Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லதோர் வீணை செய்வோம்!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

 

நன்றி! இது ஒரு process development விசுகர்! ஒருவருக்கு வடையைச் சுட்டுச் சாப்பிடக் குடுக்கிறத விட வடை சுடும் வழியைச் சொல்லிக் கொடுத்தல் மூலம் வாழ் நாள் முழுவதும் அவர் வடை சாப்பிட வழி சமைக்கிறோம்! இங்கே தேடக் கற்றுக் கொண்டால் வேறு விடயங்களிலும் தேடல் வரும். இயலுமானவரை முயற்சிக்கிறேன்! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 
தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்கள்  MUFA  வும் PUFA  வும் தான் கண்முன்னே வந்து போகின்றன. :D 

தொடர்ந்தும் ஆரோக்கியமான தகவல்களைத் தரும் ஜஸ்ரினுக்கு நன்றிகள்

 

We have a winner! :D

Edited by Justin

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடற் பயிற்சி: ஒரு முன்னோட்டம்!

 

ஊக்க மாத்திரை!

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளுக்கு முன்னர் ஒரு ஊக்க மாத்திரையும் எச்சரிக்கையும் உங்களுக்குத் தர வேண்டியிருக்கிறது. இவை உங்கள் மனதில் பதிய வேண்டும்.

2002 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டுக் கனடாவுக்குக் குடி பெயர்ந்த எனது ஆசிரியர் ஒருவரை நான் பத்து ஆண்டுகளாகத் தேடி போன வருடம் கண்டு பிடித்தேன். ஆசிரியர் என்பதை விட எனக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தவர், தமிழில் ஆக்கங்கள் படைப்பதை முதன் முதலில் ஊக்குவித்தவர். அவருடனான தொலைபேசி உரையாடலில் அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கே குறிப்பிடத் தக்கவை. ஓய்வு பெற்ற வயதில் கனடாவுக்கு வந்த பின்னர் 2009 வரை அவர் பெரும்பாலான எங்கள் தமிழ் முதியோரைப் போல வீடு, கோயில், ஒன்று கூடல்கள் என்று நாட்களைக் கழித்திருக்கிறார். பின்னர் 2009 இல் அத்லெரிக் கனடா (Athletic Canada) நடத்தும் வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கலந்து கொண்ட போது அவருக்கு வயது 69. அந்த ஆண்டிலிருந்து, இப்போது வரை, ஒவ்வொரு ஆண்டும் அத்லெடிக் கனடா நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறார். அந்த ஆசானின் பெயர் சின்னப்பு பிலிப்நேரி. 74 வயதில் கடந்த ஆண்டு அவர் பெற்ற விளையாட்டு வெற்றிகளை இந்த இணைய இணைப்பில் பார்வையிடலாம்!

 

http://www.athletics.ca/pr2.asp?event_id=172&rank_type=Rankings&season_type=Outdoor&class_type=Masters%2070-74&par_type=no&year_type=2014&gender_type=Men&province_type=&lang=_en

 

உடற்பயிற்சி பற்றிய பதிவுகளை வாசிக்கையில், எங்களுக்கு வயதாகி விட்டதோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், பிலிப்நேரி ஆசிரியரை நீங்கள் நினைவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தக் கதையை இங்கே பகிர்ந்தேன். பிலிப்நேரி ஆசிரியர் இளமைக் காலத்தில் விளையாட்டு வீரனாக இருந்த ஒருவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அந்த வகையில் அவரது உடல் கடின உடற்பயிற்சிக்கு ஈடு கொடுக்கும் தரத்தில் இருந்திருக்க வேண்டும் என நம்புகிறேன். இனி எச்சரிக்கை!

 

எச்சரிக்கை

 

இதை வாசிக்கும் 35 தாண்டிய நண்பர்களுக்கான அறிவுறுத்தல் இது: நீங்கள் கடந்த காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதவராக அல்லது பல வருடங்களாக உடற்பயிற்சியக் கைவிட்டிருந்த ஒருவராக இருப்பின் நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து பரிசோதனைகள் செய்து கொண்ட பின்னரே புதிதான உடற்பயிற்சி முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். மென்மையான உடற் செயல் பாடுகளான நடை போன்றவற்றுக்கு இது அவசியம் இல்லை, ஆனால் மத்திம (moderate) அல்லது தீவிர (intense) பயிற்சிகளுக்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை ஒரு தடவை பெற்று விடுங்கள். இது பெரும்பாலும் உங்கள் இதய ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது. சிலருக்கு இதயத்தின் இரத்த நாளங்களில் குறைந்தளவிலான அடைப்பு இருந்தால் கடின உடல் பயிற்சியின் போது மட்டுமே அதன் விளைவுகள் தெரிய வரும் (விளைவு மாரடைப்பாக இருக்கலாம்!). சில சமயங்களில் இதைக் கண்டு பிடிக்க மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் உங்களை பல மட்டங்களிலான உடற்பயிற்சியில் ஈடு படவைத்து உங்கள் இதயத் தொழிற்பாட்டை பரிசோதிப்பார்கள் (இது stress test எனப்படும்!).

 

விஞ்ஞான அடிப்படை

 

எந்த அளவுக்கு ஒருவர் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் தான் விவாதம் இன்றும் தொடர்கிறது (பின் வரும் பதிவுகளில் இதைப் பார்ப்போம்). ஆனால் உடற் பயிற்சி உடலுக்கு நன்மையே விளைவிக்கும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு உண்மை. இந்த நன்மைகளின் விஞ்ஞான அடிப்படைகளும் அனேகமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் மட்டும் குறிப்பிடுகிறேன். ஜீன்கள் எங்கள் உடலின் சாதகமான பாதகமான எல்லா மாற்றங்களுக்கும் அடிப்படையானவை. உடற் பயிற்சியின் விளைவாக பயன் பெறும் இதயம், தசைகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் ஜீன்களின் செயல் பாடு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன (அப்படியான ஒரு ஆய்வு, மேலதிக தகவல் தாகம் உள்ளோருக்காக இதோ:   http://www.tandfonline.com/doi/full/10.4161/15592294.2014.982445#abstract )

 

உடற்பயிற்சியின் வகைகள், யாருக்கு எந்த வகை அவசியம் என்பன பற்றி அடுத பதிவில் சந்திப்போம் நண்பர்களே! ஊக்க மாத்திரையையும் எச்சரிக்கையையும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு மற்றும் செய்தி

 

தொடருங்கள் ஐயா...

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இங்கு வேற வகுப்பு நடக்குதா? நல்லாத்தான் இருக்கு....தொடருங்கள் யஸ்டின் :rolleyes:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

உடற்பயிற்சி, டயட் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது சோற்றையும், வெள்ளை நிற பாண் போன்றவற்றையும் நிறுத்துவது. அதிலும் குறிப்பாக இரவில் சோறோ அல்லது மாச்சத்துள்ள உணவுவகைகளோ முற்றாக உண்ணாமல் இருப்பது. இந்த உணவு வகைகளுக்கு மாற்றீடாக Whole meal என்றழைக்கப்படும் அனைத்துத் தானிய கலப்புணவை உண்ணலாம். இன்னொரு முக்கிய விடயம் இரவு தூங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னாவது உங்கள் இரவுணவை முடித்து விடுங்கள். உடல் உரக்க நிலைக்கு போனபின்னர் உட்கொண்ட உணவு அரைக்கப்படாமல், முற்றாகச் சமிபாடடையாமல் கொழுப்பாகத் தேங்கிவிடும். 

 

காலையில் இடியப்பம், புட்டு என்று உள்ளே தள்ளாமல் Whole meal  ஸீரியல் வகைகளை உண்ணுங்கள். Oates என்றழைக்கப்படும் தானியம் மிகவும் அருமையானது. காலை உணவுக்கு சிறந்தது. உடற்பருமனைக் குறைக்க பெரிதும் உதவுவது. ஆனால் சீனி கலந்த, சாக்லெட் கலந்த சீரியல் வேண்டாம். சீனி பொல்லாத சாமான்.

 

தேங்காய்ப்பால் இதுவரை கூடாது என்று சொன்னார்கள். அதை நம்பவேண்டாம். தேங்காய்ப் பாலிலுள்ள எண்ணெய் உடலுக்கு அவசியமானது. செயற்கை மாஜரீன்களைவிட தேங்காயெண்ணெய் எவ்வளவு நல்லது. ஒலிவ் எண்ணெயும் நல்லது. இவற்றால் கெட்ட கொழுப்பு உடலில் சேராது. பட்டர் பாவிப்பதற்குப் பதிலாக இதுவரை மாஜரீன் பாவித்திருந்தால், பழக்கத்தை மாற்றுங்கள். ஏனென்றால் பட்டர் இயற்கையானது, மாஜரீன் செயற்கை எண்ணெய்களால் ஆனது. 

 

காப்பி தேனீரால் தீமை என்று யாரும் சொன்னால் நம்பவேண்டாம். கொழுப்புணவை உடலில் தங்கவிடாமல் அகற்றும் Anti Oxidants  காப்பியில் உண்டு. அதிலும் Green Coffee எனப்படும் காப்பியில் நாம் கொழுப்பைக் கரைக்க உதவும் என்று நம்பும் Green Tea க் காட்டிலும் 70% அதிக Anti Oxidants உண்டு. ஆகவே தாராளமாகக் குடியுங்கள், ஆனால் சீனி வேண்டவே வேண்டாம் !

 

சோற்றைக் குறையுங்கள், மரக்கறி, தானியங்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் கல வளர்ச்சிக்கும், கல திருத்துதலுக்கு அமினோ அமிலம் எனப்படும் புரதம் அவசியம். ஆகவே நீங்கள் குறைக்கவிருக்கும் மாப்பொருளுக்குப் பதிலீடாக புரத உணவை உண்ணுங்கள். முட்டை, பருப்பு, சிவப்பு மாமிச வகை, சிறு மீன்களில் இப்புரதம் உண்டு. நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர் இல்லையென்றால், பருப்பு, கொழுப்புக் குறைந்த பால், மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் Protein Powders ஐ உண்ணலாம். 

 

இறுதியாக, உடற்பருமன் குறைவதால் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. உங்கள் உடல் அழகு பெற சிறிதளவாவது உடற்பயிற்சி செய்யுங்கள். நடப்பதிலிருந்து வீட்டில் கைய்யைக் காலை நீட்டி செய்வது வரை எல்லாமே உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்வோர் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம், உடற்பயிற்சியின் பின்னரான தசை மற்றும் மூட்டு நோவுகள். இவை தற்காலிகமானவைதான். ஒன்று இரண்டு நாளில் அவை மறைந்துபோகும்,.ஆகவே உடற்பயிற்சிகளுக்கிடையில் குறைந்தது ஒரு நாளாவது இடைவெளி விடுங்கள். இந்தச் சிற்றோய்வு தசைகளை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வழிவிடுவதுடன், உடற்பயிற்சியின் போது தமது எல்லைகளுக்கு இழுத்து காயப்பட்ட தசைகளை மீண்டும் புணரமைப்பதோடு புதிய தசை நார்களையும் உருவாக்க வழி வகுக்கும். உடற்பயிற்சி நோவுகளுக்கு மருந்தாக நிச்சயம் பாவிக்க வேண்டியது மீன் எண்ணெய். இது மூட்டு, தசைகளுக்கு ஒரு Lubricant ( மென்மையாக்கி) ஆகத் தொழிற்படுவதுடன், நீங்கள் விரைவாக உடற்பயிற்சிகளுக்கு மீண்டு திரும்புவதற்கும் உதவுகிறது. உடற்பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குள் புரதம் நிரைந்த உணவை உட்கொள்ளுதல் மிக அவசியமானது. இது தசை வளர்ச்சிக்கும், புணரமைப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது. வீட்டில் புரதம் சரியான அளவிற்கு கிடைப்பதில்லை என்றால், பதிலீட்டுப் பொருளாக  Protein Powders ஐ உண்ணலாம். 

 

செய்துபாருங்கள் உங்கள் உடல்மீது உங்களுக்கே பொறாமை வரும் ! 41 வயதில் இதை உணர்பவன் என்கிற வகையில் இதைச் சொல்கிறேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்கள் பதிவை தொடர்ந்து வாசிப்பவன்.எல்லாம் சரி இந்த நல்லெண்ணை பற்றி நீங்கள் எழுதியது தான் ஒரே குழப்பமாய் இருக்கு :rolleyes:

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பும் உடற்பருமனும்- சில புதிய தகவல்கள்

உடல் எடை குறைப்பதற்கான உணவு முறைகள் பற்றி நாளாந்தம் புதிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றில் சில விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையிலானவை. பெரும்பாலானவை விஞ்ஞானத்தை விட வியாபரத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட தகவல்கள். மூன்றாவது வகையான தவல்களும் உண்டு: அவை விஞ்ஞான அடிப்படையிலான கண்டு பிடிப்புகளை அரைகுறையாக விளங்கி பிழையாக மொழிமாற்றம் செய்து தவறான தகவல்களை மக்களிடையே பரப்பும் தகவல்கள். "தேங்காயெண்ணை இதய நோய்க்கு வழி வகுக்கும் என்பது பொய்! தேங்காயெண்ணை உண்மையில் ஆரோக்கியமானது!" என்று தமிழ் இணையப் பரப்பில் விரவிக் கிடக்கும் தகவல் இந்த மூன்றாவது வகையான தகவலுக்கு  உகந்த உதாரணம். இப்படியான தவறான தகவல்களைத் தவிர்க்க ஒரு வழி, நம்பிக்கையான ஆய்வுகளை உடனுக்குடன் புரியக் கூடிய தமிழில் கொண்டு வந்து விடுவது தான். இந்த நோக்கத்திற்காக, வேலைப் பளு இருந்தாலும், நேச்சர் இதழில் வெளிவந்திருக்கும் கொழுப்புணவுகளுக்கும் உடற்பருமனாதலுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஒரு அரிய ஆக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

53 உடற்பருமன் குறைப்பு சம்பந்தமான ஆய்வுகளை மீள ஆராய்ந்த போது, உணவில் கொழுப்பைக் குறைப்பதால், உடற்பருமனை பெரிதாகக் குறைக்க முடியவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஆய்வுகளில், ஒரு வருடம் குறைந்த கொழுப்புள்ள உணவை உட் கொண்டோரிடையே பாரிய உடல் எடைக் குறைப்பு நிகழவில்லை என்பதே ஆய்வு முடிவு. உணவில் கொழுப்பைக் குறைப்போர் மாச்சத்தைக் குறைக்காமல் இருப்பதே இந்த ஆய்வு முடிவுக்குக் காரணமாக நம்பப் படுகிறது. எந்தப் போசணைப் பொருளாக இருந்தாலும், அதிலுள்ள கலோரிகளின் அளவே எங்கள் உடற்பருமனைத் தீர்மானிக்கும் புறக்காரணியாக இருக்கிறது. ஒரு கிராம் கொழுப்பில், ஒரு கிராம் மாச்சத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு கலோரிகள் இருப்பதால், கொழுப்பை உணவில் குறைத்தால் உணவின் மூலம் வரும் கலோரிகளின் அளவைக் குறைக்கலாம் என்பதே கொழுப்புணவைத் தவிர்ப்பதன் அடிப்படை. ஆனால், கொழுப்பைக் குறைத்து விட்டு மாச்சத்தில் டபுள் மடங்கு அள்ளிக் கட்டினால், கலோரிகள் குறையாமல் உடல் எடை அப்படியே இருக்கும். இது தான் பல கொழுப்புக் குறைந்த டயற்றிங் முறைகளில் நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்போரின் நடத்தைகள் பற்றிய ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். உணவுக் கட்டுப் பாட்டை ஆரம்பிக்கும் போது மிகுந்த கட்டுப் பாட்டுடன் இருக்கும் நபர்கள், ஆறு மாதமளவில் அதன் பயனை அடைகிறார்கள். அந்த ஆறு மாதம் தாண்டியவுடன், கொழுப்பைத் தொடர்ந்து குறைத்தாலும் கலோரிகளை அதிகரிக்கும் மாச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்ப்பிக்கிறார்கள். "உணவுக் கட்டுப் பாட்டில் இருக்கிறோம்" என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த கலோரி அதிகரிப்பும், உடல் எடை மீண்டும் அதிகரிப்பதும் நடைபெறுகிறது.

இந்த அவதானிப்புகளின்  மூலம் எங்களுக்கு என்ன செய்தி சொல்லப் படுகிறது?:

என்னுடைய விளக்கம் இது: உடல்பருமன் குறைப்பிற்கு கொழுப்பை மட்டுமே குறைப்பது போதாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். என்னுடைய கருத்துப் படி, உடற்பருமன் குறைய கொழுப்பையும் மாச்சத்தையும் குறைப்பது மட்டுமே போதாது! உடற்பயிற்சியையும் அதனோடு சேர்த்துக் கொள்ளும் போது மட்டுமே உடற்பருமன் குறைப்பு நீண்ட கால நோக்கில் சாத்தியமாகும். என்னுடைய அவதானிப்பில், வர்த்தக ரீதியான உடல் எடை குறைப்பு முறைகளை நாடும் பலர், உடற்பயிற்சிக்கு முற்றான மாற்றீடாக அந்த உடல் எடை குறைப்பு முறைகளைப் பயன் படுத்த முயல்வதாலேயே உரிய பயன் கிடைப்பதில்லை.

அதனால், கொழுப்பைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது! எடுக்கும் கொழுப்பை நிரம்பாத கொழுப்பாக (ஒலிவ் எண்ணை, மற்றும் தானியங்களில் உள்ளவை போன்று) எடுத்துக் கொள்வது நல்லது. சோறு போன்ற மாச்சத்துள்ள உணவுகளையும் குறைக்க வேண்டும். இவற்றோடு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது மத்திமமான அல்லது கடினமான உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.

நன்றி.

ஜஸ்ரின்.

மூலங்கள்: 

1. Tobias, D. K. et al. Lancet Diabetes Endocrinol. http://dx.doi.org/10.1016/S2213-8587(15)00367-8 (2015).

2. http://www.nature.com/news/low-fat-diets-have-low-impact-1.18678

3.  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17413101?dopt=Abstract&holding=npg

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி



  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்டின்,என்னோட வேலை செய்யும் ஒரு மனிசி கொஞ்சம் உடம்பு தான்.காலையில் ஒவ்வொரு நாளும் உணவாக சொக்கிலேட் சாப்பிட்டுக் கொண்டு வந்தவ. உடம்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சொக்கிலேட் சாப்பிடுவதை நிறுத்தி இரண்டு,மூன்று மாதங்களுக்குள் எலும்பும்,தோலும் ஆகி விட்டார்...எனது நண்பி ஒருவர் உடம்பைக் குறைப்பதற்காக அவித்த மரக்கறிகளும்,பழங்களும்,பயறு போன்ற தானியங்கள் சாப்பிடத் தொடங்கி மூன்றே நாட்களில் 4 கிலோ குறைத்து விட்டார்...அதைப் பார்த்து நானும் வெறும் பழங்களும்,அவித்த மரக்கறிகளும்,கடலை,கெளப்பி,பயறு போன்ற உணவுகளை சாப்பிட்டாலும் என்னால் மட்டும் உடம்பை குறைக்க முடியவில்லை...எதற்காக என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரது உடம்பு வாசியும் வித்தியாசமானதா?...பல பெண்களை நான் கண்டு இருக்கிறேன் சோத்தை வைச்சு வெளுத்துக் கட்டுவார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் ஈக்குச்சி மாதிரி இருப்பார்கள்...நன்றி


 

 

ஆம், ஒவ்வொருவரதும் உடம்பு வாசி வித்தியாசமானது தான்! இது உடற்பருமனுக்கு/உடற்பருமன் குறைப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உடல் அமைப்புகள்/தொழிற்பாடுகளுக்கும் பொருந்தும். இந்த உடல் வாசி (phenotype) என்பது உண்மையில் எங்கள் ஜீன்களாலும், சூழலினாலும் தீர்மானிக்கப் படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே, உடற்பருத்தலோடு தொடர்புடைய சுமார் 127 ஜீன்களை மனிதனில் கண்டறிந்துள்ளார்கள். எல்லா மனிதர்களிலும் இந்த 127 ஜீன்களும் ஒரே மாதிரியான தொழிலைச் செய்தாலும், இந்த ஜீன்களில் பரம்பரையாக ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்கள் சில மனிதர்களில் இந்த ஜீன்களின் தொழிற்பாட்டைக் குறைப்பதால் அல்லது கூட்டுவதால் அம்மனிதர்களில் உடற்பருமன் பிரச்சினை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இது உணவுகுறைப்பால் ஒருவருக்கு நன்மையைத் தர, இன்னொருவருக்கு எதிர்பார்த்த நன்மையைத் தராமல் விடலாம்.

ஆனால், உடற்பருமன் பிரச்சினை என்பது நவீன காலத்திற்குரியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்! மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த போதும் , இப்போது சில பத்து  ஆண்டுகளாகத் தான் உடல்பெருத்தல் பரவலாக எம்மிடையே காணப்படுகிறது. இதனால், ஜீன்கள், பரம்பரை என்பவற்றை விடவும் எமது சூழலே உடற்பருமன் பிரச்சினைக்கு அதிக பங்களிப்புச் செய்யும் காரணி எனக் கூற முடியும்!.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பரீட்சை எல்லாம் நன்றாக முடிந்துவிட்டதா ?

  • கருத்துக்கள உறவுகள்

பசி இல்லாமல், வியர்க்காமல், நடக்காமல் இருந்தால் உடற்பருமன் கூடும்தானே. பட்டினி கிடந்து மட்டும் குறைக்கமுடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரோக்கியமான பதிவு
நன்றி ஜஸ்டின்
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.