Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fcb12ba4fe3eef2b3d71624175ced2d8.jpg

இலங்கையில் பிறந்த அனைவரும் இரட்டை  பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
2015 ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் எனவும் இலங்கையில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும்.
 
இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தை பெறவேண்டும். 
 
இதேவேளை இவர்களுக்கான விசா கட்டணம் 2.5 மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
http://onlineuthayan.com/News_More.php?id=741643844530827902

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

விசாவிற்கான தொகை உண்மைதானா? அல்லது தவறாக உள்ளதா?
இத்தனை பணம் கொடுத்து யாராவது இலங்கைப் பிரஜாவுரிமையை வாங்குவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

விசாவிற்கான தொகை உண்மைதானா? அல்லது தவறாக உள்ளதா?

இத்தனை பணம் கொடுத்து யாராவது இலங்கைப் பிரஜாவுரிமையை வாங்குவார்களா?

எனக்கும் அதே சந்தேகம்....சில யாழ்கள உறவுகள் வாங்க முன்வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேராத வெளிநாட்டவருக்கு 10 மில்லியன் டொலர் முதலீடும் 25 இலட்சம் விசாவிற்கும் என நினைக்கிறேன்

http://www.dailymirror.lk/62519/dual-citizenship-potentially-available-to-all-lankans

  • கருத்துக்கள உறவுகள்

விசாவிற்கான தொகை உண்மைதானா? அல்லது தவறாக உள்ளதா?

இத்தனை பணம் கொடுத்து யாராவது இலங்கைப் பிரஜாவுரிமையை வாங்குவார்களா?

2003 இல் தாயகம் போயிருந்தபோது

முயற்சித்தேன்

நாட்கள்  போதாமல் போய்விட்டது

அப்பொழுது 2 லட்சம் ரூபாக்கள்

எனது நண்பர் ஒருவர் எடுத்தார்....

விசாவிற்கான தொகை உண்மைதானா? அல்லது தவறாக உள்ளதா?

இத்தனை பணம் கொடுத்து யாராவது இலங்கைப் பிரஜாவுரிமையை வாங்குவார்களா?

தவறு உதயனின் மொழிபெயர்ப்பில்தான் போலுள்ளது. இரட்டை பிரஜாவரிமைக்கு 500 000 ரூபாய்தான். $ 10 மில்லியனிற்கு மேலாக முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கு 5வருடங்களிற்கு 2 500 000ரூபாய்கள். 
 
Dual Citizenship

8.9

Dual citizenship option to be provided to all with a Sri Lankan origin and upon due evaluation to be granted the dual citizenship preceding the payment of Rs. 500,000 per individual request.

27

8.10

Further, provision will be made for foreigners seeking resident status in Sri Lanka whoare in a position to invest US$ 10 million. All such resident status in Sri Lanka will be subjected to the approval of Defence Ministry, which will be renewed every 5 years. The visa fee will be Rs. 2.5 million for such persons.

மூலம்: https://www.scribd.com/fullscreen/254076455?access_key=key-NaU330IDVwo1gPbIbVzs&allow_share=false&escape=false&show_recommendations=false&view_mode=scroll

பக்கம் 26,27 

எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சில ஆண்டுகளாக இவ்விடயம் பற்றி புலம்பொயர் நாட்டின் இராஜாங்க மற்றும் குடியரவு குடியகல்வு அமைச்சுகளில் விசாரித்ததில் சில தகவல் சேகரிக்கமுடிந்தது. இரட்டைப் பிரஜா உரிமை இலங்கையர் விடயத்தில் ஒரு குழிபறிக்கும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜா உரிமையுள்ள ஒருவருக்கு அவர் இலங்கையில் பிறந்தவராயிருந்தாலும் அவருக்கு 100 வீதம் சட்டரீதியான பாதுகாப்பு உண்டு.ஆனால் இரட்டைக்குடியுரிமையுடன் இலங்கைக்கு செல்லும் ஒருவருக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதுடன் இலங்கையில் உள்ளுர்வாசி ஒருவருக்கு சமமான குடியுரிமையுள்ளவராக இவரும் கணிக்கப்படுவதுடன் அவர் விடயங்களில் இரண்டாம் குடியுரிமையுள்ள நாடும் இதில் தலையிட முடியாது. பாதுகாப்பு அமைச்சும் இதில் சம்பந்தப்படுவதால் நம்பமுடியாது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாட்டுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு இவ்வளவு காசு வேஸ்ட். :D

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாட்டுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு இவ்வளவு காசு வேஸ்ட். :D

இலங்கையில் இருக்கும் ஏன் இப்போது பிறந்த குழந்தைக்கும் தலைமேல் Rs.427,220 கடன் உள்ளது. ஆனால் இது ஒன்றும் மற்றய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானதல்ல. சராசரி தனிமனித வருமானத்துடன் ஒப்பிட்டால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற போன்ற நாடுகளிற்கு இலங்கையை விட மிக அதிகம். ஆனால் இங்கு கடனினளவு முக்கியமல்லை கடன்முகாமைத்துவமே (debt management) முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாட்டுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு இவ்வளவு காசு வேஸ்ட். :D

அவர்கள் யாரையும் இரட்டை பிரஜாவுரிமை எடுக்க வற்புறுத்தியதாக தெரியவில்லை. பிச்சைக்கார நாடு, கடனில் உள்ள நாடு, இனியும் தேறாத நாடு என்று நினைப்பவர்கள், இந்த செய்தியையே பார்த்திருக்க மாட்டார்கள் என்று இலங்கை அரசில் நினைத்திருப்பார்களோ! 

வேஸ்ட் என்று நினைக்கும் ஆட்களை அவர்களே வரவேற்கவில்லை போலிருக்கு. மதியாதோர் தலைவாசல் மிதியாதே என்று ஔவை ஆன்டி சொன்னதாக ஞாபகம்.

மவனே.. இலங்கையை விட்டு வெளியே போக $10,000 முதல் 40,000 வரை செலவு. திரும்பிவர $5000 கேட்கிறீங்களா,.. மனுசனா நீங்கள்? என்ன அக்கிரமம்?

வேஸ்ட் கன்ட்ரி. பேசாமல் ஒதுங்கிடலாம். When Eelam come.. we come. Bye Lanka.. தாங்ஸ்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாட்டுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு இவ்வளவு காசு வேஸ்ட். :D

என்னவோ  தெரியல

இதை வாசித்ததும் ஏதோ ஒரு உணர்வு வந்து  நெஞ்சை பிசைந்தது

இன்னும் அந்த  தேசத்தை  நான் விரும்புகின்றேன் என்று நினைக்கின்றேன்...

அவன் என்னதான் செய்தாலும்

நாம் ஒரே நாட்டில் பிறந்தவர்கள் என்று தான் மனசு சொல்லுது....

---

அவர்கள் யாரையும் இரட்டை பிரஜாவுரிமை எடுக்க வற்புறுத்தியதாக தெரியவில்லை. பிச்சைக்கார நாடு, கடனில் உள்ள நாடு, இனியும் தேறாத நாடு என்று நினைப்பவர்கள், இந்த செய்தியையே பார்த்திருக்க மாட்டார்கள் என்று இலங்கை அரசில் நினைத்திருப்பார்களோ!

வேஸ்ட் என்று நினைக்கும் ஆட்களை அவர்களே வரவேற்கவில்லை போலிருக்கு. மதியாதோர் தலைவாசல் மிதியாதே என்று ஔவை ஆன்டி சொன்னதாக ஞாபகம்.

மவனே.. இலங்கையை விட்டு வெளியே போக $10,000 முதல் 40,000 வரை செலவு. திரும்பிவர $5000 கேட்கிறீங்களா,.. மனுசனா நீங்கள்? என்ன அக்கிரமம்?

வேஸ்ட் கன்ட்ரி. பேசாமல் ஒதுங்கிடலாம். When Eelam come.. we come. Bye Lanka.. தாங்ஸ்.

அப்பப்பா தேசபக்தி பொங்கி வழியுது. துடைச்சுக்குங்க அதை.

Edited by trinco

என்னவோ  தெரியல

இதை வாசித்ததும் ஏதோ ஒரு உணர்வு வந்து  நெஞ்சை பிசைந்தது

இன்னும் அந்த  தேசத்தை  நான் விரும்புகின்றேன் என்று நினைக்கின்றேன்...

அவன் என்னதான் செய்தாலும்

நாம் ஒரே நாட்டில் பிறந்தவர்கள் என்று தான் மனசு சொல்லுது....

எமது நாடு இலங்கை என்று நாம் நினத்ததை சிங்களவர்கள்தான் இல்லை இது உனது நாடில்லை என்று எம்மை உலகம் முழுவதும் புலம் பெயரவைத்தார்கள். மறுபடியும் இல்லை இல்லை இது உங்கள் நாடு வாங்கோ என்கிறார்கள். நம்புவது கடினம்தான். என்ன செய்வது எமது நிலமை அப்படி. சிலகாலம் நம்பித்தான் பார்ப்போமே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாடு இலங்கை என்று நாம் நினத்ததை சிங்களவர்கள்தான் இல்லை இது உனது நாடில்லை என்று எம்மை உலகம் முழுவதும் புலம் பெயரவைத்தார்கள். மறுபடியும் இல்லை இல்லை இது உங்கள் நாடு வாங்கோ என்கிறார்கள். நம்புவது கடினம்தான். என்ன செய்வது எமது நிலமை அப்படி. சிலகாலம் நம்பித்தான் பார்ப்போமே.

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாடு.....

இந்த வரிகள் தான் என்னைச்சுட்டவை

எனது தாயைப்பார்த்து ஒருவர் இவ்வாறு சொன்னால் எப்படியிருக்குமோ

அவ்வாறு  இருந்தது இதை வாசித்தபோது..

ஆனால் இராமநாதன் முதல் இன்றுவரை

எமது இந்த தேசப்பற்றை சிங்களம் பிழையாக பாவித்தது தான் வரலாறு.... :( 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ  தெரியல

இதை வாசித்ததும் ஏதோ ஒரு உணர்வு வந்து  நெஞ்சை பிசைந்தது

இன்னும் அந்த  தேசத்தை  நான் விரும்புகின்றேன் என்று நினைக்கின்றேன்...

அவன் என்னதான் செய்தாலும்

நாம் ஒரே நாட்டில் பிறந்தவர்கள் என்று தான் மனசு சொல்லுது....

உங்கள்  பதிலை வைத்தே ஒரு கேள்வி, விசு பண்ணை !

உங்களை (ஈழத்தமிழர்களை) இவ்வளவு அடித்துக் கொன்றும், சீரழித்தும் சின்னா பின்னமாக்கியும் அவனை நோக்கி ஏங்கும் உள்ளம் உங்களுக்கிருக்கையில், இவ்வாறு எதுவுமே செய்யாத தமிழக தமிழர்களை நோக்கி இங்கே சிலர் நக்கலாக, "அவர்களுக்கு இந்திய தேசம் தான் முதல் நினைப்பு, தமிழர் என்று உணர்வது இரண்டாம் பட்சமே!" என எம்மை நோக்கி குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம்..? :icon_idea:

(எனக்கு 'தமிழன்' என்ற உணர்வே முதலானது) :)

சிறீலங்கா பிச்சைகார நாடா? என்ன சார் கனடா காசை கொண்டு போய் கலர் காட்டி வாழ்வதற்கு இந்த நாட்டைவிட ஒரு நாடு  உலகத்தில்  உண்டா?  அதை போய் குறை சொல்லுறீங்களே. இதே காசை வைச்சு கனடாவில் வாழ்ந்தால் இப்படி பந்தா காட்டி நாங்கள் வாழ முடியுமா?   என்ன வாழ்க்கை சார் இங்க.  என்ன சார் பேசறீங்க. நாம காசை கொண்டு இங்க வந்ததே ஜாலியா மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு போற காலத்தில் தேச பக்தி கதைக்க  தானே. அதை ஏன் குறை சொல்லுறீங்க. நீங்களும் அதை செய்ய இங்க வருவீங்க  தானே. வாங்க இங்க உங்களை வைச்சுகிறன். இனி மேல் ஜாலியா போழுபோக்க ஏற்ற  சிறிலங்காவை குறை சொல்லகூடாது. சொல்லி புட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பக்கமும் கடன் பிச்சையை நம்பி இருக்கும் நாடு.....

இந்த வரிகள் தான் என்னைச்சுட்டவை

எனது தாயைப்பார்த்து ஒருவர் இவ்வாறு சொன்னால் எப்படியிருக்குமோ

அவ்வாறு  இருந்தது இதை வாசித்தபோது..

ஆனால் இராமநாதன் முதல் இன்றுவரை

எமது இந்த தேசப்பற்றை சிங்களம் பிழையாக பாவித்தது தான் வரலாறு.... :( 

இனவாத சிங்கள அடிவருடிகளுக்கு எறிந்த தொப்பி செண்டிமெண்டா விசுகண்ணை கேட்ச் பண்ணிட்டார் மன்னித்து கொள்ளுங்கள் உங்களை நோகடிக்க எழுதபட்டது அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எதற்காக இரட்டை பிரஜா உரிமையும் இரண்டு பாஸ்போட்டுகளும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? எனக்கு புரியலை !!

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  பதிலை வைத்தே ஒரு கேள்வி, விசு பண்ணை !

உங்களை (ஈழத்தமிழர்களை) இவ்வளவு அடித்துக் கொன்றும், சீரழித்தும் சின்னா பின்னமாக்கியும் அவனை நோக்கி ஏங்கும் உள்ளம் உங்களுக்கிருக்கையில், இவ்வாறு எதுவுமே செய்யாத தமிழக தமிழர்களை நோக்கி இங்கே சிலர் நக்கலாக, "அவர்களுக்கு இந்திய தேசம் தான் முதல் நினைப்பு, தமிழர் என்று உணர்வது இரண்டாம் பட்சமே!" என எம்மை நோக்கி குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம்..? :icon_idea:

(எனக்கு 'தமிழன்' என்ற உணர்வே முதலானது) :)

உங்களது பார்வை சரியானதே  ஐயா

நாமும் அவ்வாறே

சதையும் ரத்தமும் நரம்புகளும் கொண்ட சாதாரண மனிதர்கள்....

பயங்கரத்தை பாவித்து எம்மை அழித்து

எம்மை பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டார்கள்...

இலங்கை என்றால் ஒட்டத்தயாராகவே இருக்கிறது எம்மினம்

சிறீலங்கா என்றால் வேண்டாம் என்பதே நிலை...

எம்மவர் குண்டுகள் தங்களை பதம் பார்க்கும் போது

தடுக்கவழியற்று தவிப்பவர் பலர் இங்கு.

அதையும் கருத்திலெடுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எதற்காக இரட்டை பிரஜா உரிமையும் இரண்டு பாஸ்போட்டுகளும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? எனக்கு புரியலை !!

இலங்கையில் அதிக காலம் இருக்கலாம். காணி வீடு வாங்கலாம். வங்கியில் வைப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத சிங்கள அடிவருடிகளுக்கு எறிந்த தொப்பி செண்டிமெண்டா விசுகண்ணை கேட்ச் பண்ணிட்டார் மன்னித்து கொள்ளுங்கள் உங்களை நோகடிக்க எழுதபட்டது அல்ல .

ஐயா ராசா

உங்களை நானறிவேன்.. :icon_idea:

இது வேற.... :o

ஒருவர் எதற்காக இரட்டை பிரஜா உரிமையும் இரண்டு பாஸ்போட்டுகளும் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? எனக்கு புரியலை !!

அட உங்களுக்கு இன்னும் இது புரியல்லயா? நீங்க ரொம்ப அப்பாவி சார். ஒரு பணக்கார மேற்குலக நாட்டு பாஸ்போட்டுடன் உலகம் முழுவதும் விசா இன்றி பயணம் செய்ய ஒரு பாஸ்போட்.  அங்கு ஏழைமக்களுக்கு பந்தா காட்டி பண பவுசு காட்டி  அந்த நாட்டு  அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் தமது இறுதி காலத்தை கழிக்க ஒரு பாஸ்போட்.  இங்க ஒரு நாட்டு பற்று ஒரு மண்ணுமில்லை.  அதெல்லாம் சும்மா ரீல். நமது வாழ்க்கையை கொண்டு நடத்த ஒரு வாழ்க்கைமுறை அவ்வளவு தான்.  புரிந்சுதாண்ணே.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் ஏன் இப்போது பிறந்த குழந்தைக்கும் தலைமேல் Rs.427,220 கடன் உள்ளது. ஆனால் இது ஒன்றும் மற்றய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானதல்ல. சராசரி தனிமனித வருமானத்துடன் ஒப்பிட்டால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற போன்ற நாடுகளிற்கு இலங்கையை விட மிக அதிகம். ஆனால் இங்கு கடனினளவு முக்கியமல்லை கடன்முகாமைத்துவமே (debt management) முக்கியம்.

நீங்க உடனே அமெரிக்கா, பிரித்தானியாவை துணைக்கு கூப்டுவீர்கள் என தெரியும் usa , uk  பொருளாதாரம் வேறு, ஒரு வளரும் நாட்டின் கடன் சுமை வேறு, தனக்கு மூக்கு போனாலும் தமிழனை அழிக்கணும் என்ற இனவாத சிங்களத்தின் மோசமான நிலைப்பாடே இலங்கையின் இந்தநிலைக்கு காரணம் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் அறிந்தும் தொடர்வது எல்லாருக்கும் தெரியும். ஆனலும் சிங்களத்தின் பின் பகுதிக்கு அத்தர் பூச விழுந்தடிச்சு ஒரு கூட்டம் அலைகிறது . 

Edited by பெருமாள்

நீங்க உடனே அமெரிக்கா, பிரித்தானியாவை ...

இலங்கையில் படிப்பு முதல் வைத்தியம் வரை இலவசம். இதை இலவசமாகக் கொடுக்கக்கூடியளவிற்கு நாட்டின் பொருளாதாரம் இல்லை என்பதே யதார்த்தம்.
 
அதனால்தான் "இங்கு கடனினளவு முக்கியமில்லை கடன்முகாமைத்துவமே (debt management) முக்கியம்." என்று எழுதினேன். சிலவேளை debt managementஇன் மொழிபெயர்ப்பு பிழையாக இருக்கலாம்.
 
ஏன் நீங்கள்கூடத்தான் மேற்குலகில் வசிப்பவராயின் வீடு முதற்கொண்டு எவ்வளவோ விடயங்களிற்கு கடன் எடுத்திருப்பீரகள். கடனை எப்படி முகாமைப்படுத்திறீர்கள் (manage) என்பதுதான் இங்கு முக்கியமானதே தவிர எவ்வளவு கடன் உள்ளது என்பதல்ல. கடன் வாங்கிய காரணங்களை மறுபடியும் விவாதிப்போமானால் எங்கும் நகரமுடியாது.

அ அங்கு ஏழைமக்களுக்கு பந்தா காட்டி பண பவுசு காட்டி  அந்த நாட்டு  அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் தமது இறுதி காலத்தை கழிக்க ஒரு பாஸ்போட்.  இங்க ஒரு நாட்டு பற்று ஒரு மண்ணுமில்லை.  அதெல்லாம் சும்மா ரீல். நமது வாழ்க்கையை கொண்டு நடத்த ஒரு வாழ்க்கைமுறை அவ்வளவு தான்.  புரிந்சுதாண்ணே.

சில காரணங்களால் பல வருடங்களாக இலங்கைக்குப் போக முடியாதிருந்தது 1980களின் பிற்பகுதியில் (புரியாத வயது) சென்றதன் பின்னர் சில வருடங்களின் முன்னர்தான் போக முடிந்தது. அங்கு போனதும்தான் நாம் இழந்தவை தெரிந்தது. மனதை வருடும் மண்மணம், புழுதி, துவிச்சக்கரவண்டி, மினிபஸ்ஸில் வியர்க்க வியர்க்க பயணம், ஆகம முறைப்படி அமைந்த கோயில்கள், சிறு உதவிகளை பெற்ற அந்த பிஞ்சு முகங்களின் சந்தோசம் இப்படி எத்தனையோ சந்தோசங்கள். இப்போது ஒவ்வொரு வருடமும் செல்கின்றேன். இவ்வருடமும்தான். இளைப்பாறுவதற்கு வயது வரவில்லை இளைப்பாறினால் எனது  நிரந்திர வதிவிடம் யாழ்தான்.

என்னைப் பொறுத்தவரை இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 5,6 கிழமைகள் நிற்பதுதான் எனக்கு மேற்குலகில் இன்னுமொரு வருடம் வாழும் ஊக்கசக்தியை தருகின்றது.

மண்ணை மக்களை நேசிப்பவர்கள், எதையோ இழந்ததுபோல் மேற்குலகில் வாழ்பவர்கள் எத்தனையோ லட்சம். இவர்களை பொதுப்படையாக நீங்கள் "அங்கு ஏழைமக்களுக்கு பந்தா காட்டி பண பவுசு காட்டி" என்று கருத்திடுவது நல்லதல்ல. பந்தா காட்டாமல் சென்று பாருங்கள் நிச்சயமாக உங்கள் கண்களும் விரியும் மனமும் விரியும்.

எப்பவுமே மனம் இழந்ததை மறுபடியும் பெற முயற்சிக்கும். அவ்வாறானதே இதுவும். சிலர் நடத்தும் பந்தாக்களிற்காக எல்லாரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது அழகில்லை.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.