Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளையைக் கசக்கலாம் முயற்சிகள் செய்யலாம் :)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையபெருமக்களே கருத்துப் பிரம்மாக்களே உங்கள் எல்லோருடனும் இனிவருங்காலங்களில்

 

மூளையைக் கசக்கவும்  முயற்சிகளை பெருக்கவும் ஒரு விளையாட்டு

புதிய ஆண்டில் புதிய பிரவேசமாக யாழிற்குள் வாரமொருமுறை இதோ உங்கள் எல்லோருக்காகவும் இன்றும் சிறிது நேரத்தில்.........

 

 

எல்லாம் சொந்த முயற்சி பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுக.

 

கட்டங்களைத் தந்துவிட்டேன் காத்திருங்கள் சிறிது நேரத்தில் கேள்விகளோடு...அதுவரை சில்லு எறிந்து கட்டங்களுக்குள் கெந்தி விளையாடுங்கள் ஒற்றைக்காலில் கெந்தி விளையாட முதலாம் ஆளாக இலையான் கில்லர் ............கி கிகி :lol::D

10911337_10152701148746551_4813586151483

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டு பிடியுங்கள்

 

இடமிருந்து வலம்
1. தாமரை
5 மணமான பெண்
14 ஆயுதம் (திரும்பியுள்ளது)
17 குடியிரு
21 உத்தேசம் (திரும்பியுள்ளது)
25 அதிகாலை (திரும்பியுள்ளது)
29 சிங்கம்  (குழம்பியுள்ளது)
43 கூகுள் மெயில், கொட் மெயில் வரிசையில்…இதுவும் (திரும்பியுள்ளது)
47 படை
49 வைத்தியம்
55 நேர் குறியீட்டின் எதிரி
57 தைரியம் (முகம் திரும்பி நிற்கிறது)
60 தொழிலிடம் (திரும்பியுள்ளது)

 

 

 

 

மேலிருந்து கீழ்
1 உயிர்கள் உருவாகும் இடம்
2. மழைக்கால இருட்டே ஆனாலும்…..... கொப்பிழக்காது
4. குடாநாடு (திரும்பியுள்ளது)
5. நாள்
7 பயம்
8 தஞ்சம் (திரும்பியுள்ளது)
14 தகவல் (குழம்பியுள்ளது)
19 பொம்மலாட்டம்
24 பூட்டான் நாட்டின் தலை நகரம்
26 பனங்கள் (குழம்பியுள்ளது)
29 நினைவிழத்தல்
31 திருத்தக்கதேவர் எழுதிய காப்பியம் (முன்னரை இழந்து நிற்கிறது)
33 பேச்சற்ற நிலை (குழப்பத்துடன்)
44 எல்லாம்
56 தமிழர் வாத்தியம் (திரும்பியுள்ளது)

 

சிவப்பு வர்ணத்தில் தவறவிடப்பட்ட சொற்கள் நிரவப்பட்டுள்ளது சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தமிழினி

ஆரம்பம் என்பதால் எல்லாரும் மன்னித்து கொள்ளுங்கள் தமிழினி இப்போது முயற்சி செய்யுங்கள்

10911337_10152701148746551_4813586151483

 

Edited by வல்வை சகாறா

கட்டம் 2 இல் "ம" வையும் "மு" வையும் குழப்பி விட்டீர்களோ ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டம் 2ஐ தாண்டிப்போனால் பதில் கிடைக்கும் ஈசன் :icon_idea:

kurukku_zps45b1f59e.jpg

 

 

நாளைக்கு வேலை. நித்தா கொள்ள வேண்டும். இவ்வளவு தான் இண்டைக்கு செய்ய முடியும்.

 

செய்த அளவுக்கு தக்கமாதிரி பாத்துப் போட்டு பிறைஸ தாங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, போட்டி வல்வை.
முன்பு வெண்ணிலாவும், கிருபனும் இப்போட்டியை நடாத்தியதாக ஞாபகம்.
சிறிய... வேண்டுகோள். அந்தக் கட்டங்களுக்குள் எமது எழுத்தை பதியும் சூட்சுமத்தை காட்டிக் கொடுத்தால்.... பலர் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.
 

நானும் முயற்சி செய்கிறேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்

எனது கண்டுபிடிப்பாக.....

 

மேலிருந்து கீழ்
 

//33 பேச்சற்ற நிலை (குழப்பத்துடன்)//

மௌனம். :) 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கண்டுபிடிப்பாக.....

 

மேலிருந்து கீழ்

 

//33 பேச்சற்ற நிலை (குழப்பத்துடன்)//

மௌனம். :) 

 

நாலு எழுத்து சிறி

மவுனம்..?

  • கருத்துக்கள உறவுகள்

நாலு எழுத்து சிறி

மவுனம்..?

 

அட... கடவுளே....

மௌ- ன- ம்.

மூன்று எழுத்தா?

சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, போட்டி வல்வை.

முன்பு வெண்ணிலாவும், கிருபனும் இப்போட்டியை நடாத்தியதாக ஞாபகம்.

சிறிய... வேண்டுகோள். அந்தக் கட்டங்களுக்குள் எமது எழுத்தை பதியும் சூட்சுமத்தை காட்டிக் கொடுத்தால்.... பலர் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

அதெல்லாம் ஒரு காலம் தமிழ்சிறி அண்ணா. இந்த விளையாட்டுக்கு நான் வந்தால் எனக்கு வெற்றி நிச்சயம் என்பதால் வராமல் விடுகின்றேன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, போட்டி வல்வை.

முன்பு வெண்ணிலாவும், கிருபனும் இப்போட்டியை நடாத்தியதாக ஞாபகம்.

 

ஓ.. அவர்கள்  நடாத்தினார்களா?

பரவாயில்லை வெண்ணிலா இங்க வருவதில்லை கிருமி அரசியல் விமர்சனங்கள் கட்டுரைகள் மற்றும் இலக்கிய பிரசன்னங்கள் பலவற்றில் காலூன்றி விட்டதால் இந்த இடம்  காலியாகத்தானே இருக்கு சரி வாங்கோ நாங்கள் கட்டம் போட்டு சொற்கள் தேடுவோம்.

 

சிறிய... வேண்டுகோள். அந்தக் கட்டங்களுக்குள் எமது எழுத்தை பதியும் சூட்சுமத்தை காட்டிக் கொடுத்தால்.... பலர் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

 

இலையான் கில்லர் இதற்கு என்னிடம் சரியான பதில் கிட்டாது இந்த யாழுக்குள் நுழைந்துதான் இணையவெளியில் இலகுவாக உலா வரத்தொடங்கினேன் கணனி பற்றிய கற்றறிவு கிடையாது சும்மா தான்தோன்றித்தனமாக சொடுக்கி, விலக்கி, குதித்து, கூத்தாடி சில விடயங்களை அறிந்துள்ளேன் அவ்வளவுதான். இந்தக்கட்டங்களை Microsoft Excel இல் உருவாக்கி இலக்கமிட்டுள்ளேன் அதனை மற்றவர்கள் பாவிக்கக்கூடியதாக இவ்விடத்தில் இணைக்கத் தெரியாது. தெரிந்தவர்கள் எல்லோரும் பாவிக்கக்கூடியதாக 64 கட்டங்கள் உருவாக்கித் தந்தால் நன்றாக இருக்கும்... :icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்களுக்கு மன்னிக்கவும் உறவுகளே,

 

இந்தக்கட்டங்களை வரைபடமாக வைத்து முழுமைப்படுத்த முடியாதவர்கள் இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்ற வரிசைக்கிரமத்தில் அவ்வவ்விலக்கங்களுக்குரிய விடைகளை இணைக்கவும்.

உதாரணம்...

இடமிருந்து வலம்

1. கமலம்

5. திருமதி

 

மேலிருந்து கீழ்

1. கருவறை

2. மந்தி

 

 

 

தொடர்ச்சியாக பத்து குறுக்கெழுத்துப்போட்டியில் கலந்து முதலாமவராக சரியான பதிலைத் தருபவருக்கு பதினோராவது போட்டி வைக்குமுன் பரிசு காத்திருக்கிறது.  என்னுடைய புத்தகங்களை பரிசாக வழங்கிவிடுவேன் :lol:  :lol:  :D  என்று அதிகம் யோசிக்கவேண்டாம். ஆர்வமிருந்தால் கலந்து சிறப்பியுங்கள். எத்தகைய பரிசென்று ஊகூம் இப்போது சொல்ல மாட்டேன்.

 

 

SURPRISE

Contents-of-the-Box-Animation-Maya.gif

இடமிருந்து வலம்

  1. கமலம்

  5. திருமதி

14. கருவி

17. வதி

21. திட்டம்

25. வைகறை

29. சிம்மம்

43. யாகூ

47. தானை

49. மருத்துவம்

55. மறை

57. துணிவு

60. பணியகம்

 

மேலிருந்து கீழ்

  1. கருவறை

  2. மந்தி

  4. யாழ்ப்பாணம்

  5. தினம்

  7. மருட்சி

  8. கதி

14. விடயம்

19. பாவைக்கூத்து

24. திம்பு

26. கருப்பணி 

29. மறதி

31. சிந்தாமணி

33. மவுனம்

44. யாதும்

56. பறை 

 

 

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் விடைகள் சரியாக வரும் போலுள்ளது. ஆனால் கேள்விகளில் மயக்கம் உள்ளதே! சகாறா அக்கா வந்துதான் சரிப்படுத்தவேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய... வேண்டுகோள். அந்தக் கட்டங்களுக்குள் எமது எழுத்தை பதியும் சூட்சுமத்தை காட்டிக் கொடுத்தால்.... பலர் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

 

 

சிறித்தம்பி! மிக சுலபமான விடயம். உங்கள் பிள்ளைகளை கேளுங்கள் ஒரு நிமிடத்தில் இலகுவாக காட்டித்தருவார்கள்.

 

http://www.openoffice.org/de/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி மேலே தரப்பட்ட போட்டியில் இருந்த தவறுகளைத் திருத்திவிட்டேன் நீங்களும் உங்களுடைய பதிவை சிறிது திருத்தம் செய்து கொள்ளுங்கள்.  இப்போது சரியான பதிவு இடப்பட்டுள்ளது..... பதில்கள் முழுமைப்படுத்தப்பட்ட  பின்னர் பதில்களுக்கான சரியான விளக்கங்கள் தருவேன் எதிர்வரும் சனிக்கிழமை வரை அதற்கு காத்திருக்கவேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் மூளையைக் கசக்கிய பின் இளைப்பாற யாழ் வந்தால் இங்கையும் கசக்கலா? வண்ணத்திரை பக்கம் தான் எங்களுக்குச் சரிவரும் போல! :D

  • கருத்துக்கள உறவுகள்

இஇருந்தாலல் தானே கசக்க அதால நான் எஸ்கேப்  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் மூளையைக் கசக்கிய பின் இளைப்பாற யாழ் வந்தால் இங்கையும் கசக்கலா? வண்ணத்திரை பக்கம் தான் எங்களுக்குச் சரிவரும் போல! :D

  அங்கேயும் வல்லினம் மெல்லினம் இடையினந்தான் இங்கேயும் அந்த மூன்றுக்குள்ளும் அடங்கியதுதான்  என்ன அது கண்களுக்கும் கலவிக்கும் விருந்து இங்கே மூளைக்கும் கல்விக்கும் விருந்து புரிஞ்சுங்குங்க .......வைத்தியரே :lol:

இஇருந்தாலல் தானே கசக்க அதால நான் எஸ்கேப்  :lol:

 

ஏன் எண்ணெய் சட்டியில போட்டு வதக்கிட்டீங்களா? :D

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10928168_10152712485291551_1301693227_n.

 

தமிழினியின் பதில்கள் சரியாக உள்ளன. இப்போட்டியில் இது முதலாம் பதிவாக இருந்த கேள்விகளில் சில சொற்கள் விடுபட்டு குழப்பம் நிறைந்திருந்ததால் இது ஒரு உதாரணமாகவும் ஆரம்பமாகவும் இருக்கும் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது. முயற்சி செய்தவர்கள் பொறுத்தருள்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/152027-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 

தொடர்ந்து யாழ் ஆடுகளத்திற்கு இப்போட்டி மாற்றப்பட்டுள்ளது சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.