Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசிட் கொடுத்து குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழுகின்ற வாழ்க்கை மரணத்தைவிட கொடியது என்றால் அந்த மரணம் எவ்வளவோ மேல். (இரு பாலாருக்கும் சேர்த்து தான்). 

பொது இடத்தில் கணவனை "அந்த" வார்த்தைகளால் திட்டிய மனைவியை பார்த்திருக்கின்றேன். 

அதே போல் பொதுஇடத்தில் மனைவியை சாத்தி எடுத்த கணவனையும் பார்த்திருக்கின்றேன். 

பிடிக்காட்டி பிரிஞ்சு போகலாம் என்று சும்மா சொல்லிவிட்டு போகலாம். பிரிந்த பின்னர் அவர்கள் தமிழ் சமூதாயத்தால் கேட்கவிருக்கும் சுடுசொற்கள் அவர்கள் சேர்ந்திருக்கும் போது அனுபவித்த கொடுமையைவிட வலிமையானதாக இருக்கும். அந்த வார்த்தைகள் அவர்களை மட்டும் தாக்குவதில்லை. சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கின்றது. அதுவே பலர் ஏனோ தானோ என்று அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகின்றது. 

நான் தமிழ் சமுதாயம் என்று சொன்னது இங்க கருத்தெழுதின ஆக்களையும் சேர்த்து தான். நாங்க ஒன்டும் அவ்ளோ பெரிய யோக்கியர்கள் இல்லை (பெண்களையும் சேர்த்து தான்). ஒரு நிமிடம் என்றாலும் அந்த பெண்ணை பறறியோ அல்லது ஆணை பற்றியோ ஒரு தப்பான எண்ணம் வந்து தான் போகும். 

இது பல நூற்றாண்டுகளாக கட்டிக்காதது வந்த பாரம்பரியம். நாளைக்கே மாத்த முடியாது. இன்னும் ஒரு 2 சந்ததி அழிந்த பின்னர் இப்படியான பிரச்சனைகளிற்கு தீர்வு வரலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அவர்கள் கேட்கலாம்.

அதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் மன வலிமையினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.  :wub:

  • Replies 66
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைக்கு சாத்தியமானதையும் ........... நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளையும்  பற்றியே நான் பேசுகிறேன்.
தத்துவம் பேசுவது என்றாலோ இதைவிட அழகாக நான் பேசுவேன்.
 
only solution is fix the root of the cause. 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் எவை?

- தங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை அவர்களே வெளிக்கொண்டு வருதல் வேண்டும்.

மாமியார் தொல்லை தாங்காமல் தற்கொலைக்கு முயற்சிக்காமல்

நீதி மன்றத்தை நாடலாம். அது கணவனுடனான உறவைப் பாதிக்கும் என்றால் அப்படியான கணவன் அவருக்குத் தேவையில்லை.

அந்தக் கணவனையே தூக்கியெறியத் தயாராக இருங்கள்.அல்லது மாமியார் தொல்லைக்குக் கணவனும் உடந்தை எனக் கோர்ட்டில் நிரூபித்து அந்தக் கணவனையும் உள்ளே தள்ளுங்கள்,

இதற்கு எத்தனை பெண்கள் தயாராக இருக்கின்றார்கள்?

- ஒரு காட்டுமிராண்டி ஆணால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அந்த நிகழ்வை மூடி மறைக்காமல் கொடூரம் இழைத்த அந்த ஆணைக் நீதிக்கு முன் நிறுத்துங்கள்.

இதற்கு எத்தனை பெண்கள் தயாராக இருக்கின்றார்கள்

- அலுவலகத்தில் சக ஊழியர்களால் பாதிக்கப்படும் பெண்கள் எத்தனை பேர் மேலதிகாரியிடம் புகார் செய்துள்ளீர்கள் ?அல்லது மேலதிகாரியிடம் நம்பிக்கை இல்லை என்றால் நேரடியாகவே வழக்கறிஞரை நாடலாம். எத்தனை பெண்கள் இப்படி முயற்சிப்பார்கள்?

வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சனை வேறு மாதிரி வந்துவிடும்.வேலைக்கே பிரச்சனையாக வந்துவிடும் என மறைத்து விடாமல் தாய் தந்தை அல்லது கணவனிடம் சொல்பவர்கள் எத்தனை பெண்கள் ?

இப்படியெல்லாம் செய்தால் பெண்களுக்கெதிரான வன்முறைகள் முற்றாக அழித்துவிடலாமா?

மனிதர்களுக்கு வரும் நோய்கள் போல பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வந்துகொண்டே இருக்கும். இவற்றை முற்றாக ஒழிக்க முயற்சிப்பதைவிட முதலில் அவை பரவாமல் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கவேண்டும்.

இழைக்கப்படும் அநீதிகள் வெளீயே தெரியாமல் இருக்கும்வரை அவைகளுக்கான தீர்வுகளைக் காணமுடியாது.

முன்வைக்கப்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வுகளை ஆராய முடியும்.அப்படி ஆராயும் போது தகுந்த சட்டதிட்டங்களை வகுத்து

குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்க முடியும்.

தண்டனைகளாலேயே குற்றங்களைக் குறைக்க முடியும். ஆனாலும் முற்றாக அழிக்க முடியாது.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்றோ நேற்றோ ஆரம்பமானதல்ல.கற்காலத்திலிருந்தோ அல்லது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கின்றது.அவை யாருக்கும் தெரிய வந்ததில்லை.

ஆனால் இன்றைய காலத்தில் பல அமைப்புக்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்து வருகின்றார்கள்.

பலர் சட்ட நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளுக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனாலும் முற்றாக அழிக்க முடியவில்லை.முடியாது.

காரணம் ஆணாதிக்கம் என்று அறைகூவல் விடுக்கும் பெண்களே தான்.

ஏனென்றால் உண்மையிலேயே ஆணாதிக்கம் என்று ஒன்று இல்லை.

அது ஒரு சில பெண்களாலே உருவாக்கப்பட்ட மாயை.அந்த மாயைக்குள் பெண்களின் இயற்கை அமைப்பைக் காரணம் காட்டி அவர்களைத் தள்ளிவிட்டுவிடுகின்றார்கள்.

பெரியார் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்:"பெண்கள் தாய்மை அடையும் தன்மை ஒன்றே அவர்களை ஆண்களுக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றது. ஆகவே அந்தத் தாய்மை அடையும் தன்மையை உதறித்தள்ளி விடுங்கள். அப்படிச் செய்வதால் சமுதாயம் அழிந்து விடும் என எண்ணாதீர்கள்.உங்களுக்குக் கொடுமை செய்யும் ஒரு சமுதாயம் உங்களுக்குத் தேவையில்லையே.பெண்களுக்கு அநீதி இழக்கும் சமுதாயம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன ?"

சரி எத்தனை சிறுவர்கள் சித்திமார்களினாலும் பாடசாலை ஆசிரியைகளினாலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்கள்.

அப்போதெல்லாம் எங்கே சென்றார்கள் இந்தப் பெண்ணியவாதிகள்?

எத்தனை பணிப்பெண்கள் வீட்டு எஜமானிகளால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்? அப்போது எங்கே சென்றார்கள் இந்தப் பெண்ணியவாதிகள் ?

வன்முறைகள் எல்லா உருவத்திலும் எல்லோர் மீதும் தான் நடைபெறுகின்றன.ஆனால் ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணால் செய்யப்படும் தவறுகளைக் கண்டதும் ஆணாதிக்கம் பெண்ணடிமை எனக் கூச்சல் இடுபவர்கள் தான் இந்தப் பெண்ணியவாதிகள்.

அதுவும் தங்கள் சுயநலத்தையும் சுயவிளம்பரத்தையும் முன்னிறுத்தியே இப்படிக் கூச்சலிடுவார்கள்.

முதலில் பெண்கள் ஆணாதிக்கம் என்ற சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும்.ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் இழைக்கப்படும் அனீதிகளுக்குக் குரல் கொடுக்கவேண்டும்.

பெண்கள் தங்கள் கல்வி அறிவை இன்னும் அதிகம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.கடவுள் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிமைச்சிந்தனைகளில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.

கடவுளின் பெயராலேயே அதிக கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன.பெண்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கு நிகராக எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை இன்னும் அதிகளவில் நிரூபித்துக் காட்டி ஆண்களுக்கு நிகராக வாழவேண்டும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து சென்று வாழ்வதில் பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள்:

1) விசேசங்களில் மதிக்கமாட்டார்கள்.

2) பிற ஆண்கள் பிராக்கட் போட முயற்சிப்பார்கள். (நாய் பூனையும் இதைத்தானே செய்யுது :lol: )

3) பிள்ளை வளர்ப்பை குறை சொல்லுவார்கள்

4) மொழிப்பிரச்சினை

5) தன்னம்பிக்கைக் குறைவு

6) வருமானக் குறைவு

7) அதிக பொறுப்புக்களால் நேரமின்மை

இதனால் விவாகரத்துக்குப் போகாமல் மனதில் வைத்து் புளுங்குவார்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் போகும்போது கணவனைப் பழிவாங்க பெற்ற குழந்தைகளையே கொன்றுவிடுவார்கள்.. :o

(ஏதோ ஒரு கொமன் சென்சில் எழுதியது. :D )

இரண்டாம் அயிட்டத்தைத் தவிர இது ஆம்பிளயளுக்கும் பொருந்தும் போல கிடக்குதே! :o

ஆனால், நாங்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதும்... குழந்தைகளைக் கொல்வதும், ஒப்பீட்டளவில் குறைவு தானே, இசை?

நம்மட கொம்மன் சென்ஸ் இவ்வளவும் தான் போல கிடக்கு! :o  

சவுத் ஆசிய குடும்பங்களில் தான் இப்படி பிரச்சனை அடிக்கடி வருகின்றது .எனக்கு தெரிய நாலு ஐந்து குடும்பங்கள் இந்த நிலையில் இப்பவும் இருக்கின்றார்கள் .ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனை .எங்களால் தீர்த்து வைக்க முடியாதது .ஏதும் நடக்காமல் ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும் என்று எண்ணுவதை தவிர வேறு வழியில்லை .இவ்வளவிற்கும் மிக மிக வசதியானவர்கள் .

அதை விட அத்தானின் கடைக்கு அருகில் செல்டர் இருக்கு .ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கு இருக்கின்றார்கள் .ஆளுக்கு ஒரு பிரச்சனை அழுக்கு துணியுடன் உலா வருகின்றார்கள் .குடி ,சிகரெட் என்று அவர்கள் வாழ்க்கை போகின்றது .பலர் குடும்ப வாழ்கையில் இருந்து பிரிந்தவர்கள் .தனது மனைவியை பிள்ளைகளை பார்க்க அவர்கள் படும் ஆவல் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் ,பின்னர் கெஞ்சி கூத்தாடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை சொதப்பி மீண்டும் சந்திக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள் .

இவர்களை எல்லாம் பேட்டி கண்டு எழுத ஆசை ஆனால் பிரச்சனையை சொல்லுவார்களோ தெரியாது .

சில பிரபலங்களின் உறவுகளும் அங்கு இருக்கின்றார்கள் ,அவர்களால் என்ன செய்ய முடியும் .

இதை உண்மை என்று (நான் ஏற்றுகொள்கிறேன்) ஏற்றுகொள்ள கூடியவர்கள்.
 
நாம் இங்கிருந்துதான் ஒரு தீர்வை பெறமுடியும். இதைதான் நான் மேலே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறேன்.
சிலருக்கு அது புரியவில்லை என்று நினைக்கிறேன்.
கவுன்சில் இருக்கு ..... காவோலை இருக்கு ..... என்றால் இல்லை என்று யார் சொல்கிறார்.
அதனால் பிரச்சனைகளுக்கு தீர்வு  காண முடியாது. வேண்டுமானால்  இப்படியான தற்கொலைகளை கொஞ்சம் தமத படுத்தலாம் அல்லது தள்ளி போடலாம் அவளவுதான்.
 
தீர்வு ஒன்றாக ஒட்டி இருந்த பொருள் ஒன்று உடைந்து இரண்டாவது இல்லை. அது இன்னொரு வடிவமான பிரச்சனை. 
  • கருத்துக்கள உறவுகள்

சவுத் ஆசிய குடும்பங்களில் தான் இப்படி பிரச்சனை அடிக்கடி வருகின்றது .எனக்கு தெரிய நாலு ஐந்து குடும்பங்கள் இந்த நிலையில் இப்பவும் இருக்கின்றார்கள் .ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனை .எங்களால் தீர்த்து வைக்க முடியாதது .ஏதும் நடக்காமல் ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும் என்று எண்ணுவதை தவிர வேறு வழியில்லை .இவ்வளவிற்கும் மிக மிக வசதியானவர்கள் .

அதை விட அத்தானின் கடைக்கு அருகில் செல்டர் இருக்கு .ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கு இருக்கின்றார்கள் .ஆளுக்கு ஒரு பிரச்சனை அழுக்கு துணியுடன் உலா வருகின்றார்கள் .குடி ,சிகரெட் என்று அவர்கள் வாழ்க்கை போகின்றது .பலர் குடும்ப வாழ்கையில் இருந்து பிரிந்தவர்கள் .தனது மனைவியை பிள்ளைகளை பார்க்க அவர்கள் படும் ஆவல் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் ,பின்னர் கெஞ்சி கூத்தாடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை சொதப்பி மீண்டும் சந்திக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள் .

இவர்களை எல்லாம் பேட்டி கண்டு எழுத ஆசை ஆனால் பிரச்சனையை சொல்லுவார்களோ தெரியாது .

சில பிரபலங்களின் உறவுகளும் அங்கு இருக்கின்றார்கள் ,அவர்களால் என்ன செய்ய முடியும் .

எனது அனுபவத்தில் நான் புரிந்து கொண்டதும்... நீங்கள் கூறுவதை உறுதிப்படுத்துகின்றது. அர்ஜுன்!

கணித ரீதியாகப் புரிய வைக்க வேண்டுமாயின்....பின்வருமாறு சொல்லலாமென எண்ணுகின்றேன்!

ஒரு சாதாரண திருமணம் என்பது... ஆரம்பத்தில் x, y என்று இரண்டு தெரியாக் கணியங்களைக் கொண்டதாக அமையும்! மிகவும் சிக்கலான சமன்பாடாக இல்லாதிருப்பதனால், பிரச்சனைகளுக்கு இலகுவாக விடை காணமுடியும்!

இதன் பின்னர் குழந்தைகள் என்று மூன்றாவது கணியமும் வந்து சேரும்..இந்த நேரத்தில் முதல் இரண்டு கணியங்களும் அடையாளம் காணப்பட்ட படியால் மூன்றாவது கணியத்தை இலகுவாக அடையாளம் காணலாம்!

எமது நாடுகளில் திருமணம் பேசி முடிக்கப்படுவதனால்.. முதல் இரண்டு கணியங்களும் தீர்வு காணப்பட முன்னரே, மூன்றாம், நாலாம் கணியங்கள் வந்து சேர்ந்து விடும்!

பிந்தைய வயதுகளில் கல்யாணம் கட்டுவதால்... அவசரப்பட்டுக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது!

அவை தவிர மாமா. மாமி . மச்சான், மச்சாள் என்று பல கணியங்களும் இந்த மண வாழ்க்கைக்குள் தங்களையும் நுழைத்துக் கொள்கின்றன!

ஊரில் என்றால், குடும்ப கவுரவம், பெரியவர்களின் ஆலோசனை என்று ஒருவாறு சமுதாய வலைக்குள் இந்தப் பிரச்சனைகள் மூடி மறைக்கப் பட்டு விடுகின்றன!

வெளி நாடுகளில் இவ்வாறான மூடிமறைக்கக் கூடிய வலைகள் இல்லை!

எனவே பிரச்சனைகள், ஒரு தீர்க்கமுடியாத நிலையை அடைந்து விடுகின்றன!

ஆனால் எனக்குப் புரியாத ஒரு விடயமெனில். தற்செயலாக ஒரு தற்கொலை நடந்து விடுமெனில், அதற்குக் காரணமானவர்களே.. எதுவும் நடவாவது மாதிரி... முழுப்பழியையும்... அந்த இறந்து போன ஜீவன் மீது போட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள்!

இது எமது சமுதாயத்தில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்!

அது எதனால் ஏற்பட்டது எனில்.... நல்லூர் முருகா.. நான் செய்யிற இந்தக் கடத்தலில, எல்லாம் சரி வந்துது எண்டால் உனக்குக் கட்டாயம் 'காப்பு' வைப்பன். என்ற கலாச்சாரம்!

அதாவது எதையும் ஆண்டவன் மீது சுமத்தி விட்டுத் தங்கள் மனதை எதுவும் பாதிக்காத வண்ணம் இவர்களால் வாழ முடியும்!

அல்லது 'விதி' என்ற ஒன்றின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு... தங்கள் பாட்டில் போய்க்கொண்டிருப்பார்கள்! :o  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவல்... இங்கிலாந்தில்..

_78577717_daughters.jpg

இம்முறை குடும்பமே மர்மமான முறையில் பலியாகி உள்ளது.

தெற்காசிய பாரம்பரிய பின்னணி உள்ள.. குடும்பத்தில் தந்தை (49).. தாய் (44).. மகள்1 (19)..(லீட்ஸ் பல்கலைக்கழகம்.. பயோகெமிஸ்ரி இரண்டாம் ஆண்டு.).. மகள்2 (17).

பிரட்வேட்டில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்.. வெளியார் மீது இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகம் வெளியிடவில்லை.

http://www.bbc.co.uk/news/uk-england-29798404

அயலவர்கள் கருத்துப்படி...

Jamshed Malik, who lives next door to the house, said the family who lived there were "a nice couple - a man and his wife and two kids".

"We only saw them on some occasions, not very often. I've known them for about eight years. It's very, very sad."

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் இரு பாலருக்கும் பொதுவானது என்டாலும் அதிகம் பாதிக்கப்படுவதும்,அதிலிருந்து மீளுவதற்கு அதிகம் கஸ்டப்படுவதும் பெண்கள் தான்.

இசை மேலே ஒரு கருத்தில் எழுதிய மாதிரி சுப வைபவங்களுக்குப் போனாலும் இவர்களை ஒதுக்கியே வைப்பார்கள். திருமணம்,பூப்புனித நீராட்டு விழா போன்ற விழாக்களுக்குப் போனால் முன்னுக்கு கூப்பிடவே மாட்டார்கள்[எவ்வளவு நெருங்கிய உறவுகளாக இருந்தாலும்]...ஆண்களையும் கூப்பிட மாட்டார்கள் என்டாலும் பொதுவாக இப்படியான விழாக்களுக்கு தம்பதிகளாக இருக்கும் பெண்களே முன்னிலை வகிப்பார்கள்.ஆண்கள் முன்னுக்குப் போவது குறைவு.தம்பதிகள் பிரிந்த பின்னர் இப்படியான விழாக்களுக்குப் போனாலும் ஆண்கள் பெரிதாக பாதிப்படையப் போவதில்லை.மூலையில் ஒரு ஓரமாக இருந்து சாப்பிட்டு வருவார்கள்.ஆனால் பெண்களுக்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.அவர்கள் உறவினர்களே அவரை ஒதுக்கி வைக்கும் போது தாழ்ழு மனப்பான்மையைக் கொண்டு வரும்.அதன் பின்னர் இப்படியான விழாக்களுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ போவதை அந்தப் பெண் தவிப்பார்.இதனால் சமூகத்தில் இருந்து ஒதுங்கி ஒரு குறுகிய வாழ்க்கையை வாழ்வார்.

அதிகம் படித்த பெண்,நல்ல வேலைக்கு போகும் பெண் ஓரளவுக்கு இதிலிருந்து தப்புவதற்கு சான்ஸ் உள்ளது.சமூதாயம் அவர்களை ஒதுக்க முன் இவர்களே ச்முதாயத்தை ஒதுக்கி விட்டு தாங்கள்,தங்கள் குழந்தைகள்,நண்பர்கள் என வாழ்வார்கள்.

நண்பர்கள் என்று பார்க்கும் போது ஆண்களுக்கு இப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்களது நண்பர்கள் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து அந்த ஆணுக்கு ஆறுதல் சொல்லி,ஏதோ ஒரு வகையில் அந்த ஆணுக்கு இன்னொரு திருமணம் எப்படியும் செய்து வைத்து விடுவார்கள். இப்படியான ஆண்களை திருமணம் செய்ய பெண்களும் பின் நிற்பதில்லை.

ஆண்களுக்கு கிடைத்த மாதிரி நட்பு பெண்களுக்கு கிடைப்பது சரியான குறைவு என்றே நினைக்கிறேன். பெண்களுக்கு இப்படியான பிரச்சனைகள் வந்தால் அப் பெண்ணின் நண்பர்கள் அவவுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதில்லை.புருசன் விட்டுட்டு போயிட்டான்,பிள்ளைகள் இருக்குது.நீ பிள்ளைகளை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இரு என்று சொல்லி அந்தப் பெண்ணை தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி, வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பார்கள்.இதில் விதி விலக்குகளும் இருப்பார்கள்.

கணவனை பிரிந்த பின் குழந்தைகளோடு நல்ல நட்பு இல்லாவிடத்து தன்னுடைய மனதில் தோன்றுவதை யாருக்கும் சொல்ல முடியாமல்[ஒரு பெண்ணுக்கு ஒரு விசயத்தை சொன்னால் அதை பத்தாக்கி ஊருக்கே விசயம் தெரிந்து விடும்.] மனதில் வைத்து புழுங்கி,புழுங்கி ஒரு நாளைக்கு அது முடியாமல் போக தற்கொலையில் கொண்டு போய் நிறுத்தி விடும்.

கணவன்,மனைவி பிரிந்தாலும் கணவனில் எவ்வளவு பெரிய பிழை இருந்தாலும் பெண்களைத் தான் குறை சொல்வார்கள்.அவன் பெரிய கொலைக்காரனாக இருந்தாலும் அவனோடு கடைசி வரை இருந்து வெட்டுப் பட்டு சாகவே இந்த சமுதாயம் விரும்புது.கண்வனில் பிழை இருக்குது என்று தெரிந்தாலும் ஆண்கள் இந்த கணவனுக்கே தங்கள் ஆதரவைக் கொடுப்பார்கள்.மனைவியில் பிழை இல்லை என்று தெரிந்தாலும் இந்தப் பெண்க்ள் கூட மனைவியை தூற்றி கணவனுக்கே தங்கள் ஆதரவை கொடுப்பார்கள் அல்லது தங்களுக்கேன் தேவையில்லாத வேலை என்று வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.

பொதுவாக குழந்தைகளை சேர்த்து பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் நம்பி வந்த தன்னையே இந்த ஆணால் ஒழுங்காக வைத்து காப்பாத்த முடியவில்லை பின்னர் எப்படி குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள் என்ட நம்பிக்கையீன்ம் தான் காரண்ம்.தாங்கள் இறந்த பின்னர் தங்கள் குழந்தைகள் அநாதைகளாகி,முகாம்களில் தங்கி கஸ்டப்படுவதை அந்தத் தாய் மட்டுமில்லை எந்தத் தாயுமே விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் குழ்ந்தைகளோடு சேர்த்து தற்கொலை செய்கிறார்கள்.

எங்களது சமுதாய கட்டமைப்பு மாறும் வரை இப்படியான தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது எனது கருத்து. இதற்கு முதல் நாங்கள் மாற வேண்டும்.இந்த யாழில் எத்தனை பேர் ஆணியம்/பெண்ணீயம் கதைத்துக் கொண்டு உள்ளுக்கு எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என எனக்குத் தெரியும்.அவர்களில் பிழை இல்லை அவர்களை வளர்த்து விட்ட சமுதாயம் அப்படி இருக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்:)

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து சென்று வாழ்வதில் பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள்:

1) விசேசங்களில் மதிக்கமாட்டார்கள்.

2) பிற ஆண்கள் பிராக்கட் போட முயற்சிப்பார்கள். (நாய் பூனையும் இதைத்தானே செய்யுது :lol: )

3) பிள்ளை வளர்ப்பை குறை சொல்லுவார்கள்

4) மொழிப்பிரச்சினை

5) தன்னம்பிக்கைக் குறைவு

6) வருமானக் குறைவு

7) அதிக பொறுப்புக்களால் நேரமின்மை

இதனால் விவாகரத்துக்குப் போகாமல் மனதில் வைத்து் புளுங்குவார்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் போகும்போது கணவனைப் பழிவாங்க பெற்ற குழந்தைகளையே கொன்றுவிடுவார்கள்.. :o

(ஏதோ ஒரு கொமன் சென்சில் எழுதியது. :D )

போன கிழமை கனடாவிலிருந்து ஒரு நண்பர் அவர் யாழ் இணையத்தின் வாசகர் மட்டுமே. இசைக்கலைஞன் பற்றி பெரியதொரு கற்பனையை வைத்துள்ளது பற்றி சொன்னார். நிதானத்துடன் கருத்தாடும் கருத்தாளர் இசையென்றார். அந்த அன்பர் இசைபற்றி சொன்னவற்றை நான் மீளவும் யோசித்துப் பார்க்க வைக்கிறது இசை. ஒரு கருத்தாடலில் நாங்களும் எழுதினோம் என்று இருக்காமல் எழுதுவதே கருத்தாகும் இசை.
 
மன்னிக்கவும் சில விம்பங்கள் உடைவதிலிருந்து உண்மையான முகங்கள் வெளி வந்து விடுகிறது. ஆண் ஆதிக்கம் என்பதன் பொருள் இசை உங்கள் கருத்து.

மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவல்... இங்கிலாந்தில்..

_78577717_daughters.jpg

இம்முறை குடும்பமே மர்மமான முறையில் பலியாகி உள்ளது.

தெற்காசிய பாரம்பரிய பின்னணி உள்ள.. குடும்பத்தில் தந்தை (49).. தாய் (44).. மகள்1 (19)..(லீட்ஸ் பல்கலைக்கழகம்.. பயோகெமிஸ்ரி இரண்டாம் ஆண்டு.).. மகள்2 (17).

பிரட்வேட்டில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்.. வெளியார் மீது இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகம் வெளியிடவில்லை.

http://www.bbc.co.uk/news/uk-england-29798404

அயலவர்கள் கருத்துப்படி...

Jamshed Malik, who lives next door to the house, said the family who lived there were "a nice couple - a man and his wife and two kids".

"We only saw them on some occasions, not very often. I've known them for about eight years. It's very, very sad."

அல்வா கிடாரக்கணக்கா கிடைச்ச சந்தோசம் உங்களுக்கு. ஆனால் இந்த 4பேரின் மரணங்களும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எப்படி நடைபெற்றது என்பது. உங்களது மகிழ்ச்சியும் ஒரு பாரிய பிரச்சனைக்கான தீர்வும் இருப்பது இந்தளவு அகலம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை கனடாவிலிருந்து ஒரு நண்பர் அவர் யாழ் இணையத்தின் வாசகர் மட்டுமே. இசைக்கலைஞன் பற்றி பெரியதொரு கற்பனையை வைத்துள்ளது பற்றி சொன்னார். நிதானத்துடன் கருத்தாடும் கருத்தாளர் இசையென்றார். அந்த அன்பர் இசைபற்றி சொன்னவற்றை நான் மீளவும் யோசித்துப் பார்க்க வைக்கிறது இசை. ஒரு கருத்தாடலில் நாங்களும் எழுதினோம் என்று இருக்காமல் எழுதுவதே கருத்தாகும் இசை.

மன்னிக்கவும் சில விம்பங்கள் உடைவதிலிருந்து உண்மையான முகங்கள் வெளி வந்து விடுகிறது. ஆண் ஆதிக்கம் என்பதன் பொருள் இசை உங்கள் கருத்து.

முதலில் அந்த அன்பருக்கு நன்றி. :D

மற்றும்படி, எனக்குத் தெரிந்ததைத்தான் நான் எழுதினேன். அது சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.. ஒருவேளை சரியாகவும் இருக்கலாம். :unsure:

இவ்வாறாக பிரச்சினைப்படுகின்ற பெண்களுடன் நான் பழகியதில்லை. அதனால்தான் ஒரு Common Sense இல் எழுதியதாகச் சொன்னேன். :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து சென்று வாழ்வதில் பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள்:

1) விசேசங்களில் மதிக்கமாட்டார்கள்.

2) பிற ஆண்கள் பிராக்கட் போட முயற்சிப்பார்கள். (நாய் பூனையும் இதைத்தானே செய்யுது :lol: )

3) பிள்ளை வளர்ப்பை குறை சொல்லுவார்கள்

4) மொழிப்பிரச்சினை

5) தன்னம்பிக்கைக் குறைவு

6) வருமானக் குறைவு

7) அதிக பொறுப்புக்களால் நேரமின்மை

இதனால் விவாகரத்துக்குப் போகாமல் மனதில் வைத்து் புளுங்குவார்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் போகும்போது கணவனைப் பழிவாங்க பெற்ற குழந்தைகளையே கொன்றுவிடுவார்கள்.. :o

(ஏதோ ஒரு கொமன் சென்சில் எழுதியது. :D )

அண்மையில்.. ஒருவா வந்தா. தம்பி ஒரு போம் நிரப்பித் தருவீங்களோன்னு. என்னடான்னா பார்த்தா.. மனைவி என்ற நிலையில்.. விசா நீட்டிப்புக்கு.

அவர் அகதியாக வந்து செற்றிலாகி.. இவாவை திருமணம் செய்து கூப்பிட்டு 6.. 7 வருசம் ஆச்சுது.

பொதுவா இங்கிலாந்தில்.. மனைவி.. கணவன் என்று வந்து 2 வருசம் ஆகிட்டா.. நிரந்தரமா இருக்க விசாவுக்கு அப்பிளை பண்ணுவினம். அதேபோல் தான் குடும்ப இணைவென்று வாற பிள்ளைகளுக்கும்.

இவா இன்னும்.. 2 வருச விசாக்களையே நீட்டிக்கொண்டிருக்கிறார். வங்கியின கணக்கும் இல்லை. கேட்டா அவங்கள் வீட்ட போன் பண்ணி இங்கிலிசில கதைப்பாங்களாம்.. யார் பதில் சொல்லுறது. அதுவும் அவர் இல்லை என்றால்.. என்றா.

இப்ப நிரந்தர விசா எடுக்க ஆங்கிலம்.. மற்றும் வரலாறு பரீட்சைகள்.. ஆங்கிலத்தில் படிச்சு பாசாகனும். அக்கா 3 தரம் எடுத்து.. சரிவரல்லையாம். அதோட இப்ப இந்த வழியிலையே இருக்க வேண்டிய நிலைமை.

ஆளை பார்க்க பாவமாவும் இருக்கு. கடின முயற்சி இன்றி பெண்.. தாய் என்ற சுயகாரணங்களைக் காட்டி.. (சோதனைகள் பெயில் ஆனதுக்கு பிள்ளைகள் தானாம் காரணம். ஒருக்கா ஒரு பிள்ளை வயிற்றில இருக்கேக பெயிலானாவாம். பிறகு மற்றது. பிறகு மற்றது. கொடுமைடா சாமி.).. சோம்போறியாவே வாழுறதை பார்த்தா.. உதுங்க திருந்தவே போறதில்லை என்ற எண்ணமே மேலிட்டது.

இது உண்மைச் சம்பவம். இறுதியாக சொல்லி விட்டிருக்கு.. அக்கா.. பஞ்சியை பார்க்காமல்.. பிள்ளைகளை சாட்டுச் சொல்லாமல் படிச்சு சோதனையை பாஸ் பண்ணப் பாருங்கோ. வீணா.. 2 வருச விசா என்று அடிக்கடி காசு செலவழிக்கிறீங்கள். அதை யோசிச்சு பாருங்கோன்னு. அதுக்கு அவா சொன்னா அவர் தான் காசு கட்டிறதாம்.

இதுக்குப் பிறகு என்னத்தைச் சொல்லுறது..??! :icon_idea::)

இந்த நிலைகளில் இருந்து பெண்கள் தாங்களா மீண்டால் அன்றி.. கடவுளும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால்.. இந்த நிலையை இதய சுத்தியோடு ஏற்கும் மனப்பக்குவம் கூட சில பெண்ணிலைவாதம் கதைக்கிறவைக்கு இல்லை என்பது தான் பெண்கள் இப்படி போக ஒரு காரணமும் கூட. எல்லாம் ஆம்பிளையளாலதான் என்ற பெண்ணிலைவாத நிலைப்பாடுகள்.. பெண்களை இன்னும் இன்னும் செயலற்றவர்கள் ஆக்குகிறது.!! :icon_idea::)

நியானி: சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.. ஒருவா வந்தா. தம்பி ஒரு போம் நிரப்பித் தருவீங்களோன்னு. என்னடான்னா பார்த்தா.. மனைவி என்ற நிலையில்.. விசா நீட்டிப்புக்கு.

அவர் அகதியாக வந்து செற்றிலாகி.. இவாவை திருமணம் செய்து கூப்பிட்டு 6.. 7 வருசம் ஆச்சுது.

பொதுவா இங்கிலாந்தில்.. மனைவி.. கணவன் என்று வந்து 2 வருசம் ஆகிட்டா.. நிரந்தரமா இருக்க விசாவுக்கு அப்பிளை பண்ணுவினம். அதேபோல் தான் குடும்ப இணைவென்று வாற பிள்ளைகளுக்கும்.

இவா இன்னும்.. 2 வருச விசாக்களையே நீட்டிக்கொண்டிருக்கிறார். வங்கியின கணக்கும் இல்லை. கேட்டா அவங்கள் வீட்ட போன் பண்ணி இங்கிலிசில கதைப்பாங்களாம்.. யார் பதில் சொல்லுறது. அதுவும் அவர் இல்லை என்றால்.. என்றா.

இப்ப நிரந்தர விசா எடுக்க ஆங்கிலம்.. மற்றும் வரலாறு பரீட்சைகள்.. ஆங்கிலத்தில் படிச்சு பாசாகனும். அக்கா 3 தரம் எடுத்து.. சரிவரல்லையாம். அதோட இப்ப இந்த வழியிலையே இருக்க வேண்டிய நிலைமை.

ஆளை பார்க்க பாவமாவும் இருக்கு. கடின முயற்சி இன்றி பெண்.. தாய் என்ற சுயகாரணங்களைக் காட்டி.. (சோதனைகள் பெயில் ஆனதுக்கு பிள்ளைகள் தானாம் காரணம். ஒருக்கா ஒரு பிள்ளை வயிற்றில இருக்கேக பெயிலானாவாம். பிறகு மற்றது. பிறகு மற்றது. கொடுமைடா சாமி.).. சோம்போறியாவே வாழுறதை பார்த்தா.. உதுங்க திருந்தவே போறதில்லை என்ற எண்ணமே மேலிட்டது.

இது உண்மைச் சம்பவம். இறுதியாக சொல்லி விட்டிருக்கு.. அக்கா.. பஞ்சியை பார்க்காமல்.. பிள்ளைகளை சாட்டுச் சொல்லாமல் படிச்சு சோதனையை பாஸ் பண்ணப் பாருங்கோ. வீணா.. 2 வருச விசா என்று அடிக்கடி காசு செலவழிக்கிறீங்கள். அதை யோசிச்சு பாருங்கோன்னு. அதுக்கு அவா சொன்னா அவர் தான் காசு கட்டிறதாம்.

இதுக்குப் பிறகு என்னத்தைச் சொல்லுறது..??! :icon_idea::)

இந்த நிலைகளில் இருந்து பெண்கள் தாங்களா மீண்டால் அன்றி.. கடவுளும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால்.. இந்த நிலையை இதய சுத்தியோடு ஏற்கும் மனப்பக்குவம் கூட சில பெண்ணிலைவாதம் கதைக்கிறவைக்கு இல்லை என்பது தான் பெண்கள் இப்படி போக ஒரு காரணமும் கூட எல்லாம் ஆம்பிளையளாலதான் என்ற பெண்ணிலைவாத நிலைப்பாடுகள்.. பெண்களை இன்னும் இன்னும் செயலற்றவர்கள் ஆக்குகிறது.!! :icon_idea::)

ஒரு ஆக்க பூர்வமான கருத்தை எண்ணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

நான் விளங்கி கொண்டது .........

ஒரு பரிட்சையில் தேர்வு ஆவது என்றால் .... அதற்கு பெண்கள்தான் படிக்க வேண்டும்.

பெண்கள் பாஸ் பண்ண அதற்கும் ஆண்களா படிக்க முடியும்??

இதை ஏன் ஆக்கபூர்வம் என்று சொன்னேன் என்றால் (ஒருவேளை நீங்கள் முன்பு எழுதியவை அக்கபூர்வம் இல்லாதவை என்று நான் சொல்ல வருவதாக நினைக்கலாம்)

இவளவு நேரமும் பிரச்சனைகள் பற்றியே எழுதிக்கொண்டு இருந்தீர்கள் ..... அது யாபருக்கும் தெரிந்த விடயம்தான். தீர்வு என்ன?

தீர்வை பிரச்சனை களுக்கான காரணிகளை கண்டறிவதன் மூலம்தான் பெற்று கொள்ளலாம்.

இப்போ பெண்களின் ஊக்கமின்மை ஒரு காரணமாகிறது என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் .......

எமது சமூகத்தில் ஏன் பெண்கள் ஊக்கம் குறைந்தவர்கள் ஆக இருக்கிறார்கள் ?

எமது சமூக பெண்கள் மட்டும்தான் ஊக்கம் அற்றவர்களாக இருக்கிறார்களா ?

அல்லது பொதுவாகவே பெண்கள் ஊக்கம் அற்றவர்கள்தானா ??

இவற்றுக்கான விடைகளை தேடித்தான்.

மேலே இருக்கும் அக்காவின் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் தேவைதான் நிர்ணயிக்கிறது. இதிலிருந்து அனைத்துக் காரணிகளையும் விளங்கிக் கொள்ளலாம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் தேவைதான் நிர்ணயிக்கிறது. இதிலிருந்து அனைத்துக் காரணிகளையும் விளங்கிக் கொள்ளலாம்தானே.

நீங்கள் செர்வீஸ் டாக் service Dogs (எலாதவர்களுக்கு  உதவி செய்யும் நாய்கள்) 
இவர்கள் கண் தெரியாதவர்களுக்கு பாதைகள் கட்ட பெருதும் உதவி செய்கின்றன உதாரனதிற்கு ஆனால் எவளவோ அளப்பெரிய வேலைகளை எல்லாம் செய்கின்றன.
(நான் விமான நிலையத்தில் வேலை செய்வதால் மூளையில் இதுதான் கிளிக் பண்ணியது ஓவரு நாளும் இவற்றுடன் டீல் பானுவதால். பெண்களை பற்றி பேசிக்கொண்டு னையை உதாரணம் கொள்கிறேன் என்று சிலர் தப்பாக புரியலாம். அந்த அளவில் கூட இங்கே பலர் இருக்கிறார்கள்)
 
அவற்றை வைத்து மனிதன்  பல தேவைகளை பூர்த்தி செய்கிறான்.
என்னுடைய பொருள் என்ன என்றால் .............  தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய வகையில் அவற்றை பயிற்று விற்கிறான். 
எமக்கு தேவையானவற்றை .............. பெற்று கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
கடினமாக நேரங்கள் செலவழித்து நாய்களுக்கு பயிற்சி கொடுத்து அதனுடன் பழகி  வந்ததன் பலன். நாய்கள் சிலருக்கு மனிதர்களை விட உற்ற நண்பர்களாக இருக்கின்றது.
 
எமது தேவைகளுக்கு போதிய அளவில் நாம் உழைக்கிறோமா? இல்லை என்றால் எமது தேவைகளை நாம்  குறைத்து கொள்ளவேண்டும்.  
 
அதாவது தேவைகளையும் .....
எமது உழைப்பிற்கு ஏற்ப நாம் நிர்ணயிக்க வேண்டும் என்கிறேன்.
 
எமது சமூக முன்னேற்றத்திற்கு நான் இவளவு உழைக்கிறேன்? என்பதை பொறுத்தே அந்த சமூகத்தில் இருந்தும் ஒரு பலனை நான் பெற்று கொள்ள முடியும்.
 
அங்கே அடக்கம் ஒடுக்கம் படுக்கம் என்று பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைத்துவிட்டு.
இங்கே வாழ்வு வந்தவுடன் டிக்கெட் போட்டு கூபிட்டுவிட்டு.
அவர்கள் 2016 ஒலிம்பிக்கில் போய் மெடல் வங்கி வர வேண்டுமென்றால்......? எப்படி??
 
உங்கள் மனைவி மெடல் வாங்குவது உங்கள் தேவை என்றால் ....?
உங்கள் மனைவிக்கு தேவையான பயிற்சி அவரது இளமைக்கு முந்திய நாடகளிலேயே இருந்திருக்க வேண்டும்.
அது இல்லாத பட்சத்தில் .......... மெடல் தேவையை கைவிட்டு விடுவதே நன்று. மட்டுமில்லை சாத்தியம் ஆனதும் அதுதான்.
(விதிவிலக்காக ஒன்று இரண்டு இருக்கலாம்) 

சொறி .... நீங்கள் செர்விஸ் நாய்கள் பற்றி தெரிந்திருப்பீர்கள் என்று சொல்ல வந்தேன். முதல் வரி 
மிகுதியை காணோம்.
 
நீங்கள் செர்விஸ் நாய் என்று இருக்கிறது. 

பொதுவாக சொல்லப் போனால் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது சில வேண்டாத விடையங்களை செய்ய தொடங்கும் போது அதனை செல்லமாக தட்டி அதனை, செய்யாது தவிர்த்துக் கொள்ள பழக்கும் போது மறு முறை தானாகவே சில விடையங்களை செய்யாது தவிர்த்துக் கொள்ளும்..வளர்க்கும் நன்றிக்காகவாவது எஜமானரைக் கண்டால் அவை படும் பாட்டுக்கு அழவே இருக்காது..அவை வாய் பேசாத ஜீவன்கள்.

ஆனால் மனிதன் அப்படி அல்ல நாவினால் பேசும் பேச்சிலிருந்து செய்யும் செயல்பாடுவரைக்கும் மற்றவர்களைத் தண்டிப்பதாகவே அமைவதனால் தான் தேவை அற்ற மன உளைச்சல்கள்,இறப்புக்கள் என்று அவ்வப் போது நடக்கிறது .இதை யாருமே ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.தங்களுக்கு வேண்டப்பட்டதை அடையனும் என்றால் அந்த நேரத்தில் கொலையைக் கூட செய்யத் துணிந்தவர்களாகிவிடுவார்கள்.ஏன் எனில் அன்பாக,நட்பாக பழகியவர்கள் மத்தியில் நான் நிறைய அனுபவ பட்டு இருக்கிறன்..தாங்கள் சொன்னதையே மறந்து,மறுத்து,வெறுத்து ஒதுக்கி தள்ளி விடுவார்கள்..

உதாரணத்திற்கு ஒருவரை பார்த்து இது நமக்கு பிடிக்க இல்ல ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர், இவற்றை செய்யாது தவிர்த்தால் நன்று என அன்பாக சொன்னால் கூட அதனை யாரும் இலகுவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..மறுமுறை பார்க்கும் போது முன்னர் செய்த விடையத்தை விட மேலதிகமாக செய்திருப்பார்கள்.ஏன் நம்மை போட்டு திட்டுறாய் ஏதாச்சும் வருத்தம் என்றால் நல்ல வைத்தியராக போய் பாரேன் என்று சொல்லி

ஒருவர் மீது வேண்டாதவற்றை எல்லாம் சொல்லித் திட்டும் போது கூட அவற்றை திரும்ப,திரும்ப நினைச்சுக் கவலைப்பட்டுக் கண்ணீர் விடும் தருணங்களில் எதிர்பார்ப்புக்கள் மாறும் பட்சத்தில் தான் மன உளச்சல்களை தேவை அற்ற செயல்களில் இறங்க மனம் தூண்டப்ப படுகிறது.இவற்றைச் சொல்லும் போது யாரும் நினைக்கலாம் யாயினி தொட்டால் சிணுங்கி எல்லாவற்றுக்கும் தப்புக் கண்டு கொள்வது என்று,...அப்படி அல்ல சில..

.

விடையங்கள் சரி பிரச்சனை இல்லை என்று விடலாம்.சில விடுவது கடினம்..எதிர் பார்க்காத தருணத்தில்,எதிர் பார்க்காதவற்றைச் செய்து தாங்கள் தப்பி பிழைத்து விடுவார்கள்.யாரும் அவை பற்றிக் கேட்டால் கூட நான் ஒன்றுமே செய்ய இல்ல என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் அவர்கள் வாயால் வரப் போவது அல்ல.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவல்... இங்கிலாந்தில்..

_78577717_daughters.jpg

இம்முறை குடும்பமே மர்மமான முறையில் பலியாகி உள்ளது.

தெற்காசிய பாரம்பரிய பின்னணி உள்ள.. குடும்பத்தில் தந்தை (49).. தாய் (44).. மகள்1 (19)..(லீட்ஸ் பல்கலைக்கழகம்.. பயோகெமிஸ்ரி இரண்டாம் ஆண்டு.).. மகள்2 (17).

பிரட்வேட்டில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும்.. வெளியார் மீது இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகம் வெளியிடவில்லை.

http://www.bbc.co.uk/news/uk-england-29798404

அயலவர்கள் கருத்துப்படி...

Jamshed Malik, who lives next door to the house, said the family who lived there were "a nice couple - a man and his wife and two kids".

"We only saw them on some occasions, not very often. I've known them for about eight years. It's very, very sad."

இவர்களின் மரணத்தில் பெண்கள் மூவரும் கத்தியால் குத்தப்பட்டும்.. ஆண் தூக்கில் தொங்கியும் மரணித்துள்ளதாக பொலிஸ் விசாரணைச் செய்திக் குறிப்பு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் மூவரும் முதல் நாளும் ஆணின் மரணம் அடுத்த நாளும் நிகழ்ந்துள்ளதாம்.

(நேற்றைய தினம்..பிபிசி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில்.. இது பதியப்படுகிறது.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.