Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Featured Replies

"இவர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடமுடியாது. மாறாக இவர் உள்ளே போன விடயம்தான் இப்போதும் பெரிதாக்க பட வேண்டும்."

இதென்ன தமிழா சிங்களமா ஆங்கிலமா . :icon_mrgreen: 

அவர் என்ன எழுதுகின்றார் என்று அவருக்கே தெரியாது அதற்கு பச்சை போட்ட உங்களை போன்றவர்களுக்கும் தெரியாது .இப்படியே தான் யாழ் ஓடுது . :(

  • Replies 108
  • Views 5.6k
  • Created
  • Last Reply

"இவர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடமுடியாது. மாறாக இவர் உள்ளே போன விடயம்தான் இப்போதும் பெரிதாக்க பட வேண்டும்."

இதென்ன தமிழா சிங்களமா ஆங்கிலமா . :icon_mrgreen: 

அவர் என்ன எழுதுகின்றார் என்று அவருக்கே தெரியாது அதற்கு பச்சை போட்ட உங்களை போன்றவர்களுக்கும் தெரியாது .இப்படியே தான் யாழ் ஓடுது . :(

அவர் என்ன விடயத்தை எழுதினார் அதன் உள் அர்த்தம் என்ன? அதன் மூலம் அவர் சொல்ல வந்த மூலச் செய்தி என்ன? எதற்காக அதற்கு நான் பச்சை போட்டேன் என்று  கூட விளங்க முடியாத உங்களை போன்ற ஆட்களுகளுக்கு என்ன இனி எழுதுவது. விதண்டாவாதம் புரிவது. அது முடியாமல் போக கடைசியலை யாழ் இணைத்தை நையாண்டி பண்ணுவது உங்களுக்கு சகஜம்.

Edited by trinco

பச்சை குத்திய அனைவருக்கும் தான் உள்அர்த்தம் விளங்கியிருக்கு போல . :icon_mrgreen:

நானும் கன நாளா அவர் எழுதுவதை வாசிக்க கஷ்ட படுகின்றேன் எனக்கும் எப்படி உள்ளர்த்தம்  பிடிப்பது என்று ஒருக்கா சொல்லி தாங்கோவன்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

We are relieved (ஆறுதல் அடைகிறோம்) to hear about the release of Jeyakumary என்பது ஒன்று.. We are ecstatic (மகிழ்ச்சி அடைகிறோம்) to hear about the release of Jeyakumary என்பது வேறு..

முதலாவதில் பிடித்துச் சென்றவர் கெட்டவர்.. இரண்டாவதில் அப்படி இருக்கவேண்டிய தேவையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் இருப்பதால் 
இதை எழுதுகிறேன் .......
 
ஒரு விடயம் பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கருத்துதான்  இருக்க வேண்டும் என்பது ஒரு அநியாய அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகும்.
அவர் வெளியில் வந்ததார் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.
ஆனால் உள்ளே ஏன் போனார்?
இன்னும் உள்ளே போக எத்தனையோ பேர்கள் அங்கே இருக்கிறார்கள் இங்கும் இருக்கலாம்.
இவர்களை உள்ளே போக விடாது தடுப்பது என்றால்.............   இவர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடமுடியாது. மாறாக இவர் உள்ளே போன விடயம்தான் இப்போதும் பெரிதாக்க பட வேண்டும்.
இவர் உள்ளே போனது தோற்கடிக்கப்படும் போதுதான் 
ஆயிரக்கணக்கான சிறை போக காத்திருக்கும் தமிழர்களின் சிறைவாசத்தை தடுக்க முடியும்.
 
எழுந்த மாத்திரத்தில் விசைபலகை வீரர் என்ற வார்த்தையை நீங்களும் தத்தெடுத்து இருக்கிறீர்கள். 2011 இல் தொடக்கபட்டு வெற்றி வாகை சூடபோகிறது 
என்று சவூதியராபியா காசை கொட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சார்பாக இஸ்ரேல் விமான கொண்டு வீச இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுத பரிவர்த்தனையை அமெரிக்க இரசான ஆயுதம் முதற்கொண்டு ஆலவட்டம் சுற்றிய சிறிய போர்.
முறியடிக்க பட்டதற்கு முதற்காரணம் விசைபலகை வீரர்கள்தான். யாரும் எதிர்பாராத வியுகமாக சிரியாவின் உள்நாட்டு விபரம் சோசல் மீடியா வாயிலாக பூதமாக  வெளிவருவதை மையின் மீடியா ஸ்ட்ரீமால் தொடர்ந்தும் பொய் ஊதாவிடாது படுக்க வைத்தது. 
 
நேற்று  இவருடைய சிறைபிடிப்பை யார் முன்னின்று விளம்பர படுத்தினார்?
யாழ் களத்தில் கூட பல திரிகள் இருக்கிறது.
 
சென்ற கிழமை ஒரு முன்னாள் போராளி கைது செய்யபாட்டார்...... 
"ஆயிர கணக்கான வர்கள் போய்வருகிறார்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை" இப்படி ஒரு நடிகர் திலகம் அங்கு எழுதினார் இப்போ இங்கே 
பட்டு வெட்டி சட்டையுடன் வந்து நிற்கிறார். 
அவரின் கூற்றுப்படி இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இருப்பதால் அங்கே இன போர் நடக்கவில்லை என்பதாகும். 
முடிந்த அளவில் விடயங்களை பரப்ப வேண்டும்.
அதை விசைபலகை ஊடாகத்தான் செய்ய முடியும்.
இங்கு துளசி என்று ஒரு கள உறவு இருந்தார் இப்போதும் சோசல் மீடியாவில் இங்கு எதை செய்தாரோ அதை அங்கே தொடர்கிறார்.
இங்கிருக்கும் நடிகர் திலகங்கள் நடிப்பால் இங்கிருந்து ஒதுங்கி கொண்டார்.  அகூதா என்று ஒருவரும் அப்படியே சென்று இப்போதும் தொடர்கிறார்.
 
சிங்கள முற்போக்கு வாதிகள் இவர்கள் சொல்லித்தான் போராடியது மாதிரி ஒரு பில்டப்பில் ஒரு கோஸ்டி புதுசா இறங்கி இருக்கு.....
அவர்களுடைய போராட்டம் மதிப்புக்கு உரியது.
எங்களுடைய போராட்டம் ஜெயகுமரியின் விடுதலை அல்ல ........... இன்னமும் 10 ஆயிரம் ஜெயகுமாரிகள் உள்ளே இருக்கிறார்கள். 
செய்திகளை தமது கட்டுபாட்டில் வைத்திருக்க அரசுகள் எப்போதும் எத்தனிக்கும் ....
இப்போதைய தொழில்நுட்பம் எமக்கு கிடைத்த வர பிரசாதம்.
வீம்முக்கு விசைபலகை வீரர் என்று வெளியில் நிற்காதீர்கள்.
கடந்த 30 வருடமாக புலிவாந்தி எடுத்ததை தவிர வேறு எதையும் ஒரு கூட்டம் செய்ததே இல்லை...... ஏதும் நடக்கும்போது வெள்ளை வெட்டி சட்டையுடன் சுய விளம்பர  பலகைகளை தூக்கிக்கொண்டு வந்து விடும். 
யாழ் களத்தை எமக்கு இடையான கருத்து பரிமாற்ற இடமாகத்தான் பாவிக்க முடியும். யாழுக்கு வெளியில்தான் எமது போராட்டம் தொடர வேண்டும். 
உங்களின் கருத்துக்களை நான் மறுக்கிறேன் என்று பொருள் இல்லை ... எல்லா கருத்தும் உள்வாங்க பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். 

விசைப்பலகை வீரர்கள் என்ற பதம் blanket சொல்லாகப் பாவிக்கப் பட்ட ஒன்றல்ல! அது ஒருவரை நோக்கி எறியப் பட்டது! ஏனெனில் ஜெசிக்கா முதல் ஜெயக்குமாரி வரை அந்த நபரின் செயல் விசைப்பலகை வீரம் தான். முட்டையில் சவரம் செய்யும் வேலையும் அந்த நபருக்குரியது தான்! இதையெல்லாம் நீங்கள் அரபு வசந்தத்தோடு ஓப்பிட்டது தான் கொஞ்சம் விளங்கக் கஷ்டமாக இருக்கு! அரபு வசந்தத்தில் சோசியல் மீடியா பாவிக்கப் பட்டது எதற்காக? மக்களை ஒரு இடத்தில் குறுகிய நேரத்தில் அடக்குவோரின் தடையை மீறிக் கூட்டும் நோக்கத்திற்காக! மற்றபடி இன்னும் மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் தான் பிரச்சினையை உலக மயப்படுத்தின. அது நிற்கட்டும். எல்லாரும் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற தொனி எங்கேயும் என்னிடம் இல்லை! ஒரு கருத்து சில சமயங்களில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இருந்தால் அதைச் சுடு சொற்களால் சுட்டிக் காட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை! எல்லோரும் அடைச்சதே பிழை விட்டதுக்கு ஏன் துள்ளுவான் என்கிறீர்கள். நானும் சிலரும் சொல்வது

பிணையில் அவர் வந்தது அந்தக் குடும்பத்திற்குப் பெரிய மகிழ்ச்சி,

அவர் போட்டிருக்கும் உடுப்பு ஒரு பொருட்டே அல்ல,

உழைத்த சிங்களவர்கள் விசைப்பலகை வீரர்களை விட நன்றிக்குரியவர்கள்" என்பவை மட்டுமே.

இந்த மூன்று கருத்துகளுக்கும் உங்கள் பதில் அல்லது மாற்றுக் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கருத்துப் படி, ருகி பெர்ணாண்டோ தரவழிகள் வீணாக சிறைக்குப் போயிருக்கிறார்கள், ஈசியாக விசைப்பலகையில் இருந்தே விடுவித்திருக்கலாம், அப்படியா? பத்துப் போராட்டம் நடத்தி ஒரு போராட்டம் வென்றால், அதைப் பாரட்டாமல் ரிப்போர்ட் கார்ட் கேப்பீர்களா? நாடு கடந்த அமைப்பு, த.தே.கூ, பேரவை அது இது எல்லாம், எத்தனை நடத்தின? எத்தனை வென்றன? ரிப்போர்ட் கார்ட் இருக்கா உங்களிடம்? :)

குற்றம் சுமத்தப்படாமல் ஒருவர் சிறையில் அடைக்கப்படுகின்றார்.

அவர்களிடம் றிப்போட் கேட்டீர்களா?

சரி அதை விடுவம்

சிங்கள அரசே இவரைக் கைது செய்த போது ரிப்போட் கேட்டிர்களா?

 சிங்களவர்களே சிறையில்  அடைப்பார்கள்

பின்னர் இன்னொரு சிங்களவர் அவருக்காகச் சிறை சென்று அவரை மீட்பார்.

இந்த ரெக்னிக்கும் நல்லாத்தான் இருக்கு.

ஆக மொத்தத்தில் சிங்களவன் ரொம்ப நல்லவன்.

கோத்தாவின் காலத்தில் வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்பட்டவர்களை சில ஒட்டுக்குழுக்கள் பணம் பெற்று விடுவித்தார்கள் அப்போது றிப்போட் கேட்டீர்களா?

இப்போது பயங்கரவாதம் என்ற போர்வையில் கைது செய்யப்படுபவர்கள்

சிங்கள அரசால் அதாவது மைத்திரியின் அரசால்

தங்களை புத்தரின் அகிம்சைவாதிகள் எனக் காட்டுவதற்காக தேவைக்கேற்றவாறு விடுவிக்கப்படுகின்றார்கள்.

அதாவது இப்போதும் தமிழ் கைதிகளைச் சிங்கள அரசு கறிவேப்பிலை போலப் பாவித்து வருகின்றதே அவர்களிடம் கேட்டீர்களா ரிப்போட் ??

அவர்களுடைய றிப்போட்டைக் காட்டுங்கள் முதலில்.

ரிப்போட்டாம் றிப்போட் நல்லா வருகுது வாயிலை

சிமிலி போட முடியவில்லை :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

எக்ஸ்டாடிக் என்றால் பேருவகை அல்லது அளவு கொள்ளாத மகிழ்சி.

மகிழ்சி என்றால் ஹபினஸ்.

இங்கே இந்த விடுதலையை இட்டு யாரும் பேருவகை அடையவில்லை.

சிறிய அளவில் மகிழ்சி அடைந்தோம் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

எக்ஸ்டாடிக் என்றால் பேருவகை அல்லது அளவு கொள்ளாத மகிழ்சி.

மகிழ்சி என்றால் ஹபினஸ்.

இங்கே இந்த விடுதலையை இட்டு யாரும் பேருவகை அடையவில்லை.

சிறிய அளவில் மகிழ்சி அடைந்தோம் அவ்வளவே.

தெரியும். ஆனால் மரபு அரசமுறை சொல்லாடல்களில் Happy என்கிற பதம் அதிகம் பாவிக்கப்படுவதில்லை. அதனாலேயே அச்சொல்லைத் தவிர்த்தேன்.. இன்னுமொன்று Glad என்பது. அதுவும் பெரிதாகப் பாவிக்கப்படுவதில்லை.

Ecstatic என்பதைவிட இன்னும் வேறு சொற்கள் பொருத்தமானதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிங்களவர்களுடன் உரையாடும்போது அடிக்கடி 1983 கறுப்பு ஜூலை பற்றிய உரையாடல் வரும். அதற்கு சில சிங்களவர்கள் போட்ட அடி காணாது என்பார்கள். :blink: வேறு சிலர் 'எத்தனை தமிழர்களை சிங்கவர்கள் நாங்கள் காப்பாற்றினோம் தெரியுமா? இப்படி நன்றியில்லாமல் பேசாதீர்கள்' என்பார்கள். :o:lol:

நான் ஒரு தவறும் செய்யவில்லை: எனது மகன் எனக்கு வேண்டும்: பாலேந்திரன் ஜெயக்குமாரி

jeyakumar12_CI.jpg

நான் ஒரு தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி எதற்காக ஒரு வருடமாக என்னை சிறையில் அடைத்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

பாலேந்திரன் ஜெயக்குமாரி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்க முயற்சித்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைதாகி, தடுத்து வைக்கப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டார். 

தனது மகன் தனக்கு வேண்டும் என்றும் ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார். தனது மகன் இன்றி தன்னால் தனித்து வாழ முடியாது என்றும் அவனை கண்டுபிடிக்கும் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார். 

காணாமல் போன தனது மகன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்துடன் போராடியதை தவிர தான் எந்தவித தவறும் செய்யவில்லை. சிறிய பொம்பிளைப் பிள்ளை ஒன்றை வைத்துக் கொண்டு தனது மகன் இன்றி எப்படி வாழ்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

ஒரு வருடகாலமாக தனது மகளையும் பிரிந்து தவித்தாக கண்ணீர் மல்க ஜெயக்குமாரி தெரிவித்தார். தனது விடுதலைக்காக குரல் கொடுத்த உறவுகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்ததார். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117466/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

We hold these truths to be self-evident, that all men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness.

என்கிறது அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இசை.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சுமத்தப்படாமல் ஒருவர் சிறையில் அடைக்கப்படுகின்றார்.

அவர்களிடம் றிப்போட் கேட்டீர்களா?

சரி அதை விடுவம்

சிங்கள அரசே இவரைக் கைது செய்த போது ரிப்போட் கேட்டிர்களா?

 சிங்களவர்களே சிறையில்  அடைப்பார்கள்

பின்னர் இன்னொரு சிங்களவர் அவருக்காகச் சிறை சென்று அவரை மீட்பார்.

இந்த ரெக்னிக்கும் நல்லாத்தான் இருக்கு.

ஆக மொத்தத்தில் சிங்களவன் ரொம்ப நல்லவன்.

கோத்தாவின் காலத்தில் வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்பட்டவர்களை சில ஒட்டுக்குழுக்கள் பணம் பெற்று விடுவித்தார்கள் அப்போது றிப்போட் கேட்டீர்களா?

இப்போது பயங்கரவாதம் என்ற போர்வையில் கைது செய்யப்படுபவர்கள்

சிங்கள அரசால் அதாவது மைத்திரியின் அரசால்

தங்களை புத்தரின் அகிம்சைவாதிகள் எனக் காட்டுவதற்காக தேவைக்கேற்றவாறு விடுவிக்கப்படுகின்றார்கள்.

அதாவது இப்போதும் தமிழ் கைதிகளைச் சிங்கள அரசு கறிவேப்பிலை போலப் பாவித்து வருகின்றதே அவர்களிடம் கேட்டீர்களா ரிப்போட் ??

அவர்களுடைய றிப்போட்டைக் காட்டுங்கள் முதலில்.

ரிப்போட்டாம் றிப்போட் நல்லா வருகுது வாயிலை

சிமிலி போட முடியவில்லை :D :D :lol:

வாத்தியார்! இன்னொரு திரியில தமிழ் படிப்பிறீங்கள்! இங்க தமிழே புரியாமல் உணர்ச்சி வசப்படுறீங்கள்! திரும்ப வாசிச்சு விளங்க முயற்சி செய்யுங்கள்! :D

காட்டாப்புக் காட்டாமல் சிங்களவன் உள்ளுக்கையே வைச்சிருந்தால் அதை வைத்தே நாங்கள் சவுண்டு விடும் அரசியல் நடத்தலாம்! அப்படி இல்லாமல் போகிறதே என்ற ஆத்திரம் மட்டுமே உங்கள் நீண்ட பதிலில் நான் reading between lines புரிந்து கொண்டது! இது எதுவுமே ஜெயக்குமாரி குடும்பத்திற்கு முக்கியமில்லை! நீங்களே குத்தி முறிஞ்சு போட்டு இருக்க வேண்டியது தான்! :rolleyes:

தாய் விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி....ஏனைய அப்பாவி தமிழர்களும் விடுதலை பெற தொடர்ந்து போராடுவோம்

ஈழத்தில் உள்ள மக்களுக்கு உதவிக்கொண்டே இருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எல்லாம் அவர்கள் அரக்கர்கள் என்று தெரியாது அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் போல .

கைது செய்தது பிழை என்று நிறுவுவது முக்கியமா ? அல்லது முதலில் அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது முக்கியமா ?

முதலில் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றுதான் மனிதர்கள் நினைப்பார்கள் .அதற்காகத்தான் எத்தனையோ மனித உரிமை ஆர்வலர்கள் பாடுபட்டார்கள் (சிங்களவர்கள் உட்பட )

இந்த கைதை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் உங்களை போன்றவர்களுக்கு அவர்களின் விடுதலையை விட அரக்கர்களின் முகத்திரை கிழிப்பதுதான் முக்கியம் அதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் பரவாயில்லை .

எமது விடுதலை போராட்டத்திலும் சிங்கள அரசிசின் முகத்திரை கிழிக்கவேண்டும் என்பதற்காகவே எத்தனை உயிர்களை பலி கொடுத்தீர்கள் .உங்கள் அரசியலுக்கு மற்றவன் உயிரும் கைதும் தேவைபடுகின்றது.நல்லா இருங்கோ . 

அவா இன்னும் வெளியில் வரவில்லை ....... சிறை வாசலில் நிற்கிறா !
இனி இவர்கள் மூச்சு பிடிச்சு முக்கிதான் அவர் வெளியில் வர போகிறா .....
 
அவர் யாழ்பாணம் போய்விட்டார் ....
இப்பவும் அவர் வந்து முக்கியமா ?
போனது முக்கியாமா ?
என்று பாசாங்கு பட்டிமன்றம் வைத்துகொண்டு.
 
அவவை பிடித்து உள்ளுக்குள் போட்டபோது ...
நீங்கள் வெட்டி கிழித்த ஒன்றை முடிந்தால் இங்கு இணையுங்கள். 
 
இந்த பசுப்ப்பு வார்த்தைகளை .... நாங்கள் தமிழ் படிச்ச போதே தெரிந்துவிட்டோம் 
இனி புதுசா படிக்க ஏதும் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கை எத்தனை சனம் ஒரு பிரச்சனையுமில்லாமல் போய் வருது .

தமது பாதுகாப்பு என்றுவரும் போது  எந்த நாடும் விதி விலக்கல்ல 

நாட்டின் பாதுகாப்பு கருதிதான் கோத்தா ஜெயகுமாரியை உள்ளே போட்டார்!

உங்கை எத்தனை சனம் ஒரு பிரச்சனையுமில்லாமல் போய் வருது .

தமது பாதுகாப்பு என்றுவரும் போது  எந்த நாடும் விதி விலக்கல்

நாட்டின் பாதுகாப்பு கருதிதான் கோத்தா ஜெயகுமாரியை உள்ளே போட்டார்!

ஜெயகுமாரி விடுவிக்கப்பட்டதால் நீதி நிலைநாட்டப்பட்ட்து என்று இங்கு எவரும் கூறவில்லை. பொய் காரணம் கூறி கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டது பெரும் ஆறுதல் அவ்வளவே. விபூசிகா மீண்டும் தன் தாயுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவரின் விடுதலை அவர் உண்மையில் எதற்காக வீதியில் இறங்கினாரோ அந்த நோக்கத்தை மழுங்கடித்து விட கூடாது. காணாமல் போன அவரின் மகன் உட்பட காணாமல் போன அனைவரின் நிலை பற்றியும் விசாரிக்க வேண்டியது மைத்திரி அரசின் கடமை. 
 
இவர் உள்ளே தொடர்ந்து இருந்தால் அதை வைத்து அரசியல் செய்திருக்கலாம் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் தான் மண் விழுந்திருக்கிறது. இந்த ஏமாற்றம் தான் அவர் ஏன் சீலை உடுத்தவில்லை பொட்டு வைக்கவில்லை போன்ற கேவல சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. இதில வெளியில நின்டு புலிகொடி ஆட்டினதால தான் இவர் விடுதலை அடைந்தார் என்று காமடி வேற. 
  • கருத்துக்கள உறவுகள்

ரத்தினச்சுருக்கம் என்பது இதைத்தான் தென்னாலி.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! இன்னொரு திரியில தமிழ் படிப்பிறீங்கள்! இங்க தமிழே புரியாமல் உணர்ச்சி வசப்படுறீங்கள்! திரும்ப வாசிச்சு விளங்க முயற்சி செய்யுங்கள்! :D

காட்டாப்புக் காட்டாமல் சிங்களவன் உள்ளுக்கையே வைச்சிருந்தால் அதை வைத்தே நாங்கள் சவுண்டு விடும் அரசியல் நடத்தலாம்! அப்படி இல்லாமல் போகிறதே என்ற ஆத்திரம் மட்டுமே உங்கள் நீண்ட பதிலில் நான் reading between lines புரிந்து கொண்டது! இது எதுவுமே ஜெயக்குமாரி குடும்பத்திற்கு முக்கியமில்லை! நீங்களே குத்தி முறிஞ்சு போட்டு இருக்க வேண்டியது தான்! :rolleyes:

அதாவது நாம் சொல்ல வருவது யாதெனில்

சிங்கள அரசு  தமிழனை வைத்து சர்வதேசத்திற்கு வேசம் போடுகின்றது.

அது கோத்தாவாக இருந்தாலென்ன மைத்திரியாக இருந்தாலென்ன சிங்களம் சிங்களம் தான்.

இருக்கின்றதை முதலில் பிடுங்குவது. பின்னர் அதையே பங்கு போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளியெறிவது போலத்தான் சிங்கள அரசாங்கம் தற்போது தமிழர்களுடன் விளையாடுகின்றது.

சிங்களவர்கள் ஜெயக்குகாரிக்காகப் போராடினார்கள் என்பதெல்லாம் ஒரு நாடகம்.அதுதான் பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் என்ற பழமொழி தெரியுமா?

சிலர் என்னவென்றால் போராடிய சிங்களவர்கள் இப்போது தமிழர்களுக்குக் கடவுள் மாதிரி பில்டப் போடுகின்றனர்.

இப்படி எத்தனையைப் பார்த்தோம். இன்னும் பார்க்கப் போகின்றோம். :D 

ஓம்! பாருங்கோ! பாக்கிற நேரம் கூகிளில் போய் லசந்த விக்கிரமதுங்க, ருகி பெர்ணாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய, நிமல்கா பெர்னான்டோ என்ற பெயர்களையும் தேடிப் பாருங்கோ! ருகி பெர்ணான்டோ இலங்கையின் படைத்துறையில் வேலை செய்தவர் என்றும் லசந்த சூடு வாங்கிச் செத்தது போல நடித்தார் என்றும் நம்பிக் கொண்டு கருத்தெழுதும் உங்களுடன் நேரம் விரயம் செய்ததற்காக என் காலணியால் என் தலையில் நானே போட்டுக் கொள்கிறேன் மாஸ்ரர்! போதுமா? :rolleyes:

ஜெயகுமாரி விடுவிக்கப்பட்டதால் நீதி நிலைநாட்டப்பட்ட்து என்று இங்கு எவரும் கூறவில்லை. பொய் காரணம் கூறி கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டது பெரும் ஆறுதல் அவ்வளவே. விபூசிகா மீண்டும் தன் தாயுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவரின் விடுதலை அவர் உண்மையில் எதற்காக வீதியில் இறங்கினாரோ அந்த நோக்கத்தை மழுங்கடித்து விட கூடாது. காணாமல் போன அவரின் மகன் உட்பட காணாமல் போன அனைவரின் நிலை பற்றியும் விசாரிக்க வேண்டியது மைத்திரி அரசின் கடமை. 
 
இவர் உள்ளே தொடர்ந்து இருந்தால் அதை வைத்து அரசியல் செய்திருக்கலாம் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் தான் மண் விழுந்திருக்கிறது. இந்த ஏமாற்றம் தான் அவர் ஏன் சீலை உடுத்தவில்லை பொட்டு வைக்கவில்லை போன்ற கேவல சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. இதில வெளியில நின்டு புலிகொடி ஆட்டினதால தான் இவர் விடுதலை அடைந்தார் என்று காமடி வேற. 

இதைத் தான் பல பேர் பந்தி பந்தியாய் எழுதியாகி விட்டது! ஆனால் கௌண்ட மணி செந்திலின் வாழைப் பழக்கதை மாதிரி தொடங்கின இடத்திலயே வந்து நிற்பார்கள் பாருங்கள்! முடியல!! :D

சிங்களவர்கள் ஜெயக்குகாரிக்காகப் போராடினார்கள் என்பதெல்லாம் ஒரு நாடகம்.அதுதான் பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் என்ற பழமொழி தெரியுமா?

சிலர் என்னவென்றால் போராடிய சிங்களவர்கள் இப்போது தமிழர்களுக்குக் கடவுள் மாதிரி பில்டப் போடுகின்றனர்.

மிகவும் தவறன கருத்து

பல சிங்கள புத்திசீவிகளும் மிதவாதிகளும்  எமக்காக போராடி இருக்கின்றார்கள்.  அதிலும் இவ் விடயத்தில் ருக்கி ஜெயகுமாரி அம்மாவை சந்திக்க போனதால் கோத்தாவால் கடும் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர். 

JDS (Journalists for Democratic Sri Lanka) என்ற ஊடகவியலாளர் அமைப்பில்  இருப்பதில் அநேகமானோர் சிங்கள ஊடகவியலாளர்கள் தான்.  இவர்கள் தான் போர்க்குற்ற வீடியோக்கள் வெளி வருவதில் பெரும் வங்கு வகித்தவர்கள். இவர்களை விட உள் நாட்டில் இயங்கி வந்த ஹிரு பத்திரிகையாளர் குழுவும் பல விடயங்களை செய்து வந்தனர். சிங்கள பத்திரிகையாளரான 'பிரகீத் எக்னெலிகொட' காணாமல் போக்கடிக்கப்பட்டதே இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை சேகரித்து வெளியிட முனைந்தமையால் ஆகும்

வெறும் வாய் சவடாலும், ஸ்கைப்பினாலும் மட்டுமே தம் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் தேசிய வியாபார அமைப்புகளை விட இவர்கள் பல மடங்கு மேலானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி மேலே குறிப்பிட்ட சிங்கள பத்திரிகையாளர் செயற்பாட்டாளர் எல்லோரும் அரச புலனாய்வாளர்கள் - அரசு கிள்ளிய பிறகு வந்து தொட்டிலை ஆட்டுபவர்கள். சிங்களவரில் ஒருவர் கூட மனித்நேயத்துடன் இருக்க முடியாது.

அப்படி இருப்பதாக சொல்லும் தமிழன் துரோகி, காதுக்க சுடுவோம். இதுதான் தமிழ்தேசியம்.

மிகவும் தவறன கருத்து

பல சிங்கள புத்திசீவிகளும் மிதவாதிகளும்  எமக்காக போராடி இருக்கின்றார்கள்.  அதிலும் இவ் விடயத்தில் ருக்கி ஜெயகுமாரி அம்மாவை சந்திக்க போனதால் கோத்தாவால் கடும் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர். 

JDS (Journalists for Democratic Sri Lanka) என்ற ஊடகவியலாளர் அமைப்பில்  இருப்பதில் அநேகமானோர் சிங்கள ஊடகவியலாளர்கள் தான்.  இவர்கள் தான் போர்க்குற்ற வீடியோக்கள் வெளி வருவதில் பெரும் வங்கு வகித்தவர்கள். இவர்களை விட உள் நாட்டில் இயங்கி வந்த ஹிரு பத்திரிகையாளர் குழுவும் பல விடயங்களை செய்து வந்தனர். சிங்கள பத்திரிகையாளரான 'பிரகீத் எக்னெலிகொட' காணாமல் போக்கடிக்கப்பட்டதே இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை சேகரித்து வெளியிட முனைந்தமையால் ஆகும்

வெறும் வாய் சவடாலும், ஸ்கைப்பினாலும் மட்டுமே தம் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் தேசிய வியாபார அமைப்புகளை விட இவர்கள் பல மடங்கு மேலானவர்கள்.

நிழலி
 
இத்திரியில் இருந்து விலகியிருந்தேன். இருப்பினும் உங்கள் கருத்திற்கு பச்சை இல்லாததால் நன்றி சொல்வதற்காக ஒரு பதிவு.
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் தேர்தல் வந்தால் அவர்கள் வாக்களிப்பது மகிந்த ராஜபக்ச, மைத்திரி, சந்திரிகா, ரணில் இத்யாதி..

இவர்களைவிடவும் நல்ல சிங்களவர்கள் உள்ளார்கள்.. ஆனால் அவர்கள் வாக்கு செலுத்துவதே இல்லை. அல்லது விக்ரமபாகு கட்சிக்கு வாக்குப் போடுவார்கள். அவர்கள் லசந்த, ருகி, நிமால்கா வகையாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டால் அதிர்ச்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் பல பேர் பந்தி பந்தியாய் எழுதியாகி விட்டது! ஆனால் கௌண்ட மணி செந்திலின் வாழைப் பழக்கதை மாதிரி தொடங்கின இடத்திலயே வந்து நிற்பார்கள் பாருங்கள்! முடியல!! :D

தமிழர்கள் போராடியதால்தான் .....
சிங்களவர்கள் அடித்தார்கள்.
 
என்ற வரிசையிலும் விட .... எனக்கு மற்ற வரிசை பிடித்திருக்கு.
அதில் நின்றால் 1958இற்கு போகவேண்டும் தெரியாத காலம். 
இதென்றால் 1983இற்கு பின் தெரிந்த காலத்தில் நிற்கலாம். 
இப்படிதான் வாழ வேண்டும் என்பதுதான் மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம்.
 
எனது மதம் (இந்துமதம்) மறுபிறவி பற்றி பேசுகிறது 
அடுத்த பிறவி விலங்காக அமைந்தால்....... மற்ற வரிசை பற்றி யோசிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.