Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
காவல்த்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட முகமெட்
அலுவலகத்தில் நிறுத்தப்பட்டான்
அவனை விசாரிக்குமாறு அங்கிருந்த அலுவலகரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் 
வேறு அவசரமான வேலையாக வெளியில் போகும் போதும் கூட
இவனை கண்டபடி ஏசியபடி சென்றனர்..
அலுவலகரிடம் இவர் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளுமாறும் சொல்லிச்சென்றனர்
இவனை ஓரிடத்தில் இருக்குமாறு சொன்ன அலுவலகர்
கைத்தொலைபேசியில் யாரிடமோ  லொள்ளுவிட்டபடியிருந்தார்
 
முகமெட் துடித்துக்கொண்டிருந்தான்
அலுவலகரிடம் ஒரு தொலைபேசி எடுக்கமுடியுமா எனக்கேட்டதற்கு அவர் பெல்ரைக்காட்டி பயமுறுத்தினார்
இனி பேசினால் வழக்கை வேறு விதமாக அமைத்துவிடுவார்கள்
ஆனால் பேசாமலும் இருக்கமுடியவில்லை..
 
அவன் தான் காவல்த்துறை அலுவலகத்தில் இருந்தானே ஒழிய
மனசு முழுக்க
வீட்டிலும்
மனைவி பிள்ளை
உறவுகள்
இவ்வளவு நாள் காப்பாற்றிவைத்த மானம் மரியாதை நல்நடத்தை...
அத்துடன்
வீட்டிலிருப்பவள்
ரொம்ப நொந்து போயிருக்கிறாள்
அவள் ஏதாவது வீட்டிலிருந்தபடி ஏடாகூடமாக செய்துவிட்டால் என்றெல்லாம யோசித்தபடி 
தனியே புலம்பியபடியிருந்தான்..
 
சிறிது நேரத்தில்
அந்த மாகாண பெரிய அதிகாரி அங்கு வந்தார்
ஏன் நிற்கிறாய் என இவனை அதட்டினார்.
இவன் தான் விபத்தில் மாட்டிக்கொண்டதாக சொல்லவும்
அதிகாரியைக்கண்ட 
அலுவலகர் தொலைபேசியைத்துண்டித்து
இவனைக்கூப்பிட்டு விசாரணையையும் பதிவையும் ஆரம்பித்தார்...
 
தனது தொலைபேசித்தொடர்பு அறுந்து போன கோபத்திலோ என்னவோ
கேள்விகள் நறுக்கென்று சூடாக வந்தன.
சாவுக்கிராக்கி
என்ர நேரத்தை வீணடிக்க வந்திருக்கிறியா?
சொல்லு எவளை நினைத்துக்கொண்டு கார் ஓட்டினாய்??
அல்லது எவளை தள்ளிட்டுப்போக இவ்வளவு அவசரமாக போனாய்??
 
இவன் அமைதியாக ஆனால் பதட்டப்பட்டபடி..
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
அலுவலருக்கு சந்தேகம்
எதுக்கு இவ்வாறு எல்லாவற்றையும்  ஒத்துக்கொள்கின்றான்..
 
திருப்பிச்சொல்லு என்றார்
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
 
அலுவலகருக்கு சந்தேகம்
இவனது வாய்தான் பேசுது
ஆனால் இவன் இங்கில்லை
இதை நேர் எதிரே அறையில் இருந்து 
இந்த காவல்த்துறைப்பகுதிக்கான அறிக்கைகளை சரி பார்த்துக்கொண்டிருந்த 
உயர் அதிகாரியும் கவனித்தார்
அனுபவமும் பல பதக்கங்களையும் பெற்றவரான அவருக்கு 
இவன் சொல்வது பொய் எனத்தெரிந்தது
 
இவன் சொல்வதைப்பதியும்படி சொன்னவர்
இவனைத்தன்னிடம் வரும்படி அழைத்தார்...
 
அறைக்குள் வந்ததும்  அறையின் கதவைச்சாத்தியவர்
கன்னத்தில் நாலு அறை போட்டார்
யாருக்கு விடுகிறாய்?
வாய் தான் பேசுது
முழுப்பொய் என்பதை முகம்காட்டுது
கொன்று போடுவன்
உண்மையைச்சொல் என்றார்....
 
இவனுக்கும் இனி யாரிடமாவது உண்மையைச்சொல்லி வழி கேட்பதைத்தவிர வேறு வழியில்லை.
இவர்  கண்டிப்பானவராக இருக்கிறார்
மேலதிகாரி
எனவே இவரிடம் உண்மையைச்சொல்லி அனுமதி பெற்றால் வீட்டுக்கு சென்றுவிடலாம் என இவனது உள் மனது சொன்னது.
அவரது காலடியில் உட்கார்ந்தபடி
எல்லாவற்றையும் கண்ணீர் மல்க சொல்லிமுடித்தான்..
கேட்ட அதிகாரி அமைதியாக இருப்பது இவனுக்கு ஆறுதலளித்தது...
 
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்........
 

Edited by விசுகு

  • Replies 97
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகப் போகிறது. தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடுத்த கட்டத்துக்கு போவமா??

 

அல்லது அல்லாவைக்கூப்பிடுவமா??

கடைசியில 

அவர்தானே கதி.....?? :icon_idea:

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

 

வரும்

ஆனா  வராது.. :icon_idea:  :icon_idea:

 

அது சரி

அம்மா பாத்திரம் வந்த மாதிரி தெரியலையே...

கொண்டு வந்தாப்போச்சு...

ஆனால் ஒரு உண்மை தெரியுமோ...

இது ஒரு உண்மைக்கதை

கண்டதைப்புகுத்தமுடியாது... :icon_idea:

ஆனால்

அல்லா

விதி

மதி

நாய்

அடியேனின் கைவரிசை......... :lol:  :D

இறுதிக்கட்டத்துடன் எனக்கே மூச்சு நிற்கலாம்....அல்லா என்றால் சும்மாவா..?? :icon_idea:  

Edited by விசுகு

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!
தொடருங்கள்!!

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!

தொடருங்கள்!!

 

 

நன்றியண்ணா

இது  ஒரு பெரிய விருது எனக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு என்ன நடந்தது ? கதை அந்த மாதிரி போகுது . :D

 

நன்றியண்ணா..

வித்தியாசமான ஒரு கரு (உண்மைக்கதை) கிடைத்தது

கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாம் என்று தான்..

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

நன்றியண்ணா...

முடிவு

சும்மா அதிருமில்ல.. :icon_idea:

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

வாத்தியார்த்தம்பி...

கதை நடந்தது ஒரே ஒரு நாளில் தான்..

ஆனால் அப்படித்தரமுடியாது

வேறு இடங்களில் அடிபட போய்விடுவார்கள்

அப்படியே அமுக்கி வைத்திருக்கணும்

எப்படியும் 1 மாதம் இழுக்கும் போலத்தான் தெரியுது :lol:  :D

 

நன்றி  வருகைக்கும் ஊக்கத்துக்கும்..

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

 

ராசா கையை  வைச்சா....?? :D  :icon_idea:  

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

 

நன்றியண்ணாக நீங்க பாராட்டினா

இரட்டிப்பு மகிழ்ச்சி

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

 

நன்றி  தம்பி

காரணம் நீ தானே... :icon_idea:  :icon_idea:

தொடருங்கள்.... வாசிக்கிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகண்ணா இவ்வளவு நாளும் இப்படி எழுதவில்லை?  தொடர்ந்து வாசிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்
முகமெட் போகும் போது சொல்லிச்சென்றது திடீரென ஞாபகம் வந்தது
5 விரலும் கதவில் படுவது போல் 5 தரம் தட்டுவேன்
அப்படித்தட்டினால் தான் கதவைத்திறக்கணும் என்றல்லவா சொல்லிச்சென்றான்.
ஆனால் இது..??
அப்படியே மெதுவாக பின் வாங்கி
கதவு மீண்டும் தட்டப்படும்வரை பொறுத்திருந்தாள்
மீண்டும் தட்டப்பட்டதும்
 
இது அவனில்லை என்றபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள்...
 
 பலமுறை கதவைத்தட்டியும் அது திறக்காததால்
நாயுடன் வீட்டைச்சற்றி  வந்தான் முகமெட்டின் தம்பி.
TAXI அங்கில்லாதது கண்டு
முகமெட்டின் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து
ஆள் இங்கில்லை TAXI யும் இங்கில்லை என்றான்
அவள் பதட்டப்படுவதை அவதானித்தவன்
உங்களிடம் வீட்டுத்திறப்ப இருக்கிறதல்லவா எனக்கேட்டான்
அவளும் ஆம் என்றதும் 
அப்போ வெளிக்கிட்டு நில்லுங்கள்
நான் வந்து உங்களை ஏற்றி வருகின்றேன்
வந்து பார்ப்போம் என்றபடி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்
அண்ணிக்காரிக்கு ஆறுதலுக்காக அவன் சமாதானமாப்பேசினாலும்
மனதில் அவனுக்கும் பயம் குடிகொள்ளத்தொடங்கியிருந்தது..
ஒரு போதும் இவ்வாறு நடந்ததில்லையே
என்னாச்சு என்று யோசித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்..
 
தொடரும்...........
 

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்.....
 
காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..
 
இப்பொழுது உயர் அதிகாரி எனது வீட்டுக்கு போயிருப்பான்
காவல்துறையினரின் அத்துமீறல்களும் அடாவடித்தனங்களும்  செய்தி செய்தியாக வருகின்றன
எதையாவது செய்துவிட்டு என் தலையில் போடக்கூடிய வாய்ப்பை நானே கொடுத்துவிட்டேனோ?
என பயங்கொள்ளலானான்..
 
மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த அல்லாவுக்கு
கொஞ்சம்  விளையாடிப்பார்க்கலாம் என்ற புத்தி வேலை செய்யத்தொடங்கியது
இவன் இங்கே இருப்பதைவிட களத்தில் இருந்து
நடப்பதை பார்ப்பதே இவனுக்கான தண்டனை என உணர்ந்தவர்
வெளியே போன காவல்த்துறையினரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டார்..
 
அலுவலகத்துக்குள் வந்த காவல்த்துறையினர்
இவன் இன்னும் அங்கிருப்பதைப்பார்த்து
அலுவலகத்தவரிடம் இவனது விசாரணை இன்னுமா முடியவில்லை என்று கேட்டனர்
முடிந்துவிட்டதே என அவரும் பதில்தர
நீ  போகலாம்
ஆனால் கூப்பிடும்  போதெல்லாம் வரணும் என்று எச்சரித்து போக அனுமதித்தனர்....
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
இதேநேரம் உயர் அதிகாரி அவனது வீட்டுக்க முன் காரை நிறுத்தி இறங்கியவர்
நேரே சென்று கதவைத்தட்ட முயன்றவர்
ஒரு செக்கன் யோசித்தார்
5 விரலும் படும்படியாக 5 தரம் தட்டணும் என்றல்லவா சொன்னான்.....
சரியாக தட்டினார்...
 
அசந்து படுத்திருந்தவள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தாள்
நன்றாக காது கொடுத்தாள்
இரண்டாவது முறையாகவும் அவன் சொன்னது போல் சரியாகவே தட்டப்படுவதை புரிந்து கொண்டவள்
ஓடி வந்து கதவைத்திறந்தாள்...
 
 
அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 
ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்
அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... :icon_idea:
 
தொடரும்....
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி

காரணம் நீ தானே... :icon_idea::icon_idea:

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 

ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்

அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... 

ம்ம்ம்.. மேலே.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மேலே தூக்கினால் அவள் விழுந்திடுவாள்...! :lol:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. மேலே.. :huh::D

 

 

இத்துடன் இதை நிறுத்தி

மற்றைய  எழுத்தாளர்களையும் வெளியில் கொண்டு வருவோம் என நினைக்கின்றேன் இசை...

 

எங்கே எழுதுங்கள் உறவுகளே..

அடுத்தது என்ன?

 

எனது முடிவை உங்களால் கணிக்கமுடிகிறதா??

உங்களால் கணிக்கமுடியவில்லை என்றால்

நான் நினைத்ததை (அதாவது முடிவை அறிந்து விடக்கூடாது என நான் போட்ட சில தூண்டில்கள் தமது கடமையை  சரியாகச்செய்திருக்கின்றன என அர்த்தம்)

அப்படியானால் பதக்கம் பெறும் எழுத்தாளர் நான் தான்.. :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Edited by விசுகு

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss


 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகர் :D

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

 

வணக்கம் ஐயா (உங்கள் பெயரை என்னால் உச்சரிக்கமுடியாது)

 

தங்களது சுமைகளுக்கும் நடுவில் எம்மை உற்சாகப்படுத்தணும்

எழுதணும்  என்று நினைத்தமைக்கு நன்றிகள்...

தொடர்ந்து நேரமிருக்கும் போது எழுதுங்கள்

 

இந்த யாழ்களம்

எத்தனையோ எழுத்தாளர்களை

படைப்பாளிகளை

புத்தக ஆசிரியர்களை

கவிஞர்களை

சிறுகதை எழுத்தாளர்களை

பாராட்டி சீர்தூக்கி 

அரவணைத்து வளர்த்துவிட்டுள்ளது...

நாம் இருக்கலாம்  இல்லாது போகலாம்

ஆனால் அந்தக்களத்தில் இவை தொடரணும் என்பதே விரும்பம்

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை செமயா போகுது. தொடருங்களண்ணா.

நன்றி  தம்பி

தொடர்வோம்

ஒரு சிறு இடைவேளையில்... :icon_idea:

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை நன்றாகப் போகிறது. தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

நன்றி  அக்கா

உங்கள் ஆசியும் வாழ்த்தும் பெரும் விருது எனக்கு..

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து

கதையை வாசித்தது மட்டுமல்லாது

கருத்தையும் பதிந்து உற்சாகப்படுத்தியமைக்கு பெரும் பாக்கியம் செய்திருக்கணும்...

 

நன்றி அக்கா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

நன்றி  நிழலி

உங்கள் கோபம் எனக்கு என்னை உணர்த்துகிறது

கவனிக்கின்றேன் ராசா..

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

 

விசுகு, உங்கள் தொடரின் முதல் இரண்டு பகுதிகள் வாசித்த நிலையில்...

மிகுதியை... வரும் ஞாயிற்றுக்கிழமை, ஓய்வான நேரம் ரசித்து வாசிக்க உள்ளேன்.

அதன் பின்... மிகுதி கருத்துக்களை பகிர்கின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.... வாசிக்கிறேன் :)

 

நன்றி நவீனன்

 

 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.