Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு மகன் திருமண வீட்டில் நுழைந்த போலிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu_son_m001.jpg

வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் திருமண மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறயுள்ளார். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு. மணப்பெண் புவனேஸ்வரி மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டாரும், இரு வீட்டாரின் மிக மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர்.

11-1418292865-vadivelu-son-marriage-600.

இந்த நிலையில் திருமணம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு திடீரென மண்டபத்திற்கு தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கெளசல்யா மற்றும் போலீஸார், சமூக நலத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் புவனேஸ்வரிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்றும், அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தப்படுவதாகவும் தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மணமகளிடம் நீங்கள விசாரியுங்கள் என்று வடிவேலு அவராகவே முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

மேலும் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு புவனேஸ்வரியின் கல்விச் சான்றிதழை ஆய்வு செய்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். விசாரணைக்குப் பின்னர் திருமணம் நடத்த்த தடை இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டு கிளம்பிச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி கூறுகையில், மணமகள் புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு புகார் வந்திருந்தது. அதனால்தான் திருமண மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினோம். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு, திருப்புவனம் பள்ளியில் படித்த புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்களாகிவிட்டன என்பதும், யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார் அவர். அதிகாரிகள் விசாரணைக்காக வந்தபோது வடிவேலு மிகவும் கவலையாகி விட்டாராம். இருந்தாலும் நிதானமாக அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். விளக்கம் கொடுத்துள்ளார். அவர்கள் புகார் உள்நோக்கம் கொண்டது என்று கூறி விட்டுக் கிளம்பியபோதுதான் அவர் நிம்மதி அடைந்தாராம்.

thatstamil.com

  • Replies 78
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கு வயது 18

மாப்பிள்ளைக்கு......??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாப்ளை கோட், சூட், சேர்ட், சூட் பாக்கட்டில் கூலிங் கிளாஸ், முகத்து மீசை... கண்களின் சிவப்பு....
 
வடிவேலு குடும்பத்துக்கும், படிப்புக்கும் எட்டாப் பொருத்தம் போலுள்ளது.
:D
 
11-1418292865-vadivelu-son-marriage-600.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கட்டில் கூலிங்கிளாசா, தெரியலையே -அட நீங்க மறக்காம ரீடிங் கிளாசை எடுத்து போட்டுக்கிங்க. !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கட்டில் கூலிங்கிளாசா, தெரியலையே -அட நீங்க மறக்காம ரீடிங் கிளாசை எடுத்து போட்டுக்கிங்க. !!!

அட எங் கொக்கமக்கா, பிடிக்கிறீங்களோ எண்டு பார்த்தேன்.  :icon_mrgreen:
 
நாம ஒரு ப்ளோல போய்க் கிட்டிருகிரம்.... நீங்க வேற பிரேக்கை போட்டுக் கிட்டு....  :D
 
சேட்டுத் துணியில ஒரு பீசு அங்கின வச்சுருக்கிறாரு எண்டு சொன்னா, நல்லாவா இருக்கும்?  :unsure:  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாய்பதென்றால் ஒரு சுகம்தான் .ம்
படிப்பை பற்றியும்,பண்பைப் பற்றியும் சும்மா புலட்டிக் கொள்ளாதீர்கள்.
வாழ்த்த மனசு வராத புல உறவுகள்.
லவட்டிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே.அதை விட்டு
திருந்தாத பதிவுக் கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலாய்பதென்றால் ஒரு சுகம்தான் .ம்

படிப்பை பற்றியும்,பண்பைப் பற்றியும் சும்மா புலட்டிக் கொள்ளாதீர்கள்.

வாழ்த்த மனசு வராத புல உறவுகள்.

லவட்டிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே.அதை விட்டு

திருந்தாத பதிவுக் கூட்டம்.

தாங்கள் ??? 

புதிய உறுப்பினரோ?
 
முதலில் கௌரவமாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.... எங்களைத் திருத்துவதை பிறகு பார்த்துக் கொள்ளலாமே, தல...    :rolleyes:
 
அதுவும் 21ம் நூற்றாண்டில் 18 வயதில் காலேஜ் போற வயசில உள்ள பொண்ணை... பள்ளி அறைக்கு அனுப்பிற இந்தச் செயலை வாழ்த்துவதிலும் வாழ்த்தாமல் இருப்பது நல்லதல்லவா.

எதுஎப்படியோ.. இந்திய கிராமங்கள் இன்னும் முன்னேற இடமுள்ளது. வடிவேல் இத்தனை படங்களில் நடித்த போதும் கற்றுக்கொண்ட பாடங்கள் எதுவுமே இல்லையா என்றும் வினவத்தோன்றுகிறது.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பின்னாவது அந்த பொண்ணை படிக்க விடுங்க வடிவேலு சார். படிப்பை அவள் தன் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நிலையை உருவாக்காதீர்கள். அவள் தன் படிப்பை குழந்தைகளுக்கு ஊட்டும் நிலையை உருவாக்குங்கள். :icon_idea::)

தமிழ் நாடு மட்டுமல்ல , உலகம் முழுவதும் புகழ் கொண்ட ஒருவர் குடும்ப கலியாணத்துக்கு பொலிசார் வருவதெண்டால், சும்மா தமாசுக்காக, வலுவான காரணமின்றி,  வந்து இருக்க முடியாது. மேலிடத்து விசாரணை, மீடியா குடைச்சல் வரும் என்று தெரியாமல் வந்திருக்க மாட்டார்கள். 
 
இது தவறானால் வடிவேலு மான நஷ்டம் கேட்டு நீதிமன்றம் போகும் பண, ஆளணி வசதி உள்ளவர்.  உயர் அதிகாரிகளிடம் முறையிடக் கூடிய பலம் கொண்ட ஒருவர். 
 
நெருப்பு இல்லாமல் புகை வந்து இருக்க முடியாது. எதாவது வில்லங்கம்  இருக்கும் போல தான் தெரியுது....
 
யாரோ, வயசு குறைவு என்று, போன் மெசேஜ் விட்டார்கள். அது தான் விசாரிக்க வந்தோம் என சும்மா சொல்லி விட்டு போய் இருக்கிறார்கள் போல தெரிகிறது.  :icon_idea:

Edited by Nathamuni

அதுவும் 21ம் நூற்றாண்டில் 18 வயதில் காலேஜ் போற வயசில உள்ள பொண்ணை... பள்ளி அறைக்கு அனுப்பிற இந்தச் செயலை வாழ்த்துவதிலும் வாழ்த்தாமல் இருப்பது நல்லதல்லவா.

எதுஎப்படியோ.. இந்திய கிராமங்கள் இன்னும் முன்னேற இடமுள்ளது. வடிவேல் இத்தனை படங்களில் நடித்த போதும் கற்றுக்கொண்ட பாடங்கள் எதுவுமே இல்லையா என்றும் வினவத்தோன்றுகிறது.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பின்னாவது அந்த பொண்ணை படிக்க விடுங்க வடிவேலு சார். படிப்பை அவள் தன் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நிலையை உருவாக்காதீர்கள். அவள் தன் படிப்பை குழந்தைகளுக்கு ஊட்டும் நிலையை உருவாக்குங்கள். :icon_idea::)

13, 14 வயசில குழந்தைய காப்பகத்தில விட்டூட்டு பள்ளிக்கு போகாம... 18 வயசில பள்ளியறைக்கு போறதில ஏதும் தப்பில்லையே?!

சிலருக்கு தப்பு செய்தாலும் ஒத்துக் கொள்ள மன்மசில்லை.. அதுக்குள்ளை கிரந்தம் வேறை?!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் ??? 

புதிய உறுப்பினரோ?
 
முதலில் கௌரவமாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.... எங்களைத் திருத்துவதை பிறகு பார்த்துக் கொள்ளலாமே, தல...    :rolleyes:

யாழின் புதுவிதியில் சில தளர்வுகளைச்செய்தார்கள்

புது உறவுகள் உடனேயே  எழுத வசதியாக....

அதை சிலர்  தமக்கு வேண்டப்படாதோருக்கு எதிராக எழுதப்பாவிக்கின்றார்கள்

ஒருமுறை  வந்து

கொட்டவேண்டியதைக்கொட்டிவிட்டு.......?? :(  :(  :(

13, 14 வயசில குழந்தைய காப்பகத்தில விட்டூட்டு பள்ளிக்கு போகாம... 18 வயசில பள்ளியறைக்கு போறதில ஏதும் தப்பில்லையே?!

சிலருக்கு தப்பு செய்தாலும் ஒத்துக் கொள்ள மன்மசில்லை.. அதுக்குள்ளை கிரந்தம் வேறை?!  :o  :lol:

13 , 14 வயதில் தவறுதலாக குழந்தை பெற்றாலும் படிக்க விரும்பி தொடர்கின்றவர்கள் மீது நக்கல் அடிக்காமல் அவர்களின் படிப்பின் மீதான ஆவலை வாழ்த்த முயலுங்கள் சோழியன். சிறு வயதில் பிள்ளை பெற்றதற்காக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க அல்லது தற்கொலை செய்யவா சொல்கின்றீர்கள் அவர்களை?

இன்றைய உலகில் 18 வயதில் படிக்க விடாமல் கலியாணம் செய்து வைக்கின்றவர்களை சாட்டையால அடிச்சு திருத்த வேண்டும்.

நான் அவதானிக்கும் பலர் படிக்கும் ஆர்வத்திலும் பார்க்க... அதனால் கிடைக்கும் சலுகைக்காகவே படிக்கப் போவதுபோல பாவனை செய்வது போலிருக்கிறது...!

மற்றும், சட்டப்படி திருமணம் செய்யும் வயதில், அது நிகழ்ந்தால் அதற்கு ஏன் அடி உதை... திருமணம் என்பது பெரியோர்களால் கலந்து பேசி, நிச்சயிக்கப்பட்டு நிறைவேறுவது. அதை படிப்பறிவற்ற செயல்... திருத்த வேண்டிய செயல் என்று எப்படி கூற முடியும்?

உதாரணாமாக, கோடிக்கணக்கான மக்கள் வாழும் தமிழகத்தின் சினிமாவில் வெற்றிகரமாக தடம் பதித்த ஒருவனை இங்கே படிப்பறிவற்றவர் என்று எப்படி தீர்மானிக்க முடிகிறது... படிப்பு என்பது வெறும் புத்தகங்களினால் மட்டுமா தீர்மானிக்க முடிகிறது?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான மக்கள் வாழும் தமிழகத்தின் சினிமாவில் வெற்றிகரமாக தடம் பதித்த ஒருவனை இங்கே படிப்பறிவற்றவர் என்று எப்படி தீர்மானிக்க முடிகிறது... படிப்பு என்பது வெறும் புத்தகங்களினால் மட்டுமா தீர்மானிக்க முடிகிறது?!

வெற்றிகரமாக சினிமாவில் வலம் வருவதற்கும் படிப்பறிவிற்கும் என்ன தொடர்பு?

MGR, சிவாஜி, நம்ம மகிந்தா?

வடிவேலு போன்றவர்கள் தமக்கு கிட்டாத படிப்பை தனக்கு கிடைத்த வசதிகளை கொண்டு தனது பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கக் கூடாதா?

சும்மா இமயமலை போவதாக, வருவதாக பீத்திய, ரஜனி கூட தனது பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லையே என்ற கவலையில் இருந்தார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

13 , 14 வயதில் தவறுதலாக குழந்தை பெற்றாலும் படிக்க விரும்பி தொடர்கின்றவர்கள் மீது நக்கல் அடிக்காமல் அவர்களின் படிப்பின் மீதான ஆவலை வாழ்த்த முயலுங்கள் சோழியன். சிறு வயதில் பிள்ளை பெற்றதற்காக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க அல்லது தற்கொலை செய்யவா சொல்கின்றீர்கள் அவர்களை?

இன்றைய உலகில் 18 வயதில் படிக்க விடாமல் கலியாணம் செய்து வைக்கின்றவர்களை சாட்டையால அடிச்சு திருத்த வேண்டும்.

பிறசர் ஏறக்கூடாது என்பதுக்காக சில 15ம் நூற்றாண்டுகாலக்கருத்துக்களை வாசிப்பதில்லை.. தவறுதலாக கண்ணில் தட்டுப்பட்டுது.. இப்படித்தான் எழுதத்தோன்றியது..ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்ட பிறசரைப்பார்த்து மகிழ்வடைகிறேன்.. :D

Edited by சுபேஸ்

நான் அவதானிக்கும் பலர் படிக்கும் ஆர்வத்திலும் பார்க்க... அதனால் கிடைக்கும் சலுகைக்காகவே படிக்கப் போவதுபோல பாவனை செய்வது போலிருக்கிறது...!

இது ஒன்றே போதும் உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பது அறிய.  தவறுதலாக ஒரு நிகழ்வு நடந்தமைக்காக படிப்பை விட்டு ஒதுங்க வேண்டும் என்று சிந்திக்கும் உங்களிடம் வேறு என்னத்தை எதிர்பார்ப்பது?

மற்றும், சட்டப்படி திருமணம் செய்யும் வயதில், அது நிகழ்ந்தால் அதற்கு ஏன் அடி உதை... திருமணம் என்பது பெரியோர்களால் கலந்து பேசி, நிச்சயிக்கப்பட்டு நிறைவேறுவது. அதை படிப்பறிவற்ற செயல்... திருத்த வேண்டிய செயல் என்று எப்படி கூற முடியும்?

சட்டப்படி நடப்பதால் மட்டுமே எல்லாமே நியாயமாகி விடாது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அநேகமான அநியாயங்கள் சட்டத்தின் படிதான் நடக்கின்றன. அத்துடன்  பெற்றோர்கள் கலந்து பேசி நிச்சயித்தால் மட்டும் அது சரியாகி விடவும் மாட்டாது. 

வரட்டுத்தனமான எண்ணங்களும், 16 ஆம் நூற்றாண்டுக் கொள்கைகளும் கொண்டுள்ள பெற்றோர்களால்  எடுக்கப்படும் முடிவுகள் சரியாகவும் இருக்க மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

எது எதுக்குக் குதிப்பது இல்லை என்றாகிவிட்டது இப்பொழுது யாழில் உள்ள உறவுகளுக்கு. ஏன் அந்தப் பெண்ணுக்கே கூடப் படிப்பதில் ஆர்வம் இல்லாதிருக்கலாம். அத்துடன் கூரை வீட்டில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பத்துக்கு ஒரு வசதியான சம்பந்தம் வரும்போது தட்டிக்களிக்கவா மனம் வரும். நீங்கள் இதில் எழுதுவது அவர்கள் யாரின் காதுகளுக்குப் போகப் போகிறதா ??? அதுக்கும் இல்லை. எதுவுமே நடக்காததுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்.

இது ஒன்றே போதும் உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பது அறிய.  தவறுதலாக ஒரு நிகழ்வு நடந்தமைக்காக படிப்பை விட்டு ஒதுங்க வேண்டும் என்று சிந்திக்கும் உங்களிடம் வேறு என்னத்தை எதிர்பார்ப்பது?

சட்டப்படி நடப்பதால் மட்டுமே எல்லாமே நியாயமாகி விடாது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அநேகமான அநியாயங்கள் சட்டத்தின் படிதான் நடக்கின்றன. அத்துடன்  பெற்றோர்கள் கலந்து பேசி நிச்சயித்தால் மட்டும் அது சரியாகி விடவும் மாட்டாது. 

வரட்டுத்தனமான எண்ணங்களும், 16 ஆம் நூற்றாண்டுக் கொள்கைகளும் கொண்டுள்ள பெற்றோர்களால்  எடுக்கப்படும் முடிவுகள் சரியாகவும் இருக்க மாட்டாது.

புத்தகத்தால் வருவது மட்டுமல்ல படிப்பு.. அப்படி வரும் படிப்பை எம்மவர்கள் வாழ்க்கையின் வருமானத்திற்காக விற்பதுதான் 99 வீதமானது... இதுதான் உண்மையில் பலரது எண்ணம்.. இந்த எண்ணம் பிழை என்றால்.. நீராவியில் புட்டும் இடியப்பமும் அவிக்கக் கண்டுபிடித்த விடயங்களூக்குப் பிறகு எத்தனையோ விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்... எம்மவர்கள் ஏட்டுச் சுரைக்காயால் பணத்தை மட்டும்தான் கண்டார்கள்.. கண்டுபிடிக்க முனைகிறார்கள்.

ஆக, எம்மவர்களை தற்போது வழிநடத்துவது அனுபவக் கல்வியும்.. மற்றவர்மீதுள்ள சார்பு கல்வியும்தாம். (Relative velocity போல).

16ஆம் ஆண்டுள்ளவர்கள் எமது மொழிக்கும் இனத்திற்கும் கலை சம்பந்தமாகவும்... இலக்கியம் சம்பந்தமாகவும்... வானிலை போன்ற விஞ்ஞானம் சம்பந்தமாகவும்... ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் சம்பந்தமாகவும்... கட்டிடக் கலைகள் போன்றனவாகவும்... ஏன்.. ஆகக் குறைந்தது  சமையல் கலையாகவாவது.. எதுவுமே இன்று எம்மினத்தில் உருவாகியுள்ளனவா என்ற கேள்வி எழும்போது... 16ஆம் நூற்றாண்டு கொள்கைகளும் முடிபுகளூம் போற்றுதற்குரியனவாகவே உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் வடிவேலுவின் மகன் திருமணம் பற்றித்தான் செய்தி வந்திருக்கிறது ஒன்று திருமணத்தை வாழ்த்தவேண்டும் இல்லையென்றால் அந்தத் திருமணத்தின்போது ஏற்பட்ட சட்டச்சிக்கல்கள் பிரச்சனைகளைப்பற்றி மேலதிகமாக ஏதேனும் தெரிந்திருப்பின் விவாதிக்கலாம். இங்கு இந்தச் செய்தியில் மணமகள் படிக்க ஆசைப்பட்டார் மறுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்ற தகவல்கூட இல்லை... யாழ்க்கருத்துக்களம் தனி மனிதர்களின் திருமணங்களுக்குள் எப்போதிலிருந்து மூக்கை நுழைக்கத் தொடங்கியது. ஒருவேளை அந்தப்பெண் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறார்கள் என்று ஏதாவது புகார் கொடுத்திருந்தால் ஏன் ஏதற்காக என்ற வியாக்கியானங்களைத் தொடர்ந்திருக்கலாம்.. செய்தி  என்னவோ நகைச்சுவை நடிகர் மகனின் திருமணம் யாழ்க்கருத்துக்களப்பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல்  பெண்கல்வியை மறுத்து மைனர் பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் என்ற தலைப்பிற்குரிய கருத்தாடல் மேலே உள்ள செய்திக்கும் இங்கு நடக்கும் உரையாடலுக்கும் என்ன சம்பந்தம்? :unsure:

 சேறடிப்பதற்காக தொடுக்கப்பட்ட பொய் விசாரணை என்ற செய்தியும்  தெளிவாக இருக்கிறது

Edited by வல்வை சகாறா

உங்கள் கருத்தை விட......கொஞ்சம் காரமாக ஒரு நானும் கருத்தை தயார் படுத்திவிட்டு இணைக்க விரும்பாமல் விட்டுவிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எது எதுக்குக் குதிப்பது இல்லை என்றாகிவிட்டது இப்பொழுது யாழில் உள்ள உறவுகளுக்கு. ஏன் அந்தப் பெண்ணுக்கே கூடப் படிப்பதில் ஆர்வம் இல்லாதிருக்கலாம். அத்துடன் கூரை வீட்டில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பத்துக்கு ஒரு வசதியான சம்பந்தம் வரும்போது தட்டிக்களிக்கவா மனம் வரும். நீங்கள் இதில் எழுதுவது அவர்கள் யாரின் காதுகளுக்குப் போகப் போகிறதா ??? அதுக்கும் இல்லை. எதுவுமே நடக்காததுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்.

இந்தச் செய்தியில் வடிவேலுவின் மகன் திருமணம் பற்றித்தான் செய்தி வந்திருக்கிறது ஒன்று திருமணத்தை வாழ்த்தவேண்டும் இல்லையென்றால் அந்தத் திருமணத்தின்போது ஏற்பட்ட சட்டச்சிக்கல்கள் பிரச்சனைகளைப்பற்றி மேலதிகமாக ஏதேனும் தெரிந்திருப்பின் விவாதிக்கலாம். இங்கு இந்தச் செய்தியில் மணமகள் படிக்க ஆசைப்பட்டார் மறுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்ற தகவல்கூட இல்லை... யாழ்க்கருத்துக்களம் தனி மனிதர்களின் திருமணங்களுக்குள் எப்போதிலிருந்து மூக்கை நுழைக்கத் தொடங்கியது. ஒருவேளை அந்தப்பெண் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறார்கள் என்று ஏதாவது புகார் கொடுத்திருந்தால் ஏன் ஏதற்காக என்ற வியாக்கியானங்களைத் தொடர்ந்திருக்கலாம்.. செய்தி  என்னவோ நகைச்சுவை நடிகர் மகனின் திருமணம் யாழ்க்கருத்துக்களப்பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல்  பெண்கல்வியை மறுத்து மைனர் பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் என்ற தலைப்பிற்குரிய கருத்தாடல் மேலே உள்ள செய்திக்கும் இங்கு நடக்கும் உரையாடலுக்கும் என்ன சம்பந்தம்? :unsure:

 சேறடிப்பதற்காக தொடுக்கப்பட்ட பொய் விசாரணை என்ற செய்தியும்  தெளிவாக இருக்கிறது

நேற்று மாலை.... சிலரின் கருத்துக்களைப் பார்த்து மிகவும் கவலையாக  இருந்தது.

சுமோ, வல்வையின் கருத்துக்களை வாசித்த பின்.. அந்தக் கவலை பறந்தோடி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எங்கோயோ போய் சுத்தி வந்து இருக்கிறது நியாயப் பிளப்பு. இருப்பினும் நான் சொன்னது சரியா, தவறா  என விரைவில் தெரிய வரும்.. 
 
சிலவேளை வடிவேலு குடும்ப கலியாணம் என தெரியாமல் பொலிசார் வந்து இருக்கலாம். தமிழக மீடியாக்கள் இந்த விடயத்தினை போட்டுக் கிண்டுகின்றன.

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள் யாழ் உறவுகள் சார்பாக....

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதுவிதியில் சில தளர்வுகளைச்செய்தார்கள்

புது உறவுகள் உடனேயே  எழுத வசதியாக....

அதை சிலர்  தமக்கு வேண்டப்படாதோருக்கு எதிராக எழுதப்பாவிக்கின்றார்கள்

ஒருமுறை  வந்து

கொட்டவேண்டியதைக்கொட்டிவிட்டு.......?? :(  :(  :(

உங்க கன பழைய பெரிசுகள், இன்னொரு புது பெயரில வந்து விளையாடுக் காட்டுகினம்.....
 
சரி, சந்தோசமா இருந்துட்டுப் போகட்டும்  :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் வடிவேலுவின் மகன் திருமணம் பற்றித்தான் செய்தி வந்திருக்கிறது ஒன்று திருமணத்தை வாழ்த்தவேண்டும் இல்லையென்றால் அந்தத் திருமணத்தின்போது ஏற்பட்ட சட்டச்சிக்கல்கள் பிரச்சனைகளைப்பற்றி மேலதிகமாக ஏதேனும் தெரிந்திருப்பின் விவாதிக்கலாம். இங்கு இந்தச் செய்தியில் மணமகள் படிக்க ஆசைப்பட்டார் மறுத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்ற தகவல்கூட இல்லை... யாழ்க்கருத்துக்களம் தனி மனிதர்களின் திருமணங்களுக்குள் எப்போதிலிருந்து மூக்கை நுழைக்கத் தொடங்கியது. ஒருவேளை அந்தப்பெண் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறார்கள் என்று ஏதாவது புகார் கொடுத்திருந்தால் ஏன் ஏதற்காக என்ற வியாக்கியானங்களைத் தொடர்ந்திருக்கலாம்.. செய்தி  என்னவோ நகைச்சுவை நடிகர் மகனின் திருமணம் யாழ்க்கருத்துக்களப்பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல்  பெண்கல்வியை மறுத்து மைனர் பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் என்ற தலைப்பிற்குரிய கருத்தாடல் மேலே உள்ள செய்திக்கும் இங்கு நடக்கும் உரையாடலுக்கும் என்ன சம்பந்தம்? :unsure:

 சேறடிப்பதற்காக தொடுக்கப்பட்ட பொய் விசாரணை என்ற செய்தியும்  தெளிவாக இருக்கிறது

ஏன் வல்வை அக்கா.. ஒரு ஏழைப் பெண்ணை 18 வயதில் திருமண பந்தத்துக்குள் தள்ளுவதை தட்டிக் கேட்கக் கூடாது என்றா சொல்ல வாறீங்க.

அப்படின்னா... யாழ் களத்தில் பெற்றோரா உள்ள நீங்கள் உட்பட உங்களின் 18 வயது தாண்டிய பிள்ளைகளை கலியாணம் முடிக்கப் போறியா.. யுனிவேர்சிட்டி போகப் போறியா என்று கேட்டுவிட்டா.. யுனிவேர்சிட்டிகளுக்கு அனுப்பினீர்கள்..??! அதென்ன உங்கட பிள்ளை என்றால் ஒரு நியாயம்.. அடுத்தவன் பிள்ளை என்றால் பல்கலைக்கழகம் போற வயசில பள்ளியறை போகனுன்னு நினைக்கிறது. உங்கட பிள்ளை 21ம் நூற்றாண்டில வாழ அது 16ம் நூற்றாண்டில் வாழனுமா..??! ஏன் அந்தப் பிள்ளைக்கும் 21ம் நூற்றாண்டு சலுகைகள் வசதிகள் கிடைக்க குரல் கொடுக்கக் கூடாது.

பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள்.. ஒரு பெண்ணின் உயர்கல்வி அவளின் அறியாமையோடு பறிக்கப்படுவதை... நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை. பெண்ணுரிமை எல்லாம்.. எழுத்திலும்.. பேச்சிலும்.. ஊருக்கும் போல. வீட்டுக்கு என்றால்.. வேறையோ என்னமோ..???!

ஒரு சினிமா பிரபல்யம் வீட்டில் இப்படி நடந்தால்.. கிட்டத்தட்ட 60% கையெழுத்துத்தறிவு வீதம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள 18 வயசுப் பெண்களின் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தீர்களா..?????!

இங்கு சிலர் இதற்கு வக்காளத்து வாங்கக்கூடும். ஏனெனில் இன்று வெளிநாட்டு விசாவைக் காட்டி 18 வயசுப் பெட்டையள ஊரில போய் கலியாணம் கட்டிக் கொண்டு வந்து குடும்பம் நடத்திறவையை புகலிடத்தில் அதிகம் காண முடிகிறது. அதுங்க இங்கு படும் அல்லல்கள்.. யார் அறிவார்..???! அப்படியானவை இதனை நியாயப்படுத்த முன்னிற்பினம்..!!! :icon_idea::):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, விசுகு, நிழலி எல்லோரும் இந்தத் தலைப்பில்....
எதிர் பார்க்காத, கருத்துக்களை வைத்துள்ளார்கள்.
அதனை... உங்களிடமிருந்து, எதிர் பார்க்காத கருத்துக்கள்.
செய்த  தவறை, ஒத்துக் கொள்பவன் தான்.... உணமையான மனிதன்.
அதற்கு... வியாக்கியானம்  கற்பிப்பதால்.....  நீங்களே, உங்களை தாழ்த்திக் கொள்கிறீர்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.