Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தொடரும் நிலப்பறிப்பு! சத்தமின்றி ஆமிக்கு காணி பிடிக்கும் புதிய அரசு!!

Featured Replies

வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் சத்தம் சந்தடியற்று முன்னெடுப்பது அம்பலமாகியுள்ளது. ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது. அதற்கு பெரும்பிரச்சாரம் செய்யப்படுகின்றது .மறுபுறத்தே கடந்த இரண்டு மாத காலத்தில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை, நில அளவை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு காணி உரிமையாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர்.

இதன் காரணமாக காணி அளவீட்டு நட வடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. தற்போது காணிகளை மதிப்பீடு செய்து சுவீகரிக்கும் நட வடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. புதிய அரசு ஆட்சி அமைத்த பின்னரே, இந்த நடவடிக்கை வேகப் படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகிவருகின்றது.

http://www.pathivu.com/news/38536/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சத்தம் போட்டுச் செய்ததை.. இவர்கள் சத்தமில்லாமல் செய்யத் தானே ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார்கள். அதை இவர்கள் ஆட்சிக்கு வரமுதலே எச்சரிச்சாச்சு. அதையும் மீறி.. எதல்லாமோ நடக்கப் போகுதென்னு சொன்னவை தான்... இப்ப இதற்கும் பதில் சொல்லனும்.  :icon_idea:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
 

புதிய அரசு ஆட்சி அமைத்த பின்னரே, இந்த நடவடிக்கை வேகப் படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகிவருகின்றது.

 
 

 

 

மகிந்த சத்தம் போட்டுச் செய்ததை.. இவர்கள் சத்தமில்லாமல் செய்யத் தானே ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார்கள். அதை இவர்கள் ஆட்சிக்கு வரமுதலே எச்சரிச்சாச்சு. அதையும் மீறி.. எதல்லாமோ நடக்கப் போகுதென்னு சொன்னவை தான்... இப்ப இதற்கும் பதில் சொல்லனும்.  :icon_idea:  :lol:

நீங்க  வேற....

இனி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுமா???

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு சொன்னா, யேசு சொன்னாமேரி - பூராவும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு சொன்னா, யேசு சொன்னாமேரி - பூராவும் உண்மை.

இதுதான் கிறுக்குத்தனமாய் தாளம் போடுவது என்பது புதிய அரசு வந்தபின்  வட கிழக்கில் நில அபகரிப்பு நடைபெறவில்லை என முதலில் நிறுவ முயற்சிக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லை என்பதை நிரூபிக்கவும்"

இதை சொன்ன ஆள் கிறுக்குத்தனத்தை பற்றி கதைக்குது.

இருக்கு, நடக்குது, என்பவைதான் நிரூபிக்கணும். இல்லை என்பவர்கள் இல்லை.

முடிந்தால் burden of proof என்று கூகிள் செய்து பாருங்கள். உங்கள் ரேஞ்சுக்கு சட்டப் புத்தகமா எடுத்து ரிவர் பண்ண முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லையில் வாழும் மக்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் காணிகளை எப்படிப் பாதுகாப்பது எனத் தவிப்பது எங்களுக்குத் தெரியாது.

ராணுவ முகாம்களுக்கு அருகில் வாழ்பவர்களுக்க்த்தான் தெரியும்
அங்கு நடக்கும் விபரீதங்கள்.

சித்தார்த்தன் சிங்களக் குடியேற்றங்கள் இப்போ இல்லை என்று சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் -

புளொட், சித்தார்தன் எண்டு கண்ட மேனிக்கு திட்டுவது அர்ஜூனை. என்னை இல்லை.

:)

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் -

புளொட், சித்தார்தன் எண்டு கண்ட மேனிக்கு திட்டுவது அர்ஜூனை. என்னை இல்லை.

:)

 

உங்களைத் திட்டி எனக்கு என்ன லாபம்.

சித்தார்த்தன் அப்படிக் கூறியதாக நேற்று எங்கோ வாசித்த ஞாபகம்.

அதையே சுட்டிக்காட்டினேன். :D

புதிய அரசு வந்தா பிறகு 48,000 ஏக்கர் யாழ்பாணத்தில் மட்டும் கையக படுத்தியிருக்கின்றார்கள்.

இவங்களை விட கூடாது .

 

யாழில் நாளை ஹர்தால்.   :icon_mrgreen:

இந்த செய்தி உதயன் பத்திரிகையிலும் வந்தது. தொடர்பு கொண்டபோது அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றுதான் பதில் வந்தது.

 

இதை முழுக்க வதந்தி என்றும் முடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சத்தம் போட்டுச் செய்ததை.. இவர்கள் சத்தமில்லாமல் செய்யத் தானே ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார்கள். அதை இவர்கள் ஆட்சிக்கு வரமுதலே எச்சரிச்சாச்சு. அதையும் மீறி.. எதல்லாமோ நடக்கப் போகுதென்னு சொன்னவை தான்... இப்ப இதற்கும் பதில் சொல்லனும்.  :icon_idea:  :lol:

 

மைத்திரியின்ரை கவுண்மேந்து இனி வெளிக்காயம் இல்லாமல்த்தான் விசயத்தை கொண்டு போகும். ......

10 பரப்பை திருப்பி குடுத்துட்டு....10 ஏக்கரை வேறை இடத்திலை அமசடக்காய் அமுக்கும்.... :icon_idea:

இதை நான் ஆரம்பத்திலேயே சொன்னனான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லை என்பதை நிரூபிக்கவும்"

இதை சொன்ன ஆள் கிறுக்குத்தனத்தை பற்றி கதைக்குது.

இருக்கு, நடக்குது, என்பவைதான் நிரூபிக்கணும். இல்லை என்பவர்கள் இல்லை.

முடிந்தால் burden of proof என்று கூகிள் செய்து பாருங்கள். உங்கள் ரேஞ்சுக்கு சட்டப் புத்தகமா எடுத்து ரிவர் பண்ண முடியும்.

மூன்று வாரங்கள் முன்பு எனது ஊரில் ஒரு பகுதியில் கம்பி அடிக்க தொடங்கி  இருக்கிறார்கள் 
இராணுவத்திக்கு சொந்தம் என்றும் யாரும் உள்ளே நுழைதல் தடை என்றும் போட் போட்டிருக்காம்.
செய்தி இங்கு யாழிலும் இருந்தது. 

கொஞ்சத்தை விடும்போது திருவிழா மாதிரி கொடிபிடித்து தேர் எழுத்து படம் காட்டிவிட்டு 
மறுபறத்தில் விடயம் மெதுவாக நடக்கிறது.
 
பரப்புரை பற்றி அவர்கள் கவலைப்பட தேவை இல்லை.
அதுக்குதான் மனித பிறவி எடுத்து தமிழனாக சிலர் பிறந்து இருக்கிறார்களே ... 
இப்போது எமது உடனடித்தேவை சிங்கள அரசுகள் எமக்குச் செய்த தவறுகளிற்கான பிராயச்சித்தம்தான் அரசியல் தீர்வு இல்லை. இவை காணாமற் போனவர்களின் விபரங்களைத் தருதல், அரசியற் கைதிகளை விடுவித்தல், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை ஒப்படைத்தல் போன்றவை. இவற்றை செய்வதனால் தமிழர்களிடையே சிறு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இது பின்னரான அரசியல் தீர்விற்கு அடித்தளமாக இருக்கும். யாருமே இலங்கை அரசுகள் செய்தது சரி எனக் கூறவில்லை. ஆனால் இப்போதுதான் தேவையற்ற கைதுகள், கடத்தல்கள் குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
 
இப்போதுதான் ஜெயகுமாரியடன் மேலும் 8 பேரை விடுவித்திருக்கன்றர்கள், மூதூரின் சிலபகுதி, வளலாய் போன்ற இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை கடற்படை முகாமில் இயங்கிவந்த கோத்தா முகாம் பற்றிய விசாரணை போன்றவை  இவற்றின் ஆரம்பம்தான். எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே செய்துவிட்டு வரும் தேர்தலில் மண்கவ்வ மைத்திரி ஒன்றும் முடடாளில்லை. மைத்திரியின் தலைமீதும், இலங்கை அரசின் தலைமீதும் இந்தியா, மேற்குலக நாடுகள், ஜநாவின் மனித உரிமைச்சபை போன்ற கத்திகள் தொங்கிக்கொண்டுதான் இப்பவும் உள்ளன. இம்முறை இலங்கை அரசு இலகுவாகத் தப்ப முடியாது. 
 
இதற்கு மேல் இலங்கை அரசு தேர்தலின் முன்னர் எதையாவது செய்யுமாவென்பது கேள்விக்குறிதான். மே மாதத்தில் தேர்தல் வந்து மைத்திரி வென்றால் பல விடயங்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் செய்ய வேண்டி வரும். அதாவது செப்ரெம்பருக்குள். இருப்பது 3 மாதங்கள்தான். இக்காலகட்டம்தான் எமக்கு முக்கியமானது. மைத்திரிமேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களிற்கு அரசாங்கத்தை தோலுரித்துக் காட்டப்போகும் காலம்.
 
தேசிய அரசாங்கம் ஒன்றை மைத்திரியால் உருவாக்க முடிந்தால் இலகுவாக பல விடயங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம். பல நாடுகள் இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க தேசிய அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளன. உதாரணமாக பிரித்தானியாகூட முதலாம், இரண்டாம் போர்களின்போது இத்தகைய  அரசாங்கத்தை உரிவாக்கியிருந்தது. 
 
67 வருடங்கள் காத்திருந்துவிட்டோம் இன்னொரு 6 மாதம் நம்பிக்கையுடன் காத்திருப்போம். 
  • கருத்துக்கள உறவுகள்

"இல்லை என்பதை நிரூபிக்கவும்"

இதை சொன்ன ஆள் கிறுக்குத்தனத்தை பற்றி கதைக்குது.

இருக்கு, நடக்குது, என்பவைதான் நிரூபிக்கணும். இல்லை என்பவர்கள் இல்லை.

முடிந்தால் burden of proof என்று கூகிள் செய்து பாருங்கள். உங்கள் ரேஞ்சுக்கு சட்டப் புத்தகமா எடுத்து ரிவர் பண்ண முடியும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/155162-புதுக்குடியிருப்பில்-காணி-சுவ/

  • கருத்துக்கள உறவுகள்

New regime silently steps up military land grab in North.

 

[TamilNet, Wednesday, 18 March 2015, 09:01 GMT]

The occupying Sri Lankan military has again started to seize private lands outside the so-called High Security Zone (HSZ) in the North. While releasing some of the lands in the HSZ back to people in the North, the SL military is silently seizing lands outside the HSZ to maintain and expand its cantonments in the country of Eezham Tamils. Informed sources from the district secretariats of Ki'linochchi and Mullaiththeevu told TamilNet Wednesday that the military seizure of lands has been stepped up during the past 3 weeks at more than 20 localities in Vanni. Under the Rajapaksa regime, the SL officials were open about the military seizure of lands. But, now the process is almost invisible. Surveying officers are also brought from Colombo and legal notices are not issued in order to avoid public protests. 

 

PTK_17_March_2015_109124_445.jpg
 

On Tuesday, a Sinhala land officer, M.M. Thilakaratne, a land officer from the Ki'linochchi office was organising a meeting to legally transfer 40 acres of private lands situated in front of the Divisional Secretariat in Puthukkudiyiruppu to the occupying SL military. 

Sri Lanka Army's 682 Division has illegally seized 20 acres of land, where Dr Ponnambalam Memorial Hospital was situated under the LTTE-run civil administration. 

More than 20 private owners of these lands have been collectively opposing the seizure of the lands for military purpose during the past 6 years. 

On Tuesday, the Sinhala official was trying to deceive one of the landowners to sign a document. At the same time, the official had invited land-surveying officials from the South and had arranged for a meeting with Divisional Secretaries and Village Officers (GS) of Puthukkudiyiruppu at the Divisional Secretariat. 

The landowners, supported by the people in the area and the civic members of the Tamil National Alliance (TNA), gathered in front of the DS office and blocked Mr Thilakaratne from proceeding to the scheduled meeting. The land officer later ended up at the SL military camp and was trying instruct the DS and the GS officers to come to the SLA camp. 

 

Vazhalaay_Suresh_MP_02_109120_218.jpg
 
Vazhalaay_Suresh_MP_01_109116_218.jpg
 

In the meantime, Tamil parliamentarian Suresh Premachandran, who visited Vazhalaay in Jaffna recently to witness the released lands to the public, has complained that only 233 acres of lands have been released. More than 400 acres of lands are yet to be handed over to the public. The SL military has put up a new border 200 meters behind the previous line, he said adding that Vazhalaay was still under the military rule. 

Even the members of parliament are allowed beyond that point into the village by the SL military, he said. The released lands are mostly agricultural lands. The SL military is reluctant in releasing residential lands back to the people, he said. 

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37696

  • கருத்துக்கள உறவுகள்

11052478_10205755200496751_2156448296240

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசு வந்தா பிறகு 48,000 ஏக்கர் யாழ்பாணத்தில் மட்டும் கையக படுத்தியிருக்கின்றார்கள்.

இவங்களை விட கூடாது .

 

யாழில் நாளை ஹர்தால்.   :icon_mrgreen:

 

இதிலிருந்து அண்ணை சொல்லவாறது

48 லட்சம் ஏக்கர் எடுத்தாலும்   ஆமாப்போடத்தயார்....

இதிலிருந்து அண்ணை சொல்லவாறது

48 லட்சம் ஏக்கர் எடுத்தாலும் ஆமாப்போடத்தயார்....

முழு தமிழ் இனமும் அழிந்தாலும் பரவாயில்லை ஆனால் எங்களுக்கு புலியும் புலியின் கொள்கைகளும் அழிய வேண்டும்,அதற்கு முழு தமிழ் இனமும்அழிந்தாலும் பரவாயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.