Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. புலிகளிடம் மாட்டிய இன்னொருத்தர் சரத் பொன்சேகா.. அவரும் கைடெுத்து கும்பிட போராளிகள தலைமையிடம் கேட்டார்கள்.. பொன்சேகா குடியிருக்க பங்களா ஏதும் வச்சிருக்கிறீங்களா என்று தலைமை கேட்டதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.. ஆனாலும் தலைமையின் ஆணையை மீறி அவரை விடுவித்தார்கள்.. பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.

 

ஆமாம்..... இதனை, நானும் கேள்விப் பட்டேன்.

பொன்சேகாவை... விடுவித்த போராளிகள் மீது... மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது.

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் செயற்குழு கூடி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று சம்பந்தர் கூறியிருக்கலாம் ஏனெனில் இம் முடிவு கட்சியின் செயற்குழுவின் முடிவு என்றே நினைக்கிறேன்,எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை களைய கட்சி தலமை மற்றும் செய்ற்குழுக்கான ஆட்கள் குறித்த காலத்திற்கு கட்சி உறுப்பினர்களால் தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சிங்களப் பேரினவாதிகளுக்குள் ஒளித்திருந்து கொண்டு சுயலாப அரசியல் நடத்துவது இது முதல்முறை அல்ல.

 

இவர் சந்திரிக்கா அம்மையார் காலம்.. ஜே ஆர் காலம் என்று முன்னைய காலங்களிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு தமிழ் மக்களின் அழிவுகளை கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு கையாலாக தலைவர்.

 

இவர் எனியும் மக்களை ஏய்க்க முடியாது.

 

இவர் எனி புலம்பெயர் நாடுகளுக்கு வரும் போது மக்களிடம் பகிரங்க ஜனநாயக விவாதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

 

இவரும் சுமந்திரனும்.. நினைப்பதை திணிக்க முடியாது.

 

உண்டியல் குலுக்க புலம்பெயர் நாடுகளுக்கு வரத்தானே வேணும். வாங்க.. உங்களுக்கு சிங்களப் பேரினவாத அரசியல் என்றால் என்ன என்று கற்பித்து அனுப்பலாம்.

 

எம்மக்களை கொன்று குவித்த.. பெரும் இடம்பெயர்வுகளுக்கு ஆளாக்கிய.. மகிந்த.. சரத்.. சந்திரிக்க்கா.. மைத்திரி வேறு வேறல்ல.

 

ஆட்சிமாற்றம் என்பது.. தமிழர்கள் வாக்குப்போடாவிட்டாலும் நடந்தே தீரும். சிங்கள மக்கள் அதனை தீர்மானித்துவிட்டார்கள்.

 

சம்பந்தன் அதில் பூச்சாண்டி அரசியல் நடத்தி தமிழ் மக்களை ஏய்க்க முனைகிறார்.

 

மைத்திரி எந்த அரசியல் வாக்குறுதிகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால் சம்பந்தன் பூனைக்குட்டி வரும் என்று பிரச்சாரம் செய்கிறார். எப்படி..???????????!

 

சம்பந்தனுக்கு ரகசியமா மைத்திரி சொன்னாரா..???!

 

அப்படி என்றால்.. அந்த ரகசியத்தை முதலில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு பகிரங்கப்படுத்தட்டும்..?????!

 

மகிந்தவை சாட்டி இவர் ரகசியத்தை ஒளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஏனெனில்... இவர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு எதிராக ரகசிய கருத்துச் சொல்லி தமிழ் மக்களின் அழிவுகளை விடுப்புப் பார்த்த ஒருவர்.

 

கிழக்கில்... ஐயா ஜோசப் பரராஜசிங்கம் மக்களுக்கு செய்ததில்.. ஒரு 1% தானும் சம்பந்தன் இதய சுத்தியோடு தமிழ் மக்களுக்கு செய்தது கிடையாது. அப்படியா பட்ட சம்பந்தன்.. ரகசியம் பேண அனுமதிக்க முடியாது.அவர் வெளிப்படையா இருந்தாலே தமிழர்களுக்கு ஆபத்து.. இதில் ரகசியம் வேற...???!

 

சம்பந்தனுக்கு.. இதுதான் கடைசி காலம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் யார்.. இதைச் சொல்ல..??!

 

விடுதலைப்புலிகள் சொல்லலாம். காரணம் அவர்கள் தமிழ் மக்கள் வாழும் பிராந்தியத்தை ஆண்டவர்கள். தமக்கென நிர்வாக முறைமையை.. தனிநாட்டுக்குரிய அம்சங்களை கொண்டிருந்தவர்கள். அந்த நிலப்பகுதியை நோக்கி ஓர் தேர்தல் திணிக்கப்படும் போது மக்களை அறிவுறுத்தும் தேவை அவர்களுக்கு அங்கு கட்டாயம்.

 

இன்று நிலைமை என்ன..??!

 

சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறாரா..??! அவரது கட்சியில் யாரேனும் நிற்கிறாரா..??! இல்ல.. இவர் சட்ட ரீதியாக.. கூட்டணி வைத்து ஆதரிக்கிற கட்சியில் யாராவது நிற்கினமா..???!

 

இவரா.. தனிப்பட்ட சிலரோடு கலந்தாலோசிச்சு முடிவெடுப்பாராம்.. அதனையே தமிழ் மக்கள் செயற்படுத்தனுமாம்..??!

 

ஏன் தமிழ் மக்களுக்கு சொந்தமா சிந்திக்கவாரோதோ..??! 40,000 மாவீரர்களை பிரசவித்த மக்களுக்கு சொந்தமா எவனுக்கு வாக்கு போடனும் என்று தெரியாதோ..???!

 

சம்பந்தன் தமிழ் மக்களின் வாக்குரிமை ஜனநாயகத்தில் தலையிடாமல்.. ஒதுங்கி ஓரமா இருந்து விடுப்புப் பார்ப்பது தான்.. அவருக்கு நல்ல ஜனநாயகம்.

 

மக்களை அவர்களின் சிந்தனையின் பால் செயற்பட விடுங்கள். உங்களின் சுயலாப அரசியல் எண்ணங்களை பூர்த்தி செய்ய அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.

 

விடுதலைப்புலிகள் வேறு. சிங்கள அரசியல் ஜாப்பில் நம்பிக்கை வைத்து அதற்காக உழைக்கும் சம்பந்தன் போன்றவர்களை தமிழ் மக்களை யாருக்கு வாக்குப் போடுன்னு கேட்பது வேறு.

 

ஒரு வேட்பாளர் கேட்கலாம். இவர்கள் யார் 3ம் தரப்பு.. மக்களை கேட்க.. சொல்ல..???! :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக நீரோட்டத்தினுள் வந்துவிட்டு தேர்தலை புறக்கணிக்கப்போகின்றேன் என்பது கண்ணாடி வீட்டினுள் இருந்து கல்லெறிவது போன்றது, சிறு பிள்ளைத்தனமானது.

 

தான் தேர்தலில் நிற்கும்போது (மாகாணசபை) தனக்கு வாக்குபோடும்படி கேட்பதும், பின்னர் தான் நிற்காக தேர்தலில் (ஜனாதிபதி தேர்தல்) பங்குபற்றகூடாது என்று கூறுவதும் சுத்த மொள்ளைமாரித்தனமான செயல்.

 

தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என்று திடமாய் கூறும் ஒரு பொது தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வடக்கு, கிழக்கு மக்களின் தமிழீழத்திற்கான ஆதரவை குறிப்பிட்ட தேர்த்தலில் காண்பித்து இருக்கலாம்.

 

அதைவிடுத்து, கட்சி தலமையின் முடிவுக்கு எதிராக மல்லுக்கட்டுவதும், அறிக்கைகள் விடுவதும் ஆரோக்கியமான செயல் அல்ல. இப்படி செய்வதைவிட கட்சியிலிருந்து கெளரவமாக விலகி தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஆடுகின்ற கூத்தை எல்லாம் ஆடலாம்.

 

ஒரு கப்பலிற்கு ஒரு கப்டன் தான் இருக்கவேண்டும். 

 

தமது ஒரு உறுப்பினர் ஒருவர் தமது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிரங்கமாக இவ்வாறு ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தால் தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் என்ன செய்திருப்பார்?

 

சம்மந்தர் மீதுள்ள வெறுப்பு காரணமாக ஆனந்தி சசிதரனின் தவறான செய்கைகளை நியாயப்படுத்தக்கூடாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக இறுக்கமான தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நிலயில் பிராந்திய வல்லரசுகளின் இராஜதந்திர வலுவை உருவாக்கும் மிக பலமான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகலாம் இதனால் எதிர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்(இராஜாவை உருவாக்கும் சக்தி வல்லரசுகளுக்கு கிட்டும்).இதனால் பொருளாதாரம் மேம்படும் மேலும் பலம் அடையும் வல்லரசுகள்.முட்டாள்தனமாக ஆயுத போராட்டத்தை ஊக்குவித்து பின்னர் வளர்த்த கடா மார்பில் பாய்கின்ற நிலை தோன்றாது. இதனால் தாயக தமிழர்களுக்கு என்ன நன்மை? நான் நினைக்கிறேன் வெகு விரைவில் த தே கூ இற்கு புது தலமைய இந்த வல்லரசு உருவாக்கும்,அனேகமாக அது சுமத்திரன். இது எனது ஊகம் மட்டுமே உண்மையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

யார் சம்பந்தன் இடத்தில் வந்தாலும் அவர்களால் தமிழர்களுக்கு புதிதாக ஒன்றையும் கொடுத்து விட முடியாது என்பதே இன்றைய யதார்த்தம், சுமத்திரன் ஒரு சிறந்த இராஜதந்திரி சுமத்திரன் தலமைப்பதவிக்கு வந்தால் சில மாற்றங்கள் ஏற்படலாம் இதுவும் எனது ஊகம் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அறிவாளி..தமிழரின் பிரச்சனையை ஆயுதப் போராட்டம் மூலம் உலகறிய செய்தவன் முட்டாள். தந்தை செல்வா இவர்களை விட அறிவாளி..நேர்மையானவர்.அவரால் கூட சிங்கள தலைமைகளை வழிக்கு கொண்டுவர முடியல்ல. சமந்தன்..சுமந்திரன் கடைஞ்செடுத்த சந்தர்ப்பவாத சுயலாபிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் சம்பந்தன் இடத்தில் வந்தாலும் அவர்களால் தமிழர்களுக்கு புதிதாக ஒன்றையும் கொடுத்து விட முடியாது என்பதே இன்றைய யதார்த்தம், சுமத்திரன் ஒரு சிறந்த இராஜதந்திரி சுமத்திரன் தலமைப்பதவிக்கு வந்தால் சில மாற்றங்கள் ஏற்படலாம் இதுவும் எனது ஊகம் மட்டுமே

சிறந்த இராஜதந்திரி என்பதற்கு சுமந்திரனது சாதனைப் பட்டியலைப் போடலாமே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைய இணக்க அரசியல் செய்யக் கூட்டிப் போவதைச் சொல்கின்றீர்களா? அதற்கு டக்ளஸ் இருக்கின்றாரே. டக்ளஸ் அபிவிருத்தியைச் செய்து தாயகப் பகுதிகளை முன்னேற்றி தன்னையும் முன்னேற்றுகின்றார். அவருக்கு மேலால் என்ன செய்யப் போகின்றார் சுமந்திரன்?

தமிழரின் தாயகப் பகுதிகளில் நிலவும் இராணுவ ஒடுக்குமுறையைக் குறைக்க முயல்வார்களா? சிவில் அமைப்புக்கள் பயமின்றி சுதந்திரமாக அரசியல் செய்யவிடுவார்களா? அப்படி ஒரு நிலை வந்தால் அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க மீண்டும் இளைஞர்கள் தயார் ஆவார்கள் என்பதால் தங்களுக்கே ஆப்பாகப் போய்விடும் என்று கூட்டமைப்பில் இருக்கும் முதியவர்களும் கொழும்பை மையப்படுத்தி இருக்கும் சுமந்திரனும் கடைசிமட்டும் அனுமதிக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு கலந்துரையாடலில் சுமந்திரன் சொல்கிறார்.. அதாவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதான் முதல் வேலைத்திட்டமாம்.. அதற்காகவே எதிரணியுடன் கூட்டு சேர்ந்ததாகச் சொல்கிறார்..

அப்போது ஒரு கேள்வி கேட்டார்கள்.. இதே மகிந்தவும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை ஒழிப்பேன் என்று சொல்லியபடிதானே 2005 இல் ஆட்சிக்கு வந்தார் என்பது கேள்வி.. அதற்கு சுமந்திரனின் பதிலானது.. சந்திரிகா ஒருவர்தான் தனது ஆட்சிக்காலத்தில் இதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தவர்.. ஆனால் முன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பலத்த எதிர்ப்பின் பின்னணியில் அந்தத் திருத்தம் நிறைவேறவில்லை என்றார்.. (அதனால் சந்திரிகாவை நம்பலாம் என்பது மறைபொருள்)

தோற்கும் என்று தெரிந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இக்கட்டில் மாட்டவென்றே திருத்தத்தை முன்மொழிந்த சந்திரிகா ஒருபுறம் இருக்கட்டும்.. அன்று நிறைவேற்று அதிகாரத் திருத்தத்தை எதிர்த்த புண்ணியான் யார்?? ரணில் விக்ரமசிங்க..

அந்த இரண்டுபேரும் இப்ப ஒன்று சேர்ந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பார்களாம்.. அவர்களை கூட்டமைப்பு நம்புமாம்..

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.. தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட தமிழரின் அரசியல் போராட்டம் இன்று எழுபதுகளில் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.. இது தமிழ் மக்களின் தேவை அல்ல.. மாறாக, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் தேவை..

இது நிறைவேறினால் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியே.. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை விற்று வாங்கிய மகிழ்ச்சியாக அது இருக்கக்கூடாது என்பதே இங்குள்ள விசனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி அறிக்கை, மயங்கி விழுவது என்று தமிழக கோமாளி அரசியல்வாதிகள் போல் செயல்படுகிறார் அனந்தி.

கடைசியா ஒரு கடும் எச்சரிக்கை கொடுத்துப் பார்க்கோணும். இல்லை எண்டால் தமிழரசு கட்சி, கூட்டமைப்பில் இருந்து துரத்தி அடிக்கவேணு.

போய் கஜன் & கஜன் காமெடி கம்பனியில் சேரட்டும். சிவாஜியையும் கூட்டிப் போனால் இன்னும் கேமெடி எபெக்ட் எகிறும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து.பச்சை முடிந்து விட்டது இசை!

அதிரடி அறிக்கை, மயங்கி விழுவது என்று தமிழக கோமாளி அரசியல்வாதிகள் போல் செயல்படுகிறார் அனந்தி.

கடைசியா ஒரு கடும் எச்சரிக்கை கொடுத்துப் பார்க்கோணும். இல்லை எண்டால் தமிழரசு கட்சி, கூட்டமைப்பில் இருந்து துரத்தி அடிக்கவேணு.

போய் கஜன் & கஜன் காமெடி கம்பனியில் சேரட்டும். சிவாஜியையும் கூட்டிப் போனால் இன்னும் கேமெடி எபெக்ட் எகிறும்.

 

அப்படி துரத்தி அடிக்க நீங்க யாருங்க.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சிவாஜிலிங்கம் என்ற காமடி துரத்தப்பட்டு எல்லா இடமும் அலைஞ்சு திரிஞ்சு கடைசியில திரும்பக் கூட்டமைப்பிடம் வந்து கெஞ்சிக் கூத்தாடிச் சேர்ந்துகொண்டவர்தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சிவாஜிலிங்கம் என்ற காமடி துரத்தப்பட்டு எல்லா இடமும் அலைஞ்சு திரிஞ்சு கடைசியில திரும்பக் கூட்டமைப்பிடம் வந்து கெஞ்சிக் கூத்தாடிச் சேர்ந்துகொண்டவர்தான். :D

சிவாஜி டெலோ சார்பாகவே தேர்தலில் நின்றவர்?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அறிவாளி.

பேசக்கேட்டிருக்கிறேன். சந்தேகமே இல்லை.

 

தமிழரின் பிரச்சனையை ஆயுதப் போராட்டம் மூலம் உலகறிய செய்தவன் முட்டாள்.

அதிலும் சந்தேகம் இன்று இல்லை. வெறும் பேனாவாலும் கணணியாலும் செய்ய வேண்டியதை:

  1. பல நூறாயிரம் மக்களை பலி கொண்டு,
  2. பல கோடி சொத்துக்களை அழித்து,
  3. பெருமளவில் இளையவர்களை அங்கவீனரகலாகவும், பைத்தியக்காரர், ஆகவும் அடிமைகளாகவும் ஆக்கி,
  4. மக்களை நூறு வருடங்களுக்கு பின் தள்ளி

செய்து முடித்தவர் முட்டாள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. உங்களுக்கு இருக்கிறதா?

 

தந்தை செல்வா இவர்களை விட அறிவாளி..

அறிவாளி என்பது சந்தேகமானது. அவரது தலைமையில் தான் பேரழிவு ஆரம்பமானது.

அவருடைய காலத்தில் இடம் பெற்ற இனக்கலவரங்கள் இடம் பெறாத நாடுகள் இன்றும் குறைவு.

ஆனால் இந்த இனக்கலவரங்களை சர்வதேச புவியியல் ஆதிக்க போட்டியில் சிக்கவைத்து பேரழிவாக மாற தலைமை தந்தவர் இவர்.

அதற்கு பிந்திய காலத்தில் லீ குவான் யு சிங்கபூருக்கு இதே விதமான சூழ்நிலையில் வழங்கிய தலைமை ஒரு அறிவாளியின் தலைமைக்கு உதாரணம்.

 

நேர்மையானவர்.

அது எதிரிகளும் ஏற்றுக்கொண்டது.

 

அவரால் கூட சிங்கள தலைமைகளை வழிக்கு கொண்டுவர முடியல்ல.

அவர் அறிவாளி அல்ல என்பதற்கும் சிறந்த தலைவர் அல்ல என்பதற்கும் இதுவே ஆதாரம்.

 

சமந்தன்..சுமந்திரன் கடைஞ்செடுத்த சந்தர்ப்பவாத சுயலாபிகள்.

உங்களை விட அவர்கள் சந்தர்ப்பவாத சுயலாபிகள் அல்ல.

அவர்கள் அங்கே இருந்து மக்களுக்காக செயல் படுகிறார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை இப்போ சிவாஜி டெலோவில் இல்லை. மாவைதான் பாவம் பார்த்து போன தேர்தலில் சீட் கொடுத்தவர்.

ரிங்கோ,

நான் சம்பந்தர் அல்லது மாவை அல்லது சுமந்திரன் அல்லது சீவி என்றால் நம்பவா போகிறீர்கள்?

உங்களைப் போல் நானும் ஒரு கணணிச் சொல் வீரன்- அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடமா பேனா..பேப்பரில் என்ன செய்திட்டு இருக்கீங்கன்னு சர்வதேச ஊடகங்களை பார்க்க விளங்குது.அது தமிழருக்கு பெரிய விடிவை தரும்.யூட் அண்ணே காமடி தாங்க முடியல.சுமந்திரன் அறிவாளி..??? கேஸ் போட்டு நிலத்தை மீட்டார்...சுமந்திரன் போட்ட பனங்கொட்டை கூட முளைக்கல்ல.இவர் அறிவாளி.

பாவம் சம்பந்தர். போராட்டம் என்டவுடன பதறி அடிச்சுக்கொண்டு லண்டனுக்கும் ஜெர்மனுக்கும் ஓடின குப்பன் சுப்பன் எல்லாம் அரசியல் பாடம் எடுக்க வேண்டின நிலமைக்கு வந்த்திட்டுது மனுசன்.  :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை இப்போ சிவாஜி டெலோவில் இல்லை. மாவைதான் பாவம் பார்த்து போன தேர்தலில் சீட் கொடுத்தவர்.

ரிங்கோ,

நான் சம்பந்தர் அல்லது மாவை அல்லது சுமந்திரன் அல்லது சீவி என்றால் நம்பவா போகிறீர்கள்?

உங்களைப் போல் நானும் ஒரு கணணிச் சொல் வீரன்- அவ்வளவே.

கீழ் உள்ள இணைப்பை பாருங்கள்

http://en.m.wikipedia.org/wiki/1st_Northern_Provincial_Council

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சம்பந்தர். போராட்டம் என்டவுடன பதறி அடிச்சுக்கொண்டு லண்டனுக்கும் ஜெர்மனுக்கும் ஓடின குப்பன் சுப்பன் எல்லாம் அரசியல் பாடம் எடுக்க வேண்டின நிலமைக்கு வந்த்திட்டுது மனுசன். :(

சம்பந்தர் கனடா குப்பன் சுப்பனை தேடித்தான் அடிக்கடி வாரார் அல்லது தனது சிண்ணை அனுப்புகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

அந்த விக்கி இணைப்பில் இருப்பதெல்லாம் தெரிஞ்ச விடயம்தானே? அதில் போய்ப் பார்க்க என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடமா பேனா..பேப்பரில் என்ன செய்திட்டு இருக்கீங்கன்னு சர்வதேச ஊடகங்களை பார்க்க விளங்குது.அது தமிழருக்கு பெரிய விடிவை தரும்.யூட் அண்ணே காமடி தாங்க முடியல.சுமந்திரன் அறிவாளி..??? கேஸ் போட்டு நிலத்தை மீட்டார்...சுமந்திரன் போட்ட பனங்கொட்டை கூட முளைக்கல்ல.இவர் அறிவாளி.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கனடா வாறது புலத்தில் இருக்கும் யதர்த்தவாதிகளை, மூளை வேலைசெய்யும் ஆக்களை சந்திக்க, ஆலோசிக்க.

குப்பனும், சுப்பனும் மட்டையை போட்டுட்டு, கொத்து குவாட்டரும் வெட்டிப்புட்டு, கொடி பிடிச்சிட்டு குப்புறப் படுக்கத்தான் லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 

பழைய 60 வருட வரலாறு சொல்வது போல்தான் புதியவை நிகழவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்ப உள்ள சூழ்நிலைகள் பல நம்பிக்கைகளைத் தந்திருக்கிறது. அதற்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 60 வருசம் இலங்கை போர்க்குற்ற விசாரணை பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கலாம்.
 
செம்மணி பற்றி...
 
செம்மணி என்பது பாகம் இரண்டு. பாகம் ஒன்று முல்லைத்தீவு முகாமில் சரணடைந்த நூற்றுக் கணக்கான சிங்களச் சிப்பாய்களைக் கொன்றது.
 
பிடிபட்ட ஆமிக்காரருக்கு சிகரட், சிங்களப்பத்திரிகை உட்பட எல்லா வசதிகளும் செய்து காெடுக்கப்பட்டது. எங்கடபிள்ளையளுக்கு வீட்டில இருந்து காெண்டு பாேற சாப்பாட்டையே குடுக்கிறாங்களில்லை. கிளிநாெச்சி அடிபாட்டில இறந்த ஆமிக்காறற்ரை  உடல்களை செஞ்சிலுவைச்சங்கம் மூலம் உறவினா்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்தபாேது அரசு அந்த உடல்களை தானே தகனம் செய்து பாேட்டு காணாமற்பாேனாோ், தப்பியாேடியாோ் என கணக்குச்சாென்னது. நல்லெண்ண அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆமிக்காறரை புலிகள் பலதடவை விடுதலை செய்தாா்கள். அவா்களை பத்திரிகையாளா்கள் உட்பட யாரும் சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. உண்மையை பாெதுமக்கள் அறியவிடாமல் தடுத்து திருப்பியும்அவா்களை பாோ் நிலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவா்கள் பாேராடாமல் சும்மா இருந்திருப்பாா்களா? பிடிபட்ட ஆமிக்காரரை சந்திக்க குடும்பத்தினா் வன்னிக்கு வந்தபாேதெல்லாம் அவா்களுக்கு சகல வசதிகளும் செய்து காெடுக்கப்பட்டது. சிறையிலிருக்கும் தங்கள் பிள்ளைகளைப்பாக்க பாேகும் பெற்றாோ் பசிபட்டினியாேட றாேட்டாேரங்களில தங்கியும் பிள்ளைகளைப் பாக்காமல் திருப்பியனுப்பப்படுகின்றனா். கிளிநாெச்சி அடிபாட்டின்பாேது காயப்பட்ட பாேராளிகளை வாகனத்திலேற்றி வைத்தியசாலைக்கு காெண்டுபாேகும்பாேது காயப்பட்ட ஒரு ஆமியையும் காெண்டு பாேனாா்கள். அப்பாே உதவிக்குப்பாேன ஒரு குறும்புக்கார பாெடியன் ஆமியைப்பாத்து ஏதாே சாெல்லிச் சிரிச்சிருக்கிறான். அந்த ஆமி எட்டி அவன்ர கையைக்கடிச்சுப்பாேட்டான். எங்களுடைய குழந்தைகள், பெண்கள் ஆமியைப்பாத்து கையெடுத்து கும்பிட்டு கதறினவை. விட்டிருக்கலாந்தானே. பாலாய் வாத்து தேனாய் ஊத்தினாலும் பாம்பு கடிச்சுத்தான் காெல்லும்.
அவங்கள் நன்மைக்கு பிரதிபலன் தீமைதான் செய்வாங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.