Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தி தயாரிப்பாளரும் லைகா உரிமையாளருமான சுபாஷ் கொழும்பு விமான நிலையத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளர் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.

 

இந்நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரன் மற்றும் பிரேமிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள்.தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே இவ்விருவரையும் விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டு சென்றுள்ளார்கள். 30க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள்.

 

அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும் செய்யமுடியவில்லை.இந்நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யப்பட்டது ஏன் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இச்செய்தியை கொழும்பில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யமுடியாத நிலையும் காணப்படுகிறது.

 

http://www.cineulagam.com/tamil/news-tamil/social/109875/#sthash.1vAA3S5Y.dpuf

சரிக்கிறதா அழுறதா எண்டு தெரியேல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நடிப்பாக இருக்கும், நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறான் நீ அழுகிறமாதிரி நடி .... அவ்வளவுதான் புரிந்தால் சரி

அட இவ்வளவு நல்ல மனிசனை மகிந்தவின்ரை சினேகிதன் எண்டு பொய் சொல்லிப் போட்டான்களே. இதையும் நாங்கள் நம்பி அந்தாளை திட்டிப் போட்டமே. கடவுளே அறியாமல் செய்த எங்கடை பிழையை மன்னிச்சிடப்பா.. உனக்கு 101 தேங்காய் அடிக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

மணி கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் உங்களுக்கு வேற வேலை இல்லையா:D

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வெளியில் எதிர்ப்பு பலமாக இருக்கிறது  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மணி கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் உங்களுக்கு வேற வேலை இல்லையா :D

 

மணி சொல்ல வருகின்ற செய்தி புரியவில்லையா.... வெளுத்ததெல்லாம் பால் என்ற அளவுக்கு அப்பாவியா நம்ம ரதி அக்கா.
 
இந்த கதை வேற ஊடகங்களில் வரவில்லை... அனேகமாக யாழிலிருந்து தூக்கப் படலாம்.
 
பரபரப்பு செய்திகள் தான் படத்தினை ஓட வைக்கின்றன.
 
ஒரு விமான நிலையத்தில் குடிவரவு பகுதி கடந்த பின், சர்வதேச நிலப் பரப்பாக கருதப் படுவது, சர்வதேச உடன்பாடு கண்ட விடயம்.
 
பிரிட்டிஷ் பாஸ்போர்ட் (அல்லது பிரான்ஸ்) வைத்திருக்கும் ஒருவரை, விமானத்துக்குள் இருந்து இறக்க, அவர்களால், முடியாது.அப்படி இறக்கும் அளவுக்கு பெரும் தவறு, பயங்கரவாதம் தொடர்பில், இலைத்திருக்க முடியாது. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை.
 
இது ஒரு நடிப்பு தான். சிலவேளை, கத்தி பாகம் 2, படப் பிடிப்பு போல... :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி இலாபத்தில்.. பங்கு போடுவதில்.. கோத்தாவோடு புடுங்குப்பாடு போல. எல்லாம் நல்ல படியா முடியும்.. ஆதவனுக்கே வெளிச்சம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

Passport control ற்கு அப்பால் உள்ள பகுதி சர்வதேச பரப்பு என்பது பிழையான தகவல். பணிப்பெண்ணுடன் சில்மிசம் செய்த பலரை, டிரான்சிட்டில் ரன்வேயில் நிண்ட பிளெனில் ஏறி அரஸ்ட் பண்ணிய சம்பவமல்லாம் இருக்கு.

தூதுவராலயங்களுக்கு மட்டுமே மேற்சொன்ன விதி பொருந்தும். அதுவும் சர்வதேச பரப்பல்ல. அந்தந்த நாட்டின் நிலம் என்றே கருதப்படும்.

தங்கள் நாட்டின் எல்லைக்குள் வரும் யாரையும், அவர் என்ன அப்பனான பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் கைது செய்யும் அதிகாரம் எல்லா நாட்டுக்கும் இருக்கு.

இந்த செய்தி பொய்யா மெய்யா தெரியாது ஆனால் இவர்களை கைதுசெய்யும் பூரண அதிகாரம் இலங்கைக்கு உண்டு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுடன் கைகோர்த்து இருந்தாலும் சிங்களம் என்ன செய்யும் என்பதை மீண்டும் உணர்த்தி உள்ளது ஒட்டிக்கொண்டு இருக்கின்ற விபச்சாரி வியாபாரிகளுக்கு ..

இந்தச் செய்தி ஒரு நாடகம் என்றே நம்புகிறேன்.

 

ஆனாலும் இது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

மணி சொல்ல வருகின்ற செய்தி புரியவில்லையா.... வெளுத்ததெல்லாம் பால் என்ற அளவுக்கு அப்பாவியா நம்ம ரதி அக்கா.

இந்த கதை வேற ஊடகங்களில் வரவில்லை... அனேகமாக யாழிலிருந்து தூக்கப் படலாம்.

பரபரப்பு செய்திகள் தான் படத்தினை ஓட வைக்கின்றன.

ஒரு விமான நிலையத்தில் குடிவரவு பகுதி கடந்த பின், சர்வதேச நிலப் பரப்பாக கருதப் படுவது, சர்வதேச உடன்பாடு கண்ட விடயம்.

பிரிட்டிஷ் பாஸ்போர்ட் (அல்லது பிரான்ஸ்) வைத்திருக்கும் ஒருவரை, விமானத்துக்குள் இருந்து இறக்க, அவர்களால், முடியாது.அப்படி இறக்கும் அளவுக்கு பெரும் தவறு, பயங்கரவாதம் தொடர்பில், இலைத்திருக்க முடியாது. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை.

இது ஒரு நடிப்பு தான். சிலவேளை, கத்தி பாகம் 2, படப் பிடிப்பு போல... :icon_mrgreen:

நாம் சொல்ல வந்தது இந்த செய்தியின் நம்பகத் தன்மை பற்றி அல்ல...எதற்கு தேவையில்லாமல் இவரைத் தூக்கி தலையில் வைக்கிறார்கள் என்பது பற்றியதாகும்

எப்படி எல்லாம் சோடினை நடக்கு தமிழன் என்றால் சும்மாவா  :D

கத்தி இலாபத்தில்.. பங்கு போடுவதில்.. கோத்தாவோடு புடுங்குப்பாடு போல. எல்லாம் நல்ல படியா முடியும்.. ஆதவனுக்கே வெளிச்சம். :lol::D

கவலை விடுங்க அண்ணே சீமான் களமாடி மீட்பார் விட்டா விடுவார்  :D

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா மொதலாளிய இலங்கை விமானப்படை தங்க ஹெலிகாப்ட்டர்ல கொண்டும் திரிவாங்கலாம் பிறகு கைதும் செய்வாங்களாம்......

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கத்தி திரைப்பட வெற்றியை கொண்டாட போயிட்டு என்னமா கதைவிடுறாங்க......"கைதாம்" என்று....

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி நல்ல கூராகத்தான் இருக்கின்றது.
அல்லது மொட்டையோ :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

lyca_boss41.jpg

இன்று காலை கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட லைக்கா தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் உபதலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் பல மணித்தியாலங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/

 

சும்மாய் இருங்கோப்பா......ஆக்களை வெளியிலை விட்டுட்டாங்களாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

டீல் ஓவர்,

எக்ஸ்சேஞ்

:)

கோத்தாவா கொக்கா..ஒரு நாளில 12 கோடி சம்பாதிச்சிட்டு கோத்தாவின்ட பங்க கொடுக்காம எஸ்கேப் ஆகலாம் என்டு அல்லிராஜா நினைச்சாரோ  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி கூரோ மொட்டையோ,

அல்லிராஜாக்கும் அவரது கூஜாக்கும் மொட்டை அடிக்கப்பட்டிருக்கு என்பது மட்டும் உறுதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தி கூரோ மொட்டையோ,

அல்லிராஜாக்கும் அவரது கூஜாக்கும் மொட்டை அடிக்கப்பட்டிருக்கு என்பது மட்டும் உறுதி.

 

நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்கள் என்று சொல்ல வருகின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெல்லாம் களவு செய்யுற கூட்டத்துக்கு charity, foundation என்பன ஒரு விசிடிங்கார்ட்டு போல ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அமரர் மணிவண்ணன் சொன்ன டயலாக் தான் நினைவுக்கு வருகுது:

 

"வைப்புக்கு 25% வீதம் வட்டி தாறாங்கன்ணே"

 

மணிவண்ணன்: அவன் தருவாண்டா! ஏன்னா உனக்கு வட்டி மட்டும் தான், அவனுக்கு முதல் பூராக் கிடைக்குதே!" 

 

வரி விலக்குப் பெற தூக்கிப் போடுற பல ஆயிரம் யூரோக்கள் உண்மையிலேயே பணச்சலவை (money laundering) மட்டுமே! இது எல்லாப் பண முதலைகளும் செய்யுறது தான்!

 

(மற்ற படி நாடகம் அபாரம்! Gambit படத்தில வந்த மாதிரி நாடகத்துக்குள்ள ஒரு நாடகம் நடத்தி கோத்தா காசைக் கறந்திருப்பார் எண்டு நினைக்கிறன்! நல்லது தான்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.