Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்" - முதலமைச்சர் சி.வி

Featured Replies

150315162200_c_v_wigneswaran_sri_lanka_n
 
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
 
இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் தங்களுடன் பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
 
சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் குறித்த, இந்திய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், "இதுவரை காலமும் வட இந்தியார்களுக்கு, இலங்கையின் வட பகுதியின் கஸ்டமான நிலைமைகள் குறித்து, பெரிய அளவில் கரிசனை கிடையாது என்ற கருத்துத் தோற்றமே இங்கு நிலவியது. ஆனால் இந்தியப் பிரதமர் இங்கு நேரடியாக வந்து நிலமைகளை கண்டு, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனும் உறுதியை அளித்திருப்பது, எமக்குப் பெரிய ஆறுதலை அளித்துள்ளது.
 
அவர் வருகைக்கு முன்னர் இருந்ததை விட, மோடி அவர்கள் இங்கு வந்து சென்றதன் பின்னர், இந்தியாவிடம் எங்களின் நம்பிக்கை கூடியுள்ளது." என தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் பற்றிய விசாரணைகள், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளது பற்றி பதிலளித்த அவர், "பொறுமை என்பது அவசியம் ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. அதேவேளை அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இலங்கை அரசாங்கம் சிறூபான்மையினருடைய சில விஷயங்களையாவது செய்யும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
 
கடந்த 67 ஆண்டுகளாக இந்த நாட்டில் சிறுபான்மையினர் பொறுமையாகக் காத்திருந்தனர். எனவே நன்மைகள் ஏற்படுமாக இருந்தால், இன்னும் சில மாதங்கள் காத்திருப்பதில் தவறில்லை." என கூறியுள்ளார்.
 
சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 

உதைதானே நாங்கள் காலம் காலமாக சொல்லுகின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் என்றால் உணர்ச்சிவசப்படவேண்டும். அரசியல் தலைவர்கள் அந்த உணர்ச்சியைப் நிதானத்துடன் பயன்படுத்தி நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும்.

2009 இல் பெருவாரியான தமிழக மக்கள் நிதானத்துடன் இருந்ததால்தான் அழிவுகள் ஏற்பட்டது. இதில் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அங்கிருந்த அரசியல் தலைமைகள் அவர்களை "நிதானம் உள்ளவர்களாக" வைத்திருந்தார்கள்.

விக்கினேஸ்வரனுக்கு  ஒரு துரோகி பட்டம்  பார்சல் ....

 

இவன்  சீமான்  தம்பி  :icon_idea:

இப்பவெல்லாம் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் நல்ல தெளிவுடன் அரசியல் செய்கின்றார்கள் போலத் தோன்றுகின்றது - சந்தோசமாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு விக்னேஸ்வரன் ஐயா நல்ல முதலமைச்சராக பணியாற்ற நினைக்கிறார். ஆனால் முடியாமல் போகிறது. அவர் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளும், மக்களும் எவ்வளவுக்கு எவ்வளவு போராட்டங்களை நடத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சிங்களத்தின் செயல்கள் எதிர்மறையாக போகும்.

 

சில சமயம் நான் யோசிப்பது உண்டு.இலங்கை தமிழ் மக்கள் தனி நாடு  கேட்காமல்  இருந்து இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க மாநிலமாக தமிழ் நாட்டின் துணையுடன் தங்களை உட்பத்தி இருந்தால் இவ்வளவு உயிர்கள் காப்பாற்ற பெற்று இருக்குமே என்று. ஏன் என்றால், ஒரு சிறு தலைமைக்கும் தெரிந்து இருக்க வேண்டும், தமிழ் நாட்டை தன்னுடைய நிலபரப்பாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழத்தை இந்திய ஒரு போதும் அனுமதிக்காது என்று. 

 

இல்லை இந்தியாவுடன் சேர  முடியாது என்ற பட்சத்தில், தமிழ்நாட்டில் இருந்து வேறு படுத்தி தங்களை ஒரு தனி இனமாக காட்டி இருக்க வேண்டும் (தென் கொரியா , வட கொரியா போல ). அப்படி நடந்து இருந்தால் தமிழ் நாடும், தமிழக மக்களும் ஏன் இந்திய நாடும்  இலங்கை  தமிழ் மக்களின் அரசியலில் மூக்கை நுழைக்காமல் இருந்திருக்க முடியும். இதில் எதுவும் நடக்காமல், இவர்கள் படும் கஷ்டத்திற்கு. தீர்வே இல்லாமல் செல்கிறது. 

 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் பக்கத்தில் இருக்கும் போது இலங்கை அரசு துணிந்து இனப்படுகொலையை நடத்தியது என்றால் அது தமிழக மக்களையும் அரசியல்வாதிகளையும் நம்பித்தான். அதனை சரத் ரத்தினச் சுருக்கமாக தமிழக அரசியல் கோமாளிகள் என விளித்திருந்தார். இறுதியுத்தம் தொடங்கு முன்னர் சிங்களம் தமிழகத்தை நன்கு உணர்ந்துதான் தொடங்கியது. சிங்களம் தமிழகம் தொடர்பில் எப்போதுமே தெளிவாக இருந்து வந்திருக்கிறது. இப்போது தமிழகத்துக்கு ஈழம் சொல்லும் செய்தி உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதே என்பதே! இதனையே விக்னேஸ்வரன் நாகரிகமாக சொல்லியிருக்கிறார். புரியாவிட்டால் இத்தூஊஊஊஊ!

குறிப்பு: ஈழம் என்னும் சொல் எவரினதும் முதுசம் அல்ல!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

.. இப்போது தமிழகத்துக்கு ஈழம் சொல்லும் செய்தி உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதே என்பதே! இதனையே விக்னேஸ்வரன் நாகரிகமாக சொல்லியிருக்கிறார். புரியாவிட்டால் இத்தூஊஊஊஊ!

குறிப்பு: ஈழம் என்னும் சொல் எவரினதும் முதுசம் அல்ல!

 

(தமிழகம், ஈழத்திற்கு சொல்லும் செய்தி) :)

 

"ரொம்ப நல்லதாகப் போச்சுது.. அப்படியே உங்கள் மக்களையும் வந்தால் உடனே அழைத்துக்கொள்க.. இனிமேல் இனக்கலவரம் ஏதும் வந்தால் அப்படியே அவுஸ், அண்டார்டிக்கா பக்கம் சென்றுவிடுங்கள், தமிழகம் பக்கம் வராதீர்கள்.. தமிழகத்திற்கும் தொல்லை மிச்சம். யார் உங்களை வரச்சொன்னா..?" த்த்தூஊஊஊஊஊஊஉ! :huh:

 

(குறிப்பு: இந்த பதிவு, நாங்கள் நேசிக்கும் மற்ற ஈழத்தமிழர்களை நோக்கியல்ல - மன்னிக்கவும்  :unsure:  )

 

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு சிலருக்கு இப்பதான் ஞானம் பிறந்திருக்கு.
மக்கள் ஏன் போராடுகிறார்கள் ?
போராடவேண்டும் எனும் தூண்டுதலை எது கொடுக்கிறது ?
 
அடக்க அடக்க மக்கள் எழுச்சி பெறுவார்கள்.
தமிழக போராட்டங்கள் இல்லை என்றால் சிங்களவன் எப்போதோ துடைத்து எடுத்திருப்பான்.
தமிழக மாணவர்களின் போராட்டம்  அமெரிக்க செனட்டில் கூட ஒரு விவாதத்தை உண்டுபண்ணி இருந்தது.
மெல்ல மெல்ல உலகம் எமக்கு இழைத்த கொடுமைகளை இப்படிதான் பரப்ப முடியும்.
 
ஒருவேளை தட்டி தவறி ஈழதமிழனுக்கு ஏதும் கிடைத்துவிடால் ...........
தமிழகத்தை தெரியாது என்றுதான் சொல்லுவான்.
 
குதிரையின் குணம் அறிந்துதான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை என்பார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் சிங்களவர்களுக்கும்.. ஹிந்தியர்களுக்கும் ஆக.. தங்கள் இன உணர்ச்சிகளை அடக்கனுன்னு ஒரு தலைவிதியும் இல்லை. மக்களின் குரலை பிரதிபலிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. 

 

தமிழகம்.. இனப்படுகொலை என்பதை நிறைவேற்றிய பின் தான்.. யோசிச்சு.. தட்டுப்பட்டு.. அடிபிடிப்பட்டு.. கடைசியில்.. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை என்பதை நிறைவேற்றினார்கள்.

 

தமிழகம் எமக்கு எப்போதும் தனது தொப்புள் கொடி உறவெனும்..உணர்வூட்டால்.. பாதுகாப்பளிக்கிறது.. இதுதான்.. பூகோள.. அரசியல்.. யதார்த்தம். 

 

சிவி  இதனை விளங்கிக் கொள்ள அவருக்கு கால அவகாசம் தேவை போல் தெரிகிறது. அதற்காக தமிழகம்.. உலகத் தமிழினம் உணர்ச்சி இழக்க வேண்டியதில்லை. உணர்ச்சி உள்ள மக்கள் தான் சுதந்திரமாக வாழவும் விரும்புவார்கள். உணர்ச்சி உள்ளவனின் செயற்பாடுகள் தான்.. தீர்வுகளை தேட ஆட்சியாளர்களை நிற்பந்திக்கும். சிவனேன்னு.. கிடந்தா ஆட்சியாளர்களும் சிவனேன்னு கிடப்பார்கள்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்
மத்தியோடு கருணாநிதி உரசினால் பச்சை துரோகம்.
 
நாங்கள் உரசினால் ராஜ ராஜ தந்திரம்!
 
நல்ல மந்திரம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சில நேரங்களில், உணர்ச்சிகள் - நாங்கள் விரும்புகின்ற முடிவைப் பெற்றுத் தராது. அதுவே பல சமயம் எதிர்மறையான விளைவயும் ஏற்படுத்திவிடக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 

உதைதானே நாங்கள் காலம் காலமாக சொல்லுகின்றோம் .

 

 

காலம் காலமாக என்றால்????? ஒரு ஐம்பது வருடங்கள் இருக்குமா?
 
கட்டுமரத்திலிருந்து வானொலிச்சேவைசெய்து மக்களுக்கு உணர்ச்சியூட்டியவர்கள் நீங்கள் தானே..அப்போது எங்கே போனது புத்தி?
 
உங்களைப்போன்றவர்கள் செய்த பாவத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை....அதற்குள் முற்றும் துறந்த முனிவர் போல் ரீல் விடப்படாது. :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

 

காலம் காலமாக என்றால்????? ஒரு ஐம்பது வருடங்கள் இருக்குமா?
 
கட்டுமரத்திலிருந்து வானொலிச்சேவைசெய்து மக்களுக்கு உணர்ச்சியூட்டியவர்கள் நீங்கள் தானே..அப்போது எங்கே போனது புத்தி?
 
உங்களைப்போன்றவர்கள் செய்த பாவத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை....அதற்குள் முற்றும் துறந்த முனிவர் போல் ரீல் விடப்படாது. :icon_mrgreen:

 

அவரது இலக்கு

ஊருக்கு  போய் அரசியல்வாதியாவது....

தான் நினைத்தமாதிரி  எல்லாம் நடக்குதாம்

இனி  ஊருக்குப்போக சரியா வருமாம்.....

எந்தத்தொகுதியில் நிற்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறார்..

உண்மையான அரசியல்வாதி

நோக்கம் குறிக்கோள் வாக்குறுதி

ஏதாவது இருக்கணுமா என்ன.....?

  • கருத்துக்கள உறவுகள்

 

காலம் காலமாக என்றால்????? ஒரு ஐம்பது வருடங்கள் இருக்குமா?
 
கட்டுமரத்திலிருந்து வானொலிச்சேவைசெய்து மக்களுக்கு உணர்ச்சியூட்டியவர்கள் நீங்கள் தானே..அப்போது எங்கே போனது புத்தி?
 
உங்களைப்போன்றவர்கள் செய்த பாவத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை....அதற்குள் முற்றும் துறந்த முனிவர் போல் ரீல் விடப்படாது. :icon_mrgreen:

 

அவர் போராட போனாரே தவிர .....
போராட போகவில்லை ....
 
கொஞ்சம் விளங்க கஷ்டமாத்தான் இருக்கும் முயற்சிக்கணும்  (நான் ஒரு 3வருடமா முயற்சிக்கிறேன் எனக்கே இன்னும் விளங்கவில்லை) 
 
2015இல் இந்தியா வந்து பாயை விரிக்கும் தமிழர்கள் நித்தா கொள்ளலாம் 
என்பதை 1981ஆம் ஆண்டு முதல் சொல்லிவந்த ஒரு தமிழ் தீக்க தரிசி. 
  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் போராட போனாரே தவிர .....
போராட போகவில்லை ....
 
கொஞ்சம் விளங்க கஷ்டமாத்தான் இருக்கும் முயற்சிக்கணும்  (நான் ஒரு 3வருடமா முயற்சிக்கிறேன் எனக்கே இன்னும் விளங்கவில்லை) 
 
2015இல் இந்தியா வந்து பாயை விரிக்கும் தமிழர்கள் நித்தா கொள்ளலாம் 
என்பதை 1981ஆம் ஆண்டு முதல் சொல்லிவந்த ஒரு தமிழ் தீக்க தரிசி. 

 

நான் தமிழ் தீக்கஅரிசி. என்று வாசித்தேன்....

  • கருத்துக்கள உறவுகள்
அர்த்தம் அப்படி எதும்தான் வரணும்.
அதுதான் எழுதும்போதே நான் பிரிச்சு எழுதினேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.