ஒவ்வொருதருக்கும் வித்தியாசம். இதை எழுதினதுக்காக எனக்கு பேசுறன்டா பேசுங்கோ. நான் கோவிக்க மாட்டன். ஆனால் பதிலும் எழுத மாட்டன். பதில் எழுதேலேனு யாரும் என்னை கோவிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உண்மையில் உறவுகளை பறிகொடுத்து கை காலை இழந்து அவலங்களை நேரே பாத்து அனுபவித்து கொண்டிருக்கும் தாயகத்தில் உள்ள மக்கள் எதிரியின் உடல்களை பார்த்து கொண்டாடி கொக்கரிப்பார்களா என்பது சந்தேகம். முன்பு எனது மட்டுப்படுத்தப்பட்ட சில அவதானங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது இழப்புகளை நினைவு மீட்டி கதறி ஒ அழுதவதை கண்டிருக்கிறேன்.

ஆனால் இங்கு படங்களில் அவலங்களை பார்த்தவர்களும் வானொலியில் தொலைக்காட்சியில் கேட்டவர்களும் இணையத்தில் பத்திரிகைகளில் வாசித்தவர்களும் தான் எதிரியின் உடல்களை படத்தில் பார்த்து கொண்டாடி கொக்கரிக்கிறார்கள்.

எதிரிக்கு தீங்கிழைக்காதே பூச்செண்டு குடு என்று சொல்லவில்லை. அவன் சாகும் போது அழுவதாக நடி என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு களமாக குழுவாக இனமாக கூத்தாடி கொக்கரிப்பது தவறு.

இறந்த இராணுவத்தின் உடல்கள் ஏன் கிளிநொச்சிவரை வந்தது? ஏன் அவற்றை மக்கள் பார்க்க அனுமதித்தார்கள் என்பதற்கு காரணங்கள்?

-1- உடல்கள் வவுனியா எல்லை ஊடாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். சண்டை நடக்கும் முகமாலையூடாக செஞ்சிலுவைச் சங்கம் எடுத்து செல்ல முடியாது மற்றது போர்முனையில் சென்று பொறுப்பும் ஏற்கமாட்டார்கள்.

-2- கிளிநொச்சி மக்கள் செறிந்து வாழும் வன்னிப்பிரதேசங்களில் முக்கியமானது. கடந்த விடுதலைப் புலிகள் ஏட்டில் வன்னி நோக்கிய பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிறீலங்கா தயாராகி வருகிறது. மக்கள் போராட்டத்தில் இணைந்து அழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு கட்டுரை இருக்கு அதை வாசித்தால் புரிந்து கொள்ள உதவும்.

என்னை கருத்தாளனாக பாருங்கோ கொளரவியுங்கோ என்று கேக்கவில்லை.

இந்தப் பதில் மாதிரி எல்லோருக்கும் புரிகின்றபோது எழுதினால், அனைவரும் அதைப் புரிந்து கொள்வார்கள் தானே! அதை விட்டு விட்டு பரதேசி, பன்னாடை என்று திட்டினால் யாரால் ஏற்றுக் கொள்ளமுடியும்?

மேலும் உணர்ச்சி என்றது இல்லை என்று சொல்லமுடியாது. அவ்வாறு இருந்தால் தான் போராடமுடியும்! அடிக்கடி நீர் மேற்கோள் காட்டும் மூதூர் சண்டையில் ஓடுகின்றான் அடியடா" என்ற வசனங்கள், அல்லது எதிரியை நோக்கித் திட்டிக் கொண்டு அடிப்பது எல்லாம் ஒரு வகை உணர்ச்சிபுூர்வ செயற்பாடுகளே!

மன்னாரில், இரண்டு குழந்தைகள், தூக்கில் போட்டு சிங்கள இராணுவம் கொன்றபோது, பலர் அழுததைப் பார்த்திருக்கின்றேன். அதுவும், அக்குழந்தையின் குடல் வெளியால் வரும் அளவுக்கு கொன்ற விதம், மிகவும் வேதனையைப் பலருக்கு ஏற்படுத்தியது.

சிறிலங்கா அரசு வாகரையில் பொதுமக்கள் மீது குண்டுவீசித் தாக்கியபோது, மூளை வெளியால் வந்தபடி, ஒரு பெண் உடல் கிடந்ததைப் பார்த்தவர்களுக்கு, சிங்கள இராணுவத்தின் இவ்வுடல் குறித்து வருந்தியிருக்கப் போவதில்லை.

மற்றவர்களை மிருகக் குணம் உள்ளவர்கள் என்று சொல்வது எப்படி நியாயம்? அது சுற்றி நடந்த வேதனைகளால் உருவானது.

தனிப்பட்டரீதியில் மரியாதை குறித்தனான அவதானம் தேவையில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றேன் போர்வையில் கதைக்கின்றபோது அது குறித்து யோசிக்கத் தான் வேண்டும். இல்லாவிட்டால் என் கருத்தைக் கணக்கெடுக்கத் தேவையில்லை என்று தராளமாகப் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸின் கோபம் புலத்தில் உள்ளவர்கள் தமது கடைமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் வந்தது.

தமிழீழத் தனியரசை நோக்கிப் புலிகள் களத்தில் போராடுகின்றார்கள், புலத்தில் உள்ளவர்கள் எமது நியாயப்பாட்டை சரியாக பிரச்சாரப்படுத்தாதனால்தான், மேற்கு நாடுகளில் தடைகளும், வேறு பிரச்சினைகளும் வந்துள்ளன. எனவே இனியும் தாமதிக்காமல் எமது கடைமைகளை செய்ய முன்வரவேண்டும்.

நம்மில் பலர் அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல், உணர்வுபூர்வமாக தம்மை வெளிப்படுத்துகின்றார்கள். இராணுவத்தினர் யாழில் தோல்வி அடைந்து பின்வாங்கினால் அது இராணுவ வெற்றிதான். அதை எப்படி அரசியல் வெற்றி ஆக்க முயலலாம் என்பதை புலத்திலுள்ளவர்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

நிச்சயமாக் கிருபன்,

அது தப்புக் கிடையாது. ஆனால் இவ்வாறு திட்டுவதால் வெறுப்புணர்ச்சியைத் தவிர, வேறு என்ன மிச்சமாக வரும் என எதிர்பார்க்கின்றீர்கள். இப்படியான வார்த்தைகளால் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என நினைக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை ஒன்று திரட்டவும், மேற்கு நாடுகளில் உள்ள அரசுகளை, அல்லது குறைந்தபட்சம் இடது சிந்தனை உள்ள பத்திரிகைகளை எமது போராட்டத்தின் நியாயத்தன்மையைப் பற்றி எழுதவைக்கும் முயற்சிகளை புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் அதிகப்படுத்த வேண்டும்.

குறுக்ஸின் வார்த்தைகளை விட்டுவிட்டு நாம் வாழும் நாடுகளில் உள்ள செயற்பாட்டார்களை அணுகி எம்மாலியன்றதை செய்ய முயலவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறிலங்கா இராணுவ வலிமையை குறையச் செய்த முகமாலை சமர்: கொழும்பு ஊடகம்

முகமாலைச் சமரின் மூலம் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வலிமை குறைந்து போயிருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

முகமாலையில் நடந்த சமரையடுத்து இராணுவத்தின் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

ஆளணி மற்றும் தளபாடங்களில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளமையானது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வலிமையை நீர்த்துப் போகச் செய்துள்ளது.

முகமாலையில் நடந்த இரு மணிநேர உக்கிரமான மோதலில் சிறிலங்கா இராணுவமானது

- 6 யுத்த கவச வாகனங்கள்

- 4 செக்கோலோவேக்கிய ரி௫5 டாங்கிகள்

- 2 ரஸ்ய தயாரிப்பு பி.எம்.பி.கள் ஆகியவற்றை இழந்துள்ளது.

இவற்றில் ஒன்று தாக்குதலினால் நாசமடைந்துவிட்டது.

மூன்று முன்னணி படையணிகள் முகமாலை சமரில் ஈடுபட்டன. இராணுவத்துக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச விரக்தியடைந்த நிலையில் இராணுவ தளபதியை சாடியிருப்பதாக கூரப்படுகிறது.

யாழ். குடா நாட்டில் இராணுவத்தை மீளச் சீரமைக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஆனால் 6 யுத்த கவச வாகனங்களை இழந்திருப்பதானது அவ்வளவு எளிதானது அல்ல. யுத்த கவச வாகனங்கள் யுத்த களத்தில் பாரிய முக்கியத்துவமானவை.

நன்கு அமைக்கப்பட்ட பதுங்கு குழி அரண்களிலிருந்து விடுதலைப் புலிகள் இரண்டரை மணி நேரங்களுக்கும் மேலாக தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த காலம் முதல் இவ்வளவு மோசமாக இராணுவத்துக்கு இழப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறை.

முகமாலை சமர் நிகழப் போகிறது என்பதை விடுதலைப் புலிகள் அறிந்தே வைத்திருந்தனர். இந்த மோதலைத் தவிர்க்க இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கடிதம் அனுப்பியிருந்தார்.

விரிவான பொறி ஒன்றில் இராணுவத்தினரைச் சிக்க வைக்க முடியும் என்று கருதினர் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-புதினம்

மேலும் உணர்ச்சி என்றது இல்லை என்று சொல்லமுடியாது. அவ்வாறு இருந்தால் தான் போராடமுடியும்! அடிக்கடி நீர் மேற்கோள் காட்டும் மூதூர் சண்டையில் ஓடுகின்றான் அடியடா" என்ற வசனங்கள், அல்லது எதிரியை நோக்கித் திட்டிக் கொண்டு அடிப்பது எல்லாம் ஒரு வகை உணர்ச்சிபுூர்வ செயற்பாடுகளே!

...

......

மற்றவர்களை மிருகக் குணம் உள்ளவர்கள் என்று சொல்வது எப்படி நியாயம்? அது சுற்றி நடந்த வேதனைகளால் உருவானது.

தூயவன், புலிகள் சண்டைகளத்தில் அந்தா எதிரி பாவம் களைக்க களைக்க ஓடுகிறார் போல் உள்ள அவருக்கு தண்ணி வேணுமா குளுக்கோஸ் வேணும் என்று கேப்பமா என்ற உணர்ச்சியோடு அடிபடவில்லை அறிவுரை கூறவில்லை.

புலிகளின் தமிழரின் போர்முகம் எதிரியின் இராணு அடக்கு முறைகள் ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ள உள்ளது. அது எதிரையை நோக்கியதும் எதிரியை முறையடிக்கும் போராளிகளிற்கும் அதில் பங்கெடுக்கும் தாயகத்தில் உள்ள மக்களிற்கும் உரியது. அந்த போர்முகம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஊடகங்களினது மக்களிற்கும் ஏற்ற முகம் அல்ல. சர்வதேசத்தில் வாழும் எமது சர்வதேசத்தை நோக்கிய முகம் அங்கு நடக்கும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை வெளிக் கொண்டுவரும் மனிதாபிமான அரசியல் இராஜதந்திர முகமாக இருக்க வேண்டும். அதாவது எமது கடமை எதுவோ அதற்குரிய முகம் தான் எமக்கு தேவை.

பலமுறை பலர் பல்வேறு கோணங்களில் விளங்கப்படுத்திய பின்னரும் பொருத்த மற்ற முகமூடியை போட்டுக் கொண்டு கடமையை செய்யாது கூத்தடித்து கொக்கரிப்புக்கு பெயர்தான் வே* ஆட்டம்.

எனவே அந்த காட்சிகளை வெளிநாடுகளில் பாவித்த முறை சந்தர்ப்பங்கள் முற்றிலும் தவறு. போர்க்களத்தில் எப்படியான உணர்ச்சியோடு சண்டைபிடிக்க வேண்டும் என்பது பற்றி விமர்சிக்கவோ அறிவுரைக்கவோ எம்மில் ஒருவருக்கும் துளியளவு அருகதையும் இல்லை.

வேதனைகளை நேரே அனுபவித்துகொண்டிருப்பவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கூட ஈராக்கில் சிறைக் கைதிகள் மீதான சித்திரவதைகள் பற்றிய புகைப்படங்களே சர்வதேசத்தின் கண்களின் முன் அமெரிக்க அரச படைகளின் பயங்கரவாதச் செயல்களை மீண்டும் ஒரு முறை கொண்டு வந்தது.

அப்படிக் கொண்டு வரப்பட்டதானது, சுட்டு வீழ்த்திய அப்பாச்சி உலங்குவானூர்தியில் பயணித்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மீது ஈராக்கிய மக்கள் காட்டிய வெறுப்பை அமெரிக்கா தனது பிரச்சாரத்துக்காக உலகெங்கும் ஒளிபரப்பியதன் நோக்கத்தை கேள்விக் குறியாக்கியது?

ஈராக்கிய மக்கள் அனுபவித்த துன்பமே அமெரிக்கப் படைகள் மீதான வெறுப்புணர்வாக தோற்றமளித்தது.

சதாமின் சிலையை அமெரிக்கப் படைகள் உடைத்து வீசி அமெரிக்கக் கொடியை பறக்கவிட்ட போது அகமகிழ்ந்த மேற்குலக வல்லாதிக்க வல்லுனர்கள் ஈராக்கிய மக்களின் உணர்வுகளை ஏன் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்கப்படைகளின் மன உறுதிக்கு முக்கியமளித்தனர்?

ஆனால் இங்கு யாழ் களத்தில் தமிழ் மக்களுக்கு அந்த உணர்வைக் கூட வெளிப்படுத்த முடியாத சூழல். காரணம் அப்படி வெளிப்படுத்தி விட்டால் அது சர்வதேசத்துக்கு புதிதான புதினமாகிவிடுமாம்?

ஏதோ உலகில் நடக்காத சங்கதிகளை தான் தமிழ் மக்கள் 11-10-2006 இல்தான் கண்டுணர்ந்துள்ளனர் என்பது போல் சிலரின் போதனைகள் காலத்துக்கு ஒவ்வாதவை.

வன்னி மக்களும் சரி உலகம் பூரா உள்ள ஈழத்தமிழ் மக்களும் சரி உணர்வுகளால் ஒருவரே. ஈழத்தில் இருந்து இன்று புலம்பெயர்ந்து அந்நியருக்கு அடிமைகளாகி வாழ வேண்டி வந்ததே இதே சிங்களப் படைகளால் தான் என்ற ரீயில் வாழும் ஈழத்தமிழனுக்கு சிங்களப் படைகளின் வீழ்ச்சி என்பது ஆறுதல் தரும் விடயமே.

நேசப்படைகளுக்கு கிட்லரின் வீழ்ச்சி எப்படி மகிழ்ச்சியோ அதுவே நாசிகளுக்கு கவலை. நாசிகளைப் பொறுத்தவரை கிட்லர் அவர்களின் இரட்சகர். இராணுவ மரியாதையென்ன சகல மரியாதைகளுடனும் மதிக்கப்பட வேண்டியவர்.

அந்த வகையினதே இங்கு சிலரின் போதனைகள். நாசிய சித்தாந்தங்களைக் காவித் தெரியும் நவகால மகிந்தாக்கள் சிங்களப் படைகளை நோக்கி ஆங்கிலத்தில் சொல்லலாமே எமது போராளிகளுக்கும் இராணுவ மரியாதை அளியுங்கள் என்று. அவர்களோ பயங்கரவாதிகள் என்றபடி அடிப்படை மனித உடலுக்குக் கூட வழங்கப்பட வேண்டிய மரியாதைகளை வழங்கவில்லை.

மணலாறில் கண்ட அனுபவத்தின் பின் முல்லைத்தீவில் பெறப்பட்ட 400 உடலங்களை பெண் போராளிகள் சர்வதேசச் செஞ்சிலுவையிடம் கையளித்தது ஏன்...??! சில குறுக்கால போனவர்களுக்கு உணர்வுகள் மரித்துவிட்டது என்பதற்காக மக்களுக்கும் மரிக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் புகலிடத்தில் வாழ்ந்தால் என்ன தாயகத்தில் வாழ்ந்தால் என்ன?

சர்வதேச கவனத்தை ஈர்க்க நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் சராசரி உணர்வுகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கும் ஏன் இவர்கள் முடிச்சுப் போடுகிறார்கள்.

இவர்களால் மக்கள் இப்படி ஆறுதல் படுவதில் தமிழகத்தில் இருக்கும் சில பத்திரிகைகள் போல ஆற்றாமையோ காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகெங்கும் அரச பயங்கார்வாதத்தைத் தூண்டி விடும் அமெரிக்காவே நல்ல மனித உரிமைக்காவலனும்.

எமது மக்களுக்கு தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட உணர்வுகளுக்கு மேலாக சர்வதேசத்தை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக இராணுவ வெற்றிகளை சாதாரணமாக வேணும் கண்டு தகவல்களை உணர்வுகளைப் பகிர்வதில் தவறேதும் கிடையாது, யாழ் களத்தில் பகிர்ந்து கொள்வதால் அல்லது கொள்ளாதுவிடுவதால் அது சிங்கள இராணுவத்தினரின் ஆன்மாவைத் தட்டி அல்லது சர்வதேசத்தின் ஆண்மைவைத் தட்டி எழுப்பி அவை தமிழ் மக்களை இரட்சிக்கப் போவதில்லை. அந்த வகையில் தமிழ் மக்கள் தான் தாங்களே எல்லாவற்றையும் சாதிக்க வேண்டியவர்களாக உள்ள நிலையில் மக்களின் மன உணர்வுகள் கொஞ்சம் என்றாலும் எதிரியின் அழிவால் ஆறுதலடைவதில் தவறில்லை.

ஒரு கொலைஞனும் மனிதன் தான். அவன் மீது மனிதாபிமானம் காட்ட வேண்டின் பிறகெதற்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் கூட்டில் ஏற்றி விசாரணணயும்? இவை எல்லாம் மனிதாபிமானத்தின் முன் அவசியமற்றவையே. மனிதாபிமானம் உள்ளவனிடம் மட்டும் மனிதனாக அதை எதிர்பார்க்கலாம். இல்லாதவர்களிடம் அப்படி எதிர்பார்ப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு நிகர்.

களத்திலும் சரி போர்க்களத்திலும் சரி இது பொருந்தும்.

தலைப்பை சற்று மாற்றி எழுதலாமே?

யாழ்களத்தில் சண்டை ஆரம்பம்

மேலதிகத் தகவல்.

கடந்த ஐப்பசி 9 இல் ஆரம்பமான சண்டை 5 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதில் உள்ளுர் தயாரிப்பான பல மட்ட ரக வார்த்தைகள் இரு தரப்பினராலும் பாவிக்கப்பட்டு வருகின்றது.

இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொடாந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருதரப்பினரும் தாக்குதல்களை கைவிடும்படி இணைத் தலைவர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

களத்திலிருந்து,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.