Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர்

Featured Replies

Tamil_News_large_1099461.jpg
 
சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார்.
 
 
 
சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி

 

தமிழன் உயரணும்


வாழ்த்துக்கள் ராசா

 பிச்சை வாழ்த்துக்கள் :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

இன்னும் பல தமிழர்கள் பல்வேறு துறைகளில் மிக முக்கிய பதவிகளை ஆட்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வளர்ச்சியும், உயர்வும் கண்டு வாழ்த்துக்கள்!! ஆனாலும் ஆணிவேர் இன்றித் தமிழர்கள் வளருகிறார்களே என்ற ஆதங்கத்தையும் மறைப்பதற்கில்லை. :rolleyes:   

  • தொடங்கியவர்
சுவிஸ் பத்திரிகையிலும் இவரைப் பற்றி செய்தி வந்துள்ளது
 
Das ist der neue starke Mann bei Google
Wechsel

Konzernchef Larry Page gibt Macht ab. Im Gegenzug bekommt Topmanager Sundar Pichai laut einem Medienbericht zusätzliche Aufgaben. Dadurch wird er zur Schlüsselfigur im Internet-Konzern

25.10.2014
sundarpichai129.jpg

Sundar Pinchai: Grosse Machtfülle bei Google

Sundar Pichai wird laut einem Medienbericht zur Schlüsselfigur beim Internet-Konzern. Pichai habe zusätzlich die Aufsicht über die Suchmaschine, den Kartendienst, das Online-Netzwerk Google Plus sowie Forschung, Werbeprodukte und Infrastruktur übertragen bekommen, schrieb das Technologie-Blog «Recode». Die Manager, die diese Bereiche führen, berichteten nun an Pichai statt an Konzernchef Larry Page, hiess es unter Berufung auf informierte Personen. Pichai ist bereits für das populäre Google-Mobilsystem Android und den Webbrowser Chrome zuständig.

Page habe die Neuordnung in einer E-Mail an Mitarbeiter bekanntgegeben, hiess es. Er selbst wolle sich stärker auf andere Bereiche wie Energie oder Finanzen konzentrieren. Pichai solle mit der Aufwertung nicht als wahrscheinlicher Page-Nachfolger gesehen werden, hiess es aus «Recode»-Quellen. Mitgründer Sergey Brin hat sich schon länger auf Spezialprojekte fokussiert.

(reuters/se)

http://www.handelszeitung.ch/unternehmen/das-ist-der-neue-starke-mann-bei-google-687587

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் என்று சொல்லி சந்தோசப்படவேண்டியதுதான்....அங்காலை ஒண்டுமில்லை.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்று சொல்லி சந்தோசப்படவேண்டியதுதான்....அங்காலை ஒண்டுமில்லை.. :icon_idea:

 

அம்புட்டுத் தான்! :D

  • கருத்துக்கள உறவுகள்

42 வயதில், உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தில் உயர் பதவி.
வாழ்த்துக்கள் சுந்தர்.

  • தொடங்கியவர்

கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு

 

sundarpichai_2172219h.jpg

 

கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சுந்தர் பிச்சைக்கு அதிகபொறுப்புகள் வழங்கப்பட் டிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சையை உயர்த்தி இருக்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ். சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கூகுள் பிளஸ், மேப்ஸ், காமர்ஸ், விளம்பரம் மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர், சர்ச், சோஷல் மீடியா மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளின் தலைவர்கள் இனி சுந்தர் பிச்சையின் கீழ் வருவார்கள். இதற்கு முன்பு இவர்கள் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

அதேசமயம் கூகுள் நிறு வனத்தின் இன்னொரு பிரிவான ’யூ டியூப்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும்.

மேலும் சுந்தர் பிச்சையின் கீழ் செயல்பட்டுவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, குரோம் மற்றும் ஆப்ஸ் ஆகியவை சுந்தர் பிச்சை தலைமையிலே செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிர்வாக மாற்றம் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1972-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. ஐஐடி கரக்பூர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்(எம்.எஸ்) மற்றும் வார்டன் கல்லூரியில் (எம்பிஏ) படித்தவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இவர் இணைந்தார்.

இந்த நிர்வாக மாற்றம் மூலம் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சை உயர்த்தப்பட்டிருக்கிறார். மேலும் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ- வாய்ப்பு இவருக்கு அதிகமாக இருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6535111.ece?homepage=true

 

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

Dedicated and innovative, here's how Sundar Pichai became Google CEO

கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் லாரி பேஜ் கவனித்து வந்த கூகுளின் சர்ச். கூகுள் பிளஸ், வர்த்தகம், விளம்பரம், கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆப்ஸ் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார். இதில் கூகுள் சர்ச் மற்றும் கூகுள் ஆட்ஸ் எனப்படும் விளம்பரம் ஆகியவை தான் கூகுளின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான காலிகோ, எக்ஸ் லேப்ஸ், உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு ஆல்பபெட் என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை இனி லாரி பேஜ் கவனிப்பார். கூகுளின் முதலீட்டு நிறுவனமும் லாரி பேஜ் வசம் இருக்கும். அதே நேரத்தில் நிர்வாகரீதியில் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள் இயங்கும். சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியராக பணியாற்றியவர். தாயார் ஸ்டெனோகிராபராக இருந்தவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிச்சை தனது புத்திசாலித்தனத்தாலும் கடும் உழைப்பாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் தான் படித்தார். செமிகன்டர்டர்கள் குறித்த கல்விப் பிரிவில் சேர இவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் ஸ்டான்போர்ட் செல்ல விமான டிக்கெட் பணம் இல்லாமல் தவித்துள்ளனர் இவரது பெற்றோர். ஸ்டான்போர்டிலேயே பிஎச்டி சேர திட்டமிட்ட இவர், அதைத் தவிர்த்துவிட்டு கலிபோர்னியாவில் அப்ளைட் மெட்டீரியல்ஸ் என்ற செமி கண்டக்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். இதையடுத்து வார்ட்டன் கல்வி மையத்தில் எம்பிஏ படித்துவிட்டு மெக்கின்சேயில் பணியில் சேர்ந்தார். 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இவர் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் சர்ச்சை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது. ஆனால்,, நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும், நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால், அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். இவர் மீது நம்பிக்கை வைத்த லாரி பேஜ், அந்த வேலையை பிச்சையிடமே தர, அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் டீம். இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்! இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

Dedicated and innovative, here's how Sundar Pichai became Google CEO

பிச்சையின் நியமனம் மூலம் உலகின் டாப் 2 நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நடெல்லா நியமிக்கப்பட்டார்.
 

அதே போல பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி, மாஸ்டர் கார்ட் தலைவராக இந்தியரான அஜித் பங்கா, சான்டிஸ்க் தலைவராக சஞ்சய் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல வாரன் பபெட்டின் பெர்க்ஸைர் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியரான அஜித் ஜெயின் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Dedicated and innovative, here's how Sundar Pichai became Google CEO

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ......அமெரிக்கா கொம்பனியில் இந்தியர்கள்  C E Oஆக இருப்பதால் இந்தியாவின் வல்லரசு கனவு வெகுதூரமில்லை........போலகிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

சுந்தர் பிச்சை: கடந்து வந்த பாதை

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றிருக்கும் 43 வயது சுந்தர் பிச்சையின் வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது.

150811052858_sundar_pichai_afp_640x360_a

கூகுளுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், யூ ட்யூப் போன்ற தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்தது.

சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அவர் ,
பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்றிருக்கிறார்.
பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

தந்தையின் கவனம்

இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.
ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.

அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.
அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.

அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள்

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.
கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

இதற்கும் முன்னதாக, அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்துவந்தாலும், இப்போது, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/science/2015/08/150811_sundarprofile

 

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நம்ப தமிழ்நாட்டுக்கார். அதைவிட இந்தியர். அப்ப இந்தியா பயங்கர வல்லரசுதான் போங்க!

  • தொடங்கியவர்

11866403_10204920286473250_1922103847457

சோத்துக்கு பிச்சை எடுக்கும்போதெல்லாம் என் மதத்துக்காரன்.. என் சாதிக்காரன் என்று அரவணைக்க வராத நாய்கள் எல்லாம்

ஒருவன் கஷ்டப்பட்டு முட்டி மோதி வளர்ந்து நிற்கும்போது, `எங்காளுடே.. எங்க சாதிக்காரம்டே..” என்று பாய்ஞ்சு வருவார்கள்..

சமீபத்திய உதாரணம் google தலைவராகிருக்கும் சுந்தர் பிச்சை (Sundar Pichai )

சோகம் என்னவென்றால் அவர் தலைவராக இருக்கும் google-லிலே அவர் சாதியை தேடி அலைகிறரார்கள் படித்த சாதிவெறியர்கள்..

சுந்தர் பிச்சை சார்.. பாவம் சார் நீங்க..

பேசாம சொந்த ஊரை சோமாலியானு சொல்லிருங்க..

இல்லனா தமிழ் நாட்டு சாதிவெறியனுங்க புதையல் தேடுற மாதிரி உங்க சாதியை தேடி அலைவானுங்க... விடமாட்டானுங்க.. frown உணர்ச்சிலை

-கார்ட்டூனிஸ்ட் பாலா

நன்றி முகநூல்  Bala G

  • தொடங்கியவர்

சுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்

சுந்தர் பிச்சை | கோப்புப் படம்: கமல் நரங்

'இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா' என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்துவிட்டது.

கூகுள் சாம்ராஜ்யம்

எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இணைய உலகில் கூகுள் ஓர் அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.

அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) ஆக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்தபோது அவர் பிரபலமடைந்தார்.

ஆலமரமாய்…

சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர், ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1998-ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது. பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.

ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.

விரியும் ஆதிக்கம்

சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது. ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.

சென்னையின் புதல்வர்

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுளின் இணை நிறுவனரான லாரி பேஜ் "அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்" எனப் பாராட்டுகிறார்.

சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அடுத்த பாய்ச்சல்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இவை போன்ற தயாரிப்புகள் எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை இருக்கிறார்.

ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அழைக்கப்படும் சுந்தர் பிச்சை இப்போது சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்ட நிலையில், கூகுளின் அடுத்த பாய்ச்சல் நிச்சயம் மகத்தானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

http://tamil.thehindu.com/general/technology/சுந்தர்-பிச்சை-இணைய-சாம்ராஜ்யத்தின்-தமிழ்ப்-புயல்/article7525944.ece?widget-art=four-rel

இனவெறி பிடித்த அமெரிக்காவின் ஒபாமா கருப்பு முகம் போல் விண்டோஸ் மார்கெட்டிங் எதிராக கூகுளால் உலகின் சனத்தொகை கூடிய நாட்டுக்கு அறிமுகபடுத்தபட்டவர் பிச்சை இவர் தமிழனாக இருப்பதைஇட்டு நாங்கள் வாழ்த்து சொல்லலாம் பெருமைப்படலாம் அவ்வளவே . அத்துடன் கூகிள் எனும் நிறுவனம் இந்தியா எனும் நாட்டில் வரி சுத்து மாத்தில் பல்லாயிரம் கோடி ஆட்டைய போடுவதுக்கு இந்த ceoவின் சம்பளம் கால் தூசு. அதிவேகமாய் கொண்டு வரப்படும் அன்றோயிட் மென்பொருள் பெட்டக பாதுகாப்பு கேள்விக்குறியே . இன்னொரு கொசுறு சைனாவில் கூகுளின் கொள்ளையடிப்பு தரவு திருட்டுகள் காரணமாக வெளியில்தான் கூகிளின் ஆட்டம்  கொங் கொங்கில் தான் அவர்களின் சைனவுக்கான செர்வர்கள் அங்கு ஆப்பிழுத்த குரங்காட்டம் கிடக்கினம் .மொத்தத்தில் ஆசிய பகுதியில் பிச்சையின் முகம் மார்கெட்டிங் குறியீடு அவ்வளவே .

பிச்சை யுடைய கண்டுபிடிப்புகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் உரிமை தொகைகளை கணக்கில் எடுத்தால் தெரியும் கூகுளின் உண்மையான முகம் . அதை விட்டு நம்மாட்கள் அவரின் சாதி தேடி திரியுதுகள் .

 

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தமிழன் உயரணும்

 

நாங்கள்தான் தமிழர் என்று வாழ்த்திறம்,
1.57 இருந்து 1 நிமிடம் பார்க்கவும், பிச்சயின் பகிடியைப்பார்க்கலாம், நல்ல கெட்டிக்கார இந்தியர்

வெள்ளைக்காரன் நல்லா தமிழனை வச்சு (எங்களுடைய உணர்வுகளையும் வச்சு) வியாபாரம் செய்யிறான், ஆனால் இந்தியர் என்று சொல்லி.

அடுத்த 10 ஆண்டுக்கு இவருக்கு 200-300 மில்லியன், கூகிள் 200-300 பில்லியனை அள்ளப்போராங்கள் இந்தியா இலங்கையிடமிருந்து.

"இனி எங்களை வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பாளார்களாக வரவிடமாட்டான்"

இலங்கையில் கூகிள் பலூன் பறக்கவிடப்போறாங்களாம்

தமிழ் அறிவாளிகள் விலைபோவதை தடுத்து நிறுத்தவேண்டும்

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நம்ப தமிழ்நாட்டுக்கார். அதைவிட இந்தியர். அப்ப இந்தியா பயங்கர வல்லரசுதான் போங்க!

இந்தத் தலைப்பு....  உங்கள், அறிவுக்கு அப்பால் பட்டது.
வாழ்த்த, மனமில்லை என்றாலும்,  தூற்றாமல் இருங்கள்.

இந்த காணொளியைப்பார்த்து தமிழனென்று பெருமைபடலாம்

Virundhinar Pakkam | Dr.k.Sivan - Director Of Vikram Sarabhai Scientific Centre | P-1 |Dt 12-08-15

 

 

Virundhinar Pakkam | Dr.k.Sivan - Director Of Vikram Sarabhai Scientific Centre | P-2 |Dt 13-08-15

 

Edited by Knowthyself

spyder12uk

[இனவெறி பிடித்த அமெரிக்காவின் ஒபாமா கருப்பு முகம் போல் விண்டோஸ் மார்கெட்டிங் எதிராக கூகுளால் உலகின் சனத்தொகை கூடிய நாட்டுக்கு அறிமுகபடுத்தபட்டவர் பிச்சை இவர் தமிழனாக இருப்பதைஇட்டு நாங்கள் வாழ்த்து சொல்லலாம் பெருமைப்படலாம் அவ்வளவே . அத்துடன் கூகிள் எனும் நிறுவனம் இந்தியா எனும் நாட்டில் வரி சுத்து மாத்தில் பல்லாயிரம் கோடி ஆட்டைய போடுவதுக்கு இந்த ceoவின் சம்பளம் கால் தூசு. அதிவேகமாய் கொண்டு வரப்படும் அன்றோயிட் மென்பொருள் பெட்டக பாதுகாப்பு கேள்விக்குறியே . இன்னொரு கொசுறு சைனாவில் கூகுளின் கொள்ளையடிப்பு தரவு திருட்டுகள் காரணமாக வெளியில்தான் கூகிளின் ஆட்டம்  கொங் கொங்கில் தான் அவர்களின் சைனவுக்கான செர்வர்கள் அங்கு ஆப்பிழுத்த குரங்காட்டம் கிடக்கினம் .மொத்தத்தில் ஆசிய பகுதியில் பிச்சையின் முகம் மார்கெட்டிங் குறியீடு அவ்வளவே .

பிச்சை யுடைய கண்டுபிடிப்புகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் உரிமை தொகைகளை கணக்கில் எடுத்தால் தெரியும் கூகுளின் உண்மையான முகம் . அதை விட்டு நம்மாட்கள் அவரின் சாதி தேடி திரியுதுகள் .]

எனது பதிவை இட்டவுடன் உங்களின் பதிவை வாசித்தேன், 100% எனது கருத்துடன் ஒத்துபோகின்றது

உனை நீ அறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.