Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேணுமாம் .......என்று சிறிலங்கன்ஸ் சொல்லுயினம்....:D

அப்பிடி பார்க்கிறதாலதான் மகிழ்ச்சி வருது.. இல்லாவிட்டால் கொலைவெறிதான் வரும்.. :lol:

  • Replies 827
  • Views 43.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...! இப்படியே போய் கப்புல குந்துங் கப்பு....!  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையில் மகிழ்ச்சியான செய்தி..  :D 

  • தொடங்கியவர்

ஏமாற்றம் தந்த இலங்கையும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிச் செய்தியும்

 

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது.

 

புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை ஓர் ஆட்டத்தில் ஒன்றுமேயில்லாத ஒரு அசோசியேட் அணி போல தோற்றமளிக்கச் செய்து வென்றுள்ளது.

 

ஆனால், இதனையும் எச்சரிக்கையுடனேயே நாம் கூற வேண்டும், அசோசியேட் அணிகள் சிறப்பாக ஆடி, சவால் அளித்த உலகக் கோப்பை போட்டி இதுதான். ஆகவே அசோசியேட் அணியுடன் இலங்கையை இந்த நிலையில் ஒப்பிட்டால் அது சரியாக இருக்காது என்றும் தோன்றுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ததைத் தவிர இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் வேறு ஒன்றையும் சரியாகச் செய்ததாகத் தெரியவில்லை. இதனாலேயே உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இலங்கை ஆட்டத்தை மனரீதியாக, உணர்வு ரீதியாக, தர்க்க ரீதியாக இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்

.

இலங்கை கேப்டன் செய்த தவறுகள்:

முதலில் 'நெருக்கடி தென் ஆப்பிரிக்காவுக்குத்தான்' என்று டாஸ் போடும்போது மேத்யூஸ் கூறியிருக்கக் கூடாது. மேலும் முதல் போட்டியை ஆடும் தாரிந்து குஷால் என்ற ஆஃப் ஸ்பின்னரை 'முரளிதரன் டூப்ளிகேட்' என்றும் புதிர் ஸ்பின்னர் என்றும் வர்ணித்து வார்த்தை விளையாட்டுகளை தென் ஆப்பிரிக்க அணியினரிடத்தில் கொண்டு சென்றார்.

பொதுவாக டாஸ் போடும்போது எந்த ஒரு கேப்டனும் இப்படி கூற மாட்டார்கள். ஆட்டத்துக்கு முதல் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில், அதுவும் தன் நாட்டு பத்திரிகையாளர்கள் குழுமியுள்ள தருணத்தில் எதிரணியினருக்கு எதிராக 4 வார்த்தைகளைக் கூறுவது கேப்டன்களின் வழக்கம். ஆனால் மேத்யூஸோ டாஸ் போடும் போது இவ்வாறெல்லாம் கூறினார். ஆனால் முடிவு... கடைசியில் நகைச்சுவையாகப் போய்விட்டது.

 

புதிராகப் பேசிய மேத்யூஸ் மேலும் சில புதிரான முடிவுகள எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் தொடக்க வீரராகக் களமிறங்கிய லாஹிரு திரிமானி 261 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் அவருக்குப் பதிலாக பலமான தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுக்கு எதிராக குஷால் பெரேரா என்ற இடது கை வீரரை களமிறக்கினார்.

அவர் ஏதோ இலங்கை கிளப் அணி பவுலர்கள் வீசுகிறார்கள் என்பது போல் முதிர்ச்சியற்ற அனாயாச மட்டைச் சுழற்றலில் ஈடுபட்டார். கைல் அபாட் அவரை ஒரு சாதாரண ஸ்விங் பந்தில் வீழ்த்தினார். குவிண்டன் டி காக் அருமையாக அந்தக் கேட்சைப் பிடித்தார். மேத்யூசின் முதல் புதிர் முடிவு தோல்வியில் முடிந்தது.

 

இப்போது தில்ஷன், சங்கக்காரா இணைந்தனர். சரி. ஆட்டம் இனிதான் தென் ஆப்பிரிக்காவுக்கு சங்கடம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தில்ஷன் ஸ்டெய்ன் வீசிய சற்றே உயரம் கூடுதலாக வந்த பந்தை நேராக 2-வது ஸ்லிப்பிற்கு டு பிளெஸ்ஸிஸ் கையில் கொடுத்தார். சற்றும் எதிர்பார்க்க முடியாத ஷாட். டேல் ஸ்டெய்ன் தனது விசித்திரமான செய்கையில் அந்த விக்கெட்டைக் கொண்டாடினார்.

முதல் 13 ஓவர்களில் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் சூடு பிடித்தது. இரண்டு அருமையான கேட்ச்கள், நல்ல கட்டுக்கோப்பான, அளவான ஸ்விங் பவுலிங், நல்ல பீல்டிங். 4 மெய்டன் ஓவர்கள்.

 

சங்கக்காராவின் புரியாத புதிர் இன்னிங்ஸ்:

இந்த உலகக் கோப்பையில் 4 சதங்களை அடித்து சாதனை புரிந்தவர். இவர்தான் இன்று இலங்கையின் துருப்புச் சீட்டு என்றெல்லாம் கணிப்புகள் இருந்தன. ஆனால் சங்கக்காராவுக்கு இன்று தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு மற்றும் கள அமைப்பு ஆணியறைந்தது என்றே கூற வேண்டும். அவர் முதல் ரன்னை எடுக்க 16 பந்துகள் எடுத்துக் கொண்டார். 2-வது ரன்னை எடுக்க 27 பந்துகளையும், 6 ரன்களை எடுக்க 42 பந்துகளையும் விழுங்கியதோடு 90 பந்துகளில் 34 ரன்கள் என்று தடுமாறினார்.

அவர் நினைத்தது என்னவெனில் யாராவது ஒருவர் நின்று ஆடினால், தான் கடைசி வரை நின்று ஓரளவுக்கு இலக்கை 250 ரன்களுக்காவது கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தார். அவர் நினைத்ததில் தவறில்லை. அங்குதான் இவருக்கு சாதுரியம் போதாது என்று தோன்றுகிறது.

 

இன்று சச்சின், லாரா ஆகியோருடன் ஒப்பிடப்படும் சங்கக்காரா எங்கு இவர்களை விடவும் சற்று பின் தங்கியிருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கூற முடியும். ஒரு முறை சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் போட்டியில் அப்போதைய ஜிம்பாப்வே (அந்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியை விடவும் பலமானது) அணியை குறிப்பிட்ட ஓவர்களில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும். பெனோனியில் நடைபெற்ற அந்த ஆட்டம் இன்னமும் நினைவிருக்கிறது. 240 ரன்களை 40 ஓவர்களில் எடுக்க வேண்டிய நிலை. சச்சின் தனி மனிதராக ஜிம்பாப்வேயின் எடோ பிராண்டஸ், ஹீத் ஸ்ட்ரீக் ஆகியோரை அடித்து நொறுக்கி சதம் கண்டு இலக்கை எட்டி இறுதிக்கு இந்திய அணியை முன்னேற வைத்தார்.

 

இப்படி இன்னும் நிறைய இன்னிங்ஸ்களை நாம் சச்சினுக்குக் கூற முடியும். 1998ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளென் மெக்ராவை சச்சின் விளாசியது பெரிய திருப்பு முனை ஏற்படுத்தியது. அதே போல்தான் 1996 உலகக்கோப்பையிலும் 2 விக்கெட்டுகள் போன பிறகு மெக்ராவை ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசி சச்சின் ஆட்டத்தை திருப்பினார். லாரா 1992 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ், 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றிய அபார சதம் என்று பட்டியலிட முடியும்.

 

சங்கக்காரா இன்று தென் ஆப்பிரிக்கா கொடுத்த நெருக்கடியை இவர்கள் பாணியில் தாக்குதல் ஆட்டத்தில் முறியடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்தான் இந்தத் தொடரில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் தென் ஆப்பிரிக்க ஸ்பின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியிருந்தால், அதாவது ஒரு 5 ஓவர்கள் அவர் இவ்வாறு ஆடியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். மாறாக அவர் நங்கூரம் பாய்ச்சி நின்று ஆடும் ஆட்டத்தைத் தேர்வு செய்தார். எதிர்முனையில் விக்கெட்டுகள் சரியும் போது கிரீசில் நிற்கும் இவர் பொறுப்பை தன்வசம் எடுத்துக் கொண்டு தாக்குதலை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் அடித்து ஆட முயன்று 96 பந்துகளில் 45 ரன்களில் மோர்னி மோர்கெல் பந்தை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 127-வது ரன்னில் விழுந்த 9-வது விக்கெட்டாக சங்கக்காராவின் கடைசி போட்டி முடிவுக்கு வந்தது.

 

இங்குதான் நாம் சச்சின், லாரா போன்ற 'மேதை' வீரர்களுக்கும், சங்கக்காரா போன்ற 'சிறந்த' வீரர்களுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பிடுவது அவசியம். தாக்குதலை எதிரணியினரிடத்தில் எடுத்துச் செல்லுதல் என்ற ஒன்று எப்போதும் உண்டு. எது எப்படியிருந்தாலும் இலங்கையின் தலைசிறந்த வீரராக உருவெடுத்த சங்கக்காரா விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இது. இலங்கை கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அபரிமிதமானது. உலகக் கிரிக்கெட்டுக்கும் அவரது ஆல் ரவுண்ட் திறமை (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக) செய்த பங்களிப்பு மறக்க முடியாதது, மறுக்க முடியாதது.

 

மற்றொரு ஓய்வு பெறப்போகும் வீரரான ஜெயவர்தனே, இம்ரான் தாஹிரின் 'செல்லப்பிள்ளையாக' இருந்து வந்திருக்கிறார். இன்று அவர் தாஹிரிடம் அவுட் ஆனது 4 இன்னிங்ஸ்களில் 4-வது முறை. சற்றே விரைவாக வந்த பந்தை மிட்விக்கெட்டில் புல் ஆட முயன்று அருகிலேயே கேட்ச் ஆனது.

திரிமானி மட்டும் வந்தது முதல் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். தொடக்கத்தில் களமிறக்காததன் கோபம் தெரிந்தது. 48 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரின் முதல் விக்கெட்டாக அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

இம்ரான் தாஹிர் மீண்டும் அபார பந்துவீச்சு:

இந்த உலகக்கோப்பையில் இம்ரான் தாஹிர் மீது தென் ஆப்பிரிக்கா கேப்டன் வைத்த அபரிதமான நம்பிக்கை இன்றும் வீண் போகவில்லை. அவர் 8.2 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். திரிமானி, ஜெயவர்தனே, பெரேரா, கடைசியில் மலிங்கா ஆகியோரை வீழ்த்தினார்.

சங்கக்காராவுக்கு இவர் இடம் கொடுக்காமல் வீசி அசத்தினார். கூக்ளியையும் லெக்ஸ்பின்னையும் மாறி மாறி வீசி குழப்பத்தை ஏற்படுத்தினார். தான் வீசிய 50 பந்துகளில் 2 பவுண்டரிகளை மட்டுமே அவர் கொடுத்தார்.

 

டுமினியிடம் அனாவசியமாக மேத்யூஸ் 19 ரன்களில் வீழ்ந்தார். அது 33-வது ஓவரின் கடைசி பந்து பிறகு, 35-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் குலசேகரா, குஷால் ஆகியோரை வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார் டுமினி. அவர் 9 ஓவர்களில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.

 

டுமினியை அடிக்காமல் விட்டதே சங்கக்காரா இன்று செய்த மிகப்பெரிய தவறு. அன்று பாகிஸ்தானின் சர்பராஸ் அகமட் சரியாக டுமினியைத் தாக்கினார் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. இன்று அதனைச் சங்கக்காரா செய்திருக்க வேண்டும். 37.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ஒரு அணி என்ன செய்ய முடியும்?

ஃபார்மில் இல்லாத குவிண்டன் டி காக்கை ஃபார்முக்குக் கொண்டு வந்ததுதான் இலங்கை அணியின் இன்றைய பந்துவீச்சு சாதனையாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது ஒருவிதத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இலங்கை சவால் அளிக்காமல் சரணடைந்தது மிகப்பெரிய ஏமாற்றமே.

முக்கியப் போட்டியில் கோட்டைவிடும் அணி என்'ற ஓர் அடையாளத்தை முறியடித்துள்ள தென் ஆப்பிரிக்கா இனி ஓர் அபாயகரமான அணியே என்று நிச்சயம் கூற முடியும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7007280.ece
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

(அந்த ஜிம்பாப்வே அணி இந்திய அணியை விடவும் பலமானது) அணியை குறிப்பிட்ட ஓவர்களில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிக்கு முன்னேற முடியும். பெனோனியில் நடைபெற்ற அந்த ஆட்டம் இன்னமும் நினைவிருக்கிறது. 

அடேயப்பா.. இந்துவின் சச்சின் புராணம் தாங்கமுடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அபிமான அணியான தென்னாபிரிக்கா.. தட்டுத்தடுமாறி.. காலிறுதி வரை வந்த.. சொறிலங்காவை வீட்டுக்கு துரத்தி அடித்ததை இட்டு மிக மகிழ்வுறுவதோடு கொண்டாடி மகிழ்கிறோம். 

 

இத்தோடு சங்கக்காரவின் கிரிக்கெட் சகாப்தமும் ஓய்ந்து போய்விடும்.  :lol:  :icon_idea:

 

 

எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.
சந்தோசம் தாங்க முடியல்ல 
:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:
வாழ்த்துக்கள் தென்னாபிரிக்க  அணியினருக்கு  :wub:
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்றோடு சொறலங்கா supporters இன் கதையும் சரி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அரசியலையும் அரசியலாய் மட்டும் பார்க்கலாமே 
நாம தான் ஒன்னுக்குள்ள ஒன்னாச்சே 
எதுக்கு அவன் அடிக்கிறான் இவன் புடுங்கிறான் என்று கத்தனும் ...?

we are சொரிலங்கன்ஸ் we லைக் யுனிட்டி என்று  கட்டிபுடிக்கவேண்டியது தானே 

அதுக்கு மட்டும் ஏன் அது வேற வாய் இது நாற வாய் 
இவங்கட லாஜிக்கே புரியல சாமி 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அரசியலையும் அரசியலாய் மட்டும் பார்க்கலாமே 

நாம தான் ஒன்னுக்குள்ள ஒன்னாச்சே 

எதுக்கு அவன் அடிக்கிறான் இவன் புடுங்கிறான் என்று கத்தனும் ...?

we are சொரிலங்கன்ஸ் we லைக் யுனிட்டி என்று  கட்டிபுடிக்கவேண்டியது தானே 

அதுக்கு மட்டும் ஏன் அது வேற வாய் இது நாற வாய் 

இவங்கட லாஜிக்கே புரியல சாமி 

 

போரோ

அரசியலோ

விளையாட்டோ

வியாபாரமோ

தமிழன் என்றால் அடி என்பது தான் சிங்களத்தின் நிலைப்பாடு...

தமிழருக்குத்தான் இதில் வகுப்பு

வகுப்பு முடியமுதல் 

எல்லாத்தையும் அவன் துடைத்து காலியாக்கியிருப்பான்

பின்னர் அடுத்த வகுப்பு

அது போன மாதம்

இது இந்த மாதம்....

 

இதில் பிரபாகரன் மட்டும் தான் விதிவிலக்கு

காரணம் ஒன்றேயொன்று தான்

அந்தாளுக்கு வரலாறு வழிகாட்டி....

நல்ல காலம் அந்தாள் பள்ளிக்கூடத்தில் அதிக காலம் கடத்தவில்லை..

கடத்தியிருந்தால்

இது வகுப்புக்குள் தான் அவரும்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அபிமான அணியான தென்னாபிரிக்காவே சொறிலங்காவை வீட்டுக்கு ஓட ஓட விரட்டி அடித்ததில் மிக மிக மிக மிக மகிழ்ச்சி. 

 

சங்கா என்றால்.. ஏதோ சிங்களத்தின் வெற்றிச் சிங்கம் என்று முழங்கிச்சினம். இப்ப சிங்கம் களைச்சுப் போய்.. ஒரேயடிடயா.. படுத்திட்டுது.  :D  :lol:  :icon_idea:


Happy_Dance.gif


calvin-hobbes-dancing.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அபிமான அணியான தென்னாபிரிக்காவே சொறிலங்காவை வீட்டுக்கு ஓட ஓட விரட்டி அடித்ததில் மிக மிக மிக மிக மகிழ்ச்சி. 

 

சங்கா என்றால்.. ஏதோ சிங்களத்தின் வெற்றிச் சிங்கம் என்று முழங்கிச்சினம். இப்ப சிங்கம் களைச்சுப் போய்.. ஒரேயடிடயா.. படுத்திட்டுது.  :D  :lol:  :icon_idea:

Happy_Dance.gif

calvin-hobbes-dancing.jpg

சங்கா பம்மியதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் 

சொத்தை டீமோடை சும்மா தூக்கி தூக்கி அடிச்சாங்கோ ...சூப்பர் டீமோட சுருண்டு படுத்திட்டாங்கோ 

நான் நாலு நூறு அடிச்சவண்டா என்ற வீராப்பு மட்டும்தான் மிச்சம் ,,,,அப்படியே பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வந்து ஊரோட சேரவேண்டியது தான். இன்னொரு நூறு போட தான் டிரை பண்ணினவர் கொஞ்சத்திலை சொதப்பிப்போட்டுது ...அங்காலை நிண்டவனுகள் ஒழுங்கா கொம்பனி கொடுக்கவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்

சங்கா இந்த அவமானத் தோல்வியோடு ஓய்பு பெற வேண்டும். அதைச் சிங்களம் பொன்னெழுத்தில் எழுதி வைக்கனும் என்றிருந்திருக்குது. அதை தென்னாபிரிக்கா சாதித்துள்ளது.  :icon_idea:  :lol:

11074158_792009527556892_55968883018448211069265_791883724236139_361410170402690

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் தோல்வி எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.
ஆனால் அவர்கள் தென் ஆபிரிக்காவிடம் தோற்றதே மகிழ்ச்சியைத் தருகின்றது :D:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கா இந்த அவமானத் தோல்வியோடு ஓய்பு பெற வேண்டும். அதைச் சிங்களம் பொன்னெழுத்தில் எழுதி வைக்கனும் என்றிருந்திருக்குது. அதை தென்னாபிரிக்கா சாதித்துள்ளது.  :icon_idea:  :lol:

 

 

நாட்டு நடப்பு தெரியாது போல. சங்கா தனது ஓய்வை எப்போதோ அறிவித்தாயிற்று. இன்றுடன் சங்கு, மங்கு, திங்கு ஓய்வு மூன்றும் ஒய்வு.

 

இன்றைய தோல்வி ஶ்ரீ லங்கா துடுப்பாட்ட அணி, நிருவாகத்தின் ஆணவத்துக்கு கிடைத்த அடி.

 

ஶ்ரீ லங்கா அணியை உசார்ப்படுத்த பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட உளவியல் விற்பன்னர் குளிசையை மாறி குடுத்திட்டாரோ என்னமோ.

 

சும்மா வழமைபோல் விளையாடாமல் அளவுக்கு மிஞ்சி தலைகீழாய் நின்று யோச்சிசு விளையாடினால் ஶ்ரீ லங்காவிற்கு மாத்திரம் இல்லை, எந்த அணியுக்கும் இதுதான் நிலமை.

 

பழைய ஆட்டங்களில் இருந்து ஶ்ரீ லங்கா துடுப்பாட்ட வாரியம் இன்னமும் பாடம் படிக்கவில்லை என்பதை இன்றைய அணித்தெரிவு காட்டுகின்றது.

 

டம்மி பீஸ் ஒன்றை உலககோப்பை காலிறுதி போட்டியில் ஆரம்பதுடுப்பாட்ட வீரராய் துரும்புசீட்டாக பயன்படுத்திய ஒரோயொரு அணி ஶ்ரீ லங்கா அணிதான். 

அதிகாலையில் மகிழ்ச்சியான செய்தி.. :D[/quote

தப்பிட்டிங்க முழித்திருந்து உதவாத விளையாட்டு பார்த்ததுக்கு இப்ப தூங்கி வழியிறன்

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிட்டிங்க முழித்திருந்து உதவாத விளையாட்டு பார்த்ததுக்கு இப்ப தூங்கி வழியிறன்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ்
v
இந்தியா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

சங்கா பம்மியதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் 

சொத்தை டீமோடை சும்மா தூக்கி தூக்கி அடிச்சாங்கோ ...சூப்பர் டீமோட சுருண்டு படுத்திட்டாங்கோ 

நான் நாலு நூறு அடிச்சவண்டா என்ற வீராப்பு மட்டும்தான் மிச்சம் ,,,,அப்படியே பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வந்து ஊரோட சேரவேண்டியது தான். இன்னொரு நூறு போட தான் டிரை பண்ணினவர் கொஞ்சத்திலை சொதப்பிப்போட்டுது ...அங்காலை நிண்டவனுகள் ஒழுங்கா கொம்பனி கொடுக்கவில்லை  

 

கிளிச் சாத்திரம் தொடங்கலாம்!!

சிறிலங்கன் தோல்வி எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

ஆனால் அவர்கள் தென் ஆபிரிக்காவிடம் தோற்றதே மகிழ்ச்சியைத் தருகின்றது :D:lol: :lol:

 

எல்லாம் வெறியர்கள்தான்!

ஒன்று இனவெறி!!

மற்றது நிறவெறி!!! (முன்பு)  :o

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தோற்கும் என்றே போடடிருக்கேன்.

ஆனபடியால் காயில காசு வாயில தோசை.

தோத்ததில் சந்தோசமுமாச்சு புள்ளியுமாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தோற்றாலும் வென்றாலும் அந்த அணிக்கான எனது ஆதரவு எப்போதுமே மாறப்போவதில்லை. இந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு  இருக்கவில்லை, குறிப்பாக வீரர்களின் காயம், பந்துவீச்சாளர்களின் பற்றாக்குறை அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. துடுப்பாட்ட வரிசையை மாற்றியதிலிருந்து பல விடயங்களில் தவறுகள் விட்டிருந்தார்கள்.

 

விளையாட்டில் தோற்பதும் வெல்வதும் மாறி மாறி வரும் ஆனால் எனது மிகப்பெரிய கவலை எனது அபிமான வீரரான சங்காவை நான் ஒருபோதும் ஒரு ODI இல் மைதானைத்தில் blue & gold உடுப்புடன் காணப்போவது இல்லை. அவரது 11 இலக்க ஜெர்சியை கண்கள் தேடத்தான் போகின்றது. அவரது தோழரான மகியும் சக வீரரான டிலியும் அற்ற வெறுமையை நினைக்க மனம் விரும்பவில்லை.

 

போய் வா எனதருமை சங்கா, நீங்கள் விக்கெட்டின் முன்னாலும் விக்கெட்டின் பின்னாலும் நின்ற தருணங்கள் எப்போதும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும். விளையாட்டின் பின்னரான ஓய்வு உங்களது வழமையான பொழுது போக்கு போல வயலினுடனும், புத்தகங்களுடனும் கழியும் என நம்புகிறேன். இதே போலத்தான் சச்சினுக்கும், லாராவுக்கும், கில்லியுக்கும், முரளிக்கும், அரவிந்தாவுக்கும் கனத்த மனதுடன் விடை கொடுத்தேன் ஆனால் உங்களது ஓய்வு ஒருபடி மேலே போய் துக்கமாக தொண்டையை அடைக்கிறது. நீங்கள் ஓய்வு பெற்றது எனது பிறந்த நாளில் என்பதாலோ என்னவோ......
  

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பார்க்காமல் விட்டதில் சரியான கவலை.. PVR இல் பதிவு பண்ணியிருக்கலாம்.. அதை செய்ய மறந்திட்டன்.. யூடியுபிலும் ஒன்றையும் காணேல்ல.. :blink:

 

http://www.bbc.co.uk/sport/0/cricket/31944272

 

இதில ஒரு தொகுப்பு இருக்குது. 

 

உலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில்.... விரைவான ரன் சேஸாகவும் தென்னாபிரிக்காவின் வெற்றி பார்க்கப்படுகிறது. 

 

சொறிலங்கா அணிக்கு இதுவும் தேவை இன்னும் தேவை..! சொறிலங்காவின் தோல்வி சொறிலங்காவின் தீவிர ரசிகர்களை ரெம்பதான் நோகடிச்சிருக்குது. சொறிலங்கா எனி இன்னும் 50 வருடங்களுக்கு உலகக் கோப்பை கனவில் தான் மிதக்கலாம்.. நனவில் நடக்காது.  :lol:  :icon_idea:

 

South Africa reach the semi-finals with an easy first ever knockout win over Sri Lanka 

 

இந்த ஒன்றே சங்கா - மகேல.. கும்பலுக்கு ஓய்வு தருணத்தில் அளிக்கப்பட்டுள்ள நல்ல பரிசு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வெறியர்கள்தான்!

ஒன்று இனவெறி!!

மற்றது நிறவெறி!!! (முன்பு)  :o

 

நிறவெறி இருந்தாலும் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியை சொறீலங்காவில் யாராலும் உருவாக்கிக் காட்ட முடியுமா..?! திறமை இருந்தாலும் வர முடியாது. தென்னாபிரிக்க அணியில்.. கறுப்பை விட வெள்ளை அல்லது கலப்புத் தான் அதிகம் விளையாடுது. ஆட்சியில் இருப்பது கறுப்பின அரசு. :icon_idea:  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.