Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவர் மீது அவதூறு பரப்பும் சம்பந்தன் கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Featured Replies

எதிர்வரும் சனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி  தேர்தல் தொடர்பாக கடந்த 31.12.2014 அன்று வெளியான Indian Express நாளிதழில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள்  வழங்கியிருக்கும் நேர்காணலில் "குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது" என சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழினத்துக்கு அடையாளம் தந்த தேசியத் தலைவரையும், தமிழின அழிப்பில் முதன்மையானவரான மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தன் அவர்கள் சமப்படுத்தியமை  உலகத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது .

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு தேசியத் தலைவரை புகழ்வதும்,  சில சந்தர்ப்பங்களில் தேசியத் தலைவரை அவமதித்து பேசுவதும், விடுதலைக்கான எமது நியாயமான போராட்டத்தை சம்பந்தன்அவர்கள் அவமதிப்பதையே கோடிட்டு காட்டுகின்றது.

உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈடுஇணையற்ற மாபெரும் தலைவனை அவமதிப்பது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைப்பதற்கு இணையாகவே பார்க்கப்பட வேண்டும் . திரு சம்பந்தன் அவர்களின் இக் கருத்துக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இதேவேளை, சம்பந்தன் அவர்கள் பொறுப்பற்ற முறையிலும் , போராட்டத்துக்கு நேர்மையற்ற முறையிலும் செயற்படுகிறார் என்ற தமிழ் மக்களின் கருத்துக்களையும் இத் தருணத்தில் பதிவு செய்யவிரும்புகிறோம்.

நடைபெற இருக்கும் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு என்பது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்யானதென வரலாற்று ரீதியாக  நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்  திரு. சம்பந்தன் போன்ற மிதவாதத் தலைவர்களின் விட்டுக் கொடுத்தல்களாலும் தூரநோக்கற்ற சிந்தனையின் விளைவாலுமே எமது மக்கள் பேரவலங்களை சுமக்க வேண்டிவந்தது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் தமிழின அழிப்பு என்ற விடயத்தில் ஓரேநிலைப்பாட்டையே எடுத்துள்ளதை எமது மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அவ்வாறான சூழலிலேயே எதிர்வரும் சனாதிபதித் தேர்தலும் இடம்பெறவுள்ளது.

இத் தருணத்தில், எமது மாவீரர்களினதும் மக்களினதும் தியாகங்களை மனதிலிருத்தி, சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்குள் கரைந்து போகாமல், அரைகுறைத் தீர்வுகளுக்குள் எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை புதைத்து விடாமல், எமது தேசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றில் உறுதியாக இருந்து  செயற்படவேண்டும் என அனைவரையும் இத்தருணத்தில் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                       ''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நியூசீலான்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவீடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பின்லான்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
நெதர்லாண்ட் தமிழர் பேரவை
பெல்ஜியம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

http://www.pathivu.com/news/36722/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதா போச்சு. அடுத்த தேர்தலில் சம்பந்தனுக்கு வாக்கு போடாதைங்கோ!!!

ஆனந்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.
 
2009 இறுதியுத்தத்தில் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் லட்சத்துக்குமேல்  சின்னாபின்னமாகிப் பலியாகும் போது மக்களாகிய உங்களை காப்பாற்றும் படி சர்வதேசத்திடம் மண்டியிட்டு நாங்கள் கெஞ்சுவதற்குக்கூட தயாராக‌ இருக்கும் போது,
எங்களை அதைச் செய்ய விடாமல் பிரபாகரனின் படத்தை கொடுத்து "எங்கள் தலைவர் பிரபாகரனே" என்று கோஷமிடச் சொன்ன கயவர்கள் இவர்கள்.
 
நாம் சர்வதேசத்திடம் கெஞ்சியிருந்தால் அன்று 150,000 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்கும்.
 
மக்களே தயவு செய்து இந்தக் கயவர்களை இனங்காணுங்கள்.
 
30 வருடங்களாக இவர்களின் ராசதந்திரமில்லாத அணுகுமுறைகளாலும் தொலைநோக்கிலாத சிந்தனைகளாலும் எம் இனம் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது.
 
"உங்களுக்கு இனிமேல் இடமில்லை" என்ற செய்தியை வரும் தேர்தலில் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
 
.
 
Edited by ஈசன்

தமிழர் ஒருங்கிணைப்புக்குளு, தமிழ் மக்கள் பேரவை, உலக தமிழர் பேரவை, நாடுகடந்த அரசு.

இதெல்லாம் ஒரு அமைப்பா அனல்லது தனித்தனி அமைப்பா?

அறிந்தவர்கள் அறியதாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உங்களுக்கு இனிமேல் இடமில்லை" என்ற செய்தியை வரும் தேர்தலில் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் ஏற்கனவே சொல்லி விட்டார்களே..

இங்கு வாக்களிக்கும் மக்களுக்கு சொந்தமாக ஒரு கணக்கு உண்டு. மாகாணசபை தேர்தலை பாருங்கள். விக்கினேஸ்வரனுக்கு முதலிடம், அனந்திக்கு 2-ம் இடம், புளொட் சித்தார்த்தனுக்கு 3-வது இடம். மீதி பேரெல்லாம் அதன் பின்னர்தான்.

தேர்தலுக்கு முதல்  அனந்தி வீட்டில் தாக்குதல் ஏற்பாடு செய்திராவிட்டால், 2-ம் இடம் கேள்விக்குறியாகியிருக்கும் என்பது வாக்களித்த எனக்கு புரிகிறது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சித்தாத்தனுக்கும் விக்கிக்கும் அப்படி ஏதாவது நடந்ததா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ சித்தாத்தனுக்கும் விக்கிக்கும் அப்படி ஏதாவது நடந்ததா?

நடக்கவில்லை. அதைத்தான் சொல்லுகிறேன். 

சரி. நேரமாகி விட்டது. எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிக்கு செல்ல போகிறேன். இதோ வருகிறேன்.. அன்னம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.
 
2009 இறுதியுத்தத்தில் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் லட்சத்துக்குமேல்  சின்னாபின்னமாகிப் பலியாகும் போது மக்களாகிய உங்களை காப்பாற்றும் படி சர்வதேசத்திடம் மண்டியிட்டு நாங்கள் கெஞ்சுவதற்குக்கூட தயாராக‌ இருக்கும் போது,
எங்களை அதைச் செய்ய விடாமல் பிரபாகரனின் படத்தை கொடுத்து "எங்கள் தலைவர் பிரபாகரனே" என்று கோஷமிடச் சொன்ன கயவர்கள் இவர்கள்.
 
நாம் சர்வதேசத்திடம் கெஞ்சியிருந்தால் அன்று 150,000 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்கும்.
 
மக்களே தயவு செய்து இந்தக் கயவர்களை இனங்காணுங்கள்.
 
30 வருடங்களாக இவர்களின் ராசதந்திரமில்லாத அணுகுமுறைகளாலும் தொலைநோக்கிலாத சிந்தனைகளாலும் எம் இனம் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது.
 
"உங்களுக்கு இனிமேல் இடமில்லை" என்ற செய்தியை வரும் தேர்தலில் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
 
.

நீங்கள் கெஞ்சி கூத்தாடி சர்வதேசம் தான் செய;த யுத்தத்தை நிறுத்தியிருக்கும் என்றும் இப்போது கூட சொல்கிறீர்கள்...!  

தலைவரின் படத்தை கொடுத்து தான் நீங்கள் அதை விருப்பின்றி வேண்டி கட்டாயத்தின் பெயரில் தான் "எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று கோசமிட்டது உண்மை எனில் .....! நீங்கள் எந்த சர்வதேசத்தை நம்பி வீதியில் நின்றீர்களோ அந்த சர்வதேசமே போரை நடத்தியது பொய்யேன்று நீங்கள் நினைத்தால்...  உங்களுக்கு தமிழர் சார் விடுதலைப் போராட்டம் பற்றியும்... சர்வதேச " ராசதந்திர அணுகுமுறைகளும் " இன்றும் புரியவில்லை என்று அர்த்தம். 

அது சரி அந்த 30 வருடம் "இராஜதநத்திரமில்லா அனுகுமுறையோடு" இருக்கும்  "இவர்கள்" "அவர்கள்" யார்?  அவர்களிடம் ராஜதந்திரம் இல்லை எனில் உங்களால் ஏன் அதை சரி செய்ய முடியாமல் போனது? அந்த இவர்களும் அவர்களும் வானத்திலிருந்த குதித்தார்கள்... உங்களை போன;றோர்  தானே? 

தேர்தலுக்கு முதல்  அனந்தி வீட்டில் தாக்குதல் ஏற்பாடு செய்திராவிட்டால், 2-ம் இடம் கேள்விக்குறியாகியிருக்கும் என்பது வாக்களித்த எனக்கு புரிகிறது.

இந்திய சினிமாக்களை அதிகம் பார்ப்பதால் வந்த கருத்தாக எனக்கு தெரிகிறது.

ஆனந்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.
 
2009 இறுதியுத்தத்தில் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் லட்சத்துக்குமேல்  சின்னாபின்னமாகிப் பலியாகும் போது மக்களாகிய உங்களை காப்பாற்றும் படி சர்வதேசத்திடம் மண்டியிட்டு நாங்கள் கெஞ்சுவதற்குக்கூட தயாராக‌ இருக்கும் போது,
எங்களை அதைச் செய்ய விடாமல் பிரபாகரனின் படத்தை கொடுத்து "எங்கள் தலைவர் பிரபாகரனே" என்று கோஷமிடச் சொன்ன கயவர்கள் இவர்கள்.
 
நாம் சர்வதேசத்திடம் கெஞ்சியிருந்தால் அன்று 150,000 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்கும்.
 
மக்களே தயவு செய்து இந்தக் கயவர்களை இனங்காணுங்கள்.
 
30 வருடங்களாக இவர்களின் ராசதந்திரமில்லாத அணுகுமுறைகளாலும் தொலைநோக்கிலாத சிந்தனைகளாலும் எம் இனம் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது.
 
"உங்களுக்கு இனிமேல் இடமில்லை" என்ற செய்தியை வரும் தேர்தலில் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
 
.

ஏற்கனவே நிறைய கெஞ்சி முடிந்து விட்டது , 150000 மக்கள் இறந்து கொண்டு இருந்தது எல்லாருக்கும் தெரியும் . ஆனால் அமைதியாக இருந்தார்கள் ஏன் தெரியுமா புலிகள மொத்தமாக அழியவேண்டும் என்று. சும்மா ஆளாளுக்கு விமர்சனம் என்ற பெயரில் ஒன்றும் புடுங்க வேண்டாம் .
 
ஏன் சிரியாவில் இன்னும் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றார்கள் எந்த சர்வதேசம் இப்ப அவர்கள் உயிரை காப்பற்றுகின்ரர்கள் . பெரிதாக விமர்சனம் சொல்லும் விற்பன்னர்கள் சொல்லுங்கோ .
 
ஏதோ நீங்கள் கெஞ்சி சொன்னால் மட்டும் தான் அவர்களுக்கு மக்கள் இறப்பது தெரியும் என்றமாதிரி .
கொலை செய்ய சொன்னதே எல்லாரும் சேர்ந்துதான் .
 
மாக்களோடு சேர்த்து புலிகள் எல்லாரையும் அளிக்கவேண்டும் இது இஸ்ரேல் இன் மொசட் அமைப்பின் திட்டம் .இதனைத்தான் ஸ்ரீலங்கா இங்கு செய்தது . உணமையாக போராடிய எங்கள் அமைப்பை விமர்சனம் செய்வதை விட்டுட்டு உங்களது அலுவல்களை பாருங்கள் .

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கெஞ்சி கூத்தாடி சர்வதேசம் தான் செய;த யுத்தத்தை நிறுத்தியிருக்கும் என்றும் இப்போது கூட சொல்கிறீர்கள்...!  

தலைவரின் படத்தை கொடுத்து தான் நீங்கள் அதை விருப்பின்றி வேண்டி கட்டாயத்தின் பெயரில் தான் "எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று கோசமிட்டது உண்மை எனில் .....! நீங்கள் எந்த சர்வதேசத்தை நம்பி வீதியில் நின்றீர்களோ அந்த சர்வதேசமே போரை நடத்தியது பொய்யேன்று நீங்கள் நினைத்தால்...  உங்களுக்கு தமிழர் சார் விடுதலைப் போராட்டம் பற்றியும்... சர்வதேச " ராசதந்திர அணுகுமுறைகளும் " இன்றும் புரியவில்லை என்று அர்த்தம். 

அது சரி அந்த 30 வருடம் "இராஜதநத்திரமில்லா அனுகுமுறையோடு" இருக்கும்  "இவர்கள்" "அவர்கள்" யார்?  அவர்களிடம் ராஜதந்திரம் இல்லை எனில் உங்களால் ஏன் அதை சரி செய்ய முடியாமல் போனது? அந்த இவர்களும் அவர்களும் வானத்திலிருந்த குதித்தார்கள்... உங்களை போன;றோர்  தானே? 

இந்திய சினிமாக்களை அதிகம் பார்ப்பதால் வந்த கருத்தாக எனக்கு தெரிகிறது.

அடிக்கடி நீங்கள் யாழ் வரதாதால் ..... இதை சீரியசாக எடுத்து பதில் சொல்கிறீர்கள்.
 
வீதி என்று இறங்கினால் ஆயிரம் இருக்கும்.
பாவம் என்றுவிட்டு பார்த்துகொண்டு போக வேண்டியதுதான். 
இதையெல்லாம் சீரியசாக எடுத்தால் உங்கள் பயணம்தான் தடைபடும். 
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இருந்து ஐநா வெளியேறியபோதே மக்கள் கெஞ்சினார்கள்.. அவர்கள் கோசம் எதனையும் எழுப்பவில்லை.. ஆனாலும் ஐநா வாகனங்கள் உத்தரவுகளுக்கு அமைய நீங்கிச் சென்றன.. பிறகு இனப்படுகொலை..

அதன் பிறகு அந்த ஐநாவின் பிரதிநிதியாக இருந்த கோர்டன் வைஸ் மனக்கலக்கம் அடைந்து புத்தகம் எழுதுதல்.. நல்ல விற்பனை..

இமை துடிப்பதால் காட்சிகள் சிலருக்கு விட்டு விட்டுதான் தெரியும்போல ........
அவர்களுக்கு இமையை புடுங்கிவிட்டால் ... பின்பு உலகில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்பிருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் ஊருக்கு போய் வந்தோடனா.. நிலைப்பாட்டை மாற்றிப்போட்டார். எல்லாம் நல்லா இருக்கு கூட்டத்தோட சேருவம் என்று முடிவெடுத்திட்டார் போல.

பொதுவா யாழ் இந்து ஆக்கள் அப்படித்தான். கொஞ்சம் கவர்ச்சியா இருந்தா கவுண்டிடுவினம். அதுக்கு தலைக்கனமும் ஒரு காரணம். :lol::icon_idea:

அது சரி அந்த 30 வருடம் "இராஜதநத்திரமில்லா அனுகுமுறையோடு" இருக்கும்  "இவர்கள்" "அவர்கள்" யார்?  அவர்களிடம் ராஜதந்திரம் இல்லை எனில் உங்களால் ஏன் அதை சரி செய்ய முடியாமல் போனது? அந்த இவர்களும் அவர்களும் வானத்திலிருந்த குதித்தார்கள்... உங்களை போன;றோர்  தானே? 

இன்னமமும் குழந்தைபிள்ளையாக இருக்கின்றீர்கள் .
மகிந்தா ,சோனியா ,கருணாநிதி ,ஜெயலலிதா எல்லாம் இப்படி ஒரு கேள்வியை கேட்டால் என்னபதில் ? அரசியலுக்கு வந்து அவர்கள் பிழை விட்டால விமர்சனம் வைப்பார்கள் கேள்வி கேட்பார்கள் அதற்கு பதில் நாங்கள் என்ன வானத்தில் இருந்தா குதித்தோம் நீங்கள் வந்து சரியாக சரியாக அரசியலை செய்யுங்கோ என்பதல்ல .
அதைவிட சர்வதேசம் பற்றி எழுதியதை பார்க்க சிரிப்புத்தான் வந்தது .முள்ளிவாய்காலின் ஆரம்பபுள்ளி எதுவென ஒருமுறை விபரமாக அறியவும் .

யாழ் இந்து ஆட்களின் தீர்க்க தரிசனம் தான்  பல இடங்களில் வேலை செய்யுது, எல்லா விடயங்களிலும் விபரமான ஆட்கள் போலகிடக்கு , :icon_mrgreen:

ஆனால் இந்து மாணவன் புளட்டில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கு

விபரமான இந்து மாணவர்கள் புளோட்டில் தான் இருந்தார்கள் .(நான் உட்பட :D )

பலர் நினைப்பது யாழ் இந்து என்றால்  புலிகள் என்று ,பொன்னம்மான் ,ராதா ,அன்டன் மாஸ்டர் ,ஐயர் கணேஷ் (லண்டனில் இருக்கின்றார் ),கேடில்ஸ் ,யோகி ,திலீபன் ,ராஜன் (இப்போ சுவீடனில் இருக்கின்றார் ).இதில் அன்டன் மாஸ்டர் மாத்திரம் யாழ் பல்கலைகழகம் 

புளொட் ஆரம்ப மத்திய குழுவில் இரண்டு இந்து மாணவர்கள் இருந்தார்கள் .ஒருவர் இன்ஜினியரிங்  A/L  இல் 3A 1B,.மற்றவர் மருத்துவம் 1A 3B . கிட்டருக்கு குண்டு எறிந்த இந்த இருவரும் இப்போ கனடாதான் .தேவையெனில் பெயர்கள் தருகின்றேன் .இவர்கள் பற்றி  இந்து மாணவர்களை கேட்டு அறியுங்கள் .

ஒரு இயக்கத்திலும் சேராத யாழ் இந்து மாணவர்களும் இருந்தார்கள் (நான் உட்பட). 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இருந்து ஐநா வெளியேறியபோதே மக்கள் கெஞ்சினார்கள்.. அவர்கள் கோசம் எதனையும் எழுப்பவில்லை.. ஆனாலும் ஐநா வாகனங்கள் உத்தரவுகளுக்கு அமைய நீங்கிச் சென்றன.. பிறகு இனப்படுகொலை..

அதன் பிறகு அந்த ஐநாவின் பிரதிநிதியாக இருந்த கோர்டன் வைஸ் மனக்கலக்கம் அடைந்து புத்தகம் எழுதுதல்.. நல்ல விற்பனை..

இப்படி மக்களை காப்பாற்ற முடியாத ஐ.நா இருந்தென்ன இல்லாமல் விட்டென்ன? .இத்தனை நாடுகள் அங்கத்தவராக இருந்தும் வன்னியை விட்டு வெளியேறியது கோழைத்தனமானது, மிக சுயநலமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் மீது அவதூறு பரப்பும் சம்பந்தன் கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

அவருக்கு தன்னிடமுள்ள எதையும் விற்பனையாகும் அளவுக்கு பெறுமதியானது எனத்தெரியாததால்

அல்லது இல்லாததால்

தலைவரை விற்கிறார்

பாவம்

இனியாவது சொந்த சரக்குகளை விற்கமுனைய வாழ்த்துவோம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மக்களை காப்பாற்ற முடியாத ஐ.நா இருந்தென்ன இல்லாமல் விட்டென்ன? .இத்தனை நாடுகள் அங்கத்தவராக இருந்தும் வன்னியை விட்டு வெளியேறியது கோழைத்தனமானது, மிக சுயநலமானது. 

வன்னி படுகொலை 3வது விடயம் உலகில்.
 
ருவாண்டாவில்  இரத்த ஆறை கடந்து ஐநா படைகள் வெளியேறின.
 
ஐநா வில் என்ன நடக்கிறது என்பதை இவைதான் வெளி உலகிற்கு சொல்கின்றன. எவளவோ செய்திகளை ஐநா வில் பணி செய்பவர்கள் தமது பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு சொல்லி இருக்கிறார்கள்.
எல்லாம் இருட்டடிப்பு செய்யபட்டிருக்கிறது.
 
ஐநா எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை பணம்தான் சொல்கிறது.
 G8  இப்போ  G7

என்னப்பா இது தேசியத்தலைவரை அவதூறாக பேசியதற்காகத்தானே கண்டனம் தெரிவித்தார்கள் .இதற்கு ஏனப்பா நீங்க குத்தி முறிகிறீங்க.... :D

தேசியத்தலலைவரைப் பற்றி  அவதூறாக பேசும்போது எந்த உணர்வுள்ள தமிழனும் இதைத்தான் செய்வார்கள் என்பது யதார்த்தம் .சும்மா குத்தி முறிவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை மாமாக்களே :lol:

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.