Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு! – இன்று முறைப்படி அறிவிப்பார் சம்பந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மைத்திரிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு! – இன்று முறைப்படி அறிவிப்பார் சம்பந்தன். 
[Tuesday 2014-12-30 09:00]
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், கூட்டமைப்பின் இந்த முடிவு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் ஜானகி ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். 

இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ஆதரவு யாருக்கு?' என்ற கேள்விக்கான பதிலை தென்னிலங்கை சமூகமும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்திருந்தன. அதேவேளை, தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவும், அரச தரப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்த்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக புதுடில்லியில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த கையோடு தனது கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்தினார். இதன்போது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த வாரங்களில் வடக்கு, கிழக்கில் நடத்திய மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட ஒருமித்த கருத்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.
 
மேற்படிக் கூட்டத்தின் இறுதியில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் ஏகமனதான முடிவெடுத்தனர். இந்த முடிவை கொழும்பில் இன்று நடைபெறும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். இதன்போது மைத்திரிபாலவை கூட்டமைப்பினர் ஆதரிப்பதற்கான காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தவுள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=123608&category=TamilNews&language=tamil

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு – சம்பந்தன் அறிவித்தார் DEC 30, 2014by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

TNApress-300x200.jpgசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சற்று முன்னர் செய்தியாளர்களிடம், இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

TNApress.jpg

http://www.puthinappalakai.net/2014/12/30/news/2240

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா சம்மந்தரின் ராசி போன முறை சரத் போன்செகாக்கு ஆதரவளித்து அவர் தோல்வியுற மகிந்தா வென்றார் இந்த முறையும்

மைத்திரிக்கு ஆதரவளித்து இருக்கிறார் அப்போ மகிந்தாக்கு தான் வெற்றி போல..... அந்தாளின் ராசி அப்பிடி.....

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு.. வேற தெரிவு இல்லை. என்ன 5 ம் திகதி சொல்லுவம் என்றிட்டு.. 30 ம் திகதி சொல்லிட்டினம். அவ்வளவும் தான். இதுதான் அவர்களின் ராஜதந்திரம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/60007/tna-decides-to-support-maithri

இங்கு காணொளி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருக்குது. ஆனால் இப்படி வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டு அவர்கள் மகிந்த பக்கம் சாயக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நடந்தது. தமிழருக்கான ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்களை சுயமாக வாக்களிக்கச் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் மக்களுக்கு தெரியும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan announces decision to back Sirisena in SL presidential elections

[TamilNet, Tuesday, 30 December 2014, 09:25 GMT]

Despite strong opposition from various sections of Eezham Tamils against giving explicit support to any of the two main contestants in the upcoming Sri Lankan presidential elections, Tamil National Alliance (TNA) Parliamentary Group Leader R. Sampanthan has decided to support the Opposition Common Candidate Maithripala Sirisena. Mr Sampanthan announced the stance of the TNA Tuesday morning at a media briefing held at Hotel Jananaki in Colombo. Mr Sampanthan and M.A. Sumanthiran have been blamed for striking a clandestine deal with Chandrika Kumaratunga on backing Maithiripala Sirisena.

A few personalities claiming to represent the so-called majority view have imposed their decision as TNA decision on the Tamil people. “The political parties comprising the TNA have failed to learn the views of the Tamil people. Instead, they have only sought to manipulate the views before announcing their pre-determined decision,” a TNA source told TamilNet.

TNA Parliamentarians Mavai Senathirajah, M.A.Sumanthiran, Selvam Adaikalanathan and Sivasakthi Ananthan were seen with Mr.R.Sampanthan in the head table.

“Tamil people should realise that this group is trying to transform the nation of Eezham Tamils into a minority in the genocidal Sri Lanka,” political observers in Jaffna said adding that some members of this group have already been promised with ministerial portfolios by Chandrika Kumaratunga.

Both the opposition candidates Sirisena and the incumbent SL president Mahinda Rajapaksa are opposed to international investigations and a federal solution to the national question.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37563

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு ராஜயோகம் ராஜவரோதயம் அவர்களின் சாணக்கியம்

மகிந்தவைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருக்குது. ஆனால் இப்படி வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டு அவர்கள் மகிந்த பக்கம் சாயக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நடந்தது. தமிழருக்கான ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்களை சுயமாக வாக்களிக்கச் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் மக்களுக்கு தெரியும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது.

அதுதானாக்கும் மகிந்தவிற்கு வாக்களித்து முன்று பியசேனவை வழங்கியுள்ளார்கள் .ரணிலுக்கு ஒரு பொடி மெனிக்கா .

அதுதானாக்கும் மகிந்தவிற்கு வாக்களித்து முன்று பியசேனவை வழங்கியுள்ளார்கள் .ரணிலுக்கு ஒரு பொடி மெனிக்கா .

ஒறிஜினல் பியசேனவை வழங்கியவர் சம்பந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

எது  எப்படியோ

நீங்களே தீர்மானியுங்கள்  என்று மக்களை நடத்தெருவில்விடாது

பொறுப்புடன்

அதேநேரம் தங்களது நிலைப்பாட்டையும் அறிவித்திருப்பது வரவேற்கப்படவேண்டியதே...

  • கருத்துக்கள உறவுகள்

எது  எப்படியோ

நீங்களே தீர்மானியுங்கள்  என்று மக்களை நடத்தெருவில்விடாது

பொறுப்புடன்

அதேநேரம் தங்களது நிலைப்பாட்டையும் அறிவித்திருப்பது வரவேற்கப்படவேண்டியதே...

நீங்க சம்பந்தன் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசியதை வடிவாக் கேட்கல்லப்போல. எதுக்கு புலிகளை இதில இழுத்து சாடி.. மைத்திரி.. சந்திரிக்காவை.. ரணிலை.. குசிப்படுத்தனும்..???! புலிகள் ஒரு காட்டுமிராண்டி ஆட்கள் என்று மீண்டும் நினைவுபடுத்தினார். என்ன மண்ணாங்கட்டிக்கு...????! கூட உள்ளவை எல்லாம் சுத்தமான மனிதர்களோ. மகிந்த மைத்திரி சந்திரிக்கா ரணில் சரத்பொன்சேகா காட்டுமிராண்டிகள் இல்லையோ...?????! :rolleyes::(

வந்தமா.. உட்காந்தமா.. அறிக்கையை வாசிச்சமா என்று போயிட வேண்டியானே. இவரின் பிள்ளையா குட்டியா புலில இருந்திச்சு. இல்லை இல்ல..!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

6.20... நிமிடத்தில்... :(

அவர் பேசியதைக்கேட்கவில்லை

கேட்கவேண்டிய அவசியமும் இல்லை

புலிகள் களநிலமை

மற்றும் தமது இலட்சியம் சார்ந்து முடிவுகளை எடுத்தனர்

இவர்கள்

புலிகளுக்கு மாறான நிலைப்பாட்டை எடுக்கணும் என்றே இந்தமுடிவும் எடுக்கப்படடுள்ளது..

வரலாறே வழிகாட்டி

மைத்திரியை  ஆதரித்ததும் வரலாற்று தவறாகலாம்... 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை விமர்சிக்கவேண்டிய தேவை என்ன?சம்பந்தர் இப்போது வகிக்கும் பதவியே புலிகள் போட்ட பிச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருக்குது. ஆனால் இப்படி வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டு அவர்கள் மகிந்த பக்கம் சாயக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நடந்தது. தமிழருக்கான ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்களை சுயமாக வாக்களிக்கச் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் மக்களுக்கு தெரியும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது.

யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களுக்கு தெரியும்.
பணத்தை எங்கே கைமாறுவது என்று மைத்திரிக்கு தெரியவேண்டாமா ??? 

புலிகளை விமர்சிக்கவேண்டிய தேவை என்ன?சம்பந்தர் இப்போது வகிக்கும் பதவியே புலிகள் போட்ட பிச்சை.

அமிரை போட்டதால் தான் இவர் தலைவராக வந்தார் அப்படி போகுதோ . :o

  • கருத்துக்கள உறவுகள்

அமிரை போட்டதால் தான் இவர் தலைவராக வந்தார் அப்படி போகுதோ . :o

இல்லை 
உமா விடுதலை போராட்டத்தை ... இரவில் ஊர்மிலவுடன் செய்ததனால்தான் 
பல இயக்கங்கள் தோன்றி ....
பின்பு கள்ளன்  காவலி எல்லாத்தையும் தமிழர் என்பதால் ஒரு அணியில் சேர்க்க வேண்டிய ஒரு கால கட்டாயம் புலிகளுக்கு வந்தது அப்படி என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

அமிரை போட்டதால் தான் இவர் தலைவராக வந்தார் அப்படி போகுதோ . :o

சிலரைப்போடாமல் விட்டதாலும் இருக்கலாம்...

தொப்பியைத்தூக்கி  உங்களை என்று எடுக்கவேண்டாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.